Share

Nov 12, 2019

கே.ராஜேஷ்வர்

அவள் அப்படித்தான் வசனத்தில் பங்கு சோமசுந்தரேஷ்வருக்கும்
( கே.ராஜேஷ்வர்) அனந்த்துவுக்கும் தான். வண்ண நிலவன் சிறு பகுதி. ருத்ரய்யாவின் பங்கு கொஞ்சமும் கிடையாது.
கதை ராகமஞ்சரி என்று டைட்டிலில் அப்போது வந்தது உண்மையில் ராகமஞ்சரி என்று யாருமே கிடையாது.
இப்போது மறைந்த அருண்மொழி இந்த 'அவள் அப்படித்தான்'  அசோசியேட் டைரக்டர் என்றெல்லாம் அபத்தமாக எழுதப்படுகிறது. உண்மை என்னவென்றால் இந்த படத்துக்கு ஒளிப்பதிவில் உதவியாக இரண்டு பேர். கேமரா நல்லுசாமிக்கும் ஞானசேகரனுக்கும். அவர்களுக்கு அஸிஸ்டெண்ட்கள் இருவரில் ஒருவராக அருண்மொழி இருந்தார். அவ்வளவு தான். அவர் அந்தப் படத்தில் உதவி இயக்குனர் கூட கிடையாது.
ருத்ரய்யாவின் கிராமத்து அத்தியாயம்
படு தோல்வியடைந்த படம்.
அந்த படத்தில் கே.ராஜேஷ்வர் கிடையாது.
கமல் ஹாசனை வைத்து ’யாரோ பார்க்கிறார்கள்’ என்று ருத்ரய்யா ஒரு படம் தயாரிக்க இருந்தார். கே.ராஜேஷ்வர் தான் அதன் ஸ்க்ரிப்ட், வசனமெல்லாம்.
சுஜாதாவின் “ இருபத்தி நான்கு ரூபாய் தீவு” தான் ’யாரோ பார்க்கிறார்கள்’.
அந்தப்படம் மேலெடுக்க முடியாமல் நின்று போனது.
ரகுவரனை வைத்து கே.ராஜேஷ்வர் ’வீதியெல்லாம் பூப்பந்தல்’ என்று ஒரு படம் இயக்கும் முயற்சி (’ஏழாவது மனிதன்’ தயாரிப்பில் இருந்த போது)
நிறைவேறாமல் போயிருக்கிறது.
கடந்த காலங்களில்
கடலோர கவிதைகள் துவங்கி, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, கோவில் பட்டி வீரலட்சுமி வரை தொடர்ந்த பல படங்களில் பங்காற்றிய அற்புத மனிதர் ராஜேஷ்வர்.

அமரன் என்ற பிரமாண்ட பட இயக்குனர்.
சந்திரபாபு கதையை படமாக்கும் முயற்சியில் இப்போது ராஜேஷ்வர். இன்னும் பல ப்ராஜெக்ட்ஸ்.
கே.ராஜேஷ்வர் எழுதியுள்ள சந்திரபாபு நாவல் எனக்கு சென்ற ஜுன் மாதம்  அனுப்பியிருந்தார். ஒரே மூச்சில் படித்தேன். படமாக வேண்டிய அருமையான ஸ்கிரிப்ட்.
என்னிடம் பேசும் போது ஒரு விஷயம் சொன்னார்.
“ எனக்கு கவிஞர் வைரமுத்து சொன்னதை நான் உங்களுக்கு கடத்துகிறேன். ‘ உங்கள் வெற்றி தாமதப்படலாம். ஆனால் தவிர்க்க முடியாதது’ “
வைரமுத்து தனக்கு சொன்னதை ராஜநாயஹத்துக்கு தருகிறார்.
காலம் கனியும்.
..................

Nov 11, 2019

Woollen Elephantஎன்னுடைய எழுத்தில் ஞாபக சக்தி பற்றி ரொம்ப ரொம்ப பேர் சிலாக்கியமாக சொல்வதுண்டு.
எப்படி இது சாத்தியம் என்று பிரமிப்பதை அடிக்கடி கேட்டு விட்டேன். ”குறிப்பு எடுத்துக் கொள்வீர்களா?”

மையமாக ஒரு புன்னகை தான் என் பதில்.

பியரெத் ஃப்லுசியோ (Pierrette Fleutiaux) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய பிரஞ்சு நாவலை நேரடியாக தமிழுக்கு வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார்.  ’சின்ன சின்ன வாக்கியங்கள்’. க்ரியா வெளியீடு.
Short sentences.

“ எழுத்தாளர் ஒருவர் எதிர் கொள்ளும் கேள்விகளில் அடிக்கடி இடம் பெறுவது இந்த கேள்வி:
‘ நீங்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்வீர்களா?’ என்னுடைய பதில்: இல்லை, மனதில் ஒன்று தங்கவில்லையென்றால் அது முக்கியமானதில்லை என்று பொருள்.”
 நாவலின் 96ம் பக்கத்தில் பியரெத் ஃப்லுசியோ இப்படி சொல்கிறார்.

ரொம்ப பால்யத்தில், பள்ளிக்காலத்தில், கல்லூரி காலத்தில் அதன் பிறகும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பழகியவர்களைப் பற்றிக்கூட அவர்கள் பேசிய விஷயங்கள் பற்றி நான் சொல்லும்போது எப்போதும் பிரமித்துப் போய் கேட்பார்கள்.

 ’இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்?’

தாமரையிலைத் தண்ணீராய் ஒரு விலக்கம் என்னிடம் இருந்த போதிலும் நான் பழகிய எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன்.
அதனால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மறக்காமல் சொல்ல முடிகிறது.

பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் போது ஒரு இளம் ஆசிரியர் புதிதாக பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவர் எங்கள் வகுப்புக்கு தான் முதன்முதலாக பாடம் எடுத்தார்.
அன்று அவர் பதற்றத்துடன் இதை சொன்னார்.

நான் அவரை 20 வருடங்கள் கழித்து திருச்சி தெப்பக்குளத்தில் சந்தித்த போது முதன் முதலாக ஆசிரியராக அவருடைய maiden attempt எங்கள் வகுப்பில் தான் என நினைவு கூர்ந்தேன். புருவத்தை உயர்த்தினார்.

அது மட்டுமல்ல. அந்த முதல் நாள் அவர் ரோஸ் கலர் சர்ட், க்ரீன் கலர் பேண்ட் அணிந்திருந்ததையும் சொன்னேன்.
ஆச்சரியத்தில் மூழ்கி விட்டாரென்று சொல்லத்தேவையில்லை.

எனக்கே தெரிகிறது. எனக்கு ஞாபகத்தில் உள்ள விஷயஙகள் போல வேறு யாருக்குமே ஞாபகப்படுத்திக்கொள்வது அசாத்தியம்.

Memory is my fate. I’m sick of many griefs.

நான் அறியாத, அபூர்வ விஷயம் பற்றி அறிய வரும்போது இப்போது குறிப்பு எடுக்கிறேன்.
ஆனால் எழுதுவதற்காக எந்த குறிப்பையும் பயன்படுத்தியதில்லை.

Everything which exalts life adds at the same time to it’s absurditity – Albert Camus.

இடாலோ கால்வினோ ‘ love far from home’ சிறுகதையில் சொல்வது போல எல்லா கிறுக்கல்களும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான ’Woollen Elephant’ ஆக மாறியிருக்கிறது.

கம்பளி யானையாய்  என் எழுத்து? Catharsis.

பிக்காஸோவின் ஓவியங்கள் அவனுடைய உன்மத்தத்திற்கேயான Therapy.

ஒன்னாங்கிளாசுலேயே சேட்டையாடா?


பீரு கடை சர்புதின். அப்பா பேர் பீர் முகமது. பீரு கடை நாற்பது வருடங்களுக்கு முன் ரொம்ப ஃபேமஸ்.
சர்புதினின் அண்ணன் ஒரு காலேஜ் ப்ரொபசர். ஆனால் சர்புதின் ஏழாவது வகுப்பு வரை தான் படித்தவர்.
ஆள் பார்க்க சிவாஜி சாயலில் நல்ல குண்டு.
ரொம்ப குண்டு. பஜாரில் எம்.என்.பி ஸ்டோர்ஸ் இவருடைய கடை.
இங்கிலீஷ் பேச ரொம்ப ஆசை.
கண்டினுவஸ் டென்ஸில்
A சேர்த்து நிறைய ஓவர் ஆக்ஷன் செய்து அவர் பேசுவது ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கும்.
அவர் மனைவி ரொம்ப கறார் கண்டிப்பு உள்ளவர்.
“ நேத்து செகண்ட் ஷோ பாத்திட்டு வீட்டுக்கு போறேன். The door was a opening!
The wife was a sleeping.
I was a தட்டிங்.. ’செல்லம்,செல்லம்’ தட்டிங்!
The wife was a angry.
The wife was a shouting? 'Why was a second show??' ”
’The’ ரொம்ப பயன்படுத்துவார்.
’யோவ் இப்ப கடைக்கு வந்துட்டு போனாரே. அவரு யாருய்யா. என்ன செய்றாரு.’
சர்புதின் பதில் – ’தி நெல்லு,
தி உருளைக்கிழங்கு,
தி மிளகாய்
இதுக்கெல்லாம் போடுவாங்கள்ள தி உரம்! அது தயாரிக்கிற
தி கம்பெனி வச்சிருக்கார்.'
ராத்திரி பஜாரில் கரண்ட் போய் விட்டால்
கடை பையன் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து எடுத்து வருவான்.
காற்றில் மெழுகுவர்த்தி அணைந்து விடாமல் இரு கையால் நெருப்புச்சுடரை மூடியவாறு சொல்வார்.
( ’பதற்றம்’ ஓவர் ஆக்‌ஷன்)
“ Candle.. Candle with care..Candle with care! ”
காலையில் நான் ஆஃபீஸ் போக கிளம்பி வருகிறேன்.
சர்புதின் கடையில் இருக்கிறார்.
கீழே அவர் மகன் ஒன்னாங்கிளாசு படிக்கும் மகன் நயினார் முறுக்கிக்கொண்டு நிற்கிறான்.
போ.. நான் போக மாட்டேன்.
சர்புதின் என்னைப் பார்த்ததும் நான் “ யோவ் சர்பு, என்னய்யா?”
சர்பு “ இங்க பாருய்யா.. நயினார் பள்ளிக்கூடம் போக மாட்டேங்கிறான். நீ கொஞ்சம் சொல்லி அனுப்பி வை இவனை.”
நான் பொறுப்பை சிரமேற்கொண்டேன்.
நயினார் கடும்பகையை தன் இரு கண்ணில் காட்டி என்னைப் பார்த்து ’முடியாது’ என்பதாக தலையை ஆட்டினான்.
நிச்சயம் என்னை ’போடா’ சொல்வான்.
சர்புதினே மகனுக்கு சமிக்ஞை செய்து ரகசியமாக வாயை விரித்து சத்தமில்லாமல் சொன்னார்
“ போடா சொல்லு…..”
நான் நயினாரைப் பார்த்து சொன்னேன்
“ நயினாரு, ஒன்னாங்கிளாசுலேயே சேட்டையாடா?
படிப்பு ரொம்ப முக்கியண்டா.
சொன்னா கேளு.
ஒன்னாங்கிளாசுலயே இப்படி பண்ணாத.
ஒங்க அத்தா மாதிரி ஏழாங்கிளாசு வரை படிக்க வேண்டாமாடா? ஏழா…..ங்கிளாசு..”
………

Interrogation
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் முதல் பகுதி.
மதுவிலக்கு அமுலில் இருந்தது.
பெருங்குடி மக்கள் அப்போதெல்லாம் கள்ளச் சாராயத்தையே நம்பியிருந்தார்கள். ஏழைகள் (கலக்கு முட்டி)வார்னீஷ் குடித்தார்கள்.
மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் திரைப்பட இயக்குனர் டி.என். பாலு குடிபோதையில் கைது செய்யப்பட்டிருந்தார். மீண்டும் வாழ்வேன், ஓடி விளையாடு தாத்தா, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இயக்குனர். தி.மு.க காரர். குடித்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி சிறை வைத்தார்கள்.
.............
சர்பு தன் நண்பர்களுடன் கள்ளச்சாராயம் கிடைத்தால் குடித்து மகிழ்வதுண்டு.
வடுகபட்டி பாண்டி தான் சாராய பாட்டில்கள் வாங்கி வந்து தருவான்.
அதற்கு அவனுக்கு கூலி, இரவு உணவுக்கு பணம் கொடுக்கிற வழக்கம்.
அந்த நேரத்தில் விலையும் கடுமை தான்.
அதோடு வாங்கி வருகிற பாண்டி எப்போதும் விலை ஏறி விட்டது என்று சொல்லி ஒரு எக்ஸ்ட்ரா தொகை கறந்து விடுவான்.
இப்படி ஒரு முறை பஜாரில் போய்க்கொண்டிருந்த வடுகபட்டி பாண்டியை கூப்பிட்டு டீல் செய்த போது
பாண்டி “ அண்ணே வேண்டாண்ணே. விலை இப்ப ரொம்ப ஏத்திட்டானுங்க. போலீஸ் தொந்தரவு வேற. என்ன விட்டுடுங்க..சிக்குனா எத்தனை மாசம் உள்ள இருக்கணும் தெரியுமில்ல”
அவனை சமாதானப்படுத்தி மிகப் பெருந்தொகை கொடுத்து(கூலியும் மிக அதிகமாய் கேட்டான்.) அனுப்ப வேண்டியிருந்தது.
கூட ரெண்டு பாட்டில். மொத்தம் நாலு பாட்டில். குடிப்பதற்கு அப்படி தவிக்க வேண்டியிருந்திருக்கிறது. At any cost சாராயம் வேண்டும்.
போன பாண்டி வரவில்லை. பஜாரில் கடை சாத்தியவுடன் கச்சேரி. அவனக் காணோம். விசாரிக்க ரெண்டு ஆளை அனுப்பிய பின்
வடுகபட்டி பாண்டி வேர்த்து, விறுத்து சைக்கிளில் வந்தான்.
சரக்கு எதுவும் சைக்கிளில் இல்லை.
சோகமாக பாண்டி பகர்ந்தான்.“போலீஸ் ரெய்டு. பாலத்திலிருந்து நாலு பாட்டிலையும் வாய்க்கால்ல வீசிட்டேன்.”
ஃப்ராடு. பொய் சொல்றான். நாலு பாட்டில் பெருந்தொகையை அடித்து விட்டு போலீஸ் ரெய்டு என்று அளக்கிறான்.
அவனை உடனே விட்டு விடவில்லை. குடிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த அறைக்கு குடி மக்கள்
பாண்டியை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
”நான் தான் சொல்றனுல்லங்க.. ரெய்டு.. சிக்கக்கூடாதுன்னு பாலத்தில இருந்து வீசிட்டேன். சிக்கியிருந்தா இன்னேரம் உள்ள இருப்பேன்.”
சர்புவின் குடிகார நண்பர் ஒருவர் அவனை அடிக்காமல், அவன் சட்டை பட்டன ஒவ்வொன்னா கழட்டி, கவனமா மிரட்டி, (கவனமில்லாம மிரட்டினா பாண்டி எகிறிடுவான்.குறுக்க திரும்பிடுவான்.)
கொஞ்ச நேரத்தில உண்மைய ஒத்துக்கிட்டான்.
’ரெய்டுல்லாம் ஒன்னும் இல்ல. நான் தான் பொய் சொன்னேன். வீட்டுல அரிசி இல்ல.’
”அரிசி இல்லன்னா இவ்வளவு பெரிய தொகைய ஆட்டய போடலாமாடா?”
………
’பாண்டி கல்லுளி மங்கனாச்சே. எப்படியா அவன் கிட்ட இருந்து உண்மைய கறந்தீங்க.’
இது மாதிரி சூழலில் சர்புவின் ஸ்டைலை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இந்த interrogation பற்றிய சர்புவின் விவரிப்பு.
சர்பு பெருந்தோரணையுடன் “ The seriousity of the situation was so dangerable. சிவளை தான் அவன விசாரிச்சான்.
சிவளை : What are you?
பாண்டி : எங்கப்பா பேரு கண்ணுசாமிங்க. என் ஊரு வடுக பட்டிங்க.
சிவளை : Where are you?
பாண்டி : எடுபிடி வேலை எதுனாலும் செய்வேங்க. வீட்டுக்கு வெள்ள அடிப்பேன். காட்டு வேல எதுனாலும் கிடைச்சா செய்வேன்.
சிவளை: Why are you??
பாண்டி: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க. பொண்ணு கிடைக்கலீங்க.
சிவளை : Who are you?
பாண்டி: தாமரைக்குளத்தில தாங்க சாராயம் வாங்கினேன்.
சிவளை: When are you?
பாண்டி : சத்தியமா நான் நல்லவன் தாங்க. காச்சிற இடத்தில கொஞ்சமா குடிச்சேங்க.
சிவளை: ’Which’ are you?????
பாண்டி : தெரியாம பண்ணிட்டேங்க. மன்னிச்சிக்கங்கங்க..
பாண்டி கால்ல விழுந்துட்டான்.
ரெண்டு விரல அவன் கடவாய்க்குள்ள சிவள விட்டான். பய உண்மைய கக்கிட்டான்."
……………

Nov 10, 2019

கடைசியாக அருண்மொழியை நாசருடன் பார்த்தேன்

அக்டோபர் 24ம் தேதி ஸ்கூட்டரில் வளசரவாக்கத்தினுள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு டீக்கடையில் நடிகர் நாசர் நின்று டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அருகில் அருண்மொழி. இன்னும் சிலர்.
நான் நாசரை கவனித்தேன்.
அருண்மொழி அவரோடு நிற்பதை பார்க்கவில்லை.
சில நாட்களுக்கு முன் அதே வீதியில் என் எதிரே அருண்மொழி டூ விலரில் பின்னால் உட்கார்ந்து வந்த போது இருவரும் முகமன் கூறிக்கொண்டோம்.
ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு நாசரை பார்க்க நெருங்கினேன்.

நாசர் எனக்கு பிடித்த நடிகர்.
நாசரை பலமுறை மிக அருகில் பார்க்க வாய்த்திருந்தது. ஆனால் அறிமுகம் இல்லை. ஸ்பேஸஸில் ஒரு நாடகத்திற்கு நாசர் வந்திருந்தார். அவர் அருகில் நான் அமர்ந்திருந்தேன். ஒரு பூச்சி அவர் சட்டையில். நான் தட்டி விட்டேன். அவர் ‘என்ன?’ என்றார். ‘ஒரு பூச்சியை தட்டி விட்டேன் சார்.’ என்றேன்.
முத்துசாமி மறைந்த போது நாசர் கூத்துப்பட்டறை வந்து ரொம்ப நேரம் இருந்த போதும் நான் அவரோடு பேசவில்லை. என்ன, அறிமுகம் இல்லாத நிலை.
இப்போது டீக்கடையில் நாசரை நெருங்கி என்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பி
“ சார்” என்றேன்.
அப்போது தான் அருண்மொழியும் அவரோடு நிற்பதை கவனித்தேன்.” நீங்களும் இங்கே இருக்கிறீர்களா?” அப்புறம் நாசரிடம் சொன்னேன். “கூத்துப்பட்டறைக்கு நீங்கள் முத்துசாமி இறந்த போது வந்திருந்த போது கூட நான் அங்கிருந்தேன். பேச சூழல் இல்லை”
அருண்மொழி சொன்னார். “ ராஜநாயஹம் தான் ஹிண்டு தியேட்டர் ஃபெஸ்டிவலில் முத்துசாமி வண்டிச்சோடையை இயக்கியவர்”
அவரளவில் என்னைப்பற்றிய தனது ஜெனரல் நாலட்ஜ் ஒன்றை நாசரிடம் தெரிவித்தார்
” ராஜநாயஹம் கோணங்கியோடெல்லாம் பழகியவர்.”
அக்டோபரில் இந்த வருட விகடன் தீபாவளி மலரில் நாசர் லாரி பேக்கர் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். இதே தீபாவளி மலரில் நான் ரங்காராவ் பற்றி எழுதியிருக்கிறேன். இது பற்றி அன்று நான் பேசியிருக்கலாம்.ஆனால் பேசவில்லை.
டீக்கடையில் அவர்களோடு இருந்த மற்றொருவர் என்னுடைய வலைத்தள எழுத்தெல்லாம் தனக்கு தெரியும் என்றார்.
நான் நாசரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பதை தெரிவித்தேன்.
 நாசர் உடனே அருண்மொழியிடம் எனக்கு வாய்ப்பு வாங்கி தரலாமே என்பதை உடல் மொழியாலே சொன்னார்.

அருண்மொழியிடம் ஏற்கனவே வாட்ஸ் ஆப் மூலம் நான் அட்டெண்டென்ஸ் நான் கொடுத்திருந்தேன். ரெஸ்பாண்ஸ் இல்லை என்றேன்.
அருண்மொழி பழக்க வழக்கத்திற்கு எனக்கு நல்ல டைரக்டர்களிடம் சிபாரிசு எதிர்பார்த்திருந்தேன்.
நாசரிடம், என்னிடம் அருண்மொழி ‘நான் படம் எதுவும் செய்யவில்லையே. இன்னும் நாலு வருஷத்துக்கு படம் இயக்க சூழல் இல்லை”
அப்புறம்  ஒரு பிரபல நகைச்சுவை நடிகரின் சிரிப்பு நடிப்பில் தனக்கு சிரிப்பே வருவதில்லை என்பதை தெரியப்படுத்தினார்.

அருண்மொழி மேலும் நாசரிடம் சற்றே பரவசமாக சொன்னார்:“ ராஜநாயஹத்துக்கு வயசு அவ்வளவா தெரியல்ல. ட்ரெஸ் கூட ஒரு காரணமோ?” மாடர்னாக உடை உடுத்துகிறேனாம்.
நாசர் எப்போதும் தன் அந்தஸ்தைப் பற்றி அலட்டல் இல்லாதவர். தியேட்டர் விஷயங்களில் யார் அழைத்தாலும் நாடகம் பார்க்க செல்வார். இதைப் பற்றி நான் சொன்னேன்.
பிரபலங்கள் பற்றி தங்களை நெருக்கமானவராக நினைப்பவர்கள் உண்டு.
அப்படி ஒருவர் நாசர் பரிச்சயம் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார்.
அவர் பெயரை நான் குறிப்பிட்ட போது நாசர் “யார் அவர்” என்று அந்தப் பெயரை ஒரு முறை உச்சரித்தார்.
ஆனால் அருண் மொழிக்கு அந்தப் பெயரில் இருவரை தெரிந்திருந்தது.
அப்படி அருண்மொழி விளக்கியது அதிர்ச்சியாய் இருந்தது. “ ஒருத்தர் செத்துட்டார் அவர் அல்ல.
இன்னொருத்தர் சீக்கிரம் செத்துடுவார்.அந்த சாகப்போறவர தான் உங்க கிட்ட ராஜநாயஹம் சொல்றார்”
இன்று அருண்மொழி மரணம் பற்றி கேள்விப்பட்டேன்.
அக்டோபர் 24ம் தேதி தான் அவருடனான கடைசி சந்திப்பு .

Nov 8, 2019

காவிச்சாயமும், ஆளுமையான தலைமைக்கு வெற்றிடமும்

’நானும் திருவள்ளுவரும் காவிக்குள் சிக்க மாட்டோம்’ என்று ரஜினி சொல்லியிருப்பது பெரும் வதந்தி ஒன்றிற்கு முற்றுப்புள்ளி என்றே சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் அரசியலில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் என்று அவர் சொன்ன போது ’அரசியலில் ஏற்கனவே குதித்து விட்ட கமல் ஹாசனையும் சேர்த்துத் தான் சொல்கிறாரா?’ என்று எந்த சேனலிலிருந்தும் ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை.
ஸ்டாலினையும் எடப்பாடியையும் குறி வைக்கும் விஷயம் ஆளுமையான தலைமை வெற்றிடம் என்ற வார்த்தை.
பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் ஒருவரை ஒருவர் பற்றி பாசப்பிணைப்போடு பேசிய விஷயங்கள்.
ரஜினி பேசும்போது கமல் அரசியலுக்கு வந்தாலும் சினிமாவை விட மாட்டார் என்ற அர்த்தத்தில் பேசினார். அரசியல் வெறுத்துப்போய், அரசியலில் தோற்றுப்போய் சினிமாவுக்கே திரும்பி விடுவார் என்கிறாரோ என்னமோ?
கமல் தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் இருக்கும் போது இன்னும் உள் நுழையாத ரஜினி தலைமை வெற்றிடம் பற்றி தீர்மானமாக சொல்கிறார்.
இந்த தலைமை வெற்றிடத்தை நிரப்புவதில் கமலின் பங்கு எப்படி என்று ஒருவரும் கேட்கவில்லை. கேட்டிருக்க வேண்டும்.

’மாபசி’ ம.பொ.சி


1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது.
1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த ம.பொ.சி 1954 வரை காங்கிரஸில் இருந்தவர் தான்.
தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டுமே தமிழர் நலன் சார்ந்தே இயங்கியவை.
இரண்டுமே சிறந்த மனிதர்களாக அடையாளம் கொண்டவர்களினால் சூழப்பட்டிருந்தன.
சிலம்புச்செல்வர் என்று ம.பொ.சிக்கு பேராசிரியர் ரா.பி.சேது பிள்ளை பட்டம் சூட்டினார்.
அறிஞர் என்று அண்ணாத்துரை கட்சிக்காரர்களால் கௌரவப் படுத்தப்பட்டார்கள்.
தமிழரசுக்கழகத்தில் கா.மு.ஷெரிப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்ற திரை ஆளுமைகள் (கவிஞர்கள்) மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
ஏ.பி. நாகராஜன் தமிழரசு கழக ஆதரவாளர்.
கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவில் சிக்கிக்கொண்டார்.
1951ல் முதல் தி.மு.க மாநாட்டிலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மேடையேறி விட்டார்.
நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், மேதை மதியழகன்.
என்.வி நடராசனுக்கு எதுவும் பட்டம் இருந்ததாகத்தெரியவில்லை.
சிந்தனைச் சிற்பி சிற்றரசு.
ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரல்லாதவராயிருந்தாலும் இன்னொருவர்- (தக்ஷ்ணாமூர்த்தி!)- கலைஞர் மு. கருணாநிதி என்று அறியப்பட்டார்.
பேருக்கு ஆசிரியராய் இருந்த Tutor -
’பேராசிரியர்’ அன்பழகன்.
குட்டிப்பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
இப்படி கலர் கதாநாயகன்களால் தி.மு.க ஜொலித்தது.
தமிழரசுக்கழகத்தில் ஜிகினாத்தலைவர்கள் யாரும் இல்லை போலும்.
முக்கிய வேற்றுமை தமிழரசு கழகம் கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கம். ஒரு வகையில் ஆன்மீகம் கலந்த அரசியல்.
தி.மு.க தலைவர் அப்போதெல்லாம் ‘ஒருவனே தேவன்’ பிரகடனம் செய்திருக்கவில்லை. திருப்பதிக்கு சென்ற சிவாஜிகணேசன் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டு “ தம்பி! எங்கிருந்தாலும் வாழ்க!” என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.
மாணவர்களிடையே அன்று தி.மு.க., தமிழரசு கழகம் இரண்டின் ஈடுபாடு பாதிப்பு இருந்திருக்கிறது.
மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ந.முத்துசாமி தி.மு.க.
அவருடைய வகுப்புத்தோழர் கவிஞர் ஞானக்கூத்தன் தமிழரசு கழகம்.
இந்த அரசியலானது
சிறுவர்களான முத்துசாமியையும் ஞானக்கூத்தனையும் பிரித்திருக்கிறது.
இருவரும் அந்த சின்ன வயதில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் நட்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
முத்துசாமி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது (1955- 1957) சிதம்பரத்தில் ஒரு தி.மு.க மீட்டிங்.
அண்ணாத்துரையுடன் தம்பித்தலைவர்களும் மேடையில்.
தம்பித்தலைவர்கள்!
சிதம்பரம் தி.மு.க மேடையில் பேசிய தம்பித்தலைவர்கள் அனைவரும் ம.பொ.சியை கடுமையாக விமர்சித்து திட்டி பேசியிருந்திருக்கிறார்கள்.
கடைசியில் அண்ணா எழுந்திருக்கிறார். சிவஞானத்தின் மேலான நல்ல விஷயங்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு விட்டு தம்பித்தலைவர்களைப்பார்த்து கேட்டிருக்கிறார்: ”இப்படிப்பட்ட நல்லவரான ம.பொ.சியை நீங்கள் தாக்குவது என்ன நியாயம்?”
உடனே அந்த மேடையிலேயே அத்தனை தம்பித்தலைவர்களும் தங்கள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
’அண்ணா, மன்னித்துக்கொள்ளுங்கள்.
ம.பொ.சியின் அருமை புரியாமல் பேசி விட்டோம்.’
ந.முத்துசாமி கல்லூரி மாணவராயிருந்த போது சிதம்பரத்தில் நடந்த இந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு இன்றும் பசுமரத்தாணி போல அவர் மனதில் நிறைந்திருக்கிறது.
”ம.பொ.சிக்கு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற ’மாபசி’!”
– இப்படித்தான் அன்று கிண்டலாக குறிப்பிடும் வழக்கம்.
மதராஸ் மனதே என தெலுங்கர்கள் சொன்ன போது அதை எதிர்த்து சென்னை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
திருவேங்கடத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் அப்போராட்டத்தால் தான் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது.
குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை
தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
குமரியும்
செங்கோட்டை( நெல்லை)யும்
தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
1967ல் காங்கிரசை தமிழகத்தில் எதிர்ப்பதில் தி.மு.கவுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்த போது ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இணைந்து நின்றது.
ஞானக்கூத்தன் பெயர்க்காரணம் சிவஞானத்தை கண்டு கூத்தாடியவராகையால் ’ஞானக்கூத்தன்’ என்று பிரமிள் சொன்னதுண்டு.
ஞானக்கூத்தனின் உவமான வரி ஒன்று. ’வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்தது’. இப்படி ம.பொ.சி எனும் வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்துப்போன காலமும் உண்டு.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் ரசிகராக மாறினார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆர் அபிமானியாகி ம.பொ.சி தமிழக மேல் சபை தலைவராக இருந்தார்.
ஆளுங்கட்சிகளையே சார்ந்து இயங்கும் எந்த அரசியல் தலைவருக்கும் கொஞ்சம் மதிப்பு குறையும்.
மழுங்கிய ஒரு தன்மையும் மங்கலான பிம்பமும் ஏற்படும். அதற்கு ம.பொ.சியும் விலக்கல்ல.
கருணாநிதி - எம்.ஜி.ஆர் இருமை எதிர்வு அரசியலில் அன்று பிற தலைவர்களுக்கு இருவரில் ஒருவரை ஆதரிக்கும் போது மற்றவருக்கு எதிரி என்பது எழுதப்பட்ட விதி.
ம.பொ.சி. கருணாநிதி ஆட்சி காலத்தில் அவருக்கு ஆதரவாகவும்
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இவருக்கு ஆதரவாகவும் இருந்தார்.
இருவரின் ஆட்சிக்காலத்திலும் அரசாங்க நண்பராக இருந்தார்.
1970களில் ம.பொ.சிக்கு துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன்களில் டவுசர் தான் மாட்டி விட்டிருப்பார். சின்னப்பையனாகத் தான் மீசை தொங்க துக்ளக் கார்ட்டூன்களில் தோற்றப்படுத்தப்பட்டிருந்தார்.
ம.பொ.சி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பெரிய ஜால்ராவாக இருந்ததால் இந்த நிலை. கருணாநிதிக்குப் பக்கத்தில் டவுசர் போட்டு கைகளை ஆட்டிக்கொண்டு, அவரை பரவசமாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு சந்தோஷமாக ஆடும் சிறுவனாக ம.பொ.சி நிற்பார்.சட்டையில்லாமல் வெறும் உடம்போடு டவுசர் போட்ட சிறுவனாய் சிலம்புச் செல்வர்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் இவருக்கு டவுசர் தான்.
இது பற்றி ஒருவர் சோவிடம் கேட்ட கேள்வி “என்ன இப்படி செய்கிறீர்கள். ம.பொ.சி எவ்வளவு பெரியவர். அவருக்கு இப்படி டவுசர் மாட்டி சின்னப் பையனாக கார்ட்டூனில் சித்தரிப்பது நியாயந்தானா?”
சோ பதில்“ அவருக்கு வேட்டி கட்டி ப்ரமோஷன் கொடுக்க நானுந்தான் தவிக்கிறேன். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் டவுசர் மாட்டி கார்ட்டூன் போடுமளவுக்குத்தான் இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்.”
……………

Nov 6, 2019

Carnal Thoughts - 48

SADISM

சட்டி மண்டையன், தொல்ல, குருவிமண்டையன், மொட்டயன், ஒத்தகாதன், 
மண்டை மூக்கன், உருண்டை விழியன், ஏழு பேரும் பயிர்க்குழியில 
கலக்கு முட்டி (வார்னிஷ்) அடிச்சிட்டு நல்ல போதை.

சட்டி மண்டையன் : டே .. நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமையத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற கொன்னவாய் ராசுவை ரைடு பண்ணி கைய ஏத்தி கட்டி கொண்டு போயட்டேங்கே .. கொஞ்ச நாள் நமக்கு கலக்கு முட்டி காய்ச்சபாடு தான் இனிமே ..
தொல்ல : மாமா, நேத்து ஆத்துக்குள்ளே தத்தனேரி சினிமா பாத்துட்டு வந்திட்டு இருக்கேன்.
ஒரு முடைத் தாழன் சிக்குனான்.
சாமானை தூக்கி அவன் வாயிலே வச்சா உறிஞ்சு தள்ளிட்டான்.
எனக்குன்னா கடுப்பு. சிகரெட்ட பத்தவச்சேன்.
தூக்குடா, பொச்சைக் காட்டுன்னேன். சந்தோசமா பொச்சைத் தூக்கி காமிச்சான்.
எச்சை துப்பி குண்டிக்குள்ளே தடவிக்கிட்டான்.
நல்லா இன்னும் தூக்குடான்னேன். இன்னும் தூக்கி நல்லா காமிச்சான்.
சிகரெட்ட அவன் குண்டிக்குள்ளே சொருகிட்டேன்.
மாமா அந்த ராவுலே முடைtத் தாழன் அய்யோய்யோ, அய்யோன்னு அலறி கத்தி கதறி கிட்டே ஓடுனான் பாக்கணும்.
நான் இரண்டு கல்லை எடுத்து அவன் மேலே வீசி ஓடுரா ஓடுறான்னு விரட்டினா ...
சட்டி மண்டையன் : மாப்பிள்ளை, அப்படி போடு, சபாசு. முடைதாழன் சிக்குனா ஜோலியை முடிச்சவுடனே மாத்து செம்மையா குடுத்துடணும்.
நான் எப்பவுமே ஜப்தியடிச்சி அவிங்க கிட்ட சிக்குற சில்லறை, பலப் (மோதிரம் ) இதெல்லாத்தையும் ஆட்டையை போட்டுருவண்டா ..

Nov 5, 2019

கெட்ட பொம்மன்தின்னவேலி பாஷையில தான கட்ட பொம்மன் பேசியிருப்பான்.. எப்படி பேசியிருப்பான் என்பதை  கூத்துப்பட்டறையில்
பேசிக்காட்டியிருக்கேன்.
இது ஒரு பயிற்சி.
வட்டார வழக்கில வசனம் பேசுவது.

மதுரை அமெரிக்கன் காலேஜ் மரத்தடியில  அற்றைத்திங்கள் பட்டப்பகலில் மாணவனாக நான் அடித்த லூட்டி தான் இதெல்லாம்.

  மரத்தடி மகாராஜாவாக நிகழ்த்திய கரைச்சல்.

”ஏல, ஜாக்சன், என்னல எசளி?
செத்த மூதி...
ஏம்ல எங்க வயக்காட்டுக்கு வந்தியா?
நாத்து நட்டியா?
கள புடுங்குனன்னு சொல்வியோடேய்?
உங்க அம்ம தாலி...

என்னத்துக்குலே ஒனக்கு வரி, வட்டி...

சவத்துக்கூதி வியாபாரமால்ல இருக்கு...
ஓஞ்சோலி மயித்த பாத்துட்டு போயம்ல..

ஏல என்னல முழிக்க...
மொறக்க.. செத்த சவமே...
ஒளருதாம்னு பாக்கியோலே...ஈனப்புண்டழுத...

எல...எந்தம்பி ஊமத்தொர
ஒன்ன வகுந்துருவாம்ல..
நாரப்புண்டழுத...

எங்கருந்து வந்து எங்கள ஆழம் பாக்கற...

வெள்ள பன்னிகளா...பானர்மென், ஜாக்சன்னு எவனையும் சட்ட பண்ண மாட்டோம்ல..

மோதிப்பாக்கணும்னு நெனச்சன்னா..

அரிப்பெடுத்து அருவாமனல்ல ஏறுனா
ஒனக்குத் தாம்ல நஷ்டம். ஒக்கா புண்ட..”

...

ஒரு வேளை கட்டபொம்மன் மதுரைக்காரனாயிருந்தா எப்படி பேசியிருப்பான்.

“ அப்பு..டேய்....ஜாக்சன்.. ”

 பக்கத்தில் நிற்கும் வெள்ளயத்தேவனிடமும், ஊமைத்துரையிடமும்
கட்ட பொம்மன் அமைந்த குரலில் “தாழன் சைஸ் சரியில்லயேடா ..”

“ நாங்கள்ளாம் மதுரக்காரங்கடா...
கொண்டே போடுவோம்டா..
எங்களுக்கெல்லாம் எந்திரிச்சிச்சின்னு வச்சிக்க..அப்றம் மடக்க ஆளே இல்லடா..

டேய் வெள்ளயத்தேவா...
ஏன்டா சில்றய எடுத்த இப்ப...
 நாந்தான் வெள்ளக்காரன்ட பேசிக்கிட்டு தான இருக்கேன்.

டேய் ஊமத்தொர. இப்ப ஏன் கத்திய படக்கிண்டு..மடக்கிண்டு...இர்றா...

டே ஜாக்சன்... நம்ப பயல்க ரொம்ப அசிங்கமானவனுங்கடா.. ரொம்ப மோசமான பிக்காலிக.. சட்டுன்னு சொருகிடுவானுங்க..சூதானமா இருந்துக்க...

ஒங்கொம்மாட்ட குடிச்ச சினப்பால கக்க வச்சிருவம்டா...
நாங்களாம் ஆளயும் வோத்து நெழலயும் வோத்துட்டு போறவங்கடா..

எனக்கு நீ குடுறா வட்டி...
என்ன சீட்டிங்கா? ங்கொம்மாலோக்க..

’வரி..வட்டி..’மொத்தம் ஒவ்வாம பேசிக்கிட்டு..சீட்டிங்கா, ஏன்டா எங்க கிட்டயேவா?

சும்மா நட்டுத் தாழங்கள்ளாமாடா எங்கள அடிச்சிப்பாக்கறது.

எங்க தாட்டிங்களுக்கு
மஞ்ச அரச்சியா ...?
ஏன்டா....யார்ரா நீ? ஊள்டக்கர்.
வாய உடாம போடா டேய்..

செவனேன்னு எங்கள இருக்க விடுங்கடா..
எனக்கு கண்ணு செவேல்னு ஆயிடுச்சி....
ஏன்டா வாயக்குடுத்து சூத்தப்புண்ணாக்கிக்கிறீங்க. ”

..............

Don't build your hopes on a foundation of confusion

அஞ்சு வருஷம் முந்தி 2014ல ஜி. கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதுசா கட்சி ஆரம்பிச்சப்ப நான் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு கீழே:

Don't build your hopes on a foundation of confusion.
- R.P.ராஜநாயஹம்

புதுசா ஜவுளிக்கடையை  மெயின் பஜாரில் ஆரம்பிக்க சரியான நேரம் தீபாவளிக்கு முந்தைய இரு மாதங்கள். அப்போ தான் செமையா கல்லா கட்ட முடியும். அப்படியில்லாமல் தீபாவளி முடிந்த பின் ஜவுளிக்கடை ஆரம்பிக்கற ஆளை என்னவென்று சொல்வது?

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸை விட்டு வெளியே வந்து புது கட்சி ஆரம்பித்திருந்தாலாவது  நிலவரம் என்னவென்று இப்போது தெரிந்திருக்கும்.
அப்பா மூப்பனார் கட்சி ஆரம்பித்த போது இருந்த சூழல் வேறு.
அன்று தங்கபாலு, குமரி அனந்தன் தவிர தமிழக காங்கிரஸின் பல மேல்மூடிகள் உடனே, உடனே மூப்பனார் பின் வந்தார்கள். தி.மு.க வும் இது தான் காங்கிரஸ்  ஆக முடிவே செய்து முழு கௌரவம் அளித்தது.
இன்றைக்கு தி.மு.க  நிலை உள்ளங்கை நெல்லிக்கனி!
கருணாநிதி ராஜதந்திரம் இன்று செத்த பாம்பு!

மூப்பனார் மகன் இன்றும் ரஜினி சப்போர்ட்டை எதிர்பார்ப்பது ...
அன்றைக்கிருந்த ரஜினி வேறு, இப்போதிருக்கிற ரஜினி வேறு.

எல்லோருக்கும் பழம் கொடுத்துக்கொண்டிருக்கிற ரஜினியைப் பார்த்து
வாசன் கெஞ்சுகிறார்." Give me a hand please ".

மூப்பனார் மகன் தனியாக நின்று ஓட்டு கேட்பாரா?
என்ன எதிர்பார்ப்பு?

அதிமுகவுடன் கூட்டணியா?

திமுகவுடன் கூட்டணியா?ராமதாஸ்,வைகோவெல்லாம் உதறித்தள்ளும் திமுக!

பி.ஜே.பி கூட கை கோர்க்க உத்தேசமா?

"நேக்கு யாரைத்தெரியும்? போகனும்னு தோன்றது. எங்க போகறதுன்னு தெரியலயே.. நான் எங்க போவேன்? "

Never make a decision when you are upset. Not knowing which decision to take can be the most painful.Don't build your hopes on a foundation of confusion.

.....................................

Let the cat out of the bag

ஒரு பிரமுகன். எழுத்தாளன்.
அஷ்டாவதான பிரமுகன்.
அந்தாளுடைய புத்தகம் எதையுமே நான் படித்ததில்லை
ஒரு வேலையாக ஒரு பக்கம் போயிருந்த போது அங்கே ஒரு கடையில் பெயர் பலகையில் பெயர் இருந்ததாலும் அவன் பெயர் பரிச்சயம் தான் என்பதாலும் நான் கடைக்குள் நுழைந்து அங்கே இருந்த ஆளிடம் கேட்டேன். ’அவர் இருக்கிறாரா?’. எனக்கு முக பரிச்சயம் கிடையாது.
அந்த ஆள் வாயெல்லாம் பல்லாகி ’நான் தான்’ என்றான்.
”ஓ, தற்செயலாக ஒங்க கடைன்னு தெரிய வந்ததால வந்தேன். என் பெயர் ராஜநாயஹம். R.P.ராஜநாயஹம்.”
பிரமுகன் ”நீங்க லொயோலா காலேஜா?”
”இல்லங்க. அவுரு ச.ராஜநாயகம். கிருஸ்தவ பாதிரியார்.
நான் சன்னியாசி கிடையாது.
குடும்பஸ்தன் R.P.ராஜநாயஹம்.”
என்ன பண்ணிறீங்க?
நான் சொன்னேன்.
;நானும் எழுதுவேனுங்க.’
பிரமுக எழுத்தாளன் ’அப்படியா?’
”ரெண்டு புத்தகம் கலைஞன் பதிப்பகத்தில் பப்ளிஷ் பண்ணியிருக்காங்க.”
’அப்படியா?’
இயல்பாக பல விஷயங்கள் அப்புறம் பேச வேண்டியிருந்தது.
சென்னையில் உள்ள எல்லா சினிமாக்கார எழுத்தாளன்கள் போல இவனும் சினிமா டைரக்ட் பண்ணப்போறேன் என்று சொன்னான்.
பிரமுகன் : படம் ஒன்னு டைரக்ட் பண்ணப்போறேன்.
நான் “ எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுங்க.”
பிரமுகன் “ ம். சரி”
இன்னும் சினிமா, இலக்கியம் இப்படி கொஞ்சம் பேச்சு வளர்ந்தது.
பிரமுகன் தன்னிலை மறந்து சற்றே இளகிய நிலையில் அவனில் ’மியா மியா’ சத்தம். பூன வெளிய வந்து விட்டது. மைண்ட் வாய் ஓவர்ஃப்ளோ ஆகி விட்டது.
“ ஏதாவது ஆர்ட்டிக்கிள் எழுதறதுக்கு ரெஃபரன்ஸ் தேவப்பட்டா R.P.ராஜநாயஹம் blog அப்பப்ப பார்ப்பேன். ரொம்ப வருஷமா உங்கள படிச்சிக்கிட்டிருக்கேன்.”,….

Nov 4, 2019

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

கண்ணதாசன், விஸ்வநாதன், ராமமூர்த்தி , 
                  டி. எம். எஸ்,  சுசிலா, சிவாஜி கணேசன், சாவித்திரி, பீம்சிங் - என்னவொரு காம்பினேஷன், என்னவொரு டீம்.

கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் கலங்குவதை இந்த வீடீயோ முடிவில் பார்க்க முடிகிறது.

பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் நான் பாடியதுண்டு.

இந்த பாடலை நான் மேடையில் பாட முயன்ற போதெல்லாம் ஆர்க்கெஸ்ட்ரா ஒத்துழைப்பு தந்ததேயில்லை. டி. எம். எஸ் குரல் பகுதியை மேடையில் நல்ல ஆடியன்ஸ் முன்னிலையில் நான் பாட விரும்புவது நிறைவேறாத கனவாகவே இன்றும் இருக்கிறது.

 இந்திரன் 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' தொகுப்பில் 'நிறைவேறாத கனவு எப்படியிருக்கும்' என்று ஒரு மொழிபெயர்ப்பு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.

"நிறைவேறாத கனவு எப்படியிருக்கும்? உலர்ந்து சுருங்கிப் போன திராட்சை போலவா?
அல்லது கனவு வெடிக்குமா? "


https://m.facebook.com/story.php?story_fbid=1710307522427903&id=976871189104877

..

Nov 3, 2019

Carnal Thoughts - 47

Sexual Poverty

ஆட்டு மூக்கன், ஒத்த காதன், தொல்லை மூன்று பேரும் விளாங்குடி ரத்னா டூரிங் தியேட்டர் செகண்ட் ஷோ 'பாவ மன்னிப்பு' படம் பார்த்து விட்டு,                                        பாலம் தாண்டி ,ஆரப்பாளயத்தை நெருங்கும்போது அந்த நடுநிசியில் அந்தப் பெண் தென் பட்டாள்.
செவுடி. காது கேட்காது. ஆனால் ஆரப்பாளையம் சல்லிகளுக்கு நன்கு அறிமுகம்.
ஏதோ கொடுத்தால் போதும்.
உடல் கொடுப்பாள்.
’பன்னு’ வாங்கிக் கொடுத்து கோழி களவாணி
ஒரு தரம் ஜோலி பார்த்து விட்டான்.
மலிவான ரதி. Cheap edition.  
ஒரு தரம் பத்து பேர் காசு கொடுக்காமலே ஓடிவிட்டார்கள்.
’டே செவுடிடா’
- ஒத்த காதன் அடையாளம் பார்த்து சொன்னான் .
’வர்றியா’ - ஆட்டு மூக்கன்
செவுடி அகராதியில ’no’ன்ற வார்த்தை கிடையாதே.
ஒரு அரைகுறை கட்டடம் ஒன்றில் செவுடியுடன் ஒதுங்குகிறார்கள் .
செவுடி முதலில் சிக்கிய சில்லறை யை வாங்கிகொண்டாள் .
தொல்லை தான் Opening batsman!
செவுடி மேல் விழுந்தவன்.. உடனே சேவல் போல முடித்து விட்டானா?
”ம்ஹும்” சுவாசத்தை நிராகரித்துக்கொண்டே வந்தான்.
அடுத்து ஒத்த காதன்.
இவனும் சேவல் போல ....
ஆட்டு மூக்கன் செவுடியிடம் ஐக்கியமாகி விட்டான்
ஒத்த காதன் ' டே சுன்னி!
ஊளை காதுடா ஏண்டா சொல்லலே '
தொல்லை ' நான் பெற்ற இன்பம் வையகமும் பெறனும்னு தான் '
'நாத்தம் சகிக்கலே '
அரைமணி நேரமாகியும் ஆட்டு மூக்கன் வரவில்லை.
எட்டிப்பார்த்து ஒரு தீப்பெட்டி குச்சி பொருத்தினான் தொல்லை.
செவுடியும் ஆட்டு மூக்கனும் பின்னி பிணைந்து இடுப்புக்கு கீழேயே எட்டு சுத்து ..
செவுடியின் ஊளை காதில் தான் மூக்கையும் முகத்தையும் வைத்து தேய்த்து கொண்டிருந்தான் ஆட்டு மூக்கன்.
நறுமணம், துர்நாற்றம் இரண்டுமே காணாத நிஷ்காம்ய கர்மம்.
"தீக்குச்சியை அணைங்கடா டேய் சுன்னிகளா,
தாட்டி வெக்கப்படுதுடா " சினுங்கிகொண்டே இன்ப வேதனையில் ஆட்டு மூக்கன் செவுடியை ஊளை காதில் முத்தமிட்டு ’என்னலா ‘ன்னு பெருமூச்சு விட்டான்.
இதயத்தினுள் புகுந்து, மடியில் மடிந்து, கண்ணில் புதைந்து...

"I will live in thy heart, die in thy lap, 
and be buried in thine eyes"
- Shakespeare in "Much ado about nothing