Share

Jul 30, 2023

89th Episode of Cinema Enum Bootham





89th Episode 

30.07.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு

ஒளிபரப்பப்பட்ட 89வது நிகழ்ச்சியில் 

R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்' தொடரில்
இடம் பெற்றிருந்தவர்

இசையமைப்பாளர் 

"K.V. மஹாதேவன்"

Jul 24, 2023

Filial ingratitude

Filial ingratitude

Filial ingratitude is a special sin. The true sin.

ஷேக்ஸ்பியரின் கிங்லியர் filial ingratitude பற்றியதும் தான்.

"How sharper than a serpent's tooth it is to have a thankless child"


நன்றி கெட்ட மகனை விட
நாய்கள் மேலடா..

தென்னய பெத்தா இளநீரு
பிள்ளய பெத்தா கண்ணீரு

பெற்றவர் மனமே பித்தம்மா
பிள்ளையின் மனமே கல்லம்மா..

- கண்ணதாசன்

கி.ரா எழுதிய கதை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா டுடேயில். 

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றவர்கள் ராமேஸ்வரத்தில் பிச்சை யெடுக்கிற அவல துயரம்.

இந்த முதிய தம்பதியரை அடையாளம் கண்டு கொண்ட சொந்த ஊரைச் சேர்ந்தவரைப் பார்த்து  பிச்சை யெடுக்கிற கிழவி கேட்பாள் - "எங்க மக்கமாரெல்லாம் எப்படி இருக்காங்க?"

அன்பு நண்பர் மலேசிய எழுத்தாளர் ஸ்ரீராமுலு நாயுடு - ஸ்ரீகாந்தன் எழுதிய 
நல்ல சிறுகதை "கடிதம்"
சொல்வனம். காம் இணைய இதழில்.

https://solvanam.com/2023/07/23/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/?fbclid=IwAR17TV-oJ1cJrZ0gjSaxyfvaiGMsfmRuAI92Ed8mqj1RRz2ZsXyuaom121Q


Jul 23, 2023

திருச்சியிலிருந்து கரூருக்கு இரவில் அப்பாவுடன் ஜாவா பைக்கில்

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்.

அப்பா திருச்சியில் இருந்து இரவு ஏழு மணிக்கு கரூருக்கு அவருடைய ஜாவா பைக்கில் பின்னால் அமர வைத்து அழைத்து வரும் போது பேசிக்கொண்டே, பலவாறு கேள்வி கேட்டுக்கொண்டே, பாட சொல்லி கேட்டுக் கொண்டே பைக் ஓட்டிக்கொண்டு வந்தார்.

இடையில் நிறுத்தி பிஸ்கட்.

வீட்டிற்கு இரவு 9 மணிக்கு  சேர்ந்த பிறகு அம்மாவிடம் சொன்னார். " தொர தூங்கிட்டா ஆபத்து. பேசிக்கொண்டே, பாடச்சொல்லிக்கொண்டே தான் வந்தேன். வீடு வந்து சேர்ற வரை பதட்டம் "

ரமேஷ் கண்ணன் கவிதை படித்ததும் நினைவில் அந்த அப்பா

"டூவீலர் டாங்க்கில் 
படுத்து உறங்கும் குழந்தையைக்
குனிந்து குனிந்து பார்த்து 
வண்டி ஓட்டும் தகப்பனின் வீடு 
அருகில் இருந்தால் போதும் "

Jul 22, 2023

அனுபவம்



உறவுக்காரப் பெண் சொன்னார்:
"இப்பல்லாம்
மருமக தான்
மாமியார்"

......

கண்ணதாசன் புலம்பல்:

அனுபவித்து அறிந்து கொள்வதே வாழ்வானால் 
கடவுளே நீ எதற்காக? 
என திகைத்த போது பகவான்
 என் பக்கத்தில் வந்து சொன்னான் 
" அனுபவம் என்பது சாட்சாத் நானே "

Jul 20, 2023

"அற்புதமான நடிகர், அற்புதமான எழுத்தாளர் ராஜநாயஹம்". - மு. நடேஷ்

கூத்துப்பட்டறை பாஸ் ஓவியர் மு. நடேஷ் :


"சினிமா ஒரு பூதம் என்று எதிர்மறை அர்த்தத்தில் வளர்க்கப்பட்ட முத்துசாமியின் மகன் நான். 😂😂 23 வயதிற்கு முன்னால் பாமர அதாவது வெகுஜன பத்திரிக்கைகள் படிப்பதில் இருந்து டுபாகூர் சினிமா பார்ப்பது வரை எல்லாவற்றிற்கும் தடை அதாவது அவருக்கு பிடிக்காதோ என்று நானே போட்டுக்கொண்ட தடை அந்த மாதிரி மனத்தை தூக்கி எறிந்து முற்றிலும் சுயமாக வளர்த்துவிட்ட மனம் அனைத்தையும் எடைபோட ஆரம்பித்தபோது அதுபோன்ற தீவிரத்தோடு இருக்கும் சமயத்தில் ராஜநாயஹம் ஒரு அற்புதமான நடிகர் என்பதை கண்டுபிடித்தேன்... 

மனிதர்களை கண்டுபிடிப்பது எனக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய செயல் சினிமா நடிகர் பசுபதி கண்டுபிடித்தது நான்தான் எனவே ராஜநாயஹத்தை ஒன் மேன் தியேட்டர் செய்வதற்கு ஏற்பாடு செய்து கூத்துப்பட்டறையில் நாடகங்கள் போட வைத்தேன். 

அப்பொழுது எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் எந்தவித ஒத்திகையும் இல்லாமல் நேரடியாக பார்வையாளர்கள் முன்னால் வந்து நின்று தனது மனதில் இருக்கும் ஓடிக்கொண்டிருக்கும் நதியாக விளங்கும் மனதின் ஓட்டத்தை வடிவம் கொடுத்து நேரடியாக ஒரு சூப்பர்ஹிட் ஷோவை செய்து முடிப்பார். 

 அப்படிப்பட்டவர் அற்புதமாக எழுதாமல்
 வேறு என்ன செய்வார்!!!!!!!!!

 ராஜநாயஹம் வாழ்க"
 ❤️❤️❤️

..... 

2018 

M. Natesh on R. P. Rajanayahem 

"By 1990 I was 11 years old in theatre. 
Kind of knew all techniques to train 
an actor’s body-voice; but not the mind. 

I thought that a person with trained skills
 in all that I know can go on stage, 
pick up his/her life’s problems 
and deliver a solo show of good theatre.
 No text by-hearting, no rehearsals.

 IT NEVER HAPPENED.

 IN 2018  R. P. Rajanayahem comes on stage
 and does exactly that 28years later!!!!!!!!!!!!!...
 I acknowledged the same day 
after the show in front of the audience. 

An intelligent, evocative, transformative actor                                  changing roles like a chameleon. "

....


Jul 19, 2023

I.N.D.I.A

INDIA

காஞ்சித் தலைவன் படத்திற்காக 
கலைஞர் எழுதிய பாடல்.
இசைச் சித்தர் C.S. ஜெயராமன் பாடினார்.

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே

தாயின் ஆணை கேட்பதுக்கு தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா

குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தம்
உன் குன்று தோளில் புது பலத்தை வளங்குமடா நித்தம்
சென்று வா வென்று வா

மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள் சென்று வா வென்று வா

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா – அவர்
ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா – அவர்
கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே

Jul 18, 2023

எழுத்தாளர் சுஜாதா - ராஜநாயஹம்

ஏழு வருடங்களுக்கு முன் 

18th July, 2016

"நான் one of the junior most in FB. My first preference after opening the FB is to search you.
என்னுடைய teenageல எழுத்தாளர் சுஜாதாவிடம் கொண்ட ஈர்ப்பு, எழுபதை நெருங்கும் போது
 R.P. ராஜநாயஹம் எழுத்தின் பால் வருகிறது.

Thank you for giving such a pleasurable experience."

- Balasubramanian

18.07.2016 


Jul 16, 2023

அமரர் ஊர்தியில் மூன்று பேர் அமர்ந்து விச்ராந்தியாக

மாம்பாக்கத்தில் இருந்து கேளம்பாக்கம் வழியாக Blue Flag Beach போகிற வழியில் கண்ட வித்தியாசமான காட்சி.

நின்றுகொண்டிருந்த அமரர் ஊர்தி ரதத்தில் மூன்று பேர் (ஒருவர் பெண்)அமர்ந்து  விச்ராந்தியாக பேசிக்கொண்டு
டீ சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

எல்லா ஊரிலும் அமரர் ஊர்தி பற்றி நம்பிக்கை உண்டு. Conviction.

'பிணத்துடன் இருக்கிற அமரர் ஊர்தியை பார்ப்பது நல்லது. 
காரிய சித்தி.
பிணம் இல்லாமல் காலியாக நிற்கிற, வருகிற அமரர் ஊர்தி ரதத்தை பார்க்கக் கூடாது. '

அமரர் ஊர்தி கூப்பிடுதாம். ' வண்டி காலி. நீ வர்றியா?'

Nietzsche — 'Convictions are more dangerous foes of truth than lies.'

பிஸ்மில்லா ஹலால்


சென்னை கறிக்கடை பாய்  தொழில் நுணுக்கம்
" ஆடு அறுக்கும் போது 'புழுக்கை போட்டால்' அந்த ரத்தம் நல்லா இருக்காது. அதை பாத்திரத்தில் பிடித்து விற்க மாட்டோம்".

திருப்பூரில் முஸ்லிம் தெரு மட்டன் பாய் ஹாஜியார் கடை ஃபேமஸ்.
 "ஆட்டு ரத்தத்தை விலைக்கு கொடுக்கக்கூடாதுங்க" என்பார்.
இலவசமாக கொடுப்பார்.
ஹாஜியார் கடை ஆட்டுக்கறி ருசி பிரமாதமாக இருக்கும்.

 

அந்த கறி ருசி சென்னையில் பார்த்ததேயில்லை.

Jul 15, 2023

காமராஜ்60-பக்தவத்சலம்66

காமராஜ் திட்டம்

வயது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு தங்கள் முழு ஆற்றலையும் செலவிட வேண்டும் என்ற காமராஜ் எண்ணம் தான் காமராஜ் திட்டம்.
 கட்சிப் பணிக்காக என்ற நோக்கம். 
பதவி துச்சம்.

அறுபது வயது முடிந்து மூன்று மாதங்கள் என்ற சமயத்தில் முன்னுதாரணமாக தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

அறுபது வயதில் காமராஜருக்கு  முதிய மனம்?

காந்தி ரொம்ப சின்ன வயதிலேயே முதுமையான மனம் கொண்டிருந்தார்.

காமராஜ் திட்டம் தமிழகத்தைப் பொறுத்தவரை எள்ளல்.

அவருக்கு பின் தமிழக முதல்வர் பதவிக்கு வந்த பக்தவத்சலம் வயது நகை முரணாக அறுபத்தி ஆறு. 

காமராஜ் திட்டத்தை பக்தவத்சலம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை?

The height of Irony.

Jul 13, 2023

தீட்னி


அதிமதுர 'மதுர'

குருவி மண்டயன், 
சட்டி மண்ட, தொல்ல, முட்டா தாசு, கொலாப்புட்டன், மொட்டயன், மண்ட மூக்கன், ஒத்த காதன் இவிங்களெ அரசரடி ஆரப்பாளையம் ரோட்ல பாத்தவுன்னே, 
உருண்ட விழியன் பம்மிட்டான். 
நாலு சார்மினார் சிகரட் வாங்கித்தர சொல்வாங்கெ. காசு கேட்டு அரிப்பாங்கெ. 

இன்னக்கி தாப்பு ஆர்வி நகர் பேஸ்மட்டம். அஞ்சடி செங்கச்செவரோட அரகொறயா நிக்குது. 

போய் ஒக்காந்தாங்கெ. 
முட்டா தாசு பாட ஆரம்பிச்சான் 
' கோமாதா எங்கள் குலமாதா, குல மாதர் நலம் காக்கும் குணமாதா ' 

மொட்டயன் நாலு சிகரட்ட முக்கா வாசி உதுத்தான்.
குருவி மண்டயன் அயிட்டம் தூள கொஞ்சம் சிகரட் தூளோட சேத்து கசக்கி ஏத்தி, ஒன்ன பத்த வச்சி நல்லா இழுத்துட்டு ரவுண்ட்ல விட்டான்.

ஒத்த காதன் ' வேளெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே பால் குடிக்க வந்தவனே ' பாடும்போது தீட்னி தெனகரன் பேஸ் மட்டத்தில நொழஞ்சி
'ஒத்த காதா, பால் குடிக்கவாடா நான் வந்திருக்கேன். நாளக்கி தினமலர் பேப்பர பாருங்க. அப்ப தெரியும் ' னு சத்தமா சொல்லிட்டு, இவங்களோட சேராம பேஸ்மட்டத்ல அடுத்த பகுதிக்கு போய் ஒக்காந்துட்டான். 

'நாளக்கி தினமலர் பேப்பர பாருங்க' -
கவன ஈர்ப்பு டயலாக். 
மரிஜுவானா ஸ்மோக் பண்ணிக்கிட்டு இருந்ததுனால எவனுமே தீட்னி டயலாக்க சட்ட பண்ணல.

பேண்ட் பாக்கெட்ல வச்சிருந்த மூட்டைப்பூச்சி மருந்த எடுத்தான்.
இவன பாக்குற வாகுல ஒக்காந்திருந்த கொலாப்புட்டன் கவனிக்கும்படியா ( கவனித்தே ஆகும்படியா) ஓவர் ஆக்டிங் பண்ணி மூட்டைப்பூச்சி மருந்த விருட்டென்று முதுகுப்பக்கம் மறச்சான்.
தீர்மானமான கவன ஈர்ப்பு. 

கொலாப்புட்டன் கண்ணாலயே 'என்னடா' 
தீட்னி தெனகரன் 'ஒன்னுமில்ல' ன்னு பாவனை.

சல சலன்னு தாப்புல ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி பேச்சு.

'தாசு, இன்னொரு பாட்டு பாடு '

முட்டா தாசு போலீஸ் வேலையில இருந்து டிஸ்மிஸ் ஆனவன்.

' கலக்கமா மயக்கமா மனதிலே குழப்பமா ' பாட ஆரம்பித்தான்.

தீட்னி தெனகரன் மூட்டப்பூச்சி மருந்து கார்க்க  வாயால கடித்து கொலாப்பட்டன் கவனத்த ஈர்த்தான்.

கொலாப்புட்டன் மீண்டும் கண்ணாலயே தீட்னிய ' என்னடா? ' 
தீட்னி வம்படி சோகமாக
 'ஒன்னுமில்ல' ன்னு தலய மட்டும் ஆட்டி, அவசரமாக மருந்தை மறச்சிக்கிட்டான்.

தீட்னி தர்ற சூசக தகவல மறுதலித்து 
தாசு பாட்டுக்கு கொலாப்புட்டன் ரசிச்சி ஆஹாகாரம் செய்து சொக்கினான்.



தீட்னி எந்திரிச்சு இவுங்க இருக்கிற பக்கம் வந்து சோகமாக 'ஊக்கு வேணும்டா' ன்னான்.
 'யாராவது  ஊக்கு இருந்தா இவனுக்கு குடுங்கடா ' ன்னு கொலாப்புட்டன் ரெகமன்டேசன்.

மண்ட மூக்கன் இடுப்பு அரணாக்கயித்தில இருந்து
 ஊக்க எடுத்து கொடுத்தான்.

பக்கத்து பகுதிக்கி போயி கொலாப்புட்டன் எசவா பாக்க , 
தீட்னி தெனகரன் ஊக்கால 
பாட்டில் மூடி கார்க் தெறக்க பகீரதப்ரயத்தனம்.
தெறந்த வேகத்தில மருந்த இவனே கொட்டும்படியா செய்து, 'அடச்சே, அம்புட்டும் கொட்டிச்சே, எனக்கு சாகக்கூட கொடுத்து வக்கலியா ' ன்னு கத்தும் போது தான்,
அன்னக்கி தான் முட்டா தாசு பிரபலமான தன்னோட அந்த கவிதைய முதன் முதலா சுட சுட சொன்னான்.

' முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல. முடிவில் கொடைக்கானல் தான் '

மூக்க வெடச்சி ஆட்டு மூக்கன்
' மூட்டப்பூச்சி மருந்து நாத்தம்டா'ன்னான்.

தீட்னி தெனகரன் வந்து ஆக்ரோஷமாக கொலாப்புட்டன பாத்து " நீயெல்லாம் மனுஷனாடா, நான் சாகப்போறேன்னு தெரிஞ்சும் அசால்ட்டா பாத்துக்கிட்டே இருக்கியேடா, ஏன்டா ஒனக்கெல்லாம் ஈவு எறக்கமே இல்லயேடா, கல்லு மனசுடா டேய்..கொலகாரப்பாவி.. "

எல்லாரையும் பாத்து " லவ் ஃபெயிலியருடா" ன்னு
 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிட்டான் தீட்னி.

Jul 3, 2023

மாமன்னன் பார்த்தவுடனே

மாமன்னன் திரைப்படம் பார்த்தவுடனே வாங்கினேன்.

Mother pig with it's piglets
https://m.facebook.com/story.php?story_fbid=3633321486881291&id=100006104256328&mibextid=Nif5oz

Jul 2, 2023

கல்கத்தா விசுவநாதன்

கல்கத்தா விசுவநாதன்
- R.P. ராஜநாயஹம் 

Calcutta Viswanathan wore many hats.

Double M.A. 

 'International Relations' course in Oxford University.

மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனின் கஸின் கல்கத்தா விசுவநாதன். ஹரி ஸ்ரீநிவாசன் தான் எழுத்தாளர் சார்வாகன்.
Architecture Advisor மோகன் ஹரிஹரன் சார்வாகனின் உடன் பிறந்த சகோதரர்.

கல்கத்தா விசுவநாதனின் இளைய சகோதரர் மோகன் பத்மநாபன் journalist. 
Times of India, Economic Times, 
The Hindu ஆகிய ஆங்கில ஏடுகளில் பணியாற்றியவர்.

கல்கத்தா விசுவநாதன் Theatre personality.

Shakespearean Actor.
He had acted as Malvolio in Twelfth Night.
Malvolio: "Some are born great. Some achieve greatness. Some are having greatness thrust upon them."

 பெங்காலி நாடகங்களில் நடித்தவர்.
 
தன் பள்ளித் தோழர் உத்பல் தத் பின்னாளில் நடிகராக நடத்திய People's little theatre ல் நடிகர் கல்கத்தா விசுவநாதன். 
கல்கத்தா விசுவநாதன் Calcutta players என்று நாடகக்குழு நடத்தியவர்.

எஸ். பாலச்சந்தர் 'அந்த நாள்' படத்தில்
சிவாஜி நடிப்பதற்கு முன்பு கல்கத்தா விசுவநாதன் தான் நடித்துக்கொண்டிருந்தார். 
எஸ்.பாலச்சந்தருடன் ஏற்பட்ட கசப்பான ஒரு சம்பவம் காரணமாக நீக்கப்பட்டார்.

சத்யஜித்ரே முதல் வண்ணப்படம் கஞ்சன்ஜுங்காவில் நடித்தவர்.

மிருணாள் சென் இயக்கிய புனஸ்ச்சாவில் கல்கத்தா விசுவநாதன் இரண்டாவது கதாநாயகன்.

முப்பத்தைந்து பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய மகன் அசோக் விசுவநாதன் விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குநர்.
பெங்காலில் திரைப்பட தொழில்நுட்ப நிறுவனத்தில் டீன் ஆக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கல்கத்தா விசுவநாதன் பழைய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பீம்சிங் இயக்கத்தில் 'திருமணம்' 
பானுமதி எடுத்த 'கானல் நீர்' போன்ற படங்களிலேயே கூட இவர் உண்டு.

தமிழில் மூன்று முடிச்சு துவங்கி, லலிதா, கவரி மான்,  மூடுபனி, கண் சிவந்தால் மண் சிவக்கும், எனக்குள் ஒருவன், வெள்ளை ரோஜா,
 நிலவு சுடுவதில்லை, படிக்காத பண்ணையார் போன்ற படங்கள்.

மூன்று முடிச்சில் ரஜினிக்கு அப்பா கல்கத்தா விசுவநாதன்.
 ஸ்ரீதேவிக்கு கணவர்.
ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த 
முதல் படம்.

ரஜினி 'பாபா'விலும் தலைகாட்டியவர்.

'கவரி மான்'  க்ளைமாக்ஸில் சிவாஜியிடம் கல்கத்தா விசுவநாதன் சொல்வது mighy line.
"நீ ஜெயில்ல இருந்து திரும்பி வரும் போது நான் இருக்க மாட்டேன். ஆனா என் டைரி இருக்கும்."

படங்கள்
1. கஞ்சன்ஜுங்காவில் கல்கத்தா விசுவநாதன்
2. புனஸ்ச்சாவில் கல்கத்தா விசுவநாதன்

Jul 1, 2023

மாமன்னன்

மாமன்னன் திரைப்படம் அற்புத வார்ப்பு.

உதயநிதி ஸ்டாலின் கதாபாத்திரம் முழுமையாக அமைந்திருக்கிறது.
Perfect performance.

வடிவேலு இதில் விஜய் சேதுபதியாக தோற்றம் கொண்டிருக்கிறார்.

ஃபகத் ஃபாசில் ஒல்லிபிச்சான் வில்லத்தனத்தில் கூர்மை.

கீர்த்தி சுரேஷ் சபாஷ்