Share

Showing posts with label கலாப்ரியா. Show all posts
Showing posts with label கலாப்ரியா. Show all posts

Jun 13, 2020

ஒரே கல்லு

கீழே நின்று ஏன் கல்லெறிகிறாய். மேலே வந்தால் நீயே பறித்துக் கொள்ளலாமே, ?!
- கலாப்ரியா 

சொலவடை - ஒரே கல்லு, ரெண்டு மாங்கா 

கல்லெறியும் கெட்டவனின் 
நோக்கம்  களவு. 

 கல்ல விட்டமா, பொறக்குனமா, ஓடுனமான்னு பரபரக்கும்போதே ,
பிடிச்சி மாத்த குடுத்து கட்டி வச்சிடுவாங்கெளே. 
இதுல எங்கன அவன் சாவகாசமா மேல  ஏறி, பறிச்சி...

மரம் ஏறுவதும் திறன் சம்பந்தப்பட்டது. 

அதுலயும் இந்த காலத்தில 
hard work தேவையில்ல. Smart work தான். 
 

ஓ. ஏ. கே. தேவர் வில்லத்தனமான 
குளோஸ் - அப் டயலாக் 'நான் யார் தெரியுமா?' வில் 
"ஒரே கல்லு, நாலு மாங்கா "

இன்னொரு படத்தில் தேங்காய் சீனிவாசன் 
தன் பாணி கொனஷ்டையுடன்,
 வார்த்தைகளை அழுத்தி சொல்வது 
" ஒர்ரே கல்லு, ஏர்ராளமான மாங்க்கா "

இன்னொரு சொலவடை  உண்டும். 

காய்ச்ச மரம் கல்லடி படும்.

Aug 20, 2019

ராஜநாயஹம் பற்றி கவிஞர் கலாப்ரியா


கவிஞர் கலாப்ரியா:
” ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.
அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்,
ஆவணப்புதையல் சினிமா, அரசியல் நிகழ்வுகள் பற்றிய என் சந்தேகங்களைப் பல முறை அவரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வேன்.
இப்போதும் நான் ஈடுபட்டிருக்கும் ஒரு நாவல் முயற்சிக்கு அவரிடம் பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். அந்த நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்வேன்.”







Jul 7, 2019

ஆர்.வி .ராஜு என்ற நபரின் அராஜக அநாகரீகம்

மேற்கண்ட ஸ்டேட்டஸை பாருங்கள். க்ளிக் செய்து படியுங்கள்.
என்னுடைய ரங்காராவ் பதிவை உருவி Para மாற்றி அப்பட்டமாக காப்பியடித்து எழுதப்பட்டிருக்கிறது. R.V.Raju என்கிற நபர் இதை ராஜநாயஹம் பதிவு என்று குறிப்பிட்டிருந்தால் தப்பில்லை.
தான் எழுதியது போல ஃபேஸ்புக்கில் போட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு எவ்வளவு பாராட்டு கமெண்ட் பாருங்கள்.
இதனை என் அன்புக்கு பாத்திரமான அற்புத மனிதர் சுகன் பாரீஸ் தெரியாமல் தன் பகுதியில் Share செய்திருந்தார். நான் சுட்டிக்காட்டியவுடன் அதனை என் பதிவு என திருத்திக்கொண்டார். என் நன்றி.
நொறுங்கிப்போகிறேன். இப்படி இந்த ஆர்.வி. எவ்வளவு பேர் என்னை திருடுகிறார்கள்.

I'm an actor and singer.

என்னுடைய எழுத்து ஹாலிவுட் படங்கள், உலகப்படங்கள், உலக இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பாலியல், க்ளாசிகல் ம்யூசிக், தமிழ் சினிமா, சுய அனுவங்கள், அரசியல் என்று விரிந்த தன்மை கொண்டது என்று அறிவீர்கள்.
தமிழ் சினிமா பதிவுகள் மிக அதிகமாக திருடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நல்லவேளை கவிஞர் கலாப்ரியா இதற்கு எதிர்வினை என்னை ஆதரித்து அந்த ஆர்.வி.ராஜுவின் பதிவை கண்டித்து போட்டிருக்கிறார்.
கலாப்ரியாவின் கமெண்ட் கீழே
”ராஜநாயஹம் எழுதிய பதிவினை அப்படியே எடுத்தாண்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ராஜநாயஹத்தின் பல பதிவுகள் இப்படி அவர் பெய்ரைக் குறிப்பிடாமலே பலரால் எடுத்தாளப்படுகிறது. உண்மையில் ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர். அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர், ஆவணப்புதையல் சினிமா, அரசியல் நிகழ்வுகள் பற்றிய என் சந்தேகங்களைப் பல முறை அவரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வேன்.இப்போதும் நான் ஈடுபட்டிருக்கும் ஒரு நாவல் முயற்சிக்கு அவரிடம் பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். அந்த நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்வேன்.”
அவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
என் எழுத்தின் மீது அபிமானம் கொண்ட அனைவரும் ஆர்.வி.ராஜு வை கண்டித்து அவருடைய ஈயடிச்சான் காப்பி பதிவில் கண்டனம் செய்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

என்னுடைய ரங்காராவ் பற்றிய கட்டுரை தமிழ் இந்துவில் 2015ல் வெளிவந்தது.
http://rprajanayahem.blogspot.com/2015/12/blog-post_15.html


கீழே  உள்ள என் லிங்க் களை தயவு செய்து பாருங்கள்.


Nov 25, 2017

Is it really possible to write what one feels?



Is it really possible to write what one feels?

ந.முத்துசாமி இது பற்றி அழகாக சொல்வார்: "எழுதி என் மனதில் தோன்றுகிறவைகளை அபிநயித்துக்காட்டி வெளிப்படுத்தப் பார்க்கிற சிரமங்களே என் சொற்கள்."


‘சொற்களை மேகமாக்கி
வானில் வைத்து விட்டு
மழைக்காக
வானம் பார்த்து நிற்கிறான்
கவிஞன்’
இப்படி சொல்வது கலாப்ரியா.



இன்குலாப் : ’எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத் தான்
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்
போராடுவோரின்
நெற்றிச்சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!’

....................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_26.html


Aug 29, 2016

காரணச் செறிவு


திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை!”

நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.
பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”
பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!
மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, தள்ளாடிய பாலகுமாரனை நான் அவர் கை பிடித்து நடத்தி மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

ஞானக்கூத்தன் பத்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். 

அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில் நான் நினைவு கூர்ந்தேன். “ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு!”
தமிழ் நாட்டில் ராஜநாயஹத்தைத் தவிர மற்றவர்கள் எல்லோரும், எல்லோருமே கவிஞர்கள் தானே!
………………………………….


கலாப்ரியாவால் இப்படி திகட்டவே திகட்டாத கவிதைகளை தொடர்ந்து எழுத முடிகிறது.
எவ்வளவு முறை நாதஸ்வர வாசிப்பு பார்க்கவும் கேட்கவும் கிடைக்கிறது.
எவ்வளவு முறை இரட்டை நாதஸ்வரக் கச்சேரி பார்த்திருக்கிறோம்.
’இசை மழையில் நனைவது’ கூட cliché தான். கவிஞனுக்குத் தானே அபூர்வ விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படுகிறது.
இனி நாதஸ்வரம், தவில் வாசிக்கக்கேட்கும்போதும் நாதஸ்வர வித்வான்களோ, தவில் வித்வான்களோ வியர்வை துடைத்துக்கொள்ளும்போதெல்லாம் கலாப்ரியாவின் இந்த கவிதை நினைவில் வரும்.
அந்த வியர்வையும், வியர்வை துடைக்கும் துண்டும்!
“ இரட்டை நாதஸ்வரம்
வாசிக்கிறார்கள்
ஒருவர் சற்றே நிறுத்த
மற்றொருவர் தொடர
துடைத்துக்கொள்கிறார்கள்
மாற்றி மாற்றி
அவை மட்டும் இசை
மழையில் தொடர்ந்து
நனைந்து கொண்டு”
இன்னொரு கலாப்ரியா கவிதை
“விதையின் ஒற்றைக்
கலவியை நாள் தோறும்
காற்றிடம் கிசுகிசுக்கிறது
ரகசியமாய் மரம்
வெட்கமின்றி அவற்றை
வானெங்கும் பிதற்றித் திரிகின்றன
ஒட்டுக்கேட்ட பறவைகள்”
…………………………….

Jul 24, 2016

சிக்கலான இழைகள்

’அதே கண்கள்’ படத்தில் ”பொம்பள ஒருத்தி இருந்தாளாம், பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்” பாட்டில் வருகிற வார்த்தைகள்
“சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா, சொன்னவா சொன்னவா சொன்னவா சொன்னவா, தாக்கெரஸ் தாக்கெரஸ், ஜாவா டக்குனகோ டக்குனகோ” சௌராஷ்ட்ரா மொழி!
நான் காலேஜில் படிக்கும்போது என் நண்பன் A.K.ரவியிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன். அவன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
(A.K.Ravi is standing behind R.P.Rajanayahem)

சொட்டிஜா – விட்டுப்போ
சொன்னவா – விடமாட்டேன்(டி)
தாக்கெரஸ் – பயமாருக்கு
ஜாவா டக்குனகோ – போடி, பயப்படாதே
சினிமாவில் பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன் ஆகியோர் சௌராஷ்டிர இனத்தை சார்ந்தவர்கள். நடிகர்கள்
வில்லன் டி.கே.ராமச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா
சௌராஷ்டிரா தான்.

நடிகை தேவிகாவின் கணவர் (கரகாட்டக்காரன் கனகாவின் அப்பா!) எஸ்.எஸ்.தேவதாஸ் கூட சௌராஷ்ட்ரா தான். பீம்சிங்கிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தேவதாஸ். ’வெகுளிப்பெண்’, ’முன்னூறு நாள்’ படங்களின் இயக்குனர். 

ஆண்டவன் கட்டளை படத்தில் தேவிகா நீராடிக்கொண்டே பாடும் பாடல் ”அழகே வா அருகே வா”

” ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே” என்றவாறு தன் ’முலைகள்’ மீது சட்டென்று பெருமிதமாக பார்வையை ஓட்டுவார்.
என்னா பெருமை!
பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!
………………………………………………
பன்றி மலத்தை தின்று முகம் சுளிக்க வைக்கிறது.
கரப்பான் பூச்சியோ டாய்லட்டில் முகம் சுளிக்க வைக்கிறது.
இங்கே பன்றி வால் பற்றி கவிஞர் கலாப்ரியாவும்
கரப்பான் பூச்சி கால் பற்றி க.நா.சுவும் எழுதியவை

‘இன்றைய தினத்தை
ஆரம்பித்து வைக்கிறது
பன்றியின் சுருட்டை வால்
அழகு’
- கலாப்ரியா


“கரப்பான் பூச்சியைப் போல, என் எண்ணக்கால்கள் இருந்த இடம் விட்டு நகராமல் சைக்கிள் விடுகின்றன……………..
கரப்பான் பூச்சி அருவருப்பு தரும் பூச்சி தான். ஆனால் அது மல்லாந்து கிடந்து காற்றிலே கால்களால் சைக்கிள் விடும்போது என்னால் அதைப் பார்க்காமல் இருக்க முடிவதேயில்லை. கவர்ச்சியும் தான் இருந்தது அதிலே!”
- க. நா.சு - ‘அசுர கணம்’ என்கிற பிரமாதமான நாவலில்
( நாவலா? குறு நாவலா?)
……………………………………….



Dec 15, 2012

Taste differs

புத்தனே
ஞானம் வாய்த்த பின்
அழக்கூடுமோ
உன்னால்
- கலாப்ரியா


அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். அதே போல இந்த நாவலில் வருகிற டைரக்டர் ராம்சிங் பதிபக்தி,பாகப்பிரிவினை,பாசமலர்,பாலும்பழமும்,பார்த்தால் பசி தீரும்,பந்த பாசம் படங்களை இயக்கிய பீம்சிங் தான்.
கரைந்த நிழல்கள் நாவலின் ஆறாவது அத்தியாயத்தில்
செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு ராம்சிங் படம் திரையிடப்படுகிறது. அந்தப்படத்தை டைரக்ட் செய்ததற்காக ராம்சிங்குக்கு ரொக்கப்பரிசும் கிடைத்திருந்தது.வெளியே போகமுடியாத சூழ்நிலையிலிருந்த செக்கோஸ்லோவாக்கியர்கள் பார்த்தார்கள். டெலிபோன் பேசவேண்டியிருப்பதைக் காரணமாக வைத்துக் கொட்டகை வெளியில் வந்த வர்த்தகசபைத் தலைவர்,பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரியிடம் ‘நீங்க அந்தப்படத்தைப்பார்க்கலியா?’என்று கேட்கிறார். பதில்’அந்தத் தலைவலியை யார் பார்த்துச் சகிச்சுக்கிறது?’
அன்று மாலை செக் விருந்தினர்களுக்கு  ராம்சிங்கை பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரி தான் அறிமுகப்படுத்துகிறார்.’இவர் படத்தைத் தான் நீங்கள் இன்று காலை பார்த்தீர்கள்,’
செக் தலைவர் ’ஓ…. அப்படியா! ..ரொம்ப நல்ல படம் !சோக அம்சம் தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது, ‘
அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக்கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கை போய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய்க் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.
செக் காரர் இறுதியாக சொல்வது”உங்கள் கதாநாயகர்களுக்குப் பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப்பட்டது.அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றிற்கும் அழுது விடுகிறார்.”
எல்லாரும் லேசாகச் சிரித்தார்கள்.ராஜ்கோபால் சிறிது உரக்கச்சிரித்துவிட்டான்.
உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டின் ’ஒருசிலரால்’ கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் கொண்டவர்.
அசோகமித்திரன் மேற்கண்டவாறு விவரிக்கும் அந்த நடிகர் யார் என்பது படிப்பவர் யாருக்கும் புரியும். சிவாஜி கணேசன்.!
…..
89 வயது மிருணாள் சென் பெங்காலி டைரக்டர். புவன் சோம், கோரஸ், ஒக்க ஊரி கதா, பரசுராம், காந்தார்,காரிஜ்,ஏக் தின் அச்சானக் போன்ற திரை ஓவியங்களை தீட்டிய மேதை.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்ஸியா மார்க்யுசுக்கு நண்பர்.
எத்தனையோ உலகத்திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் பரிசு வாங்கியிருக்கின்றன.பல திரைப்பட விழாக்களில் இவர் ஜட்ஜ் ஆக கௌரவிக்கப்பட்ட கலை மேதை.
மிருணாள் சென் தனக்கு கமல் ஹாசன் நடிப்பு தான் பிடிக்கும் என்று 1998ல் எஸ்.விஜயன்(சினிமா நிருபர்) அவர்களிடம் 14 வருடம் முன்
( தினமலர் வாரமலர் 25,அக்டோபர்,1998)சொன்னாராம்.’அப்படியென்றால் சிவாஜி நடிப்பு?’ என்று கேட்டதற்க்கு ஒரு மாதிரியாக முகத்தை சுளித்தாராம்.’எனக்கு அழுது நடிப்போரைக்கண்டாலே பிடிக்காது.ஆண்கள் அழுவது கூடாது ‘ என்றாராம். அழுகையும் ஒரு நடிப்பு தானே?’ என்று இவர் கேட்ட போது மிருணாள் சென் பதில் ‘நோ நோ’
...

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/child-is-father-of-man.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_23.html



Jun 5, 2012

Carnal Thoughts - 31

http://fc08.deviantart.net/fs43/f/2009/098/c/6/Voyeurism_by_SamuraiSunshine.jpg   

Voyeurism

அறுபது வயது தாண்டிய பெண்கள் நான்கைந்து பேர்  ஓய்வாக பேசிக்கொண்டிருந்த போது சுப்பாத்தாக்கிழவி செய்த லூஸ் டாக்.

”என் மாமியா பேச்சிக் கிழவி ஈன சிறுக்கி.நான் கொஞ்ச பாடா பட்டேன்.விவஸ்தை கெட்ட முண்ட.  எனக்கு கல்யாணம் ஆனப்ப ராவுல என் புருஷன் கூட இருக்கும்போது சாவி ஓட்டயுல கண்ண  வச்சி பாத்துக்கிட்டே இருப்பா. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன். ஒரு நா அம்புட்டையும் அவுத்துப் போட்டு முண்டக்கட்டயா நின்னேன். நல்லா பாத்துக்கடின்னு”


..............................

”ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை”யில்
 R.P. ராஜநாயஹம்

தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான்.
 
Voyeurism! அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று
( முட்டாள் தாசுவின் வார்த்தைகளில் 'பேபி ஏறியடிக்கும்போது ஒவ்வொரு 'குத்து'க்கும் வெரோனிகா ஓரு 'ஏசுவே ரட்சியும்') சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.


.....................................................................

மனுஷ்ய புத்திரன் கவிதை கீழே

அந்தரங்கம்

எனக்குத் தெரியும்

ஓசைப்படாமல்
கதவு திறந்து வந்து

சுற்று முற்றும்
கவனித்துவிட்டு

பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை

........................................

கலாப்ரியாவின் ’விகார புஷ்பங்கள்’ கவிதையிலிருந்து

பொலி காளைகளைச்
செக்கு மாடாக்கு
இனி பசுக்களின்
வீதியோரக் கருவுறுதல்;
நான்கு பிள்ளைகள்
வேடிக்கைப் பார்க்க
இல்லையெனக் கவிதை எழுது.
( பாரதியிடம் தொனியைக்
கடன் வாங்கி )

.....................
இடாலோ கால்வினோ வின் "If on a winter's night a Traveller " நாவலில் ஒரு காட்சி

மியாகி சீமாட்டி என்னைப் பின்புறமாக பற்றி, என்னை பாயில் படுக்க வைத்தாள். அவள் மகள் மகிகோவை புணர்வதாக நினைத்துக்கொண்டு நான் மோகப் பெருக்கில். “மகிகோ“ என்று கத்தினேன். பாதி திறந்திருக்கும் கதவின் பின் முழந்தாளிட்டு மியாகியின் மகள் தலையை சாய்த்து பார்த்துக் கொண்டு இருந்தாள். தன் அம்மாவையும் என்னையும் கண் விரித்துப் பார்க்கிறாள் மகிகோ. நான் கத்தியதால் தான் ஓடிவந்திருக்கிறாள். தாழ்வாரம் தாண்டி
இன்னொரு உருவம். மியாகியின் கணவன் - மகிகோவின் அப்பா -  மிஸ்டர் ஒகேடா பார்த்துக்கொண்டிருந்தார்.நான் அவரை கவனித்த போது பின்னிப் படர்ந்திருக்கும் என்னையும் தன் மனைவியையும் பாராது , எங்களை ஓளிந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகளை வெறித்து நோக்கினார். அவரது சில்லிட்ட கண்ணி்லும்,சுளித்த உதட்டிலும், மகிகோவின் பார்வையிலும்கூட பளிச்சென்று தெரிந்தது என்னவென்றால்,மியாகி சீமாட்டியின் orgasm தான்!

-