Share

May 19, 2024

Singitham Technique



கமல்ஹாசனை ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா ஆகிய படங்களில் இயக்கியவர் சிங்கிதம் சீனிவாச ராவ்.

Kamal Hassan is a workaholic and 'Know it all' Boss.
One can never avoid getting mental stress with a difficult Boss.

கமல்ஹாசனிடம் சிக்கி மூச்சு திணறிய அனுபவசாலி,
 சிங்கிதத்திடம் கேட்டாராம்.
" கமல் எதையுமே ஒத்துக்கவே மாட்டாரே. அவரோட வேல பாக்றதே ரொம்ப சிரமமாச்சே. எப்படி சமாளிச்சீங்க?" 

சிங்கிதம் பதில் " படத்தில் எந்த விஷயமென்றாலும் நான் செயல் படுத்த விரும்புவதை கமலிடம் அப்படியே சொல்லவே மாட்டேன். மாறாக எதிர் மறையாக மாற்றி சொல்வேன். உடனே அவர் மறுத்து, நான் எப்படி உண்மையில் செயல்படுத்த மனதில் விரும்பியிருந்தேனோ 
அதையே அவருடைய கருத்தாக சொல்லி விடுவார். இப்படியே தான் ஐந்து படங்களிலும் சமாளித்து இயக்குநர் பணியை நிறைவேற்றினேன் "

May 17, 2024

Who is that Rajanayahem?

எஸ்.எம். சுந்தரம் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் உதவி இயக்குநர். 
'நான் ஆணையிட்டால்' எம்ஜிஆர் படத்துக்கும்.
இரண்டிலுமே எடிட்டிங் அசிஸ்டெண்ட் கூட.

மதுரை அழகரடிக்காரர். இல்லத்து பிள்ளை சமூகம்.
 
'இதயக்கனி' க்கு எஸ். எம். சுந்தரம் தான் எடிட்டர். திரையுலகில் இவருக்கு அடையாளம்'எம்ஜிஆர் எடிட்டர்'.

ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்கள் சொந்தத்தில் சுந்தரம் திருமணம். மாமனாரின் தங்கை புஷ்பகாந்தி கணவர் ராமகிருஷ்ணனின் அக்கா கன்னியம்மா மகள் இவருக்கு மனைவி.

அவரைப் பார்த்ததே கிடையாது. என்றாலும் ரொம்ப தூரத்து சொந்தக்காரர் எம்ஜிஆர் எடிட்டர்.

ராசுக்குட்டி ஷுட்டிங் போது இந்த தகவலை பேசியதுண்டு.

ராசுக்குட்டி ரோட்டில் நடந்த ஷூட்டிங் போது 
 சலசலப்பு. காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட் ஃபீல்ட் க்ளீயர் செய்து கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த தள்ளி விட்டிருக்கிறான்.

 'நான் யார் தெரியுமா?'
'எப்படி நீ என்னை தள்ளி விடலாம்'  
காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட் மிரண்டு பயந்து விட்டான்.

அவரை சிலர் சமாதானம் செய்தார்கள்.
சம்பவத்தை, கோபப்பட்டுக் கொண்டிருந்தவரை பார்த்தேன். இருந்த வேலையில் இது கவனம் பெறவில்லை.

மற்றொரு பக்கம் சீனியர் அசிஸ்டெண்ட் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்து முட்டாள்தனமாக கத்திக்கொண்டிருந்தான். 
 " சோத்த திங்றீங்களா பீயத்திங்றீங்களா?" 

ஷுட்டிங் முடிந்து தங்கியிருந்த கோபிச்செட்டிப்பாளையம் எமரால்ட் ஹவுஸ் போன பின் ஊர்ப்பெரியவர் வந்து அந்த பந்தாக்கார
 சீனியர் அசிஸ்டெண்ட்டை எச்சரிக்கை செய்தார்."இப்படியெல்லாம் கூப்பாடு போட்டால் கலவரமாகி விடும். வார்த்தய விடக்கூடாது"

இயக்குநர் எமரால்ட் ஹவுஸில் எடிட்டிங் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.

பாக்யராஜ் சொல்லித் தான் எடிட்டிங் கவனிக்க வந்தாரா? அவரே இயக்குநர் பார்க்க வந்தாரோ? தெரியவில்லை. 
எம்ஜிஆரிடம் இருந்தவர்கள் பலரும் பாக்யராஜை நாடி வருவதுண்டு.

எம்ஜிஆர் எடிட்டர் எஸ் எம் சுந்தரம் 
கோபி எமரால்ட் ஹவுஸ் எடிட்டிங் அறையில். அவரிடம் " இங்கே ராஜநாயஹம் ஒங்க சொந்தக்காரர்னு சொல்றார்" 
எஸ்.எம். சுந்தரம் பதில் " Who is that Rajanayahem? யாருன்னு தெரியல"

நேரில் பார்த்திருந்தால் எப்படி சொந்தம்னு தெரிந்து கொண்டிருந்திப்பார். கோபியில் சந்திக்க முடியவில்லை.

எஸ்.எம். சுந்தரம் தான் காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட்டிடம் சண்டை போட்டவர் என்பது அப்புறமா தெரிந்தது. 
முந்தைய தினம் அவர் தான் என தெரிந்திருந்தால் பேச வாய்த்திருக்கும்.

அழகரடியில் சுந்தரத்தின் அப்பா சின்ன ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தார். எம்ஜிஆருடன் எஸ்.எம். சுந்தரம் இருக்கும் புகைப்படங்கள் ஓட்டலில் பார்த்ததுண்டு.

ராஜநாயஹத்தின் மாமனாரின் மம்சாபுரம் தீப்பெட்டி ஆபிஸில் 
எஸ்.எம். சுந்தரத்தின் மாமனார் முதிய வயதில் வேலை பார்த்தார். (1983- 1986) அவருக்கு பல சமயங்களில் சாப்பிட உதவி செய்திருக்கிறேன்.

1992 (மே - அக்டோபர்) ராசுக்குட்டி அனுபவம்.
எஸ்.எம். சுந்தரம் : Who is that Rajanayahem?

1995 - 1999 ஸ்ரீவில்லிபுத்தூரில் சுந்தரத்தின் மாமியார் கன்னியம்மா தள்ளாத வயதில் கூனிக்கொண்டு ராஜநாயஹம் வீட்டிற்கு வந்து கும்பிடுவார். எப்போதும் சாப்பிட்டு விட்டு  கடைக்குட்டி வாலிப மகன் கணேசனுக்கும்
( Special Child )வாங்கிக்கொண்டு போவார். நெறய்ய உதவியதுண்டு.

1992 - 2024

ஏழு தடவை போனில் பாக்யராஜ் உற்சாகமாக பேசி வற்புறுத்தி அழைத்தார்.
"ஒங்கள பாக்கனும். வாங்க"

சினிமாத்தனமேயில்லாத 
தன் முனைப்பில்லாத வெள்ளந்தித்தனம் அபூர்வ ஆச்சரியம்.

தழல் வீரம், காரணச்செறிவு, கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர நான்கு ராஜநாயஹம் நூல்களை ஆர்வமுடன் வாசித்து அன்போடு அழைக்கிறார்.

பாக்யராஜ் "நான் கார் அனுப்றேன்."  

" அதெல்லாம் தேவையில்லை. வேண்டவே வேண்டாம் சார். 
லாப நஷ்ட கணக்கு பாக்றதேயில்ல.
 'கேப்' புக் பண்ணி 
உங்க வீட்டுக்கு வர முடியும்."

Bhagyaraj is not one among the many passing clouds. 
 உணரும்படியாகியிருக்கிறது.

பிரமை, பிரமிப்பு, எதிர்பார்ப்பு எதுவுமே கிடையாது. 
சிறந்த, விசேஷமான அற்புத அனுபவம்.



15. 05. 2024. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா வீட்டில் பழைய சுவாரசிய நிகழ்வு நிழலாடியது.

1992 டிசம்பர் 13. 

நுழைவு. ஹாலில் அமர்கிறேன்.

கொஞ்ச நேரம் முன்னால் பாக்யராஜைப் பார்க்க நாகேஷ் வந்திருக்கிறார். வாசலில் நின்ற வட நாட்டு செக்யூரிட்டி உள்ளே விட மறுத்திருக்கிறார். 
நாகேஷின் இரண்டாவது மகனுக்கோ மூன்றாவது மகனுக்கோ கல்யாணம். பத்திரிக்கை கொடுப்பதற்காக. 
மேலேயிருந்து வேலைக்கார அம்மா
 " டேய், அவர் நாகேஷ் சார்டா. உள்ள அனுப்புடா. பாவிப்பய. நாகேஷ் சார உள்ள விட மாட்டேன்றானே"

இப்ப 32 வருடம் போல ஆகிவிட்டது.
இதை பாக்யராஜ் சாரிடம் நினைவு படுத்தினேன்.

https://www.facebook.com/share/p/QqXk8YStjxDNU7LV/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/xBNmQkZhZB5hcogd/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/TF9yHzzbyEsVqLqi/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/tZZvW4DShtsKawTg/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/PzENKdnr9gE42FBp/?mibextid=oFDknk

May 15, 2024

May 14, 2024

ராஜேஷ் கணிப்பில்

நடிகர் ராஜேஷ் பேச்சில் தெறிக்கும் சுவாரசியம்.

"தஞ்சாவூர் பகுதியில நெறய்ய பேர் சிவாஜி கணேசன் சாயல்ல பாக்கலாம். பத்து பேருக்கு ஒர்த்தன் சிவாஜி சாயல்.

சிவாஜி, கள்ளபார்ட் நடராஜன்
 இருவரும் ஒரே சாயல்.

சிவாஜி, முத்துராமன், ராஜேஷ் சாயல் ஒற்றுமை."

சிவகுமார் sing song வாய்ஸ்" மூனு பேரும் தஞ்சாவூர் கள்ளங்க" 


 சிவகுமாரிடம் ராஜேஷ் கேட்ட சமாச்சாரம் " சிவாஜி கணேசன், முத்துராமன், ராஜேஷ் மூவருக்கும் சம்பந்தம் என்ன" 
சிவகுமார் பதில் அவங்க ஜாதி பற்றி 
"மூனு பேரும் தஞ்சாவூர் கள்ளனுங்க"

ராஜேஷ் இதை சொல்லும் போது சிவகுமார் குரலை அப்படியே இமிடேட் செய்தே சொன்னார்.

ராஜேஷ் இப்படி சொன்னப்ப
விஜயகுமார் ஞாபகம். 
'பொண்ணுக்கு தங்க மனசு' பாத்தப்ப கள்ளபார்ட் நடராஜன் சாயல் தெரிஞ்சிச்சு.
விஜயகுமாருக்கு சொந்த குரல் இல்லாமல் அதில் டப்பிங் வாய்ஸ்.
இயக்குநர் மகேந்திரன் முகத்தில் கள்ளபார்ட் நடராஜன் சாயல் உண்டு.

ராஜேஷ் " நடிகர்கள்ள ரெண்டே பேர் தான் தமிழ் நாட்ட தலயில தூக்கி சொமக்காதவங்க. ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்" 
நிச்சயமாக சரி தான்.

 ராஜேஷ் கணிப்பில் "ஜெமினி கணேசன், பத்மினி அண்ணந்தங்கச்சி மாதிரி தெரியும். பக்கவாட்டாக பார்த்தால் ரெண்டு பேர் மூக்கும் அச்சு அசல் 
ஒரே மாதிரி"


May 12, 2024

'நயத்தக்க'

'நயத்தக்க'

சட்ட பத்தி சொன்ன இளையராஜா
எஸ்.பி.பி சட்டய நெனச்சி சட்னு சிரிக்கிறப்ப 
'அதுக்கு எதுக்கு சிரிப்பு? எதுக்டா சிரிப்பு?எனக்கும் டெய்லர் இருக்கான்'னு செல்லக்கோபமா தவிக்கிற பாலு..
அப்பல்லாம் அவங்க கிட்ட இருந்த கலகலப்ப, கொப்பளிக்கும் குதூகலத்த                                                   keen observer ஆ
 நேர்ல ரசிச்சதுண்டு.

https://www.facebook.com/share/v/AXZkBG7T9xStT25j/?mibextid=jmPrMh

Rembrandt - Philosopher Reading


Rembrandt painting

Philosopher Reading 

புத்ர

புத்ர பாக்யம் 

"நான் ரெண்டு யானக்குட்டிய பெத்துப்போட்ருக்கேன். நீ ரெண்டு குரங்கு குட்டிய பெத்துப் போட்ருக்க"

நடிகர் சொன்னாராம் டான்ஸ் மாஸ்டர் கிட்ட


May 10, 2024

Phoenix Mall

10.05.2024
3.30 pm 
Phoenix Mall, Velachery


https://www.facebook.com/share/p/E3dwS6cyGV3ZpQvD/?mibextid=oFDknk

May 9, 2024

அ.மார்க்ஸ் எலியட்ஸ் பீச்சில்



அ.மார்க்ஸ். 
நடந்து கொண்டிருந்த வேளை 
 எலியட்ஸ் பீச்சில் எதிரே வந்த மார்க்ஸ்.

No Reticence


ஒன்னுக்கு ரெண்டுக்கு முடுக்கிக்கிட்டு வருதே.ரொம்ப நெருக்குது. Reticence கிடையாது. 
ஒடனெ இப்போ டாய்லெட் போணும்

May 7, 2024

நல்ல தூக்கத்தில இருக்றப்ப எழுப்பி விட்டுட்டீங்க...

ஐந்து மாதங்களில் எவ்வளவெல்லாம் எழுதக் கிடைத்திருக்கிறது.
 ராசுக்குட்டி (1992)

ஜெமினி கணேசனுடன் இருந்த
ஐந்து மணி நேரத்தில் கூட எழுத நெறய்ய கிடைத்ததுண்டு. (1994)

ஷூட்டிங் போது கோபிச்செட்டிப்பாளையம், மேட்டூர் இரண்டு ஊர்களிலும் லாட்ஜ்களில் தங்கும்படி இருந்திருக்கிறது.
கோபிச்செட்டிப்பாளையத்தில் எமரால்ட் ஹவுஸ், எஸ்.கே. லாட்ஜ் இரண்டிலுமே.
எஸ்.கே. லாட்ஜில் இருந்த போது 
அதி காலை ஐந்தரை மணி - காலைக்கடன் அவசரமாக முடித்து, குளித்து தலை துவட்டிக்கொண்டிருக்கும் போது அறைக்கதவு தட்டப்படுகிறது. 

ராஜநாயஹத்துடன் இன்னொரு உதவி இயக்குநர். அடுத்ததாக ரெஸ்ட் ரூமில் தயாராகிக்கொண்டிருந்தான்.

நள்ளிரவில் ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு விசித்திரமாக " எனக்கு மூளை ஜில்லுனு ஆயிடுச்சுங்க. இங்க நம்ம ரெண்டு பேரும் முன்னால எப்பயோ சந்திச்சிருக்கோங்க. எனக்கு உறுதியா நல்லா தெரியுதுங்க. எனக்கு திடீர்னு மூளை ஜில்லுனு இருக்குங்க. எப்பன்னு தெரியலங்க. ஆனா உறுதியா இதே எடத்துல நம்ம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோங்க"

'என்னடா இது Teja Vu. படுத்து தூங்கு.'

" போன பிறவியில இதே எடத்துல நிச்சயமா Meet பண்ணியிருக்கோம். மூளை ஜில்லுனு இருக்குதுங்க "

" படுத்துக்க படுத்துக்க தூங்கணும்"

இவன் தான் ' வீட்ல இருந்து செலவுக்கு பணம் அனுப்றோம்னு சொன்னாங்கங்க. நான் வேண்டாம். நானே Spend பண்ணி Loss பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன் " னு அடிக்கடி சொல்வான்.

Spend பண்ணா Loss வரத்தானே செய்யும்.

நான் லாட்ஜூக்கு எதிரே இருந்த எஸ்.டி.டி. பூத்துக்கு கிளம்பி படிகளில் இறங்குகிறேன்.

மேஜர் சுந்தர்ராஜன் ரிஸப்ஸனில். புன்னகையுடன் முகாலோபனம். தலையை ஆட்டுகிறார். ஏதோ படத்துக்காக வந்திருக்கிறார். கோபிச்செட்டிப்பாளையம் மற்றொரு கோடம்பாக்கம் தான்.

எதிரே உள்ள எஸ்.டி.டி பூத்தை நெருங்கும் போது 'நிழல்கள்' ரவி.
அவர் நடிக்கிற படத்தின் தயாரிப்பு நிர்வாகி
யிடம் நிழல்கள் ரவி " என்னண்ணே, நல்லா தூங்கிட்டு இருக்கும் போது 'உங்களுக்கு ஃபோன்' னு எழுப்பி விட்டுட்டீங்க. 'கால்' எனக்கில்லண்ணே. என்னண்ணே. போங்கண்ணே"

கோபப்படாமல் மென்மையாக சலித்துக் கொண்டார்.

சென்னையில் இருந்து ரவிக்கு ஃபோன் என்றதும் இவரையும் எனக்கு முன்னே பூத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார்கள்.

ராசுக்குட்டி தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த ரவி அந்த சமயம் சென்னையில் 
காஸ்ட்யூம் சி.கே. கண்ணன் வீட்டில் வாடகைக்கு இருந்தார்.

 ராசுக்குட்டி ப்ரொடக்ஸன் மேனேஜர் ரவிக்கு லாட்ஜ் எதிரே உள்ள எஸ்.டி.டி பூத்திற்கு சென்னையில் பஞ்சு அருணாசலம் சினிமா கம்பெனியில் இருந்தோ அல்லது பாக்யா ஆபிஸில் இருந்தோ ஃபோன். அவரை பூத்திற்கு அழைத்து வரச்சொல்லி ஃபோன். 
ரவி சென்னைக்கு ஃபோன் போட்டு விவரம் கேட்டுக் கொள்ளலாம். ஏதோ முக்கிய அவசரம். ஆனால் ரவியை இருள் பிரிகிற நேரத்தில் லாட்ஜில் எந்த ரூம். தேட முடியவில்லை. 
"நீங்கள் வந்து பேசுங்கள். நம்பர் குறித்து வைத்திருக்கிறோம்."
ராஜநாயஹம் கூட ராசுக்குட்டி யூனிட். அதனால் எழுப்பி விட்டார்கள். 
நடுநிசி தாண்டி ஷூட்டிங் முடிந்த பின்னர் இரவு சாப்பிட்டு பிறகு படுக்கை.

எஸ்.டி. டி பூத் ட்ரங்க் கால் சமாச்சாரம் எப்போதும் அண்டாக்கா கசம் ஆபூக்கா கசம் தான்.

பூத்தில் காத்திருக்கும் போது தங்கியிருந்த அறையில் இருந்த அந்த மற்றொரு உதவி இயக்குநர் "என்னங்க, டாக்ஸி உங்களுக்காக வெயிட்டிங்குங்க. உடனே வாங்க. கிளம்புங்க."

.....

Dancer's curve

1. Infatuation with dancer's curve

Edgar Degas painting 


2, 3.  A coconut tree in Adyar with dancer's curve

May 6, 2024

R.P. ராஜநாயஹம் தழல் வீரம் காரணச்செறிவு வாகை சந்திரசேகர்

R.P. ராஜநாயஹம் 

இயல் இசை நாடக மன்றம் 
தலைவர் வாகை சந்திரசேகர் 


தழல் வீரம்

காரணச்செறிவு 

06. 05. 2024 

நல்ல பகல் 1 மணி


மேட்டூர் டாக்டர்



ராசுக்குட்டி ஷுட்டிங் நடந்துகொண்டிருந்த சமயங்களில் 

மேட்டூர் வி.எம். லாட்ஜ்.
 
ஐந்து மாதங்கள் ராசுக்குட்டி அனுபவம்.

நாளில் மூன்று வேளையும் அசைவம் சாப்பிட வேண்டியிருக்கும்.
ஷூட்டிங் முடிந்து இரவு டின்னர் உதவி இயக்குநராக ஸ்பெஷலாம். மட்டன், மட்டனில் மூளை, தலைக்கறி, சிக்கன், மீன், முட்டை எல்லாம் நிர்ப்பந்தமாக உணவோடு. 

வயிறு சரியில்லை. எதிரே கிருஷ்ணா லாட்ஜை ஒட்டி டாக்டர் க்ளினிக். 
இன்ஸ்டரக்ஸன். இஞ்செக்ஸன். ப்ரிஸ்க்ரிப்ஸன்.
" ராஜநாயஹம் நான் ஒங்க டைரக்டருக்கு ஃப்ரண்டு ராஜநாயஹம். ஃபீஸ் வாங்க மாட்டேன் ராஜநாயஹம். மன்னிச்சிக்கங்க'"

" தயவு செஞ்சி ஃபீஸ் வாங்கிக்கங்க 
டாக்டர்"
"மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம், 
பாக்யராஜோட ஃப்ரண்டு நான். ஃபீஸ் வாங்க மாட்டேன்"

டாக்டர் பேச்சில் 'Sing Song'
மறக்கவே முடியாத விசித்திர வினோத ராகம்.
இப்போது கூட அப்படியே mimicry செய்து காட்ட முடியும். எழுத்தில் அந்த effect கொண்டு வர முடியாதே.

பணம் வாங்கிக்கொள்ள பிடிவாதமாக வலியுறுத்தி வற்புறுத்தியதற்கும் அதே Sing Song. " நான் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் என்னோட ஃப்ரண்டு ராஜநாயஹம். முடியவே முடியாது ராஜநாயஹம். ஃபீஸ் வாங்க மாட்டேன். நான் பாக்யராஜுக்கு ஃப்ரண்டு"
இரண்டாவது தடவையாக போன போதும் இதே இதே. ஃபுட் பாய்சன். இட்லி, மோர் சாதம். அசைவம் வேண்டாம்.

இப்படி ஃபீஸ் வாங்காமல் மறுக்கிற டாக்டரை அதற்கு முன்னரும் பின்னர் இன்று வரை பார்த்ததேயில்லை.

ஃபரூக் டாக்டரை பார்க்க வருவார்.  சலுகையை எப்போதும் குஷியாக ஏற்றுக்கொள்வார்.

மூன்றாவது முறை. Trika மாத்திரை மூன்று நாளாக இரவு பயன் படுத்துவதை சொன்னேன். Trika சிபாரிசு ஃபரூக் தான்.
டாக்டர் பதறிப் போனார். "ஃபரூக்குக்கு ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்ஸ், காம்ளிகேஷன்ஸ்.  அவர் சாப்பிடுகிற மாத்திரையை நீங்க எடுத்துக்கொள்ளக்கூடாது. நிறுத்தி விடுங்கள். நீங்கள் ஹெல்த்தியா இருக்கீங்க. ஃபுட் பாய்சன் தான் சிரமப்படுத்துது."
" ஃபீஸ் வேண்டாம் ராஜநாயஹம். நான் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் சாருக்கு ஃப்ரண்டு ராஜநாயஹம்"

மூன்று தடவை ட்ரீட்மெண்ட்டுக்கான ஃபீஸ் பெரிய தொகையாக அவர் மேஜை மீது வைத்து விட்டு விறு விறு நடையில் க்ளினிக் நீங்கினேன்.

லாட்ஜ் அறைக்கு க்ளினிக் மூடிய பின் கம்பௌண்டர் தேடி வந்து விட்டார்."டாக்டர் நீங்க கொடுத்த பணத்தை உங்களிடமே கொடுக்கச் சொன்னார். டாக்டர் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் ஃப்ரண்டு"

ஃபரூக் இரண்டு வருடங்களில் இறந்து விட்டார். செய்தியை அவருடைய க்ளாஸ் மேட் சண்முகசுந்தரம் போனில் சொன்ன போது மேட்டூர் டாக்டர் ஞாபகம் வந்தது. 

அப்போது டைரக்டர் பாக்யராஜிடம் ராஜநாயஹம் இல்லை. சினிமாவிலேயே இல்லை.

டாக்டர் பெயர் இப்போது ஞாபகம் இல்லை.

சவ்வாஸ் ஃபரூக் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் ரெண்டு வருஷம் சீனியர்.
ராஜநாயஹத்திற்கு நவீன தமிழ் இலக்கியத்தை விரிவாக அறிமுகப்படுத்தியவர். 
ஃபரூக் ராசுக்குட்டி க்ளைமாக்ஸில் இன்ஸ்பெக்டராக நடித்தவர். தொழில் அதிபர்.

சண்முகசுந்தரம் சமீபத்தில் ராஜினாமா செய்த முன்னாள் அட்வகேட் ஜெனரல். முன்னாள் ராஜ்யசபா எம்.பி. 
ராஜநாயஹத்திற்கு கஸின்.

..‌...

புகைப்படம்

கையை கட்டியவாறு ராஜநாயஹம் 

 ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டெண்ட் டைரக்டர்.


May 4, 2024

முத்தமிழ் பேரவையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில்

2016

அது ஞாயிற்றுக்கிழமை 
அடையார் முத்தமிழ் பேரவை அரங்கத்தில்  பரத நாட்டிய அரங்கேற்றம். 

ந.முத்துசாமி சாருடன் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் உள்ளே நுழைந்தார். 
அவர் முகம் கு.அழகிரிசாமியை நினைவுறுத்தியது. புகைப்படத்தில் பார்த்திருக்கிற அழகிரிசாமியின் முகம். அவருடைய ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’, ’சுயரூபம்’ போன்ற அற்புத கதைகளெல்லாம் வரிசை கட்டி நினைவுக்கு வந்தன.

பரத நாட்டியம் ஆடிய பெண்ணை மேடையேறி வாழ்த்த ந.முத்துசாமி விரும்பினார். சிரமத்துடன் மேடையில் ஏற்றி, நாட்டியமாடிய பெண்ணுக்கு நின்று கொண்டே பரிசு கொடுக்கும் போது அவருடைய பேண்ட் திடீரென எதிர் பாராமல் இடுப்பிலிருந்து கழன்று விழுந்து விட்டது.

பரத நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அழகிரிசாமி தோற்றம் கொண்டவர் வந்து முத்துசாமியை சேவித்தார். அவர் அழகிரிசாமியின் மகனே தான்! மூத்தமகன் ராமச்சந்திரன்.

ராமச்சந்திரனிடம் அவரைப் பார்த்தவுடன் எனக்கு கு.அழகிரிசாமி ஞாபகம் வந்ததைப் பற்றி சொன்னேன்.
கி.ரா பேசும்போது அழகிரிசாமி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார். 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!

இதை ராமச்சந்திரனிடம் நான் சொன்னபோது அவர் “அப்பா பற்றி இந்த செருப்பு விஷயம் எனக்கே இப்போது தான் தெரிய வருகிறது!”
எனக்கு சந்தோஷம் தான். 

என்னால் அழகிரிசாமி பற்றிய ஒரு சுவாரசியம் அவர் மகனுக்கு இவ்வளவு காலங்கழித்து இப்போது தெரிய வந்திருக்கிறது.

அழகிரிசாமி மகன் ராமச்சந்திரன் ஐ.ஒ.பி.யில் பணிபுரிந்தவராம்?
சமீபத்தில் மறைந்து விட்டார்.

May 3, 2024

குட்டி நாயுடன் அற்ற குளம்

Max Beckmann
German Painter 
The Old Actress  
குட்டி நாயுடன் அற்ற குளம் 

The Metropolitan Museum of art, NewYork

May 2, 2024

R.P.R. 127, 128 Episodes சித்ரா, மனோ

R.P. Rajanayahem 127, 128 Episodes
Cinema Enum Bootham

அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில்
மே 5ம் தேதி, மே12ம் தேதி 
முரசு டிவி
காலை எட்டரை மணிக்கு
சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி

சித்ரா

மனோ

'குட்டி தமிழ்வாணன்' எம்.ஜி. ஆர்


'குட்டி தமிழ்வாணன்' எம். ஜி.ஆர் 

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. 
ஒரு கை கிடையாது. இப்படி.

பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன்  pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.

எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.

கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

 கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

கல்கண்டு "படத்தின் பெயரை 
"உலகம் சுற்றும் தமிழன்" 
என்று பெயர் மாற்றம் செய்ய போவதாக எம்ஜிஆர் சொல்கிறார்.

"வாலிபன்" என்று பெயர் வைத்தாலும் 
"தமிழன்" என்று பெயர் வைத்தாலும் இரண்டுமே எம்ஜிஆருக்கு பொருத்தமாக இல்லையே."

மன்னா டே யார் என்ற  கேள்விக்கு
 தமிழ் வாணன் பதில்
 'அவர்  எருமைக்குரல் பாடகர்'. 

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார். 
‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

தமிழ் சினிமா படங்களை கடுமையாக எடுத்தெறிந்து தாக்கிய கல்கண்டு ஆசிரியர் சொந்த தயாரிப்பு"காதலிக்க வாங்க". உட்கார்ந்து பார்க்கவே முடியாத அறுவை படம். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த
 பற்பல டப்பா படங்களில்
 முதல் வரிசையில் வைக்கலாம்.
'காதலிக்க வாங்க' போஸ்டர் ஜெய்சங்கர் ஜிப்பா மட்டுமே போட்டு தொடைகளை காட்டிக்கொண்டு.
'காதலிக்க வாங்க' போஸ்டர்
ஜெய்சங்கர் ஜிப்பா மட்டுமே போட்டு, தொடைகளை காட்டிக்கொண்டு.

 “நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார். 

தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது. 

The advise you tell others is 
the advice you need to follow.

அது எப்படி? இது எப்படின்னு பல பல நூல்கள் பப்பள பளபளன்னு எழுதி எழுதித் தள்ளினார்.
(பின்னாளில் எங்கள் காலத்தில் அமலாவை பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் “அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?” என்று தமிழ் வாணன் அன்னாளில் ஏதாவது புத்தகம் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறாரா?! என்று கூட வேடிக்கையாக விசாரணை செய்ததுண்டு.

இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.

’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது. 
தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.

அப்போது  தமிழ்வாணன் அகால மரணம். 

அடுத்த கண்ண தாசன் இதழில் 
மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை 
எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

..

மீள்