Share

Showing posts with label சந்திர பாபு. Show all posts
Showing posts with label சந்திர பாபு. Show all posts

Jun 24, 2019

Pethidine Injection




இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் மிகுந்த பரவசத்துடன் “சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.
சந்திரபாபு பெத்தடின் இஞ்சக்ஸன் போதையில் மூழ்கியிருந்தவர்.
கவிஞர் கண்ணதாசனும் பெத்தடின் அடிக்ஸனில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்.
Addiction is a destructivie disease. Simply devastating.
சந்திரபாபு தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் ரயில்வே ஸ்டேசனில் ஏதோ தகராறில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார். He was a trouble maker.
கவனியுங்கள். அவருடைய சொந்த ஊரில். அவருடைய ஃபெர்ணான்டோ சமூகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் அதிகம். அப்படியிருந்தும் தாக்கப்பட்டார். சந்திரபாபு ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்று தெரிந்து தான் அவரை அடித்தார்கள். ’ஏன்டா நீ பெரிய நடிகன்னா என்னா வேண்ணாலும் செய்வியா?’ என்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். Disgrace.
முகமெல்லாம் வீங்கிப்போய். உதட்டில் கூட காயத்தோடு வந்த சந்திரபாபுவை சென்னையில் பார்த்து விட்டுத் தான், மிகவும் அதிர்ந்து போய் கண்ணதாசன் தன் பெத்தடின் போதைப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டார்.




Jun 17, 2019

நகைச்சுவை மகா கலைஞர்கள்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது ஜெயகாந்தனுக்கு மிகுந்த பிரமிப்பு இருந்திருக்கிறது. ’நல்ல தம்பி’ படம் பார்த்து விட்டு ஒரு ரசிகனாக பாராட்டு கடிதம் கூட எழுதியிருந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவரை சந்திக்க வருவதாக அதில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தோழர் ஜீவாவுடன் என்.எஸ்.கேயை சந்தித்தவர் தான் ஜெயகாந்தன். அதனால் தி.நகர் வெங்கட்ராமய்யர் தெருவில் இருந்த நட்சத்திர நடிகரின் இல்லத்துக்கு போயிருந்திருக்கிறார். அவருக்கு மிகவும் அதிர்ச்சி.

“நடிகர்கள், கலைஞர்கள் ஆகிய இந்தப் பிரபலங்கள் பிறருக்குச் சொல்லுகிற நெறிகளுக்கும் உபதேசங்களுக்கும், தாங்கள் அமைத்துக்கொண்டிருக்கிற சொந்த வாழ்க்கைக்கும் இடையே எவ்வளவு பெரிய இழிந்த இருண்ட பாதாளம் போன்ற இடைவெளியையும் அன்று கண்டேன். அங்கே நான் கண்ட காட்சியை என்னவென்று இங்கு விவரிக்கப்போவதில்லை” என்று ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் சொல்கிறார் ஜெயகாந்தன்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த போது “என்.எஸ்.கே இன்று உயிரோடு இருந்தால் அவரல்லவோ முதலமைச்சர்” என்று பூரிப்புடன் பெருமைப்பட்டார்.

சந்திரபாபுவின் திறமைகளைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவருடைய ஸ்டைல், டான்ஸ், பாடல்கள் evergreen.
நகைச்சுவை நடிகர்களில் பாபு ஒரு peculiar phenomenon.

சந்திரபாபு தன்னை என்ன பாடு படுத்தினார் என்பதை கண்ணதாசனின் ‘மனவாசம்’ விரிவாக கூறுகிறது. சந்திரபாபுவை வைத்து ’கவலையில்லாத மனிதன்’ படம் எடுத்ததற்கு உலகத்தில் உள்ள அவ்வளவு கவலைகளையும் தான் அனுபவித்ததாக கவிஞர் எழுதியிருந்தார்.
சந்திரபாபு தான் என் குருநாதர் ந.முத்துசாமிக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை கலைஞர். அவரிடம் இருந்த தனித்துவத்தை மிகவும் முத்துசாமி சிலாகிப்பார்.

நாகேஷின் ஈடு இணையில்லாத சாதனை.
ஸ்ரீவித்யா முதல் முதலாக ராமண்ணாவின் ’மூன்றெழுத்து’ படத்தில் நடிக்க ஸ்டுடியோவிற்குள் நுழைந்த அன்று நாகேஷ் குடித்து விட்டு செய்த கலாட்டாவைப் பார்த்து மிரண்டு ச்சீ என்று அருவருத்து வெறுக்க நேர்ந்ததாக சொல்லியிருக்கிறார்.
1971ல் அவரை பெரிய இயக்குனர்கள் கைவிட்டார்கள்.
ஸ்ரீதர் அவரை ஓஹோ ப்ரொடக்ஸன்ஸ் செல்லப்பாவாக்கியவர். 1971ல் ’அவளுக்கென்று ஓர் மனம்’ நாகேஷிற்கு இடம் கொடுக்கவில்லை.
’பணமா பாசமா’வில் நாகேஷை தூக்கிப்பிடித்த கே.எஸ்.ஜி. 1971ல் ‘மாலதி’ யில் இடம் தரவில்லை.
திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி என்று என்று அழகு பார்த்த ஏ.பி.என் 1971ல் சுருளிராஜனை வைத்து “கண்காட்சி’’ எடுத்தார்.
எம்.ஜி.ஆரே ரொம்ப முன்னரே நாகேஷை ஒதுக்கி வைத்திருந்தார். தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன் படங்களெல்லாம் நாகேஷ் இல்லாமல் தான். 1971ல் குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும். எதிலும் நாகேஷ் கிடையாது.
நாகேஷ் இயக்குனர் பாலச்சந்தரையே என்ன பாடு படுத்தினார். 1972ல் ’கண்ணா நலமா’வில் நாகேஷ் கிடையாது. எம்.ஆர்.ஆர். வாசு தான். ’வெள்ளி விழா’வில் தேங்காய் சீனிவாசனை நடிக்க அழைத்தார்.
நாகேஷின் கால பிரமாணம் எத்தகைய ஆச்சரியகரமானது. அவருடைய மின்னல் வேகம்.
இன்றும் தமிழ் திரையின் நகைச்சுவைக்கு ஒட்டு மொத்த சாதனை என்றால் நாகேஷ், கவுண்டமணி, வடிவேல் மூவரும் தானே.
எப்பவும் காண்ட்டுலேயே இருக்கும் கவுண்டமணி கலக்கல்.
எத்தனை தடவை நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலும் சலிப்பதேயில்லை.
ஒரு ப்ரொடக்ஸன் அஸிஸ்டண்ட் அரண்டு சொன்ன விஷயம். “அய்யோ கவுண்டமணி தண்ணி போட்டுட்டா மிருகம். உயிர எடுத்துடுவான். கை நீட்டிடுவான். அடிச்சிடுவான்”

ஆர்.சுந்தர் ராஜனுக்கும் கவுண்டமணிக்கும் நிகழ்ந்த மோதல்.


வடிவேலு பற்றி இன்றைய காலத்தில் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அளப்பரிய சாதனை. பிரமிக்கத்தக்க நடிப்பு.
அனைவர் வாழ்விலும் ஒன்றி விட்ட கலைஞன்.
எல்லாருக்கும் vocabulary எவ்வளவு supply செய்து விட்டார் வடிவேலு.
எவ்வளவு சாதாரண படத்திலும் அவருடைய விஸ்வரூபம்.
மார்க்கெட் போய் விட்டதாம். தினமும் வடிவேலு தானே சஞ்சாரம்.
கதாநாயகர்கள் உட்பட இன்று வரை வந்துள்ள மிகப்பெரிய நடிகர்கள் அனைவரையும் நடிப்பில் மிஞ்சிய வடிவேலுவின் ஈடு இணையற்ற ஃபார்ம்.
எம்.ஆர்.ராதா ஒருவர் தான் இன்றும் வடிவேலுவுக்கு சவாலான அமரத்துவ கலைஞர்.

வடிவேலு பற்றி தான் எவ்வளவு பரபரப்பு.
நம்பிராஜன் என்ற சின்னாளப்பட்டிக்கார நடிகர், ஜெயமணி ஆகியோருடன் கைகலப்பு.
சிங்கமுத்து ரியல் எஸ்டேட் வில்லங்கம்.
விஜயகாந்த் வீட்டு இழவு ஒன்றில் காரை எடுக்கச்சொல்லி கலவரம். அடி கூட வடிவேலுக்கு விழுந்ததாமே.
வாழ்வு கொடுத்த ராஜ்கிரணிடம் நன்றி காட்டவில்லை.
ஜி.வி. தற்கொலை செய்து கொண்ட போது அவரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை வடிவேலு பாவப்பட்ட ஜி.வி குடும்பத்திற்கு கொடுக்க மறுத்தது.
தயாரிப்பாளர் ஒருவரிடம் விமானத்தில் போய் வர எட்டு மணி நேரம் ஆனதற்கும் ஒரு கால்ஷீட் கணக்காக்கி ரெட்டை இலக்க இலட்சத்தில் வடிவேலு சம்பளம் கேட்ட விவகாரம்.







...

Feb 26, 2013

விந்தைக்கலைஞன் சந்திரபாபு


 









”ஹிண்டு” ரங்கராஜன் ஒரு நாள் இதைச் சொன்னார்.

1960களில் சந்திரபாபு இவரைத் தேடி வந்திருக்கிறார். இருவரும் ‘வாடா போடா ‘ என்கிற அளவுக்கு நெருக்கம். 

“ ஒரு நூறு ரூபாய் கொடு” என்று ரங்கராஜனிடம் கேட்டிருக்கிறார். அந்த காலத்தில் நூறு ரூபாய் மதிப்பு மிகவும் அதிகம். ஹிண்டு ரங்கராஜன் “ போடா! தரமாட்டேன் “ என்றாராம். 

அதே சமயத்தில் அங்கே சந்திர பாபுவின் பின்னால் ஒருவர் கையில் சின்ன சூட்கேஸ் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்திருக்கிறார். சந்திரபாபு மீண்டும் “ டேய் ஒரு நூறு ரூபாய் குடுடா” என்று வற்புறுத்தியிருக்கிறார்.

 ஹிண்டு ரங்கராஜனுக்கு பணம் தர விருப்பமில்லை.” போடா. “ என்றவர் சந்திரபாபுவின் பின்னால் நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்து யாரென்று விசாரித்திருக்கிறார். 

விஜயா வாஹினி ஸ்டுடியோ அதிபர் நாகிரெட்டியின் புரொடக்சன் மானேஜர் அவர். நாகிரெட்டி அப்போது எடுக்கவிருந்த ஒரு பிரமாண்ட தயாரிப்பு ஒன்றில் சந்திரபாபுவை ’புக்’ செய்ய வந்திருக்கிறார். அட்வான்ஸ் தொகை பத்தாயிரம். படத்திற்கான ’முழு சம்பளத்தொகை’ சந்திரபாபுவுக்குத் திருப்தியில்லை. அதை விட பெரிய தொகை சம்பளமாகத் தந்தால் நடிக்கத் தயார். புரொடக்சன் மேனேஜர் சம்பளம் இவ்வளவு தான் என ரெட்டியார் சொன்ன விஷயத்தை சொல்லி அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்திப் பார்த்தும் பாபு மசியவில்லை. ஹிண்டு ரங்கராஜனைத் தேடி பார்த்தசாரதி கார்டனுக்கு பாபு வந்து விட்டார்.

 நாகிரெட்டியின் புரடக்சன் மேனேஜர் “ நீங்க சொல்லுங்க சார். பாருங்க இவர் பிடிவாதத்தை!“ என்று ஹிண்டு ரங்கராஜனிடம் சொல்கிறார். ரங்கராஜனுக்கு கோபம் வந்து விட்டது. சந்திரபாபுவிடம் “ இடியட்! மரியாதையா அந்த பணத்தை வாங்கிக்கடா. பைத்தியக்காரா. எங்கிட்ட வந்து நூறு ரூபாய் கேட்கிறியடா. பத்தாயிரத்தை வாங்கச் சொல்லி அந்த ஆள் கெஞ்சுறான்!” என்று அதட்டியிருக்கிறார். பாபுவின் அமைதியான பதில்: “That is none of your business. நான் கேட்ட நூறு ரூபாயை கொடு.”  
ரங்கராஜனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சரி. நாம் நூறு ரூபாயைத் தர உறுதியாக மறுத்துவிட்டால் சந்திரபாபு எப்படியும் நாகிரெட்டி தரும் பத்தாயிரத்தை வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று முடிவு செய்து “ தர மாட்டன்டா. போடா.” என்று எரிச்சலோடு சொல்லியிருக்கிறார்.
சந்திரபாபு திரும்பி விறு விறு என்று நடந்து வெளியேறிப் போய் விட்டார்.
ஹிண்டு ரங்கராஜனும் நாகிரெட்டியின் மேனேஜரும் ஸ்தம்பித்துப் போய் விட்டார்கள்.


இந்த நிகழ்வைச் சொல்லி விட்டு ஹிண்டு ரங்கராஜன் உடைந்த குரலில் சொன்னார். “ அவன்….. பாபு.. He is a man of principles! ” சந்திரபாபு இறந்து போய் அப்போது ஏழு வருடங்கள் ஆகியிருந்தது. அந்த வார்த்தையை ரங்கராஜன் சொன்னபோது அது வீரியமிக்கதாய் இருந்தது.
இந்த man of principles என்கிற வார்த்தை இப்போது தேய்ந்து போன cliché. பாபு அன்றைக்கு  ரங்கராஜனிடம் கேட்ட நூறு ரூபாய்க்கு கூட இன்று என்ன மதிப்பு?   

.... 

ஏற்கனவே திருமணமாகியிருந்த ‘ஹிண்டு’ ரங்கராஜனின் வாழ்க்கையில் ’செம்மீன்’ ஷீலா. நடிகை ஷீலாவுக்கும் ரங்கராஜனுக்கும் affair ஏற்பட்டு திருமணம் நடந்தது. அந்த திருமணம் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு தான் நடிகர் ரவிச்சந்திரனின் இரண்டாவது மனைவியாக ஷீலா ஆனார். அவரிடமிருந்தும் பிரிந்தார்.
சந்திரபாபுவின் திருமணமும் தோல்வி தான் என்பது தெரிந்தது தான். பாபுவின் அந்த ஒரே மனைவி பெயர் கூட ஷீலா தான்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs8eiw5r67Un5djg8UXRDqamCH1Ntok1ByPq-jv_LdA1KC22_zGBjZ6LZhA3beg8TQ9_PVzAmCy0Qpc6Ig23hdjo2xNs6sAc1MhqM0deXFij1oA6J7BaVp1DH0lYuttjJITYmcImOUCDCB/s1600/13.jpg


…………………………………………………………………..


சந்திர பாபு

பெங்களுர் ராஜா  பாலஸில் ஒரு பாடல் சூட்டிங் .
 சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும். அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்.”
இந்த ரெண்டு நாள் ஷூட்டிங் வீண் தான் . இதெல்லாம் Development Hell. இப்படி பல மாற்றங்கள் நடக்கும் . ஏனென்றால் அந்த பாடல் பின்னர் வீ ஜி பி கோல்டன் பீச்சில் வேறு நடிகர்  நடிகை நடிக்க படமாக்கப்பட்டு திரையில் வந்தது.  நான் உதவி இயக்குனர் .
இந்த பாட்டு ரெகார்டிங் ஆன போது நடந்த விஷயம்  இன்னும் சுவாரசியம் .

பாட்டு ஷூட்டிங் போது டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சொன்ன விஷயம் எல்லோரையும் ஆச்சரிய பட வைத்தது . சுந்தரம் மாஸ்டர் தான் பின்னால் பிரபலமாக போகும் பிரபு தேவாவின் அப்பா .
"சந்திர பாபு வுக்கு நடனம் ஆட தெரியாது . நடனம் பற்றி எந்த அடிப்படை அறிவும் கிடையாது ." --
"சும்மா எல்லாம் பாவ்லா தான் செஞ்சான் . ஆனா ஜனங்க அதை அந்த காலத்தில் டான்ஸ் னு  நம்பினாங்க .  பெரிய டான்சர் சந்திர பாபு ன்னு இன்னைக்கும் எல்லாரும் நினைக்கிறாங்க .  அவன் சும்மா டான்ஸ் ஆடுற மாதிரி பாவ்லா தான் பண்ணான் ".
இதில் அபத்தம் என்ன வென்றால் சுந்தரம் மாஸ்டர் நடிகர் நடிகைகளுக்கு டான்ஸ் ஆட பயிற்சி  தரும்போது அவர்  ஆடுவதை காண சகிக்காது . ஒவ்வொரு வரிக்கும் அவர் முதலில் ஆடிக்காட்டுவார் . கொஞ்சம் கூட டான்சில் GRACE இருக்காது . மூவ்மென்ட் ஆரம்பிக்கும் போது  செயற்கையாக வினோதமாக இருக்கும் .
'இவன் ஆடி பார்க்கவா' . டைரக்டர் அவர்  காதில் விழாதவாறு கமெண்ட் அடிப்பார் . எல்லோரும்  கண்ணை  மூடிகொள்வார்கள்.

சந்திர பாபுக்கு என்ன தான் தெரியும் . தமிழே எழுத படிக்க தெரியாதவர் . ஆனால் AMERICAN ACCENT ல் இங்கிலீஷ் பேசுவார். நடிப்பு பாட்டு டான்ஸ் இசை,இயக்கம் .. ஆல் ரௌண்டர் ..

கேலி கூத்து இப்பவும் ஒரு ஆல் ரௌண்டர் ..டண்டனக்கா ... டண்டனக்கா குரங்கு பயல் எல்லாம் க்கொடி கட்டி 'தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி' - அபத்தம் . வீராச்சாமி !

சந்திர பாபு ஜெயிக்க முடியவில்லை .

சந்திர பாபு ஆடியது டான்ஸ் இல்லைஎன்றால் அது போல ஆடாமல் சுந்தரம் மாஸ்டர்  ஆடுவதா டான்ஸ் ? பிரபு தேவா கூட சந்திர பாபுவை காப்பியடிக்கவில்லையா ? பாபுவை இமிட்டேட் செய்து தானே ஆடினார் .

ஒரு நாள் வீட்டில் டிவி யில் ஒரு சேனல் லில் 'கண்ணே பாப்பா ' ஓடி கொண்டிருந்தது . ஒரு நிமிஷம் பார்த்தேன் .சந்திர பாபு நடிக்கும் போது கேசுவலா ஒரு சின்ன ஹம்மிங் செய்கிறார் .
ஹிந்துஸ்தானி ! ஹிந்துஸ்தானி க்ளாசிகல் !
பண்டிட் ஜஸ்ராஜ் ஜோக் ராக ஆலாபனை ஆரம்பிப்பது போலிருந்தது .

மெஹ்தி ஹசன்  கஜல் பாடல்  “ZINDAGI MERE SAFI PYAARU KIYAA KARUTHEGU..”என்ன ஒரு சௌஜென்யம் . என்ன ஒரு அற்புத குரல் .
மெஹ்தி ஹசனின் இந்த பாடலை கேட்கும்போது  ஏனோ எப்போதும் சந்திரபாபு ஞாபகம் வரும் .
சரியான சூழல் மட்டும் இருந்திருந்தால் பாபு பெரிய கஜல் பாடகர் ஆகி இருப்பார் .

அசோகமித்திரன் என்னிடம் ஒரு முறை சொன்னார் . "சந்திர பாபுவுக்கு ஆன்மீக தேடல் இருந்தது . அதற்கான வழி காட்ட, அவரை நெறிப்படுத்த சரியான குருநாதர் கிடைக்கவில்லை "


...................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html

Dec 11, 2012

Herculean Task



எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கத்தி மேல் நடப்பது போல. கொஞ்சம் கணக்கு தப்பிவிட்டால் பெரும் நஷ்டம் தான்.
எம்.ஜி.ஆர் சனீஸ்வரன் போல. லாபம் அள்ளிக்கொடுத்தாலும் உண்டு.படம் எடுக்கும்போதே பெருங்கஷ்டம் ஆகி ஆயுள் முழுவதும் மீள முடியாத நஷ்டம் ஆகவும் வாய்ப்பு இருந்தது. மரண அடி தான்.
சாதாரணமாகவே படம் எடுத்து கையை சுட்டுக்கொள்வது என்பது ஒரு புறம். வீட்டைக்கட்டிப்பார்,கல்யாணம்பண்ணிப்பார்,படத்தை எடுத்துப்பார் என்று சிரமமான விஷயங்கள் பற்றி சொல்லலாம்.
படம் எடுக்கும்போது ஏற்படும் சிரமங்கள்,தொடர் மாறுதல்கள்,எதிர் பாரா மாற்றங்கள் போன்றவற்றை ஹாலிவுட்டில்  Development Hell என்று சொல்வார்கள்.ஜாம்பவான்களுக்கு கூட இந்த Development Hell சமாச்சாரங்கள் எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய எதிர் கொள்ளவேண்டிய நிலை தான். படம் develop ஆவதே  hell என்கிற நிலை. 
படம் ஓரளவு வளர்ந்த பின் சிக்கல் ஆரம்பித்து விடும்.

அவருடைய அண்ணன் சக்ரபாணியை சமாளிப்பதே கூட பெரும்பாடு என்பார்கள்.எம்.ஜி.ஆர்  நேரடியாக தான் பேச விரும்பாத விஷயங்களையெல்லாம் அண்ணன் மூலம் தயாரிப்பாளர்களிடம் பேசி படாத பாடு படுத்தி விடுவார். அதாவது தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணன் சக்ரபாணியே டப்பிங் பேசி ’உண்டு இல்லை’யென்று ஆக்கி விடுவார். சந்திரபாபுமாடி வீட்டு ஏழை’  படம் எடுத்த போது
சக்கரபாணி நாங்க என்ன சும்பக்கூதிகளா..என்று
கேட்க சந்திரபாபு “ நாங்க என்ன ஊம்பறதுக்கா வந்திருக்கோம் ” என கூப்பாடு போட்டு

நாற்காலியை தூக்கி சக்கரபாணியை தாக்கப் போகிற அளவுக்கு ரசாபாசமாகியிருக்கிறது.
ஐய்யோ பெரியவரை பகைத்து விட்டோமே என்று கவலையில் சந்திரபாபு அளவுக்கு மீறி குடித்து விட்டு படுத்து விட்டார்.ஓரிரண்டு நாள் கழித்து எழுந்து ஒரு முக்கிய விருந்து நிகழ்ச்சிக்கு போனார்.அங்கே எம்.ஜி.ஆர் இவரைப் பார்த்து அழகாக சிரித்து “பாபு சார்!” என்றார். இது தான் எம்.ஜி.ஆர்! His beaming smile!
'எம்.ஜி.ஆர் படம்' எடுப்பது Herculean Task.
ஒரு எம்.ஜி.ஆர் படம் எடுத்து சம்பாதித்தை எல்லாம் அடுத்த எம்.ஜி.ஆர் படத் தயாரிப்பின் போதே இழந்துஉள்ளதும் போச்சு நொல்ல கண்ணாஎன்று தவித்து தக்காளி விற்கும் நிலை கூட பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
சாண்டோ சின்னப்பா தேவர் ‘ தாய்க்குப்பின் தாரம்’ எடுத்து விட்டு  எம்.ஜி.ஆர் சங்காத்தமே வேண்டாம் என்று அடுத்து ரஞ்சனை வைத்து நீலமலைத்திருடன், கன்னட உதயகுமாரை வைத்து செங்கோட்டை சிங்கம்,ஜெமினி கணேசனை வைத்து வாழவைத்த தெய்வம்,ஆனந்தன் நடித்த கொங்கு நாட்டு தங்கம் என்று எடுத்த நிலை.அதன் பின் தாய் சொல்லைத்தட்டாதே துவங்கி காதல் வாகனம் வரை எம்.ஜி.ஆருடன் இணைந்து தொழில்செய்த பின் பிரிந்து, மீண்டும்நல்ல நேரம்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தது வரைதேவர்-எம்.ஜி.ஆர் love and hate relationship’ பற்றி ஒரு பெரிய புராணமே பாடலாம்.
எம்.ஜி.ஆர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வரும்போது தேவர் அந்தப்படத்தில் நடிக்கிற வில்லன் அசோகனைப் பார்த்து
 ஏன்டா ! சோத்தை தான திங்கிற.காசு வாங்கிறீல்ல. எருமை மாடு. லேட்டா வர்றியேன்னு  திட்டுவார்.
விஜயா-வாஹினி அதிபர் நாகிரெட்டி எம்.ஜி.ஆரை வைத்துஎங்கவீட்டுப்பிள்ளைபடம் எடுக்கப்போவதை சொன்னபோது சினிமாவுலகில்எம்.ஜி.ஆரை வைத்தா!” என்று தான் கேட்டிருக்கிறார்கள்.
யு.ஆர்.ஜீவரத்தினம் என்று ஒரு பழம்பெரும் நடிகை. பி.யு.சின்னப்பா நடித்தஜகதல பிரதாபன்’(1944) படத்தில் நடித்த கதாநாயகியரில் ஒருவர். ’வால்மீகி’ (1946)யிலும் நடித்திருக்கிறார்.இவருடைய கணவர் வெங்கிடசாமி செட்டியார். ஜூபிடர் சோமுவிடம் புரடக்சன் மேனேஜராக வேலை பார்த்தவர். இவருக்கு சனிப்பார்வை! எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப்போட்டுசிரிக்கும் சிலைஎன்ற படம் எடுக்க திட்டம் போட்டார்.அவர் அந்த அனுபவத்தைப் பற்றி பிற்காலத்தில் சொல்வாராம்:”எம்.ஜி.ஆரை வைத்துசிரிக்கும் சிலை’என்று ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு பிறர் சிரிக்கும் நிலைக்கு ஆளானேன்.”



கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆர்படம் தாலிபாக்கியம்.

அசோகமித்திரன் சொல்கிறார் : கண்ணாம்பா அவர்களுக்கு தாலி,வீடு,வாசல் எல்லாம் போய் திடீரென்று இறந்து விட்டார்.

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் சொல்வது: மைசூரில் தாலி பாக்கியம் யூனிட் தங்கியிருந்த போது படப்பிடிப்பிற்கு ஸ்ரீரங்கபட்டினம் கிளம்ப ரெடியாகிக்கொண்டிருந்த போது நாகபூஷணம் “ படப்பிடிப்புக்காக கொண்டு வந்திருந்த மூன்று லட்சம் ரூபாய் தொலைந்து போய் விட்டது” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் உடனே எம்.ஜி.சக்கரபாணியின் மைத்துனர் மூலம் மூன்று லட்சம் சென்னையிலிருந்து எடுத்து வரச்செய்து உதவியதுடன் அந்தப் பணத்தை திருப்பித் தரவேண்டாம் என்று சொல்லவும் நாகபூஷணம் தன்னை விட இளையவரான எம்.ஜி.ஆர் காலிலேயே விழுந்திருக்கிறார்.

அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபு நடிப்பதற்கு சம்பளமாக எம்.ஜி.ஆருக்கு அவர் கடனாகத் தரவேண்டியிருந்த சில லட்சங்களை பெருந்தன்மையாக கழித்துக்கொண்டிருக்கிறார்.

மாடி வீட்டு ஏழை படம் எடுப்பதற்கு முன் கண்ணதாசன் ’கவலையில்லாத மனிதன்’ படம் சந்திர பாபுவை கதாநாயகனாக்கி எடுத்த போது பட்ட அவஸ்தை. கண்ண தாசனை படாத பாடு படுத்திய சந்திரபாபு பற்றி ’மனவாசம்’ நூலில் கவிஞர் எழுதியுள்ளார்.

உண்மை வேட்கையில் அசோகமித்திரன் சொல்வது போல ரெண்டாங்கிளாஸ் பையன் கணக்கிலே போடற மாதிரி சரி-தப்புன்னு அவ்வளவு சுலபமாப் பொய் நிஜம் கண்டு பிடிக்கமுடியாதுன்னு மட்டும் தெரியும்.

அசோகன் ‘நேற்று இன்று நாளை’ எடுத்து பட்ட அவதிக்கு எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் கட்சி நடவடிக்கையை மீறியும் காரணங்கள் இருக்க முடியும். 
ஏ.பி.என் ’நவரத்தினம்’எம்.ஜி,ஆர் படம் எடுத்த பின் இறந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மீது முதலீடு செய்யும்போது அவரை வைத்து வாரிக்கொட்டி விடமுடியும் என்ற நம்பிக்கை இருந்த அளவுக்கு சரியான திட்டமிடல் இருந்திருக்கவேண்டும்.பட தயாரிப்பின் விளைவுகளை தாங்கக்கூடிய பொருளாதார பின்புலம் இருந்திருக்கவேண்டும்.
எம்.ஜி.ஆர் 1977ல்முதல்வரான போது  தான் நடித்து நின்று போன ’அண்ணா என் தெய்வம்’ படத்தயாரிப்பாளருக்கு சாவகாசமாக பாக்யராஜின் ’அவசர போலீஸ்’ மூலம் நிவாரணம் காண நடவடிக்கை எடுத்தார். ஆனால் பாக்யராஜ் படம் ரிலீஸ் ஆனபோது எம்.ஜி.ஆரே உயிருடன் இல்லை.1987ல்அவருடைய பத்து வருட ஆட்சியே முடிவுக்கு வந்திருந்தது.1990ல் தான் ‘அவசரபோலீஸ் 100’ ரிலீஸ் ஆனது.
 


http://rprajanayahem.blogspot.in/2012_03_01_archive.html

http://rprajanayahem.blogspot.in/2009/01/blog-post_4796.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_12.html