தூங்கும் போது கனவு எப்போதும் வினோதமாக, அர்த்தமில்லாமல் தான் வருகிறது.
அந்த பெரிய எழுத்தாளர் இறந்த பிறகு என் கனவில் இன்று தான் அதிகாலையில் வந்தார்.
ஏதோ ஒரு ஊர். துக்க வீடு.
ரொம்ப தள்ளாத முதிர்ந்த முதுமை.
அவருடைய மனைவி கூட அவர் மறைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
அவர் அருகில் அமர்ந்திருக்கும்
நான் " நீங்க ஏன் இங்கெல்லாம் வர்றீங்க."
முதுமை முற்றிய அந்த எழுத்தாளர் சொல்கிறார் " இது என்னோட மாமியார் ஊர். இங்கே நல்லது கெட்டது எது நடந்தாலும் உடனே எனக்கு சொல்லி அனுப்புறாங்க. நான் என்ன செய்ய?..."
இப்படி சொல்லி விட்டு நான் ஆறுதல் சொல்லும்படியாக அழ ஆரம்பித்து விடுகிறார். பொலபொலவென்று கண்ணீர்.
கி.ராஜநாராயணன்.
அவருடைய மனைவி ஊரும், அவருடைய ஊரும் ஒரே ஊர் தான்.
பொறவு எதுக்கு இப்டி சொல்றாரு.
கி.ரா தன்னைப்பற்றி பேசுவார் தான்.
ஆனால் தன் துயரங்களை
பிறரிடம் சொல்லி
புலம்பும் இயல்பே இல்லாதவர்.
Bizarre dream.
உடனே, உடனே அடுத்த கனவு.
ஒரு மிகப்பழைய வீட்டில் நானும் என் மனைவியும் இருக்கிறோம்.
ஏதோ அமானுஷ்யமாக நடக்கிற மாதிரி. கதவு தானாக திறக்கிறது.
ஒரு நடமாட்டம் போல தெரிகிறது.
சாக்பீஸால் வரைந்த உருவம் போல ஒரு பெண்ணுருவம்.
நான் மனைவியிடம் சத்தமாக சொல்கிறேன்
" வெள்ளை பொடவ கட்டின பொம்பள"
இந்தக் கனவும் முடிந்து விட்டது.
விழித்து விட்டேன்.
பொல, பொலவென்று விடிந்து விட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.