'குட்டி தமிழ்வாணன்' எம். ஜி.ஆர்
ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது.
ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.
’கல்கண்டு’ தமிழ்வாணன் pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.
எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.
கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.
கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?
தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’
கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.
கல்கண்டு "படத்தின் பெயரை
"உலகம் சுற்றும் தமிழன்"
என்று பெயர் மாற்றம் செய்ய போவதாக எம்ஜிஆர் சொல்கிறார்.
"வாலிபன்" என்று பெயர் வைத்தாலும்
"தமிழன்" என்று பெயர் வைத்தாலும் இரண்டுமே எம்ஜிஆருக்கு பொருத்தமாக இல்லையே."
மன்னா டே யார் என்ற கேள்விக்கு
தமிழ் வாணன் பதில்
'அவர் எருமைக்குரல் பாடகர்'.
உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.
‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.
தமிழ் சினிமா படங்களை கடுமையாக எடுத்தெறிந்து தாக்கிய கல்கண்டு ஆசிரியர் சொந்த தயாரிப்பு"காதலிக்க வாங்க". உட்கார்ந்து பார்க்கவே முடியாத அறுவை படம். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த
பற்பல டப்பா படங்களில்
முதல் வரிசையில் வைக்கலாம்.
'காதலிக்க வாங்க' போஸ்டர் ஜெய்சங்கர் ஜிப்பா மட்டுமே போட்டு தொடைகளை காட்டிக்கொண்டு.
'காதலிக்க வாங்க' போஸ்டர்
ஜெய்சங்கர் ஜிப்பா மட்டுமே போட்டு, தொடைகளை காட்டிக்கொண்டு.
“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.
தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
The advise you tell others is
the advice you need to follow.
அது எப்படி? இது எப்படின்னு பல பல நூல்கள் பப்பள பளபளன்னு எழுதி எழுதித் தள்ளினார்.
(பின்னாளில் எங்கள் காலத்தில் அமலாவை பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் “அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?” என்று தமிழ் வாணன் அன்னாளில் ஏதாவது புத்தகம் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறாரா?! என்று கூட வேடிக்கையாக விசாரணை செய்ததுண்டு.
இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.
’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.
தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.
அப்போது தமிழ்வாணன் அகால மரணம்.
அடுத்த கண்ண தாசன் இதழில்
மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை
எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.
..
மீள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.