Share

Showing posts with label Lord Byron. Show all posts
Showing posts with label Lord Byron. Show all posts

Aug 23, 2020

You speak of Lord Byron and me?!

 பார்ப்பதை எழுதும் ஒரு கவிஞன்.


 கற்பனையால் உருவகித்து எழுதும் கவிஞன்.


கீட்ஸ் வித்துவச் செருக்கோடு

 தன்னையும் பைரனையும் 

வகைமைப் படுத்துவது இப்படி


 – “You speak of Lord Byron and me!? 

There is this great differnce between us. 

He describes what he sees 

– I describe what I imagine – 

Mine is the hardest task.”


கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் 

அவன் புகழுக்கு காரணமான 

கவிதைகளை எல்லாம் 

ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான்.


ஹைபீரியன் காவியத்தில் பின்பகுதியில் அப்பல்லோ சூரியக்கடவுள் ( இலாகா - இசை, கலாசாரம் ) பீச்சில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பான். 

பெண் கடவுள் நிமொசின் ( இலாக்கா ஞாபக சக்தி ) வந்து இவனிடம் விசாரிப்பாள். 

தன் சக்தி தெரிந்தும் உபயோகிக்க அறியாமல் இருப்பதற்காக அழுது கொண்டிருப்பதாக       அப்பல்லோ சொல்வான். 

நிமொசின் கண்களுக்குள் தன் பார்வையை செலுத்துவதன் மூலம் அப்பல்லோ 

தன் இலாக்காக்களுக்கான

 அதிகாரத்தை அடைகிறான். 

சக்தி உபயோகம் ஆரம்பம். 

இந்த இடத்தில் Celestial..என்று 

கீட்ஸ் அரைகுறையாக 

அந்தரத்திலேயே வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்தி இருக்கிறான்.

 Fractional Hyperion. 


Perhaps life is Just that a dream and a fear 


பைரன் எழுதிய கடைசி காவியம்

" டான் ஹூவான் ". 

அவனுடைய மரணம் இதை முடிக்க விடாமல்

 சதி செய்து விட்டது.

Incomplete Don Juan. 


கீட்ஸ் கூட "ஹைபீரியன்" காவியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் அதற்கு காரணம் "மில்டன் பாணியில்"இருப்பதாக எண்ணி கீட்ஸ் பயந்து, திருப்தி இல்லாமல் நிறுத்தினான். 


மரணமும் அவனுக்கு அப்படி ஒன்றும் 

அப்போது ரொம்ப தூரத்தில் இல்லை. 


டான் ஹூவான் கரு என்ன?

வரையறை செய்வதென்றால் ஹூவானின் அப்பா அவனுக்கு சொல்லுவதில் தான் ." பெண் உனக்கு மூன்று விஷயங்களை தருகிறாள் . உயிர் , ஏமாற்றம், மரணம்."


ஹூவான் பெண்களால் துரத்தப்படுகிறான்.

கொச்சையாக சொல்வதென்றால் 

பல பெண்கள் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். 


"Truth is stranger than fiction!"

- இந்த பிரபலமான மேற்கோளை 

டான் ஹூவானில் தான் பைரன் சொன்னான். அப்புறம் எல்லோரும் உபயோகித்து தேய்ந்து போன வரி இது.


"ஒரு கனவு, ஓரு பயம்..ஒருவேளை

 இது தான் வாழ்க்கையோ"

 - ஜோசப் கான்ராட்  இப்படி கவலைப்பட்டான்



Apr 2, 2009

Byron -Mad, bad and dangerous to know !

Byron (1788-1824)
முப்பத்தாறு வருடமும் ஒரு மூன்று மாதமும் இந்த பூவுலகில் வாழ்ந்தான் பைரன் . ஒரு கால் சற்றே ஊனமாய் பிறந்தவன் . அவனுடைய டான் ஹுவான் பற்றி முன்பு இங்கே எழுதியிருக்கிறேன் .
கிரேக்க சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது 37 வயதில் இறந்தான் . கிரேக்கர்கள் தங்கள் போராட்டத்தில் தோள் கொடுத்த இந்த ஆங்கிலேயனுக்கு மிகுந்த மரியாதை , பிரியம் செலுத்தினர் . இவன் மரணத்தின் போது நெஞ்சே அவர்களுக்கு வெடித்தது போல ஆகிப்போனது .காய்ச்சலில் படுத்தவன் போய் விட்டான் .37 நிமிடங்களுக்கு துப்பாக்கியைவெடித்து இவனுக்கு அஞ்சலி செலுத்தினர் .21 நாட்கள் துக்கம் அனுசரித்து வேதனை பட்டார்கள் . இந்த ஆங்கில கவிஞனின் இதயத்தை அவன் உடலில் இருந்து எடுத்து தங்கள் வசம் வைத்துக்கொண்டு உடலின் மீதியை இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள் .மிஸ்ஸொலோங்கி யில் பைரன் இதயத்தை புதைத்தார்கள் .

சொந்த நாட்டில் மத குருக்கள் ஆவேசப்பட்டார்கள் . Westminster Abbeyயில் அவன் உடலை புதைக்க அனுமதி கிடைக்கவில்லை . ஒரு கிராமத்தில் அவன் மூதாதையர் புதைக்கப்பட்ட இடத்தில் தான் மகா கவி பைரன் புதைந்தான் .

" மிக மோசமான விகார வாழ்வு வாழ்ந்தவன் . மிக அருவருப்பான கவிதைகள் எழுதியவன் , ஒழுக்கமற்ற தன்மை கொண்டவன் . நம் கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் . பெண்களை கேவலமாக நடத்தியவன் . இவனை Westminster Abbey யில் புதைக்க கூடாது '' என அவன் இறந்து நூறு வருடங்கள் கழித்து பிஷப் ஹெர்பெர்ட்கோபப்பட்டார் . நூறு வருடங்கள் கழித்து சிலர் முயற்சித்த போது இப்படி பிஷப் சொன்னார் .
போராடி கடைசியாகWestminster Abbey யில் அங்கே Poets cornerல் 1969 ஆண்டு 'பைரன் நினைவுச்சின்னம் 'வைக்க மட்டும் தான் முடிந்தது .
மேரி சாவர்த் என்ற அவன் தூரத்து சொந்தக்கார பெண் தான் அவன் முதல் காதலி . அவள் இவனிடம் ஆயாசப்பட்டு ஒதுங்கியபோது பைரனின் பாடு பொருள் ஆகியதால் பல கவிதைகள் . பின் லேடி கரோலின் லாம்ப் என்ற காதலி . அவன் மணந்து கொண்ட அன்னாபெல்லா இவனுடன் வாழ மறுத்ததற்கு காரணம் பைரன் சொந்த தங்கையுடன் கொண்ட சரீர சம்பந்தம் . அவனுடைய Half –Sister அகஸ்தா லீ . இவளுக்கு ஒரு பெண் குழந்தையை பைரன் கொடுத்தான் . அன்னாபெல்லாவுக்கு ஒரு பெண்குழந்தை .
ஷெல்லியின் சகளைபாடியாக பைரன் ஆகியவன் . ஷெல்லி பெஞ்சாதி மேரி யின் சகோதரி (Step –sister) க்ளேர் கிளார்மன்ட் . இவளுக்கும் ஒரு பெண்குழந்தையை காதல் பரிசாக கொடுத்தான் பைரன் .

I lived, I loved, I quaffed ,like thee:
I died: Let earth my bones resign;

Fill up – thou canst not injure me;
The worm hath fouler lips than thine

-Byron

Dec 10, 2008

பைரன் சொல்லும் பிரியாவிடை

பைரன் கவிதைகள் பற்றி சொல்ல இனி என்ன இருக்கிறது .ஆனால் அவன் காதல்கவிதைகள் அனைத்தும் எப்போதும் புதியவை என்ற தகுதி அவனை பற்றி எவ்வளவு எழுதினாலும் , பேசினாலும் மிச்சம் மீதி இருக்கும் , இருந்து கொண்டே தான் இருக்கும் .
Fare thee well என்ற கவிதையில் பிரிவின் துயர் காணும் பின்விழைவு
Fare thee well
Both shall live, But every morrow
Wake us from a widowed bed.
இருவரின் படுக்கையும் இனி விதவைக்கோலம் பூனவேண்டியுள்ளது!
இரக்கமில்லாத கொடூர ஜென்மம் (கல்லு மனசு-“sans merci” ) என்றாலும் கூட அவளுக்கு தான் எந்த காலத்திலும் எதிராக , விரோதியாக மாறவே மாட்டேன் என ஆணையிட்டு சொல்கிறான்
Even though unforgiving,never
Against thee shall my heart rebel

இங்கே பல காதல்கள் மோதலில் பரஸ்பரம் புழுதி வாரி தூற்றுதல்களை காண நேரும்போது இந்த பைரன் கவிதை நினைவுக்கு வருகிறது .