Share

Dec 29, 2014

வாசன்,பாலன்,ஜெயகாந்தன்



ஆனந்த விகடன் (31.12.2014 தேதியிடப்பட்டது) ஜெயகாந்தன் பேட்டி குறித்து சில வார்த்தைகள்.
ஜெயகாந்தன் அந்தக்காலத்தில் எஸ்.எஸ்.வாசன் குறித்து சொன்னதையெல்லாம் இந்தப்பேட்டியில் மகன் எஸ்.எஸ்.பாலன் மேல் ஏற்றி சொல்கிறார்.

ஆனந்த விகடன்  முதலாளி வாசன் இவருக்கு எழுத வாய்ப்பு  கொடுத்த போது ஜெயகாந்தன் வயது 20 எனில் அது 1954ம் ஆண்டு.


இந்த விஷயம் " அது தான் வருத்தமாக இருக்கிறது பாலு!" பேட்டியில் பாலன் வாய்ப்பு கொடுத்ததாக பதிவாகியிருக்கிறது.
இது ஜெயகாந்தன் தவறாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பேட்டியை எழுத்தாக்கம் செய்துள்ள தமிழ்மகன் செய்துள்ள தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு.
 
பாலன் மீதுள்ள அதீத விசுவாசம் காரணமாக வாசன் பற்றி குறிப்பிட்ட விஷயத்தையெல்லாம் பாலன் மீதேற்றியிருக்கலாம்.
பேட்டியில் முன்பகுதியில் உள்ள விஷயங்கள் வாசன் சம்பந்தப்பட்டவை.

முத்திரைக்கதைகள் பத்தாண்டு காலம் எழுதியதெல்லாம் வாசன் உபகாரம்.'அக்னிப்ரவேசம்' கதை கொந்தளிப்பின் போது  'நீங்கள் எழுதுங்கோ' என்று பச்சைக்கொடி காட்டிய பண்பாளர் வாசன் தான்.
அதெல்லாம் இந்தபேட்டியில் பாலன் என்பது போல பதிவாகியிருக்கிறது.

இன்னொரு விஷயம். 'இதயம் பேசுகிறது' மணியன் ஆனந்த விகடனில் வேலை பார்த்த போது தான் ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத்தொகுப்பை  முதலாளி பார்வைக்கு வைத்து அதை வாசித்த வாசன் ஜெயகாந்தனுக்கு முத்திரைக்கதைகள் எழுத வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

1954ல் ஜெயகாந்தனுக்கு 20 வயது என்றால் எஸ்.எஸ். பாலனுக்கு
அப்போது 19 வயது தான்!
பத்தாண்டு காலம் முத்திரைக்கதைகள் எழுதியுள்ளார். வாசன் மறைந்த ஆண்டு 1969.
அப்பாவுக்கு உதவியாக பட்டத்து இளவரசர் சகல அதிகாரத்துடன் இருந்திருக்கலாம் தான். ஏவிஎம் செட்டியார் காலத்தில் சரவணன் பட வேலைகளையெல்லாம் பார்த்தவர் தான். அது போல ஸ்டுடியோ நிர்வாகத்திலும், பத்திரிக்கையிலும் பாலன் செயல் பட்டிருக்கலாம்.

ஜெமினியின் தரமான தயாரிப்புகளான 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'வாழ்க்கைப்படகு' பாலன் இயக்கிய படங்கள் தான். வாசன் இறப்பதற்கு  நான்காண்டுகளுக்கு முன் வந்த படங்கள்.

சிவாஜி,ஜெமினி கணேசன் இருவரையும் இயக்கியவர்.
1974ல் எம்.ஜி.ஆர் படம் 'சிரித்துவாழவேண்டும்' பாலன் இயக்கம் தான்.

ஆனால் ஜெயகாந்தன் எப்போதும் வாசனையே தன் வாழ்க்கைக்கு வழி திறந்தவர் என்பதாக  நிறுவியிருக்கிறார். அதோடு வாசன் காலத்திற்கு பின் பாலன் நிர்வகித்த ஆனந்த விகடன் பத்திரிக்கை மீது மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்.


வாசன் பற்றி அதிகம் நினைவு கூர்ந்த தமிழ்படைப்பாளிகள் இருவர்.

ஒருவர் ஜெயகாந்தன். பத்திரிக்கை அதிபர் வாசன் பற்றி பேசியவர்.

மற்றொருவர் அசோகமித்திரன். ஸ்டுடியோ அதிபர் சினிமாக்காரர் ஜெமினி வாசன் பற்றி பேசியவர்.

Dec 28, 2014

A double drop



Willful ignorance 

ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் கொடுத்துள்ள பேட்டியில் மறைந்த ஆசிரியர் பற்றி அஞ்சலியாக ரொம்ப உயர்வாக சொல்லியிருக்கிறார். சரிதான்.

http://nadappu.com/wp-content/uploads/2014/07/jayakand_1.jpg

  


ஆனால் 1970களில் ஆனந்தவிகடனைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும்போது
 " அன்று எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடனில் ஜெயகாந்தனுக்கு இருந்த மரியாதை கம்பனுக்கு மன்னன் குலோத்துங்கன் செய்த மரியாதைக்கு சமம்." என்று வாசனைப்பற்றி மிக உயர்வாக  குறிப்பிட்டு பின் எஸ்.பாலசுப்ரமணியன்  நிர்வகித்த ஆனந்த விகடன் மீது தன் கடுமையான அதிருப்தியை அடிக்கடி அரசியல் மேடையில் கூட வெளிப்படுத்தியிருக்கிறாரே!'

 Tactical stupidity!What areas of the skull must be traumatized to cause selective amnesia?!


"Facts do not cease to exist because they are ignored."
—Aldous Huxley


................................

இரண்டு காட்சிகள்
      

"சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் ஸ்ரீவித்யா எழுதும் காதல் கடிதங்களை படிக்காமலே சிவ்குமார் போஸ்ட் செய்வார்.
தன்னை காதலிக்கவில்லை என்பது தெரியவரும்போது சிவகுமாரிடம் மெதுவாக கேட்பார். "நான் உங்க கிட்ட போஸ்ட் செய்யச்சொன்ன கடிதங்களை ஒரு தடவை கூட படிக்கனும்னு உங்களுக்கு தோணவே இல்லையா சார்"
'அதெப்படிங்க.. நீங்க இன்னொருவருக்கு எழுதிய கடிதத்தை நான் படிக்க முடியும்!' - சிவகுமார் பதில்.
இந்த பதிலால் இழப்பின் பரிமாணம் அதிகமாகி விட்ட சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஸ்ரீவித்யா சொல்வது :" நீங்க ஒரு ஜெண்டில் மேன் சார்.."
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்.
கே.பாலச்சந்தர் படக்காட்சிகளில் மேன்மையான ஒன்று இது.
படு நாடகத்தனமான காட்சி ஒன்று
"புதுப்புது அர்த்தங்கள்" படத்தில்
சித்தாரா தன் கணவன் சத்யனுடன் ( நடிகர் ராஜேஷின் தம்பி) மீண்டும் இணையும்போது முடவனான கணவன் தன் கால்களான இரு கட்டைகளையும் உடனே,உடனே தூக்கி வீசிவிடுவது! ஏன் தூக்கி வீசவேண்டும்!?
.....................

Dec 23, 2014

நந்தன் மாசிலாமணி பதிப்பித்துள்ள R.P. ராஜநாயஹத்தின் இரண்டு நூல்கள்


R.P. ராஜநாயஹத்தின் இரண்டு புத்தகங்கள் நந்தன் மாசிலாமணி வெளியிட்டிருக்கிறார்.

1.இலக்கியம்,இசை,ஹாலிவுட் பதிவுகள் -- R.P.ராஜநாயஹம்
- விலை ரூபாய் 200
2.சினிமா பதிவுகள் - R.P. ராஜநாயஹம்
-விலை ரூபாய் 150




ராஜராஜன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை - 600 017
தொலை பேசி: 044- 2434 55641, 2431 3221
 ......................................













Dec 22, 2014

Cinema -The most beautiful fraud!


 ஜிப்பா வேஷ்டியுடன் பசுமணி. சர்வர் வேலை செய்து கொண்டே சினிமாவில் பாடல் எழுத வாய்ப்புக்காக முயற்சியில் இருப்பதாகச்சொன்னார்.

அப்போது வைரமுத்து கூட சினிமாவுக்கு பாடல் எதுவும் எழுதியிருக்கவில்லை.

பசுமணி இறந்து விட்ட தன் காதலிக்காக தான் எழுதிய பாடலை பாடிக்காண்பித்தார்.

‘பாடு என்று பாடச்சொல்லி கேட்டு நின்றவள்
நான் பாடும்போது பாவத்தோடு ஆடி நின்றவள்
இன்று பார்வை மூடி பாடையோடு பயணம் போனதேன்
என்னை பாதிக்கவிஞன் ஆக்கி விட்டு பறந்து போனதேன்’

சோகமாக என்னைப்பார்த்து தன் கண்களை துடைத்துக்கொண்டார்.

“ நான் ஒரு வித்தியாசமான ஆளு சார்!”என்றார்.

நான் “சொல்லுங்க!”

“ நான் ஒரு இலட்சியவாதி! கேட்டா ஆச்சரியப்படுவீங்க!”

அவரே சொல்லட்டும். ஆச்சரியப்படுவது பற்றி யோசிக்கலாம்
- அமைதியாக புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன்.

" 'தப்புத்தாளங்கள்’ பார்த்து விட்டு நான் என்ன செய்தேன் தெரியுமா?”

கன்னத்தில் கை வைத்தவாறு அவர் பீடிகையை எதிர்கொண்டேன்.

“என் காதலி இறந்த பிறகு ரொம்ப சோகமாக பைத்தியம் பிடித்தது போல இருந்தேன். ஒரு நாள் “தப்புத்தாளங்கள்” பாலச்சந்தர் படம் பார்த்தேன். ரஜினி என்னை ரொம்ப பாதித்தார். அந்தப்படம் பார்த்து விட்டு நான் ஒரு காரியம் செய்தேன்.”

இந்த இடத்தில் மீண்டும் நிறுத்தி விட்டு மந்தகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தார்.
“ ‘தப்புத்தாளங்கள்’ பார்த்து விட்டு உடனே ஒரு விபச்சாரிக்கு வாழ்வு கொடுத்தேன். ஆமா சார்! ஒரு விபச்சாரியை கல்யாணம் செய்து கொண்டு விட்டேன். ஆனா அந்த கல்யாணம் நிலைக்கல..”

Cinema is the most beautiful fraud in the world. - கோடார்ட் இப்படி சொல்லியிருக்கிறார்.
Image result for godard
நான் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு கவிஞர் பசுமணியிடம் சொன்னேன்.
“ நீங்க “சிகப்பு ரோஜாக்கள்” தயவு செய்து பார்க்காதீங்க...பார்க்கவே பார்க்காதீங்க..”

 https://s-media-cache-ak0.pinimg.com/236x/2d/50/36/2d50360e80b43c540ac4f9da43ed6a51.jpg

Cinema can fill in the empty spaces of your life and your loneliness.
- Pedro Almodovar
Image result for almodovar
.....................................


Dec 21, 2014

தேவிகா


கமல் ரஜினி காலம் ஆரம்பித்து பிரமாதமாக இருவரும் கொடி கட்டிவிட்ட காலம். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம்......

மதுரை தேவி தியேட்டரில் பழைய படம் “பாவ மன்னிப்பு” பார்க்க என் நண்பன் சரவணனுடன் போயிருந்தேன்.

தேவிகா படத்தில் வந்தவுடன் கை தட்டல். பால்கனியில் கூட கை தட்டி ரசிக சுள்ளான்கள் ஆர்ப்பரித்தார்கள்.தேவிகா வருகிற காட்சிகளிலெல்லாம் பலமான வரவேற்பு. இப்படி தத்தனேரி,விளாங்குடிடூரிங் டாக்கீஸ்களிலும் பார்த்ததுண்டு.
தேவிகா யாரோ ஒரு ரொம்ப பழைய மெட்ராஸ் மேயர்- பாசுதேவ் நாயுடு வின் நெருங்கிய உறவுக்காரப்பெண் என்று புதுமுகமாக அறிமுகமான காலத்தில் அடையாளம். ஊமைப்படக் காலத்து சினிமாக்காரர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் பேத்தியாம். ரொம்பப்பாரம்பரியமான குடும்பம்.
இயற்பெயர் பிரமீளா!
சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரின் பங்களிப்பு தமிழ்ப்பட கறுப்பு வெள்ளை காலத்துக்கு அதிகம்.
அழகு நளினம் என்று தேவிகாவை சொல்லவேண்டும்.

 
“நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா உயிரே விலகத்தெரியாதா” மாஸ்டர் பீஸ்!

“சொன்னது நீ தானா? சொல்,சொல் என்னுயிரே”

“பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது”

“உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்.”

“ராமனுக்கே சீதை என்று வாழ்வது தான் பெண்மை, சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை”

“ஆயிரம் பெண்மை மலரட்டுமே, ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே”

சுசிலாவின் இந்தப்பாடல்களெல்லாம் தேவிகாவால் காட்சியாகின.

பின்னால் பிரபலமான கே.ஆர்.விஜயா நாடகத்தனமான நடிகை.
“தூக்கணாங்குருவிக்கூடு, தூங்கக்கண்டா” என்ற தேவிகாவின் பாடலைப்பார்த்து விட்டு கே.ஆர்.விஜயாவின் “ தமிழுக்கும் அமுதென்று பேர்” பாட்டைப் பார்த்தால் தேவிகாவின் அருமை புரியும். கே.ஆர்.விஜயா பாரதி தாசனின் பாடலில் செய்யும் கொனஸ்டைகள் சகிக்காது.


தேவிகா சிவாஜியுடன் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட் ஆகியிருந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.

ராணி பத்திரிக்கையில் அந்த 1960களின் பின்பகுதியில் ஒரு சுவாரசியமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு அழகி தனக்குப்பிடித்த மற்றொரு அழகி பற்றி சொல்லவேண்டும்! அந்த அழகி மறுவாரம் தனக்குப்பிடித்த மற்றொரு அழகியைக்குறிப்பிடவேண்டும். இதில் சுலபமாக தேவிகா இடம்பிடித்தபோது தனக்குப்பிடித்த அழகியாக திருவிளையாடலில் முருகனாக நடித்த சிறுமியைக்குறிப்பிட்டார். அந்த சிறுமி சினிமாவில் பிரபலமாகவேயில்லை.

சினிமா பார்க்க தேவிகா தியேட்டருக்குப் போனால் முந்திரிப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பார்.

சௌராஷ்ட்ராவான தேவதாஸ் அப்போது பீம்சிங்கிடம் உதவி இயக்குனர். அவரை தேவிகா திருமணம் செய்துகொண்டார்.

கண்ணதாசன் மதித்த நடிகைகளில் தேவிகா முக்கியமானவர். வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் தேவிகா பெரிய தவறு செய்து விட்டதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.


தேவதாஸ் இயக்கிய “வெகுளிப்பெண்” தேவிகா,வெண்ணிற ஆடை நிர்மலா நடித்து வெளி வந்தது.

தேவிகா தேவதாஸ் பிரிந்த பின்னால் ஒரு குடியரசு தினத்தில் தேவதாஸ் வாழ்ந்த வீட்டிற்கு அப்துல்லாவோடு போயிருந்தேன்.அப்துல்லாவின் உறவினர் சுல்தானும் தேவதாஸோடு பீம்சிங்கிடம் இருந்தவர்.

நான் பங்களாவிற்குள் நுழைந்தபோது தேவதாஸ் அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்தார். சுல்தான் கத்திரிக்காயில் காம்பு கிள்ளியெடுத்துக்கொண்டிருந்தார்.

டிரான்ஸிஸ்டர் சைசில் ஒரு போர்ட்டபிள் டி.வி.யில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நேரடியாய் ஒளிபரப்பு. குத்துச்சண்டை வீரர் முகமது அலி அந்த குடியரசு தினத்தில் முக்கிய விருந்தினர்.

தேவிகாவிற்கு காலங்கடந்தும் நிறைய ரசிகர்கள் இருப்பதை நான் குறிப்பிட்ட போது தேவதாஸ் அது பற்றி மிகுந்த பெருமைப்பட்டார்.


கனகா நடிகையானவுடன் தேவிகா ரொம்ப ஜபர்தஸ்து. அம்மாவை சமாளிக்க முடியாமல் சினிமாவுலகம் திணறியதாகச் சொல்வார்கள்.
தலைசிறந்த கதாநாயகியாக தேவிகாவை அறிந்தவர்களுக்கு கனகாவின் அம்மாவாக வித்தியாசமாக ஒரு பிம்பம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் என் மாமனாரின் அண்ணன் வீட்டில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதிசயப்பிறவி படம் டி.வியில்.
"மருமகனே! இவ யாரு!"

"கனகா. தேவிகா மக!"

உடனே என் பெரிய மாமனார் எங்களுடன் அமர்ந்திருந்த அவருடைய அக்கா மாப்பிள்ளையிடம்  பதறிப்போய் சொன்னார்.
" அத்தான்! தேவிகா மக நடிக்க வந்துட்டான்னா நமக்கெல்லாம் வயசாயிடுச்சின்னுல்ல அர்த்தம்!?"

.........



தேவிகாவின் குடும்ப நண்பர் ஒருவரிடம் நடிகையாக அவரின் விஷேச அம்சங்கள் பற்றி விலாவரியாக பேசிவிட்டு “ தேவிகாவின் ரசிகன் நான்.” என்றேன். அவர் “இதையெல்லாம் நான் தேவிகாவிடம் சொன்னால் அவர் பதில் என்ன தெரியுமா! ‘அவன் எந்த பய. காட்டுப்பய’ என்பது தான்!”

தேவிகாவை மென்மையும் பெண்மையுமாக திரையில் கண்டிருந்த எனக்கு இந்த உண்மை பெரும் முரணாகத் தெரிந்தது!


.................................................

Dec 20, 2014

The Crisp Bits - Scraps

மிஷ்கின் பாடிய பாரதி பாடலை நான் பாடினேன்!

200 குழந்தைகளுடன் டிசம்பர் 11ந்தேதி
அச்சம் தவிர், நையப்புடை, மானம் போற்று, ரௌத்திரம் பழகு
- பாரதியின் புதிய ஆத்திச்சூடி 


 
 - இயக்குனர் மிஷ்கின் பாடிய பாடலை நான் பாடினேன்!

பாரதியின்,மீசை,முண்டாசு,கோட்டு,பஞ்சகச்சத்துடன் குழந்தைகள்!
ஒன்றாம் வகுப்பு துவங்கி எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள்!

நான் ஒவ்வொரு வரியாக பாட, குழந்தைகள் பாடினார்கள்!

https://www.youtube.com/watch?v=0h0U_eTaeXY

..........................................................

Grave Injustice



LN Mishra murder: Delhi court awards life sentence to all four convicts after 40 years!
இந்திய மத்திய அரசின் காபினெட் ரயில்வே அமைச்சர் எல்.என்.மிஸ்ரா 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரஞ்சன் துவிவேதிக்கு அப்போது 24 வயது!
4 குற்றவாளிகளுக்கும் நேற்று டெல்லி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது!

"சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்!
தர்மம் பாரில் தழைத்தல் மறு கணம்!"

ஏங்கினான் எட்டயபுரத்து எரிமலை பாரதி!

Dec 10, 2014

ஸ்ரீகாந்த்







http://i.ytimg.com/vi/Nymih9WGhYY/hqdefault.jpg                          

வெண்ணிற ஆடை படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் தியேட்டரில் அவரை திரையில் பார்த்து ரசிகர்கள் கத்தியதை  நேரில் பார்த்த போது வெறுத்துப்போனார். அவருடைய நடிப்பு அப்போது தமிழ் ரசிகர்களுக்குப்பிடிக்கவில்லை.  

http://i.ytimg.com/vi/S4_rQTgZ0nE/hqdefault.jpg
ரொம்ப அவமானமாயிருந்ததால் ஒரு முடிவெடுத்தார் - இனி சினிமாவில் நடிக்க கூடாது.
இது அவரே சொன்ன விஷயம்.


வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதற்கு நேர் மாறாக இவரை படம் பார்த்தவர்கள் புறந்தள்ளினார்கள். இப்போது அந்தப்படம் பார்த்தால் அவருடைய நடிப்பு அப்படியொன்றும் மோசமெல்லாம் கிடையாது.அருமையான பி.பி.எஸ் பாடல்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன்!
1965ல் இருந்த ரசிகர்கள் முழுக்க எம்.ஜி.ஆர் – சிவாஜி மயக்கத்தில் இருந்தவர்கள். 
 
ஸ்ரீகாந்த் அமெரிக்கன் செண்டரில் வேலை பார்த்துக்கொண்டே நடிக்க வந்தவர். 
இவர் தன் திரைப்பட அறிமுகத்திற்குப்பின் கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டார்.
ஸ்ரீ காந்த் சினிமா வாழ்வு கொஞ்சம் விசித்திர மானது. இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டதால் இவருக்கு எந்த பெரிய பலனும் கிட்டவில்லை.1965ல் ஸ்ரீதர் தரத்துக்கு சற்றும் பொருந்தாத இயக்குனரான ஜோசப் தளியத்தால் அறிமுகமான ஜெய்சங்கர்  பிஸியான கதாநாயகன்.
சிறந்த இயக்குனர் பாலச்சந்தர் நாடகங்களில் நடித்து ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் சினிமாவில் சாதாரண நடிகராகிவிட்டார்.
ஸ்ரீதர் முன்னதாக அறிமுகப்படுத்திய ரவிச்சந்திரன் கூட ரசிகர்களால் 'காதலிக்க நேரமில்லை' யில் ரசிக்கப்பட்டார்.  

பாலச்சந்தர் நாடகங்களில் நடித்தவர் என்பதால் அதே வருடம் 'நாணல்' படத்தில்  காமெடி பாத்திரம் செய்தார்.
ஏ.வி.எம் ராஜன் ‘கற்பூரம்’(1967) – ‘நிலவே உனக்கு குறையேது? என் அருகினில் நெருங்கிட வரும்போது’ என்ற ஒரு பாடலுடன் ஸ்ரீகாந்த்துக்கு சின்ன ரோல்.மணிமாலாவை கற்பழிப்பார்.
 பாலச்சந்தரின் “நாணல்”, “பாமாவிஜயம்” “எதிர் நீச்சல்” “பூவாதலையா?” “நவக்கிரகம்” படங்களில் எல்லாம் ஸ்ரீகாந்த் தன் முதல் படத்து பிம்பத்துக்கு சம்பந்தமேயில்லாமல் காமெடி ரோல் தான் செய்தார்!

பாமா விஜயத்தில் சச்சுவிடம் ஸ்ரீகாந்த் " I have no father.. no mother.."
எதிர் நீச்சலில் சௌகாரிடம் " ஏட்டிக்குப்போட்டி பேசாதேடி பட்டோ!"
பூவாதலையா - "போடச்சொன்னா போட்டுக்கிறேன்.போடும் வரை கன்னத்திலே." ஏ.எல்.ராகவன் பின்னனி குரல்!
நவக்கிரகம் - "திட்டுறான் திட்டுறான் மறுபடியும் திட்டுறான்! எல்லாரும் சாட்சி."


அதன் பிறகு அந்த பாலச்சந்தர் பட பாத்திரங்களுக்கு சம்பந்தமேயில்லாமல் ப்ளேய் பாய் ஆக ஆளே மாறிவிட்டார். மிக பிஸி.
“தோரஹா” இந்திப்படம் தமிழில் ‘அவள்’ தயாரிக்கப்பட்டபோது அதில் ருபேஷ் குமார் செய்த வில்லன் ரோலை செய்தார். “I’m always open!”
வெண்ணிற ஆடை நிர்மலாவை கற்பழிப்பார்.

 சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் படங்களில் பிஸியான நடிகர். அதே 1972ல் காசே தான் கடவுளடா, ஞான ஒளி, தொடர்ந்து அடுத்த வருடம் ராஜபார்ட் ரங்கத்துரை.
1974ல் சிவாஜியின் மகனாக தங்கப்பதக்கத்தில் கலக்கி விட்டார். அதேவருடம் சிங்கிதம் சீனிவாசராவின் ‘திக்கற்ற பார்வதி’யில்  கதாநாயகன். கதாநாயகி லக்ஷ்மி!
 ‘ராஜநாகம்’ படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன்.
தேவர் படம் ‘கோமாதா என் குல மாதா’ வில் பிரமீளாவுக்கு ஜோடி.
அவருடைய ஹேர்ஸ்டைல் தனித்துவமானது.
வத,வத என்று பல படங்கள் நடித்தார். 
‘பைரவி’, ‘சதுரங்கம்’ இரண்டு 1978 படங்களில் ரஜினிகாந்த்துடன்.
(மேஜர் சந்திரகாந்த் கதையில் இரண்டு பாத்திரங்கள். சந்திரகாந்தின் இருமகன்கள் ஸ்ரீகாந்த், ரஜினி காந்த். இந்த இரண்டு பெயர்களை பாலச்சந்தர் இரண்டு நடிகர்களுக்கு சூட்டினார்!)
கமல்ஹாசனுடன் “நீயா?”(1979)

 ஜெயகாந்தன் நாவல்களின் நாயகன். ஒரு வித்தியாசமான ஸ்ரீகாந்த்.
சில நேரங்களில் சில மனிதர்கள் (1977) 
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)

.......
ஸ்ரீகாந்த் தன் நண்பன் நாகேஷ் பற்றி சொல்லியிருக்கிற சுவாரசியமான விஷயம்.
 நாகேஷ்,ஸ்ரீகாந்த்,கவிஞர் வாலி மூவரும் திரையுலக முயற்சியில் இருந்த காலத்திலேயே நண்பர்கள். 

நாகேஷுக்கு  நண்பர்கள் மத்தியில் பட்டப்பெயர்
 "மொபைல் நாகேஷ்"!
தங்குவதற்கு தனி அறை ஏதும் இல்லாததால் ஒவ்வொரு நண்பர்கள் அறையாக மாறி, மாறி தங்கிக்கொள்வாராம்! அதனால் மொபைல் நாகேஷ்!
 


................................................................................................