Share

Jan 20, 2022

தூங்கும் போது கனவு

தூங்கும் போது கனவு எப்போதும் வினோதமாக, அர்த்தமில்லாமல் தான் வருகிறது. 

அந்த பெரிய எழுத்தாளர் இறந்த பிறகு என் கனவில் இன்று தான் அதிகாலையில் வந்தார். 
ஏதோ ஒரு ஊர். துக்க வீடு. 
ரொம்ப தள்ளாத முதிர்ந்த முதுமை.
அவருடைய மனைவி கூட அவர் மறைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

அவர் அருகில் அமர்ந்திருக்கும் 
நான் " நீங்க ஏன் இங்கெல்லாம் வர்றீங்க."
முதுமை முற்றிய அந்த எழுத்தாளர் சொல்கிறார் " இது என்னோட மாமியார் ஊர். இங்கே நல்லது கெட்டது எது நடந்தாலும் உடனே எனக்கு சொல்லி அனுப்புறாங்க. நான் என்ன செய்ய?..."
இப்படி சொல்லி விட்டு நான் ஆறுதல் சொல்லும்படியாக அழ ஆரம்பித்து விடுகிறார். பொலபொலவென்று கண்ணீர்.
கி.ராஜநாராயணன்.
அவருடைய மனைவி ஊரும், அவருடைய ஊரும் ஒரே ஊர் தான்.
பொறவு எதுக்கு இப்டி சொல்றாரு.

கி.ரா தன்னைப்பற்றி பேசுவார் தான்.
ஆனால் தன் துயரங்களை
 பிறரிடம் சொல்லி
 புலம்பும் இயல்பே இல்லாதவர்.
Bizarre dream.

உடனே, உடனே அடுத்த கனவு.
ஒரு மிகப்பழைய வீட்டில் நானும் என் மனைவியும் இருக்கிறோம்.
ஏதோ அமானுஷ்யமாக நடக்கிற மாதிரி. கதவு தானாக திறக்கிறது.
ஒரு நடமாட்டம் போல தெரிகிறது.
சாக்பீஸால் வரைந்த உருவம் போல ஒரு பெண்ணுருவம்.
நான் மனைவியிடம் சத்தமாக சொல்கிறேன்
" வெள்ளை பொடவ கட்டின பொம்பள"

இந்தக் கனவும் முடிந்து விட்டது.

விழித்து விட்டேன்.
பொல, பொலவென்று விடிந்து விட்டது.

Jan 17, 2022

தைத்துளியோ, நெய்த்துளியோ

தைத்துளியோ, நெய்த்துளியோ

 இரவு மழை பெய்திருக்கிறது.
காலையில் தான் தெரிந்தது.

காலையில் மிக மிக மென்மையாக, புலப்படாத தூறல்.

நெய்த்துளியை அனுபவிக்க மொட்டை மாடிக்குப் போய் ஆனந்தமாய் நிற்கிறேன்.

Raindrops keep falling on my head.

Jan 15, 2022

Ganeshram's remarkable comment on R.P.R


Ganeshram Ram :
R.P.Rajanayahem has immortalized 
all writers and heroes of our time
in his memorable reminiscences

Dear sir, your  prose style is renowned 
for its literary allusions and references.

Jan 13, 2022

அரச அந்தஸ்து

கிருஷ்ணகுமார் குருமூர்த்தி அற்புதமான மனிதர்.
இரண்டு மாதங்களாக நெருடிக்கொண்டிருந்த ஒரு சிக்கலை தீர்க்க வெளிச்சமும், வழியும் காட்டியதில் பிரச்சினை உடனடியாக                                     முடிவுக்கு வந்து விட்டது.

என்னுடைய எழுத்தின் மீது 
பெரு மதிப்பு வைத்திருப்பவர்         கிருஷ்ணா.
'ராஜநாயஹம் சரஸ்வதி புத்ரன்
பெருமையின்றி பெருந்துயரில்,சிறுமையில் வாழ நேர்ந்து விட்டாலும் கூட
 ராஜநாயஹம் எப்போதும் அரசன் அந்தஸ்தில் இருப்பவர்" என்று நெகிழ்ந்தார்.

"இந்த ராஜநாயஹம் பற்றித் தான் 'வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன் தானேய்யா' என்று எழுதினேன்"
- சாரு நிவேதிதா

Jan 4, 2022

அம்பர்கிரிஸ்

இப்படி ஒரு கடத்தல் பற்றி கேள்விப்பட்டதில்லை.
அம்பர்கிரிஸ்.
இது பற்றிய செய்தி
 ஒரு டி.வி சேனலில்
திமிங்கல உமிழ் நீர் என்றும் இன்னொரு சேனலில் திமிங்கல கழிவு என்றும் விவரிப்பு.

தென்காசியில் 3.5 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸ் கடத்திய இருவர் பிடிபட்டனர் என்று செய்தி.

கூகுளில் தேடிப்பார்த்ததில் அம்பர்கிரிஸ்  திமிங்கலத்தின் வாந்தியாம். திமிங்கலத்தின் கழிவாக மலப்புழை வழியாகவும் வெளியேறுவதுண்டாம்.

மாட்டுச்சாணி கோமியம். 
பூனைக்கழிவு தானே புனுகு.
யானை தும்பிக்கையால் அருந்தி உமிழும் நீரே ஆசி, மருந்து என தலையிலே வாங்கி மகிழ்வர்.
குழந்தைகளின் முகத்தில் தும்பிக்கை துப்பும் நீர்.

திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் மொதல்ல கெட்ட வீச்சம் அடிக்கும். 
துர்நாற்றம் மாறி பின்னர் அதில்
நல்ல சுகந்த நறுமணம் வீசும்.

அம்பர்கிரிஸை பாலியல் சம்பந்தமான மருந்து, மற்றும் வாசனைத்திரவங்கள் தயாரிக்கவும் 
பயன்படுத்தப்படுகிறதாம்.

ஓ, அப்படியா..சரி தான்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது ஞாபகம் வருகிறது.
"Evidence points out that 
if you raise tariffs too much 
it will increase smuggling."