Share

Mar 16, 2026

வேடிக்க - 61

வேடிக்க - 61

முன்பு 'எடப்பாடியின் சிரிப்பு எம்ஜிஆர் சிரிப்பது போலவே இருக்கிறது' என்று சரோஜா தேவி ஒப்பீடு செய்ததுண்டு.

இப்போது 'எடப்பாடி எளிமையில் காந்தியார் போல' என்ற ஒப்பீட்டை 
பழ கருப்பையா செய்திருக்கிறார்.

Hyperion to a satyr

Mar 13, 2026

தர்மாதிகாரி

நியாய தர்மம்

பெயர் பொருத்தமாக 
கன கச்சிதமாக 
அமைவது விசேஷம்.
"தர்மாதிகாரி".

Mar 9, 2026

R.P. ராஜநாயஹம் இயக்கத்தில் ந.முத்துசாமி "வண்டிச்சோடை"


Aug 21, 2016
R.P.ராஜநாயஹம் இயக்கத்தில் ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’


R.P.Rajanayahem's interview on Shri .Na.Muthuswamy's Vandichodai in 'The Hindu' (Tamil) daily 
21.08.2016

தி இந்து நாடக விழா
தி இந்து – ஞாயிறு ஆகஸ்ட் 21, 2016

அவநம்பிக்கையை உடைத்தெறியும் கற்பனை
-    என்.கௌரி

தி இந்து நாடக விழாவில் இடம்பெற்றிருக்கும் மூன்று தமிழ் நாடகங்களில் ‘வண்டிச்சோடை’ நாடகத்துக்கு ஒரு சிறப்புண்டு. தமிழின் சமகால நாடக ஆளுமைகளில் முக்கியமானவரான ந.முத்துசாமி 1968ல் எழுதிய நாடகம் இது. கூத்துப்பட்டறைக்குழுவின் சார்பாக ஆகஸ்ட் 28 அன்று இந் நாடகம் முதன்முறையாக ‘தி இந்து’ நாடக விழாவில் மேடையேறவிருக்கிறது.

’வண்டிச்சோடை’  நாடகத்தைத் திரிபான தர்க்கங்களைப்
( Perverted Logic) பேசும் நாடகம் என்று சொல்லலாம். தொடக்கத்திலிருந்து முடிவு வரை இந்த நாடகம் புதிர்களுடன் அற்புதமான கற்பனை வெளியில் பயணப்படுகிறது.
“ மருத்துவத் துறை இப்போது முழுக்க முழுக்க வியாபாரம் ஆகி விட்டது. பாரம்பரியமான இந்திய நாட்டு வைத்தியம் ஒரு காலத்தில் செழிப்பானதாக இருந்தது. அது குரு – சிஷ்ய அமைப்பால் எப்படிச் சரிவைச் சந்தித்தது என்பதை இந் நாடகம் பதிவு செய்கிறது.” என்கிறார் இந்நாடகத்தின் இயக்குனர் R.P.ராஜநாயஹம்.

குரு – சிஷ்ய அமைப்பு மட்டுமல்லாமல் கடைமட்டத் தொழிலாளர்கள் வழிவழியாக எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் ‘வண்டிச்சோடை’ நாடகம் அலசுகிறது. தார்ச்சாலை போடும் தொழிலாளர்கள், போரில் பலிகொடுக்கப்படும் சிப்பாய்கள், கட்சிக்காக உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள் போன்றவர்களை விழிப்படைய வைக்கும் கேள்விகள் இந்நாடகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தனிமனித வழிபாடு என்பது எப்படி இந்தச் சமூகத்தைப் பாதிக்கிறது என்பதை இந்நாடகம் வலிமையுடன் பேசியிருக்கிறது.

“பொதுவாக எதிர்காலத்தை நோக்கி வயதடைவதைப் பற்றி நாம் யோசிப்போம். இறந்த காலத்தை நோக்கி வயதடைந்தால் என்ன என்ற பயணத்தை ‘ வண்டிச்சோடை’ மேற்கொள்ளவிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ‘கலைடாஸ்கோப்’ அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு இந்நாடகம் கொடுக்கும்.”
 என்கிறார் R.P. ராஜநாயஹம்.

உருமாற்றம் என்னும் அம்சம் இந்த நாடகத்தின் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். ஓர் ஆடு, ஆட்டுக்காரனாக மாறுகிறது. மூலிகைச் செடிகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆடு மனித சிரஞ்சீவியாக மாறி விடுகிறது. “இப்படி, இந்த நாடகத்தில் எழுதப்பட்டிருக்கும் கற்பனை என்பது நம்முடைய அவநம்பிக்கையை உடைத்தெறிவதாக இருக்கும். இந்த நாடகம் நேரடியாக எந்தவொரு விஷயத்தைய்ம் விளக்கியிருக்காது. ஆனால், மறைபொருளாக இந்நாடகத்தில் பல விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. பார்வையாளர்களுக்கு ஒரு விஷேசமான அனுபவத்தை ‘ வண்டிச்சோடை’ நாடகம் அளிக்கும் என்கிறார் ராஜநாயஹம்.

…...

Mar 8, 2026

வேடிக்க - 60

வேடிக்க - 60
- R.P. ராஜநாயஹம் 

R. சுந்தர்ராஜன் self standing ஆக கொடி கட்டி நாலு சில்வர் ஜூபிலி படங்கள் குடுத்தார். சக்கப்போடு 

சாமி போட்ட முடிச்சு, ஒயிலாட்டம் காரணமாக தள்ளாட்டம். 

பாக்யராஜிடம் வந்தார். " நான் தற்கொல பண்ணிக்கறத தவிர வேற வழியேயில்ல". சரணாகதி.
உடைந்து போன சுந்தர்ராஜனுக்கு
 கை கொடுப்பதற்காக அவர் இயக்கத்தில் படம் தயாரித்து கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொள்கிறார். சில லட்சம் பணம் சுந்தர்ராஜனுக்கு  உடனே அட்வான்ஸ் கொடுக்கிறார். 
குஷ்பு கதாநாயகி. 
படத்தின் பெயர் " மிஸ் மைலாப்பூர்".

 குஷ்புவுடன் போனில் பேசியிருக்கிறார். 
கதாநாயகிக்கு சுந்தர்ராஜன் பேச்சே சுத்தமாக பிடிக்கவில்லை. இவரோடு பேசவே பிடிக்கவில்லை என்பதை பாக்யராஜிடம் குஷ்பு தெரிவிக்கிறார். 
"என்னா வாய்"

இப்படி இன்னும் என்னென்னவோ. தெரியவில்லை.

படம் தயாரிப்பதில்லை என்று முடிவு.
சுந்தர்ராஜனுக்கு கொடுத்த அட்வான்ஸை பழனிசாமி போய் சுந்தர்ராஜனிடம் கேட்கிறார். 
அவர் பதில் " பாக்யராஜ் பணத்த எவ்வளவோ பேர் சாப்பிட்டுருக்காங்க. அந்த தர்ம கணக்கில நான் வாங்குன பணத்தையும் எழுதிக்க சொல்லு. என்னால தரமுடியாது. "

அந்தப் படத்தின் பூஜை இன்விட்டேசன் பின்னால் ராசுக்குட்டி ஷுட்டிங் சமயத்தில் பாக்யா ஆஃபிஸில் கவனிப்பாரற்று கிடந்த மிஸ் மைலாப்பூர் இன்விடேசன் 
(பெரிதாக அச்சடிக்கப்பட்ட Grand invitation) 
பார்க்க கிடைத்தது. Dropped movie.

சுந்தர்ராஜன் வாய் விசேஷமானது.

ரொம்ப ரொம்ப முன்னால பாக்யராஜ் 
" இர்றா, ஒன்ன பாரதிராஜா கிட்ட சேத்து விட்றேன். பொறுமையா இரு"
சுந்தர்ராஜன் சரின்னு தான் சொல்லியிருக்கிறார்.

அந்த நேரம் பாக்யராஜை பார்க்க பாரதிராஜா மாடியேறிப்போனால் அங்க சுந்தர்ராஜன். 
" சார். ஒங்க அந்த படத்ல க்ளைமாக்ஸ் சரியில்ல. அத நானாயிருந்தா வேற மாதிரி பண்ணியிருப்பேன்." இப்படி..அப்படி வளவளப்பு. சுந்தர்ராஜன் வெளக்கெண்ணயால குண்டி கழுவி விட ஆரம்பித்திருக்கிறார்.

பாரதி ராஜா ரூமை விட்டு கிளம்பி கீழே வருகிறார். பாக்யராஜ் எதிரே. 
" யோவ் யார்யா அவன் ஒன் ஃப்ரண்டு. என்னா வாயி. ஒக்கார முடியல. எரிச்சல கிளப்புறான். என்னய்யா" கிளம்பி விடுகிறார்.

பாக்யராஜ் மாடியேறி " ஏண்டா, ஒன் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கவே மாட்டியா? அவருக்கிட்ட உன்ன சேத்து விடலாம்னு நெனச்சா இப்டி கெடுத்துட்டியே"

சென்ற வருடம் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தலைமையில் பிரசாத் கலர் லேபில் பட்டி மன்றம்.

எங்க டைரக்டர் பாக்யராஜ் அழைத்து அவருடன் போய் வேடிக்க பாத்தேன்.
பாக்யராஜ் சாரை தவிர மற்றவர்கள் சொதப்பல். நெறய நேரம் பேசி பேசி வறுத்து..
சுந்தர்ராஜனும் கட்சியெடுத்து மிக நீண்ட நேரம்.

பட்டி மன்ற நிகழ்வை பாக்யராஜ் எடிட் செய்த போதும் அவர் அழைப்பின் பேரில் 'ரெண்டு நாளு' வீட்டுக்கு போயிருந்தேன்.

டைரக்டர் பாக்யராஜ் வேதனையும் ஆயாசமும் " சப்ஜெக்ட உட்டுட்டு என்னன்னமோ பேசியிருக்கிறானே"

208, 209 Episodes Cinema Enum Bootham

208, 209 Episodes 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 
தொலைக்காட்சி தொடர் 
முரசு டிவியில் 
வரும் அடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு 

08.03.2026

15.03.2026


விஜய் சேதுபதி 

சிவ கார்த்திகேயன்

.....

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.