Share

Oct 20, 2024

ரோகிணி தமிழ் படங்களில் நாற்பத்தி ஏழு ஆண்டுகள்




ரோகிணி தமிழ்ப்படங்களில் நாற்பத்தி ஏழு ஆண்டுகள்.
ரோகிணி ஆந்திராவைச்சேர்ந்தவர்.
குழந்தையாயிருக்கும் போதே 1974ல் இருந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
Her debut as a child artist was in 'Harathi'.
1974 Telugu movie.
1974லேயே இன்னும் இரண்டு படங்கள்?

அதனால் திரைப்படங்களில் ஐம்பது ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அருஞ்சாதனை.

1975ல 'யசோதா கிருஷ்ணா'ன்னு தெலுங்கு படம். ஜமுனா யசோதாவா நடிச்சாங்க. கிருஷ்ணனாக ராமகிருஷ்ணா. 
இதில குழந்தையாக ரோஹிணி பாலகிருஷ்ணா. ஸ்ரீதேவி இளையகிருஷ்ணா.
 'யசோதா கிருஷ்ணா' தான் தனக்கு debut என்ற அர்த்தத்தில் ரோகிணியே சொல்லியிருக்கிறார்.

தமிழில் நடிக்க ஆரம்பித்து நாற்பத்தி ஏழு ஆண்டுகள்.
பல மலையாள படங்களிலும் நடித்தவர்.

1989 துவங்கி நிறைய கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியவர்.

ஒரு சில படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இயக்குநர்.
ரோகிணி இயக்கத்தில் 
2014ல் 'அப்பாவின் மீசை' 
சேரன், நித்யா மேனன் நடிப்பில்.

டிவி சீரியலில் கூட இயக்கப்பணியாற்றியிருக்கிறார்.

ரோகிணி தமிழ் சினிமாவில் முதலில் 1977ம் ஆண்டு "முருகன் அடிமை" படத்தில் குட்டி முருகன் ஆக நடித்தார்.

1978ம் ஆண்டு புண்ணிய பூமி படத்தில் குட்டிப்பையனாக வாணிஸ்ரீ மகனாக.
எஸ் ஜானகி பாடிய"நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்" உருக்கமான பாடல் காட்சியில் வாணிஸ்ரீயுடன் வருகிற ரோகிணி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.