Share

Showing posts with label யவனிகா ஸ்ரீராம். Show all posts
Showing posts with label யவனிகா ஸ்ரீராம். Show all posts

Oct 2, 2019

Misinformation is cheap to produce




மாவு தான் எப்படியெல்லாம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.
புளித்துப்போவதே கூட Flash news ஆகி சமூகத்தை பரபரப்பாக்கி விடுகிறது.
மருந்தான மாவுக்கட்டு சமீப காலமாக காவல் துறையின் கண்ணியம் காக்க பெரியதொரு முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று காலை ஒரு செய்தி சேனலில் போலீஸை தாக்கி விட்டு தலை மறைவாய் இருந்த இளைஞனை கைது செய்ய முயன்ற போது தப்பியோடிய அவன் தடுக்கி கீழே விழுந்து
கை காலில் அடி பட்டதாம்.
ஒரு கைக்கும் ஒரு காலுக்கும் மாவு கட்டு போட்ட போலீஸ்.
டி.வியில் பார்த்த போது அந்த இளைஞன் ஏதோ மாறு கால் மாறு கை வாங்கப்பட்டது போல படுத்துக்கிடக்கிறான்.
தாக்கியவனுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ் மனிதாபிமானம் செய்தியில் பெரிதாக சிலாகிக்கப்படுகிறது.
Media Industry! Fake news.
இரு பால் இளைய தலைமுறையினரையும் அவமானப்படுத்தும் காவல் தொழில் துறை.


கவிஞனின் கீழ் கண்ட ஒற்றை வாக்கியம் தான் எவ்வளவு நிதர்சனமானது.

”இந்திய இளம் பால்யம் மூலதனத்திற்கு கீழ் குற்றம் சாட்டப் பட்டு விட்டது.”
- யவனிகா ஸ்ரீராம்

Feb 9, 2019

Inter personal relationship


’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’
- யவனிகா ஸ்ரீராம்
என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “ க்ளாசிக்”.
வெற்றிகரமாக திமிங்கலத்தின் முதுகில் நான் பயணிக்கிறேன் என்பது சந்தோஷமாயிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன் பல திரை பிரபலங்கள் கூடியிருந்த நிலையில், ஏ.பி.நாகராஜன்   தனியறைக்கு வரும்படி எம்.ஆர்.ராதாவை அழைத்தாராம்.
ராதா அவருடன் அறையில் நுழைந்திருக்கிறார். தடால் என்று சாஸ்டாங்கமாக ராதா காலில் ஏ.பி.என் விழுந்திருக்கிறார்.
ராதா வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் வெளிப்படையாக உடைத்துச் சொன்னாராம். “அயோக்கிய பய. பிச்சக்காரப்பய. என் கால்ல இவன் விழுகிறத மத்தவங்க பாக்கக்கூடாதுன்னு நினக்கிறான். தனியா அறைக்கு கூட்டிட்டு போய் ரகசியமா கால்ல விழுறான்.”
எனக்கு தெரிந்த மனிதரின் மகன் வெளி நாட்டில் படித்தவன். தன்னுடன் படித்த வெளி நாட்டு வெள்ளைக்கார நண்பர்களுக்கு கல்யாண நிச்சயத்தின் போது ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறான். அதில் இங்கே உள்ள அவனுடைய நண்பன் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறான். வெளி நாட்டில் படித்த அந்த மாப்பிள்ளை கல்யாணமான தன் பால்ய நண்பனை அறிமுகப்படுத்தியிருக்கிறான். பெண்ணும் ஆணுமான அந்த வெளி நாட்டு இளைஞர்கள் இந்த தம்பதியரை பார்த்திருக்கிறார்கள் “So you are already married” பரவசமாய் கண்களை விரித்திருக்கிறார்கள்.
அவனுடைய கல்யாணம் ஆறு மாதத்திற்கு பின்னால் நடந்த போது வெள்ளைக்கார வகுப்பு தோழர்கள் வருவார்கள் தானே? வந்தார்கள். பெண்கள் நம் கலாச்சாரப்படி சேலை. ஆண்கள் வேட்டி சட்டையில். மாப்பிள்ளை உபயம். கல்யாண மாப்பிள்ளையின் பால்ய நண்பன் தன் மனைவியோடு அவர்களை வரவேற்றிருக்கிறான். ஒரு வெள்ளைக்காரன் வரவேற்றவனைப்பார்த்து ஆச்சரியமாக கூவியிருக்கிறான் – “ Are you still married?!”
செய்திகள் பற்றி அன்றாடம் எந்த கவலையும் கிடையாத ஒரு அஞ்ஞானி – டி.வி., செய்தித்தாள் எதுவும் பார்க்கும் வழக்கமில்லாதவர் - செவி வழி செய்தியொன்றை அரைகுறையாக கேட்டு விட்டு ரோட்டில் அன்றைக்கு சத்தமாக அரசியல் பேசினார் “எப்படியோ இன்னைக்கு எவ்வளவு பெரிய தேசிய கட்சிக்கு அழகிரி தலைவராயிட்டாரே. என்னமா தம்பி முகத்தில மாவீரன் கரிய பூசிட்டாரு.”
பிசியான ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஒரு கடை முன் ஒரு Used condom அழுக்காக கிடந்தது. ராத்திரி பரபரப்பு அடங்கியவுடன் சாலையில் எக்ஸ்ப்ரஸ் வேக சரச சல்லாப நிகழ்வு சர்க்கஸ் போல. Rooster Fuck? விடிய, விடிய வாகனங்கள் போய் வருகிற பகுதி.
ஒரு அரசாங்க ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. வாசலில் இருந்த ஒரு செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தேன். இறுக்கமாய் இருந்த அவர் சகஜமானவுடன் என்னிடம் சொன்னார் “நான் ராத்திரி ஷிப்ட் பார்க்கறப்ப இங்க அஞ்சாறு ஆட்டோ ஆஃபிஸ் முன்னாடி நிக்கும். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வருவார். ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் கிட்டயும் பேசுவார். அவங்க பணம் கொடுப்பாங்க. சரி தான். பவர காட்டி ’பவுசு’ வாங்கிக்கறார்னு நெனச்சேன். ஒரு நாள் ஆட்டோக்காரர்ட்ட கேட்டேன். அப்ப தான் தெரிஞ்சது. எஸ்.ஐ தான் அந்த ஆட்டோக்களின் ஓனராம். தினம் கலக்சன் பணம் வாங்கத்தான் வர்றாராம்.”
……………

Oct 4, 2012

பிரியாவிடை - அருவி


Dec 10, 2008

பைரன் சொல்லும் பிரியாவிடை
பைரன் கவிதைகள் பற்றி சொல்ல இனி என்ன இருக்கிறது.ஆனால் அவன் காதல்கவிதைகள் அனைத்தும் எப்போதும் புதியவை என்ற தகுதி அவனை பற்றி எவ்வளவு எழுதினாலும், பேசினாலும் மிச்சம் மீதி இருக்கும், இருந்து கொண்டே தான் இருக்கும்.
Fare thee well என்ற கவிதையில்
பிரிவின் துயர் காணும் பின்விழைவு
Fare thee well
Both shall live, But every morrow
Wake us from a widowed bed.

இருவரின் படுக்கையும் இனி விதவைக்கோலம் பூனவேண்டியுள்ளது!
இரக்கமில்லாத கொடூர ஜென்மம் (கல்லு மனசு-“sans merci” ) என்றாலும் கூட அவளுக்கு தான் எந்த காலத்திலும் எதிராக , விரோதியாக மாறவே மாட்டேன் என ஆணையிட்டு சொல்கிறான்.

Even though unforgiving,never
Against thee shall my heart rebel

இங்கே பல காதல்கள் மோதலில் கடும்பகையாகி பரஸ்பரம் புழுதி வாரி தூற்றுதல்களை காண நேரும்போது இந்த பைரன் கவிதை நினைவுக்கு வருகிறது.

...........

Aug 18, 2008


Incomplete "DON JUAN"........Fractional "HYPERION".....

ஓரு கனவு ... ஓரு பயம்...ஒருவேளை இது தான் வாழ்க்கையோ - ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான்.

பைரன் எழுதிய கடைசி காவியம்" டான் ஹூவான் ". அவனுடைய மரணம் இதை முடிக்க விடாமல் சதி செய்து விட்டது.கீட்ஸ் கூட "ஹைபீரியன்" காவியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் அதற்கு காரணம் "மில்டன் பாணியில்"இருப்பதாக எண்ணி கீட்ஸ் பயந்து , திருப்தி இல்லாமல் நிறுத்தினான் . மரணமும் அவனுக்கு அப்படி ஒன்றும் அப்போது ரொம்ப தூரத்தில் இல்லை என்பது வேறு விஷயம் .
டான் ஹூவான் கரு என்ன ?வரையறை செய்வதென்றால் ஹூவானின் அப்பா அவனுக்கு சொல்லுவதில் தான் ." பெண் உனக்கு மூன்று விஷயங்களை தருகிறாள் . உயிர் , ஏமாற்றம் , மரணம் ."
ஹூவான் பெண்களால் துரத்தப்படுகிறான் ......தமிழில் கொச்சையாக சொல்வதென்றால் பல பெண்கள் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள் .....
"Truth is stranger than fiction!"- இந்த பிரபலமான மேற்கோளை டான் ஹூவானில் தான் பைரன் சொன்னான் . அப்புறம் எல்லோரும் உபயோகித்து தேய்ந்து போன வரி இது .
ஹைபீரியன் காவியத்தில் பின்பகுதியில் அப்பல்லோ சூரியக்கடவுள் ( இலாகா - இசை, கலாசாரம் ) பீச்சில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பான் . பெண் கடவுள் நிமொசின் ( இலாக்கா ஞாபக சக்தி ) வந்து இவனிடம் விசாரிப்பாள் . தன் சக்தி தெரிந்தும் உபயோகிக்க அறியாமல் இருப்பதற்காக அழுது கொண்டிருப்பதாக அப்பல்லோ சொல்வான் . நிமொசின் கண்களுக்குள் தன் பார்வையை செலுத்துவதன் மூலம் அப்பல்லோ தன் இலாக்காக்களுக்கான அதிகாரத்தை அடைகிறான் . சக்தி உபயோகம் ஆரம்பம் . இந்த இடத்தில் Celestial..என்று கீட்ஸ்
அரைகுறையாக அந்தரத்திலேயே வாக்கியத்தை முடிக்காமலே .....................நிறுத்தி இருக்கிறான் .

ஆனால்நிறைவு பெறாத இந்த இரண்டு காவியங்களுமே சாதனைகள் தான் என்பது தான் இவற்றின் சிறப்பே.


Perhaps life is Just that….a dream
and a fear ....

Dec 18, 2009


அருவி-An angel's lyrical call !

A strongman and a WATERFALL always channel their own path.

அருவியை ஒரு கவிதை " an angel's lyrical call " என்று குறிப்பிடுகிறது.

Deep in the woods I hear an angel's lyrical call !
Tranquil and serene, a majestic waterfall!


இந்த lasting natural beauty யை
A vibrant entertainer, sparkling,
Waving at the crowds,
Singing of joy and showering harmony.
என உற்சாகமாக,குதூகலமாக, சந்தோசத்தைப் பாடுகின்ற அருவியாக விவரிக்கிறது இன்னொரு கவிதை.

I baptize myself within this cleansing spray! என அருவியில் குளித்து மகிழ்ந்து பெருமைகொள்ளும் கவிஞன் உண்டு .
No blemish on past nor future

ஆங்கிலத்தில் Waterfall என்பதை தமிழில் மொழிபெயர்க்கும்போது 'நீர் வீழ்ச்சி' யாகி விடுகிறது.

"மலைக் காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே " - பாரதி



"நெஞ்சு படபடக்கிறது
அருவியை யாராவது
நீர்வீழ்ச்சி
என்று சொல்லிவிட்டால்."-விக்கிரமாதித்தன் எழுதியது!

'அருவியின் ஆற்றல் ' என்ற தலைப்பில் யவனிகா ஸ்ரீராம் கவிதை .
அதில் சிலவரிகள் பனி போல உறைந்து விடும் தண்மை கொண்டவை.
யவனிகா ஸ்ரீராம் எழுதிய அந்த கவிதையின் சில வரிகள் -

"உன் கேவல் ஒலிக்கும் அந்தகாரத்தில்
சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது.
உன் பிலாக்கணத்தில் மோகமுற்ற சல்லாபக் குளிர்காற்று ..."
"உன் விழிப் படலம் வெப்பமுற்றுச்
சிவக்கும் தருணத்தில்
நீல மேகம் நிலவை விந்தென சொட்டும் ."

யவனிகா ஸ்ரீராம் அருவியில் குளிக்கும் அனுபவம் அந்த விம்மியழும் நீர்வீழ்ச்சியின் சோகத்தைச் சார்ந்தது.
"நீ அழுவதானால் எப்போதும்
உன் தாயின் கண்ணீரில் இருந்து
துவங்கி விடுகிறாய்
நான் செய்வதெல்லாம் உன் உச்சரிப்பின் போதே
உன் இதழ் கவ்வி உன்னை
மௌனித்தது தான் "
..

"கவிதை ஒரு மலர் போன்றதும் வாள் போன்றதுமாகி புதிர் நிறைந்தது."
- தேவ தேவன்