Share

Showing posts with label மு.க.அழகிரி. Show all posts
Showing posts with label மு.க.அழகிரி. Show all posts

Feb 9, 2019

Inter personal relationship

’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’
- யவனிகா ஸ்ரீராம்
என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “ க்ளாசிக்”.
வெற்றிகரமாக திமிங்கலத்தின் முதுகில் நான் பயணிக்கிறேன் என்பது சந்தோஷமாயிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன் பல திரை பிரபலங்கள் கூடியிருந்த நிலையில், ஏ.பி.நாகராஜன்   தனியறைக்கு வரும்படி எம்.ஆர்.ராதாவை அழைத்தாராம்.
ராதா அவருடன் அறையில் நுழைந்திருக்கிறார். தடால் என்று சாஸ்டாங்கமாக ராதா காலில் ஏ.பி.என் விழுந்திருக்கிறார்.
ராதா வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் வெளிப்படையாக உடைத்துச் சொன்னாராம். “அயோக்கிய பய. பிச்சக்காரப்பய. என் கால்ல இவன் விழுகிறத மத்தவங்க பாக்கக்கூடாதுன்னு நினக்கிறான். தனியா அறைக்கு கூட்டிட்டு போய் ரகசியமா கால்ல விழுறான்.”
எனக்கு தெரிந்த மனிதரின் மகன் வெளி நாட்டில் படித்தவன். தன்னுடன் படித்த வெளி நாட்டு வெள்ளைக்கார நண்பர்களுக்கு கல்யாண நிச்சயத்தின் போது ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறான். அதில் இங்கே உள்ள அவனுடைய நண்பன் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறான். வெளி நாட்டில் படித்த அந்த மாப்பிள்ளை கல்யாணமான தன் பால்ய நண்பனை அறிமுகப்படுத்தியிருக்கிறான். பெண்ணும் ஆணுமான அந்த வெளி நாட்டு இளைஞர்கள் இந்த தம்பதியரை பார்த்திருக்கிறார்கள் “So you are already married” பரவசமாய் கண்களை விரித்திருக்கிறார்கள்.
அவனுடைய கல்யாணம் ஆறு மாதத்திற்கு பின்னால் நடந்த போது வெள்ளைக்கார வகுப்பு தோழர்கள் வருவார்கள் தானே? வந்தார்கள். பெண்கள் நம் கலாச்சாரப்படி சேலை. ஆண்கள் வேட்டி சட்டையில். மாப்பிள்ளை உபயம். கல்யாண மாப்பிள்ளையின் பால்ய நண்பன் தன் மனைவியோடு அவர்களை வரவேற்றிருக்கிறான். ஒரு வெள்ளைக்காரன் வரவேற்றவனைப்பார்த்து ஆச்சரியமாக கூவியிருக்கிறான் – “ Are you still married?!”
செய்திகள் பற்றி அன்றாடம் எந்த கவலையும் கிடையாத ஒரு அஞ்ஞானி – டி.வி., செய்தித்தாள் எதுவும் பார்க்கும் வழக்கமில்லாதவர் - செவி வழி செய்தியொன்றை அரைகுறையாக கேட்டு விட்டு ரோட்டில் அன்றைக்கு சத்தமாக அரசியல் பேசினார் “எப்படியோ இன்னைக்கு எவ்வளவு பெரிய தேசிய கட்சிக்கு அழகிரி தலைவராயிட்டாரே. என்னமா தம்பி முகத்தில மாவீரன் கரிய பூசிட்டாரு.”
பிசியான ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஒரு கடை முன் ஒரு Used condom அழுக்காக கிடந்தது. ராத்திரி பரபரப்பு அடங்கியவுடன் சாலையில் எக்ஸ்ப்ரஸ் வேக சரச சல்லாப நிகழ்வு சர்க்கஸ் போல. Rooster Fuck? விடிய, விடிய வாகனங்கள் போய் வருகிற பகுதி.
ஒரு அரசாங்க ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. வாசலில் இருந்த ஒரு செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தேன். இறுக்கமாய் இருந்த அவர் சகஜமானவுடன் என்னிடம் சொன்னார் “நான் ராத்திரி ஷிப்ட் பார்க்கறப்ப இங்க அஞ்சாறு ஆட்டோ ஆஃபிஸ் முன்னாடி நிக்கும். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வருவார். ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் கிட்டயும் பேசுவார். அவங்க பணம் கொடுப்பாங்க. சரி தான். பவர காட்டி ’பவுசு’ வாங்கிக்கறார்னு நெனச்சேன். ஒரு நாள் ஆட்டோக்காரர்ட்ட கேட்டேன். அப்ப தான் தெரிஞ்சது. எஸ்.ஐ தான் அந்த ஆட்டோக்களின் ஓனராம். தினம் கலக்சன் பணம் வாங்கத்தான் வர்றாராம்.”
……………

Aug 2, 2018

சந்தேக தாமஸ் கேள்விகள்

ஆத்திமூக்காக்காரர்கள் தயவு செய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டாலின் செயல்பாடு போற்றப்படுகிறது. தன் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களுக்கு, நேரில் போய் ஆறுதல் கூறுகிறார்.
எதிர் கட்சித்தலைவராக இருக்கும் போது இப்படி செய்யும் ஸ்டாலின் நாளை ஆட்சியை கைப்பற்றிய பின் இந்த கண்ணியத்தை கடைப்பிடிப்பார் என்று உறுதி சொல்ல முடியுமா? ஏனென்றால் Politician out of power is a different species.
When the devil is sick, it would be a saint.
இவர் முதல்வராய் இருக்கும் போது, இந்த வன்முறை நடந்த பின் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ, வட்டச்செயலாளர் போன்றவர்கள் பிரியாணி கடை, போலீஸ் என்று இரு பக்கத்திலும் தங்கள் பவரை காட்ட முடியாத படி ஸ்டாலின் மூக்கணாங்கயிறு போடுவாரா? அரெஸ்ட் செய்யமுடியாத படி குற்றவாளிகள் தலைமறைவாக கட்சி மேல் மூடிகளே உதவாத படி தடுப்பாரா?
இன்றைய நிலவரத்தில் அடுத்து ஆட்சிக்கு வர அதிக வாய்ப்பு தி.மு.கவுக்கு தான்.
இப்போதே அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க குடும்ப சொந்தங்கள் வற்புறுத்துகின்றதாக தகவல்.
அழகிரிக்கு கட்சியில் இடம் கொடுத்த பின் ஸ்டாலின் ஆட்சியில் மதுரையில் அராஜகம் நடக்காது என்று உத்தரவாதம் தரமுடியுமா? அப்படி மதுரையில் அழகிரி அடிப்பொடிகள் தடியெடுத்து தண்டல்காரர்களாக மாறினால் அண்ணனையோ, மதுரை ரௌடித்தனத்தையோ கண்டிக்கிற பேராண்மை அவருக்கு இருக்குமா?
ஏன்னா, ஏயன்னா, போன தடவ தீமூக்கா ஆட்சியில ஸ்டாலினே மதுரைக்குள்ள போக சிரமப்பட்டாரு.

சோரம் செய்யாமல், தீமை செய்யாமல் ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்துமில்லை என்று தான் பாரதி சொல்லியிருக்கிறான்.

Aug 12, 2012

மு.க.அழகிரி

மீள்பதிவு 10-09-2008

ஆனந்த விகடன் 01.12.2010 இதழில் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் இந்தப் பதிவின் ஒரு பகுதியை தான் எழுதிய அழகிரி -25 ல் எடுத்துப் போட்டுக்கொண்டார்.
நன்றி:R.P.ராஜநாயஹம் என்று ஒரு வார்த்தை கூட இல்லாமல்.

”திருட்டு வகையில் மகா மோசமானது அறிவுத்திருட்டு.

தீமைக் குணங்களில் மிக மோசமானது உலோபம்.”

-டி.என்.ராமச்சந்திரன்
..............

என்னுடைய மாமனாரின் பிராந்தி கடையில் நானும் அப்போது பங்கு தாரர் . என் திருமணம் நிச்சயிக்கப்படும் முன்னரே அதற்கான பங்குதொகையை அந்த பிராந்தி கடையில் போட்டு விட்டேன் ( சபாஷ் என்கிறீர்கள் )நானே செய்துங்க நல்லூர் சாராயகடை ராஜநாயஹம் பிள்ளையின் பேரன் தான் . ஆனால் என்னிடம் குடி பழக்கம் கிடையாது .சிகரெட்டே கிடையாது என்பதனால் தான் எனக்கு என் மாமனார் பெண் கொடுத்தார் . ( 'என்னைய மாதிரி பயலுக்கு பொண்ணு கொடுக்ககூடாது மாப்பிள்ளை' -என் மாமனார் எனக்கு பெண் கொடுப்பதற்கு சொன்ன காரணம் இது ! )
ஒரு நாள் பிராந்தி கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்து கொண்டிருக்கிறேன் . வருடம் 1985 . ஒரு கார் கடை முன் நின்றது . காரிலிருந்து இறங்கியவருடன் அவருடைய நண்பர்கள் சிலர் . கடைக்கு வந்து இவர் என்னிடம் 'கோல்கொண்டா Full இரண்டு பாட்டில் கொடுங்க சார் .' கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த இருவரையும் கொடுக்க சொன்னேன் . கடையில் உள்ள ஆள் அதை எடுக்கும் போதே , இவருடன் வந்தவர் ' அப்படியே அஞ்சு கல்யாணி பீர் ' என்றார் . குற்றாலம் போகிறார்கள் . அதை இன்னொரு ஆள் எடுத்துக்கொண்டிருந்த போது நான் இவரிடம் ' மதுரையிலேயே செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கே சார் ' என்றேன் .
லேசாக திடுக்கிட்டு அவர் ' என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க !'
'என்ன சார் முன்னாள் முதல்வர் மகனை கண்டு பிடிப்பது என்ன சிரமமான காரியமா ?'
மு.க .அழகிரி ! அப்போதெல்லாம் அழகிரி - ‘The less-discussed son of Karunanithi’ . மு.க. முத்து வும் , மு .க . ஸ்டாலின் ஆகிய பிள்ளைகள் தான் பாபுலர் . 1985 எனும்போது அதற்கு பத்து பன்னிரண்டு வருடம் முன் முத்து ,ஸ்டாலின் போல கனிமொழி கூட அப்போது சிறுமியாயிருக்கும் போதே பிரபலம் !
( சட்டசபையில் கேள்வி - கனிமொழி யார் ? ' கருணாநிதி பதில் ' என் மனைவி தர்மா சம்வர்த்தினி யின் மகள்' . -'தர்மாசம்வர்த்தினி யார் ? ' 'என் மகள் கனிமொழியின் தாயார் ')
இப்போது தான் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் என அழைக்க படுகிறார் .
கருணாநிதியின் மகன் என நான் சொன்னது தான் தாமதம் .கடையில் வேலை பார்த்த இருவரும் திமுக காரர்கள் . வாயை பிளந்தது மூடவே இல்லை . யார் யார் . இவர் தான் மு .க . அழகிரி .
அழகிரி என்னைப்பார்த்து ' உங்கள் முகம் ரொம்ப Familiar ஆ இருக்கு சார் ' என்றார் சிந்தனையுடன் .
நான் உடனே ' I am a nameless face .. or a faceless name.. ' சிரித்துகொண்டே ' என்னை நீங்க எங்க பார்த்திருக்க போறீங்க ' என்றேன் .
அழகிரி ' இல்ல சார் . உங்க முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரியே இருக்கு '
சந்தோசமாக எனக்கு கை கொடுத்து விட்டு விடை பெற்றவர் கடையிலிருந்து காரில் ஏறுவதற்காக நடக்கும் போதும் அவருடைய நண்பர்களிடம் ' இவரை பார்த்தா.. எனக்கு இவர் முகம் ரொம்ப Familiar ஆ தெரியுது ' என்று மீண்டும் சொன்னார் .
காரில் ஏறியதும் சந்தோசமாக கை காட்டி விடை பெற்றார் .
அடுத்து சில நாளில் மதுரை போன போது தற்செயல் ஆக நான் கண்ட காட்சி . அவருக்கு இதில் ஒன்றும் இழுக்கு இல்லை . மதுரையில் சாதாரணமாக யாருக்கும் நடக்க கூடியது தான் . இன்று இவர் அஞ்சா நெஞ்சனாக எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்கிறார் எனும்போது இதை யாரும் நம்ப மாட்டார்கள் .
மதுரை பஸ் ஸ்டாண்ட் விட்டு நான் வெளியே வரும் போது அழகிரி அங்கு அவசரமாக ஆட்டோ திருநகருக்கு விசாரித்து கொண்டிருந்தார். ஆட்டோகாரன் அடாவடியாக வாடகை கேட்பதை கண்டு விலகி நடக்க ஆரம்பித்தார். ஆனால் மதுரை ஆட்டோ காரன் கோபமாகி 'டே கண்ணாடி என்ன நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போரே .. பதில் கூட சொல்லாம ' என்று சத்தமாய் கேட்டான். இவர் சட்டை செய்யவில்லை . நானும் அவரிடம் பேச நினைத்து நெருங்கினேன் .சூழல் சரியில்லை . அவரும் என்னையும் கவனித்து விட்டு தான் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றார் . அந்த ஆட்டோ காரன் திமுக காரனாக கூட இருந்திருப்பான் . இவர் யார் என்று தெரிந்திருந்தால் காலில் விழுந்திருப்பான் . சும்மாவே திருநகர் கொண்டுபோய் விட்டிருப்பான் . அவனுக்கு தெரியவில்லை.
மதுரையில் சவாரி படியவில்லை என்றால் இன்று கூட யாரையும் அவமானப் படுத்த ஆட்டோ காரர்கள் தயங்குவதில்லை . டிராப் செய்யும்போது கூட தகராறு செய்கிறார்கள்.
கருணாநிதியின் வாரிசுகளில் அழகிரி தான் வெள்ளந்தியானவர் என்று சாரு நிவேதிதா சமீபத்தில் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_02.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_01.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_10.html

Sep 10, 2008

மு.க. அழகிரி

என்னுடைய மாமனாரின் பிராந்தி கடையில் நானும் அப்போது பங்கு தாரர் . என் திருமணம் நிச்சயிக்கப்படும் முன்னரே அதற்கான பங்குதொகையை அந்த பிராந்தி கடையில் போட்டு விட்டேன் ( சபாஷ் என்கிறீர்கள் )நானே செய்துங்க நல்லூர் சாராயகடை ராஜநாயஹம் பிள்ளையின் பேரன் தான் . ஆனால் என்னிடம் குடி பழக்கம் கிடையாது .சிகரெட்டே கிடையாது என்பதனால் தான் எனக்கு என் மாமனார் பெண் கொடுத்தார் . ( 'என்னைய மாதிரி பயலுக்கு பொண்ணு கொடுக்ககூடாது மாப்பிள்ளை' -என் மாமனார் எனக்கு பெண் கொடுப்பதற்கு சொன்ன காரணம் இது ! )
ஒரு நாள் பிராந்தி கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்து கொண்டிருக்கிறேன் . வருடம் 1985 . ஒரு கார் கடை முன் நின்றது . காரிலிருந்து இறங்கியவருடன் அவருடைய நண்பர்கள் சிலர் . கடைக்கு வந்து இவர் என்னிடம் 'கோல்கொண்டா Full இரண்டு பாட்டில் கொடுங்க சார் .' கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த இருவரையும் கொடுக்க சொன்னேன் . கடையில் உள்ள ஆள் அதை எடுக்கும் போதே , இவருடன் வந்தவர் ' அப்படியே அஞ்சு கல்யாணி பீர் ' என்றார் . குற்றாலம் போகிறார்கள் . அதை இன்னொரு ஆள் எடுத்துக்கொண்டிருந்த போது நான் இவரிடம் ' மதுரையிலேயே செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கே சார் ' என்றேன் .
லேசாக திடுக்கிட்டு அவர் ' என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க !'
'என்ன சார் முன்னாள் முதல்வர் மகனை கண்டு பிடிப்பது என்ன சிரமமான காரியமா ?'
மு.க .அழகிரி ! அப்போதெல்லாம் அழகிரி - ‘The less-discussed son of Karunanithi’ . மு.க. முத்து வும் , மு .க . ஸ்டாலின் ஆகிய பிள்ளைகள் தான் பாபுலர் . 1985 எனும்போது அதற்கு பத்து பன்னிரண்டு வருடம் முன் முத்து ,ஸ்டாலின் போல கனிமொழி கூட அப்போது சிறுமியாயிருக்கும் போதே பிரபலம் !
( சட்டசபையில் கேள்வி - கனிமொழி யார் ? ' கருணாநிதி பதில் ' என் மனைவி தர்மா சம்வர்த்தினி யின் மகள்' . -'தர்மாசம்வர்த்தினி யார் ? ' 'என் மகள் கனிமொழியின் தாயார் ')
இப்போது தான் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் என அழைக்க படுகிறார் .
கருணாநிதியின் மகன் என நான் சொன்னது தான் தாமதம் .கடையில் வேலை பார்த்த இருவரும் திமுக காரர்கள் . வாயை பிளந்தது மூடவே இல்லை . யார் யார் . இவர் தான் மு .க . அழகிரி .
அழகிரி என்னைப்பார்த்து ' உங்கள் முகம் ரொம்ப Familiar ஆ இருக்கு சார் ' என்றார் சிந்தனையுடன் .
நான் உடனே ' I am a nameless face .. or a faceless name.. ' சிரித்துகொண்டே ' என்னை நீங்க எங்க பார்த்திருக்க போறீங்க ' என்றேன் .
அழகிரி ' இல்ல சார் . உங்க முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரியே இருக்கு '
சந்தோசமாக எனக்கு கை கொடுத்து விட்டு விடை பெற்றவர் கடையிலிருந்து காரில் ஏறுவதற்காக நடக்கும் போதும் அவருடைய நண்பர்களிடம் ' இவரை பார்த்தா.. எனக்கு இவர் முகம் ரொம்ப Familiar ஆ தெரியுது ' என்று மீண்டும் சொன்னார் .
காரில் ஏறியதும் சந்தோசமாக கை காட்டி விடை பெற்றார் .
அடுத்து சில நாளில் மதுரை போன போது தற்செயல் ஆ நான் கண்ட காட்சி . அவருக்கு இதில் ஒன்றும் இழுக்கு இல்லை . மதுரையில் சாதாரணமாக யாருக்கும் நடக்க கூடியது தான் . இன்று இவர் அஞ்சா நெஞ்சனாக எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்கிறார் எனும்போது இதை யாரும் நம்ப மாட்டார்கள் .
மதுரை பஸ் ஸ்டாண்ட் விட்டு நான் வெளியே வரும் போது அழகிரி அங்கு அவசரமாக ஆட்டோ திருநகருக்கு விசாரித்து கொண்டிருந்தார் . ஆட்டோகாரன் அடாவடியாக வாடகை கேட்பதை கண்டு விலகி நடக்க ஆரம்பித்தார் . ஆனால் மதுரை ஆட்டோ காரன் கோபமாகி 'டே கண்ணாடி என்ன நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போரே .. பதில் கூட சொல்லாம ' என்று சத்தமாய் கேட்டான் . இவர் சட்டை செய்யவில்லை . நானும் அவரிடம் பேச நினைத்து நெருங்கினேன் .சூழல் சரியில்லை . அவரும் என்னையும் கவனித்து விட்டு தான் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றார் . அந்த ஆட்டோ காரன் திமுக காரனாக கூட இருந்திருப்பான் . இவர் யார் என்று தெரிந்திருந்தால் காலில் விழுந்திருப்பான் . சும்மாவே திருநகர் கொண்டுபோய் விட்டிருப்பான் . அவனுக்கு தெரியவில்லை .
மதுரையில் சவாரி படியவில்லை என்றால் இன்று கூட யாரையும் அவமான படுத்த ஆட்டோ காரர்கள் தயங்குவதில்லை . டிராப் செய்யும்போது கூட தகராறு செய்கிறார்கள் .
கருணாநிதியின் வாரிசுகளில் அழகிரி தான் வெள்ளந்தியானவர் என்று சாரு நிவேதிதா சமீபத்தில் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தார் .