Share

Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

May 27, 2021

சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்' சிறுகதை தொகுப்பு

 '2004 டிசம்பர் மாதம்

 'சௌந்தர சுகன்' பத்திரிகையில்

 R. P. ராஜநாயஹம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி' 


கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்.

 ஜெயகாந்தன் எழுத்தை முழுமையாக படித்திருந்தேன். ஜெயகாந்தனை விட

 பெரிய எழுத்தாளன் இருக்க முடியாது என்று நம்பியிருந்தேன். 


நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது 

என் தம்பியொருவன் அப்போது ‘பிரசாதம்’ என்று ஒரு புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். (இந்த தம்பி தான் சென்ற வருடம் கொராணாவிற்கு பலியான

 நாகை சன் டிவி ரிப்போர்ட்டர்) 


‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது.


 அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன்.

 முன்னுரையை வாசித்தேன்.

 ‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே 

என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’

 என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை 

என்னைச் செயலோயச் செய்துவிட்டது. 


முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது.

 ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் தான் கிணற்றுத் தவளை. என்னுடைய நம்பிக்கை உடைந்து விட்டது. 

அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். 

கிடாரி, 

ஒன்றும் புரியவில்லை,

வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை

அந்த வயதில் ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன.


 எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், 

சீதை மார்க் சீயக்காய்த் தூள்,

 மெய்+பொய்=மெய் எல்லாமே 

ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.


SERENDIPITIOUS HAPPY DISCOVERY!

 யார் இந்த சுந்தர ராமசாமி? 

ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை

 ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி.

 ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத 

LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக 

இவரிடம் தெரிகிறது. 


இப்போது நினைக்கிறேன். எனக்கு வாசகனாக       ஒரு TRANSFORMATION சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.


அப்புறம்  ஜானகிராமன் 'மோகமுள்' 'செம்பருத்தி'   'உயிர்த்தேன்',  'அம்மா வந்தாள்' என்று வாசிக்க ஆரம்பித்து

 ஒரு ரவுண்டு வந்தேன்.

Jun 18, 2019

கெட்ட கெட்ட வார்த்தைகள்


முந்தாநாள் ஜுன் 16ம் தேதி கிருஷ்ணன் நம்பி நினைவு நாள்.
போன மாதம் நம்பியின் “தங்க ஒரு...” சிறுகதையை கூத்துப்பட்டறையில் வாசித்து விளக்கி பேசினேன்.
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை அப்போது கண் கூடாக கண்டேன்.
சென்னையில் வாடகை வீட்டு பிரச்னையின் மீதான அங்கதம் இந்த மாய யதார்த்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
நகுலன் இந்த கதை பற்றி “ ’ தங்க ஒரு...’ இடம் கிடைக்கவில்லை என்பதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது ஸ்விஃப்ட் எழுதிய கலிவரின் யாத்திரையைப் பின்பற்றுகிறது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையை விட சிறப்பாக வந்திருக்கிறது “ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பியின்’விளையாட்டுத் தோழர்கள்’ கதை பற்றி அவருடைய தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம் ஒரு விஷயம் சொன்னார்.
குட்டிப்பையன் சங்கா பள்ளிக்கூட விடுமுறை நாளில் விளையாட தவிப்பான். விளையாண்டு கொண்டிருக்கும் தோழர்களிடம் “ நானும் வடேன்டா” என்று கெஞ்சுவான். 

கிருஷ்ணன் நம்பி இதற்கு ஒரு சிறுவன் சொல்லும் பதிலாக “ போலே தாயோளி, நீ ஒன்னும் வாண்டாம் ” என்று எழுதியிருந்திருக்கிறார். பத்திரிக்கையாசிரியர் ‘போலே தாயோளி’ என்பதை நீக்கி வெளியிட்டாராம். விஜய பாஸ்கரன் ஆசிரியராய் இருந்த ’சரஸ்வதி’ யில் 1961ல் வந்த கதை ’விளையாட்டுத்தோழர்கள்’.
சுந்தர ராமசாமியிடம் “ உங்க கதையில் வர்ற ’முலை’ய மட்டும் வெட்டிடறேனே “ என்று ட்ரங்க் கால் போட்டு சத்தமாக கூப்பாடு போட்டு பேசியவர் விஜய பாஸ்கரனாய் தான் இருக்குமோ? சு.ராவின் கதைகள் சரஸ்வதியில் பிரசுரமாகியிருக்கிறது. அவருடைய நாவல் “ புளிய மரத்தின் கதை” யின் ஆரம்ப அத்தியாயங்கள் கூட ‘சரஸ்வதி’யில் வந்தது.
இப்போது கூட கெட்ட வார்த்தை எழுத்தில் வரக்கூடாது என்கிற கூச்சம் நிறைய பேருக்கு இருக்கிறது.
என்னை முப்பது வருடங்களுக்கு பின் தேடி கண்டு பிடித்த என் காதலியொருவர் என் எழுத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். கெட்ட வார்த்தைகள் எழுதுவதை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

https://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_27.html






May 30, 2019

கிருஷ்ணன் நம்பி எனும் குழந்தைமை கலைஞன்


தகவல் பிழை எழுத்தில் வந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும் அதையும் மீறி ஏற்படவே செய்கிறது.
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் அவருடைய நீலக்கடல் முகவுரை இல்லை என்றே எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணன் நம்பி பற்றிய பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
ஆனால் அந்த ’நானும் கடவுளும் அறிஞனும்’ என்ற முகவுரை காலச்சுவடு வெளியிட்ட கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது என்பதை நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாச்சலம் எனக்கு கவனப்படுத்தினார்.
என்னுடைய ‘ இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்’ நூலை படித்து விட்டு தொலைபேசியில் பேசி அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். அவரை சந்தித்த போது என் தகவல் பிழை பற்றி சுட்டிக்காட்டினார்.
அதை உடனே ப்ளாக் பதிவில் திருத்தி விட்டேன். ஆனால் நூலில் இடம் பெற்றிருக்கிறது.
இது போல் சென்ற மாதம் என்னுடைய மற்றொரு தகவல் பிழை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலொன்று ’நாளைய தீர்ப்பு’ படத்தில் இடம்பெற்றிருந்ததாக பி.பி.எஸ் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த படம் ‘நாளைய செய்தி’ என்பதை அறியவந்தேன். இதையும் ப்ளாக்கில் திருத்தினேன்.
நம்பி எழுதிய முகவுரை சிறப்பான ஒன்று. எனக்கு ’குட்டி இளவரசன்’ பிரஞ்சு புனைவில் அந்த்வான் செந்த் எக்சுபெரி எழுதிய குட்டி முகவுரைக்கு ஈடான அற்புதமான ஒன்று.
’நானும் கடவுளும் அறிஞனும்’ படிக்கும்போதெல்லாம் நம்பி தான் சந்திரன் என்றும் சுந்தர ராமசாமி தான் சூரியன் என்பதாகவுமே எண்ணுவேன்.
மீண்டும் அந்த முகவுரையை இங்கே தருவதில் தவறில்லை.

கிருஷ்ணன் நம்பி ’நீலக்கடல்’ சிறுகதைத் தொகுப்புக்கு அந்த எழுதிய முகவுரை.
நானும் கடவுளும் அறிஞனும்
நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.
கிருஷ்ணன் நம்பி பற்றி நகுலன் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்.
“நாஞ்சில் நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் – ஒரு என்று சொல்வதை விட ‘ஒரே’ என்று சொல்லும் அளவுக்கு – ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பி”
’நம்பி ஓர் உண்மையான கலைஞன்’ என்பது நகுலனின் ஆணித்தரமான அபிப்ராயம். ‘ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல் தோல்வி ( இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்’ என்றார்.
குழந்தைமை மனவார்ப்பு அற்புதமாக கொண்டிருந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.
நீலக்கடல், விளையாட்டுத்தோழர்கள் போல எத்தனை குழந்தை கதைகள்.
நீலக்கடல் 1952ல் எழுதஆரம்பித்து அரைகுறையாக அப்படியே போட்டு விட்டு 1961ல் தான் முடித்தாராம்.
இதில் பாட்டி சொல்லும் கதை - பாலகிருஷ்ணன், பாலமுருகன், பிள்ளையார் கிட்டிப்புள் விளையாண்ட கதையை நான் ஸ்போக்கன் இங்க்ளீஷ் டீச்சராய் இருந்த போது குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எப்போதும் சொல்லியிருக்கிறேன்.
மருமகள் வாக்கு, அவனும் ஒரு மரநாயும், தங்க ஒரு .. வருகை, போன்ற கதைகளெல்லாம் பெருஞ்சாதனை.
ஆதவன் மரணம் தந்த துக்கம் அளவிற்கு நம்பி அகாலமாய் இறந்திருக்கக்கூடாது என்ற தவிப்பும் எப்போதும் இருக்கிறது.

Mar 1, 2019

மு.தளையசிங்கமும் தொழுகையும்


சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து 'சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளையசிங்கத்தின் 'தொழுகை' கதைதான்.ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்' என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது.
1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலிஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு 'மெய்யுள்' என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார்.
இது 'தளையசிங்கத்தின் பிரபஞ்சயதார்த்தம்' என்ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல்.
22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடம் நான் நோ¢ல் இதுபற்றிக் கேட்டபோது தளைய சிங்கத்தின் சகோதரர் மு. பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாகக் கூறுகிறார்.
இந்த விவரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன்.
ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.
திருச்சியிலுள்ள சபாரத்தினம் என்ற இலங்கை எழுத்தாளர் 'தளைய சிங்கத்திற்கெதிராக போலீசைத் தூண்டி பணம் கொடுத்தவன் கொழும்பில் பாத்திரக்கடை வைத்திருக்கிற தீவுக்காரன்' என்று என்னிடம் தெரிவித்த தகவலை ஜெயமோகனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்.
மே 4, 5, 6 தேதிகளில் ஊட்டிநாராயணகுரு குலத்தில் நடக்க இருக்கிற தளையசிங்கம் கருத்தரங்கிற்கு ஜெயமோகனிடம் இருந்து அழைப்பு.
சொல்புதிது 9ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தளையசிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பப்பட்டு கிடைக்கிறது.
ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களில் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளைய சிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருத்தக் கூடிய அளவுக்கு க்ராஃப்ட் மேன்ஷிப்.
தளைய சிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி 'இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி' என்றும் 'செயற்கை இறுக்கம் நிறைந்த நடை' என்றும் குறிப்பிடுகிறார்.
ஊட்டியில்
குடும்பத்துடன் ஜெயமோகன் வருகிறார். கருத்தரங்கத்தின் முதல் அமர்வு. ஜெயமோகனின் முன்னுரை.
நான் பேசிய போது 'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி' என்ற தளைய சிங்கத்தின் கூற்றைப் பற்றி குறிப்பிடுகிறேன்.
வெங்கட் சாமிநாதன் ஆர்வத்துடனும் சிறிது குழப்பத்துடனும் என்னிடம் 'அப்படியே சொல்கிறாரா' 'அப்படியே சொல்கிறாரா' என்று கேட்கிறார்.
நான் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கட்சியை ஆரம்பித்த போது பிரான்சில் மார்க்ஸிய தத்துவத்தை தலைகீழாக்கிய புரட்சிகர உபவர்க்கத்துடனும், அமெரிக்காவின் பலாத்காரங்களை எதிர்க்கும் ஹிப்பிஸ{டனும் சீனாவின் புதிய மார்க்ஸீய செங்காவலர்களுடனும் பங்களதேஷின் கொரில்லாக்களோடும், பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்து கொரில்லாக்களோடும் அண்ணா தி.மு.க அனுதாபிகளை தோளோடு தோள் நிறுத்தி கருணாநிதியின் நவ பாஸிச ஆட்சியை எதிர்ப்பதாக தளைய சிங்கம் எழுதியதையும் அபத்தம் என்று சுட்டிப் பேசினேன்.
உடனே ஜெயமோகன் இப்படி ஒவ்வொரு வரியாக உருவி தளையசிங்கத்தைப் பார்க்கவேண்டாம் என்றார்.
தொழுகை கதை பற்றி பேச ஆரம்பித்த வேதசகாயகுமார் அவருடைய கிறிஸ்துவ பூசை லத்தீன் மந்திரங்களை இளைஞர்கள் பொருத்தமாக கெட்ட வார்த்தை போட்டு பேசிக் காட்டுவதைப் பற்றியும் பாவ மன்னிப்பு கேட்கும்போது பாதிரியாரிடம் ஆபாசமாக விவாரித்துப் பேசி பாதிரியார் இளையவராயிருந்தால் அவர் மிகவும் நெளியவேண்டியிருக்கும் என்பதையும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
'செக்சுவாலிடி பற்றி பேசலாம் தானே. ஏதும் தடையுண்டா?' என்று நான் கேட்டேன்.
ஜெயமோகன் தன் மனைவி அருண்மொழி நங்கை கலந்து கொண்டுள்ள நிலையிலும் பேசலாம் என்பதாக தலையாட்டினார்.
மதியம் சாப்பிட்டுவிட்டு அரட்டை ஜெயமோகன் அவருடைய உத்தியோகம் செய்யும்போது டெலிபோன் உரையாடல்களைதான் ஓட்டுக் கேட்ட கதைகளை கூறுகிறார்.
குற்றாலத்தில் குமார செல்வாவுக்கும் லட்சுமிமணிவண்ணனுக்கும் நாடார் ஜாதியின் உட்பிரிவு பற்றிய சர்ச்சை காரணமாக நடந்த கைகலப்புச் சண்டையைப் பற்றிக் கூறுகிறார்.
யாரோ ஒரு அரை குறை அமுதா கணேசனையும், குரும்பூர் குப்புசாமியையும் படித்து விட்டு, ஒரு ரொம்பப் பெரிய நாவலை எழுதிக் கொண்டுவந்து ராமஸ்வாமியிடம் (சுந்தர ராமசாமியை ராமஸ்வாமி என்றே ஜெயமோகனும் வேதசகாய குமாரும் குறிப்பிடுகிறார்கள்) படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறான்.
ஜெயமோகன் இந்த இடத்தில் தான் ராமஸ்வாமியின் பாய்சனைக் கவனிக்கனும் என்கிறார்.
சுந்தர ராமசாமி எனக்கு வயதாகி விட்டது. ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறது. நீங்க அவரிடம் உங்க நாவலைக் காட்டுங்களேன் என்று ஒரு மூன்றாந்தர பேராசிரியரைக் குறிப்பிட்டு அந்த அரைகுறை எழுத்தாளரை சமாளித்ததை பாய்சன் என்று ஜெயமோகன் விவாரிக்கிறார்.
யாராயிருந்தாலும் ஆர்வக்கோளாறுகளை இப்படித்தானே சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதில் என்ன பாய்சன் இருக்கிறது?
இதைத் தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதி என்னிடம் இடைவெளி சம்பத் பற்றி சொன்ன விஷயத்தை குறிப்பிட்டேன். சம்பத் ஆயிரம் பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதிக் கொண்டு வந்து இந்திரா பார்த்தசாரதியிடம் கொடுத்ததையும் அதை படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி அபிப்ராயமாக 'RAMBLING ஆக இருக்குடா. நாவலை இன்னும் Crisp ஆக edit செய்தால் நன்றாக வரும்' என்று சொல்லிவிட்டு எதற்கோ வீட்டின் உள் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது சம்பத் வெராண்டாவில் அந்த முழு நாவலையும் கொளுத்திவிட்டு குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனிமேல் எதற்கு? என்று இந்திரா பார்த்தசாரதியிடம் சொன்னதையும் கூறினேன்.
(இந்த விஷயம் ஜெயமோகனை உறுத்தியிருக்குமோ என்னமோ)
என் கல்லூரி வாழ்க்கையின் போது நடந்த சம்பவம், நான் திரைப்பட உதவி இயக்குனராக இருந்த போது அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை ஐந்தாறு முறை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது நடந்த ஒரே மாதிரியான சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
பாக்யராஜீன் ராசுக்குட்டி படத்தில் நான் நடித்து படத்தில் அந்தக் காட்சி இடம் பெறாமல் போனதைப் பற்றி இப்படி... இப்படி
வெங்கட்சாமிநாதனிடம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அசோகமித்திரனை அவர் கடுமையாக தாக்குவது பற்றி கேட்டேன். க.நா.சுவும், சந்தரராமஸ்வாமியும் நகுலனும் கூட அசோகமித்ரன் பற்றி உயர்வாக எழுதியபோது வெ.சா.வும் பிரமிளும் கடுமையாக அவரை விமர்சித்தது ஏன் என்று கேட்டேன்.
நூலகத்தில் மாலை அமர்வு, கடுங்குளிர். தளையசிங்கத்தின் பேர் ஞான விடுதலை முழுச் சமூகத்திற்கும் சாத்தியமா?
வெ.சா. அப்போது கூறுகிறார். இது சாத்தியப்படாத விஷயம். இன்டிவிஜுவல் சால்வேஷன் சாத்தியம் பரவச விடுதலை முழுச் சமூகத்திற்கு எப்படி ஏற்படும். அப்போது ஸ்தாபனம் ஆகிவிடும். ஸ்தாபனம் என்னும்போது கரப்ட் ஆகிவிடும்.
வெ.சா.வின் இந்தக் கருத்துடன் எனக்கு முழுக்க உடன்பாடு. இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்தில் பலமுறை குறிப்பிடுகிற விஷயம்.
வினோபா ஆசிரமத்திற்குப் போய் அங்கே நடந்த அக்கிரமங்களைக்காண சகியாமல் மிரண்டு போய் திரும்பி ஒடிவந்த தன் நண்பர் ஒருவரைப் பற்றி கி.ராஜ நாராயணன் ஒரு முறை என்னிடம் சொன்னதைப் பற்றிக் கூறினேன்.
அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக, எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாகவும் இருக்க வேண்டும் என்கிறார் தளையசிங்கம்.
அரசியல்வாதிக்கு எதிர் மறை அம்சம் இலக்கியவாதி என்று எனக்குத் தோன்றுகிறது. அதோடு எழுத்தாளர்களுந்தான் எந்த அளவுக்கு நம்பகமானவர்கள்? 1968ம் ஆண்டு நோபல் பரிசு வாங்கும்போது ஜப்பானிய எழுத்தாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை கண்டித்து உரையாற்றிய யசுநாரி கவபட்டா 1972ம் ஆண்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று நான் கேட்டேன்.
இந்த இரண்டு அமர்வுகளிலும் நாள் புரிந்து கொண்ட ஒரு முக்கியமான விஷயம். ஜெயமோகன் நிறைய பேசுவார். வேதசகாய குமாரும் பேசுவார். அவ்வப்போது ஜெயமோகன் 'நீங்க என்ன சொல்றீங்க' என்று யாரையாவது கேட்பார். அவர் ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ, ஒரு கருத்து அபிப்ராயம் சொன்னதும் தொடர்ந்து ஜெயமோகன் நிறைய பேசுவார். தொடர்ந்து வேத சகாய குமார் பேசுவார். நான் எப்போதும் ஜெயமோகன் கேட்காமலே தான் பேசினேன்.
இரண்டாவது அமர்வு முடியும் போது தொழுகை கதை பற்றி வெ.சா. அருமையான ஒரு கமெண்ட் அடித்தார். ’ஒரு சின்ன லேடி சேட்டர்லீஸ் லவர்’.
நான் அதை உடனே ரசித்து ஆமோதித்தேன்.
கூட்டம் முடிந்த பிறகும் ஜெயமோகன் பேசிக் கொண்டேயிருந்தார்.
பொதுவாகவே ஜெயமோகன் தூங்குகிற நேரந்தவிர மற்ற நேரங்களில் பேசிக் கொண்டேயிருக்கிறார். சாப்பிடும்போது கூட பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
எப்படியோ சாப்பிட்டும் விடுகிறார்.
தூங்குவதற்கு மாத்திரை வேண்டுமா? என்று கேட்டார். எனக்குத் தேவையில்லை என்று சொல்லி விட்டேன்.
ஜெயமோகன் 1986 ல் மனப்பிளவு நிலை பாதிப்புக்குள்ளாகி இரண்டரை வருட காலத்தில் இரண்டாகப் பகுத்துக் கொண்ட மன ஒத்திசைவும் சிதைந்த போது உச்சக்கட்டத்தில் மூன்று மாதம் மன நல சிகிச்சை பெற்றுக் கொண்டவர். சுந்தர ராமசாமிதான் 'எழுதுங்க எழுத்து தான் மருந்து'. "It will cure you" என்று உற்சாக மூட்டி நெறிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாள் மே 5ந் தேதி காலை 6 மணிக்கு அறைக்கு வெளியே உற்சாகமான ஜெயமோகனின் பேச்சு சத்தம். எல்லோரும் வாக் போகிறார்கள். நான் எழுந்து காலைக் கடன் முடித்து குளித்து அறையைவிட்டு வெளியே வருகிறேன். தேவகாந்தனுடன் டைனிங்-கம்-கிச்சன் கட்டிடத்திற்கு செல்லும்போது வெ.சா. குளித்துவிட்டு அவரும் சேர்ந்துகொள்கிறார். கறுப்பு தேநீர் அருந்திவிட்டு எனக்கு பாட்டிலில் நீர் எடுத்துக்கொண்டு வரும்போது வெங்கட் சாமிநாதனுக்கும் அவர் பாட்டிலில் நீர் எடுத்து அவர் அறையில் வைக்கிறேன்.
வேத சகாயகுமார் பேசுகிறார். ராமஸ்வாமி (சு.ரா.) இவருக்கு ரொம்ப நெருக்கமாயிருந்தவர். தன்னுடைய படுக்கையில் இவரைப் படுக்கச் சொல்லிவிட்டு அவர் தரையில் படுத்துவிடுவார்.
தொடர்ந்து சு.ரா.வைப் பற்றியும் அவருடைய மகன் கண்ணனைப் பற்றியும் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத படைப்புகளை தொகுத்து காலச்சுவடு பிரசுரம் செய்தது பற்றி கடுமையான அதிர்ச்சியான தகவல் பல லட்சம் பணம் ( 8 லட்சமாம்) கை மாறியது. தமிழவன் தான் மீடியேட்டர். (இன்டர்மீடியட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்) தமிழவனே இதைப் பற்றி இவாரிடம் சொன்னார்.
புதுமைப்பித்தனின் 'தமிழைப் பற்றி‘ என்ற முக்கியமான கட்டுரையை சகாயகுமார் தான் கொடுத்தார். கண்ணனை இந்த பல லட்சம் பிரச்னை குறித்து வேதசகாயகுமார் வேறு பலமாதிரி விசாரிக்கிறார். கண்ணன் பிடிகொடுக்கவே யில்லை. ஆனால் யாரிடமோ கண்ணன் இவர் ஏதோ ஒரு லட்சம் ரூபாய் பணம் எதிர்பார்ப்பதாக அவதூறு பேசினார்.
சொல்புதிது ஜெயமோகன் சிரமப்பட்டு நடத்துகிறார். கையைக் கடித்தால் நிறுத்திவிடும்படி இவரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சொல்புதிதுக்கு ஆர்.எஸ்.எஸ் பணம் வருவதாக வதந்தி.
சு.ரா விடமும் கண்ணனிடமும் உள்ள நம்பிக்கையில் தான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்ததைப் பற்றி ஜெயமோகன் சொல்லியிருந்திருக்கிறார். இப்போது 'அந்த விஷயம்' பற்றி இப்படிப் பிரச்சாரம் செய்வது நியாயமா? கண்ணன் பி.ஜே.பி. ஆதரவாளராக இருந்ததில்லையா? இப்படி..... இப்படி .....
நான் 'ஒரு இலக்கியவாதி ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்க முடியுமோ?' என்கிறேன். மார்க்ஸீயவாதிகள் இலக்கியவாதிகளாக இல்லையா? என்று வெ.சா. கேட்கிறார்.
ஜெயமோகன் அன் கோ வாக் போய்விட்டு திரும்பி வருகிறார்கள். என்னிடம் 'இப்போதும் சினிமா ஆசை இருக்கிறதா? என்று முகம் கழுவிக் கொண்டே ஜெயமோகன் கேட்கிறார். ’ஃப்ரேமுக்குள் நடிகனாக வர வேண்டும். ஒரு கலைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற தாகம் ரொம்ப உண்டு’ என்று பதில் சொல்கிறேன்.
ஜெயமோகன் இன்றும் குளிக்கவில்லை.
யுவன் இரண்டாம் நாள்தான் வருகிறார். சந்திக்கிறேன், கைகுலுக்கல் 'லொயோலா காலேஜா' 'இல்லை. நான் R.P. ராஜநாயஹம் திருச்சி' யுவனும் நானும் மதுரை அமெரிக்கன் காலேஜ்.
நான் பி.ஏ. இங்கிலிஷ் லிட்ரேச்சர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மிகவும் விசேஷமானவர்கள். வசந்தன் தான் எனக்கு ஹேம்லட். நெடுமாறன்தான் மார்க் ஆண்டனி. ஜான்சகாயம் தான் டாக்டர் ஃபாஸ்டஸ்.
தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் வகுப்பைவிட வெளியேதான் அவர் பேச்சு சுவாரசியமாயிருக்கும்.
ஹிந்தி நடிகை தேவிகாராணியை கதாபாத்திரமாகக் கொண்ட 'அழியாதமலர்' பற்றி ஜெயமோகனிடம் பேசுகிறேன். 'சவுக்கு' கதை அசோகமித்திரன் பாணி கதை. (அசோகமித்திரனின் சிறுகதைகளில் வரும் பால்ய நண்பர்கள் முனீர், நரசிம்மன் ஆகியோரை சவுக்கு 'சோட்டேலால்' நினைவு படுத்துகிறான்.) ஆமாம் என்று ஜெயமோகன் ஒத்துக் கொள்கிறார்.
சட்டென்று நான் தளையசிங்கம் கருத்தரங்கம் பற்றி 'உங்கள் கட்டுரை கனமாக இருக்கிறது என்றாலும் எனக்கு வெ.சா. சொல்வதில்தான் உடன்பாடு' என்கிறேன். ஓரிரண்டு விநாடி நிதானித்து ஜெயமோகன் 'அதுசரி. இது உங்கள் அபிப்ராயம்' என்கிறார் சிறிது சலனத்துடன்.
மூன்றாவது அமர்வு.
வேதசகாயகுமார் முதலில் தன் கட்டுரையை வாசிக்காமல் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் கட்டுரையை வாசித்திருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கிறார். வேண்டாம் என்று மீண்டும் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார். விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல ஆகிவிட்டது.
யுவன் கொஞ்ச நேரத்தில் மோகனரங்கனின் சட்டை கைப் பகுதியை பின்னுக்கு இழுத்து முன்னுக்குத்தள்ளி விளையாட ஆரம்பித்துவிடுகிறார். நிர்மால்யாவிடம் 'டீ வருமா' என்று கேட்கிறார். நிர்மால்யா டீ ஏற்பாடு செய்கிறார்.
டீ குடித்தவுடன் யுவன் சிகரெட் பிடிக்க வெளியே செல்கிறார். 'குடிக்க நீர் வேண்டும்' என்கிறார்.
நீர் வந்ததும் எழுந்து போய் குடிக்கிறார்.
திடீரென்று ஜெயமோகன்தான் துப்பறிந்து சாரு நிவேதிதாவின் ஜாதியைக் கண்டுபிடித்ததைப் பற்றி கூறினார். சாரு ஒரு முறை 'தான் மலம் அள்ளுகிற ஜாதி' என்று எழுதியபோது ஜெயமோகன் சாருவின் மேலதிகாரியிடம் அவர் ஜாதிபற்றிய சர்ட்டிபிகேட் நகலைக் கேட்டுப் பெற்றுவிட்டார். சாருநிவேதிதா தலித் அல்ல, செங்குந்த முதலியார் ஜாதி.
பிறகு ஜெயமோகன் கோவிலுக்குப் போன கோவை ஞானிக்கு தன் கண்டனத்தைத் தெரிவிக்கிறார். நாஞ்சில் நாடன் 'தான் தாலிகட்டிய மனைவி தீர்க்க சுமங்கலியாக வாழ, குறிப்பிட்ட ஒரு கோவிலில் மீண்டும் தாலிகட்டினால் நல்லது என்று நம்பும்போது ஞானி தன் மனைவியைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மனைவியின் நம்பிக்கையை கெளரவித்து கோவிலுக்குப் போனதில் என்ன தவறு என்கிறார். ஜெயமோகன் மீண்டும் ஞானி செய்தகாரியம் எனக்கு முக்கியம்' என்று கோவிலுக்குப் போனதை ஆட்சேபிக்கிறார்.
யுவன் உடனே 'ஞானி கோவிலுக்குப் போனதில் தவறில்லை. நான் கூட வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுக்கிறேன். அப்போது பூணூல் போடுகிறேன்' என்கிறார்.
இந்த இடத்தில் வேதசகாயகுமார் ஒரு செய்தி சொல்கிறார். அ. மார்க்ஸ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ நாடார்கள் கூடிப் பேசுவதைப் பற்றி தற்செயலாக 'ஒரு கிறிஸ்தவ நாடார் பேராசிரியர்' சகாயகுமாரிடம் சொல்லியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பது தெரிந்த விஷயம்.
தளையசிங்கத்தின் கதைகள் ரொம்ப சிறப்பானவையாக பாதிக்கக் கூடியவையாக தன்னால் சொல்ல முடியவில்லை என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார்.
'தொழுகை' கதையில் செல்லம்மாள் மேல் கோபம் வருவதில்லை' என்று வேதசகாயகுமார் எழுதியிருப்பதைப் பற்றி நான் கேட்கிறேன். தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12, 14 வயது) தூங்கும் அறையைப் பூட்டி விட்டு கரிய சாணான் தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார். செல்லம்மாளுககு முத்து 'சிவலிங்கமாக'த் தெரிகிறான். முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறான். உடலுறவு கொள்வது இது முதல்முறையுமல்ல. இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லம்மா பார்த்து கதைத்திருக்கிறாள்.
நான் கேட்கிறேன் 'வாசிப்பவனுக்கு ஏன் கோபம் வராது?'
.
'எனக்கு என்று இல்லை. வாசிக்கிற எல்லோருக்கும் கோபம் வருவதில்லை என்றுதான் சொல்கிறேன்' என்று மறுக்கிறார் வேதசகாயகுமார்.
'அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள் மீது கோபம் வராது என்று சொல்ல முடியுமா' என்று நான் கேட்டவுடன் வேதசகாயகுமாரின் முகம் இறுகுகிறது. ('எங்கிட்டேயே கேள்வி கேட்கிறாயா, நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையை பற்றி உனக்குத் தெரியாது' என்று அர்த்தம்)
உடன் ஜெயமோகனின் முகமும் இறுகுகிறது('எங்களுடைய அந்தஸ்தென்ன . . . யோக்தை என்ன ..... ' என்று அர்த்தம்).
நான் கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.
தத்தனோடு டூரிங் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து 'சிவகெங்கைச் சீமை' பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம்.
போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் சர்ச், இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு பேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்கிறான்.
முட்டாள் தாசு 'மயக்கமா கலக்கமா' பாட்டை, அழகாக பாடுவான் 'கோமாதா எங்கள் குலமாதா' பாட்டையும் அனுபவித்துப் பாடுவான். தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக 'முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல முடிவில் கொடைக்கானல்தான்' என்று கவிதை எழுதியவன்.
குருவி மண்டையன் 'என்ன தாசு . . . கழுதையைப் போய்.....' என்று கேட்கிறான்.
தாசு 'கழுதை இல்லடா கல்யாணிடா .... டேய் எனக்கு பொம்பளை சீக்குடா ...... சத்தமில்லாமப் போங்கடா நீங்க'
கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது. 'தாசு இது கல்யாணி இல்லராசு. கல்யாண சுந்தரம்' என்கிறான் குருவி மண்டையன்.
இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து 'ஐயய்யோ என்னடா இது அசிங்கம்' என்று கூப்பாடு போட தாசு அவனிடம் 'பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா' என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஒடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது.
தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். வாயரிசம் அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.
இதைச் சொல்லிக்கொண்டே வரும்போது இடையிடையே வேதசகாயகுமார் 'என்ன சொல்ல வர்றீங்க', இதுக்கும் தொழுகை கதைக்கும் என்ன சம்பந்தம், 'விஷயத்தை மட்டும் சொல்லுங்க' என்று குறுக்கிட்டுப் பேசிக்கொண்டே வந்தார்.
சொல்லி முடித்ததும் வினயசைத்னயா "This is mere a Gossip" என்றார்.
இவர் இரண்டாவது அமர்வில் வெ.சா. சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் வெ.சா ஜாதி பற்றி தவறான எண்ணத்தோடு பேசியதாக வீணான சர்ச்சை செய்தவர். முன்னதாக 'You do Dhabas' என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி ரொம்ப நீளமாக ஒரு தத்துவக் கதையை சொன்னவர்.
(எனக்கு திலீப்குமாரின் திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை கதை ஞாபகத்துக்கு வந்தது. அது நல்ல கதை)
நாராயண குரு குல சுவாமி வினய சைதன்யா 'காசிப்' என்று சொன்னவுடனேயே ஜெயமோகன் என்னைப் பார்த்து 'நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள். இதுவரை நடந்த கருத்தரங்கத்தையே நீங்க புரிஞ்சிக்கலை. நீங்க ஊருக்குக் கிளம்பலாம்' என்றார். 'பத்து பேர் உங்க பேச்சைக் கேட்பதால் நீங்க இஷ்டத்துக்குப் பேசுறீங்க, இப்ப நீங்க பேசியதற்கு என்ன பர்ப்பஸ் இருக்கு' என்று கேட்டார்.
'பர்ப்பஸ் இருக்கு என்றேன்
‘ஒரு பர்ப்பஸும் தேவையில்லை. நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள்' என்றார்.
நான் அப்போது என்னை பரதேசியாக உணர்ந்தேன். தி ஜானகி ராமனின் பரதேசி வந்தான் கதை. கடைந்த அமுதத்தைக் குடிக்க வந்த ராகுபோல பந்தியில் அமர்ந்துவிட்ட பரதேசி. தரதரவென்று பாதிபந்தியில் இழுத்துத் தள்ளப்பட்டு தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புற விழுந்த பரதேசி.
நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். யாரும் எதுவும் பேசவில்லை.
எதுவுமே நடக்காதது போல, கருத்தரங்கம் தொடரும்படியாக ஜெயமோகன் பேச ஆரம்பித்துவிட்டார். எல்லோரும் அதை கவனிப்பதான பாவனை.
இது துரியோதன சபை. துரியோதனனும் சகுனியுமாக இயக்கும் சபை. எனக்கு ஆதரவுதர யாரும் கிடையாது. பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா எல்லோரும் வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள் பிற இளைஞர்கள் கூட இளம்படைப்பாளிகள் ஜெயமோகனைச் சார்ந்து இருக்க வேண்டியவர்கள். நான் ஒரு சாதாரண வாசகன். முப்பதாண்டு காலமாக வாசித்துக் கொண்டே இருக்கும் அற்பம். Just a nameless face or a faceless name.
எழுந்தேன் அறைக்கு வந்தேன். பேக் செய்தேன். டைனிங் அறைக்கு வந்தேன். சுவாமி வினய சைதன்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
வினயமாக 'That was not a Gossip I agree. But you have taken a long time' ' என்றார். நான் 'If you say 'but' I will say 'yet'. That is discussion that is seminar' என்றேன்.
ஜெயமோகன் சொன்னதற்காக நான் ஊருக்குப் போகக்கூடாது என்று வினயசைதன்யா பிடிவாதம் பிடித்தார். நான் ஏற்க மறுத்துவிட்டேன்.
கருத்தரங்கத்தில் நான் பேசியதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடத்திலிருந்து 11 நிமிடத்திற்குள் தான் இருக்கும். மூன்று மணி நேர கருத்தரங்கத்தில் 11 அல்லது 12 நிமிடம் கூட பேசியிருந்தாலும் லாங்டைம் என்று எப்படி சொல்ல முடியம்.
வினயசைதன்யா 'I will fuck the bloody ezhavas. Only to avoid ezhavas we have come all the way from Kerala to Ooty. bastards' என்றார். நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்யபதி ஆகிய மூவரும் ஈழவர்கள் எனக்கு நாக்கிலே சனி. கருத்தரங்க அமர்வில் பேசியது போதாதென்று இவரிடம் நான் தமிழ் ஈழவ இனம் இல்லத்துப் பிள்ளைமார் என்று சொல்லித் தொலைத்துவிட்டேன்.
வினயசைதன்யா நான் சாப்பிட்டுதான் போக வேண்டும் என்று ரொம்ப பிடிவாதம் பிடித்தார். நான் சாப்பிட மறுத்தால் இவர் என்ன செய்வார் என்று சொல்லமுடியாது. சாப்பிடுவதாகப் பேர் பண்ணிவிட்டு எழும்போது கருத்தரங்கம் முடித்து எல்லோரும் சாப்பிட வந்துவிட்டார்கள்.
யாருடைய அட்ரஸையம் நான் வாங்கிகொள்ள முடியவில்லை. தேவதேவன் இ நாஞ்சில்நாடன், யுவன், வெங்கட் சாமிநாதன், தேவகாந்தன் ஆகியோரிடம் விடைபெற்றேன் யுவன் 'ஏன்' என்றார். நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆசிபெறுவதற்காக வெங்கட் சாமிநாதன் காலைத் தொட்டபோது அவர் 'நோ நோ' என்றார். சிரித்துக்கொண்டே வெளியேறினேன். இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்.
தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடும்.
காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம்?
விஷயம் ஆறுமுக ஒதுவாருக்குத் தெரியவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசரித்துப் போகலாம். அல்லது கொலையோ தற்கொலையோ செய்யம் படி ஆகலாம்.
செல்லமாள் மீது கோபம் வராது என்றால் எப்படி?
முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர் கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான்.
பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்லி கூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.
சும்மா சாருநிவேதிதாவை மிரட்டுவதற்காக 'சாரு தாண்ட வேண்டிய புள்ளி தொழுகைதான் ஆனால் தளையசிங்கம் அவசரமாக அடித்துக்கொல்லப்பட்டார்' என்று அவர் மிகையாகக் கூறிவிட்டபின் நான் தொழுகையை நிர்வாணமாக்கினால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியம். It’s a tale told by an idiot full of sound and fury and signifying nothing.
ஊட்டியை விட்டுக் கிளம்பும்போது மதியம் 2மணி திருச்சி வந்து வீடு சேரும்போது இரவு சரியாக 12 மணி. ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சரி பண்ணியிருக்கலாம். There is always trial and error.
சுந்தரராமசாமியின் 'அழைப்பு' கதையில் ஒருவரி 'நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்'.

Oct 20, 2017

கிருஷ்ணன் நம்பி – சு.ரா- கி.ரா – சூரியோதயம்


சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் படித்தவர்கள் அதில் வருகிற சூரியோதய காட்சியை மறந்திருக்க முடியாது.
”அப்போது கிழக்கே சூரியனின் விளிம்பு தெரிந்தது. நகத்தைப் பிய்த்துக்கொண்ட விரலிலிருந்து ரத்தம் கசிவதைப்போல் சூரியன் வருகிறது. ரத்த வெள்ளம்….”
“காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, பாதை விளிம்பில் நின்று கொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன்…….அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும்………….
”ஒவ்வொரு நாளும் இந்த விசுவரூப தரிசனத்திலிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலான ஞானம் லகுவாகவும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு எதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும்…..”
ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் 1981ல் க்ரியா வெளியீடாக வந்த போது ஏற்படுத்திய பரபரப்பு…..
அசோகமித்திரன் ஜே.ஜே. பற்றி “ அண்ணாந்துன்னா பாக்க வேண்டியிருக்கு.”
மிக பிரமாதமாக 1985ல் அசோகமித்திரன் “ஒற்றன்” நாவல் மூலம் படைப்பாளியாக எதிர்வினையாற்றினார். ஜே.ஜேக்கு பதில் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஜே.ஜேக்கு சரியான சவாலான நாவல்.
இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்” கூட ஜே.ஜே சில குறிப்புகளுக்கு குறைந்த ஒன்று அல்ல.
பின்னாளில் பிரமிள் குறுநாவல் ‘ப்ரசன்னம்’ சு.ரா.வின் ஜே.ஜேவுக்கு எதிர்வினை என்று வெளிப்படையாக சொன்னார்.
ந.முத்துசாமி தன்னுடைய ‘உந்திச்சுழி’ நாடகத்தை ஜே.ஜே என்ற கதாபாத்திரத்திற்கே சமர்ப்பணம் செய்தார்.
ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் ஏராளமாய் விமர்சனத்தை எதிர்கொண்ட நாவல். சாரு நிவேதிதாவின் விமர்சனம் ரொம்ப பிரபலம்.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார்.


2002ல் ஜூலை 16ந்தேதி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பினார். அதில் அவர் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.
My dear R.P.Rajanayahem,

I totally rejected nearly sixty criticisms on J.J. 
Criticisms is a matter of opinion and opinions of writers always tend to vary, assuming they are recording their real voice, which is not often the case, especially in our milieu. 
Difference in opinions are understandable. But if anybody distorts FACTS that are standing in my favour, surely I will try to expose the deliberate falsifications of writers who ever they are.

- Sundara Ramaswamy 

ஜே.ஜே நாவலை கிருஷ்ணன் நம்பியின் நினைவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பியின் நினைவோடை (2003)யில் பிரசுரமானது. அதில் நம்பியும் சுராவும் பார்த்த சூரியோதயத்தைத் தான் ஜே.ஜேயில் விவரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
1976ல் நம்பி பிழைக்கவே இனி வழியில்லை என்ற மருத்துவ உண்மை தெரிந்த பின் நடந்த ஒரு நிகழ்வு.
“ அதிகாலையில் அவன் (கிருஷ்ணன் நம்பி) முதலில் எழுந்தான்.
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்படுவோமே என்று சொன்னேன். புறப்பட்டோம்.
 கார் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் போயிருக்கும். 
அப்போது தான் அந்த அருமையான சூரியோதயத்தை நாங்கள் பார்த்தோம். ஜே.ஜேயில் நான் விவரித்திருந்தது கூட அந்த சூரியோதயத்தைத்தான்.
 தென்னை மரங்களின் மேலாக சூரியன் மெல்ல மேலெலத்தொடங்கியிருந்தது. 
அந்தக் காட்சியை நன்றாக பார்ப்பதற்குத் தோதான இடத்தில் காரை நிறுத்தும்படிச் சொன்னான். இறங்கினோம். அங்கு ஒரு பாலம் இருந்தது. கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றோம். அங்கிருந்த திண்டில் அமர்ந்து கொண்டான். 
கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத்தொடங்கியது. அந்த சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகத் தான் அவன் அதிகாலையில் புறப்பட வேண்டும் என்று சொன்னானா? இனி இது போன்ற காட்சிகளை பார்க்க முடியாதே என்ற விஷயத்தை, மரணத்தை அந்தக் காட்சி அவனுக்கு நினைவு படுத்தியதா…….?”
.............................

கி.ராஜநாராயணன் தன் தொண்ணூறாவது வயதில் குமுதத்தில் “வேதபுரத்தார்க்கு” என்ற சுயசரிதைத் தொடர் ஒன்றை 2012ல் ஆரம்பித்து எழுதி அது புத்தகமாக 2014 வந்திருக்கிறது.

அந்த வேதபுரத்தார்க்கு நூலில் கிருஷ்ணன் நம்பி நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கும்போது கி.ராவுடன் ரயில் பயணத்தின் போது பார்த்த சூரியோதயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.ரா அதை விவரிக்கிறார் : “ மதுரையிலிருந்து கிருஷ்ணன் நம்பியுடன் நான். அதிகாலை நேரத்தில் ரயிலில் வந்து கொண்டிருந்தோம். கோவில் பட்டியைப் பார்த்து. வானம் வெளுக்க ஆரம்பித்தது.
இப்பொ ஒரு அதிசயம் நிகழப்போகிறது என்று கிருஷ்ணன் நம்பிக்குத் தெரியாது. காரணம் அவர் மேற்கே பார்த்துக்கொண்டிருந்தார், என்னிடம் பேசிக்கொண்டு.
மனசுக்குள் நான் அவரை திடீரென்று ‘அதெப் பாருங்க’ என்று கிழக்கே பார்க்க வைக்க வேண்டும்.
சில காட்சிகளை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது கடல் அலைகளைப் பார்ப்பது போலெ. கடல் விளிம்பில், மலை முகட்டில் சூரியப் பிறப்பையும் மறைவதையும் பார்த்திருப்பார்கள். தரையில் அவை நிகழ்வதைப் பெரும்பாலோர் பார்க்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்காது.
ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை உதிப்பது போல சூரியனின் தலை தெரிய ஆரம்பித்தது.
எதை இப்படி வாய்பிளந்து கவனிக்கிறார் என்று நம்பியும் திருப்பிக் கிழக்கே பார்த்தார். அவரையும் அந்தக் குழந்தைச்சந்தோசம் பற்றிக்கொண்டது.

“ஓ” என்று குரல் கொடுத்துக் கத்திக்கொண்டு ரயிலும் ஓடிக்கொண்டிருந்தது தாளத்துடன்.
ரயிலுடன் நம்பியும் சேர்ந்து ஆனந்தக்குரல் கொடுத்தார்.

கண்கூசாத ஒரு பிரம்மாண்டமான பவள உருண்டையாகக் காட்சி தந்தான் சூரியத்தேவன்.
இப்படி ஒரு வாய்ப்பு ஒருவருக்கு எப்போதாவது தான் வாய்க்கும்.”

……………………............

ஃப்ரஞ்ச் கவிஞன் ஆர்தர் ரைம்போவின் Eternity கவிதையில்
"It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!"


It has been found again. What? – Eternity. It is the sea gone with the sun.

it (the sun) will rise (again).

…………………………….


Feb 26, 2017

சினிமாவில் நடிக்க ஆசை



டாக்டர் சங்கரன் ’பவுனு பவுன் தான்’ படத்தில் தலை காட்டியிருக்கிறார்.
பாக்யராஜுக்கு இவர் அறிமுகமாகி நண்பராக வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்கிற ஆசை இவரை பிடித்துக்கொண்டது.

ராசுக்குட்டி படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க ஒரு வாய்ப்பு.
சேலத்திலிருந்து தன் சொந்தக்காரில் மேட்டூர் வந்து விட்டார். இரவில் அங்கே படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்த இரு லாட்ஜிலும் அவருக்கு அந்த நேரத்தில் அறை ஏதும் இல்லை.

”பரவாயில்லை. காரில் படுத்துக்கொள்கிறேன். காலையில் எனக்கு வெஸ்டர்ன் டாய்லட் இருந்தால் தான் வசதி. இதற்கு மட்டும் ஒரு ரூமில் உள்ளவர் என்னை அனுமதித்தால் போதும். தயவு செய்து அதற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்.”
ரோட்டில் காரை நிறுத்தி அதில் படுத்துக்கொண்டார். அதிகாலையில் நான் தங்கி இருந்த அறையின் கதவை வெஸ்டர்ன் டாய்லட்டுக்காக தட்டினார்!
……………………………..


எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு ஜான் ஆபிரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எம்.பி.சீனிவாசன் தான் நடித்தார்.

”படச்சுருள்” இதழ் ஒன்றில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி எழுதிய கட்டுரையில் ’அக்ரஹாரத்தில் கழுதை’ பாண்டி பஜார் ராஜகுமாரி தியேட்டரில் மட்டும் ஒரே ஒரு நாள் ஓடியது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார்.

சுந்தர ராமசாமி 2002ல் கூட ஏதோ ஒரு மலையாளப்படம் ஒன்றில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக என்னிடம் சொன்னார்.
நான் ’என்ன வேடம், சார்’
சு.ரா. ’கதாநாயகியின் அப்பா வேடம்’
எனக்கு இந்த பதில் திருப்தி தரவில்லை என்பதை முகக்குறிப்பால் உணர்ந்த சுந்தர ராமசாமி தொடந்த வார்த்தைகள் “ ராஜநாயஹம்! வழக்கமான அப்பா ரோல் இல்லை. நல்ல வித்தியாசமான கதாபாத்திரம்.”
அந்த மலையாளப் படம் வெளி வந்ததா? தெரியவில்லை.

………………


இரண்டாம் உலகப்போரைப் பற்றிய ‘ த லாங்கஸ்ட் டே’ படம் தயாரானபோது போரில் ஜெனரல் ஐசனோவராக பங்கேற்றிருந்தவர் அமெரிக்க அதிபர் ஐசனோவராகியிருந்தார். அமெரிக்க அதிபராக அவருக்கு எட்டாவது ஆண்டு..

அப்போது ( 1953 ஜனவரி முதல் 1962 ஜனவரி வரை ஐசனோவர் அமெரிக்க அதிபர் ) ஜெனரல் ஐசனோவராக அதிபர் ஐசனோவரையே நடிக்க வைக்கலாமா என்று ஒரு யோசனை படக்குழுவுக்குத் தோன்றியது.

‘ நானே நானாக நடிக்கிறேனே ‘ என்று ரொம்ப ஆர்வத்துடன் அமெரிக்க அதிபர் ஐசனோவரே ஹாலிவுட் படத்தில் நடிக்க ‘சான்ஸ்’ கேட்ட அதிசயம் நடந்திருக்கிறது!
பலத்த ஆலோசனைக்குப் பிறகு ‘ஜனாதிபதி ஐசனோவரை இரண்டாம் உலகப்போர் காலத்து ஜெனரல் ஐசனோவராக மேக்கப் மூலமாக மாற்றுவது இயலாத காரியம் ‘ என்று முடிவு எடுக்கப்பட்டு ஐசனோவராக நடிக்கிற ‘சான்ஸ்’ நிராகரிக்கப்பட்டுவிட்டது.
சினிமாவில் நடிக்க ஒரு யோகம் வேண்டுமே!
POOR EISENHOWER!

1962 ம் ஆண்டு வெளியான ‘ த லாங்கஸ்ட் டே’ படத்தில் ஹென்ரி க்ரேஸ் என்ற ஆர்ட் டைரக்டர் ஒருவர் ஜெனரல் ஐசனோவராக நடித்திருந்தார்.
ஹென்ரி க்ரேஸ் நடிகரல்ல என்றாலும் ஐசனோவரைப் போலவே இருந்தார் என்பதால் அந்தப் பாத்திரம் அவருக்கு கிடைத்தது.

……………………………………

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

Nov 28, 2016

சார்பு


சார்ந்திருக்க எவ்வளவோ இருக்கிறது.
”எதையேனும் சார்ந்திரு
கலை, இலக்கியம், சங்கீதம்,இங்கிதம்
 இப்படி எதையேனும் சார்ந்திரு.
இல்லையேல் வாழ்க்கை காணாமல் போய் விடும்.”
- வண்ண நிலவன்
‘ மெய்ப்பொருள்’ கவிதைத்தொகுப்பில் ஒரு கவிதை.’

ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கம் நிகழ்விற்காக சென்றிருந்த போது தனிப்பட்ட உரையாடல் போது வெங்கட் சுவாமிநாதனிடன் நான் கேட்டேன். “ ஒரு இலக்கியவாதி பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியுமா?”
உடனே அவர் பதில்: ”ஏன், ஒரு இலக்கியவாதி மார்க்ஸிஸ்ட் ஆக இருக்க முடியும் என்றால் ஏன் பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியாது? ஏன் இருக்கக்கூடாது?”
மௌனியின் பூணூலைப்பார்த்து அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ.ரா “ இந்த சனியனை கழட்டி அந்த ஆணியிலே மாட்டு” என்று சொன்ன போது மௌனி சற்றும் யோசிக்காமல் சொன்னார் “Rather I would cut my cocks and put it there!”
நான் பெரிதும் மதிக்கும் ந. முத்துசாமியிடம் இந்த கேள்வி ’உங்களுக்கு பிடித்த கொள்கை என்ன?’ கேட்கப்பட்டால் எப்போதும் தயங்காமல் உடனே சொல்வார் “ திராவிட இயக்கக் கொள்கைகள்”
முத்துசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் மௌனி!
அசோகமித்திரன் பி.ஜே.பி சார்புடையவர்.
லா.ச.ரா. ஆச்சாரம் எல்லோரும் அறிந்தது.
தி.ஜானகிராமன் ஆன்மீக தேடல் கொண்டிருந்தவர்.

 கி.ரா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருக்கிறார்.
பெரும்பாலான படைப்பாளிகள் மார்க்ஸீயத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவர்கள். மனிதன் மீதான அக்கறை தான் மார்க்ஸீயம் என்பதால் அதை எங்கனம் அலட்சியப்படுத்த முடியும். முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் மார்க்ஸீயத்தின் பால் அபிமானம் கொண்டவர்கள்.
நான் கல்லூரி வாழ்க்கையின் போது தி.மு.க. காரன். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டிலும் உறுப்பினராய் இருந்தவன்.உறுப்பினர் கார்டுகள் பத்திரமாக என்னிடம் ரொம்ப காலம் இருந்ததுண்டு. அந்த நேர என் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய சாட்சிகளாக!
எப்போதுமே அ.தி.மு.க வுக்கு ஓட்டு போட்டதேயில்லை.
என் மார்க்சீய அபிமானம் காரணமாக 'தோழர் ' என்றபட்ட பெயரும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது.இன்றும் என்னை என் பெயரை சொல்லாமல் ' தோழர் ' என்று குறிப்பிட்டு அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு.
சேலம் காம்ரேடுகளோடு மோதல் ஏற்பட்ட போது ஒரு பத்திரிகையில் எழுதிய எதிர்வினைக்கு ”கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள்”தலைப்பை கொடுத்தேன்.
சுந்தர ராமசாமி சொன்னதை அடையாளத்தை நிராகரிக்கும் நானும் சொல்வேன்.
' இலக்கியவாதியாகிய நான் ஒரு மொழிக்கோ, சாதிக்கோ,மதத்திற்கோ இனத்திற்கோ, கட்சிக்கோ, சித்தாந்ததிற்கோ,ஏன் நாட்டிற்கோ கூட விசுவாசமாக இருக்க முடியாது '



.........................................................

Nov 22, 2016

Polemics


அன்று தேதி 22.02.2002
சுந்தர ராமசாமி திருச்சி பேருந்து நிலையம் அருகில் ’ஹோட்டல் தமிழ்நாடு’ அறையொன்றில் தங்கியிருந்தார்.

நான் அவரை பார்க்கப் போயிருந்தேன்.
அன்று சுராவுடன் திருச்சிக்கு கூடவே ஒருவர் வந்திருந்தார். சற்றும் சம்பந்தமேயில்லாமல், இலக்கியம் பற்றி ஏதுமே அறியாதவராக. சு.ராவிற்கும் அந்த பெரியவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் தொடர்பு படுத்திப்பார்க்க முடியாமல் naïve ஆக ரொம்ப சாதாரண கிராமத்து பாமரன் போல.
வ.உ.சி வீட்டிற்கு ஒரு நாள் இரவு வந்து தங்கிய பாரதி தன்னுடன் பண்டாரத் தோற்றமுள்ள ஒரு நபரை அழைத்து வந்திருந்தாராம். பாரதியின் ஆளுமைக்கு சம்பந்தமேயில்லாத மந்தமும் மட்டியுமான ஒரு மனிதர். ‘பாரதிக்கு இப்படி ஒரு சகா!’ என்று ஆச்சரியப்பட்டாராம் வ.உ.சி. எனக்கு இந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது!
நானும் சுராவும் கஸ்டம்ஸ் ஆஃபிஸுக்கு போய் விமலாதித்த மாமல்லனை தேடினோம். அவர் வீட்டில் இருந்தார். உடனே கிளம்பி ஹோட்டலுக்கு வருவதாக சொன்னதால் திரும்பி வந்தோம்.

விமலாதித்த மாமல்லன் ஹோட்டலுக்கு வந்தார்.
நான் சமீபத்தில் அசோகமித்திரன் டி.வி பேட்டி ஒன்றில் பேசியதை அப்படியே அவர் பேசிகிற மாதிரியே சொன்னேன்.
டி.வியில் அசோகமித்திரனிடம் ஒரு கேள்வி : உங்களுக்குப் பின்னே வந்த எழுத்தாளர்களில் உங்களுக்கு பிடித்தவர்கள் பற்றி சொல்லுங்கள்.

அசோகமித்திரன்: “நிறைய பேரு வந்திருக்கா… நன்னாவே எழுதுறா..ரொம்ப நன்னா எழுதிண்டிருக்கா.. வண்ண நிலவன்னு ஒருத்தர்.. (சற்று யோசித்து) ஆ…. விமலாதித்த மாமல்லன்!”
சுந்தர ராமசாமி நல்ல ரசிகர். உடனே Once more!
“ராஜநாயஹம்! அசோகமித்திரன் மாதிரி இன்னொரு முறை நடித்துக்காட்டுங்கள்.”
வெங்கட் சாமிநாதன் வசனம் எழுதி ஜான் ஆப்ரகாம் இயக்கிய ’அக்ரஹாரத்தில் கழுதை’ படம் ராபர்ட் ப்ரஸ்ஸான் இயக்கிய ’பல்தஸார்’ படத்தின் தழுவல் என்று விமலாதித்த மாமல்லன் சொன்னார். அப்போது நான் பல்தஸார் பார்த்திருக்கவில்லை.
சுராவைப்பார்க்க கொஞ்ச நேரத்தில் இமையம் குடும்பத்துடன் வந்தார். சுராவுக்கு அன்பளிப்பாக பேனா போல சில கொடுத்தார்.
அப்புறம் மனுஷ்யபுத்திரனும் அவருடைய கஸின் சல்மாவும் வந்தார்கள்.
……………………………………….

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் திடீரென்று விமலாதித்த மாமல்லன் ’செல்’ பேசினார். மாமல்லன் அப்போது சொன்ன விஷயம் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
நான் மாலனை பிராமணர் என்றே முப்பது வருடமாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். மாலனுக்கும் எனக்கும் உ.வே.சுவாமிநாதய்யர் பெயர் சம்பந்தமாக நடந்த ஒரு இலக்கிய சர்ச்சையில் கூட நான் அவரை ஒரு பிராமணராக அடையாளமிட்டே எழுதியிருந்தேன். இந்த சர்ச்சையில் பிராமணர் என்று அடையாளமிட்ட போது மாலன் அதை மறுக்கவில்லை. பொ.வேலுச்சாமி எழுதிய ஒரு காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து எழுந்த சர்ச்சை.
2005ம் வருடம்.அப்போது எனக்கு தமிழ் டைப்பிங் செய்யத்தெரியாது. ஆங்கிலத்திலேயே என் விவாதத்தை செய்திருந்தேன்.
பதிவுகள்.காமில் கூட வெளியாகியிருந்தது

அந்த சர்ச்சை விவகாரம் படித்து விட்டு தான் மாமல்லன் எனக்கு போன் போட்டு மாலன் பிராமணர் அல்ல என்றார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. மாமல்லன் சொல்கிறார் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. தரவுகள் விஷயத்தில் மிகுந்த கவனமாயிருப்பவர்.
அப்போது எவிடென்ஸ் கதிர் எழுதிய பதிவில் மாலன் பிராமணர் அல்ல என்று மாமல்லன் முதலில் குறிப்பிட்டிருந்திறார். பின்னர் அது தவறு என்று தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இந்த எவிடென்ஸ் கதிர் விஷயம் எனக்கு தெரியாது.
அவரிடம் மாலன் பிராமணர் தான் என்பதை மாமல்லன் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவே தெரியாது.
தகவல் பிழை என் எழுத்தில் வரக்கூடாது என்பதில் உறுதியாயிருப்பவன் நான்.
Even Homer sometimes nods.
நேற்று இரவு மாமல்லன் எனக்கு போன் செய்து மாலன் பிராமணர் தான் என்பதை உறுதிப்படுத்தினார்
2005ம் ஆண்டு மாலன் ப்ளாக்கில் என் விவாதம் கீழே. பதிவுகள்.காமில் கடைசி பகுதி எடிட் செய்யப்பட்டிருந்தது.
பதிவுகள்.காம் லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன்.


A Riposte From R.P.RAJANAYAHEM to Maalan:

1. Po. velsamy should take responsibility to give a reply to this. Kalachuvadu has definitely no motive in it. Maalan is biased in depicting a funny motive. Maalan's assumption is peculiar.
Po. Veluchamy was in "Nirapirigai" coterie and he has no rapport with Kalachuvudu.
2. This was the first article he wrote in Kalachuvadu.
3. He is an unique and important scholor
4. He has his own individuality and he has no need to blow the pipe of Kalachuvadu at any cost.
5. You have pointed out a factual error and thus you have done a good work. Thanks a lot. But why should you try to fix this as a polemics and establish a strange motive on Kalachuvadu.
6. Po.veluchamy has clearly indicated in his article that swaminathaiyer was a sanadhani and inspite of that his contribution to Tamil longuage is great and one cannot ignore his sacrifice and hard work.
7. Should Maalan have a motive to every news of SUN TV for eg If a R.S.S member' s speach had been telecasted, could one say easily that Because Maalan is a brahmin , he has a motive in editing this new. wont this be funny?
8. It leads to a suspicion that For his obvious rapport with DMK leader M.Karunanidhi , Maalan is trying his level best to avoid his brahmin identity by accusing Kalachuvadu as Pro Bramin.
9. Swaminathaiyer in his Enn Saritram clearly writes in 'Peyar matram' chapter that he couldn't easily be accustomed to this name ' Swaminathan'. It is more than obvious because of his saiva principle Meenakshi sundaram forced him to change his student's name from Venkata raman to his another name Swaminathan.
I have a right to question that you try to establish that Po veluchamy has no sense of his own and he stoops to any level as he is a sutra that he agrees to write to a brahmin's command and thus this he has glorified brahmins in his article . this is Maalan's accusation. So a sutra can never raise to a level of great scholar and he can be easily dominated by brahminism. Maalan has strongly established this rotten motive in his article.
Please Maalan, You cannot take a scholar like Veluchamy for granted as he is a sutra by birth.
Friday, Jul 22, 2005
Dear Maalan, My intentions are genuine. I don’t see the need to retaliate. I object your comment that I am drifting matter from the real issue. It is again funny that you are emphasizing that you have never criticized Po.Veluchamy. We all know your target is Kalachuvadu and your deliberate intention is to attack Kalachuvadu is also clearly depicted in your article. When you raise a question to Kalachuvadu for the article written by Veluchamy, it is more than obvious you put a finger on Veluchamy also. You have found a factual error in Po.Veluchamy article only.
I have to use the same weapon on you unwillingly by which you tried to attack Kalachuvadu. You only forced me to question in your style and method.
I have given a proper rejoinder to your article and I feel this is more than enough.
…………………………………………….

R.P.RAJANAYAHEM: AN ARDENT FAN OF KARUNANIDHI SO FAR IS LAUGHING AT ME

It is the height of irony that an ardent fan of Karunanidhi so far is amused in laughing at me and brands me as a rasika of Kalachuvadu!( I mark it as ‘SO FAR’ as it is whispered,there is a rumour now that Maalan is relieved from his post in SUN TV)
“ I do agree Kalachuvadu cannot interfere with Veluswamy’s Ideas and Ideology.. Maalan need not have attributed motives to Kalachuvadu.”
The above declaration of Indira Parthasarathy Proves strongly that my stand is correct. What I have specified in my rejoinders, Parthasarathy also has stressed in his mail and thus Maalan’s motive and Strange assumption is Totally shattered into pieces and yet Maalan has started his second round to play his tricks .
I have already thanked Maalan that he has found a factual error. PO. Veluchamy has admitted honestly that he has committed an error when I spoke with him over phone two days back.. But he is extremely pained and wounded at Maalan’s writings ‘ Researchers misinterpret the historical truths according to their own will and Kalachuvadu’s hand in his own writings.' Indira Parthasarathy is now informed of Veluchamy’s admittance of committing a factual error in a reply given by me to his email Yesterday.
Maalan is doing much ado about nothing and making a big issue over a small tissue now. He has no room to hide himself and of course he is in a pathetic condition and this grief should be crowned with consolation and only the tears live in an onion should water this sorrow.
It is a farce that Maalan had earlier ignored me by declaring "I will not respond to you hereafter as you have a closed mind to appreciate the issue" and now he conveniently forgets his declaration and again teases me as a Kalachuvadu Rasika (even after my explanation that Kalachuvadu is not an untouchable god) and gives me importance in his second round article's Title!
This itself is a success to my honest stand!!
Sundara Ramaswamy is being afflicted by this kind of slanderous remarks for the past fifty years. Actually he refused to respond more than sixty criticisms on 'JJ SILA KURIPPUKAL' and he will never respond to you as he knows very well that whatever genuine reply can never satisfy the intellecuals stuffed with strange criterion measure and funny reason.
.....................................................................................