Share

Mar 14, 2025

Appreciation Star

Appreciation Star

கோயம்புத்தூர் பீளமேடு, காலை.
எல்லா பள்ளிக்குழந்தைகள் போலவே தான் அதி காலை எழுந்து காலை கடன் முடித்து சீருடை அணிந்து, சாப்பிட்டு விட்டு, நேற்று மாலை செய்து முடித்த 
'ஹோம் ஒர்க்' சரி பார்த்து, கிளம்புகிற நேரத்தில் பூக்குட்டி அவசரமாக ரொம்ப சின்ன star எடுத்து ராஜநாயஹம் கையில், மணிக்கட்டுக்கு மேலே விரல்களுக்கு கீழே ஒட்டி விட்டு 
சொன்னாள் "நல்ல தாத்தா. Appreciation star. எடுக்கக்கூடாது. Sixty minutes"

கிச்சனில் பிஸியாயிருந்த ஆச்சியை "நல்ல ஆச்சி..கையை நீட்டு.  Congratulations " 
star ஒட்டி விட்டு 
" தாத்தா, ஆச்சிக்கு rule என்னன்னு சொல்லிடு" 

பூக்குட்டி அப்பா அஷ்வத்துடன் கிளம்பும் போதே ஆச்சியிடம் 
ராஜநாயஹம் தாத்தா குரல்
" எப்ப எடுக்கணும்னு சொல்றேன்"

Mar 7, 2025

Besant Nagar Beach Singer Rajanayahem

What அடி ராக் mummy 
What what thoughtsஸு,
My chestடு shakeகுதடி

.....

இப்ப பெசண்ட் நகர் பீச்சில் பாடும் போது 
கேள்வி "உங்க வயசு என்ன சார்?"

ராஜநாயஹம் பதில் : Ninety Six running.
இப்படி சொல்லும் போது கேட்கிற யாருமே திகைத்து விளம்புவது
'என்ன சொல்றீங்க? நம்பவே முடியல. 
96 வயசா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே.
உங்கள பாத்தா 95 வயசு தான் தெரியுது. ஏன் பொய் சொல்றீங்க. 95 வயசுங்கறத ஏன் மறைக்கிறீங்க. 96 வயசுன்னு மிகையா சொல்றீங்களே.'

இன்றைக்கு 16 வருடங்களுக்கு முன்
2009ம் ஆண்டிலேயே 
வலைத்தளத்தில் ராஜநாயஹம் புகைப்படங்கள் காணக்கிடைத்ததில்லை.
நிறைய யூகங்கள். 

பழைய எழுத்தாளர்,
 ராஜநாயஹத்திடமே சொன்னார். 'வலையுலகில் "பெரியவர் ராஜநாயஹம்" என்று தான் முத்திரை.

அப்போது பின்னூட்டத்தில் கூட கேள்வி
" இந்த தள்ளாத வயதில் உனக்கு இவ்வளவு திமிரா?"

2012ல் தான் மூத்த மகன் கீர்த்தி ஃபேஸ்புக்கில், ப்லாக்கில் ராஜநாயஹம் புகைப்படங்களை பழைய பதிவுகளிலும் கூட upload செய்தான்.

பெசண்ட் நகர் பீச் 
R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1.    03. 03. 2025

கூன் பிறையை போற்றிடுவோம்.
 குர் ஆனை ஓதிடுவோம் 

2.    01. 03. 2026

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

https://www.facebook.com/share/p/15NFSeJZho/

அமெரிக்கன் காலேஜில் படிக்கும் போது 
ராஜநாயஹம் கலக்கல்.

மரத்தடியிலும்,
 காஸ்மோ பாலிட்டன் க்ளப்  பஸ்ஸிலும்

"அடி What அடி ராக்mummy What what thoughtsஸு.
My chest Shakeக்குதடி, சிறு Eyeஆடி Noseகுத்தி,
மாணிக்க red, மச்சானை pullலுதடி.
Five,six rupeesஸுக்கு மணிgarland
Your neckக்குக்கு suitableலடி
அடி our city மீனாட்சி seeத்தாலும்
அவ Eyesக்கு sorrowவடி
அடி without fail I youவை jail எடுப்பேன்.
Single double ஆக இருக்கட்டுமே
அட Aunti, அவ பெத்த U-foam மெத்தை
அட ராக்mummy Marriage வைபோகமே!
Decorative மெஜுராவில்  White mummy story, daily daily Walkக்குதடி.”https://www.facebook.com/100006104256328/posts/4075347439345358/?app=fbl

Mar 4, 2025

ரோஷம்

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.

அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார். ஆறு மாதமாக தரவேயில்லை.

அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.

நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.

ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். 
முகம் விளங்கவில்லை. 
புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. 

“நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்” டயலாக் சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு
 நன்றி சொல்லாமலே 
திரும்பிச் சென்று விட்டார்.

Beach songs

03.03. 2025
Besant Nagar Beach 
Morning

1. ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் 

2. Koraa Kaagaz Thaa Ye Man Meraa
Likh Liyaa Naam Is Pe Teraa

3. Khilte hain gul yahan khil ke bikharne ko

Milte hain dil yahan milke bichhadne ko

https://www.facebook.com/share/p/14vAkbvBgC/

https://www.facebook.com/share/p/141h4ewfkb/

Mar 3, 2025

தீரா வன்மம்



அவர் கவிஞர்.  கலைஞரின் பெரும் பக்தர். அவரைப் பார்க்க போயிருந்த போது,
எம்ஜிஆர் பற்றி எரிச்சலோடு " நீங்க
 ஒரு தேவடியாப்பயல பத்தி எழுதுறீங்களே. அவன் இங்க தான் இருந்தான்" 
Tiger footed rage.The dragon and his wrath.

இன்னொருவர் 
சிவாஜியின் அத்தியந்த பக்தர்.
அவரோடு பேசும் போது எம்ஜிஆர் பெயரையே உச்சரிப்பதில்லை என தெரிய வந்தது. " அவன் பேரயே நான் சொல்ல மாட்டேன் " 

 Tongue  tells the anger of heart

- Shakespeare

96 வயசா? பாத்தா 95 தான் தெரியிது


இப்ப பெசண்ட் நகர் பீச்சில் பாடும் போது 
கேள்வி "உங்க வயசு என்ன சார்?"

ராஜநாயஹம் பதில் : Ninety Six running.
இப்படி சொல்லும் போது கேட்கிற யாருமே திகைத்து விளம்புவது
'என்ன சொல்றீங்க? நம்பவே முடியல. 
96 வயசா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே.
உங்கள பாத்தா 95 வயசு தான் தெரியுது. ஏன் பொய் சொல்றீங்க. 95 வயசுங்கறத ஏன் மறைக்கிறீங்க. 96 வயசுன்னு மிகையா சொல்றீங்களே.'


இன்றைக்கு 16 வருடங்களுக்கு முன்
2009ம் ஆண்டிலேயே 
வலைத்தளத்தில் ராஜநாயஹம் புகைப்படங்கள் காணக்கிடைத்ததில்லை.
நிறைய யூகங்கள். 

பழைய எழுத்தாளர்,
 ராஜநாயஹத்திடமே சொன்னார். 'வலையுலகில் "பெரியவர் ராஜநாயஹம்" என்று தான் முத்திரை.

அப்போது பின்னூட்டத்தில் கூட கேள்வி
" இந்த தள்ளாத வயதில் உனக்கு இவ்வளவு திமிரா?"

2012ல் தான் மூத்த மகன் கீர்த்தி ஃபேஸ்புக்கில், ப்லாக்கில் ராஜநாயஹம் புகைப்படங்களை பழைய பதிவுகளிலும் கூட upload செய்தான்.

பெசண்ட் நகர் பீச் 
R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1.    03. 03. 2025

கூன் பிறையை போற்றிடுவோம்.
 குர் ஆனை ஓதிடுவோம் 



2.    01. 03. 2026

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

https://www.facebook.com/share/p/15NFSeJZho/