Share

Oct 15, 2008

முரட்டம்பத்திரி வீரத்தாய்

மதுரையில் என் நண்பன் முரட்டம்பத்திரியில் உள்ள கருப்பையாவை பார்க்க போயிருந்தேன் அன்றொரு நாள் .
அவனுடைய தாயார் அவனை பற்றி என்னிடம் பிராது செய்தார் .

" என்னடா டே ஏலே அப்பு .. தொரை! இவன்ஒன் ஆளு பொலைக்கத்தெரியாத பயலாய் இருக்கான் . கஞ்சா விக்க சொன்னா பயபடுரானே அப்பு . இவன்லாம் விருமாண்டி தேவர் மகனாடா .
டே இதே என் தம்பி சொரிக்காம்பட்டியான் என்ன தெகிரியமா கஞ்சா வியாபாரம் செய்கிறான் .
நாய்தாலன்க ரைட் பண்ணாலும் பயபடுரானா பாருடா ஏலே .. ஒருக்கா சொரிக்காம்பட்டியான கையை ஏத்தி கட்டி டேசன்லே வச்சி நாய் தாலனுக ( போலீஸ் என்று அர்த்தம் ) இவன் முன் பல்லு நாலு கீழ் பல்லு நாலை ஒடைச்சி எடுத்தானுக . பயப்பட்டானா ..பொக்கவாயோட சிரிச்சிகிட்டே கஞ்சா விக்கிறான் . அவன் சொரிக்காம்பட்டியான் மூத்திரத்தை இவனை குடிக்கச்சொல்லுப்பு .. இவன்லேம் விருமாண்டிதேவருக்கு பொறந்தவன் . தூ .. பெத்த வைத்திலே பிரண்டை யை தான் வச்சுகட்டனும் "

1 comment:

  1. We could see this type of mothers in Usilapatty & Ramnad district. I too had seen such ladies there then but NOW?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.