Share

Showing posts with label ப.சிங்காரம். Show all posts
Showing posts with label ப.சிங்காரம். Show all posts

Mar 16, 2021

ப. சிங்காரம்

 ப.சிங்காரம்


ப. சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன்.

மணிக்கொடி சிட்டி தான் அவருடைய எழுத்து பற்றி என்னிடம் கவனப்படுத்தினார். 


 நானும்  சரவணன் மாணிக்கவாசகமும் சேர்ந்து 

அவரை பார்க்கப் போயிருந்தோம். 


 'புயலிலே ஒரு தோணி ' 'கடலுக்கு அப்பால் 'நாவல்களை படித்து மலைத்து போய்விட்டோம். 


மதுரை Y.M.C.A யில் அப்போது அவர் தங்கியிருந்தார். 


ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என பழங்கள் வாங்கி அவருக்கு கொண்டு போயிருந்தோம். 


 அவருடன் அவர் அறையில் வேறு 

இரு இளைஞர்கள் தங்கியிருந்தனர். 

ப. சிங்காரம் எங்களை சந்தித்த நிலையில் 

மிகவும் நெகிழ்ந்திருந்தார். 

அவர் கண்ணில் தெறித்த அன்பு விஷேசமானது. 


அவர் தன் நாவல்கள் பற்றி சாதாரணமாக தான் பேசினார். 


நவீன தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள், பத்திரிகைகள் தனக்கு அன்னியம் என்றே சொன்னார். ஆச்சரியமாயிருந்தது.

'நான் தினத்தந்தியில் வேலை பார்த்தவன். எனக்கெப்படி உங்கள் இலக்கிய உலகம் பற்றி தெரியும்.'


அவருடன் Y.M.C.A வால் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் அலட்சியமாக இருந்தனர். 

சிநேக பாவமே அவர்களின் நடவடிக்கைகளில் இல்லை. பொதுவாக ஹாஸ்டல் அறைகளில் உடனிருப்போர் இணக்கமாக அமைவது சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை. அதிலும் இவர் மகத்தான படைப்பாளி. கேட்க வேண்டுமா? வயதிலும் அந்த ரூம் மேட் களுக்கு மிகவும் மூத்தவர். 


பின்னால் Y.M.C.A நிறுவனம்

 கட்டிடம் புதுப்பிக்க  வேண்டியிருக்கிறது என காரணம் காட்டி நிர்ப்பந்தமாக வெளியேற்றியதையும், 

இவர் விருப்பமின்றி நாடார் மேன்சனில்

 அந்திம காலத்தில் தங்கியிருந்ததையும்

இப்போது எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது .


... 


காலச்சுவடு கண்ணன்  ப .சிங்காரத்தின் வாசகர் கடிதம் சி.சு . செல்லப்பாவின் 'எழுத்து ' இதழ் ஒன்றில் வெளியாகியிருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது ஆச்சரியமாக இருந்தது. 


இதை தொட்டு நான் அதற்கு எதிர்வினையாக எழுதியிருந்த கடிதம் காலச்சுவடில் பிரசுரமானது.


பொதுவாக நான் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியதே இல்லை. இது கூட விஷய முக்கியத்துவம் கருதி தான். 


புயலிலே ஒரு தோணி நாவல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.


அவரை சந்திப்பதற்கு முன் அந்த நாவலில் உள்ள விஷயங்கள் பற்றி, (அதோடு வேறு பல குறிப்புக்களுமாக )ஒரு நோட் புத்தகத்தில் நான் எழுதியிருந்த குறிப்புகளை பார்த்து விட்டு கோணங்கி

 ' இதை அப்படியே புத்தகமாக போடலாம் ' என சிலாகித்தான். அந்த நோட் புத்தகம் தொலைந்து விட்டது.


ஒரு விஷயம். இப்போது காணக்கிடைக்கும்

 ப. சிங்காரத்தின் புகைப்படங்கள்

 அய்யனார் ஆனந்த் (பௌத்த அய்யனார்) முயற்சியின் காரணமாக நமக்கு கிடைத்தவை.


http://rprajanayahem.blogspot.com/2020/03/blog-post_22.html?m=0


https://rprajanayahem.blogspot.com/2020/03/blog-post_18.html?m=0

... 


மீள் 2008


Mar 22, 2020

" என்னடா இங்க வந்துட்ட"

There are more things in heaven and earth
 than are dreamt of in your philosophy

- Shakespeare in Hamlet

வண்ண நிலவன் 'கடல் புரத்தில்' நாவலை படமாக்க வேண்டும் என
முகேஷ் சுப்ரமணியம் என்று ஒரு இளைஞன் ஆசைப்பட்டு கோணங்கியிடம் சொல்லியிருக்கிறான்.

முகேஷை அழைத்துக் கொண்டு போய்
வண்ண நிலவனிடம் கோணங்கி அறிமுகப்படுத்தி விஷயத்தை சொன்ன போது,
அவர் கோணங்கிக்காக பணம் எதுவும் வாங்க மறுத்து கடல் புரத்தில் நாவலை படமெடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார்.

வண்ண நிலவன் நாவலை மிகுந்த ஈடுபாட்டுடன் முகேஷ் சுப்ரமணியம் படமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

சர்ச் காட்சிகளில் போர்ச்சுகீஸிய இசை ரீரிக்கார்டிங் ஆக இணைத்து பிரமாதமான அர்ப்பணிப்பு.
படம் முடிக்க முடியவில்லை.

கோணங்கியின் அபிப்ராயத்தில் இந்த படம் முழுமையாக முடிக்கப்பட்டு வெளி வந்திருந்தால் அற்புதமான செல்லுலாயிட் ஓவியம்.

பொருளாதார விஷயம் எப்படியெல்லாம் நல்ல பெரு முயற்சியை காவு வாங்கி விடுகிறது?

ஆனால் எந்த நோக்கத்திலும் வேறு  விதமான சிறப்பான விளைவு இருக்கவே செய்கிறது.

முடியாத கடல்புரத்தில் கதாநாயகி பிலோமியாக நடித்த பெண்ணுக்கும், இயக்குநர் முகேஷுக்கும் காதல் முகில் கூடியது.

அந்த பிலோமியாக வேடந்தரித்த பெண்ணின்
ஊர் சிங்கம்புணரி.

சிங்கம்புணரியில் திருமணம் செய்து கொள்ள
 ஒரு வீடு பத்து நாளுக்கு வாடகைக்கு இந்த இளம் ஜோடி எடுத்திருக்கிறார்கள்.

அந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள கோணங்கி சிங்கம்புணரிக்கு போயிருக்கிறான்.
ப. சிங்காரத்தின் சொந்த ஊர்.

சிங்காரம் தாத்தாவின் ஈமக்ரியை சொந்த ஊரில் தான் இறந்த பின் நடந்திருக்கிறது.

அங்கே இந்த திருமணம் இப்போது.

கோணங்கி அங்கே தெருவில் சிங்காரம் தாத்தா நடந்து வருவதை கண்ணால் பார்த்திருக்கிறான்.

"டேய், என்னடா இங்க வந்துட்ட " - சிரித்த முகத்துடன்
ப. சிங்காரம் கேட்டுக்கொண்டே நடந்து போனாராம்.

One need not be a chamber to be haunted

- Emily Dickinson

கோணங்கி அந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி விட வேண்டும் என்று முடிவே செய்து விட்டான்.

வேலை பார்ப்பவர்க்கு தான் வீடு கொடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள்.

கோணங்கியின் திட்டம் இதனால்
தகர்ந்து போனது.

https://m.facebook.com/story.php?story_fbid=2680551848824931&id=100006104256328

..............................................................................................

.

Mar 18, 2020

மதுர கவர்னரும் மதுர காவல் தெய்வமும்

மதுரை டவுன் ஹால் ரோட்டில் ஒப்பனைகள் கலைந்தெறிந்த ஜி.நாகராஜன்,
நிரந்தர தற்கொலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாநாம்,
மவுண்ட் ரோட்டில் பட்டினியும் வறுமையும் பின் துரத்த சிற்பியின் நரகத்தை எழுதிக்கொண்டிருக்கும் புதுமைப்பித்தன்

- கோணங்கி

கோணங்கியை மிகவும் பாதித்த இரண்டு மதுரை கண்ட எழுத்தாளர்கள்
ப. சிங்காரம், ஜி. நாகராஜன்.

'மதுரைக்கு வந்த ஒப்பணைக்காரன்' கதையிலும் 'சபிக்கப்பட்ட அணில்' சிறுகதையிலும்
ஜி. நாகராஜன் காணக்கிடைப்பார்.

'த ' நாவலில் உள்ளிருக்கும் "மங்கம்மாள் சத்திரம் வால் க்ளாக்"
டிக்டாக் - 1, டிக் டாக் - 2, டிக் டாக்- 3, டிக் டாக்- 4

திண்டுக்கல் ரோட்டில் Y. M. C. A க்கு வந்த பர்மா அகதி ஒருவன் கேட்கிறான் "சிங்காரம் தாத்தா இருக்கிறாரா?"

கண் தெரியாத டெலிபோன் பூத் இளைஞன் சொல்கிறான் "சிங்கம்புணரிக்கு போயிருக்கிறார்"

இந்த குருடன் தீவிர வாசகன். டெலிபோனில் பிறரை வாசிக்க சொல்லியே நிறைய நூல்களை படிக்கிறவன்.

திருமங்கலத்திற்கு போன் போட்டு ஜி. நாகராஜன் எழுத்திற்காக தேடுகிறான்.

ஒரு பெண் குரல் வாசித்து காட்டுகிறது.

கோணங்கியிடம் பேசுவது விசேஷமானது.

மதுரை கவர்னர் ப. சிங்காரம்.
மதுரை நகரின் காவல் தெய்வம் ஜி. நாகராஜன் என்ற கோணங்கியின் உருக்கம் உறுதியானது.

மதுரை இலக்கியம்னு போறவன அதிசய புகைக்காரனா மாத்திடும்.

எல்லா குதிரை வண்டிக்காரனும், ரிக் ஷா வண்டிக்காரனும் ஜி. நாகராஜன் தான்.

மதுர குதிரை வண்டிக்காரனெல்லாம் பதினென் கீழ் சித்தர்கள்.

இலக்கியவாதிகள நீட்ஷே ஆக்கி விடும் மதுர.

ப. சிங்காரம் டால்ஸ்டாய்னா ஜி. நாகராஜன் செக்காவ் தான்னு கோணங்கியின் திண்ணம்.

'மங்கம்மாள் சத்திரம் வால்க்ளாக்'ல ப. சிங்காரமும் ஜி. நாகராஜனும்.

மதுரை VTC பிரின்சிபால் ஜெகதீசன், STC பிரின்சிபால் சங்கர நாராயணன் ஆகிய இரண்டு டுட்டோரியல் காலேஜ்காரர்களோடு ஜி. நாகராஜன் சேர்ந்து போய்
ப. சிங்காரத்தை சந்திப்பதுண்டு.
Y.M.C.A யை ஒட்டியிருந்த மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட்டில் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள்.

பின்னாளில் கோணங்கியிடம் ப. சிங்காரம்
தான் 'தெற்கில் ஒரு இடம்' என்று ஒரு நாவல் எழுத இருப்பதாக கூட அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

கோணங்கி அந்த திண்டுக்கல் ரோட்டில் அவரை பார்க்க போனாலே Y. M. C. As இருந்து கிளம்பி மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட் தான்.

கோணங்கிக்கு டி. ஹெச். லாரன்ஸின் ரெயின் போ
ப. சிங்காரம் கொடுத்திருக்கிறார். இது போல முருகேச பாண்டியனுக்கும் ஒரு புத்தகம் கொடுத்தாராம்.

ப. சிங்காரத்தின் மரணத்திற்கு  பிறகு அவருடைய சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு
ஒரு கல்யாணத்திற்கு கோணங்கி போயிருந்த போது
ப. சிங்காரம் ''டேய் என்னடா, இங்க வந்துட்ட " என்று கேட்டுக் கொண்டே  தெருவில் நடந்து போனாராம்.

(தொடரும்)

Mar 16, 2020

ப. சிங்காரம்

ப.சிங்காரம்

ப. சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன்.
மணிக்கொடி சிட்டி தான் அவருடைய எழுத்து பற்றி என்னிடம் கவனப்படுத்தினார்.

 நானும் சரவணன் மாணிக்கவாசகமும் சேர்ந்து
அவரை பார்க்கப் போயிருந்தோம்.

 'புயலிலே ஒரு தோணி ' 'கடலுக்கு அப்பால் 'நாவல்களை படித்து மலைத்து போய்விட்டோம்.

மதுரை Y.M.C.A யில் அப்போது அவர் தங்கியிருந்தார்.
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என பழங்கள் வாங்கி அவருக்கு கொண்டு போனேன்.

 அவருடன் அவர் அறையில் வேறு
இரு இளைஞர்கள் தங்கியிருந்தனர்.
ப. சிங்காரம் எங்களை சந்தித்த நிலையில்
மிகவும் நெகிழ்ந்திருந்தார்.
அவர் கண்ணில் தெறித்த அன்பு விஷேசமானது.

அவர் தன் நாவல்கள் பற்றி சாதாரணமாக தான் பேசினார்.

நவீன தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள், பத்திரிகைகள் தனக்கு அன்னியம் என்றே சொன்னார். ஆச்சரியமாயிருந்தது.
'நான் தினத்தந்தியில் வேலை பார்த்தவன். எனக்கெப்படி உங்கள் இலக்கிய உலகம் பற்றி தெரியும்.'

அவருடன் Y.M.C.A வால் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் அலட்சியமாக இருந்தனர்.
சிநேக பாவமே அவர்களின் நடவடிக்கைகளில் இல்லை. பொதுவாக ஹாஸ்டல் அறைகளில் உடனிருப்போர் இணக்கமாக அமைவது சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை. அதிலும் இவர் மகத்தான படைப்பாளி. கேட்க வேண்டுமா? வயதிலும் அந்த ரூம் மேட் களுக்கு மிகவும் மூத்தவர்.

பின்னால் Y.M.C.A நிறுவனம்
 கட்டிடம் புதுப்பிக்க  வேண்டியிருக்கிறது என காரணம் காட்டி நிர்ப்பந்தமாக வெளியேற்றியதையும்,
இவர் விருப்பமின்றி நாடார் மேன்சனில்
 அந்திம காலத்தில் தங்கியிருந்ததையும்
இப்போது எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது .

...

காலச்சுவடு கண்ணன்  ப .சிங்காரத்தின் வாசகர் கடிதம் சி.சு . செல்லப்பாவின் 'எழுத்து ' இதழ் ஒன்றில் வெளியாகியிருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது ஆச்சரியமாக இருந்தது.

இதை தொட்டு நான் அதற்கு எதிர்வினையாக எழுதியிருந்த கடிதம் காலச்சுவடில் பிரசுரமானது.

பொதுவாக நான் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியதே இல்லை. இது கூட விஷய முக்கியத்துவம் கருதி தான்.

புயலிலே ஒரு தோணி நாவல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

அவரை சந்திப்பதற்கு முன் அந்த நாவலில் உள்ள விஷயங்கள் பற்றி, (அதோடு வேறு பல குறிப்புக்களுமாக )ஒரு நோட் புத்தகத்தில் நான் எழுதியிருந்த குறிப்புகளை பார்த்து விட்டு கோணங்கி
 ' இதை அப்படியே புத்தகமாக போடலாம் ' என சிலாகித்தான். அந்த நோட் புத்தகம் தொலைந்து விட்டது.

ஒரு விஷயம். இப்போது காணக்கிடைக்கும்
 ப. சிங்காரத்தின் புகைப்படங்கள்
 அய்யனார் ஆனந்த் (பௌத்த அய்யனார்) முயற்சியின் காரணமாக நமக்கு கிடைத்தவை.

Oct 2, 2008

ப .சிங்காரம்

ப . சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன் . நானும் என் நண்பர் M .சரவணனும் . 'புயலிலே ஒரு தோணி ' 'கடலுக்கு அப்பால் 'நாவல்களை படித்து மலைத்து போய்விட்டோம் . மதுரை Y.M.C.A யில் அப்போது அவர் தங்கியிருந்தார் . ஆப்பிள் , ஆரஞ்சு , திராட்சை என பழங்கள் வாங்கி அவருக்கு கொண்டு போனேன் . அவருடன் அவர் அறையில் வேறு இரு இளைஞர்கள் தங்கியிருந்தனர் . ப . சிங்காரம் எங்களை சந்தித்த நிலையில் மிகவும் நெகில்ந்திருந்தார் . அவர் கண்ணில் தெறித்த அன்பு விஷேசமானது . அவர் தன் நாவல்கள் பற்றி சாதாரணமாக தான் பேசினார் . மணிக்கொடி சிட்டி , சி . மோகன் இருவரையும் நன்றியோடு குறிப்பிட்டார் .அவர்கள் தான் புயலிலே ஒரு தோணியை பரவலாக தமிழ் வாசகர்களுக்கு கவனபடுத்தியவர்கள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் . நவீன தமிழ் இலக்கியம் , எழுத்தாளர்கள் , பத்திரிகைகள் தனக்கு அன்னியம் என்றே சொன்னார் . ஆச்சரியமாயிருந்தது .
'நான் தினத்தந்தியில் வேலை பார்த்தவன் . எனக்கெப்படி உங்கள் இலக்கிய உலகம் பற்றி தெரியும் .'

அவருடன் Y.M.C.A வால் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் அலட்சியமாக இருந்தனர் . சிநேக பாவமே அவர்களின் நடவடிக்கைகளில் இல்லை . பொதுவாக ஹாஸ்டல் அறைகளில் உடனிருப்போர் இணக்கமாக அமைவது சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை . அதிலும் இவர் மகத்தான படைப்பாளி . கேட்க வேண்டுமா . வயதிலும் அந்த ரூம் மேட் களுக்கு மிகவும் மூத்தவர் .
பின்னால் Y.M.C.A நிறுவனம் அவரை வயதை காரணம் காட்டி வெளியேற்றியதையும் இப்போது எண்ணி பார்க்க வேண்டியுள்ளது .



காலச்சுவடு கண்ணன் சென்ற வருடம் ப .சிங்காரத்தின் வாசகர் கடிதம் சி.சு . செல்லப்பாவின் 'எழுத்து ' இதழ் ஒன்றில் வெளியாகியிருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது ஆச்சரியமாக இருந்தது . அப்போது நான் அதற்கு எதிர்வினையாக எழுதியிருந்த கடிதம் காலச்சுவடில் பிரசுரமானது .

பொதுவாக நான் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியதே இல்லை .இது கூட விஷய முக்கியத்துவம் கருதி தான் .

புயலிலே ஒரு தோணி நாவல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் .
அவரை சந்திப்பதற்கு முன் அந்த நாவலில் உள்ள விஷயங்கள் பற்றி , (அதோடு வேறு பல குறிப்புக்களுமாக )ஒரு நோட் புத்தகத்தில் நான் எழுதியிருந்த குறிப்புகளை பார்த்து விட்டு கோணங்கி ' இதை அப்படியே புத்தகமாக போடலாம் ' என சிலாகித்தான் . அந்த நோட் புத்தகம் தொலைந்து விட்டது .