நகரின் பிரதான பகுதியில் ஓடக்குப்பம்.
புறாக்கூடு,
எலி வளை மாதிரி வீடுகள்.
மிக பிரமாண்டமான Church. அதை ஒட்டியவாறு தான் குப்பம் துவங்குகிறது.
குப்பத்தின் குறுகிய தெரு வழியாக போனால் நகரின் பிரபலமான Temple.
சாமிங்கல்லாம் வெகு சொகுசு.
மனுஷங்க பெரும் அவதியில்.
'யோவ், இந்த மாதிரி
சிகப்பு சிந்தனையெல்லாம் அர்த பழசு'
எல்லா ஊர் Churches அருகிலும், எல்லா temples சுற்றிலும் இப்படி தானே.
இதில் என்ன செய்தி?
பல தொழில் நிறுவனங்களின் உள்ளே பிரமாதமான சொகுசு கோயில்கள் இருக்கும். வேலை பார்க்கிறவர்களுக்கான கழிப்பறை முகம் சுழிக்கும்படியாக.
'காம்ரேட் பீலா..
இடதுசாரி சேதியெல்லாம் இப்ப யார்யா கேட்டா?'
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.