Share

Showing posts with label கவிஞர் கம்பதாசன். Show all posts
Showing posts with label கவிஞர் கம்பதாசன். Show all posts

Oct 11, 2008

கவிஞர் கம்ப தாசன்

கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரை என்று தங்களைப்பற்றி அடையாளப்படுத்தி கொள்பவர்கள் உண்டு .
தி.ஜானகிராமன் , எம்.வி. வெங்கட்ராம் , கரிச்சான் குஞ்சு ,சுவாமினாத ஆத்ரேயன் , கவிஞர் கம்பதாசன் போன்றவர்கள் .

கவிஞர் கம்ப தாசன் . அழகானவர் . ரோமன் முக அமைப்பு கொண்டவர் .
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜி கணேசனுக்கு சந்திர பாபு ஒரு பாடல் பின்னணி பாடியிருக்கிறார் . " Jolly life! Jolly Life!! தாலி கட்டினால் Jolly life! " என்ற அந்த பாடலை எழுதியவர் இந்த கம்ப தாசன் !
'மல்லிகா ' படத்தில் " வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே , ஏனோ அவசரமே , என்னை அழைக்கும் வானுலகே " என்ற பாடலையும் கம்ப தாசன் தான் எழுதினார் .
பல டப்பிங் படங்களுக்கு பாடல்கள் எழுதினார் .

சோற்றில் ரசம் ஊற்றுவதற்கு பதிலாக பிராந்தியை ஊற்றி சாப்பிடும் அளவுக்கு போதை மன்னன் . பாரதிமணி யின் மாமனார் க.நா .சு இதை நேரில் பார்த்திருக்கிறார் .

பல நல்ல கலைஞர்கள் போல இவர் வாழ்க்கையும் வறுமை துயரில் முடிந்தது .
கம்ப தாசன் பற்றி சிலோன் விஜயேந்திரன் (இவர் இப்போது மறைந்து விட்டார் )ஒரு நூல் எழுதி வெளிவந்தது .