துணை கதாபாத்திரங்கள் எப்போதும் ஒரு திரைப்படத்தில் அதன் தரத்தை விஷேச அளவில் உயர்த்தி விடுபவர்கள்.
தமிழில் அந்தக்காலத்தில் எஸ்.வி.ரெங்காராவ், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, நாகேஷ்……
இந்தக்கால மலையாளப்படம் ’உஸ்தாத் ஓட்டல்’ தாத்தா! திலகனின் பங்கு எவ்வளவு மேலானது. மயிலிறகால் வருடுவது போல அவர் பேசும் அழகு. திலகன் இடத்தை இனி வேறெந்த கலைஞன் நிரப்ப இயலும்?
The importance of Supporting actors.. Supporting actors aren’t just those familiar faces who can steal a film.They show a way for movies to portray real life.
பழைய ஹாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகன் கதாநாயகிக்கான முக்கியத்துவத்தை மீறி நகைச்சுவை குணச்சித்திர நடிகர்கள் தூக்கலாக அசத்திய விஷயம் பற்றி..
.ஹென்றி ட்ராவர்ஸ் குணச்சித்திர-நகைச்சுவை நடிகராக It’s a wonderful life ( 1946 ) படத்தில் கடைசி 40 நிமிடங்களில் பிரமாதமாக கலக்கியிருப்பார்.
“Each man's life touches so many other lives. When he isn't around he leaves an awful hole”
“You've really had a wonderful life. Don't you see what a mistake it would be to throw it away?”
க்ளாரன்ஸ் என்ற ஏஞ்சல் பாத்திரத்தை ஹென்றி ட்ராவர்ஸ் செய்திருக்கும் நேர்த்தி! ஜேம்ஸ் ஸ்டீவார்ட், டோன்னா ரீட் நடித்த இந்த படம் எப்பேர்ப்பட்ட துயர நிலையில் இருப்பவருக்கும் மருந்து.
ஹிட்ச்காக்கின் Suspicion (1941) கேரி க்ரான்ட் கதாநாயகன். கேத்தரின் ஹெப்பர்ன் கதாநாயகி.
கேரி க்ரான்ட் நண்பராக வரும் நைஜல் ப்ரூஸ் ((Nigel Bruce) நடிப்பு தான் எத்தனை சிறப்பானது. எத்தகைய கலகலப்பான பாத்திரம். மிகுந்த உரிமையுடன் “Tickle her chin” தன் நண்பனிடம் வெள்ளந்தியாக அவர் சொல்வது ரொம்ப நுட்பமான பரிமாணம்.
Bonnie and Clyde (1967) வாரன் பீட்டி, ஃபேயி டனவே தான் ஜோடி.
மைக்கல் பொல்லார்ட் என்ற நடிகரின் நகைச்சுவை நடிப்பு.Funny face என்பதற்கு சரியான உதாரணம்.
“We rob banks” என்று சொல்லும் பான்னி, க்ளைட் இருவரிடமும் கொஞ்சமும் அதிர்ச்சியடையாமல் “நான் மைனர் ஜெயிலில் இருந்தவன்” என்று சொல்லி விட்டு உடனே பார்ட்னராக காரில் ஏறி விடும் சி.டபிள்யு. மோஸ் பின்னால் பான்னி-க்ளைட் பற்றி பத்திரிக்கைகள் பரபரப்பாக எழுதும் போது சலிப்புடன் என் பெயர் பிரபலமாகவில்லையே என்ற ஏக்கத்துடன் சொல்வது:“How come the newpapars always refering to me as ’unidentified suspect’?”
………………………………………………………
http://rprajanayahem.blogspot.in/2016/…/brief-encounter.html
...............
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.