Share

Showing posts with label குஷ்வந்த் சிங். Show all posts
Showing posts with label குஷ்வந்த் சிங். Show all posts

Apr 14, 2019

Funny and Wacky I.S.Johar


ஜோஹர் இந்தி நடிகர். ஹாலிவுட் படங்களில் கூட சின்ன ரோலில் தலை காட்டியிருக்கிறார். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் ஜோஹர் உண்டு.
கடைசி காலங்களில் ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பிரபலம்.
His life was funny, weird and wacky.

இந்தர் செய்ன் ஜோஹர். தேவையில்லாமல் கரண் ஜோஹர் அப்பாவா இவர் என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். அப்படியெல்லாம் கிடையாது.
ஐ.எஸ். ஜோஹர் தம்பி யாஷ் ஜோஹர் மகன்
தான் கரண் ஜோஹர்.  
தேவ் ஆனந்த் ஜானி மேரா நாம் தமிழில் ராஜா வாக சிவாஜி நடித்து ரீமேக் செய்யப்பட்டது. அதில் இந்தியில் ஜோஹர் செய்த மூன்று சகோதரர்கள் ரோலை தமிழில் சந்திரபாபு செய்திருந்தார்.
ஜோஹர் பெரும்பாலும் இந்தி படங்களில் ஜோக்கர் தான்.
பாகிஸ்தானியான ஜோஹர் லாகூரில் இருக்கும்போதே ரமாவை மணந்து கொண்டு மும்பைக்கு இருவரும் வந்தவர்கள். சினிமாவுக்காக தான்.
குஷ்வந்த் சிங்கிற்கு லாகூரிலேயே அறிமுகமானவர்கள்.
ரமாவுக்கு ஜோஹர் வாழ்வு சலித்து, விவாகரத்து செய்து கொண்டு ஒரு உறவினரை திருமணம் செய்து கொண்டு அவரையும் ஒதுக்கி விட்டு மீண்டும் ஜோஹருடன் இணையாமல் தொடர்ந்து சந்தித்துக்கொண்டதுண்டு.
குஷ்வந்த் சிங் அப்போது இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் ஆசிரியராக இருந்த நேரம்.

ரமா நடத்திக்கொண்டிருந்த ஹெல்த் க்ளப்புக்கு குஷ்வந்த்சிங் போவார். அங்கிருந்து ஜோஹர் வீட்டுக்கு ரமாவுடன் செல்வார். குஷ்வந்த்சிங்குக்காக ஸ்காட்ச், மூவருக்கும் சாப்பிடுவதற்காக சைனிஷ் வகை உணவு வாங்கிக்கொண்டு ஜோஹர் வர வேண்டியிருக்கும். ஜோஹர் மனைவி ரமா அப்போது மனைவியல்ல. இரண்டாவது கணவரும் சலித்து வெறுத்திருந்த நிலை. ஒரு பெண் நாய் ஜோஹருடைய கம்பானியன் அப்போது. செல்ல நாய் பீனோ. அவருடைய மகள் போல.
ஜோஹர் தான் எழுதிய சுயசரிதை ஒன்றை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் தொடராக வெளியிட முடியுமா? என்று கேட்டு குஷ்வந்த்சிங்கிடம் கொடுத்திருக்கிறார்.
ரொம்ப வேடிக்கையான சுயசரிதை. முதலாவதாக அதில் முதல் மனைவி ரமா பற்றி எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை.
12 வயதில் அவருக்கு செக்ஸ் அனுபவம் அவருடைய அத்தை முறையுள்ள ஒரு அம்மணியுடன். அத்தை இவரை குளிப்பாட்டி விட்ட போது சக்கரை வெடைத்து விரைத்து அதை எப்படி சாந்தப்படுத்த வேண்டும் என்ற வழி முறையை சொல்லித் தந்திருக்கிறாள்.
அந்த சுய சரிதையில் ஜோஹர் சொல்லும் மற்றொரு விஷயம் – வயதில் மூத்த பையன்கள் இவரை குண்டியடித்ததைப் பற்றி. குண்டியடிக்கப்பட்டது மிகப்பெரிய சுகானுபவமாய் ஜோஹருக்கு இருந்திருக்கிறது.
ஒரு பெண்ணோடு கொண்ட உடல் உறவு. அதன் பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட அவள் தங்கையை புணர்ந்தது. அதோடு இந்த சகோதரிகளின் தாயார் விருப்பப்பட்டு அம்மணமாய் இவருடைய படுக்கைக்கு வந்து விரக தாபத்தை வெளிப்படுத்தி பிச்சை கேட்ட போது அந்த அம்மணிக்கும் பரோபகாரமாக நெம்புகோலை விளக்கிய நிர்ப்பந்த நிகழ்வு.
இப்படி..இப்படி..
குஷ்வந்த்சிங்கிற்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது. ஒரு பத்திரிக்கையாசிரியராக அவர் இதை தொடராக வெளியிட்டால் பத்திரிக்கை உரிமையாளர்களின் கோபாக்னி எத்தகையதாய் இருக்க நேரும் என்று அவர் உணர்ந்ததால் ஜோஹரிடம் “ம்ஹும்..நான் மாட்டேன்..போ..” என்று தலையை மறுதலிக்கும் விதமாக ஆட்டியிருக்கிறார்.
“ச்சீ பச்சை துரோகி.. நீ ஒரு கோழை” என்று ஜோஹர் பொங்கியிருக்கிறார்.
இந்தி நடிகர் கபீர் பேடியும், அவருடைய மனைவி ஒடிஸ்ஸி நடனக்கலைஞர் ப்ரோதிமாவும் கலாச்சார மீறலுக்கு பெயர் போனவர்கள்.
ப்ரோதிமா பேடி ஜூஹு பீச்சில் நிர்வாணமாக ஓடுவார்.
”என் மனைவி ப்ரோதிமா ஒரு விபச்சாரி” என்று பகீரங்கமாக கபீர் பேடி பெருமைப்படுவார்.
பூஜா பேடியின் பெற்றோர்.
கபீர் பேடியை ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூரின் ஆக்டோபஸ்ஸியில் பார்க்கலாம்.
கபீர் பேடி, ப்ரோதிமா விவாகரத்து பெற்றார்கள்.
ஒரு நாள் ஐ.எஸ்.ஜோஹரிடமிருந்து உடனே தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி குஷ்வந்திற்கு போன்.

ப்ரோதிமா பேடியுடன் ஜோஹர். வீட்டில் நிறைய பத்திரிக்கையாளர்கள். தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறார்.
ப்ரோதிமா பேடியுடன் விரைவில் திருமணம். இருவருக்கும் அன்று நிச்சயதார்த்தம். ஐ.எஸ்.ஜோஹரை விட 28 வயது இளையவர் ப்ரோதிமா.
மறு நாள் பத்திரிக்கைகளின் அலறல் எப்படியிருந்திருக்கும்?
ஏன் ஜோஹர் உறவு என்பது பற்றி அப்போது ப்ரோதிமா சொன்ன வார்த்தைகள் “ It is nice to have Johar at my beck and call."
ஆனால் அந்த திருமணம் நடக்கவேயில்லை. Public Stunt.
ஜோஹர் ரமாவை தவிர நடிகை சோனியா சஹானியையும் திருமணம் செய்ததுண்டு.
அறுபத்து நான்கு வயதில் 1984ல் ஜோஹர் இறந்தார்.
ப்ரோதிமா ஆன்மீக வேட்கையில் சன்னியாசியாக மாறிவிட்டதாக சொன்னார். தலையை மொட்டை போட்டுக்கொண்டார். இமய மலை தன்னை அழைப்பதாகவே நம்பினார். ஆறுமுறை இமயமலை பயணம் செய்தவர். கடைசியில் 1998ல் ஐம்பதாவது வயதில் கைலாஷ் மான்சரோவர் யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கியவரின் உடல் கிடைக்கவில்லை.
ப்ரோதிமா பேடியை விவாகரத்து செய்த பின் கபீர் பேடி பரபரப்பான நடிகை பர்வீன் பாபியுடன் இருந்தார். அப்புறம் இன்னொரு பெண்.


 மூன்று வருடங்களுக்கு முன் தன் எழுபது வயதில், பர்வீண் துசாஞ்ச் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கபீர் பேடியை விட இவர் 29 வயது இளையவர்.




Apr 29, 2014

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்

 Edward Nirmal Mangat Rai


எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்  ஒரு ஐ சி எஸ் அதிகாரி. கிறிஸ்தவர்.
குஷ்வந்த் சிங்குடன் டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர். அதி புத்திசாலி மாணவன். ’பன்ச்சி’ என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட் நிர்மல் மங்கத்.

 இண்டர்மீடியட் முடித்தவுடன் லாகூர் அரசு கல்லூரியில் படிக்க குஷ்வந்த் செல்ல இருப்பதை அறிய வந்தவுடன் மங்கத்  பிரிவாற்றாமையில் அழுதிருக்கிறார்.
குஷ்வந்த் ஐ.சி.எஸ் பரிட்சையில் தோற்றவர். மங்கட் ரெய் நல்ல ரேங்கிலெ ஐ.சி.எஸ் தேறியவர்.
குஷ்வந்த் சிங் மிக க்கடுமையான போட்டியில் கவல் மாலிக் மனம் கவர்ந்து திருமணம் செய்ய இருந்த போது Wrong choice என்று மங்கத்  அபிப்ராயப்பட்டவர்.” இவ என்ன பெரிய அழகியா? அறிவிலும் ரொம்ப சுமார்” என்று ஏகடியம் பேசியவர் மங்கத் ராய்.



File:Sir Sobha Singh (1890-1978).jpg
குஷ்வந்த் சிங்கின் தந்தை சர். ஷோபா சிங் டெல்லியில் பெரிய கட்டிட காண்ட்ராக்டர். இந்தியா கேட், சௌத் ப்ளாக் உள்ளிட்டவையெல்லாம் ஷோபா சிங் கை வண்ணம் தான்!
பகத் சிங் டெல்லி அசெம்பிளி குண்டு வெடிப்பில் ஷோபா சிங் தான் பகத் சிங்கிற்கு எதிராக சாட்சியம் சொன்னவர்.
குஷ்வந்த் சிங்கின் அப்பாவும் ரொம்ப பெரிய ஆள். Khushwant singh's father and father-in-law were knighted by British. குஷ்வந்த் சிங்கின் சொந்த சித்தப்பா உஜ்ஜல் சிங் தான் அண்ணாத்துரை தமிழக முதல்வரான போது இங்கே கவர்னர்!

குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் ஹடாலியில் பிறந்தவர்.
கவல் மாலிக்- குஷ்வந்த் திருமணம் டெல்லியில் விமரிசையாக நடந்தது. முகம்மது அலி ஜின்னா  இந்தத் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டார்.
      

குஷ்வந்த் வக்கீல் ப்ராக்டிஸ் செய்ய புதுப்பெண்ணுடன் லாகூரில் குடியேறிய போது எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் ஐ.சி.எஸ்க்கு அங்கே உத்யோகம். பல கிறிஸ்தவ குடும்பங்களுக்கு எலிஜிபிள் பேச்சிலர் எட்வர்ட் மங்கத் மீது கண். மங்கத் இலக்கிய ஆர்வம் கொண்டவர். எழுத்தார்வம் மிக்கவர். தன் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து தான் எழுதியவற்றை வாசித்துக்காட்டுவதுண்டு.

மங்கத் ராய் ஆபீஸ் வேலை முடிந்து சைக்கிளில் ( கவனிக்க : ஐ.சி.எஸ் அதிகாரி சைக்கிளில்!)  திரும்பும் போது குஷ்வந்த் வீட்டிற்கு வர ஆரம்பித்தார். கவல் பற்றி லண்டனில் மங்கத் கொண்டிருந்த அபிப்ராயம் மறைந்தே விட்டது. கவல் மீது கவனம் அதிகமாகி மையல் ஏற்பட்டுப் போனது. குஷ்வந்த் சிங்கிற்கே மங்கத் ராய் கடிதம் எழுதுகிறார். “ உன் மனைவியை நான் காதலிக்கிறேன். உன் மனைவியை தினமும் தரிசிக்க உன் அனுமதி வேண்டுகிறேன்.”கவல் மாலிக்கிற்கோ பெருமை பிடிபடவில்லை.

ஓவியம் வரைவதில் கவல் அந்த நேரத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் செல்லும் ஸ்டுடியோவிற்கே மங்கத் போய் ‘ஓவியம் அத்துனை சிறந்த பொழுது போக்கே அல்ல’ என்று தூபம் போட, கவல் ஓவியம் வரைவதை கை விட்டு டென்னிஸ் விளையாடப் போகிறார். மங்கத் அப்போது சைக்கிளிங் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். சீக்கிய மதச் சடங்குகளைத் தவறாது கடை பிடிக்கும் கவலிடம்’ இதெல்லாம் என்ன மூட நம்பிக்கை!’ (கிறிஸ்தவ புத்தி!)  என மூளைச் சலவை செய்கிறார். கவல் மத பிரார்த்தனையைக் கை விடுகிறார்.
லாகூரில் ஒரு கிறிஸ்தவப் பெண். ரயில்வே ஸ்டேசனில் இருந்து மங்கத் ராய் அவளுக்கு லிப்ட் கொடுத்தால் அந்தப்பெண் ஃப்ரண்ட் பாரில் உட்கார்ந்து விடுகிறாள்.அதனால் கிளர்ந்தெழுந்த காமம் இருவரையும் அன்றே மங்கத் படுக்கை வரை கொண்டு சென்று விட்டது. மங்கத் ராய் மனசாட்சி அவரை கொல்கிறது. குற்றவுணர்வால் தவிக்கிறார். எப்படி?
“ அடடே! குஷ்வந்த் மனைவி கவல் மீது காதல் கொண்ட நான் இப்படி இன்னொரு பெண்ணுடன் படுத்து விட்டேனே!”
கவல் இது பற்றி கோபப்படாமல்,அவமதிப்பாக எடுத்துக்கொள்ளாமல் மங்கத் ராயின் Frankness பற்றி பூரித்துப் பெருமிதம் கொள்கிறார்.
லாகூரில் கவல் -மங்கத் ராய் தொடர்பு அதிகம் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது.

குஷ்வந்த் சிங்கை விட கவல் இரண்டு வயது இளைய பெண். அறுபது வருடங்களுக்கும் மேலாக மனைவியுடன் தாம்பத்யம் நடத்தியவர். தன் மனைவி பற்றி சொல்வது : “ இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்த அதே சர்வாதிகாரத்துடன் குடும்பத்தை கவல் ஆட்சி செய்தார்.”
பள்ளி பருவத்திலேயே குஷ்வந்த் டெல்லி மாடர்ன் ஸ்கூலிலேயிருந்து மனைவியை அறிந்திருந்தார். ஒரே பள்ளியில் இருவரும் படித்தவர்கள்.

“ She was very possessive and aggressive, and resented it when I, even very casually, met a woman friend. She would sulk. This in spite of the fact that my wife had, from the very beginning of the marriage, probably from the very first year, got close to one man in particular. Their relationship carried on for about TWENTY YEARS and this was something that affected me deeply, snapping something inside me, changing something within me for ever." - Khushwant Singh.

எட்வர்ட் நிர்மல் மங்கத்  ராய்க்கு ஒரு உடன் பிறந்த தங்கை ஷீலா. இவளுடைய கணவர் ஆர்தர்லால் ஒரு ஐ.சி.எஸ் தான்.
வி.கே.கிருஷ்ணமேனன், பிஜு பட்நாயக் என்று ஆரம்பித்து இவளுடைய காதலர்கள் லண்டனிலேயே எண்ணி முடியாது.
பிஜு பட்நாயக் திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஒரிசா முதல்வர். இன்றைய ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தந்தை!

மங்கத் ராய் பெண் தேட ஆரம்பித்தார். கிறிஸ்தவப்பெண் வேண்டும்.
வனத்தில மேஞ்சாலும் இனத்தில அடையனுமே!
லஜ்வந்தி என்ற கிறிஸ்தவப் பெண். ஆங்கில இலக்கியம் படித்தவள். கல்யாணப் பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்த பிறகு மங்கத் ராய் கல்யாணத்தை நிறுத்தி விட்டார். லஜ்வந்தி “ போடா போ” என்று முகமது யூனுஸ்ஸை கல்யாணம் செய்து விட்டாள். இந்த முகமது யூனுஸ் பின்னால் இந்திரா காந்தியின் கை பாணம். இந்திராகாந்தியின் அத்யந்த பக்தன். எமர்ஜென்சியின் போது ரொம்ப பிரபலம்.

அடுத்து சாம்பா என்ற இன்னொரு கிறிஸ்தவப் பெண்.ஆங்கில இலக்கியம் படித்தவள் தான். சர்ச் சம்பிரதாயங்களுடன் மங்கத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்திற்கு பின்னரும் மங்கத் ராய் மீண்டும் கவல் மாலிக்கை சந்திக்க குஷ்வந்த்தின் வீட்டிற்கு வருவது, காதல் கடிதம் எழுதுவது என்று ஆரம்பித்துவிட்டார்.

சாம்பா- மங்கத் திருமண தோல்வி  ’முறை கெட்ட’ விசித்திரமானது.
ஒரு கோடையில் சிம்லாவில் குஷ்வந்த் தம்பதியர் இருந்த போது அங்கே லக்கர் பஜாரில் மங்கத் ராய் - சாம்பா தம்பதியர்  மங்கத் ராயின் தங்கை ஷீலா- ஆர்தர் லால் தம்பதியர் வந்திருந்திருக்கிறார்கள்;
சிம்லாவில் ஒரு Trekking programme. ஒரு வாரம் போய் வர ஏற்பாடு. கடைசி நேரத்தில் அண்ணன் மங்கத், தங்கை ஷீலா இருவரும் போகவில்லை. அண்ணன் மனைவி சாம்பாவும் தங்கை கணவர் ஆர்தர் லாலும் மட்டும் ஜாலியாக ஹிமாலய வெளியில் நடை பயணம் போயிருக்கிறார்கள். திரும்பி வரும்போது ஆர்தரும் சாம்பாவும் Made for each other என்ற காதல் போதையில் திருப்தியடைந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்.
மங்கத் ராய் மனைவியை விவாகரத்து செய்ய உடனே,உடனே ஒத்துக் கொண்டாகிவிட்டது.ஷீலாவுக்கும் ஆர்தரிடம் இருந்து தப்பித்து விடுதலை ஆகிற திருப்தி. ஆனால் சாம்பாவின் பெற்றோர் விஷயம் கேள்விப்பட்டு பதறிப் போய் ஓடிவந்து சாம்பாவை ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பே! நீயெல்லாம் ஒரு பெண்ணா? உன்ன பெத்த வயித்தில பெரண்டையைத் தான் அள்ளி வச்சி கட்டனும்’ என்று கண்ட படி திட்டி கண்டித்து விட்டார்கள். சாம்பா உடனே திருந்தி கணவன் மங்கத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறாள்.

” மேயா குல்ப்பா, மேயா குல்ப்பா, மேயா மாக்சிமா குல்ப்பா... என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே...எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை...”

மங்கத் ராய் விவாகரத்துக்கு ஒத்துக்கொண்ட அதே வேகத்திலேயே இப்போது மனைவியை மன்னித்து அருளி ஏற்றுக் கொண்ட அதிசயம் நடந்தேறியிருக்கிறது!
என்றாலும் பின்னர் இந்தத் திருமணம் நீடிக்கவில்லை.


குஷ்வந்த் சிங்கிற்கு இரண்டு குழந்தைகள். ராகுல் சிங், மாலா.


ராகுல் சிங்கிற்கு இன்று எழுபது வயதிற்கு மேல் ஆகி விட்ட நிலையில் திருமணமே செய்து கொள்ளவில்லை. இப்பவும் சிங்கிள் தான்.

குஷ்வந்த் சிங்கிற்கு OUTLOOK பத்திரிக்கையில் இரங்கல் எழுதிய பாய்சந்த் பட்டேல் ஒரு சுவாரசிய சம்பவம் பற்றி குறிப்பிடுகிறார்.” நானும் ராகுல் சிங்கும் வெளி நாட்டில் இருந்து திரும்பியவுடன் ஒரே பெண்ணை விரட்டிக்கொண்டு திரிந்தோம். ஆனால் அவள் எங்கள் இருவருக்குமே பெப்பே காட்டி விட்டு இன்னொருவனை மணந்து கொண்டாள். ஆனால் நானும் ராகுல் சிங்கும் நண்பர்களாகவே இருக்கிறோம்.”
   


குஷ்வந்த் சிங் மகன் ராகுல் சிங் ஒரு ஜார்னலிஸ்ட். தன் தாயார் பற்றி வெளிப்படையாக ‘ In the name of the father' நூலில் குறிப்பிடுகிறார்.
“ என் அம்மா ஒரு கட்டத்தில் என் தந்தை குஷ்வந்த் சிங்கை விவாகரத்து செய்து விட்டு எட்வர்ட் நிர்மல் மங்கத் ராயை திருமணம் செய்ய முடிவே கட்டி விட்டார். ஆனால் இது என் மேலும் என் தங்கை மாலா மீதும் ஏற்படுத்த நேரும் பயங்கர பின் விளைவுகளை எண்ணியே அந்த முடிவை என் பெற்றோர் நிராகரிக்க நேர்ந்திருக்கிறது. Mangat Rai was something of an enigma to me."


 

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் வாழ்வில் மிக சுவாரசியமான விஷயம் அவர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் ஆகியது தான்.

நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் .


விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் நயன்தாரா சாகல்.

அழகான இந்தப் பெண் நாவலாசிரியர்.
தாரா வயதில் மங்கத் ராயை காட்டிலும் மூத்தவர் என்று ராகுல் சிங் தன் அப்பா பற்றி எழுதியுள்ள நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது உயிருடன் இருக்கும் தாராவுக்கு 87 வயது தான் ஆகிறது!(Born 10 May 1927)

 
File:Nayantara Sahgal.JPG
ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நயன்தாராவும் மங்கத் ராயும் காதல் வலையில் வீழ்ந்து விட்டனர். தாரா வயதில் மூத்தவர்.தெய்வீகக் காதல்.
 ஆனால் குஷ்வந்த் சிங் போல தாராவின் கணவர் கௌதம் சாத்வீகமானவர் அல்ல. மங்கத் ராய் அவர்கள்  அன்னார் கௌதமால் வெளுத்து விரியக் கட்டப்பட்டார். கௌதம் பின்னியெடுத்துவிட்டார். மங்கத் படுகாயம். ஆனால் நயன்தாராவோ தன் காதலில்  உறுதியாக நின்று கௌதமை ’ச்சீ..காலிப்பயலே போடா’ என்று  விவாகரத்து செய்து விட்டு மங்கத் ராயுடன் போய் விட்டார். நயனும் மங்கத் ராயும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆக, மங்கத் இப்போது ஜவஹர்லாலின் உறவினராக ஆகி விட்டார்!


எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் இந்திய சிவில் சர்விஸ் பணியில் மிகச் சிறந்த அதிகாரி. அப்பழுக்கற்றவர். மிகச் சிறந்த நேர்மையாளர்.
பஞ்சாப்பில் பிரதாப் சிங் கெய்ரோன் முதலமைச்சராக இருந்த போது மாநிலத்தின் தலைமைச் செயலர் மங்கத் ராய் காஷ்மீர் மாநிலத்திலும் தலைமைச் செயலராக பணியாற்றியவர்.  பஞ்சாபிலும்,காஷ்மீரிலும் பல சீர்திருத்தங்கள், சாதனைகள் புரிந்தவர் என்றே கருதப்படுபவர். இவர் தலைமைச் செயலராக பணிபுரிந்த காலம் பொற்காலம் என்றே கணிக்கப்படுகிறது.

நேருவின் தங்கை மகள் நயன்தாராவை சந்திக்கும் வரை எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் துயரமான,நிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர்.

மொரார்ஜி பிரதமராக இருந்த போது நயன் தாராவை ரோமுக்கு (வாட்டிகனுக்கும் சேர்த்து) தூதராக அப்பாயிண்ட் செய்த போது பதவி விலக நேர்ந்து விட்டது. சரண்சிங் ஏக் தீன் கா சுல்தான் பதவி காலியாகி ஒரு வழியாக தேர்தலில் மீண்டும் இந்திரா ஜெயித்தவுடன் உடனே, உடனே ரோமுக்கு நயன்தாரா தூதராகப் போக வேண்டாம் என்று கேன்சல் செய்தார். எட்வர்ட் நிர்மலையும் பணியிலிருந்து விலகச் சொல்லி வற்புறுத்தி வெளியேற்றி விட்டார்.



இந்திராவிற்கு எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் போன்ற நேர்மையான, திறமையான அதிகாரி தேவையில்லை. விஜயலட்சுமி பண்டிட்டின் மகளையும் அவள் கணவரையும் பழி வாங்குவது தான் முக்கியம்.



டேராடூன் அருகில் நயன்தாராவுடன் வாழ்ந்து மறைந்த மங்கத் ராய் முதுமையில் அல்சைமர் வியாதியால் அவதிப்பட்டார்.
குஷ்வந்த் சிங் மனைவி வாழ்வும் அல்சைமர் வியாதியில் தான் முடிவுக்கு வந்தது.




Mar 20, 2014

Khushwant Dies



                       http://www.kasauli.net/kasauli-blog/wp-content/uploads/2012/11/Khushwant-Singh.jpg
Khushwant Singh Passes away at the age of 99.

சில நாட்களாக குஷ்வந்த் சிங் எழுதிய “ Book of Unforgettable Women" புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
இன்று பூலான் தேவி பற்றி குஷ்வந்த் சிங் எழுதியதைப் படித்துக்கொண்டிருக்கும்போது NDTV யில் குஷ்வந்த் சிங் மறைந்த செய்தியைப் பார்க்க நேர்ந்தது.


Khushwant Singh had already quoted Benjamin Franklin:

"If you would not be forgotten
As soon as you are dead and rotten
Either write things worth reading
Or do things worth writing."


............



When his father Shoba Singh died at the age of 90, in 18th April,1978, Khushwant Singh was asked by his brothers to make the final oration. Fortunately he was able to say his piece without breaking down.


" You ask me about the signs of a man of faith?
When death comes to him, he has a smile on his lips."


...........

Khushwant Singh's self-written epitaph:

"Here lies one who spared neither man or God
Waste not your tears on him, he was a sod
Writing nasty things he regarded as great fun
Thank the Lord he is dead, this son of a gun."


...............................................




Power is the ultimate aphrodisiac





"I am not an admirer of great people. The few I got to know at close quarters turned out to have feet of clay:they were pretentious, feckless, lying and utterly commonplace."
-Khushwant Singh in 'Truth, Love & a Little Malice'

 
கிருஷ்ணமேனன் பற்றி இந்தியர்களுக்கு ஒரு அதீத பிம்பம் உண்டு.
ஐக்கிய நாடுகள் சபையில் 13 மணி நேரம் மேனன் நிகழ்த்திய பேருரை பற்றி அந்தக் கால பெரிசுகள் கண் விரிய சொல்வார்கள். கிருஷ்ணமேனனும் விஜயலட்சுமி பண்டிட்டும் கட்டிப்பிடித்த படி விமானத்திலிருந்து இறங்கி வரும் புகைப்படம் அந்தக்காலத்தில் பார்க்கக்கிடைத்ததுண்டு. அவர் ராணுவ மந்திரியாய் இருந்தபோது தான் இந்திய சீன யுத்தம். 

இறப்பதற்கு முன் கேசுவலாக ஒரு டீ சாப்பிட்டு விட்டு அவர் படுத்ததை எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் வசந்தன் சுவாரசியமாக சொன்னபோது பிரமிப்பாய் கூட இருந்தது.
குஷ்வந்த் சிங் காட்டும் கிருஷ்ணமேனன் பற்றிய குறிப்புகள் இந்த விக்கிரகத்தை உடைத்து விடுகிறது. ஒரு முழுமையான வில்லன் போலவே தான் கிருஷ்ணமேனன் பற்றி தெரிய வருகிறது.
13 மணி நேரம் காஷ்மீர் பற்றி பேசியதன் out put என்ன? காஷ்மீர் பற்றிய இந்திய நிலைப்பாட்டிற்கு எதிராகத் தான் ஐக்கிய நாடுகள் சபையில் ஓட்டு போட்டார்கள். A unanimous  vote against India!
சீன சண்டையில் இந்தியாவின் தோல்விக்கு கிருஷ்ணமேனன் தான் பொறுப்பாளி.
எப்படியோ நேருவை கிருஷ்ணமேனன் இன்ஃப்ளூயன்ஸ் செய்ய முடிந்திருக்கிறது. அவர் சுதந்திர இந்தியாவின் இங்கிலாந்து தூதராக ஆக முடிந்திருக்கிறது. 
ஹைகமிஷனராக லண்டனில் அவர் செயல் பாடுகள் பற்றி குஷ்வந்த் சிங் எழுதுவதைப் படிக்கும்போது கோபமே வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பற்றி அறிய வரும்போது நீட்ஷே சொன்னது தான் எப்போதுமே நினைவில் வருகிறது, ” அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது ! அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல் !”
கிருஷ்ணமேனன் ஒரு womanizer, sadist and a liar என்றாலும் ஒரு Bachelor.
உண்மையே பேசமாட்டார். தனக்கு பிடிக்காத சுதிர் கோஷ் பற்றி நேருவிடம் இவன் வல்லபாய் படேலுடைய ஆள் என்று போட்டு விட்டு வேலையை காலி பண்ணியிருக்கிறார்.
தூதரகத்தில் வேலை பார்த்த கமலா ஜஸ்பால் என்ற 
மேனாமினுக்கி ( A designing seductress ) இவருடைய mistress.
குஷ்வந்த் சிங் வார்த்தைகள் “Krishna Menon treated the husbands of good-looking women as friends. If he sensed tension between the couple, he became considerate towards them. Menon had great understanding for misunderstood wives. Sheila Lall and my wife fell in that category. Arthur and I became his number one and number two favourites.
 குஷ்வந்த்சிங் இந்திய தூதரகத்தின் public relations officer.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரின் முதல் இங்கிலாந்து விஜயம்.
நேருவுடன் அவருடைய செக்ரட்டரி எம்.ஓ.மத்தாய்(!) தான் வருகிறார்.
According to M.O.Matthai Neither Nehru nor Indira Gandhi was sexully inhibited. ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது…
நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார். மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப் போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”
பத்திரிக்கையாளர்களுக்கு நேரு தன் ஹோட்டலில் பேட்டி கொடுக்கிற காட்சி.
கிருஷ்ணமேனன் தலையைத்தொங்கப்போட்டு தூங்குகிறார். நேரு உடனே குஷ்வந்த் சிங்கிடம் கோபமாய் சொல்கிறார். “ என்னய்யா இது உங்க ஹை கமிஷனருக்கு உடம்பு சரியில்ல போலருக்கு. You must not expose him to outsiders like this ” ஆனால் கொஞ்ச நேரத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேருவும் தலையை நெஞ்சில தொங்கப்போட்டு நித்திரையில் ஆழ்கிறார்.
 
Pandit Nehru had a couple of days free to indulge in his favourite hobbies, buying books and seeing Lady Mountbatten.
நேரு ஒரு க்ரீக் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும்படி லேடி மவுண்ட்பேட்டனை அழைக்கிறார். ரெஸ்டாரண்ட் ஓனர் உடனே பத்திரிக்கைகளுக்கு தொலைபேசி தகவல் கொடுக்கிறார். ரெஸ்டாரெண்ட்டுக்கு பப்ளிசிட்டியாம்! அடுத்த நாள் காலை பேப்பர்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன.
பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கிடம் நேரு எரிச்சலுடன் சொல்கிறார்.” You have strange notions of publicity!”
கிருஷ்ணமேனன் பற்றி குஷ்வந்த் சிங்
Menon was a complex Character, the most unpredictable and prickly I have ever met….Menon’s bad temper and discourtesy had to be experienced to be believed…Menon was full of acid wit and sarcasm…
Next to Nehru, it was Mountbattens that KrishnaMenon relied on to keep him where he was…..Women found him handsome…Menon was not generous with his money, except when it came to his lady friends and children…Menon’s first reaction to any proposal put to him was to reject him…He has a strong streak of sadism…Merit did not matter very much to Menon; Unquestioned loyalty did. Lying was Menon's second nature and came as easily to him as discourtesy.…Why Menon got where he did under the patronage of Pandit Nehru remains, and probably will remain, unexplained.
லண்டனில் ரெஸ்ட்ராண்ட்களில் வெயிட்டராக வேலை பார்த்த மேனன் பின்னர் அதே லண்டனில் இங்கிலாந்தின் இந்திய தூதராக ஆகி, இந்திய எம்.பி ஆகி இந்திய ராணுவ மந்திரியாகி…..ஆகா சினிமாவாக எடுத்தால் கூட சற்று மிகையாகத் தான் தெரியும்.
பின்னால் லண்டனில் இந்தியா ஆபீஸ் லைப்ரரியில் வேலை பார்த்த குஷ்வந்த் அப்போது ஷீலா லாலுடன் தங்கியிருந்த காலத்தில் ’ நான் உன்னை ரகசியமா வைப்பாட்டியா வச்சுக்கிறேன்’ என்று ஷீலாவை கிருஷ்ணமேனன் தொந்தரவு செய்து கொண்டிருந்திருக்கிறார். போனில் வந்த மேனனிடம் “பாஸ்டர்ட்..நீ யாருன்னு எனக்கு தெரியும்டா..நேரங்கெட்ட நேரத்தில போன் பண்றதெ நிறுத்திக்க. இல்லன்னா ரொம்ப அசிங்கமா 
பேசிடுவன்டா”ன்னு குஷ்வந்த்சிங் கத்தியிருக்கிறார்.
ஜெனரல் சிவ் வர்மா கிருஷ்ணமேனனைப்பற்றி சொன்னது நூத்துக்கு நூறு சரி என்று குஷ்வந்த் சொல்வது சுவாரசியம்.
“KrishnaMenon was a bachelor, the same as his father.”
 ......................................

குஷ்வந்த் சிங் மனைவி





சுய சரிதை என்பது என்ன?  வான்கோழி கையில் மயிலிறகு என்று தமிழன்பன் கவிதை சொல்வது நினைவுக்கு வருகிறது.
ஆனால் குஷ்வந்த் சிங் சுய சரிதை Truth, Love and a Little Malice படிக்கும்போது எழுத்தின் நேர்மை பற்றி நினைக்க வேண்டியிருக்கிறது.
குஷ்வந்த் சிங் Autobiography is the child of ageing lions என்கிறார்.
குஷ்வந்த் சிங் மிகப்பெரிய குடும்பத்தை சார்ந்தவர். அவருடைய அப்பா புது டெல்லியில் பல முக்கிய கட்டிடங்களை நிர்மாணித்தவர். வெள்ளைக்காரனால் சர் பட்டம் கொடுக்கப்பட்ட ஷோபா சிங். அவருடைய மனைவி குடும்பமும் மிகவும் பிரபலமான பணக்கார பாரம்பரியம் கொண்டது.மனைவியின் அப்பா கூட சர் பட்டம் வாங்கிய சிங் தான்.
குஷ்வந்த் சிங்கின் பூர்வீகம் லாகூர்.
இந்த சுய சரிதையில் இல்லாத விஷயம் குஷ்வந்த அப்பா ஷோபா சிங்  தான் டெல்லி அசெம்பிளி  குண்டு வெடிப்பில் பகத் சிங்கை அடையாளம் காட்டிய கணவான்.
’பந்தியிலே சாப்பாடு கெட்டாலும் வீட்டிலே பெண் கெட்டாலும் வெளியே சொல்லக்கூடாது ?!’
குஷ்வந்த் சிங் தன் மனைவியை சத்திய சோதனை செய்துள்ளார்.
லண்டனில் இவர் அந்தப்பெண்ணை சந்தித்த காலத்தில் அவள் உலக அழகிக்கான அங்க அமைப்பு தனக்கு இருப்பது பற்றிய பிரக்ஞையுடன் இருந்திருக்கிறாள். அவளிடம் இதயத்தை பறிகொடுத்தவர்கள் பற்றி ஒரு லிஸ்ட் குஷ்வந்த் சிங் தருகிறார். பிரதாப் லால், அமர்ஜீத், பரத்ராம். இவர்களில் பரத்ராம் திருமணமாகி குழந்தையும் உள்ளவன். குஷ்வந்த் சிங் அந்த பெண் கவல் மலிக் திருமண நிச்சயதார்த்த்ம் நடந்த பிறகு இந்த பரத்ராம் குடும்பத்துடன் கவல் மலிக் ஜெர்மனிக்கு போகிறாள்.
மங்கத் ராய் மட்டும் குஷ்வந்த் சிங் தன் மனைவியை த் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்து விட்டதாக திரும்ப திரும்பச் சொல்கிறான்.
திருமணம் செய்த பின் தன் மனைவி இன்னும் கன்னி கழியாதவள் என்று தேன் நிலவின் போது தெரிய வரும்போது குஷ்வந்த் சிங் ஆச்சரியப்படுகிறார்.
 ஆனால் குஷ்வந்த் சிங் திருமணம் செய்து கொண்ட பின் அவர் மனைவியை தான் உயிருக்குயிராய் காதலித்ததாக  மங்கத் ராய் சொல்கிறான். தினமும் தான் கவல் மாலிக்கை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கேட்கிறான்…குஷ்வந்த் சிங் சம்மதிக்கிறார்!
மங்கத் ராய் ஆக்கிரமிப்பின் காரணமாக கவல் மாலிக் ஓவியம் வரைவதையும் டென்னிஸ் விளையாடுவதையும் கை விட்டு விட்டு மங்கத் ராயுடன் சைக்ளிங் செல்கிறாள்.
குஷ்வந்த் சிங்கின் மனைவி அவர் பேச்சைக்கேட்காமல் பரத் ராம், மங்கத்ராய் சொல்பேச்சைத்தான் கேட்டுக்கொண்டிருந்ததால் சிங்கின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
லண்டன் தூதரகத்தில் தான் வேலை பார்த்த போது ஹைகமிஷனர் கிருஷ்ணமேனன் ஆக்கிரமிப்பில் குஷ்வந்த் சிங்கின் மனைவி இருந்ததைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பிஜு பட்நாய்க் ( முன்னாள் ஒரிசா முதல்வர் தான். இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாய்க்கின் தந்தை! ) தன் மனைவிக்கு நூல் விட்டுப்பார்த்து படியுமா என்று ட்ரை பண்ணிய விஷயத்தை குஷ்வந்த் சிங் எழுதியிருக்கிறார்.
ஃப்ரான்சில் UNESCO வில் வேலை பார்த்த போது பரத்ராம் இவர் மனைவி மீது ஜொள்ளு விட்டு தேடி வந்ததைப்பற்றி குறிப்பிடுகிறார். கவல் மாலிக்கை ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துச்செல்ல விரும்புவதாக அனுமதி கேட்ட போது பாரீஸ் சில் மிக காஸ்ட்லியான ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துக்கொண்டு போகச்சொல்லி சிபாரிசு செய்து விட்டு குஷ்வந்த் சிங் தன் மனைவியிடம் “ இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு உன் வாழ்வில் நீ இந்த ஒரு முறை மட்டும் தான் போகமுடியும்!” என்கிறார். ஆனால் அந்த ரெஸ்டாரண்ட் மெனு கார்ட் பார்த்து விட்டு மிரண்டு போய் பரத்ராம் கவனமாக நழுவி வேறொரு சாதாரண ரெஸ்டாரெண்ட்டுக்கு அவளை அழைத்துச் செல்கிறான்.
இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி எடிட்டராக குஷ்வந்த் சிங் இருந்த போது அவர் பேரும் புகழும் அடைந்த கால கட்டத்தில் மனைவியாலும் மகள் மாலாவாலும் தனக்கு கௌரவ பங்கம் ஏற்பட்டதாக போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.
கடவுள் நம்பிக்கையைத் துறந்தவர். ஆனால் மனைவி தன்னை விட்டு நிரந்தரமாகப்பிரிய விரும்புவதாகச் சொன்னபோது குருத்வாராவில் இரவு முழுதும் மனம் உடைந்து பிரார்த்தனை செய்திருக்கிறார். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.ஐம்பதை ஒட்டிய வயதிலும் கூட இவர் மனைவி டைவர்ஸ் வாங்க முயற்சித்திருக்கிறார்.
மனைவியுடனான உறவு மிகவும் மோசமானதைப்பற்றி குறிப்பிடுகிறார்.
இவ்வளவிலும் இருவரும் அறுபத்து மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு மகன் ராகுல் சிங். மகள் மாலா. முதுமையில் தன் மனைவி Alzheimer’s diseaseல் பாதிக்கப்பட்ட நிலையில் உருக்கமாக எழுதுகிறார். தன் மனைவி இறந்து விட்டால் தான் எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்று தான் சுயசரிதையை முடிக்கிறார்.
I was always certain she would outlast me by many years. I am no longer sure that she will. But I have a gut feeling that if she goes before me, I will put away my pen and write no more.
இது தான் கடைசி வரிகள்.
குஷ்வந்த் சிங் மனைவி இந்த புத்தகம் வெளி வந்த 2002ல் இறந்து விட்டார்.
தன் 90 வயதில் குஷ்வந்த் சொன்னார்: ’என் மனைவி இறந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன.ஆனால் நான் இன்னும் எழுதி சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.’

’இன்னும் நான்கைந்து வருடத்தில் வரப்போகும் சாவை எதிர்கொள்ளத் தயாராயிருக்கிறேன்’ என்று அப்போது சொன்ன குஷ்வந்த் சிங்கிற்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் 98 வயது நிறைவடைகிறது.