Share

Showing posts with label சுபகுணராஜன். Show all posts
Showing posts with label சுபகுணராஜன். Show all posts

Feb 6, 2018

சுபகுண ராஜன்


பெயரே மங்களகரமாக சுபகுண ராஜன்.
விகடன் விருது விழாவிற்கு போயிருந்த போது சுபகுணாவை பதின்மூன்று வருடங்களுக்குப் பின் சந்தித்தேன்.
நான் சென்னை வந்து ரெண்டரை வருடம் ஆகிவிட்டது. இப்போது தான் சந்திக்க வாய்த்தது.
’காட்சிப்பிழை’யில் என்னுடைய கட்டுரை முதன் முதலாக பிரசுரமான போது ராஜன்குறை கேட்டாராம் “ ராஜநாயஹத்தை எப்பிடி புடிச்சீங்க?”
சுபகுணராஜன் பதில்: ”உங்களுக்கெல்லாம் ராஜநாயஹத்தை தெரியும். எனக்கு கேபின்னு ஒரு முரடனத்தான் தெரியும்.”
என்னிடமே கேட்டிருக்கிறார் : ”உண்மைய சொல்லுங்க. கேபிய என்ன பண்ணீங்க.. கொலை பண்ணிட்டீங்களா..”


அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்கள் சுபகுண ராஜனும் நானும். இன்று இலக்கிய உலகில் உள்ளவர்கள் அறியுமுன்னரே என்னை அறிந்தவர் சுபகுண ராஜன்.
அமெரிக்கன் கல்லூரியின் வாஸ்பர்ன் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
நான் டே ஸ்காலர்.

சினிமாவில் சுபகுணராஜன் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஜெகனாதனிடமும், நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக பி.ஆர் சோமுவிடமும் பணி புரிந்திருக்கிறோம். அப்போது கதீட்ரல் ரோட்டில் American college Alumni functionல்
நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதுண்டு.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
கஸ்டம்ஸில் என் அப்பா, என் சகோதரன் இருவருடனும் சுபகுணா பணியாற்றியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் ஒரு நாடகக் கருத்தரங்கில் 1990ல் மீண்டும் சந்தித்தோம்.
முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடியின் சம்பந்தி. இவருடைய மகளை அவருடைய மூத்தமகன் திருமணம் செய்திருக்கிறார்.
சுபகுணாவின் திருமதி மதுரையில் பிரபலமான டாக்டர்.
தூத்துக்குடிக்கு நான் என் ஆஃபிஸ் வேலையாக போய் இருந்த போது அங்கே கஸ்டம்ஸ் சூப்ரிண்ட் ஆக இருந்த சுபகுணா என்னை சந்திக்க ஆசைப்பட்டு தகவல் சொன்ன போது அவரை போய் பார்த்தேன். அப்போது அளவலாவிக்கொண்டிருந்த போது ஒரு ஃபோன் கால். ‘கஸ்தூரி மான்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு. ஜெயமோகன் லைனில்.
என்னிடம் பேசுவது யார் என்பதை சொன்ன சுபகுணா “ ஓ.. உங்களுக்கும் ஜெயமோகனுக்கும் ஆகாதுல்ல…”
கஸ்தூரி மானில் மாட்டுக்கன்னையனாக நடித்தார்.
இலக்கிய உலகில் ‘காட்சிப்பிழை’ பத்திரிக்கையாசிரியராக, பதிப்பாளராக, எழுத்தாளராக.
 டிவி கலந்துரையாடல் நிகழ்வுகளில் கூட தென்படுகிறார்.

சில வருடங்களுக்கு முன்  ’ஆசை முகங்கள்’ என்ற தலைப்பில் அவருடைய கயல் கவின் புக்ஸ் பதிப்பாக பழைய திரை நடிகைகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். அதில் நான் எழுதிய ’விஜயகுமாரி’ பதிவை சேர்த்தார். அப்போது அவர் என்னிடம் மொபைலில் பேசிய போது சொன்னார்
 “ உங்கள கேக்காம நான் ஒரு வேலை செஞ்சிருக்கேன்..சுய நலம் தான்.என்னன்னா, உங்க விஜயகுமாரி பதிவை ஆசைமுகங்கள் நூலில் சேத்திருக்கேன்.”

மதுரையில் சுபகுண ராஜனுக்கு சாரு நிவேதிதாவுடன் ஏற்பட்ட மோதல்.
‘என்னடா Anti-culture?’
ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் எனக்கு ஜெயமோகனோடு நிகழ்ந்த மோதல்.

தமிழ் இலக்கிய உலகம் என்றும் மறக்க முடியாத சர்ச்சை நிகழ்வுகள்.

ஜெயமோகனுக்கு சுபகுண ராஜன் நண்பர்.
சாரு நிவேதிதாவுக்கு ராஜநாயஹம் நண்பர்.

We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’!

…………………………….

https://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html


Oct 13, 2012

Some Moments to Cherish


லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன் இரண்டுமுறை ’செல்’ பேசினார்.

முதல் தடவை பேசியபோது’நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்’ பதிவைப் படித்து விட்டு அதை அங்கே WorldTamilNews.net ல் பிரசுரிக்க விருப்பம் தெரிவித்தார். சந்தோஷமாய் சம்மதித்தேன்.

 ’ராஜநாயஹம் எழுத்தாளரின் எழுத்தாளர்’ என்றார்.

இரண்டாம் முறையாக பேசியபோது யமுனா ராஜேந்திரன்
‘இரண்டு தமிழ் ப்ளாக் மட்டுமே நான் சப்ஸ்க்ரைப் செய்து உள்ளேன்.அதிலொன்று ராஜநாயஹம் ப்ளாக்!’


பிரம்மரிஷி பட்டம்.

யமுனாராஜேந்திரன் பேசுகையில் ராஜநாயஹம் எழுதி இன்னும் ஒரு புத்தகம் கூட வெளி வரவில்லையே என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

புத்தகம் வெர்சட்டைல் பதிவுகளை உள்ளடக்கியதாக ராஜநாயஹத்தின் பன்முகத்தன்மையை வாசகர்கள் அறியும்படியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுபகுணராஜன் இரண்டு முறை ’செல்’பேசினார்.

’என்னத்தை கன்னையா’ பதிவை செப்டம்பர் ’காட்சிப்பிழை’யில் வெளியிட்டார்.

 நண்பர் ராஜன் குறை அவரிடம் ஆச்சரியமாக”ராஜநாயஹத்தை எப்படிப் பிடித்தீர்கள்?!” என்றாராம்.

சுபகுணராஜன் என்னைப்பற்றி “உங்களுக்கெல்லாம் தெரிந்த மனிதர் ராஜநாயஹம். எனக்கு ஒரு முரடன்’ கேபியை த்தான் தெரியும்”

காலம் எவ்வளவு விந்தை,விசித்திரங்களை நடத்திக்காட்டி விடுகிறது!

என் கல்லூரி கால நண்பர்களுக்கு நான் இன்றும் கேபி தான்!

அக்டோபர் ’காட்சிப்பிழை’இதழில் என்னுடைய பதிவுகள் P.D.சம்பந்தம், A.கருணாநிதி, அழகிய மிதிலை நகரினிலே ஆகிய பதிவுகள் இப்போது சுபகுணராஜன் பிரசுரம் செய்திருக்கிறார்.

அன்று ஒரிஸ்ஸாவிலிருந்த பரிசல்காரனிடம் பேசினேன்.உடனே லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அமெரிக்காவிலிருந்து பேசினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் உடனே ட்விட்டரில் - கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொன்னா ஒத்துப்பாய்ங்களா அடிக்க வருவாய்ங்களா?!

நான் திருப்பூரில் சந்திக்க விரும்பிய பரிசல்காரன் என்ற கிருஷ்ணகுமார் என்னைப்பார்க்க என் வீட்டுக்கே வந்தார். என்னைப் பற்றி ராஜநாயகன் என்று  பதிவு எழுதியுள்ளார்.
http://www.parisalkaaran.com/2012/09/2005.html

டெல்லியிலிருந்து  சந்தனார்  என்ற வெ.சந்திரமோகன் பேசினார். நான் அறிந்த R.P.ராஜநாயஹம் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
http://chandanaar.blogspot.in/2012/09/blog-post_4.html


சமீபத்தில் பேசிய இன்னொரு வலைப்பிரமுகர் உண்மைத்தமிழன்!

கிருஷ்ணமூர்த்தி எஸ் : ஒரு வலைப்பூ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால்,தமிழில் ஒரு பத்து வலைப்பூ தேறுமா?சுருங்கச்சொல்லி,நெத்தியடியாக எழுத்து என்றால் அது இப்படித்தான் என்று ஒரு உதாரணம் காட்டவேண்டுமா?இலக்கியம்,கவிதை,சினிமா என்று பலதளங்களிலும் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிற ஒரு பதிவரைக் காட்ட வேண்டுமென்றால் அது R.P.ராஜநாயஹம் ஒருவர் தான்.


ட்விட்டர் உலகில்  சாரல்:

 லக்கி கிருஷ்ணா: ‘இந்த எழுத்து வடிவம் ராஜநாயஹத்துக்கு எப்படி சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.சுகமான சுவாரசியம் ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது. இவருக்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.மேலும் தோழர் ராஜநாயஹத்தின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.

கானா பிரபா: என்ன எழுத்துய்யா…. அசுரன் ஐயா நீங்கள்.இன்றைய காலையை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது மதுரை முத்து பதிவு.

பிரபல ரவுடி: உங்க ப்ளாக்கை 2008ல் இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.எழுத்து ராட்சசன்ங்க நீங்க!

............

நான் கேட்காமலே தானாக முன்வந்து என்னுடைய ப்ளாக்கை வடிவமைத்துக்கொடுத்தவர் Chilled Beers.