Share

Showing posts with label எஸ்.எஸ்.வாசன். Show all posts
Showing posts with label எஸ்.எஸ்.வாசன். Show all posts

Aug 30, 2019

What is precious, is never to forget


“I think continually of those who were truly great.” 

மிகவும் சிறப்பாக துவங்கும் இந்த கவிதையை எழுதிய ஸ்டீபன் ஸ்பெண்டர் இரண்டாம் முறையாக 1956ல் வந்த போது அவரோடு க.நா.சு. நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
டி.எஸ்.எலியட்டை தன் முன்னோடியாக நம்பியவர் ஸ்டீபன் ஸ்பெண்டர். ஜெர்மானிய யூத பூர்வீகம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலக் கவி.
 
I think continually of those who were truly great.

’எந்தரோ மஹானுபாவலு’ தியாக ப்ரும்மத்தின் ஸ்ரீராக கீர்த்தனை போன்றே தான் முதல் வரி.

ஸ்டீபன் ஸ்பெண்டரிடம் “ முதல் தடவையாக சென்னைக்கு வந்த போது உங்களை கவர்ந்த விஷயம் எது?” என்று க.நா.சு  கேட்ட போது அவர் பதில் “ மெரினா பீச்”

”இரண்டாவது சென்னையின் முக்கிய விஷயமாக அவர் எதைச் சொல்வார்” என்பது க.நா.சு கேட்ட இரண்டாவது கேள்வி.
ஸ்பெண்டர் பதில் : “போன தடவை நான் வந்த போது என் கூட்டங்கல் மூன்றுக்கு சற்றும் அழகில்லாத முகத்துடன் ஒரு வயசானவர் தலைமை வகித்தார். ஒவ்வொரு தடவையும் அவர் வாயைத் திறந்தபோது அழகான ஆங்கிலத்தில், மிகவும் அற்புதமாக, அறிவு தொனிக்கப் பேசினார். அவர் பெயர் நினைவில்லை”
க.நா.சு. அந்தப்பெரியவர் தான் இம்முறையும் ஸ்பெண்டரின் நிகழ்ச்சிகள் இரண்டிற்காவது தலைமை தாங்க இருப்பவர் என்று சொல்கிறார்.
அவர் ஹிண்டுவில் Defacto editor ஆக இருந்த நா.ரகுநாதய்யர். 

Truly Great. 
இவரைப்பற்றி தான் அந்த ஆங்கிலக்கவி பெருமையாக நினைவு கூர்ந்திருக்கிறார். 
Defacto editor? ஹிண்டு பத்திரிக்கையில் இப்படி ஒரு வேலை? defacto = Actual, Real.  Actual Editor! 
ஸ்பெண்டரின் கவிதையின் இரண்டாவது பேராவின் முதல் வரி
What is precious, is never to forget
ஸ்பெண்டருக்கு ஜெமினி ஸ்டுடியோவில் வாசன் ஒரு விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தின் போது ஆர்.பாஸ்கரன் என்பவர் ஸ்டீபன் ஸ்பெண்டரை சந்தித்திருக்கிறார்.
 பித்தப்பூ நாவலில் தியாகராஜன் என்பவரை முக்கிய  கதாபாத்திரமாக க.நா.சு. எழுதியிருப்பார்.
 தஞ்சை ப்ரகாஷ் வெளியிட்ட நாவல் பித்தப்பூ.
நாவலில் ஸ்டீபன் ஸ்பெண்டரும் வருவார். 

வாசன் ஔவையார் படம் போட்டு காட்டியிருக்கிறார். ஸ்பெண்டருக்கு முழு படமும் பார்க்க பொறுமையிருக்கவில்லை. வாசன் விளக்க முற்பட்டது பலன் தரவில்லை.
ஔவையார் பற்றி ஸ்பெண்டர்
“ Magical picture” என்று க.நா.சுவிடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்.  ரசிக்க முடியவில்லை. பாதி படத்தில் க.நா.சு.வுடன் பிடிவாதமாக கிளம்பி விட்டார்.
அப்புறம் ஆங்கில கவி பம்பாய்க்கு போன போதும் ஔவையார் விரட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஜெமினி வாசன் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படத்தை ஸ்பெண்டர் பார்க்கும்படி செய்து விட்டார்.
ஆனால் ஹிண்டு நா.ரகுநாதய்யர் was precious, was never to forget. Truly great. எந்தரோ மஹானுபாவலு, அந்தரிக்கி வந்தனமு.

க.நா.சுவையும் ஸ்பெண்டரால் மறந்திருக்க முடிந்திருக்காது. 




Mar 27, 2018

எஸ்.எஸ்.வாசன் மீதான அசோகமித்திரனின் கசந்த நினைவுகள்


ஜெமினி ஸ்டுடியோ பற்றி எஸ்.எஸ்.வாசன் பற்றி எத்தனை சிறுகதைகளில், நாவல்களில், கட்டுரைகளில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். ’மானசரோவர்’ ஸ்டுயோ முதலாளியும் வாசனே.
மிகக் கடுமையான வார்த்தைகளால் ’வண்ணங்கள்’ கதையில் ஜெமினி முதலாளியைப் பற்றி “தேவடியாளுக்கெல்லாம் கொட்டி அளந்தாங்க. வீடு வீடாக் கட்டிக் கொடுத்தாங்க. காரு வாங்கிக்கொடுத்தாங்க. எங்களுக்குப் பத்தணா கொடுக்க பிசிநாறித்தனம்..”
”எத்தினி தொழிலாளிங்க வயத்தெரிச்சலையும் வேதனையையும் வாங்கிக் கட்டிட்டாங்க. அந்த படுபாவிங்க! அவுங்க வம்சமே உருப்படாமத் தெருத் தெருவா நாறும்.”
ஜெமினி ஸ்டுடியோவில் ஆஃபிஸ் பாய் அந்தோணியின் சாபம்.

”பதினெஞ்சு வருஷம் என் பொண்டாட்டி பிள்ளையைச் சாகக் கொடுத்து உழைச்சேன், வெளியில போறப்போ கையிலே ஆயிரம் ரூபா கூடத் தரலே..எட்டு நூறு ரூபா கொடுத்தான் அந்த முதலாளி”
”லிங்கிச்செட்டி தெருவிலே, பதினாறு வருஷம்.. அந்த மார்வாடி எவ்வளவு கொடுத்தான் தெரியுமா? இருபத்தைந்தாயிரம்!”
அசோகமித்திரனின் கதைகளில் நூறு கதைகள் படித்து விட்டு ஒரு கதையைக்கூட மறக்கத்தான் முடியுமா?
‘.
ஜெமினி ஸ்டுடியோவில் தன் மனமும், உடலும் அனுபவித்த தாள முடியாத வியாகுல துயரங்களைப் பற்றி எவ்வளவு கதைகளில் கோடிட்டிருக்கிறார்.

பழைய நினைவுகள் மனதைக் குதறிப் போடாமலிருக்க காலம் தேவைப்படுகிறது.’ என்பார் அசோகமித்திரன்.
காலத்தையும் மீறித்தான் அசோகமித்திரனின் மனம் பழைய நினைவுகளால் குதறிப்போடப்பட்டிருக்கிறது.
சும்மா யாருன்னாலும் “ There is no wound that time cannot heal” என்று சொல்லிக்கொள்ளலாம் தான். புண் உமிழ் குருதி. சீழ் கோர்க்கும் புண்களாய் கடந்த கால கசந்த நினைவுகள்.
’வண்ணங்கள்’ கதையில் எஸ்.எஸ்.வாசன், ஜெமினி ஸ்டுடியோ மீதான தன் தீராத கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வண்ணங்கள் தொடும் பரிமாணங்கள் தான் எத்தனை?
அந்தோணிக்கு சென்னையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பேய், பிசாசு இருக்கிறது என்பதைப்பற்றி தீர்மானமான அபிப்ராயம்.
அசோகமித்திரன் “ நிஜமான பிசாசு எது தெரியுமா? இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் எஜமானன், இவன் வேலைக்காரன், இவன் சம்பளம் தர்றவன்னு இருக்கே. இந்த அமைப்பு. இது தான் நிஜமான பிசாசு. இந்தப் பிசாசு இல்லேன்னா அரை வயத்துக்குச் சாப்பிட்டாக்கூட நீயும் நானும் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். இந்தப் பிசாசுக்கு ஆயிரக்கணக்கான வருஷம் வயசாயிருக்கு. அது பெரிசாயிண்டே போறது. இந்தப் பிசாசை ஒழிச்சுட்டா நீ சொல்ற பிசாசெல்லாம் தானாகவே செத்துப்போயிடும்..”
‘அப்போதெல்லாம் எங்கள் முதலாளி தொழிற்சங்கம், அரசு அமல்படுத்த விரும்பிய தொழிற்சட்டங்கள் மீது மிகுந்த சந்தேகம் உடையவராக இருந்தார். யூனியன், கம்யூனிஸ்ட் இதெல்லாம் அங்கு தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமானால் அபாயகரமான சொற்கள், சிந்தனைகள்.’
அந்தோணி, மாணிக்கராஜ், மாணிக்க வாசகம், முனுசாமி, நாயர்…
“ இவர்கள் எல்லோருக்கும் நான் அதிகாரி என்று தோன்றினாலும், நடைமுறையில் நாங்கள் எல்லாரும் ஒரே மாதிரி வேலை, ஒரே அளவு வேலை பார்த்தோம்” என்று போட்டு உடைக்கிறார் அசோகமித்திரன்.
தவிர பத்து டிரைவர்கள், இரண்டு கிளீனர்கள், பெருக்குபவர்கள், தோட்டிகள், வாச்சுமென்கள், தோட்டவேலைக்காரர்கள் என்று ஒரு சைன்யம்.
இவர்களுக்காக கடன் விண்ணப்பங்கள், சம்பள அட்வான்ஸ் விண்ணப்பங்கள், பதினைந்து நாட்கள் காணாமல் போய் விட்டதற்கு மனமுருகும் மன்னிப்பு கடிதம்...என் பேனாவில் மையூற்றி எழுதவில்லை. கண்ணீரையூற்றி எழுதினேன். கண்ணீரை வரவழைக்க வெங்காயச்சாறு நிரப்பி எழுதினேன் என்று அசோகமித்திரன் எத்தனை கதைகளில் எழுதி விட்டிருக்கிறார்.
ஜெமினி ஸ்டுடியோவின் Sister concern ஆனந்த விகடனில் இவர் வேலை பார்த்திருந்தால் நன்றாயிருந்திருக்குமா? ஒரு மகத்தான இலக்கியவாதியாக கணையாழியில் தன் எழுத்துக்கு மேடை கண்ட அசோகமித்திரன்.
சினிமா ஸ்டுடியோவில் இளமை கழிவதற்கு பதிலாக பத்திரிக்கையில் தானே ஒரு எழுத்தாளன் சேர்ந்திருந்திருக்க முடியும்.
ஆனால் பின்னால் தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய ஜெமினி வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்திருக்காதே.

Mar 6, 2018

பாப்ஜி


நடிகை புஷ்பவல்லியின் மூத்த மகன் பாப்ஜியை ஹிந்தி நடிகை ரேகாவின் சகோதரர் என்று சொன்னால் இன்று புரியும்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, குட்டி பத்மினி இருவரின் மூத்த சகோதரி விஜயலட்சுமி அவர்களின் கணவர்.
அழகானவர் பாப்ஜி என்று சொல்லத் தேவையில்லை. புஷ்பவல்லி தமிழ் திரை கண்ட மிக அழகான நடிகைகளில் ஒருவர்.
பாப்ஜியின் அப்பா யார்? ஜெமினி ஸ்டுடியோவில் நட்சத்திரமாக ஜொலித்தவர் புஷ்பவல்லி. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தான் பாப்ஜியின் அப்பா என்ற சந்தேகம் கூட இன்றும் உண்டு.
ஒரு இயக்குனரின் மனைவியாக புஷ்பவல்லி இருந்திருக்கிறார். அவர் யார் என்று தெரியவில்லை.
பாப்ஜியின் பாஸ்போர்ட்டில் அவருடைய தந்தை பெயராக ஜெமினி கணேசன் பெயர் தான் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஜெமினி கணேசன் முதல் மனைவி பெயர் கூட பாப்ஜி தானே!)
பாப்ஜியின் இளைய சகோதரிகள் ரேகா, ராதா என்ற இரு குழந்தைகள் ஜெமினி கணேசனுடன் வாழ்ந்த போது புஷ்பவல்லிக்கு பிறந்தவர்கள்.
ஜெமினி கணேசனை விட்டு பிரிந்த பின் புஷ்பவல்லிக்கு ஒரு மியூசிக் டைரக்டருடன் வாழும்படியான நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மியூசிக் டைரக்டருக்கும் புஷ்பவல்லிக்கும் தனலட்சுமி, ஷேசு என்று இரண்டு புத்ரங்கள்.
அந்த தெலுங்கு மியூசிக் டைரக்டர் பெயர் பிரகாஷ் ராவ் என்று கேள்வி.
இயக்குனர் வேதாந்தம் ராகவையாவின் மனைவி நடிகை சூரிய பிரபா தான் புஷ்பவல்லியின் உடன் பிறந்த தங்கை.
சூரிய பிரபாவின் மகள் சுபா தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்தவர் தான். பட்டிக்காடா பட்டணமாவில் சிவாஜி “ என்னடி ராக்கம்மா” என்று இவரை பார்த்து தான் பாடுவார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் கண்ணாடி போட்டு மூத்த சகோதரியாக சுபா நடித்திருக்கிறார்.
பாப்ஜி தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான்.
வியட்நாம் வீடு படத்தில் சைக்கிளில் வந்து சிவாஜி கணேசனின் மகளை காதலிப்பது பாப்ஜி தான்.
குல விளக்கு படத்தில் சரோஜாதேவியின் தம்பியாக மெடிக்கல் கல்லூரி மாணவராக நடித்திருப்பவர் பாப்ஜி.
பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜெயலலிதாவுக்கு Fix செய்யப்பட்ட மாப்பிள்ளையாக நடித்திருக்கிறார்.
கவனிக்கும்படியான நல்ல கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைக்கவில்லை.
பாப்ஜி ஒரு Multi-dimensional person.
பாப்ஜி கதாநாயகனாகவும் குட்டி பத்மினி கதாநாயகியாகவும் நடிக்க ஒரு படம் 1970களின் முன் பகுதியில் தயாரானதுண்டு.

“அவளில்லாமல் நானில்லை”
படத்தின் தயாரிப்பாளர் பாப்ஜியின் மாமனார் சக்ரவர்த்தி.
’அவளில்லாமல் நானில்லை’ படத்திற்கு கதை வசனம், பாடல்கள், இசை, இயக்கம் எல்லாமே பாப்ஜி தான்.
திரைப்படம் எடுப்பதே ஒரு Herculian Task. இந்த பெருமுயற்சியில் சக்ரவர்த்தியாலும் பாப்ஜியாலும் வெற்றி பெறவே முடியவில்லை.
விஜயலட்சுமியின் சொந்த சித்தி முன் முன். இவருடைய மகள் உஷாவின் கணவர்
டி.ராஜேந்தர் 1980களில் சாதிக்க முடிந்ததை ஒரு பத்து வருடம் முன் விஜயலட்சுமியின் கணவரால் சாதிக்க முடியவில்லை.

பாப்ஜியின் மாமியார் ரூத் என்ற ராதாபாய் அவர்கள் சரோஜா தேவி, சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா ஆகியோரின் ஹேர் ட்ரஸ்ஸர் ஆக இருந்தவர். 
பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
ரேகா ’சாவன் பாதன்’ இந்தி படத்தின் மூலம் அகில இந்திய நடிகையாக உயர்ந்த பின் பாப்ஜியை உயர்த்த முயற்சித்திருந்தால் ஒருவேளை இவர் தன் திரை முயற்சிகளில் ஜெயித்திருக்கலாம். ஆனால் அப்படி தெரியவில்லை.
எத்துனை பின்புலம் இருந்தாலும், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் திரையுலகில் ஏன் ஜொலிக்க முடியவில்லை என்கிற புதிருக்கு விடையில்லை.
………………………………………………..
பாப்ஜி உணவு உண்ணும் போதே அவருக்கு உயிர் பிரிந்திருக்கிறது. விஜயலட்சுமி இன்று பெந்தகோஸ்ட் கிறிஸ்தவராக முதுமையில் வாழ்கிறார்.
பாப்ஜியின் புகைப்படம் கிடைக்கவில்லை.
இந்த Write up எழுத வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் உதவியும் கிடைத்தது. அவருக்கு என் நன்றி

……………………………………




Dec 29, 2014

வாசன்,பாலன்,ஜெயகாந்தன்



ஆனந்த விகடன் (31.12.2014 தேதியிடப்பட்டது) ஜெயகாந்தன் பேட்டி குறித்து சில வார்த்தைகள்.
ஜெயகாந்தன் அந்தக்காலத்தில் எஸ்.எஸ்.வாசன் குறித்து சொன்னதையெல்லாம் இந்தப்பேட்டியில் மகன் எஸ்.எஸ்.பாலன் மேல் ஏற்றி சொல்கிறார்.

ஆனந்த விகடன்  முதலாளி வாசன் இவருக்கு எழுத வாய்ப்பு  கொடுத்த போது ஜெயகாந்தன் வயது 20 எனில் அது 1954ம் ஆண்டு.


இந்த விஷயம் " அது தான் வருத்தமாக இருக்கிறது பாலு!" பேட்டியில் பாலன் வாய்ப்பு கொடுத்ததாக பதிவாகியிருக்கிறது.
இது ஜெயகாந்தன் தவறாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பேட்டியை எழுத்தாக்கம் செய்துள்ள தமிழ்மகன் செய்துள்ள தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு.
 
பாலன் மீதுள்ள அதீத விசுவாசம் காரணமாக வாசன் பற்றி குறிப்பிட்ட விஷயத்தையெல்லாம் பாலன் மீதேற்றியிருக்கலாம்.
பேட்டியில் முன்பகுதியில் உள்ள விஷயங்கள் வாசன் சம்பந்தப்பட்டவை.

முத்திரைக்கதைகள் பத்தாண்டு காலம் எழுதியதெல்லாம் வாசன் உபகாரம்.'அக்னிப்ரவேசம்' கதை கொந்தளிப்பின் போது  'நீங்கள் எழுதுங்கோ' என்று பச்சைக்கொடி காட்டிய பண்பாளர் வாசன் தான்.
அதெல்லாம் இந்தபேட்டியில் பாலன் என்பது போல பதிவாகியிருக்கிறது.

இன்னொரு விஷயம். 'இதயம் பேசுகிறது' மணியன் ஆனந்த விகடனில் வேலை பார்த்த போது தான் ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத்தொகுப்பை  முதலாளி பார்வைக்கு வைத்து அதை வாசித்த வாசன் ஜெயகாந்தனுக்கு முத்திரைக்கதைகள் எழுத வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

1954ல் ஜெயகாந்தனுக்கு 20 வயது என்றால் எஸ்.எஸ். பாலனுக்கு
அப்போது 19 வயது தான்!
பத்தாண்டு காலம் முத்திரைக்கதைகள் எழுதியுள்ளார். வாசன் மறைந்த ஆண்டு 1969.
அப்பாவுக்கு உதவியாக பட்டத்து இளவரசர் சகல அதிகாரத்துடன் இருந்திருக்கலாம் தான். ஏவிஎம் செட்டியார் காலத்தில் சரவணன் பட வேலைகளையெல்லாம் பார்த்தவர் தான். அது போல ஸ்டுடியோ நிர்வாகத்திலும், பத்திரிக்கையிலும் பாலன் செயல் பட்டிருக்கலாம்.

ஜெமினியின் தரமான தயாரிப்புகளான 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'வாழ்க்கைப்படகு' பாலன் இயக்கிய படங்கள் தான். வாசன் இறப்பதற்கு  நான்காண்டுகளுக்கு முன் வந்த படங்கள்.

சிவாஜி,ஜெமினி கணேசன் இருவரையும் இயக்கியவர்.
1974ல் எம்.ஜி.ஆர் படம் 'சிரித்துவாழவேண்டும்' பாலன் இயக்கம் தான்.

ஆனால் ஜெயகாந்தன் எப்போதும் வாசனையே தன் வாழ்க்கைக்கு வழி திறந்தவர் என்பதாக  நிறுவியிருக்கிறார். அதோடு வாசன் காலத்திற்கு பின் பாலன் நிர்வகித்த ஆனந்த விகடன் பத்திரிக்கை மீது மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்.


வாசன் பற்றி அதிகம் நினைவு கூர்ந்த தமிழ்படைப்பாளிகள் இருவர்.

ஒருவர் ஜெயகாந்தன். பத்திரிக்கை அதிபர் வாசன் பற்றி பேசியவர்.

மற்றொருவர் அசோகமித்திரன். ஸ்டுடியோ அதிபர் சினிமாக்காரர் ஜெமினி வாசன் பற்றி பேசியவர்.

Dec 28, 2014

A double drop



Willful ignorance 

ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் கொடுத்துள்ள பேட்டியில் மறைந்த ஆசிரியர் பற்றி அஞ்சலியாக ரொம்ப உயர்வாக சொல்லியிருக்கிறார். சரிதான்.

http://nadappu.com/wp-content/uploads/2014/07/jayakand_1.jpg

  


ஆனால் 1970களில் ஆனந்தவிகடனைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும்போது
 " அன்று எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடனில் ஜெயகாந்தனுக்கு இருந்த மரியாதை கம்பனுக்கு மன்னன் குலோத்துங்கன் செய்த மரியாதைக்கு சமம்." என்று வாசனைப்பற்றி மிக உயர்வாக  குறிப்பிட்டு பின் எஸ்.பாலசுப்ரமணியன்  நிர்வகித்த ஆனந்த விகடன் மீது தன் கடுமையான அதிருப்தியை அடிக்கடி அரசியல் மேடையில் கூட வெளிப்படுத்தியிருக்கிறாரே!'

 Tactical stupidity!What areas of the skull must be traumatized to cause selective amnesia?!


"Facts do not cease to exist because they are ignored."
—Aldous Huxley


................................

இரண்டு காட்சிகள்
      

"சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் ஸ்ரீவித்யா எழுதும் காதல் கடிதங்களை படிக்காமலே சிவ்குமார் போஸ்ட் செய்வார்.
தன்னை காதலிக்கவில்லை என்பது தெரியவரும்போது சிவகுமாரிடம் மெதுவாக கேட்பார். "நான் உங்க கிட்ட போஸ்ட் செய்யச்சொன்ன கடிதங்களை ஒரு தடவை கூட படிக்கனும்னு உங்களுக்கு தோணவே இல்லையா சார்"
'அதெப்படிங்க.. நீங்க இன்னொருவருக்கு எழுதிய கடிதத்தை நான் படிக்க முடியும்!' - சிவகுமார் பதில்.
இந்த பதிலால் இழப்பின் பரிமாணம் அதிகமாகி விட்ட சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஸ்ரீவித்யா சொல்வது :" நீங்க ஒரு ஜெண்டில் மேன் சார்.."
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்.
கே.பாலச்சந்தர் படக்காட்சிகளில் மேன்மையான ஒன்று இது.
படு நாடகத்தனமான காட்சி ஒன்று
"புதுப்புது அர்த்தங்கள்" படத்தில்
சித்தாரா தன் கணவன் சத்யனுடன் ( நடிகர் ராஜேஷின் தம்பி) மீண்டும் இணையும்போது முடவனான கணவன் தன் கால்களான இரு கட்டைகளையும் உடனே,உடனே தூக்கி வீசிவிடுவது! ஏன் தூக்கி வீசவேண்டும்!?
.....................