Share

Showing posts with label R.P.ராஜநாயஹம். Show all posts
Showing posts with label R.P.ராஜநாயஹம். Show all posts

Nov 28, 2021

R.P. ராஜநாயஹம் - பழனிவேல் வெங்கட் பார்வையில்


R.P.ராஜநாயஹம் யார்?

பழனிவேல் வெங்கட் பார்வையில் :

ஆங்கிலமொழித் தேர்ச்சியின் பயனாக அயல் பிரதேச சிறந்த  கலை, இலக்கியங்களை வாசிப்பு அனுபவமாக பெறுகின்ற வாய்ப்பு கிட்டியது ஒரு சிறப்பு. 

அதே போல் தமிழ் இலக்கிய சூழலில் நவீனத்துவம் வரை ஆழ்ந்ததொரு  ரசனையும்,பயிற்சியும் பெற்றிருப்பதும் 
கூடுதல் சிறப்பு.

ஆளுமைமிக்க எழுத்தாளர்களின் அங்கீகரிப்பும் நட்பும் உங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு வரமே.

இது எல்லாவற்றையும் தாண்டி கர்நாடக,இந்துஸ்தானி போன்ற இசையை ஆழ்ந்த ஈடுபாட்டோடு மனம் லயித்துப்போய் கிறங்கிய அனுபவம் தங்களைப்போன்ற சிலருக்கே வாய்க்கும்.

வாழ்க்கையின் நானாவித அனுபவங்களையும் எழுத்தில் சுவைபட கொண்டுவருவது எல்லோருக்கும் 
சாத்தியம் அல்ல.

தங்களை இனிமையானவராக உணரும்  ஏராளமான
 இதயங்கள் உண்டு. 
எழுத்தின் வழி உறவுகள் தொடரட்டும்.

Nov 10, 2021

R.P.ராஜநாயஹம்

Devendhira Poopathy Bhaskarasethupathy :
R.P.Rajanayahem sir,
You are an archive of experiences and events..
You are having extraordinary memories of the past and having an wonderful talent to connect with present sir.

Janakiraman Nappalur :
அற்புதமான மனிதர் சார் நீங்க.
என்ன மாதிரியான வாழ்வு, அனுபவங்கள்....
அதை அப்படியே படிப்பவருக்கும் கடத்தி விடும் ரசவாதம். இந்த லைக், ஷேர், கமெண்ட்லாம் சின்னப்பசங்க விஷயம்.
உங்களை புரிஞ்சுகிட்டவங்க இப்படி உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க. 

Ram Subu  :
உங்கள் எழுத்தில் அனுபவ செறிவு உள்ளது சார். வெறும் கேள்வி ஞானத்தில் மட்டுமே எழுதினால் ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது.
உங்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. உங்களை ஃபேஸ்புக்கில்
சுமார் ஒரு மாதமாகத் தான் ஃபாலோ செய்கிறேன். உங்கள் எழுத்தில் அருமையான Dialogue form உள்ளது.

Mar 6, 2020

Mohamed Fazlulla Khan on R.P.Rajanayahem


Mohamed Fazlulla Khan(the famous linguistic scientist)  on R.P.Rajanayahem


"I started addressing you on this platform with the thought
that I was once your senior at college.
But as I browse through your writings in Tamil, that carry appropriate quotes and references from English and other literatures, I realise that I am dealing with a well read person turned into a sublime writer, a valuable critic of life, language, religion and literature.
I can only express my awe and wonder at your intellectual and linguistic calibre.
Hats off to you.
Keep up the good work."

Nov 22, 2019

ஆன்ம லாபம்




நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன். எந்த போதை பழக்கமும் இல்லாதவன்.
உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்?
மது,புகை,சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்?
என்ன லாபம் கண்டாய்?”
என் பதில் : “ஆன்ம லாபம்”

Oct 9, 2019

சாருவின் காமரூப கதைகள் 15 - (R.P.Rajanayahem's guest appearance)

சாரு நிவேதிதாவின் ”காமரூப கதைகள்” நாவலின்
15வது அத்தியாயம் 
(R.P.Rajanayahem's guest appearance)





"Open my grave when I am dead, and thou shalt see a cloud of smoke rising out from it; then shalt thou know that the fire still burns in my dead heart -- yea, it has set my very winding-sheet alight."
ஹஃபீஸின் இந்த கஸலில் " yea, it has set my very winding-sheet alight" என்ற வாக்கியத்திற்கு பெருமாளுக்கு அர்த்தம் விளங்கவில்லை.
winding-sheet என்றால் சவத்தின் மீது போர்த்தப் படும் போர்வை என்று புரிந்தாலும் அர்த்தம் பூரணமாகவில்லை.
தமிழின் பிரபலமான மொழி பெயர்ப்பாளர்கள் என்றால் "அந்த நெருப்பில் என் போர்வை கருகாது" என்று கொலை செய்து இருப்பார்கள்.

ராஜநாயஹத்தை போனில் அழைத்தான் பெருமாள். 
அவர் , இவன் முடிக்கும் முன்பே "நானே அழைக்கிறேன்" என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். பொதுவாக அவனுடைய நண்பர்கள் அனைவருமே அவனுக்குச் செய்யும் உதவி அது. அவனுடைய தொலைபேசி செலவைக் குறைக்கிறார்களாம். பெருமாளுக்கோ அவருக்கு செலவு வைக்கக் கூடாது என்று எண்ணம். அதனால் அவர் அழைப்பை இவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அழைக்கும்போது எடுக்காமல் , மணி அடித்து ஓய்ந்ததும் இவன் அழைப்பான். அவர் எடுக்க மாட்டார். அவரும் இவனைப் போலவே நினைத்திருக்கிறார்.
சொன்னால் யாருமே நம்ப மாட்டீர்கள். சரியாக மூன்று மணி நேரம் நடந்தது இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம். ஒரு கட்டத்தில் பெருமாளுக்கும் பிடிவாதம் வந்து விட்டது. ' இவரோடு இன்று நாம்தான் பேச வேண்டும் ' என்று தீர்மானம் செய்து விட்டான். அவருக்கோ அப்படியெல்லாம் எதுவும் தீர்மானமோ பிடிவாதமோ எதுவும் இல்லை. பெருமாளின் தொலைபேசியில் சிக்னல் இல்லை என்று நினைத்துக் கொண்டு , விடாமல் பொறுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
முப்பது , நாற்பது அழைப்புகள் இரண்டு பக்கத்திலிருந்தும். நேரம் செல்லச் செல்ல பெருமாளுக்கு ஒரு வீம்பே வந்து விட்டது.
இதற்கிடையில் ஒரே ஒரு முறை பெருமாளிடம் சிக்கினார் ராஜநாயஹம். "என்ன ராஜநாயஹம்...இப்படி ஆகிக் கொண்டிருக்கிறது ?" என்று ஆரம்பித்தான் பெருமாள். அவர் அதற்குள் குறுக்கிட்டு "நானே கூப்பிடுகிறேன் பெருமாள்" என்றார்.
"ராஜநாயஹம்...ராஜநாயஹம்...ப்ளீஸ்...கேளுங்கள்...
எனக்கு ஒரே ஒரு வார்த்தைக்குத்தான் அர்த்தம் தெரிய வேண்டும். ஒரே ஒரு வார்த்தை...நீங்கள் கூப்பிட வேண்டாம்.
போனை வைத்து விடாதீர்கள்" என்று கதறி விட்டு கவிதையின் முதல் வரியிலிருந்து ஆரம்பித்தான்.
அப்போதுதானே முழுமையாகப் புரியும் ? ஆனால் அவரோ "சரி சொல்லுங்கள் , எழுதிக் கொள்கிறேன்" என்றார்.
" அடடா , ஒரே ஒரு வார்த்தைக்காக முழுக் கவிதையையும் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே ராஜநாயஹம் ?"
" இருங்கள் பெருமாள். நான் ஆபீஸ் போய் விடுகிறேன். அங்கிருந்து சாவகாசமாகப் பேசலாம்..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைக்காக நீங்கள் ஆபீஸ் போக வேண்டுமா ?"
" ஆபீஸ் என் வீட்டிலிருந்து இரண்டே இரண்டு கிலோ மீட்டர்தான் இருக்கிறது ; ஒரு சிரமமும் இல்லை..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைதான். இந்த ஒரே ஒரு வார்த்தைக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் போக வேண்டுமா ? யோசித்துப் பாருங்கள்... நாம் இவ்வளவு பேசியதற்குள் நீங்கள் சொல்லியிருக்கலாம்..."
அதற்குள் அவர் போனில் சிக்னல் பிரச்சினை. போனை வைத்து விட்டு ' இப்படி ஒரே ஒரு வார்த்தைக்காக இந்த நல்ல மனிதரைப் போட்டு இப்படிப் படுத்த வேண்டுமா என்று நினைத்து விஷாலுக்கு போன் போட்டான் பெருமாள்.
அவனோ "என் வீட்டுக்கு அக்கா கணவர் வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்றான் பதற்றத்துடன். "அடப் பாவி , நேற்றுதானே அக்கா வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாய் ?" என்று கேட்டேன்.
" ஆமாம் ; நேற்று அக்கா , இன்று அக்காவின் கணவர்."
கிட்டத்தட்ட ' ஆத்தீமூக்கா ' காரர்கள் ' அம்மா ' வுக்குப் பயப்படுவது போல் அல்லவா பயந்து சாகிறான் என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டு , " சரி சரி...ஓடு. அதற்கு முன் இதற்கு அர்த்ததைச் சொல்லி விட்டு ஓடு" என்றான்.
" ஐயோ , நான் இப்போது பைக் அல்லவா ஓட்டிக் கொண்டிருக்கிறேன் ?"
" அடப்பாவி , உனக்கு எத்தனை தடவை சொல்வது , பைக் ஓட்டும் போது போனை எடுக்காதே என்று ?"
" சரி சரி சொல்...நான் பைக்கை ஓரம் கட்டி விட்டேன்."
சொன்னான்.
" அடடா , அற்புதம்...இதற்கெல்லாம் ஒரு குவார்ட்டர் போட்டால்தானே சரியாக இருக்கும் ? ம்ம்ம்....உயிரின் சுடர் என்று போடு" என்று சொல்லி விட்டு அக்கா கணவரைப் பார்க்க ஓடி விட்டான் விஷால்.
இதற்கிடையில் ராஜநாயஹத்தை மீராவின் தொலைபேசியை வைத்துத் தந்திரமாக அமுக்கிய பெருமாள் , " என்ன ராஜநாயஹம்... ஒரே ஒரு வார்த்தைக்கு மூன்று மணி நேரமாக ஒரு அபத்த நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது தேவையா ?" என்று கேட்டான்.
" ஆமாம் பெருமாள் , நினைத்தால் மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் ஆபீஸ்க்கு போய் பேசுகிறேன் என்று. நீங்கள விடமாட்டேன் என்கிறீர்கள். சரி போனை வையுங்கள். நான் கூப்பிடுகிறேன்”.
“அய்யோ ராஜ நாயகம்... நீங்கள் கூப்பிட்டால் நான் எடுக்கமாட்டேன். அது சரி, இந்த அபத்த நாடகத்தை ஏன் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறீர்கள் ? நிறுத்தி விட வேண்டியதுதானே? என்னுடைய அழைப்பை ஒரு முறையாவது எடுத்திருக்கலாம் அல்லவா “ என்று கேட்டு விட்டு ,
கவிதையை முழுமையாகச் சொல்லி கடைசி வரியின் அர்த்தத்தைக் கேட்டான். அதற்குள் மீண்டும் சிக்னல் பிரச்சினை.
ஆனால் ஒரே நிமிடத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
" உயிரின் சுடர்."
***
1.6.2008.
8.40 p.m.

Oct 3, 2019

”R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா” - சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா இன்று என் பதிவு எஸ்.வி.சுப்பையா படித்து விட்டு ”R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா” என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள கட்டுரை கீழே
R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா
October 3, 2019
நாகூரில் சிறுவனாக இருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒரு எழுத்தாளன் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்த போது தெரிந்த முதல் ஊர் தில்லி. அங்கேதான் இந்திரா பார்த்தசாரதி, என்னுடைய பிரதி பிம்பம் என்று நான் சின்ன வயசிலேயே நம்பிய ஆதவன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், என் குருநாதர் என மதித்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்ற பலர் வசித்தார்கள். தி. ஜானகிராமனும் அங்கேதான் இருந்தார். ஆனால் அவர் எழுத்து மீது அப்போது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் தில்லி போய்ச் சேர்ந்ததும் மேலே குறிப்பிட்ட யாரையும் பார்க்காமல் கடைசியில் குறிப்பிட்ட வெங்கட் சாமிநாதன் பார்வையில் விழுந்தேன். வெ.சா.விடம் ஒரு அபூர்வமான சக்தி இருந்தது. அவரிடம் வந்தவர்கள் மற்ற யாரையும் சந்திக்க மாட்டார்கள். எல்லோருமே வீண் என்று நம்மிடம் நிரூபித்து விடுவார். எனக்கு ரொம்பவும் பிடித்த ஆதவனைக் கூட நான் சந்திக்கவில்லை. வெ.சா.வின் காந்தப் பிடியிலிருந்து நான் விடுபட்ட போது தில்லியிலிருந்து சென்னை வந்திருந்தேன்.
வெ.சா.வின் உலகில் வாழும் போது நமக்குள் பல கட்டுக்கதைகளும் (myth), நம்பிக்கைகளும் இறங்கியிருக்கும். அப்படிப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றுதான், தமிழ் சினிமா ஒரு குப்பை. ரொலான் பார்த்தின் Image, Music, Text-ஐப் படிக்கும் வரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த எல்லாமே குப்பை. அதனால்தான் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முதலாக வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த அக்னி நட்சத்திரம் சினிமாவை சென்னை அபிராமி தியேட்டரில் பார்த்த போது அதில் நடித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்து அது யார் இது யார் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். 1978-இல் தில்லி சென்றேன். 1988 வாக்கில் சென்னை வந்த போது அக்னி நட்சத்திரம் பார்த்தேன். படம் வெளியாகி 200 ஆகியிருந்தது. பக்கத்தில் இருந்தவரிடம் ”படம் இவ்ளோ நல்லா இருக்கு, ஏன் கூட்டமே இல்லை?” என்று நான் கேட்டபோது அவர் அந்த விபரம் சொன்னார். அவரிடம்தான் ”அப்பாவாக நடிப்பவர் நன்றாக நடிக்கிறாரே, யார் அது?” என்று கேட்டேன். அந்த அளவுக்கு வெகுஜன கலாச்சாரத்திலிருந்து விலகி இருந்தேன்.
பிறகுதான் வெகுஜன கலாச்சாரம் பற்றிய ரொலான் பார்த்தின் ஆய்வுகளைப் படித்துத் தெளிந்தேன். அதன் பிறகு தமிழ் சினிமாவை என்னால் குப்பை என்று ஒதுக்க முடியவில்லை. பராசக்தி என்ற படத்தைப் பார்க்காமல் திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? நாடோடி மன்னனில் நாடோடி எம்ஜியார் “நான் ஆட்சிக்கு வந்தால்…” என்று சொல்லி சில வாக்குறுதிகளை அளிப்பார். அப்போதெல்லாம் அவர் அதிமுக என்று ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. 1958-இல் வெளிவந்தது இந்தப் படம். அதிமுக ஆரம்பித்தது 1972. நாடோடி மன்னன் வசனத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என ஆக்குவேன் என்று வரும். கார்ல் மார்க்ஸ். வசனம் எழுதியவர் கண்ணதாசன். அந்தக் கால தமிழ் இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி பற்றி நாம் ஒரு வார்த்தை காண முடியாது. அப்படி அவசியமும் இல்லை. சுதந்திரப் போராட்டம் பற்றியே நம் முன்னோடிகள் யாரும் – செல்லப்பாவைத் தவிர – எழுதவில்லை என்கிற போது திராவிடக் கட்சிகள் பற்றியும் நாம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி ஒருவர் ஆய்வு செய்ய வேண்டுமானால் வெங்கட் சாமிநாதன் திரும்பத் திரும்ப குப்பை என்று சொல்லிக் கொண்டிருந்த – நானும் சில காலம் அப்படி நம்பிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில்தான் அதற்கான தரவுகள் கிடைக்கும்.
அதேபோல் தமிழ் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் அணுக வேண்டிய இடம், தமிழ் சினிமா. தமிழர்களின் முக்கியமான குணம், இனப் பெருமை. வீரம். நட்புக்காக உயிரையும் கொடுப்பேன். மானம். என் கணவனை அநியாயமாகக் கொன்றால் என் முலையைப் பிடுங்கி எறிந்து ஊரையே எரிப்பேன். என் நடிகனின் படம் வெளியானால் அவனுக்கு அறுபது அடி கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவேன். அதற்கு ஆகும் செலவுக்கு என் பொண்டாட்டியின் தாலியை விற்பேன். என் தலைவி ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போனால் அல்லது தேர்தலில் தோற்றால் திருப்பது உண்டியலில் என் நாக்கை அறுத்துக் கொடுப்பேன்.
தமிழனின் இந்த முக்கியமான உளவியலை (psyche) புரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் கிடைக்கும் ஒருசில signifierகளில் ஒருவர்தான் எஸ்.வி. சுப்பையா. சிக்னிஃபயருக்குத் தமிழில் என்ன சொல்வார்கள் என்று எஸ். சண்முகத்தைத்தான் கேட்க வேண்டும். சிக்னிஃபயருக்கான கூகிள் விளக்கம்: In Saussurean analysis, which Barthes largely uses, the distinction between signifier and signified is crucial. The signifier is the image used to stand for something else, while the signified is what it stands for (a real thing or, in a stricter reading, a sense-impression).
தயவுசெய்து எஸ். சண்முகம் இதை இன்னும் விரிவாக விளக்க வேண்டும்.
திடீரென்று காலங்காலையில் நான் இந்த நினைவுகளில் மூழ்கக் காரணம், R.P. ராஜநாயஹம். எஸ்.வி. சுப்பையா பற்றிய அவர் பதிவைப் படித்ததும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்தது. ராஜநாயஹத்திடம் அவ்வளவாக தன்முனைப்பு கிடையாது. இந்த அபூர்வமான குறிப்புகளெல்லாம் தொகுக்கப்பட்டு நூலாக வர வேண்டும். நானும் இந்தப் படங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் எல்லாம் ஞாபக சக்தி அறவே கிடையாது. ராஜநாயஹத்தின் ஞாபக சக்தியும் அபூர்வமானது. அபாரமானது. கீழே ராஜநாயஹத்தின் பதிவு:
....



Sep 30, 2019

சாரு நிவேதிதா ஃபேஸ்புக்கில் R.P. ராஜநாயஹம்

27.09.2019
சாரு நிவேதிதா
R.P. ராஜநாயஹம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார். அதற்கு நான் எழுதிய பதில் இது:
இன்னும் அதிகம் அதிகம் அதிகம் எழுதுவதே எங்கள் எதிர்பார்ப்பு. இதையெல்லாம் எழுத இப்போது உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை இன்று. காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இப்போது சொன்னால் அப்படீனா என்னா என்றுதான் கேட்கும் நிலையில் இருக்கிறது இன்றைய தலைமுறை. இந்த நிலையில் சென்ற தலைமுறையை சென்ற தலைமுறையின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் முக்கியமானவர்களுள் நீங்கள் ஒருவர். இரண்டு பெயர்கள் எனக்கு ஞாபகம் வருகின்றன. ஒன்று, தியடோர் பாஸ்கரன், இரண்டு, எஸ். முத்தையா. அடுத்து R. P. ராஜநாயஹம். இதில் எதுவும் வரிசைக்கிரமம் எல்லாம் கிடையாது.

....

28.09.2019
சாரு நிவேதிதா :
R.P. ராஜநாயஹம் இன்று எழுதியுள்ள ஏவிஎம் ஸ்டுடியோ என்ற பதிவு ஒரு அற்புதமான சிறுகதை.
எப்பேர்ப்பட்ட கலைஞன் அவன்.
அந்தப் பதிவை என் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

Sep 27, 2019

ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா இன்று


ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா
இன்று எழுதியுள்ள ஒரு கடிதம்

அன்புள்ள ராம்ஜி, காயத்ரி,

என்னுடைய நீண்ட கால நண்பர் R.P. ராஜநாயஹம் முகநூலில் எழுதி வரும் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  இதை நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கூட சொல்லியிருக்க முடியும்.  ஆனால் அவரைப் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்.  நான் அவரைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.  வீழ்ந்தாலும் லியர் மன்னன் லியர் மன்னனே என்ற என்னுடைய ஒரு கட்டுரை போதும், அவருடைய பெருமையைச் சொல்ல.  அவர் மாதிரி ஆட்கள் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்க வேண்டியவர்கள்.

எனக்கு ஷேக்ஸ்பியரில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்குத்தான் போன் போட்டுக் கேட்பேன்.  நம்ப முடியாத அளவுக்கு ஞாபக சக்தியும் ஞானமும் கொண்டவர்.  அறிவுக் கடல் என்றே சொல்லலாம்.  அவர் சொல்லும் தகவல்களைக் கேட்டால் அவர் வயது 105 இருக்கும் என்று தோன்றும்.  ஆனால் வயது என்னவோ 55 தான்.  அதற்குக் குறைவோ என்னவோ?

லௌகீகம் என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் ராஜநாயஹத்தைப் பார்த்தால் நானெல்லாம் லௌகீகத்தில் ஜாம்பவான் என்றே சொல்லிக் கொள்ளலாம்.  லௌகீகத்தில் ஒரு மண்ணும் தெரியாது.  பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.  வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்து விட்டு இப்போது அந்தக் கால பாரதியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இரண்டு பையன்களுக்கும் திருமணம் செய்து விட்டார் என்பதுதான் அவரது லௌகீக சாதனை.  திருப்பூரில் அவர் வசித்த போது அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்னையிலிருந்து திருப்பூர் போய் பார்த்தேன்.

ராஜநாயஹம் ஒரு நடமாடும் நூலகம்.  அவரிடம் உள்ள தகவல்கள் அனைத்தும் புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும்.  எழுதுங்கள் எழுதுங்கள் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் நான் என்பதால் இதையெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்.  மற்ற பதிப்பகங்கள் அவரை அணுகுவதற்குள் அவரை அணுகி காண்ட்ராக்ட் போட்டு விடுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  அவருக்கு லௌகீகமே தெரியாது.  தாண்டவராயன் என்பவர் இப்போது இந்த க்ஷணம் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து உங்கள் எழுத்தையெல்லாம் எனக்குக் கொடுங்கள் என்று பேப்பரை நீட்டினால் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுவார்.  டாக்ஸி செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புவார்.  அந்த மாதிரி ஆள்.  அவரை அப்படி விட்டு விடாதீர்கள்.  அவர் தமிழின் சொத்து.  மேலும் ஒரு விபரம், தி.ஜானகிராமனை நான் ஒரு refined பாலகுமாரன் என்று முட்டாள்தனமாகத் திட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொறுமையாக உங்கள் வாழ்நாளில் ஒருநாள் தி.ஜா.வை கடவுள் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடப் போகிறீர்கள்; அதை நான் பார்க்கத்தான் போகிறேன் என்று முப்பது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் வாக்கு பலித்து விட்டது.

முகநூலில் இன்றைய அவரது குறிப்பைப் பாருங்கள்.

https://www.facebook.com/rprajanayahem/posts/2525200787693372

....

Jul 31, 2019

One man in his time plays many parts


ஒன்னுல மந்திரி, இன்னொன்னுல ஏட்டையா
And one man in his time plays many parts
- Shakespeare in 'As you like it'





A poor player struts and frets his hour upon the stage, and then is heard no more:
- Shakespeare in 'Macbeth'





Jul 9, 2019

பிக் பாஸ் 3


 கவின் பொண்ணுங்கள மச்சான், மச்சான் றான்.
நான் மதுரை அமெரிக்கன் காலேஜ் ல படிக்கறப்ப லேடி டோக், மீனாட்சி காலேஜ், மற்றும் மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்கள்ள ஜீன்ஸ் பேண்ட் போட்ட நாரீமணிங்கள மட்டும் தான் "மாப்ள" ன்னு கனிவா கூப்புடுவேன்.
"மாப்ள, ஜீன்ஸ் அட்டகாசமா இருக்கே. எங்க எடுத்தீக? Smart and style. 
What is your name?"
ஜீன்ஸ் கேர்ள் ’சீறிய’ பதில் : "Idiot.."

உடன் எதிர்வினையாக என் இன்னொரு ’சீரிய’ கேள்வி "What is your Initial?!"

May 31, 2019

சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்

லண்டனில் இருக்கும் சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்.
என்ன ஒரு அன்பு!
அந்த நாள் இளைய ராஜநாயஹம்

..........

சௌந்தர் வரைந்துள்ள இன்னொரு சித்திரம்

இன்றைய R.P. ராஜநாயஹம்

...


”R.P.ராஜநாயஹம் கலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.
புகைநுழையாத இடத்திலெல்லாம் புகுந்து வருவது போல ஆச்சர்ய அனுபவம் மிகும் எழுத்து.
அவர் வழி தனி வழி.
சில வருடங்களாக இவரது பதிவுகளை எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தோழர் யமுனா ராஜேந்திரன் தனது பதிவொன்றில் "ராஜநாயஹம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் " என்று கூறியிருப்பது மிக உண்மை.
இன்று எனது முகநூல் நண்பராக இருப்பது பெரு மகிழ்ச்சி.”

- T. சௌந்தர்

Mar 19, 2019

Mar 2, 2019

தளையசிங்கம் கருத்தரங்கத்தை அடுத்து ராஜநாயஹத்தின் மீதான பின் அரசியல்



சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayahem, I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks. I am being inflicted with peril and mental Agony For the past fifty years by this type of irresponsible remarks.
இந்திரா பார்த்தசாரதி :: I am not surprised that you were treated badly in Ooty. You are too honest to get Along with those who succeed in Life.
D.திலீப் குமார் : உங்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் , உங்கள் கள்ளமற்ற சிரிப்புத் தான் எனக்கு முதலில் நினைவு வரும் !
மிகவும் கஷ்டமாக இருக்கிறது . உங்களை அவர்கள் இப்படி நடத்தியிருக்கக்கூடாது . ஆனால் , என்ன செய்வது . படித்தவர்களிடம் தான் மிக மோசமான சிறுமைகளும் உள்ளன !
சொல் புதிது 10வது இதழின் தலையங்கத்தில் ஜெயமோகன் 'காலச்சுவடு அனுப்பிவைத்த ஒற்றன் தான் ராஜநாயஹம்' என்று எழுதிய கையோடு தன் பூர்வீகப் பார்வையுடன் 'ராஜநாயஹத்தின் கட்டுரையை வாசிக்க இடம் கொடுத்த அமுதன் அடிகளும், (கிறிஸ்துவ பாதிரி) கட்டுரையைப் பிரசூரித்த மனுஷ்ய புத்திரனும் (முசல்மான்) தங்களது மதக் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்து நிறுவனமான நாராயண குருகுலத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாகத் துப்பறிந்து எழுதியது ஜெயமோகக் கோமாளியின் உச்சக்கட்ட கொனஸ்டை.
சொல் புதிது 10வது இதழ் தலையங்கத்துக்கு எதிர்வினையாக மனுஷ்ய புத்திரன் 'ராஜநாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள். வெகு ஜன ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற்றி எனக்குத் தெரியும். என்னுடையப் பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனேயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம்' என்று எழுதி ஜெயமோகனின் அரசியல் பற்றிக் கட்டுரை முடிவில் 'இவரை ஜெயலலிதாவோடு மட்டுமே ஒப்பிட முடியும்' என்றும் 'ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒருவிதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும்' என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 'ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை' என்று கடுமையாக மனுஷ்ய புத்திரன் சாடியிருந்தார்.
திருப்பூரில் மத்திய அரிமா சங்கத்தில் 'நெடுங்குருதி' நாவல் பற்றிய கலந்துரையாடலுக்கு 11-04-2004 அன்று நான் தலைமை தாங்கி நாவல் பற்றிப் பேசினேன். எஸ். ராமகிருஷ்ணன் முன்னதாகத் திருச்சியில் என்னுடைய 'ஊட்டி தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை பற்றி 'உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டிங்க இந்த ஒரு கட்டுரையில் - தளைய சிங்கத்தை நினைத்தால் இனி யாரும் ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது. நீங்கப் பாட்டுக்கு உண்மையெல்லாம் எழுதிட்டீங்க அவன் (ஜெயமோகன்) இன்னமும் உங்களைக் கண்டபடி திட்டி தாறுமாறாக இலங்கை பத்திரிகைகளில் கூடப் பேட்டி தருகிறான்' என்று என்னிடம் சொன்னார்.
தொடர்ந்து 11-7-2004 அன்று திருப்பூரில் சாகித்திய அகாதெமி சார்பில் 'கதை அனுபவம்' என்பதாக நடந்தவைபவத்தில் நாஞ்சில் நாடன் நிகழ்ச்சி முடிந்தபின் வலிய வந்து எனக்கு வணக்கம் சொன்னார். குற்றமுள்ள நெஞ்சு. நெஞ்சுவலிக்காரர் என்பதால் நான் அமரிக்கையாக அவருடைய அவதூறுகள் பற்றிக் கேட்டேன். யார் மீதும் சேறடிக்காத எழுத்துத் தன்னுடையது என்று பிரச்சாரம் செய்பவராயிற்றே என்று ஒரு நான்கைந்து கேள்விகள் கேட்டேன். நாஞ்சில் நாடன் 'என்னை மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம்' என்று கெஞ்சினார்.
'திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான் நான் தர மறுத்துவிட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. நான் ஒண்ணுக்கு போகனும்' என்று தவித்தவிக்க ஆரம்பித்தார். காலச்சுவடில் கண்ணன் இவருடைய கட்டுரையை எடிட் செய்ததற்கும் கோபப்பட்டார். இவர் இருபத்தி நாலுபேருக்கு ஓட்டு போட்ட விஷயத்தை எடிட் செய்தால் இவருக்குக் கோபம் வராதா என்ன? தொடர்ந்து அவர் செய்த பெரிய சேவை பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். நாச்சார் மட விவகாரம் போல இன்றும் ஆறு வெர்சன் ஜெயமோகன் குழாமிடம் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடக் கூடாது என்று நாஞ்சில் நாடன் தான் தடுத்தாட் கொண்டார். அப்படி மட்டும் தப்பித்தவறி இவர் செய்யலைன்னு வச்சுக்குங்க இவர் தடுத்தாட் கொள்ளலைன்னு வச்சுக்குங்கக்க... எங்கப்பா... அடேங்கப்பா.ஒரு சீனியர் எழுத்தாளன் தன்னுடைய கட்டுரையை ஒரு ஜூனியர் திருத்தி எழுதிவிட்டான் ஒப்புதல் கடிதமும் கேட்டான் என்று சொல்வதைப் பற்றி இலக்கிய உலகம் சிந்திக்க வேண்டுகிறேன். விலங்கும் நாணிக் கண் புதைக்கும் இந்நிகழ்வைக் கேளுங்கள் நண்பர்களே! நாஞ்சில் நாடன் இதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? பகிரங்கப் படுத்தியிருந்தால் யார் மீதும் சேறடிக்காத எழுத்து என்று நிரூபித்திருக்கலாம். பதிலாக என்ன செய்கிறார். ஜெயமோகனோடு ஆறுமாதம் பேசாமலிருக்கிறார். பின்னர் ஜெயமோகன் நூல்கள் வெளியிட்டு விழாவில் ''ஜெயமோகன் என்னய்யா கொலையா செய்துவிட்டார். கூட்டம் சேர்ந்து கிட்டு தாக்குறீங்க" என்று கொக்கரக்கோ கூவல் விடுகிறார் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் நெஞ்சில் நஞ்சு!
இப்படி இன்னொருவர் எழுதியதைத் திருத்தி எழுதிவிட்டு ஜெயமோகன் 'என் நேர்மை ஒருபோதும் ஜயத்துக் குள்ளானது இல்லை' என்று துண்டறிக்கையில் பீற்றிக் கொள்ளுவதை என்னவென்று சொல்வது? இதுதான் அறிவார்ந்த கயமையா? படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஜயோவென்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறான்.எழுத்தாளனையும் சேர்த்துத் தான்.
ஊட்டி கருத்தரங்கத்தில் நடந்தவைகளை அப்படியே சத்தியமாக நான் எழுதிய பின் இவர்களால் என்ன பதில் தரமுடியும் என்று தான் நினைத்தேன். ஆனால் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய செயல்முறை விளக்கம். எல்லோரிடமும் தான் குறியிருக்கிறது. அதை எப்போது கையிலெடுத்துக் கொஞ்சுவது கிடையாதா' என்று புளுகி அவதூறு செய்தபோது நான் உடைந்து போனேன். அங்கே அந்தக் கூட்டத்தில் எனக்கு 'Alienation' ஏற்பட்டுச் சொல்லேர் உழவர்களின் பகைக்கு நான் ஆளானதோடு இப்படி ஒரு கடுமையான அவதூற்றையும் தாங்கும்படியானதற்கு நாஞ்சில் 'நாடன் நானில்லே ஜெயமோகன் தான் இப்படி இஷ்டத்துக்கு எழுதினான்' என்று சாவகாசமாகச் சொல்வதைப் பாருங்கள். இவர்கள் தரத்திற்கே நான் ஒரு கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? முட்டாள்தாசாக நான் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?.... முட்டாள்தாசுக்கு Sexually Transmitted Desease என்ற வார்த்தை தெரியாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு' என்கிறான். வட்டார வழக்கில் ஒரு பாத்திரம் பேசுவதற்கு எழுதுபவன் பொறுப்பா? பெண்ணியத்திற்கு எதிராக ராஜநாயஹம் பேசியதாக எழுதியதாகக் குற்றச்சாட்டு.
முட்டாள்தாசு கழுதைப் புணர்ச்சி ஜெயமோகனை ரொம்பவே பாதித்திருக்கிறது - 'வடக்குமுகம்' நாடகத்திலும் 'காடன் விளி' சிறுகதையிலும் மிருகப் புணர்ச்சியைக் கொண்டு வருகிறார். 'வடக்கு முகம்' நாடகத்தில் ஒரு குதிரை 'என் தசைகளைக் கண்டு காமம் கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை' என்று சொல்கிறது. இது தான் பெண்ணியத்திற்கு எதிரான வார்த்தை. பீஷ்மரிடம் அம்பைக் காதலுடன் 'குதிரைகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது தனது முதுமையிலும் சளைப்பதில்லை' என்று கூறி பீஷ்மருக்கு குதிரை முகமூடி அணிவித்து அணைத்துக் கொள்கிற காட்சி, 'காடன் விளி கதையில் வரும் எருமைப் புணர்ச்சி' - ஜெயமோகனை முட்டாள் தாஸின் கழுதைப் புணர்ச்சி ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சிகள்.
'உங்களைப் பார்த்தால் என் சங்கரன்கோவில் நண்பர் நினைவுக்கு வருகிறார்' என்று அரட்டையின் போது என்னிடம் நெகிழ்ந்து போய் நாஞ்சில் நாடனின் வாய் சொல்கிறது. அதே அரட்டை பற்றித் தாறுமாறாய்க் கை எழுதுகிறது. அது எப்படி?
காலச்சுவடில் சுருக்கப்பட்டு என் கட்டுரை வெளியான போது அ. மார்க்ஸ் அவர்களிடமிருந்து இரண்டு கோபமான போன் மிரட்டல் வந்தது மார்க்ஸ் கோபப்பட வேண்டியது வேதசகாயக்குமாரிடம் தான். வேதசகாயக் குமார் அப்படி அ.மார்க்ஸ் பற்றிக் கூறியபோது அங்கே இருபது பேர் இருந்தார்கள். அந்த இருபது பேரும் இதை மறுக்கவே முடியாது. வேதச் சகாயகுமார் என்பவர் எப்போதுமே சில பொய்களைத் திரும்பத் திரும்ப மற்றவர்களிடம் பேசி, கொஞ்ச நாளில், தானே கூட அவற்றை உண்மையென்றே நம்பி விடும் விசித்திரத் தன்மை கொண்டவர் என்பது அவருடன் பழகியவர்கள் அறிந்து சொல்லும் உண்மை. He cannot explain a Prejudice without Getting Mad.
ஊட்டியில் என்னிடம் 'சிநேகாவின் உதட்டைக் கடிச்ச நடிகர் யார் சார்? என்று கேட்ட ஒரு செக்கு மாட்டு விமர்சகனும் சமீபத்தில் என்னிடம் 'காலச்சுவட்'டில் '' ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை ''பிரசுரமாகாமல் 'கனவு' பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது என்று அபிப்ராயப்பட்டான். வெளவால் போல மிருகங்களுடனும் பறவைகளுடனும் சொந்தம் கொண்டாடும் இந்த ஆள் 'வாசகனாக இருப்பதே துரதிருஷ்டம்' என்ற மேட்டிமை குணம் கொண்டவன். நாஞ்சில் நாடன் கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதி, பின் ஒப்புதல் கடிதம் கேட்ட விஷயமும் தனக்குத் தெரியும் என்று என்னிடம் சொன்னான்.
சாப்பிடும் இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டே சப்பாத்தி மாவு பிசையும் இயல்புடைய வினோத மிருகம் வினயசைதன்யா "If you say you are a Tamil Ezhava I will Fuck you. I will Fuck the bloody Ezhavas' என்று என்னிடம் கூப்பாடு போட்ட போது அங்கே சமையல் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரமவாசி 'அருள்' என்பவரும் மற்றொரு ஆசிரமவாதியும் மட்டுமே இருந்தனர். தர்ம சங்கடத்துடன் நெளிந்தனர். இந்த விஷயத்தை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் எப்படி மறுத்து எழுத முடிந்தது என்பதும் வினோதம் தான்.
'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் 'நாச்சார் மட விவகாரம்' என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். 'ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைபெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல.' என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது 'ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.' என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை.
'நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் 'காதைக் பிளக்கும் மெளனம்' நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று என்று வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தார்.
யமுனா ராஜேந்திரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் 'ஜெயமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில் தான் எழுதி வந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சனையில் ராஜநாயஹம் குறித்து நாஞ்சில் நாடன் பெயரில் ஜெயமோ கட்டுரையை எழுதிப் பிரசூரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு. அந்தக் கட்டுரையைத் தான் எழுதவில்லை எனப்பொது மேடையில் நாஞ்சில் நாடன் ஒப்புக் கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம் தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெயமோ தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசூரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. '
இதற்கு ஜெயமோகனின் (அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம்) வாய் திறந்து விட்டது. எப்படி?
'அதே கட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சில் நாடனால் அனுப்பப்பட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் (பொருள் மாற்றம் இல்லாமல்) திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன் வைத்த குற்றச்சாட்டு. அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டும் உத்தியாக. அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில் நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறைசர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில் நாடன் ஒதுங்கிக்கொண்டார்.'
"யப்பா பைரவா! நீ யாரு பெத்தபுள்ளையோ உன் உடம்பு பூராவுமே பொய் தானா? சகிக்கலப்பா 'கத்தை கத்தையா ரூபாய் நோட்டு திருடமாட்டேன் சில்லறைக் காசுத் திருடன்தான் நான்' என்பதைக் கூட என்ன நாசுக்காக ஒப்புக்கொள்ள முடிகிறது உன்னால் 'நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்' என்று திண்ணை ஆசிரியர் குழு கட்டை பஞ்சாயத்து செய்தபோது கூட நீ அதை மறுக்கவில்லை உன்வாயிலே கொழுக்கட்டை. இப்போது சில்லறைத் திருட்டை மறுக்கவுமில்லை என்று அண்டப்புளுகை அள்ளி விடுகிறாயே Here is the Rub'
2002ல் நடந்து முடிந்த போன விஷயத்தை R.P. ராஜநாயஹம் இப்போது கிளற வேண்டுமா' என்று கேட்கிறவர்கள் 2005 ஜனவரியில் ஜெயமோகன் இந்த விஷயம் பற்றி பேசுவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். கனடாவிலிருந்து ஒரு இணைய இதழ் அதில் லண்டனிலிருக்கிற யமுனா ராஜேந்திரன் பிப்ரவரி 2005ல் "நாஞ்சில் நாடன் இதனைச் சில்லறை விவகாரம் எனக் கருதுவாரானால் அவர் கனவான் என்றோ அல்லது வேலைப் பளு அதிகம் உள்ளவரென்றோ ஜெயமோ கருதலாம். பிறர் அப்படிக் கருத அவசியமில்லை. நாஞ்சில் நாடன் பேசாது தவிக்கிறார் என்று கருதலாம். ராஜநாயஹம் இன்னும் பேசவிருக்கிறார் என்றுதான் விஷயமறிந்த வாசகன் கருதுவான். பிரச்சினையில் ராஜநாயஹத்தின் தரப்பு உண்மைகள் சிற்றிதழொன்றில் விரிவான கட்டுரையாக வரவிருப்பதாக அறிகிறேன். ஜெயமோ காத்திருப்பது நல்லது" என்று 'விலங்கும் நாணிக் கண்புதைக்கும்' கட்டுரை 'பன்முகம் இதழில் வெளிவர இருப்பதை முன்னறிவிப்பு செய்வது விஷய கனத்தை புரிந்து கொண்டிருப்பதால் தான்.
'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை முன் வைத்த முக்கிய பிரச்சினை தளையசிங்கம் மரணம் பற்றிய சர்ச்சை 'தளைய சிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்' என்ற ஜெயமோகனின் பொய் இதன் மூலம் அம்பலமானது. திண்ணையில் இந்த பிரச்னைக்கு மு.பொன்னம்பலம் முத்தாய்ப்பாக எழுதிய குறிப்பில் சுந்தர ராமசாமியின் 'தளைய சிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்' கட்டுரையில் தகவல் பிழை எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். இதன் மூலம் ஜெயமோகன் ஊட்டி கருத்தரங்கம் நடைபெறுவதற்கு முன்னதாக எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிவிட்டது
நான் சத்தியத்தைச் சார்ந்து நிற்பதால் மேற்சொன்ன விஷயங்களும் காலச்சுவடிலும் திண்ணையிலும் பகுதி பகுதியாக வெளியான விஷயங்களும் 'நீதியான செயல்' தான் என்பதிலும் இதன் வெளியீட்டு நேர்த்தியிலும் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
THE BEAUTY OF A MORAL ACT DEPENDS ON THE BEAUTY OF ITS EXPRESSION.
- JEAN GENET.
....................................................................................
தூங்காம சாப்பிடாம "பீ" பேலாம எழுதின புத்தகம்
ஒரு அனானி ' அவங்க தான் ஒன்னை கண்டுக்கவே இல்லையே. ஏன் அவங்களை பத்தி எழுதுறே' ன்னு மொட்டை ஈமெயில் போடுறான்.
குலைச்சிகிட்டே தானேடா இருக்காங்கே.
சுந்தர ராமசாமி செத்தப்ப ஒருத்தன் தூங்காம , "பீ "பேலாம, சாப்பிடாம ஒரு புத்தகம் எழுதினான்.அதிலே 154 ம்பக்கத்திலே என்னாலே தான் சுந்தர ராமசாமி கூட பகையே வந்ததுன்னு சொல்லியிருக்கான்.
தூங்காம,பேலாம,சாப்பிடாம எழுதினா விளங்குமா?
தளையசிங்கம் கருத்தரங்கம்னு எழுதாம கவிதை பட்டறைன்னு எழுதி ஆரம்பிச்சி அந்த பாரா பூரா பொய் தான். என்னாலே தான் சுரா கூட இவனுக்கு பகை யாம்.
டே .. இந்த ஜெகம் ப்ராடால தானே சுரா மனம் நொந்து செத்தாரு. அவரை எதுத்து இவன் பண்ண அரசியலும் நம்பிக்கை துரோகமும் கொஞ்சமா ?
இதிலே அவர் செத்ததும் இவன் தூங்கலே பேலலே சாப்பிடலே. எழுதிக்கிட்டே இருந்தானாம்.
இன்னொரு காமெடி- வாழ்க்கையிலே முதல் முதலா 'பீர்' குடிச்சிக்கிட்டு ' பீர்' மட்டும் குடிச்சிகிட்டே எழுதினானாம்!
இவனோட பிரதான ஜால்ரா
காஞ்ச காட்டான் ஊம்ப முனி ' கதாசிரியனை கொலை செய்யனுமா ?' கட்டுரையிலே பேடித்தனமா கடைசியிலே உளறி இருக்கான். இவன் வண்ட வாளத்தை தண்டவாளத்தில ஏத்தியாச்சி. இன்னும் காவிய தலைவி சவுகார் ஜானகி மாதிரி உருக்கமா வேட்டியில புல்லழுக்கு,புடுக்குலெ சொறிசிரங்குன்னுஅழுகிறான்.
இதிலே எந்நேரமும் என்னை திட்டிகிட்டே
இருக்கான்னு தகவல் .

Jan 27, 2019

விஜய்காந்த்


அறிமுகமேயில்லாத ஒருவரை எப்போதும் பல கட்டங்களில் பார்க்க நேர்வது. அதிலும் அப்படிப்பட்டவர் ரொம்ப பிரபலமாகி விடும்போது அப்படிப்பட்டவரை சாதாரணமான மனிதராக, பார்த்த, சந்தித்த நினைவுகள் பசுமையானவை.  சம்பந்தப்பட்டவர் நினைவில் நான் கொஞ்சம் கூட நிலைத்து விடவில்லை.
 ஒரு எழுத்தாளனாக எனக்கு அந்த மனிதர் பற்றிய விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.


’இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து முடித்து விட்ட பின் விஜய்காந்த் மதுரையில் “டேய், இவன் சினிமாவில் நடிச்சவன்டா” என்று சத்தமாக சொல்லுமளவுக்கு பிரபலம்.
அப்புறம் ரெண்டு மூனு ஓடாத படங்களில் இரண்டாவது கதாநாயகன். இவருடன் முக்கிய கதாநாயகனாய் நடித்த நடிகனையெல்லாம் பேர் சொல்லி இன்று புரியவைக்கவே முடியாது.
அப்போதெல்லாம் அவர் போட்டிருக்கும் வெள்ளை நிற சர்ட்டில் க்ரேய் டிசைன் செய்திருக்கும். ஒரு க்ரே கலர் பேண்ட். எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. ஒரு பைக் ராஜ்தூத்தாய் இருக்கலாம். அல்லது வேறு பைக்காகவும் இருக்கலாம்.
அடிக்கடி பாண்டி பஜார் ரோகினி இண்டர்நேஷனல் லாட்ஜுக்கு வருவார். நான் லாட்ஜின் முன் பகுதியில் அப்போதைய என் நண்பர்கள் ( மிகவும் முதியவர்கள். பெருமாள் நாயுடு, சுப்ரமண்ய ஐயர் போன்றவர்கள்) புடை சூழ சேரில் அமர்ந்திருப்பேன். விஜய் காந்த்தை நான் பார்க்க நேரும்போதெல்லாம் எப்போதும் என்னை கவனிப்பார். ஒரு பார்வை தீர்க்கமாய். ஒரு தடவை கூட என் மேல் விஜய்காந்த் பார்வை படியாமல் போனதேயில்லை.
கண்ணதாசன் வீட்டிற்கருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.
பின்னால் அவர் படங்களில் மெஷின் கன் தூக்கிக்கொண்டிருப்பதை ரசிக்க முடிந்ததில்லை.
’அகல் விளக்கு’ அன்னக்கிளி செல்வராஜ் படத்தில் ஷோபாவுடன் விஜய்காந்த். ஆஹா அந்தப்பாட்டு “ ஏதோ நினைவுகள், கனவுகள், மனதிலே மலருதே”. அகல் விளக்கு படு மோசமான தோல்விப்படம்.
’நூலறுந்த பட்டம்’ என்று ஒரு படம் அப்போது பூஜை போடப்பட்டது.  விஜய்காந்த் அதில் வில்லனா, இரண்டாவது கதாநாயகனா? சந்திரசேகர் கூட அந்தப்படத்தில் விஜய்காந்த்துக்கு குடை பிடிக்கிற ஒரு அல்லக்கை ரோல் செய்திருந்தார்.
எனக்கும் இன்விட்டேஷன் தரப்பட்டிருந்தது.
நடிகர்கள் லிஸ்டில் இரண்டாவதாக விஜய் காந்த் பெயர் போடப்பட்டிருந்தது.
(படம் ரிலீசான போது விஜய் காந்த் மார்க்கெட்டிற்கு வந்து விட்டதால் டைட்டிலில் முதலாவதாக பெயர் வந்திருந்தது.)
மாடியில் இருந்த என் அறைக்கு கீழ் தான் ’நூலறுந்த பட்டம்’ படம் எடுத்த படக்கம்பெனி ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்தது.

பூஜை நடந்த அன்று அதன் பின் மாலை நேரத்தில் தி.நகர் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே நான் தங்கியிருந்த மேன்சனின் பால்கனியும் அல்லாத மொட்ட மாடியுமல்லாத இடத்தில் ஒரு பத்து பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவர் விஜய்காந்த்.

அரைவட்டமாக அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் விஜய் காந்த் அப்போது ‘பழைய படம் ஒன்றில் லிஃப்ட்டில் ஒரு பாட்டு வரும். நல்ல பாட்டு. அந்த பாட்டு என்னன்னு எவ்வளவு யோசிச்சாலும் ஞாபகம் வர மாட்டேங்குது’ என்று குழம்பினார்.
நான் உடனே “ அந்த படம் ’நிலவே நீ சாட்சி’. எம்.எஸ்.வி பாடியிருந்தார். “நீ நினைத்தால் இன்னேரத்திலே ஏதேதோ நடக்கும்” நான் பாடியே காட்டினேன்.
விஜயகாந்த் முகம் ஆசுவாசத்துடன் மலர்ந்தது. அவருடைய அந்த பிரகாசமான கண்கள் விரிந்தன.. அந்த பிரத்யேக சிரிப்பு. ” இந்த பாட்டு தான் சார். இதே பாட்டு தான். லிஃப்ட்ல ஷூட் பண்ணியிருப்பாங்க.”
இந்த ஒரு சின்ன உரையாடல் தான் எனக்கும் விஜய்காந்த்துக்கும் நடந்த ஒரே interaction.
இயக்குனர் விஜயன் “தூரத்து இடி முழக்கம்” விஜய் காந்திற்கு ஒரு நல்ல படம்.
நான் மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலை ஒட்டிய சவ்வாஸ் ரெடிமேட் கடைக்கு விசிட் செய்வேன். அப்போதெல்லாம் சினிமா நடிகரான பின்பும் விஜய்காந்த் ராதாஸ் கடையில் நின்று கொண்டிருப்பார். சவ்வாஸ் என் நண்பர்கள். ராதாஸ் ஜவுளிக்கடையில் அவருடைய நண்பர்கள். பின்னால் ராதாஸ் அவருடன் கடும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தார்கள் என்று அந்த ஏரியாவில் பரவலாக பேச்சு. அப்படி இல்லையென்றால் தான் அவர்கள் விஜய் காந்த் பட தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு இப்ராஹிம் ராவுத்தர் போல உயர்ந்திருப்பார்களே.
’சட்டம் ஒரு இருட்டறை’ அவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தது. அப்படியும் ஒரு ரவுண்டு வந்த பின் இரண்டு வருடம் சும்மா வாய்ப்பில்லாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. மீண்டும் “ சாட்சி” அடுத்த ரவுண்டை ஆரம்பித்து வைத்தது.
மூன்றாவது ரவுண்டு “ஊமை விழிகள்” படத்தில் ஆரம்பித்தது. அப்புறம் செம டாப்.
விஜய் காந்திற்கு ஒரு ரசிக பட்டாளம் கிராமங்களில் பரவலாக ஏற்பட்டதால் நட்சத்திர அந்தஸ்து.
பெரும் தடைகளை உடைத்துத் தான் மிகுந்த பிரபலத்தை அவர் கண்டடைந்தார்.

வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டையில் பார்க்க விஜய்காந்த் ரொம்ப பிரமாதமாக இருப்பார்.
கேப்டன் பிரபாகரன், ரமணா இரண்டும் அவருடைய மிக வெற்றி பெற்ற படங்கள். அந்த இரு படங்களைக் கூட நான் பார்த்ததில்லை.
கமல் ரசிகனுக்கு விஜய் காந்த் படங்கள் சுவைக்காது.

’விஜய்காந்திற்கு ஒரு போஸ்ட் மேன் வேடம் கூட என் படங்களில் கொடுக்க மாட்டேன்’ என்று மட்டம் தட்டிய பாரதிராஜாவின் ’தமிழ்செல்வன்’ படத்தில் கூட கதாநாயகன்.
அவர் படங்களில் நடித்த வில்லன்கள் மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் பிரபலமானார்கள். பிரபல வில்லன்கள் பலர் அவர் படங்களில் நடித்தார்கள். சரத்குமார் அவர் படத்தின் மூலம் தான் மார்க்கெட்டிற்கு வர முடிந்தது.
’ஏழை ஜாதி’ சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அவரை பார்த்தேன். அங்கு மனோரமாவை பார்க்க நான் போய் இருந்த போது என் மீது ஆர்க் ப்ரூட் லைட் வெளிச்சம் தற்செயலாக திருப்பப்பட்டது. அப்போது விஜய் காந்த் என்னை கவனித்துப் பார்த்தார். நல்ல மார்க்கெட்டில் இருந்த நேரம். என்னை முன்னர் அடிக்கடி பார்த்திருக்கிற பழைய மதுரைக்காரன் என்று அடையாளம் தெரிந்திருக்காது.
விஜய்காந்த் மார்க்கெட் டல்லானவுடன் அரசியலுக்கு வந்த போது அதை நான் சிலாகிக்கவில்லை. அவரை Nigger MGR என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.
மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லாவிட்டாலும்
 அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா தயவில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர முடிந்தது.  மோடியுடன் கூட்டணி போட முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வந்தது. கம்யூனிஸ்ட்கள் கூட அவருக்கு வால் பிடித்தார்கள். வைகோவும், திருமாவளவனும் முதல்வர் வேட்பாளராக விஜய்காந்தை தூக்கிப்பிடித்தார்கள்.

தே.மு.தி.க அரசியல் ஆரோக்கியமானதல்ல. தனித்துவமில்லாதது. மனைவி, மைத்துனர், இப்போது மகன் இவர்களை உள்ளடக்கிய குடும்ப கட்சி. மக்கள் செல்வாக்கேயில்லாத மற்றொரு குடும்ப கட்சி.
ஆண்டவனோடும் மக்களோடும் மட்டும் கூட்டணி என்று சொல்லி விட்டு, பின்னால் அவர் அரசியல் கட்சிகளை தவிக்க விட்டு நடத்திய சந்தர்ப்ப வாத கூட்டணி கண்ணாமூச்சி..

அரசியலில் அவர் பெறப்போகும் சரிவு பற்றி சென்ற 2016 சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் நான் தெளிவாக கணித்திருந்தேன்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

2009ம் ஆண்டு மதுரை டவுன் ஹால் ரோடு தாஜ் ஹோட்டலுக்கு  போய் இருந்தேன். தாஜ் பழைய சிறப்பை இழந்திருந்தது.

அப்போது மொஹிதின் பாய் அங்கே சர்வராய் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருந்தாலும் என்னை பார்த்தவுடன் உற்சாகமாக எனக்கு பரிமாற ஆரம்பித்தார். என்னிடம் கேட்டார். “ஒங்களுக்கு ஞாபகமிருக்கா? நீங்க உங்க ஃப்ரண்ட்ஸோட இந்த டேபிள்ள உட்கார்ந்திருப்பீங்க. விஜய காந்து அவரோட ஃப்ரண்டுங்களோட அந்த டேபிள்ள உக்காந்திருப்பாரே. நினைவிருக்கா?”






Jan 20, 2019

#Ten_Years_Challenge

2009 - 2019


One man in his time plays many parts. - Shakespeare
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts.
- in 'As you like it' play.

We Know what we are,
But not we may be
- Shakespeare in 'Hamlet'


Age cannot wither me, nor custom stale my infinite variety.
- Shakespeare in 'Antony and Cleopatra'