Share

Showing posts with label கவிஞர் கண்ணதாசன். Show all posts
Showing posts with label கவிஞர் கண்ணதாசன். Show all posts

May 2, 2020

குட்டி தமிழ்வாணன்


ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது.
ஒரு கை கிடையாது. இப்படி.

பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.
’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.

எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.

கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?
தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself.
Superiority complex.
அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.
‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.
தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.
The advise you tell others is the advice you need to follow.
இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.
’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.
தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.
அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .
அடுத்த கண்ண தாசன் இதழில்
மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை
எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

Oct 17, 2019

யார் தான் குழந்தை?



ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர்.


அப்போதெல்லாம் தி. மு. க தொண்டர்களுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயரைச் சொன்னாலே முகம் சுளித்து எரிச்சல் படுவார்கள். 'குடிகாரப்பயலுக காந்தி கட்சில' என ஏளனம் பேசுவார்கள். இருவரின் வெளிப்படைத் தன்மை தான் இப்படி கிண்டல் செய்ய வழி வகுத்தது.


ஜெயகாந்தன் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதெல்லாம் கண்ணதாசனுடன் அவருடைய பிள்ளைகளும் வருவார்களாம். அந்த பிள்ளைகள் ஜெய காந்தனுக்கு மிகவும் உவப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கண்ணதாசன் பேசி உரையாடும் போது 'ஜெயா' என்று ஜெயகாந்தனை அழைப்பாராம்.

காமராஜரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள்.

காங்கிரஸ் கட்சி 1969ல் உடைந்தது. அப்போது கண்ணதாசன் அடிக்கடி மாறிய விஷயம் காமராஜருக்கு  செய்த துரோகம் தான். காலா காந்தி புண் பட்டுப் போயிருப்பார்.

ஜெயகாந்தன் இந்த துரோகத்தை வெறுத்தார்.

இந்த அரசியல் நிகழ்வு பற்றி ஜெயகாந்தன் 'இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' தொகுப்பிலேயே வேதனையுடன் குறிப்பிட்டார்.

" கண்ணதாசனை நான் ஒரு குழந்தை என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் தன்னை விடவும் ஒரு குழந்தை என்று கருதினார். எனவே, அவர் குழந்தை அல்ல என்று நான் கண்டு கொண்டேன்.

கார்ல் மார்க்ஸ், சே குவேரா வரை கவியுள்ளமும் கவிதை சஞ்சாரமும் கொண்டு மொழிக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் கண்ணதாசன்?
போக ப்ரியர், நிலையான புத்தியில்லாதவர்"

‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று காமராஜரிடம் சரணாகதி அடைந்தவர் இரண்டு வருடங்களுக்குப் பின், காமராஜருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவாக நில்லாமல் கண்ணதாசன் இந்திரா காங்கிரஸில் இணைந்ததெல்லாம்
ஜெயகாந்தனை எப்படி வருத்தப்படாமல் இருக்கச் செய்யும்?

உடன்பாட்டு பதில்களும் எதிர் மறை கருத்துக்களும் எல்லா நிலைப்பாடுகளுக்கும் எப்போதுமே உண்டு.

......


(கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் , இயக்குனர் சி. வி. ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம். எஸ். வி
(நன்றி : The Hindu))


Jul 8, 2019

விழுதுகள் போல உறவு


டி.எஸ்.பாலையாவின் கையொப்பமிடப்பட்ட ஒரு புத்தகத்தை கிருஷ்ணன் வெங்கடாசலம் ( கிருஷ்ணன் நம்பியின் தம்பி) காட்டினார். அது பாலையாவின் சொந்த புத்தகம்.
நடிகை சந்திரகாந்தாவின் அக்காள் ஒருவரையும் டி.எஸ்.பாலையா மணந்தார். அவருடைய மகள் தான் நடிகை மனோசித்ரா.
சந்திரகாந்தாவின் இன்னொரு அக்கா மாப்பிள்ளை எஸ்.எஸ்.பி லிங்கம். இவர் தி.மு.கவின் ஸ்தாபக தலைவர் சி.என்.அண்ணாத்துரைக்கு நெருக்கமான நண்பராய் இருந்தவர்.
அதாவது எஸ்.எஸ்.பி லிங்கத்தின் மனைவியின் இன்னொரு சகோதரி தான் டி.எஸ்.பாலையா மனைவி.
பின்னணி பாடகர் சாய்பாபா, (’மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்’, ’ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு’ போன்ற பாடல்களை நாகேஷுக்காக பாடியவர்) ஜூனியர் பாலையாவின் தாயார் டி.எஸ்.பாலையாவின் மூத்த மனைவி.
கரகாட்டக்காரன் புகழ் சண்முகசுந்தரம் (’அக்கா, வயசாயிருச்சில்ல, அக்கா’) சந்திரகாந்தாவின் சகோதரர்.
இவருடைய மனைவியாய் இருந்தவர் தான் ரமா பிரபா. இந்த ரமாப்ரபா தான் சரத்பாபுவுடன் வாழ்ந்தவர். சரத்பாபு பின்னால் நம்பியாருக்கு மருமகனாகி அதுவும் இல்லையென்றானது.
When it comes to a family tree, one should be willing to go where the fact may lead.
சண்முகசுந்தரம் பற்றி பலரும் அறியாத ஒரு விஷயம் உண்டு.
இந்த அபூர்வ செய்தியை சொன்னவர் கிருஷ்ணன் வெங்கடாசலம்.
நம்பியின் தம்பி எப்பேர்ப்பட்ட புதையலையெல்லாம் பேச்சில் கூட காட்டுகிறார்.
ரமா ப்ரபா போல இன்னொரு பெண் கூட சண்முகசுந்தரத்தின் மனைவியானார். அவர் பெயர் அம்புஜம். இவர் டி.எஸ். பாலையாவின் மகள்! (சண்முக சுந்தரத்தின் அக்காள் மகள் அல்ல இவர்.) ஜூனியர் பாலையா ரகுவின் சகோதரி. ஆக டி.எஸ் பாலையாவின் மருமகன் சண்முகசுந்தரம். அம்புஜம் திடீரென்று சண்முகசுந்தரத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். She also had  eloped.
சண்முகசுந்தரம் இறக்கும்போது அவர் மனைவி சுந்தரி. மூன்றாவது மனைவி. இவர்களுக்கு மகள்கள் கீதா, பவித்ரா. மகன் பாலாஜி என்று செய்தித்தாளில் படிக்க கிடைத்தது.
சண்முகசுந்தரம் டி.எஸ்.பாலையாவுக்கு மருமகனானதும், சரத்பாபு நம்பியாருக்கு மருமகனானதும் காலம் காட்டிய மின்னல். சொற்ப கால நிகழ்வு.
சண்முகசுந்தரத்தின் மூத்த சகோதரர் டி.கே.மணியன். அதாவது நடிகை சந்திரகாந்தாவின் அண்ணன். (இவரும் கிருஷ்ணன் நம்பியின் தம்பியும் ஐம்பத்தாண்டு கால நண்பர்களாய் இருந்தவர்கள்.)
இவர் திரைப்பட இயக்குனர். சுரேஷ், பானுப்ரியா நடித்த ஏதோ மோகம், எஸ்.வி.சேகர் நடித்த பொண்டாட்டி பொண்டாட்டி தான் என்ற படங்களை இயக்கியவர்.
கங்கை அமரன் படங்களிலும் பணி புரிந்திருக்கிறார். கங்கை அமரன் சந்திரகாந்தாவின் அக்கா மகளை தான் மணந்தவர். அதாவது முன்னர் குறிப்பிட்ட எஸ்.எஸ்.பி.லிங்கம் தான் கங்கை அமரன மாமனார். கங்கை அமரனின் மகன்கள் இன்று பிரபலமானவர்கள். இயக்குனர் வெங்கட், நடிகர் ப்ரேம்ஜி.
A family tree’s roots run deep.
கங்கை அமரன் சம்பந்த வழியில் பார்த்தால் டி.எஸ்.பாலையாவுக்கு இளையராஜா கூட சொந்தக்காரர்.
”சொந்தம் எப்போதும் தொடர்கதை தான். முடிவே இல்லாதது” கண்ணதாசன் பாடல். மெல்லிசை மன்னர் இசை. சிவாஜி, சாவித்திரிக்கு பிராப்தம் படத்தில்.
”சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும். அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்.” கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல். நான் உதவி இயக்குனராக இருந்த ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ’அழைத்தால் வருவேன்’.

’விழுதுகள் போல உறவு’ கண்ணதாசனின் வரி தானே.

டி.கே. மணியன் மனைவி யார் தெரியுமா? பூரணி. இவர் மிக பிரபலமான ஸ்பெஷல் நாடக ஜாம்பவான், தேவகானக்குரலுக்கு சொந்தக்காரர் எஸ்.ஜி.கிட்டப்பாவின் உடன் பிறந்த சகோதரர் செங்கோட்டை செல்லப்பாவின் மகள். டி.கே மணியன் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு சொந்தக்காரர் ஆனார்.
அற்பாயிசில் இறந்த கிட்டப்பாவின் இரண்டாவது மனைவி கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் என்பது அனைவரும் அறிந்ததே.
எப்படியெல்லாம் கனெக்ட் ஆகிறது பாருங்கள்.

Jun 24, 2019

Pethidine Injection




இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் மிகுந்த பரவசத்துடன் “சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.
சந்திரபாபு பெத்தடின் இஞ்சக்ஸன் போதையில் மூழ்கியிருந்தவர்.
கவிஞர் கண்ணதாசனும் பெத்தடின் அடிக்ஸனில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்.
Addiction is a destructivie disease. Simply devastating.
சந்திரபாபு தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் ரயில்வே ஸ்டேசனில் ஏதோ தகராறில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார். He was a trouble maker.
கவனியுங்கள். அவருடைய சொந்த ஊரில். அவருடைய ஃபெர்ணான்டோ சமூகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் அதிகம். அப்படியிருந்தும் தாக்கப்பட்டார். சந்திரபாபு ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்று தெரிந்து தான் அவரை அடித்தார்கள். ’ஏன்டா நீ பெரிய நடிகன்னா என்னா வேண்ணாலும் செய்வியா?’ என்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். Disgrace.
முகமெல்லாம் வீங்கிப்போய். உதட்டில் கூட காயத்தோடு வந்த சந்திரபாபுவை சென்னையில் பார்த்து விட்டுத் தான், மிகவும் அதிர்ந்து போய் கண்ணதாசன் தன் பெத்தடின் போதைப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டார்.




Mar 22, 2018

The relentless march of time


பாலாவின் "நாச்சியார்" படத்தின் கடைசி காட்சி ஒரு பழைய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.
நானும் என் மனைவியும் பாண்டிச்சேரி போவதற்காக திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ட்ரையினில் பயணம். கீர்த்தி பழனியில் எல்.கே.ஜி முடித்திருந்தான். அப்போது அஷ்வத் பிறந்திருக்கவில்லை.
விழுப்புரத்தில் இறங்கி புதுவைக்கு போக வேண்டும்.
ஏசி கோச்சில் எங்கள் எதிரில் ஒரு வயதான தம்பதியர். ஒரு ஓய்வு பெற்ற பஞ்சாயத்து கமிஷனர், அவருடைய மனைவி இருவரும் சென்னை செல்கிறார்கள்.
அந்த அம்மையார் சுகவீனமான நிலையில். எங்களை பார்த்ததில் கொஞ்சம் உடல் உபாதை மறந்திருந்தார். எங்களை பற்றி தன் கணவரிடம் சொன்னார்: ”என்னங்க... இதுங்க ரெண்டுமே கொழந்தைகள். இதுங்களுக்கு ஒரு மூணு வயசு கொழந்தை.”

பஞ்சாயத்து கமிஷனர் என்னிடம் கேட்டார் :” இப்பவே சின்னப்பையனா இருக்கியேப்பா...கல்யாணத்தப்ப எப்படி இருந்திருப்ப. டவுசர் போட்டிருக்கும்போதே கல்யாணம் பண்ணிட்டியா?”

The relentless march of time.
காலம் தான் எப்படி ரயில் மாதிரி யாருக்கும் காத்திராமல் ஓடி விடுகிறது.

“ You can't do very much about old age. It creeps up on you at a snail's pace to start with, then gathers speed in your middle age, and before you know it, you are an old man."
- Khushwant Singh

”இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்”
- கவிஞர் கண்ணதாசன்
...........................................


I always avoid compulsive talkers.
I do not appreciate rhetorical comments. In fact I do not expect or await any comment for my write-ups.
...................................

"I get easily bored with people and would rather read a book or listen to music than converse with anyone for too long.
I do not have many friends because I do not set much store by friendship.
I have found that friends, however nice and friendly they may be, demand more time than I am willing to spare.
I have had a few very close friends in my time. When some of them dropped me, instead of being upset, I felt relieved."
- Khushwant Singh

Oct 28, 2016

Left-handed compliment


எங்கள் கல்லூரிக்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார். மாணவர் யூனியன் அழைப்பின் பேரில். பணம் கொடுக்க வேண்டிய மாணவர் செக்ரட்டரி ரொம்ப தந்திரமாக அவர் கிளம்பும்போது மறைந்து விட்டான். முட்டாள். He had buried his head in the sand. அவன் என்ன நினைத்தான் என்றால் இந்தத் தொகையை அவரிடம் கொடுக்காமல் தப்பித்து விட்டதாக.

கண்ணதாசன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப்போனவுடன் டிரைவரிடம் “பணம் வாங்கி விட்டாயா?” என்று கேட்டிருக்கிறார். டிரைவர் ‘இல்லையே.. யாரும் கொடுக்கவில்லையே!’
“ போய் உடனே வாங்கிக்கொண்டு வா!”
கல்லூரிக்கு வந்து கண்ணதாசனுடைய டிரைவர் ஆஃபிஸில் சீன் க்ரியேட் செய்து விட்டான். மாணவர் யூனியன் செக்ரட்டரியைத் தேடிப்பிடித்து பணத்தை வசூல் செய்து கண்ணதாசன் டிரைவரிடம் கொடுத்தனுப்பினார்கள்.
………………………………………………………………………………………………..


ஜூலியானாவை திருமணம் செய்வதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஜெமினி கணேசனை Chief guest ஆக சிவகாசியில் ஒரு க்ளப் அழைத்திருந்தார்கள். அவர் அங்கிருந்து என் பெரிய மாமனாரின் வீட்டிற்கு வருவதாக உத்தேசம். அவரை அழைத்துக்கொண்டு வர என் பெரிய மாமனாரும் நானும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து போயிருந்தோம்.

அந்த க்ளப் நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்தவுடன் ஜெமினி தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பும் நேரம். க்ளப்பின் தலைவர், செக்ரட்டரி எவரையும் காணவில்லை. அவருக்கு ஒரு தொகை தர வேண்டும். அந்த தொகையும் அவருக்கு கிடைக்கவில்லை.
ஜெமினி பொறுமையிழந்து “என்னய்யா?... எங்கய்யா ஒங்க ப்ரசிடெண்ட். ஒங்க செக்ரட்டரி.”
க்ளப் மெம்பர் ஒருவர் “ சார்.. அவசர வேலையா திடீர்னு கிளம்பிட்டாங்க சார்…”
“ எங்கய்யா பணம்…? “ ஜெமினி கைவிரல்களை விரித்துக் கேட்டார்.
” சார்… மதுரையில உங்களுக்கு பாண்டியன் ஹோட்டல்ல ரூம் ஏற்பாடு செஞ்சிருக்கோம் சார்….” தலையை சொறிந்தார் க்ளப் மெம்பர்.
ஜெமினி “ எனக்கு கொடுக்க வேண்டிய பணம் எங்கய்யா?”
பதில் சரியாக வரவில்லை. மீண்டும் இன்னும் சில மெம்பர்கள் மலுப்பலாக ஏதேதோ சொன்னார்கள்.
ஜெமினி கோபமாகி விட்டார். “ மிஸ்டர்! I’m a multi-millionaire. That’s a different thing. நான் இங்க உங்களுக்காக வந்திருக்கேன். என்னை ஒரு மகாராஜா மாதிரி ட்ரீட் பண்ணனும்! You are insulting me.”
என் பெரிய மாமனார் அந்த க்ளப் மெம்பர்களிடம் பேசி பணத்தை வாங்கி ஜெமினியிடம் கொடுத்தார்.
It was very hard for Gemini to swallow this unpleasant occurrence and he hauled them over the coals. “ எங்கிட்ட இப்படி சில்லியா நடந்துக்கறாங்க. இதுவே சரத்குமாரிடம் இப்படி செஞ்சாங்கன்னா அடி வெளுத்துடுவான். ஆமா… சரத்குமார் அடிச்சிடுவான்.பந்தாடியிருப்பான்.”

……………………………………………………….



Jul 12, 2012

கண்ணதாசனின் அரசியல் வாழ்வு

மீள் பதிவு
20.10.2008 ல் எழுதப்பட்டது.


அரசியலில் இருந்துகொண்டே சினிமாவுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை,தன் மன நிலை இரண்டையும் சினிமா பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.








திமுக வில் இருந்து சம்பத்தோடு வெளியேறிய சூழலில் அண்ணாதுரை பற்றி
 " அவனை நினைத்தே நானிருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை . அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை. அண்ணன் காட்டிய வழியம்மா. " -படித்தால் மட்டும் போதுமா.

"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் எஸ் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால்.

தமிழ் தேசிய கட்சி காங்கிரஸில் இணையும் சூழலில் காமராஜரை குறித்து
 ' அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி.' வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி ' என்ற பாடல் - பட்டணத்தில் பூதம்.



அண்ணாத்துரை அமெரிக்காவில் புற்று நோய்க்கு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பி வந்த போது “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா?“

இப்படி பல பாடல்கள் பற்றி பட்டிமன்ற பேச்சாளர்கள் , பிரபலமான பேச்சாளர்கள் மட்டுமல்ல சாதாரண உரையாடல்களில் இப்படி பலரும் பல கண்ணதாசன் பாடல்கள் பற்றி பேசிகொள்வார்கள்.

நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை.
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள்.

அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது. கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ். என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார். காமராஜர் மேல் அளவு கடந்த பற்று். திமுக வுக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ. திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை.( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)

திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது.

 நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார். திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார்.

திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர். அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர். மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள். உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள். பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார்.
திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது. ஒருவர் கருணாநிதி! இன்னொருவர் அன்பில் தர்மலிங்கம்!  ஆமாம்.கண்ணதாசனே இப்படிச் சொன்னார்.

கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் ஒருவிதமான Love and Hate relationship!ஒரு வேளை பூர்வஜென்ம பந்தமோ என்னவோ! முதல் முறையாக 1940களில் எம்.ஜி.சக்கரபாணி  கண்ணதாசனை அழைத்துப் போய் கருணாநிதியை அறிமுகப்படுத்திய போது தனக்கு
 ‘ காதலியை ப்பார்த்த உணர்வு’ ஏற்பட்டதாகவே கவிஞர் குறிப்பிட்டுள்ளார். கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி
 “ தென்றலாய் தீண்டியவனும் நீ! நெருப்பாய் சுட்டவ்னும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்தபோதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!” என்று இரங்கல் எழுதினார்.



தாக்குதல் என்றால் சாதாரண தாக்குதல் அல்ல. வனவாசத்தில் எழுதியவை மட்டுமல்ல.


மேடையிலும். கருணாநிதி ‘ காமராஜரின் தாயார் கருவாடு விற்றவர்’ என்று சொன்னதற்காக கண்ணதாசனின் பதிலடி’ ஆமாம். என் தலைவனின் தாய் கருவாடு தான் விற்றார். கருவாடு மட்டும் தான் விற்றார்’
நெல்லை கண்ணன் பேசிய விஷயம் இது.


 கண்ணதாசன் பெத்தடின் இஞ்சக்சன் போதையில் அளவுக்கு மீறி மூழ்கிய போது கண்ணதாசனின் பிள்ளைகள் கருணாநிதியிடம் போய் அழுதார்கள். அப்போது கருணாநிதி கவிஞரிடம் கேட்ட வார்த்தைகள்: ’எங்களையெல்லாம் அழ வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறாயா?’


திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டு அண்ணா திமுக அமோக வெற்றி. ஸ்தாபன காங்கிரஸ் இரண்ட்ராமிடம் . திமுக மூன்றாமிடம். இந்திரா காங்கிரஸ் நான்காமிடம்.

'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '
என்று காமராஜர் எதிர்காலம் பற்றி கணித்த கண்ணதாசனுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என புரிந்து விட்டது.


எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன்.

 எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்

" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "

தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார். எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார்.
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி:

ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே?

கண்ணதாசன் பதில்:
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன். உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள்; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '

கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார். உடனே கண்ணதாசன் சொன்னார்!
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "


கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது.

ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்
கேள்வி : எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதியின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது?

அரசு பதில் : 'வன வாசம்' தான். ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது.

Oct 20, 2008

கண்ணதாசனின் அரசியல் வாழ்வு

அரசியலில் இருந்துகொண்டே சினிமாவுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை ,தன் மன நிலை இரண்டையும் சினிமா பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் .
திமுக வில் இருந்து சம்பத்தோடு வெளியேறிய சூழலில் அண்ணாதுரை பற்றி " அவனை நினைத்தே நானிருந்தேன் . அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் . இன்னும் அவனை மறக்கவில்லை . அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை . அண்ணன் காட்டிய வழியம்மா . " -படித்தால் மட்டும் போதுமா .
தமிழ் தேசிய கட்சி காங்கிரஸில் இணையும் சூழலில் காமராஜரை குறித்து ' அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி . என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி .' வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி ' என்ற பாடல் - பட்டணத்தில் பூதம் .
இப்படி பல பாடல்கள் பற்றி அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான வுலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் எஸ் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால் .
பட்டிமன்ற பேச்சாளர்கள் , பிரபலமான பேச்சாளர்கள் மட்டுமல்ல சாதாரண உரையாடல்களில் இப்படி பலரும் பல கண்ணதாசன் பாடல்கள் பற்றி பேசிகொள்வார்கள் .
நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது . ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை .
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள் .
அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது . கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ் . என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார் . காமராஜர் மேல் அளவு கடந்த பற்று . திமுக உக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ் . திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை .( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)
திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது . நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார் . திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார் .
திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர் . அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர் . மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள் . உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள் . பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார் .
திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது . ( கருணாநிதி , அன்பில் தர்மலிங்கம் )
திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டு அண்ணா திமுக அமோக வெற்றி . ஸ்தாபன காங்கிரஸ் இரண்ட்ராமிடம் . திமுக மூன்றாமிடம் . இந்திரா காங்கிரஸ் நான்காமிடம் .
'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '
என்று காமராஜர் எதிர்காலம் பற்றி கணித்த கண்ணதாசனுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என புரிந்து விட்டது . எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன் . எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்
" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "
தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார் .
தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார் . எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார் .
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி
ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே ?
கண்ணதாசன் பதில்
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன் . உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள் ; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '
கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார் . உடனே கண்ணதாசன் சொன்னார் !
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "
கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது .
ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்
கேள்வி : எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதி யின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது ?
அரசு பதில் : 'வன வாசம்' தான் . ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது .