Share

Nov 7, 2026

இப்படி மண்ணாந்தையா போயிட்டமே தம்பி


'பொன்னு' தீக்குளிச்சா 'நக'ன்னு தான கணக்கு. 
கூலி சேதாரம் இல்லாம 'நக'ன்னா..

விஞ்ஞான கணக்கு என்னமா முன்னேறுது.

Science and Technology!

இதெல்லாம் தெரியாத மண்ணாந்தையா போயிட்டமே. மண்ணாந்தையா போயிட்டமே.

வீடு தரையில, அஸ்திவாரம் மட்டும் அந்தரத்துலன்னு கூட வந்துடும் போலருக்கே. Architectural technology.

AI  பொஸ்தகம் எழுதுதே.

'இதெல்லாம் தெரியாத மண்ணாந்தையா போயிட்டமே தம்பி, மண்ணாந்தையா போயிட்டமே'ன்னு சுந்தர ராமசாமி கிட்ட தோழர் ஜீவா தலயில, தலயில அடிச்சிக்கிட்டத "பாத்தப்ப" கண்ணீரே வந்துடுச்சே. ச்சே..

https://www.facebook.com/share/p/1D5CtU8TSu/

Nov 6, 2026

A single Bird flying a Sunset sky


A single bird flying against a sunset sky

Every sunset writes a poem, and the bird carries its verses into the sky.

The metaphor of a single bird flying against a sunset sky illustrates the quiet strength found in being solitary.

It's cool when a bird watches the sunset with me.


......

Shakespeare Sonnet 73:

“When yellow leaves, or none, or few, do hang
Upon those boughs which shake against the cold,
Bare ruin’d choirs, where late the sweet birds sang.
In me thou see’st the twilight of such day
As after sunset fadeth in the west,
Which by and by black night doth take away,
Death’s second self, that seals up all in rest.”

Nov 5, 2026

கூத்துப்பட்டறை 2016

கூத்துப்பட்டறை 
ந.முத்துசாமி சதாபிஷேகம் 2016 
முத்துசாமி, மாமியுடன் அமர்ந்திருக்கும் 
R.P. ராஜநாயஹம் 

பத்து வருடங்களுக்கு பிறகு புகைப்படத்தை 
பார்க்கும் போது காலக்கண்ணாடி காட்டும் காட்சி 

முதலில் நிற்கும் முத்துக்குமார் சினிமாவில் பிரபலம். 
இரண்டாவதாக கூத்துப்பட்டறை மேனேஜர் பெருமாள். 
நான்காவதாக கலைச்சோழன் திருவள்ளுவராக நடித்தார்.
ஐந்தாவதாக நிற்கும் பாஸ்கர் இப்ப லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த DC படத்தில் பார்க்கலாம்.
ஆறாவதாக முகம் நீட்டும் பிரசன்னா 
'டூரிஸ்ட் ஃபேமிலி' Sadist SP.
எட்டாம் நபர் கமல் தீப் 'அழகி' சீரியலில் நட்ராஜ் ஆக நடித்து விட்டு தான் கூத்துப்பட்டறையில் சேர்ந்திருந்தார்.
அடுத்து நீள முடியுடன் சந்தோஷ்.
சட்டையில்லாமல் கடைசியாக நிற்கும் 
அருள் பிரகாஷ் இரண்டு படங்களில் ரஜினிக்கு டூப்.

Nov 4, 2026

புனைவிலி


கூட்டமா பல எழுத்தாளர்களுக்கு ரூபா ஆயிரம் செக் விருது வழங்குற விழாவில் அந்த எழுத்தாளரயும் பார்த்த போது " ஒங்க பேர வச்சி பாத்தா ஜிப்பா வேட்டியோட இருப்பீங்கன்னு நெனச்சா டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட்டோட இருக்கீங்க" ன்னு சொன்னேன்.
இந்த ஆயிரம் வாங்க வந்திருந்த இன்னும் மற்ற பா.ராகவன், பத்ரி, நாகூர் ரூமி ஆகியோரோடு 
வாசகனாக பேசிக்கொண்டு இருந்தப்ப இவர் சொன்னார் 'எனக்கு ட்ரெயினுக்கு நேரமாச்சி. ஹோட்டல் ரூமுக்கு போய் பேக் எடுத்துட்டு ரயில்ல ஏறனும்' 
செக் வாங்கிட்டு வர்ற பொறுப்ப மற்ற எழுத்தாள நண்பர்களிடம் ஒப்படச்சார். ஸ்கூட்டர்ல அவர ஹோட்டல் கூட்டிப்போய் அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விட்டு வந்தேன். 

சில வருடங்களுக்கு பிறகு பாரதி மணி போனில் பேசும் போது  ராஜநாயஹம் பற்றி, R.P. Rajanayahem blog பற்றி இந்த எழுத்தாளர் இலக்கிய கூட்டங்களில் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசுவதாக சொன்னார்.
ப்ளாக்கில் அவர் எழுதிய நாவலை குறிப்பிட்டு அதைப்பற்றி எழுதுங்கள் என அனானிமஸ் கமெண்ட். அந்த நாவல் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டு அனானிமஸ் கமெண்ட் வரும். இந்த கமெண்ட்களெல்லாம் அந்த நாவல் எழுதிய இந்த எழுத்தாளர் தான் போடுகிறார் என்பதில் அப்போது சந்தேகமே இல்லை. பதில் போட்டதில்லை. அந்த நாவல் பற்றியும் எழுதியதில்லை.

பல வருடங்களுக்கு பின் சென்னையில் கூத்துப்பட்டறையில் இருந்த போது ந.முத்துசாமி, மு. நடேஷுடன் போயிருந்த போது ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பார்த்த போது இந்த எழுத்தாளர் " அழகிய மிதிலை நகரினிலே பாட்டு கேட்டாலே ராஜநாயஹம் ஞாபகம் வந்து விடுகிறது" என்றார். பக்கத்திலிருந்த கவிஞர் வைத்தீஸ்வரன் சொன்னார் " ராஜநாயஹம் நன்றாக தெரியுமே" . ஞானக்கூத்தனுக்கு இரங்கல் தெரிவித்து முத்துசாமி பேசுவதற்கு முன் மேடையில் பேசினேன்.
அதன் பிறகு இந்த எழுத்தாளரை சந்திக்க வாய்த்ததேயில்லை.

https://www.facebook.com/share/1W3Dpv48MR/

Nov 1, 2026

சினிமா எனும் பூதம் 236, 237 episodes - "ரஜினிகாந்த்"

236, 237 episodes 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 

1. ரஜினி காந்த் part 1

2. ரஜினி part 2

08.11. 2026 Sunday 

15. 11. 2026 Sunday

......

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.