ஆர்.பி.ராஜநாயஹம் எழுத்துக்கள் தொகுப்பாக வரவேண்டும் என விரும்பியவர்களில் நானும் ஒருவன். நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது நம் உடலில் தொற்றும் ஆனந்தமும் ஈரமும் பரவசமும் போன்றது அவரது எழுத்துக்கள். கொஞ்சமாய் வார்த்தைகள். நூறு சொற்களுக்குள் நான்கைந்து அனுபவங்கள். அவரது பதிவுகளின் கடைசி வாக்கியங்களில் அழகையும் ஆச்சர்யத்தையும் அதீதமான அடக்கத்தையும் விலக்கத்தையும் அவர் ஒளித்து வைத்திருப்பார். அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டிருப்பது இப்போதுதான் எனக்குத் தெரியும். ராஜராஜன் பதிப்பகம் அவரது இரு நூற்களையும் வெளியிட்டிருக்கிறது. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.
Showing posts with label யமுனா ராஜேந்திரன். Show all posts
Showing posts with label யமுனா ராஜேந்திரன். Show all posts
Feb 1, 2018
R.P.ராஜநாயஹம் பற்றி யமுனா ராஜேந்திரன்
ஆர்.பி.ராஜநாயஹம் எழுத்துக்கள் தொகுப்பாக வரவேண்டும் என விரும்பியவர்களில் நானும் ஒருவன். நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது நம் உடலில் தொற்றும் ஆனந்தமும் ஈரமும் பரவசமும் போன்றது அவரது எழுத்துக்கள். கொஞ்சமாய் வார்த்தைகள். நூறு சொற்களுக்குள் நான்கைந்து அனுபவங்கள். அவரது பதிவுகளின் கடைசி வாக்கியங்களில் அழகையும் ஆச்சர்யத்தையும் அதீதமான அடக்கத்தையும் விலக்கத்தையும் அவர் ஒளித்து வைத்திருப்பார். அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டிருப்பது இப்போதுதான் எனக்குத் தெரியும். ராஜராஜன் பதிப்பகம் அவரது இரு நூற்களையும் வெளியிட்டிருக்கிறது. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.
Oct 13, 2012
Some Moments to Cherish
லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன் இரண்டுமுறை ’செல்’ பேசினார்.
முதல் தடவை பேசியபோது’நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்’ பதிவைப்
படித்து விட்டு அதை அங்கே WorldTamilNews.net ல் பிரசுரிக்க விருப்பம்
தெரிவித்தார். சந்தோஷமாய் சம்மதித்தேன்.
’ராஜநாயஹம் எழுத்தாளரின் எழுத்தாளர்’ என்றார்.
இரண்டாம் முறையாக பேசியபோது யமுனா ராஜேந்திரன்
‘இரண்டு தமிழ் ப்ளாக் மட்டுமே நான் சப்ஸ்க்ரைப் செய்து உள்ளேன்.அதிலொன்று ராஜநாயஹம் ப்ளாக்!’
பிரம்மரிஷி பட்டம்.
‘இரண்டு தமிழ் ப்ளாக் மட்டுமே நான் சப்ஸ்க்ரைப் செய்து உள்ளேன்.அதிலொன்று ராஜநாயஹம் ப்ளாக்!’
யமுனாராஜேந்திரன் பேசுகையில் ராஜநாயஹம் எழுதி இன்னும் ஒரு
புத்தகம் கூட வெளி வரவில்லையே என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
புத்தகம் வெர்சட்டைல் பதிவுகளை உள்ளடக்கியதாக ராஜநாயஹத்தின்
பன்முகத்தன்மையை வாசகர்கள் அறியும்படியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
சுபகுணராஜன் இரண்டு முறை ’செல்’பேசினார்.
’என்னத்தை கன்னையா’ பதிவை செப்டம்பர் ’காட்சிப்பிழை’யில் வெளியிட்டார்.
நண்பர் ராஜன் குறை
அவரிடம் ஆச்சரியமாக”ராஜநாயஹத்தை எப்படிப் பிடித்தீர்கள்?!” என்றாராம்.
சுபகுணராஜன் என்னைப்பற்றி “உங்களுக்கெல்லாம் தெரிந்த மனிதர்
ராஜநாயஹம். எனக்கு ஒரு ’முரடன்’ கேபியை த்தான் தெரியும்”
காலம் எவ்வளவு விந்தை,விசித்திரங்களை நடத்திக்காட்டி விடுகிறது!
என் கல்லூரி கால நண்பர்களுக்கு நான் இன்றும் கேபி தான்!
அக்டோபர் ’காட்சிப்பிழை’இதழில் என்னுடைய பதிவுகள் P.D.சம்பந்தம்,
A.கருணாநிதி, அழகிய மிதிலை நகரினிலே ஆகிய பதிவுகள் இப்போது சுபகுணராஜன் பிரசுரம் செய்திருக்கிறார்.
அன்று ஒரிஸ்ஸாவிலிருந்த பரிசல்காரனிடம் பேசினேன்.உடனே லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அமெரிக்காவிலிருந்து பேசினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் உடனே ட்விட்டரில் - கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொன்னா ஒத்துப்பாய்ங்களா அடிக்க வருவாய்ங்களா?!
நான் திருப்பூரில் சந்திக்க விரும்பிய பரிசல்காரன் என்ற கிருஷ்ணகுமார் என்னைப்பார்க்க என் வீட்டுக்கே வந்தார். என்னைப் பற்றி ராஜநாயகன் என்று பதிவு எழுதியுள்ளார்.
http://www.parisalkaaran.com/2012/09/2005.html
டெல்லியிலிருந்து சந்தனார் என்ற வெ.சந்திரமோகன் பேசினார். நான் அறிந்த R.P.ராஜநாயஹம் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
http://chandanaar.blogspot.in/2012/09/blog-post_4.html
சமீபத்தில் பேசிய இன்னொரு வலைப்பிரமுகர் உண்மைத்தமிழன்!
அன்று ஒரிஸ்ஸாவிலிருந்த பரிசல்காரனிடம் பேசினேன்.உடனே லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அமெரிக்காவிலிருந்து பேசினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் உடனே ட்விட்டரில் - கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொன்னா ஒத்துப்பாய்ங்களா அடிக்க வருவாய்ங்களா?!
நான் திருப்பூரில் சந்திக்க விரும்பிய பரிசல்காரன் என்ற கிருஷ்ணகுமார் என்னைப்பார்க்க என் வீட்டுக்கே வந்தார். என்னைப் பற்றி ராஜநாயகன் என்று பதிவு எழுதியுள்ளார்.
http://www.parisalkaaran.com/2012/09/2005.html
டெல்லியிலிருந்து சந்தனார் என்ற வெ.சந்திரமோகன் பேசினார். நான் அறிந்த R.P.ராஜநாயஹம் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
http://chandanaar.blogspot.in/2012/09/blog-post_4.html
சமீபத்தில் பேசிய இன்னொரு வலைப்பிரமுகர் உண்மைத்தமிழன்!
கிருஷ்ணமூர்த்தி எஸ் : ஒரு வலைப்பூ எப்படி இருக்கவேண்டும்
என்பதற்கு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால்,தமிழில் ஒரு பத்து வலைப்பூ தேறுமா?சுருங்கச்சொல்லி,நெத்தியடியாக
எழுத்து என்றால் அது இப்படித்தான் என்று ஒரு உதாரணம் காட்டவேண்டுமா?இலக்கியம்,கவிதை,சினிமா
என்று பலதளங்களிலும் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிற ஒரு பதிவரைக் காட்ட வேண்டுமென்றால்
அது R.P.ராஜநாயஹம் ஒருவர் தான்.
ட்விட்டர் உலகில் சாரல்:
லக்கி கிருஷ்ணா: ‘இந்த எழுத்து வடிவம் ராஜநாயஹத்துக்கு
எப்படி சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.சுகமான சுவாரசியம்
ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது. இவருக்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.மேலும்
தோழர் ராஜநாயஹத்தின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.
கானா பிரபா: என்ன எழுத்துய்யா…. அசுரன் ஐயா நீங்கள்.இன்றைய
காலையை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது மதுரை முத்து பதிவு.
பிரபல ரவுடி: உங்க ப்ளாக்கை 2008ல் இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.எழுத்து
ராட்சசன்ங்க நீங்க!
நான் கேட்காமலே தானாக முன்வந்து என்னுடைய
ப்ளாக்கை வடிவமைத்துக்கொடுத்தவர் Chilled Beers.
Aug 23, 2012
ஜான் ஆப்ரஹாம்
Sep 24, 2008
'பல்த்தசார் 'என்ற
பிரஞ்சு படத்தை தழுவியது தான் 'அக்ரகாரத்தில் கழுதை 'என விமலாதித்த மாமல்லன்
என்னிடம் கூறினார்.
அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு வெங்கட் சாமிநாதன் வசனம்
எழுதியிருந்தார்.
சுந்தர ராம சாமி அதன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க
ஆசைபட்டிருந்தார். ஆனால் நடக்கவில்லை.
எம்பி சீனிவாசன் நடித்தார். சாவித்திரி
நடித்தார். விருது வாங்கிய படம்.அதன் இயக்குனர் ஜான் ஆபிரஹாம்.
ஜான் ஆபிரஹாமை
நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விருது பட இயக்குனர் என அவர் ஏ
வி எம் ஸ்டுடியோவில் பிரபலம். ’அம்மே அறியான்’ பட எடிட்டிங் வேலை என்று
நினைக்கிறேன். எடிட்டிங் காக ஏவிஎம் மிற்கு வருவார்.
நான் அவரை நான்கைந்து முறை
பார்த்த போதும் ஒரே சம்பவம் தான்அல்லது ஒரே மாதிரி சம்பவம்
நடந்தது.
நீட்ஷேயின் “The eternal
recurrence of the same event”
ஆட்டோ வந்து நிற்கும். ஜான்
ஆபிரஹாம் சீட்டில் உட்கார மாட்டார். கால் வைக்கிற இடத்தில் வெளிக்கி இருப்பது போல்
குந்தி இருப்பார். அவர் கூட வருபவர் இறங்க சொல்லி கெஞ்சுவார். ஆபிரஹாம் ரொம்ப
அழுக்காக ஆடை யுடன் எப்போதுமே குளிக்காதவர் என்று பார்த்தவுடன் தெரியும்படி உடலும்
ரொம்பவே அழுக்காக இருப்பார். ஆட்டோவில் சிரித்துகொண்டே குந்திய நிலையில் இறங்க
மறுப்பார். ஆட்டோகாரன் கத்துவான். இவர் இறங்க மாட்டார். எடிட்டிங் ரூமிலிருந்து
இவருடைய எடிட்டரும் வந்து மலையாளத்தில் இறங்கும்படி கெஞ்சுவார் . இவர்
சிரித்துகொண்டே மறுப்பார். வெகு பிரயாசைக்கு பின் இவரை சிலர் ஒன்று சேர்ந்து
வலுக்கட்டாயமாக ஆட்டோ விலிருந்து இறக்குவார்கள்.
அடுத்த முறையும் அதற்கடுத்த
முறையும் அதற்கடுத்த முறையும்
ஆட்டோ வந்து நிற்கும் .நான் காண நேர்வது அதே
காட்சி தான். “Recurrence of the same
event!”
நான் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் '
ராஜநாயஹம் ! அவார்டு வாங்கனும்னு ஆசைப்பட்டா கடைசியில் இப்படி தான். தரைக்கு இறங்கி
வா. நீயும் வித்தியாசமா படம் பண்ணனும்னு நினைக்கிறியா ? பார்த்துக்க.உனக்கும் இது
தான் கதி ' என எல்லோரும் அங்கே ஜான் ஆபிரகாமை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் போது
என்னை பார்த்து உற்சாகமாக சத்தம் போட்டு சொல்வார். வெராண்டாவில் உள்ளவர்கள்
சிரிப்பார்கள் .
'மோகமுள் நாவலை படமாக்கனும். கோபல்ல கிராமத்தை படமாக்கனும்,
தந்திர பூமி சினிமாவாக எடுக்க முடியுமா,புளியமரத்தின் கதை கட்டாயம் நான் தான்
இயக்கி வெளிவரணும், வண்ணநிலவனின் ’கடல்புரத்தில்’நாவலை படமாக்கனும் ' இப்படி கனவு
கண்டு கொண்டிருந்த என்னுள் ஜான் ஆப்ரஹாம் நிலை இடி போல் உரத்து
இறங்கியது.
வேதனையை சொல்லி முடியாது. ஜான் ஆப்ரஹாமின் கால் தூசு பெறாத
சினிமாக்காரன் எல்லாம் இப்படி அவரை ஏளனமாக பார்த்தான்.
ஒரு
சம்பவம்
கொச்சிகோட்டையில் பரிக்ஷா ஞாநியை அறிமுகம் செய்தபோது ஜான்
சிரித்தபடி சொன்ன பதில்
' நான் அஞ்ஞானி! '
...............................................
Where is Abel ? Bible
ஜான் எங்கே ?
ஜான் !
ஸல்ஃப்யுரிக் அமிலத்தால் நிரம்பி வழிகிற
உன் இதயமான
அந்தத் தட்டு தான் எங்கே ?
வெறுமையான
கல்லறை இதனருகே
புகை அங்கிக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
சகோதரத்துவத்தைக்
குலுக்கிப் போட்டுக்கொண்டு விட்ட
உன் நிர்வாண ஜுவாலை
எங்கே எங்கே
- பாலச்சந்திரன்
சுள்ளிக்காடு
மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் சச்சிதானந்தன் மொழிபெயர்த்தை
தமிழில் மொழிபெயர்த்தவர் நாகார்ஜுனன்
மீட்சி 35 1991
.................................................................................................
Sep 27, 2008
நாகார்ஜுனன் said...
ராஜநாயஹம்,சொந்த அனுபவங்கள்
தாண்டி ஜானின் சினிமாவைப் பார்க்க வேண்டிவரும் போது ஆச்சர்யமாக இருக்கும் என்பது
சரிதான்.
உங்கள் அனுபவமும் அப்படித்தானிருக்கிறது..
ஜானின் 21-ஆம் நினைவு நாளை ஒட்டி நான் எழுதிய நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை என்ற மூன்று பதிவுகள் இதோ
http://nagarjunan.blogspot.com/2008/06/1.html
http://nagarjunan.blogspot.com/2008/06/2.html
http://nagarjunan.blogspot.com/2008/06/3.html
September
27, 2008 12:03 AM
Sep 29, 2008
ஞாநி விளக்கம்
வணக்கம்.
நான் ஜான் ஆபிரஹாமை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். சங்கீத நாடக அகாதமியின் நாடக விழா எர்ணாகுளத்தில் நடந்தபோது, கூத்துப்பட்டறையின் நாடகமும் இடம் பெற்றது. அதற்கு வந்திருந்த தமிழக நாடகக்காரர்கள் சிலர் அப்போது அம்மெ அறியன் படத்துக்கு மக்களிடம் நிதி திரட்டும் பணியை தொடங்க இருந்த ஜானை சந்திக்கச் சென்றோம். ஜானும் அவர் குழுவினரும் கையால் எழுதிய சுவரொட்டிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.கொச்சி கோட்டை சுவரில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஜான் பேசி உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். அதை நான் எடுத்த புகைப்படமும், அன்றே படகுத்துறையில் ஜானையும் ஒரு குழந்தையையும் நான் எடுத்த புகைப்படமும் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்ட ஜான் பற்றிய நூலில் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. சுவரொட்டி எழுதும் இடத்தில் ஜானிடம் என்னை ஞாநி என்று அறிமுகம் செய்தபோதுதான், ஜான் சிரித்தபடி தான் அஞ்ஞானி என்று சொன்னார்.பின்னர் அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தோம். பின்னர் எப்போதும் நான் ஜானை எங்கேயும் சந்திக்கவில்லை. ஜான் படங்களில் அ.கவும் அ.அ.வும் எனக்குப் பிடித்த முயற்சிகள். செரியச்சனோட குரூர நிருத்யங்களில் சில காட்சிகள் நன்ராக அமைந்திருக்கும். ஜான் உருவாக்கிய அக்ரஹாரத்தில் கழுதையில் நடித்த இசை மேதை எம்.பி.சீனிவாசன் என் மதிப்புக்குரிய நண்பர். ஜானுடன் ஒடெசா திரைப் பட இயக்கத்தில் பங்கேற்ற பிரகாஷ் மேனனும் என் நண்பரே. பிரகாஷ் மேனன் இன்றும் சென்னையில் மலையாள டி.வி தொடர் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது தொடர்பு இலை. ஜான் பற்றிய ஜெயமோகனின் ஒரு குறிப்பு முற்றிலும் உடன்பட முடியாதபோதும் நம் பரிசீலனைக்குரியது. அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதை வசன நூலை அடிப்படையாகக் கொண்டு பரீக்ஷாவின் மேடை நாடகமாக்கலாம் என்று ஒரு முறை நினைத்தோம். அது கைகூடவில்லை.
.............
யமுனா ராஜேந்திரன்
Friday, 24 August, 2012
முற்றிலும் உடன்படமுடியாதபோது எதற்கு
மறுபரிசீலனை செய்ய வேண்டும்? ஜான் பற்றிய சீனிவாசனின் நூலில் எனது இரு கட்டுரைகள்
உள்ளன. ஓரு கட்டுரை ஜெயமோகனுக்கான எதிர்விணை. பிறிதொன்று அம்மா அறியான் படம்
குறித்தது. ஞானி விரும்பினால் அவரது உத்தேச மறுபரீசீலனையை ஒரு விவாதமாக
முன்னெடுப்பது எனக்கு விருப்பமாக இருக்கிறது.
யமுனா ராஜேந்திரன்
http://rprajanayahem.blogspot.in/2008/10/pd.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_7735.html
http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_12.html
Jun 20, 2008
HERE IS THE RUB!
Criminals are Creative Artists என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் 'நாச்சார் மட விவகாரம்' என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். 'ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைபெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல.' என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது 'ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.' என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை.
பின்னரும் திண்ணையில் நடந்த காரசார விவாதத்தில் காலச்சுவடு கண்ணன் ஜெயமோகனின் அவதூறுகளுக்கு பதிலளித்தபோது 'ஜெயமோகனுக்கும் ராஜநாயஹத்திற்கும் தொடர்பு இருந்தது என்பதால் அவருடைய பல கடிதங்கள் ஜெயமோகனிடம் இருக்கும். எனக்கும் ராஜநாயஹத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஒரு விரிவும் அதில் இருக்காது. ஜெயமோகனால் அதன் ஒளிநகலை திண்ணைக்கும் எனக்கும் அனுப்பமுடியுமா? இது அவருக்கு நான் விடும் சவால், என்று குறிப்பிட்டு 'நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் 'காதைக் பிளக்கும் மெளனம்' நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று என்று வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தார்.
திண்ணையின் போலி ஜனநாயகத்தை சாடியிருந்த கண்ணன் தன் விவாதத்தில், திண்ணை ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கி செய்திருந்த கட்டைப் பஞ்சாயத்து பற்றி பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மூத்த எழுத்தாளரை நாயாக உருவகித்து எழுதப்பட்ட கதை தொடர்பாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் இடையீடாக "நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்" என்று திண்ணை ஆசிரியர் குழு கூறுவது ஒரு அபத்த நாடகத்தில் பேசப்படும் வசனம் போல உள்ளது என்று வேதனையுடன் அப்போதே குறிப்பிட்டிருக்கிறார்.
மேற்கண்ட விஷயங்கள் யாவற்றையும் திண்ணை இணைய இதழில் 'விலங்கும் நாணி கண்புதைக்கும்’ கட்டுரையை பன்முகத்துக்கு அனுப்பிய பின்னர் தான் படித்தறிந்து கொண்டேன். 'விலங்கும் நாணி கண்புதைக்கும்’ பன்முகம் இதழில் வெளியாவதற்கு இரண்டு வாரம் முன்னதாக கனடாவிலிருந்து நடத்தப்படும் இணைய இதழ் பதிவுகள்.காம் ஜனவரி இதழில் லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன் இந்த விஷயம் பற்றி எழுதியிருப்பதாக இலக்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் தெரிவித்திருந்தார்கள் ஜனவரி பன்முகம் இதழ் வெளி வந்தபின் தான் நான் அதை பார்த்தேன். யமுனா ராஜேந்திரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் 'ஜெயமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில் தான் எழுதி வந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சனையில் ராஜநாயஹம் குறித்து நாஞ்சில் நாடன் பெயரில் ஜெயமோ கட்டுரையை எழுதிப் பிரசூரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு. அந்தக் கட்டுரையைத் தான் எழுதவில்லை எனப்பொது மேடையில் நாஞ்சில் நாடன் ஒப்புக் கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம் தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெயமோ தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசூரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. "இதற்கு ஜெயமோகனின் (அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம்) வாய் திறந்து விட்டது. எப்படி? 'அதே கட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சில் நாடனால் அனுப்பப்பட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் (பொருள் மாற்றம் இல்லாமல்) திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன் வைத்த குற்றச்சாட்டு. அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டும் உத்தியாக. அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில் நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறைசர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில் நாடன் ஒதுங்கிக்கொண்டார்."
யப்பா பைரவா! நீ யாரு பெத்தபுள்ளையோ உன் உடம்பு பூராவுமே பொய் தானா? சகிக்கலப்பா 'கத்தை கத்தையா ரூபாய் நோட்டு திருடமாட்டேன் சில்லறைக் காசுத் திருடன்தான் நான்' என்பதைக் கூட என்ன நாசுக்காக ஒப்புக்கொள்ள முடிகிறது உன்னால் 'நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்' என்று திண்ணை ஆசிரியர் குழு கட்டை பஞ்சாயத்து செய்தபோது கூட நீ அதை மறுக்கவில்லை உன்வாயிலே கொழுக்கட்டை. இப்போது சில்லறைத் திருட்டை மறுக்கவுமில்லை என்று அண்டப்புளுகை அள்ளி விடுகிறாயே Here is the Rub
'2002ல் நடந்து முடிந்த போன விஷயத்தை R.P. ராஜநாயஹம் இப்போது கிளற வேண்டுமா' என்று கேட்கிறவர்கள் 2005 ஜனவரியில் ஜெயமோகன் இந்த விஷயம் பற்றி பேசுவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். கனடாவிலிருந்து ஒரு இணைய இதழ் அதில் லண்டனிலிருக்கிற யமுனா ராஜேந்திரன் பிப்ரவரி 2005ல் "நாஞ்சில் நாடன் இதனைச் சில்லறை விவகாரம் எனக் கருதுவாரானால் அவர் கனவான் என்றோ அல்லது வேலைப் பளு அதிகம் உள்ளவரென்றோ ஜெயமோ கருதலாம். பிறர் அப்படிக் கருத அவசியமில்லை. நாஞ்சில் நாடன் பேசாது தவிக்கிறார் என்று கருதலாம். ராஜநாயஹம் இன்னும் பேசவிருக்கிறார் என்றுதான் விஷயமறிந்த வாசகன் கருதுவான். பிரச்சினையில் ராஜநாயஹத்தின் தரப்பு உண்மைகள் சிற்றிதழொன்றில் விரிவான கட்டுரையாக வரவிருப்பதாக அறிகிறேன். ஜெயமோ காத்திருப்பது நல்லது" என்று 'விலங்கும் நாணிக் கண்புதைக்கும்' கட்டுரை 'பன்முகம் இதழில் வெளிவர இருப்பதை முன்னறிவிப்பு செய்வது விஷய கனத்தை புரிந்து கொண்டிருப்பதால் தான்.
தமிழ் இலக்கிய உலகுக்கு நான் ஒரு தலைசிறந்த நகைச்சுவை கட்டுரை ஒன்றை விமர்சனம் என்ற சிங்காதனத்தில் ஏறி நின்று அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நானும் விமர்சகராக எப்போது தான் ஆவது? நாச்சார் மட விவகாரம் கதை வெளியான அதே சொல்புதிது 11வது இதழில் 'என்ன ஆயிற்று இந்த எழுத்தாளர்களுக்கு?' (உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் கொடுக்கச் சொல்லு) என்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. சொல்புதிது 9வது இதழில் 'அருண் மொழி நங்கை எழுபத்தெட்டு கம்பைன்ஸ் ஊழல்' இப்போது நாறியிருக்கிற நிலையில் இந்த 'என்ன ஆச்சு இந்த எழுத்தாளர்களுக்கு' என்ற அருண்மொழி நங்கையின் கட்டுரையைப் படித்துப்பார்க்கும் போது ஒவ்வொரு வரிக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி, விலா எலும்பு பிசகிவிடுமோ என்ற பயமே ஏற்பட்டுவிட்டது எனக்கு. எழுத்தாளர்களே, விமர்சகர்களே வாசகர்களே நீங்களும் பரிட்சித்துப்பாருங்கள். ஒரு எச்சரிக்கை தார்மீக கோபம் அதிகமுள்ளவர்களுக்கு அருவருப்பில் குமட்டிக் கொண்டு வாந்தி வரவும் வாய்ப்புண்டு. Here is the Rub. I FIND A FUNNY SIDE TO EVERY THING SERIOUS நேர்மையும் நல்ல உண்மையும் உள்ளவர்கள் இந்த இலக்கிய அரசியல்வாதிகளின் ஆஷாடபூதித் தனத்தையும், வேஷத்தையும், நிஜகோரமுகங்களையும் பார்க்க நேரும் போது சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த சிரிப்பு சுந்தரராமசாமி 'கோவில் மாடும் உழவுக்காளையும்' கதையில் சொல்வது போல 'அந்த சிரிப்பு அழுகைக்குப் பதிலாக வருமே அந்த சிரிப்பு'
I LAUGH. NOT BECAUSE THERE IS LAUGHTER
IN MY HEART
BUT JUST TO PREVENT
MY TEARS
IF I DONT LAUGH
I MAY START CRYING - NIETSCHE
DISCRIMINATION THY NAME IS NANJIL NADAN!
நாஞ்சில் நாடனின் நடுநிலைமை ஒரு Myth அந்த Myth உடைந்துவிட்டது என்பது தான் உண்மை பரிதாபம் தான்! ஏனென்றால் இவருடைய USP. அதாவது UNIQUE SELLING PROPOSITION என்பதே இவர் நடுநிலையாளர் என்ற Image தான் ஆனால் இவருடைய நடு நிலைமையின் பக்கசார்புகள்! பற்றி ஒரு ஆராய்ச்சி மாணவர் DOCTORATE செய்யலாம். நாஞ்சில் நாடனின் நடுநிலமை பக்கசார்புகள்! "ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை"க்கு எதிர்வினை உடனே எழுதுவார். தன்னுடைய கடிதத்தை ஜெயமோகன் திருத்தினால் அது பற்றி எதிர் வினை செய்யமாட்டார் இது சில்லறை விவகாரம். 'நாச்சார் மட விவகாரம்' கதைக்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து போட்ட போது இவர் போடமாட்டார். ஜெயமோகனுக்கு அதற்காக ஒரு கடிதம் மட்டும் எழுதுவார். ஜெயமோகன் அடாவடியாக தமிழின் முக்கிய படைப்பாளியான எம்.ஜி.சுரேஷ் படைப்புகளை ஒட்டு மொத்தமாக நிராகா¢த்து விமர்சனம் செய்யும் போது ஏன் என்று கேட்கமாட்டார். ஆனால் அதற்கு எம்.ஜி.சுரேஷ் எதிர்வினையாற்றும் போதுமட்டும் "ஜெயமோகன் உன் மேலே நல்ல அபிப்ராயம் (?!) வைத்திருந்தான் அதை நீ கெடுத்துக் கொண்டாய்'' என்று அபிப்ராயம் சொல்வார், நடுநிலைமையின் ஒரு பக்கசார்பு CALIBER இல்லாத எழுத்தாளன் நாஞ்சில் நாடன் என்று நெருடுவது இங்குதான்.
இலக்கியக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி பெயரை கவனமாக உச்சரிக்க மறந்து, ஜெயமோகன் பெயரை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து வேதசகாய குமாரை பெரிய விமர்சகர் என்பதாக அபிப்ராயப்படுகிறார். இதுதான் நடுநிலைமையின் பக்கசார்பு என்பது. இப்படி ஜெயமோகனுக்கு ரகசியமாக ஷேக்ஹேண்ட் கொடுத்து, வாலை பட பட வென்று ஆட்டுவதை இனியும் மறைக்க முடியாது. நாஞ்சில் நாடன் நடுநிலையாளனே அல்ல. ஒரு மோசமான நாலாந்தர அரசியல்வாதி. HE CAN SMILE AND SMILE AND BE A VILLAIN.
காலச்சுவடுக்கு அனுப்பப்பட்ட மூலப்பிரதியிலேயே (தன்படைவெட்டிச்சாதல் வேண்டாம்) என்னைப் பற்றி அவதூறுகள் அதிகம்தான் திண்ணையில் வெளியானதில் கூடுதலாக ஜெயமோகன் கைங்கரியம். "கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவான செய்முறை அபிநயம்” இது காலச்சுவடு கூடுதலாக திண்ணையில் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவுரையும் செய்முறையும்' என்றெல்லாம் எழுதிய கைகள் வினையை விதைத்துவிட்டன. வினையை விதைத்த நாஞ்சில் நாடனும் ஜெயமோகனும் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். காலச்சுவடில் பிரசுரமான விஷயங்களே ஜெயமோகனுக்கான ஆலாபனை, பிர்கா, சங்கதி போட்டு பாடப்பட்டது தான் வினையை விதைத்தவர்களே! வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். கழுதையைப் புணர்ந்த ரவுடியாக நான் நடித்த போது கழுதையாக நடித்தவர் யார்? HERE IS THE RUB!
Subscribe to:
Posts (Atom)

