Share

Showing posts with label எம்.ஆர்.ராதா. Show all posts
Showing posts with label எம்.ஆர்.ராதா. Show all posts

Feb 9, 2019

Inter personal relationship


’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’
- யவனிகா ஸ்ரீராம்
என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “ க்ளாசிக்”.
வெற்றிகரமாக திமிங்கலத்தின் முதுகில் நான் பயணிக்கிறேன் என்பது சந்தோஷமாயிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன் பல திரை பிரபலங்கள் கூடியிருந்த நிலையில், ஏ.பி.நாகராஜன்   தனியறைக்கு வரும்படி எம்.ஆர்.ராதாவை அழைத்தாராம்.
ராதா அவருடன் அறையில் நுழைந்திருக்கிறார். தடால் என்று சாஸ்டாங்கமாக ராதா காலில் ஏ.பி.என் விழுந்திருக்கிறார்.
ராதா வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் வெளிப்படையாக உடைத்துச் சொன்னாராம். “அயோக்கிய பய. பிச்சக்காரப்பய. என் கால்ல இவன் விழுகிறத மத்தவங்க பாக்கக்கூடாதுன்னு நினக்கிறான். தனியா அறைக்கு கூட்டிட்டு போய் ரகசியமா கால்ல விழுறான்.”
எனக்கு தெரிந்த மனிதரின் மகன் வெளி நாட்டில் படித்தவன். தன்னுடன் படித்த வெளி நாட்டு வெள்ளைக்கார நண்பர்களுக்கு கல்யாண நிச்சயத்தின் போது ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறான். அதில் இங்கே உள்ள அவனுடைய நண்பன் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறான். வெளி நாட்டில் படித்த அந்த மாப்பிள்ளை கல்யாணமான தன் பால்ய நண்பனை அறிமுகப்படுத்தியிருக்கிறான். பெண்ணும் ஆணுமான அந்த வெளி நாட்டு இளைஞர்கள் இந்த தம்பதியரை பார்த்திருக்கிறார்கள் “So you are already married” பரவசமாய் கண்களை விரித்திருக்கிறார்கள்.
அவனுடைய கல்யாணம் ஆறு மாதத்திற்கு பின்னால் நடந்த போது வெள்ளைக்கார வகுப்பு தோழர்கள் வருவார்கள் தானே? வந்தார்கள். பெண்கள் நம் கலாச்சாரப்படி சேலை. ஆண்கள் வேட்டி சட்டையில். மாப்பிள்ளை உபயம். கல்யாண மாப்பிள்ளையின் பால்ய நண்பன் தன் மனைவியோடு அவர்களை வரவேற்றிருக்கிறான். ஒரு வெள்ளைக்காரன் வரவேற்றவனைப்பார்த்து ஆச்சரியமாக கூவியிருக்கிறான் – “ Are you still married?!”
செய்திகள் பற்றி அன்றாடம் எந்த கவலையும் கிடையாத ஒரு அஞ்ஞானி – டி.வி., செய்தித்தாள் எதுவும் பார்க்கும் வழக்கமில்லாதவர் - செவி வழி செய்தியொன்றை அரைகுறையாக கேட்டு விட்டு ரோட்டில் அன்றைக்கு சத்தமாக அரசியல் பேசினார் “எப்படியோ இன்னைக்கு எவ்வளவு பெரிய தேசிய கட்சிக்கு அழகிரி தலைவராயிட்டாரே. என்னமா தம்பி முகத்தில மாவீரன் கரிய பூசிட்டாரு.”
பிசியான ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஒரு கடை முன் ஒரு Used condom அழுக்காக கிடந்தது. ராத்திரி பரபரப்பு அடங்கியவுடன் சாலையில் எக்ஸ்ப்ரஸ் வேக சரச சல்லாப நிகழ்வு சர்க்கஸ் போல. Rooster Fuck? விடிய, விடிய வாகனங்கள் போய் வருகிற பகுதி.
ஒரு அரசாங்க ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. வாசலில் இருந்த ஒரு செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தேன். இறுக்கமாய் இருந்த அவர் சகஜமானவுடன் என்னிடம் சொன்னார் “நான் ராத்திரி ஷிப்ட் பார்க்கறப்ப இங்க அஞ்சாறு ஆட்டோ ஆஃபிஸ் முன்னாடி நிக்கும். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வருவார். ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் கிட்டயும் பேசுவார். அவங்க பணம் கொடுப்பாங்க. சரி தான். பவர காட்டி ’பவுசு’ வாங்கிக்கறார்னு நெனச்சேன். ஒரு நாள் ஆட்டோக்காரர்ட்ட கேட்டேன். அப்ப தான் தெரிஞ்சது. எஸ்.ஐ தான் அந்த ஆட்டோக்களின் ஓனராம். தினம் கலக்சன் பணம் வாங்கத்தான் வர்றாராம்.”
……………

Aug 13, 2018

நக்கீரனில் ராதாரவி கர்ஜனை


ராதாரவியின் ’கர்ஜனை’ நக்கீரன் தொடர். நூறு வாரங்கள் தாண்டி விட்டது. நான் சமீபத்தில் ஒரு இருபது வாரங்களாகத்தான் பார்க்கிறேன். நல்ல சுவாரசியமான சினிமா அனுபவங்கள்.
விஜயகாந்த், டி.ராஜேந்தர், பிரபு, கார்த்திக், சந்திரசேகர் இன்னும், இன்னும் பலர் படங்களில் இவர் நடித்திருப்பதைக் குறிப்பிட்டு அவையெல்லாம் வெற்றிப்படங்கள் என்கிறார் ராதாரவி. ரொம்ப பூரிப்புடன் இப்படிசொல்கிறார்.
அந்த படங்கள் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. தமிழில் ஓரளவு நல்ல படங்களாக தேர்ந்து எடுத்து பார்த்தவன் நான். கமல் படங்கள் மீது தான் அதிக விருப்பம். முக்கிய உலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள் இப்படி கவனம் இருந்ததால் ராதாரவி நடித்திருக்கிற அந்த வெற்றிப் படங்கள் நான் பார்த்ததில்லை.
ஒன்று தெரிகிறது. அன்று தமிழின் நல்ல தரமான படங்களில் ராதாரவிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போது திரையுலக சூழல் மாறியுள்ளதால் மிஸ்கின் படத்தில் கூட அவரால் நடிக்க முடிந்திருக்கிறது.
ராதாரவியின் சினிமாவுலக அனுபவங்கள் படிப்பதில் ஒரு ஆபத்து இருக்கிறது. ராதாரவி நடித்த இந்த மாதிரி படங்கள் தான் கடந்த காலத்தில் தமிழின் சிறந்த படங்கள் என்று ஒரு கத்துக்குட்டி நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ராதாரவி பல படங்களில் தன் நடிப்பைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக அப்படியொன்றும் பாத்திரஙகளை கையாண்டவரில்லை. மெருகூட்டியவரும் அல்ல.
எம்.ஆர்.ராதாவின் திறன் மிக்க நடிப்பு வேறு. ராதாரவி நடிப்பு வேறு.
எம்.ஆர்.ராதா சீரியஸ் ரோல் செய்யமாட்டார். ஆனால் எம்.ஆர்.ஆர்.வாசு குணச்சித்திர நடிப்பிலும் முயற்சித்தார்.
ராதாவின் வக்கிர நடிப்பை அவருக்கு பின் வெளிப்படுத்தியவர்கள் வில்லன் சத்யராஜும், மணிவண்ணனும் தான். மணிவண்ணன் என்ன பிரமாதமான ஃபார்மில் இருந்தார்.
வில்லன் நடிப்பில் கூட ரகுவரன், பிரகாஷ்ராஜ் தரத்திற்கு, அருகில் ராதாரவி நிற்க முடியுமா?

ராதாரவியின் நக்கீரன் கட்டுரையில் சுவாரசியத்திற்கு குறைவில்லை. பல செய்தி புத்தம்புதியவை.
காதலிக்க நேரமில்லை படத்தில் ஆரம்ப காட்சி. ’என்ன பார்வை, உந்தன் பார்வை’ பாட்டில் வரும் அந்த Open top Convertible car! சிவப்பு நிற இம்பாலா செவர்லெட் டூரர் கார் எம்.ஆர் ராதாவுடையதாம். அவரிடம் கேட்டுப் பெற்று இயக்குனர் ஸ்ரீதர் பயன் படுத்தியிருக்கிறார்.
இந்த காரில் எம்.ஆர்.ராதா வைக்கோல் போர் ஒரு முறை ஏற்றியிருக்கிறார். ஆனால் அதை வைத்து உலவும் பிரபல வதந்தி கட்டுக்கதை. வைக்கோல் போர் வேண்டும் என்று மனைவி கேட்டுக்கொண்டதால் அவசரத்திற்கு காரில் ஏற்றியிருக்கிறார். வேறு Motive எதுவும் கிடையாது என்ற உண்மை ராதாரவி மூலம் தெரிய வந்திருக்கிறது.
கருணாநிதி உட்பட டணால் தங்கவேலு வரை எல்லோரையுமே ராதாரவி பாசத்துடன் அப்பா என்றே சொல்கிறார்.
டி.எஸ்.பாலையாவை பெரியப்பா என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர் எம்.ஆர்.ராதாவை விட ஏழு வயது இளையவர். ( நான் தான் பாலையா நூற்றாண்டின் போது தமிழ் இந்து பத்திரிக்கையில் 2014ல் அவருக்கு அஞ்சலி கட்டுரை எழுதியவன்.)
ஜுனியர் பாலையா தமிழ் சினிமாவில் ராதாரவிக்கு சீனியர். ஆனால் ராதா மகன் யோகக்காரர். அவருக்கு சினிமாவுலகிலும் அரசியலிலும் நல்ல அந்தஸ்து கிடைத்தது.
........................................

Jun 24, 2012

Carnal Thoghts -32

Bisexuals




http://www.indianetzone.com/photos_gallery/69/2%20Portrait%20of%20Pandavas%20wedding%20Draupadi.jpg                     

மகாபாரத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம்.
நகுலனின் தனித்துவம் அவன் தான்உலகத்திலேயே மிகவும் அழகான ஆண்! ஆனால் அர்ஜுனனுக்கு தான் பல பெண்களுடன் affair. Romance விஷயத்தில் specialist அர்ஜுனன்.  நகுலனின் ரொமான்ஸ் பற்றி ஏன் தகவல் ஏதுமே இல்லை.உலகத்திலேயே அழகான மனிதன் நகுலன் எனும்போது அவனை எவ்வளவோ பெண்கள் விரும்பியிருப்பார்கள்.நகுலனின் காதல் அனுபவங்கள் பற்றி வியாசர் ஏன் எழுதவில்லை.
வேறு மாதிரியும் பார்க்கவேண்டும் போல. Handsome fellow என்பது வேறு! Casanova என்பது வேறு!
Casanova பற்றி ஒரு தியரி உண்டு.
Usually a Casanova is a Bisexual.
  Arjuna as an eunuch in Virata' kingdom

அர்ஜுனன் அரவாணியாகவும் வாழ்ந்தவன்.

 ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்.(‘ஆரண்ய காண்டம்’ தமிழ் படத்தில் நடித்தவர் தான்!)


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcR-JO6jLUfceMwEvRB2inJW9OSwPJo2URIVi71IkoYcbziFGVawHA 
 இவரிடம் பல வருடங்களுக்கு முன் Stardust பத்திரிக்கை நிருபர் :" Deepak Parasar says that Jackie Shroff is a Bisexual."
இதற்கு ஜாக்கி ஷ்ராஃப் சொன்ன பதில்: "Let me finish with the girls first."

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ :
   "Homosexuality is so much in fashion it no longer makes news. பெரும்பாலான ஆண்கள் போல எனக்கும் ஹோமோ செக்சுவல் அனுபவம் ஏற்பட்டதுண்டு தான். எனக்கு அது பற்றி வெட்கமே இல்லை.”

ஹாலிவுட் ஹீரோக்கள் லாரன்ஸ் ஒலிவியர், க்ளார்க் கேபிள், கேரி க்ராண்ட்  துவங்கி
இன்றைக்கு டாம் க்ருஸ்,எடி மர்பி வரை Bisexuals.

லாரன்ஸ் ஒலிவியரின் மனைவி விவியன் லீ யும் மார்லன் பிராண்டோவும் நடித்த படம் A Street car named Desire (1951)  இந்த படத்தில் இருவரும் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று.

ஹாலிவுட் தம்பதிகள் லாரன்ஸ் ஒலிவியர்-விவியன் லீ வீட்டுக்கு பிரபல நடிகர் டேவிட் நிவன் ( The Brain பட ஹீரோ) வருகிறார். வீட்டு காம்பவுண்டில் உள்ள ஸ்விம்மிங் பூலில் ஒலிவியரும் மார்லன் பிராண்டோவும் முத்தமிட்டுக்கொண்டு பின்னிப் படர்ந்து (இடுப்புக்குக் கீழே இருபத்தெட்டு சுத்து) ஜலக்ரீடை செய்துகொண்டிருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்துக்கொண்டே டேவிட் நிவன் வீட்டிற்குள் சென்று விவியன் லீ யைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
டேவிட் நிவன்” ஸ்விம்மிங் பூலில் பார்த்த விஷயம் பற்றி விவியன் லீயிடம் நான் ஒன்றுமேசொல்லவில்லை. அவளுக்கும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று  தெரிந்திருந்தது. அவளும் அது பற்றி என்னிடம் பேசவில்லை. இது போன்ற விஷயங்களில் நாசூக்காக கண்டும் காணாமல் தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”

Brando Unzipped  என்ற நூலில் மார்லன் பிராண்டோ மற்றொரு ஆணுடன் Oral Sexல் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.Brando's Fellatio.
நடிகைகள் விவியன் லீ, பெட்டி டேவிஸ் ஆகியோருடன், நடிகர்கள் கேரி க்ராண்ட்,ராக் ஹட்சன் இருவருடன் அவருடைய affair பற்றி மட்டுமல்ல, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளின் மனைவியரையும் பிராண்டோ seduce செய்து படுக்க வைத்ததாகவும் Brando Unzipped நூலில் எழுதப்பட்டுள்ளது. டார்வின் போர்ட்டர் எழுதிய புத்தகம்.


பிராண்டோவுடன் ஒரு பத்து வருடங்கள் வாழ்ந்த மூன்றாவது மனைவி டாரிட்டா டெர்பியா எழுதிய 'Marlon, My Love and My Torment' நூலில் இன்னொருகுற்றச்சாட்டு.பிராண்டோ பெற்ற மகள் செயன்னி  யை Sexual Abuse செய்ததாக. மார்லன் பிராண்டோ இறப்பதற்கு ஒன்பது வருடத்திற்கு முன்பே அவர் மகள் செயன்னி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

தமிழ் நடிகர்களில் எம்.ஆர்.ராதா மட்டும் ரொம்ப வெளிப்படையாக தான் ஒரு Bisexual என்பதை ஒப்புக்கொண்டவர்.
“இருபத்திரண்டு வயது வரை நான் ஆண்களைத்தான் போகம் செய்தேன்.அப்புறம் தான் பொம்பளையப் பார்த்தேன்” என்றார்.
 

எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஒரு ‘பெரிய நடிகர்’ ( இவர் நாடகங்களில் ஸ்த்ரிபார்ட் வேசம் கட்டியவர்) இன்னும் சிலரும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது ராதா “ அந்தக் காலத்திலே நாங்க நாடகம் போட ஊர் ஊரா கிளம்பிட்டா வருஷக்கணக்கா ஆகும். அப்பல்லாம் பொண்டாட்டிய எங்க பாத்தோம். அப்பல்லாம் எனக்கு இவன் தான் பொண்டாட்டி!” என்று அந்த பெரிய நடிகரைக் கை காட்டிச் சொன்னாராம்.
அந்த நடிகர் ரொம்ப upset ஆகி “ என்னண்ணே, இப்படிப் பேசுறீங்க” என்று கோபமாய் கேட்டபோது ராதா அழுத்தமாகச் சொன்னாராம்
“ நான் உள்ளதைத் தானே சொல்றேன்.”



Dec 21, 2009

P.S.ஞானம்


எம்.ஆர்.ராதா 1954ல் 'ரத்தக் கண்ணீர்' படத்தின் மூலம் மறுபடியும் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்து செகண்ட் இன்னிங்க்சில் பட்டையை கிளப்பினார்.
முதல் இன்னிங்க்சில் பரிதாபமாக சினிமாவில் தோற்றவர். அவருடைய ஆரம்ப திரை அனுபவங்கள் மிகவும் மோசமாயிருந்தது.
1937
ல் 'ராஜசேகரன்' என்ற படத்தில் கதாநாயகன் ஈ.ஆர்.சகாதேவனுக்கு ( திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக நடித்தவர். இசை அறிஞர் ஹேமநாத பாகவதராக வரும் பாலையாவை அரண்மனைக்கு அழைத்து பாடவைத்து கௌரவிக்கும் வரகுண பாண்டியன்.தில்லானா மோகனாம்பாளில் மனோரமாவின் மைனர் கணவர்.) வில்லனாக இவர் நடிக்கும்போது இயக்குனர் சதி செய்து இவர் காலை உடைத்து விட்டார். பல மாதங்கள் படுக்க வேண்டிய நிலை யாகி விட்டது.
ஒரு வழியாய் எழுந்து 'பம்பாய் மெயில்' என்ற படம் டி.எஸ். பாலையாவும் ,ராதாவும் பார்ட்னராகி சொந்தமாக எடுத்தார்கள். படம் எடுத்து முடிந்த போது இருவருக்கும் ' போதும் , போதும் .. போதுமப்பா ..' என்று சொரிந்து விட்டு எழும்படியாக ஆகிவிட்டது . ஏண்டா படம் எடுத்தோம் என்ற ஞானம் வந்து விட்டது.
மாடர்ன் தியேட்டரில் ரொம்ப அசதியாக எம்.ஆர்.ராதா அப்போது கம்பெனி நடிகராக சேர்ந்தார். திண்ணையில் உட்கார்ந்த நிலை தான்.அங்கே தான் பொள்ளாச்சிஎஸ்.ஞானம் என்ற (அந்த கால தமன்னா!)நடிகை பந்தாவாக மகாராணி போல இருந்திருக்கிறார். 'சந்தனத்தேவன் ' படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.'ஞானத்தோடு யாரும் பேசக்கூடாது,சிரிக்ககூடாது'என்று மாடர்ன் தியேட்டர்சில் ஏகப்பட்ட கெடுபிடி.ராதாவுக்கு எப்போதும் 'மீறல்'தான் வாழ்க்கை. கண்ணாலே சைட் நொறுக்கி பி.எஸ். ஞானத்தை அந்த கட்டுப்பாடு நிறைந்த நிறுவனத்திலிருந்து சிறையெடுத்து கடத்தி பொள்ளாச்சி கொண்டு போய் ...அப்புறம் என்ன..
'திண்ணையில் இருந்த மனிதருக்கு திடீர்னு சாந்தி முகூர்த்தம்!'..ராதா 'நெம்புகோலின் தத்துவத்தை' அழகாக ஞானத்திற்கு விளக்கிகாட்டிவிட்டார்!!
இந்த பி.எஸ்.ஞானம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர் தான்.
'பாசமலர் ' படத்தில் வில்லி. கதாநாயகி சாவித்திரியை ரொம்ப கொடுமைப் படுத்துவாரே. அவர் தான் பி. எஸ்.ஞானம். பாசமலர் படம் பார்க்கும் பெண்கள் இவருக்கு விடும் சாபங்கள் சொல்லி முடியாது.வில்லி என்றால் அப்படி ஒரு வில்லி!
'நாசமா போயிருவ '
' தேவிடியா முண்ட '
'என் தூமையை குடிக்கி '
'என் சாண்டைய குடிக்கி '
'ராட்சசி '
' உன் மூஞ்சியில முள்ல கட்டி அடிக்கனும்டி '
" என் கையிலே மட்டும் இவ கிடைச்சான்னாஇவ மூஞ்சை அப்படியே கல்லுலே மீனை உரசிர மாதிரி உரசிப்பிடுவேன் '
' பேதியிலே போவ .. கழிச்சல்ல போவ '
இவ்வளவு சாபங்கள் .
'பாசமலர்' படம் பார்க்கும் பெண்கள் இடைவேளைக்குப் பின் அழுதுகொண்டே பி.எஸ். ஞானத்தை திட்டி இவ்வளவு சாபம் இடுவார்கள்.
பாசமலர் பழைய படமாகி ஒவ்வொரு ஐந்து வருடமும் பார்க்க கிடைக்கும்போதும் பி.எஸ். ஞானம் இவ்வளவு சாபம் வாங்குகின்ற நிலை தான்.
கடைசியில் பி.எஸ்.ஞானம் காரில் போகும்போது திருத்தங்கல் அருகில் விபத்துக்குள்ளாகி கழுத்து துண்டாகி துடி துடித்து இறந்து போனார்.
அபத்தம் என்னவென்றால் பி.எஸ்.ஞானம் கொடூர விபத்தில் இறந்த பிறகு பல வருடங்கள் கழித்து சென்னையில் 'கிருஷ்ணவேணி 'தியேட்டரில், 'ராம்' தியேட்டரில் இந்தப் படம் ரிலிஸ் செய்யப்பட்டது.அப்போது சாவித்திரி 'கோமா 'வில் படுத்து விட்டார். அப்போது படம் பார்த்த பெண்கள் கூடஅழுதுகொண்டே பி.எஸ்.ஞானத்தை திட்டி சாபமிட்டு ''நீ விளங்கவே மாட்டேடி'' என்று சாபமிட்டுக்கொண்டு தான் படம் பார்த்தார்கள்.

Nov 23, 2009

எம் ஆர் ராதா வாழ்வில் பிராமணர்கள் .

சங்கரதாஸ் சுவாமிகளை " நாடக உலகத்தந்தை " என எல்லோரும் சொல்வதை
எம்.ஆர் .ராதா ஏற்றவரல்ல.' நாடக உலகின் தந்தை ஜெகந்நாதய்யர் தான் 'என எப்போதும் உறுதியாக ராதா சொல்வார்.

" மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சபா." முதலாளி ஜெகந்நாத அய்யர்.

ஜகன்னாத அய்யர் நூறு வருடங்களுக்கு முன் தன் நாடகக் கம்பெனியில் நடிகர்களிடம் ' சம பந்தி போஜனம் ' கொண்டு வந்து புரட்சி செய்தவர் .

கிட்டப்பா இந்த நாடக கம்பெனியில் சேர தன் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரோடு வந்தார் ." கிட்டப்பா ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது ''ன்னு சொல்லி ஜகன்னாத அய்யர் திருப்பி அனுப்பி விட்டார்.

ஜகன்னாத அய்யர் கம்பெனியிலிருந்து என் . எஸ் . கே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி கொல்லம் போய் டி .கே .எஸ் . கம்பெனியில் சேர்ந்து விட்டார். ஜகன்னாத அய்யர் உடனே போலீசில் ' கம்பெனி நகையை திருடி விட்டான் ' என்று என் .எஸ் .கே மீது புகார் கொடுத்து விட்டார் . போலிஸ்
என் .எஸ் . கே யை விலங்கிட்டு அவரை ஜகன்னாதய்யரிடம் அழைத்து வந்தார்களாம் . மீண்டும் கம்பெனியில் சேர்ந்தார் என் .எஸ் .கே .

எம் . ஆர் .ராதாவின் நடிப்பு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் பலமாகப் போட்டவர் ஜகன்னாத அய்யர் தான் . இவர் மீது ராதாவுக்கு மிகுந்த மரியாதை.

ராதா தன் வாழ்க்கையில் ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து தொழுகையே நடத்திய உத்தமர் ஒருவர் உண்டு . அவர் ஜட்ஜ் கணேசய்யர் ."கண் கண்ட தெய்வம் கணேசய்யர் " என்று நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.
"விமலா அல்லது விதவையின் கண்ணீர் " என்ற நாடகத்திற்கு நாகையில் சனாதனிகள் தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது அந்த நாடகத்தை ஜட்ஜ் கணேசய்யர் பார்த்து விட்டு ராதாவை வானளாவ புகழ்ந்து நாடகம் நடப்பதற்கு தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கினார் .



தான் காதலித்த ஒரு பெண்ணை சக நடிகர் சைட் அடித்தார் என்பதற்காக ராதா கோபமாகி அந்த நடிகர் மீது திராவகத்தை ஊற்றிய போதும் கணேசய்யர் அந்த கேசில் இருந்து காப்பாற்றினார்.

இந்த திராவகம் வீசப்பட்ட நடிகர் பின்னாளில் ராதா எம்ஜியாரை சுட்ட கேசில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார் .ஆனால் அவர் ராதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார் . ஏனென்றால் அந்த நடிகர் அந்த நேரத்தில் ராதாவின் நண்பர் ஆகியிருந்தார் . நண்பரானது எப்படி என்பது புரியாத புதிர் என்கிறார் ராதா .

திராவிட கழக மாநாடு ஒன்றில் கொடி பிடித்து குதிரையில் ராதா வந்த போது அந்த குதிரையை ஒரு காங்கிரஸ் காரர் சீண்டி அதன் பின்னங்கால்களால் உதை வாங்கி இறந்து போனார் . அவரை எச்சரித்தும் அந்த ஆள் மீண்டும் குதிரையை சீண்டியதை தொடர்ந்ததால், ராதா தான் டெக்னிக் ஆக குதிரை கடிவாளத்தை பிடித்து உதைக்கும்படி செய்திருக்கிறார் . அந்த கேசில் இவருக்கு தூக்கு கூட கிடைத்திருக்க வேண்டியது. அப்போதும் ராதாவுக்கு ஆபத் பாந்தவராக கணேசய்யர் தான் காப்பாற்றியிருக்கிறார் .

இந்த தன் குற்றங்களை சொல்லும்போது ராதா இந்த விஷயங்கள் பத்திரிகையில் வெளிவரும்போது ஜட்ஜ் கணேசய்யர் கெளரவம் பாதிக்கப்படக்கூடாதே என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறார் .

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டீசாருக்காக யுத்த எதிர்ப்பு நாடகங்கள் நடத்துவதற்கு ராதாவுக்கு மிகப்பெரிய தொகையை ஏற்பாடு செய்து கணேசய்யர் உதவி செய்தார். அவர் வாழ்வில் மகத்தான திருப்பம் இந்த உதவி . அப்போது
எம்.ஆர்.ராதா தளுதளுத்து கண்ணில் நீர் பொங்க கணேசய்யரை கையெடுத்து கும்பிட்டு சொன்னார் " தெய்வம் வெளியே இல்லே. நமக்குள்ளே தான் இருக்குன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கிறேன் . இன்னிக்குத் தான் அந்த தெய்வத்தை நேருக்கு நேராப் பார்க்கிறேன். "

ராதா வாழ்விலிருந்து முழுவதுமாக வறுமையை அகற்றியவர் ஜட்ஜ் கணேசய்யர் தான். புகழ், பணம், செல்வாக்கு எல்லாமே அப்புறம் ராதாவைத்தேடி ஓடி வந்து குவிந்தது .

ராதா மதித்த இன்னொரு பிராமணர் திருவாரூர் சர் ஆர் . எஸ் . சர்மா. அவரைப் பற்றி ராதா பூரிப்புடன் சொன்னது " அவர் ஆரியர்களுக்கு கொடுத்ததை விட திராவிடர்களுக்குக் கொடுத்தது தான் அதிகம்."

பரத நாட்டிய கலைக்கு பிராமணர்களால் தான் உன்னதப் பெருமை கிடைத்தது என ராதா அழுத்தமாக நம்பினார்." ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதக்கலை பிராமணர்களால் புனிதமான கலையாயிடிச்சி. அந்தக் கலைக்காக பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அர்ப்பணம் செய்றாங்களே!" பரவசமாக சொல்கிறார் .

'சிறைச்சாலை சிந்தனைகள் ' என்ற நூல் ராதா அப்போது எம்ஜியார் கேசில் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் விந்தன் அவரை பேட்டியாக எடுத்தது.
ராதாவின் ஒவ்வொரு அமர்க்களமான,அடாவடியான கருத்துகளுக்கும்
( அவருடைய அபிப்பராயங்கள் பல பாமரத்தனமானவை ) விந்தன் comments தான் நூலில் ஒரு செயற்கையான குறை. ஏனென்றால் ப்ளாகில் வருகின்ற பல அபத்த பின்னூட்டங்கள் போலவே இருக்கின்றன விந்தன் தன் பேட்டியில் எம் ஆர் ராதாவின் பேச்சில் பிரமித்து ஏதேதோ சொல்வது .

கதிரில் வெளிவந்த தொடரை முழுவதும் பைண்ட் செய்து ஒரு நண்பர் வைத்திருந்ததை 25வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன் . ஆனால் இப்போது வெளி வந்துள்ள நூலில் பல விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன என தெரிகிறது .

அவர் காலத்து மற்ற நடிகர்களைப் போலவே ராதா நிறைய..நிறைய்ய பலவீனங்கள் கொண்ட மனிதர். ஆனால் அவரிடம் ஏனைய நடிகர்களிடம் இருந்த hypocrisy கிடையாது என்பது தான் அவரின் குண விஷேசம். தான் செய்த மோசமான தவறுகளைக்களைக்கூட வெளிப்படையாக பேசிய ஒரே தமிழ் நடிகர் ராதா மட்டுமே.
ராதா அவருடைய அபூர்வமான தனித்துவமான நடிப்புக்காக மிகுந்த கவனத்துக்குரியவர்.

Sep 13, 2008

எம் ஆர் ராதா

எம்.ஆர் .ராதா தன் சந்தேகம் ஒன்றை பெரியாரிடம் கேட்டாராம் .
"அய்யா ஒரு சந்தேகம் "
பெரியார் குறுநகையுடன் தலையை ஆட்டினாராம்.இவன் ஏதோ விவகாரமாக தான் பேச ஆரம்பிக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தான் அப்படி குறு நகையுடன் தலையை ஆட்டி காதை கொடுத்திருக்கிறார்.

" இந்த இங்கிலீஷ்லே ஏதோ சொல்லி அதுக்கு தமிழ்லே அர்த்தம் சொல்றான். அது புரியுது. தெரியாத பாஷையிலே உள்ளதை தமிழ்லே சொல்றது நியாயம் ...சம்ஷ்க்ரிதத்திலே ஸ்லோகன் சொல்லி தமிழ்லே அர்த்தம் சொல்றான்.சரி ... நியாயம் ...
தமிழ்லேயே ஸ்லோகன் சொல்லி அதுக்கு ... தமிழ்லேயே அர்த்தம் சொல்றானே .. இது என்ன .. எனக்கு புரியலெயே ..."
பெரியாருக்கு சிரிப்பை அடக்க முடியலையாம்.
பண்டிதத்தை ,புலமையை இதை விட அழகாக நையாண்டி செய்ய முடியுமா ? Snobbery க்கு சரியான சூடு! செத்து உறைந்து போன தமிழ்!

கோர்ட்டில் இரண்டு பேருடைய வக்கீல்களும் சீரியஸ் ஆ வாதாடிகொண்டிருந்த போது ' பாவம் இவங்க என்னனதையோ போட்டு குழப்பிக்கிட்டு தவிக்கிறாங்க. ஆனா உண்மை என்னன்னு எனக்கும் எம்ஜியாருக்கும் தான் தெரியும். என்ன ராமச்சந்திரா !'- இப்படி கோர்ட்டிலேயே எம்ஜியாரை பார்த்து படு ஜாலியாக கேட்டவர் ராதா.
நீதிபதி,வக்கீல்கள் எல்லோரும் இவருடைய இயல்பை கண்டு அசந்து போனார்கள்.

ராதா ஷூட்டிங்கிற்காக அதிகாலை காரில் வந்து ஸ்டுடியோவில் இறங்குகிறார். செட்டிற்கு வெளியே அஞ்சலி தேவி அசத்தலாக உட்கார்ந்திருந்தாராம். இவர் இறங்கியவுடன் உடைகளை கழட்ட ஆரம்பித்திருக்கிறார். அஞ்சலி தேவிக்கு கொஞ்சம் தர்ம சங்கடம்.
அண்டர் வேருடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அஞ்சலி தேவி ' அண்ணே என்னன்னே இது '
ராதா ' என்ன '
'பொம்பிளை நான் இங்கே இருக்கிறேன். நீங்க பாட்டுக்கு உடுப்பை பூரா கழட்டிட்டு இப்படி அண்டர் வேரோட இப்படி.. '
ராதா ' நீ இருக்கிறியேன்னு தான் அவசர அவசரமா டிரஸ்ஸ கழட்டிட்டு நிக்கிறேன்.'

எம் ஆர் ராதாவும் கண்ணதாசனும் அந்த காலத்தில் நடிகைகளை பற்றி செய்துள்ள கிண்டலும் நையாண்டியும் கடுமையானது.

இந்த காலத்தில் இந்த வைரமுத்து கொஞ்சம் வருடம் முன் நடிகைகளை தரக்குறைவாக என்னவோ ஏதோ சொல்லி விட்டார்.அல்லது எழுதி விட்டார்.
நடிகர் சங்கத்தில் வைத்து அவ்வளவு முன்னணி நடிகைகளும் (இதில் எம் ஆர் ராதிகாவும் அடக்கம் ) கூந்தலை விரித்து போட்டு சிலம்பை உடைச்சி ஒத்த முலையை பிச்சி போட்டு ... பத்திகிட்டு எரிஞ்சிச்சு ..
வைர முத்து உடனே தோப்புகரணம் போட்டு உடனே கால்லே விழுந்து ...உடனே மாப்பு கேட்டு ..
அப்புறம் இந்த தங்கர் பச்சானும் தான் மாட்டிக்கொண்டு பாவம் ..