Share

Aug 17, 2024

அகம்பாவம்


பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேந்தர் படங்களில் வாய்ப்பு கிடைத்து, பிரபலம், வசதி, வாய்ப்பு கிடைத்து செழித்தவர்கள் ஏராளமானவர்கள்.

பாரதிராஜா பதினாறு வயதினிலே படத்தில் வெற்றி பெற்ற பிறகு அந்த நேர இளம் நடிகர்கள் இவர் படத்தில் நடிக்க தவித்து பரிதவித்திருக்கிறார்கள்.

கிழக்கே போகும் ரயில் படத்தில் இருந்து அவரைப் பார்த்து தும்பிக்கய தூக்கி இறக்கிக்கொண்டிருந்த நடிகர்.
குறிப்பிட்ட படத்தில் பாரதிராஜா சின்னதா ரோல் கொடுத்தார்.
 பாரதிராஜா தரும் கதாநாயகன் பாத்திரத்தில் ஒன்றி நடிக்க பெருங்கனவு கண்டு கொண்டே இருந்த நடிகர் தொடர் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை.

ஏமாற்ற ரோசத்தில் பிறகு பாரதிராஜாவை பார்க்கவில்லை.

சில சந்தர்ப்பங்கள் சாதாரண  வெளிப்படங்கள். 

சாலி கிராம ஸ்டுடியோவில் பாரதிராஜாவை தற்செயலாக
எதிரே பார்க்க வாய்ப்பு.



பாரதிராஜா " யோவ் என்னய்யா செய்ற?"

காலில் உடனே விழுந்து ' நீங்க தான் தெய்வம், நல்ல ரோல் குடுங்க, உயிர் பிச்ச குடுங்க.. நீங்க தான் காப்பாத்தனும்'னு தேம்பியிருக்க வேண்டாமா?

இந்த நடிகர் ' இந்த படத்தில ஹீரோவா நடிச்சிக்கிட்டுருக்கேன், அந்த படத்தில கதாநாயகன் நாந்தான். ' தேங்கா மூடி பட பட்டியலை ஒப்பிக்க ஆரம்பித்திருக்கிறார். அகம்பாவம்.
பந்தா. வரட்டு கௌரவம்.

இயக்குநர் மேலும் கீழுமாக பார்வை பார்த்து விட்டு " அப்படியா, சரி"

என்னக்காவது அவரா கூப்ட மாட்டாரா? நிரந்தர ஏக்கத் தவிப்பில் தக்காளி வித்து..

 பல வருடம் கழித்து இதே போல தற்செயலாக எதிரே அதே நடிகரைப் பார்த்த பாரதிராஜா அவருடைய இயல்பான குரலில் பலமாக
 " நீ இன்னும் ஊருக்குப் போகலியா?!"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.