Share

Sep 30, 2021

வெற்றி கொண்டான்



1973ல்மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :


கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார்


 " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற."


மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே. 

அது தான என் வேலை. 

திமுக வை எம்ஜியாரை வைத்து உடைத்ததே என் வேலை தான். 

இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே.


கடவுள் : மோகன், நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து. கலைஞரை திட்டாதே .


மோகன் : முடியாது கடவுளே.


கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே?


மோகன் : ஆமா கடவுளே..


கடவுள் : திட்டுவ நீ?


மோகன் : ஆமா திட்டுவேன்.


கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்லே.


எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆன போது                 நடந்த விஷயம்.


 எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி

 ' அன்றைய தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது,

 நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' 

என என்னத்தையோ உளறினார். 


உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி. 


" குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான். காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா!

 இவன் பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே.

நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே

 " ஏலே, டேய் நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு கேட்கிறேன்.

அவன் பதறிப் போய்

 " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான். 

குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான்"


(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)


குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .


எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக 

" ஆம். டெல்லியில் மன்றாடிய பரம்பரை."என்றார்.


அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை பார்க்கப் போயிருந்தேன். 

அவர் அழுது கொண்டே சொன்னார்.

" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா 

சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''

" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள்?"ன்னு 

நான் கேட்டேன்.


பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார். பக்தவத்சலம் முதலியார் தான் 

எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா 

என்ன செய்யறது?"


தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை குரங்கு போலவே வரைவார்கள். 

ஜெயந்தி நடராஜனின் தாத்தா.


எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி

 வெற்றி கொண்டான் :

 மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய உத்தரவிடுகிறேன்.’ 


அப்படி சொன்னது தான் தாமதம். 

அந்த கோர்ட்டுக்கு எதிரே ஒரு ஓட்டல்.நல்ல பெரிய ஓட்டல். 

நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க. இன்னைக்குப் போயி கேளுங்களேன். 

அவன் சொல்வான்.

" இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "


 ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான்." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "


( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே, உடனே உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான். ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம்.)


நாவலர் நெடுஞ்செழியன் பற்றி 

வெற்றி கொண்டான் : 

“அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே.

 நல்லா நெடு,நெடுன்னு, கொழு,கொழுன்னு .. 

அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம்.விட்டுப்புட்டோம்.”


 2001ல் திருச்சி திமுக கூட்டமொன்றில்  ஜெயலலிதாவின் வீடு பற்றி 

வெற்றி கொண்டான் : டேய், உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. 

வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். 

அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். 

அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான் 

 உன் தலைவியோட ' வேதா நிலையம்.'


கூட்டத்தில் முன் வரிசையில் ஸ்டீல் சேரில்  அமர்ந்திருந்த தி.மு.க மகளிர் அணியினர் உடனே எழுந்து, முகம் சுளித்தவாறு, அவசர அவசரமாக கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.


“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”

- EPICURUS


... 


மீள் 2009

காதல் காதல் காதல்




17,18,19 வயதிலெல்லாம் என் வாழ்க்கை 

காதலில் ரொம்ப பிஸியாக கழிந்தது. 


அந்த பதினேழு வயது காதலில் 

கோவிலில் நிஜமாகவே 

திருமண சம்பிரதாயத்தை 

அந்த பெண்ணுடன் விளையாட்டாக

 செய்து பார்த்தேன். 

அதாவது கோவிலில் கல்யாணம் என்றால் 

என்ன செய்வார்களோ அந்த சடங்கை. 

எல்லோரும் வழிபாடு செய்துகொண்டிருக்கும் போது அந்த காரியத்தை தைரியமாக 

அவளிடம் செய்து விட்டேன். 

யாரும் கவனிக்கவில்லை .


அடுத்த அந்த பதினெட்டு வயது காதல் விஷயம் கொஞ்சம் பரபரப்பாகிவிட்டது. 

அமெரிக்கன் காலேஜ் சரித்திரத்தில் 

ஒரு காதல் விவகாரம் 

இந்த அளவுக்கு பகிரங்கமாக கேவலப்படவில்லை என்று சீனியர்கள் அபிப்ராயப்பட்டார்கள்.


அந்த பெண்  லேடி டோக் காலேஜ்.

அவள் அண்ணன் எங்கள் காதலை

 பெரிய காட்சியாக்கி 

முரட்டம்பத்திரி, கரிமேடு சல்லிகளுடன் வந்து கட்டை பஞ்சாயத் ஆக்கி

 அவள் தான் என்னை சினிமாவுக்கு கூப்பிட்டாள் என்பதை அவளே ஒத்துகொண்டவுடன்...

 அவளை அவமானப்படுத்தி... 

 நூற்றுக்கணக்கான பேர் பார்த்துகொண்டிருந்தார்கள். 

சினிமாவில் காட்டுவார்களே ...அப்படியே தான்.


அப்போது அந்த காட்சியை பார்த்துகொண்டிருந்தவர்களில் ஒ சீ பி எம் பள்ளி காம்பௌண்டில் இருந்து கவனித்த 

அந்த என் பத்தொன்பது வயது காதலியும் இருந்தாள். இவள் தான் என் அடுத்த வருட காதலி.


 லேடி டோக் பெண்ணுக்கு ஒரு கவிதை எழுதினேன். அதற்கு திருச்சி பள்ளியில் ஜேசு ராஜா (பின்னால் இவர் பாளை புனித யோவான் கல்லூரி ஆங்கில பேராசிரியர் ) எனக்கு சொல்லி தந்திருந்த ராகத்தில் பாடி

 கல்லூரியிலும் பின் அனைத்து கல்லூரி

 பாட்டு போட்டியிலும் பரிசு வாங்கினேன்.


"சிரிக்க வைத்தேன் அது தவறென்றால் உன்னை

அழுக வைத்தேன் அது சரிதானா?

நீயில்லை என்றால் காலமெல்லாம் உன்

நினைவு வந்து மொழி சொல்லுமே .


இருக்கின்ற நீ எனக்கு இல்லையென்றால்

 அந்த இல்லாத இறைவனும் இருக்கட்டுமே

உன் மனம் புண் பட இறைஞ்சுகிறேன் - என்

அகமே நெகிழ மறந்து விடு . "


இது தான் அந்த பாடல் .


அடுத்த வருடம் என்

 பத்தொன்பதாவது வயது காதலில்


"உன்னுடைய பாஷையில் சொன்னால்

கடவுள் சேர்த்து வைப்பார்!

என்னுடைய பாஷையில் சொன்னால்

கடவுள் இருந்தால் கட்டாயம் சேர்த்து வைப்பார்! "


O My Love!


If it is possible, pass from me


Nevertheless, Not as My will


But as thy God’s will.


நான் அப்போது எடிட் செய்து வெளி வந்த

 " மரத்தடி மகா ராஜாக்கள் " நூலில் "கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு விலகட்டும் " என்ற வசன கவிதையில் இடம் பெற்றிருந்த 

ஒரு சில வரிகள் மேற்கண்டவை.


இப்போது ஏன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதவில்லை என்று பலரும் கேட்கிறார்கள் . யோசித்தால் கல்லூரி வாழ்வோடு கவிதையை நிறுத்தியிருக்கிறேன். 

காரணம் ... கவிதை என்றாலே 

எனக்கு காதல் கவிதை தான் எழுத முடிந்தது. அதனால் தான் சலித்து போய் ச்சேன்னு

 நிறுத்தி விட்டேன்.


அதனால் தான் தெம்பாக இப்படி 

என்னால் எழுத முடிந்தது இப்போது. 


EXCESSIVE CREATIVITY - -


...Eureka! Eureka!!


Except R.P.Rajanayahem,all other Tamil men and women are writing poems.


Either poems or stories!


Out here almost everybody says'

"I am writing a novel" or " I have an idea to write a novel."


கவிதையை தான் விட்டேன். 

காதல் எல்லாம் அப்படியே இருக்கிறது. 

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். 

ஆரம்பம் பத்து வயது பிள்ளை காதல். 

கைகட்டு கால்கட்டோடு பாடையில் போகும்போது தான் காதலும் போகும்.


.....................


மீள் 2008

Sep 29, 2021

ஆதன் டிவி மேலாளர் சக்தி சரவணன்

 ஆதன் டிவி மேலாளர் சக்தி சரவணன் காலையில்                     செல் பேசினார். 

"அரசியல் பிழைத்தோர் " படித்திருக்கிறார். 

அவருக்கு R. P. ராஜநாயஹம் நூல் 

ரொம்ப பிடித்திருக்கிறது. 

மிக முக்கியமானதாக அபிப்ராயம் தெரிவித்தார். 


உற்சாகமான மனிதர். இவரிடம் உள்ள sence of Humour வித்தியாசமானது. 

சமீபத்தில் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து                          மறு பிறவி எடுத்திருக்கிறார். 

Resurrection. 

அப்படி இருபத்தைந்து நாட்கள் படுக்கும்படியான நிலையில் தான் 'அரசியல் பிழைத்தோர்' புத்தகத்தை கையில் எடுத்திருந்திருக்கிறார். 


சக்தி சரவணன், என் மீது மதிப்பும் அன்பும் கொண்ட கருணாகரன் கார்த்திகேயன் இருவரையும் 

ஆதன் டிவியில் சென்ற வருடம் சந்தித்தேன். 

ஆதன் டிவியில் தியாகராஜ பாகவதர் பற்றி 

நான் பேசிய வீடியோ 

பலரும் பார்த்திருக்கிறார்கள்.


https://youtu.be/5yr52veB_EI

Sep 27, 2021

எருமைகளுடன் கொக்குகள்

 மாலை 5 மணி 


பெரும்பாக்கம் வீட்டு பால்கனி வழியாக

 பார்க்கும் போது மழை நீரை ஒட்டிய புல் வெளியில் பத்து எருமைகள்

 ஒரு இருபத்தைந்து கொக்குகளுடன். 

ஏதோ official discussion. முக்கிய மீட்டிங் போல. 

இரண்டு மூன்று கொக்குகள் எருமை முதுகில்.


Visual treat. 


படமெடுக்க முடியாத தூரம். 


மாடியில் மாலை ஆறு மணிக்கு மேலே 

வாக்கிங் போகும் போது பார்க்கிறேன்.

 ஒரு கொக்கு கூட எருமைகளோடு இல்லை. 


எருமைகள் மட்டும் புல் வெளியில்.


https://m.facebook.com/story.php?story_fbid=3142252262654885&id=100006104256328

Sep 25, 2021

Hindu Obituary column

 ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன்.

 


1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக 

தெரிய வந்தது. 

இந்திரா பார்த்தசாரதியின் மனைவி. 


1999ம் ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் நடிகை சந்திர கலா மரணம் பற்றி பார்த்தேன்.


 அந்த இரங்கலில் இன்னொரு செய்தி தெரிந்தது. சந்திர கலா முஸ்லிமாக மதம் மாறி வாழ்ந்தவர். அந்த முஸ்லிம் பெயர் அதில் இருந்தது. 


பிராப்தம் எல் ஆர் ஈஸ்வரி பாடல் 'இது மார்கழி மாதம், முன் பனி காலம், கண்ண மயக்குது மோகம், ஏன் நடுங்குது தேகம் ' சந்திர கலா. 


'வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், 

வைதேகி காத்திருந்தாளாம் '

 மூன்று தெய்வங்கள் 


' முள்ளில்லா ரோஜா, முத்தான பொன்னூஞ்சல் கண்டேன் ' அதே படத்தில் சிவகுமாருடன். 


எம். ஜி. ஆருடன் 'தங்கத்தோணியிலே 

தவழும் பெண்ணழகே' 


புகுந்த வீடு ஏ. எம். ராஜா, ஜிக்கி

 'செந்தாமரையே, செந்தேன் இதழே' 


சந்திர கலா வீடும், 

இயக்குநர் புட்டன்னா வீடும்

 சென்னையில் 

அடுத்தடுத்து இருந்து, 

முன்னே நான் பார்த்த நினைவு. 


நாற்பது வருடங்களுக்கு மேலாக பழகிய ஒருவன் கெட்டவன், சேடிஸ்ட் என்பதை அறிய வந்த போது அதிர்ந்து போனேன்.  எத்தனை விசித்திரம் இது? நண்பனாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவன் குணத்தை கண்டு பிடிக்க இவ்வளவு காலம். 


அவன் செத்துப் போய்விட்டான் என்பதைக் கூட ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் தற்செயலாக பார்த்துத் தெரிந்து கொண்டேன். 


..

Sep 21, 2021

நாற்பது வயதுக்கு மேல் உயிரோடு இருந்தே ஆக வேண்டும்

 நாற்பது வயதுக்கு மேல் 

உயிரோடு இருக்கக் கூடாதா? ஏன்யா? 


நாற்பது வயதுக்கு மேல், ஐம்பது வயதுக்கு மேல், அறுபது வயதுக்கு மேல் கூட 

வாழ்க்கை பலருக்கு பிரகாசமாக ஆகியிருக்கிறது. 


அறுபது வயது தான் 

முதுமையின் பால்யம்.  


அரசியலில் மிகப் பெரிய பொறுப்புகளை எழுபது வயதுக்கு மேல், எண்பது வயதுக்கு மேல் கண்டவர்கள் உண்டு. 


இலக்கியத்திலும், ஓவியத்திலும் அப்படியே. 

கலைஞர்கள் வாழ்வுக்கு

 வயது ஒரு பொருட்டே அல்ல. 

ஹாலிவுட் நடிகர்கள் வயதான பின்னும் சாதித்திருக்கிறார்கள். குழந்தை பெற்றிருக்கிறார்கள். 

செயல்படவும், சாதிக்கவும் 

வயது ஒரு பொருட்டேயில்லை 

என்பது மானுட மாண்பு.


கதே தன் ஜெர்மன்  'Faust' காவியத்தை 23 வயதில்  எழுத ஆரம்பித்து 82 வயது வரை எழுதிக்கொண்டே இருந்து முடித்தான். 


http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post.html?m=0

Sep 20, 2021

மிஸ்கின் அப்பா பெயர்?

 "ராஜநாயஹம், சைக்கோ படத்தில் கமலாதாஸ் போன்ற பெயர்கள் உண்டு. சிங்கம்புலி பெயர் ராஜநாய'ஹம்'. கம் இல்லை! ஏதாவது உள்குத்து இருக்குமோ?....தோணிச்சு!" 

இப்படி என் பெரு மதிப்பிற்குரிய பெரியவர் ஃபேஸ்புக் மெஸஞ்சரில் தெரிவித்தார். 


அவரே பின்னர் இரண்டு நாளில் 

"He has revealed in an interview... Rajanayaham was his father's name!"

அப்படியா? நான் இந்த மெஸ்ஸேஜ் பல மாதங்கள் கழித்து தான் கவனித்தேன். 

.. 

சிவாஜி நடித்து, கலைஞர் வசனத்தில்

 எல். வி. பிரசாத் இயக்கிய படம் 'இருவர் உள்ளம்'. 

இதில் ரங்காராவின் நண்பராக நடித்தவர் நடிகர்

 R. பாலசுப்பிரமணியம். 

படத்தில் இவருடைய பெயர் ராஜநாயஹம். ரங்காராவ் இவரை 'யோவ் ராஜநாயஹம்' என்று விளித்துப் பேசுவார். 

1940களின் வில்லன் நடிகர் இந்த பாலசுப்பிரமணியம். இவர் எழுத்தாளர் அனுராதா ரமணனின் தாத்தா. 


கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்த 'காஷ்மோரா' படத்தில் கார்த்தியின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயர் 'ராஜ்நாயக்'.  இதையும் படம் பார்த்த சில நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். 

..... 


மிஷ்கின் பாடிய பாரதி பாடலை 

நான் திருப்பூரில் பாடியதுண்டு. 


200 குழந்தைகளுடன்

2014 டிசம்பர் 11ந்தேதி

அச்சம் தவிர், 

நையப்புடை, 

மானம் போற்று, 

ரௌத்திரம் பழகு

- பாரதியின் புதிய ஆத்திச்சூடி 


 

 - இயக்குனர் மிஷ்கின் பாடிய பாடலை 

நான் பாடினேன். 


பாரதியின் மீசை, முண்டாசு, கோட்டு, பஞ்சகச்சத்துடன் குழந்தைகள். 


ஒன்றாம் வகுப்பு துவங்கி

 எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள். 


நான் ஒவ்வொரு வரியாக பாட, 

குழந்தைகள் அதை தொடர்ந்து பாடினார்கள்.


Sep 18, 2021

மன்மதக் கலை

 ’கல’

R.P.ராஜநாயஹம்


வேதங்களில் இருந்து ஏதாவது ஒரு கதை பற்றி சொன்னால் உடனே பலரும் “ அது அப்படியில்லை. இது எப்படின்னா…’’ என்று ஆரம்பித்து வேறு கதை சொல்வார்கள். 


மகாபாரதம் செவிவழியாக பல கதைகளாக பெருகியிருப்பதால் 

“ அது அப்படியில்ல, இப்படித்தான்..’’ என மறுத்து வேறு மாதிரி சொல்வார்கள்.


தொன்மங்களை எவ்வளவோ எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளால் நிரப்புவதுண்டு தான். 

ப்ரதீபா ரே என்ற ஒரிய எழுத்தாளரின் ‘யக்ஞசேனி’  நூலில் மகாபாரதத்தை 

ஒரு மாறுபட்ட கோணத்தில்

 திரௌபதி கர்ணன் மேல் மட்டுமல்ல, 

கண்ணன் மீதே காதல் கொண்டதாக எழுதியிருக்கிறார் என 

சிற்பி பாலசுப்ரமண்யம் ‘தி இந்து’வில் 

ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

இங்கே உள்ள மகாபாரத பண்டிதர்கள் “ ச்சீ..ச்சீ.. என்ன இது முறைகெட்டத்தனம்” என்று

 முகம் சுழிக்க வேண்டியது தான்.


இப்போது இங்கே ஜெயமோகன் தலையணை, தலையணை, தலையணகளாக மகாபாரதத்தை ’விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல’ எழுதுவது பற்றி

 நான் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.


“ இது கலி காலம். கலிகாலத்தில் வியாசர், பரந்தாமன், பீமன், அர்ஜுனன், திரௌபதி, துரியோதனன் ஆகியவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்.”


நான் சிறுவனாக இருக்கும்போது 

கரூரில் ’டாக்கி டாக்கிஸ்’ தாண்டி மார்க்கெட் அருகில் திராவிட கழகக்கூட்டம் ஒன்று நடந்தது. கறுப்புச் சட்டை அணிந்து பெரியார் ஒரு கட்டிலில் அமர்ந்தவாறு பேசிய போது பிள்ளையார் பிறந்த கதை பற்றி கீழ்கண்டவாறு சொன்னார்.


“ பரமசிவனும் பார்வதியும் ஒரு காட்டில் 

சரசமாக பேசிக்கொண்டு இருந்திருக்காங்க. கொஞ்ச தூரத்தில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் ‘கல’  பண்ணிக்கிட்டு இருந்திருக்குதுக. இதப்பார்த்த பரமசிவன் பார்வதியிடம் 

அந்தக் காட்சியைக் காமிச்சிருக்காரு. 

ரெண்டு பேருக்கும் உடனெ நாமளும் ‘கல’  பண்ணுவோமேன்னு ஆசை வந்திருச்சி.

 அந்த யானைங்களப் பார்த்துக்கிட்டே 

‘கல’  பண்ணதால 

குழந்தை யானை முகத்தோட பிறந்திருக்கு”


கலை என்பதை அய்யா ‘கல’ என்று உச்சரித்தார்.

பெரியார் உடலுறவைப் பற்றி ‘கலை’ என்ற வார்த்தையாலேயே அன்று பேசும்போது குறிப்பிட்டார்.


 உடல் உறவு கூட கலை தானே. 

மன்மதக் கலை எல்லோருக்குமே 

தெரிந்த வார்த்தை. 

'சொல்லித்தெரிவதில்லை மன்மதக் கலை'

 என்பது பழமொழி. 


அதனால் ஐயா கலை என்று சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. 


…………………………………….


மீள் பதிவு

Sep 17, 2021

ஃப்ரான்சிஸ் கிருபாவை பார்த்ததேயில்லை

 சென்னையில் இலக்கியவாதி, 

எழுத்தாளர் என்றெல்லாம்  யாரையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. 


அன்று கூத்துப்பட்டறையில் மதியம்

 முழு நேர நடிகர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். 

கோயம்பேடு காவல் நிலையத்தில் ஃப்ரான்சிஸ் கிருபாவை நிரபராதி என்பதறிந்து விடுவிக்க இருப்பதை ஃபேஸ்புக் மூலம் அறியவந்தேன். 

கூத்துப்பட்டறையில் இருந்து அருகில் தான் காவல் நிலையம். 

ஃப்ரான்சிஸ் கிருபா அறிமுகம் கிடையாது. கவிதைகள் பரிச்சயம். 

ஆனாலும் பார்க்க விருப்பம். விடுவிக்கப்பட்டு கிருபா கிளம்பி விட்ட செய்தியையும் அறிந்தேன். 


எப்படி சந்திப்பது? கவிஞரை நான் பார்த்ததேயில்லை. 


டிஸ்கவரி புக் ஹவுஸில் விசாரித்தால் தெரிய வரும் என்று தகவல். நான் அவ்வப்போது ஏதாவது நூல் வாங்கப் போவதுண்டு. 

அங்கே வேடியப்பன் தம்பி சஞ்சய் எப்போதும் இருப்பார். வேடியப்பன் சாயலில் அப்படியே தம்பி. 

அவரிடம் விசாரித்த போது ஃப்ரான்சிஸ் கிருபா எங்கிருக்கிறார் என்பது அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. 


சில நாளில் மேற்கு தொடர்ச்சி மலை லெனின்  தற்செயலாக பார்த்த போது சொன்னேன். 'ஃப்ரான்சிஸ் கிருபாவை சந்திக்க வேண்டும்' 


லெனின் பாரதி 'ஓய்வில் இருக்கிறார். இப்போது  சந்திக்க முடியாது '


அதோடு கிருபாவை சந்திக்கும் முயற்சியை நிறுத்தி விட்டேன். முன்பே சொன்னபடி 

இயல்புக்கு மாறாக  கிருபாவை பார்க்க விரும்பியதற்கு உடனே முற்றுப்புள்ளி. 


எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.

Sep 16, 2021

உங்களுடைய எழுத்தே நீங்கள்தான்

 ராகுலன் கதிரேசன் :

"உங்களுடைய எழுத்தே நீங்கள்தான். 

தன் சுயத்தை கண்ணாடிபோல் 

 சுத்தமாக பிரதிபலிக்கும் எழுத்தை

 கி.ராஜநாராயணனுக்கு பிறகு, 

இந்த ராஜநாயஹத்தில் தான் காணுகிறேன்."


Ragulan Kadiresan 


கி. ராஜநாராயணனுக்கும் 

ராகுலன் கதிரேசனுக்கும்

இன்று செப்டம்பர் 16 பிறந்த நாள். 

2008 துவங்கி 13 வருடங்களாக ராஜநாயஹத்தின் முக்கியமான வாசகர் ராகுலன் கதிரேசன். 


https://m.facebook.com/story.php?story_fbid=3145582998988478&id=100006104256328



Sep 13, 2021

என் பிதா வளர்த்த நாயும், என் மகன் வளர்த்த கிளியும்

எங்க தாத்தா வீட்டில் 

அப்பா ஒரு நாய் வளர்த்தார். பெயர் ஜிம்மி. 


அப்பா காரைக்காலில் உத்யோகம் காரணமாக காரைக்காலில். மாதம் ஒரு முறை தான் வரமுடியும். 

நான் செய்துங்க நல்லூரில் பிறக்கிறேன். 

வீட்டின் அருகே ரயில்வே ஸ்டேஷன். 


அந்த நாய் ஜிம்மி ரயில் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஸ்டேஷனுக்கு ஓடி ரயில் நிற்கும்போது அப்பாவை தேடும். 


நான் பிறந்த சமயம் அப்பாவால் உடனடியாக 

வர முடியவில்லை. 


ஜிம்மிக்கு நான் பிறந்தவுடன் பரபரப்பு கூடிப் போனது. அப்பா எப்படியும் குழந்தையைப் பார்க்க சீக்கிரம் வந்து தானே ஆக வேண்டும். 


சில நாட்களில் அப்பா வருகிறார். 

ஸ்டேஷனில் இருந்து அப்பாவுடன் ஜிம்மி. 

Gratitude was a disease suffered by Jimmy. 


குழந்தை தொர முகத்தைப் பார்க்கும் போது கூட 

ஜிம்மி 'என்னைப் பார்' என்று தான் தவித்திருக்கிறது. 


அந்த ஜிம்மி மீது அப்பாவிற்கு கொள்ளைப் பாசம். 


பின்னாளில் ஜிம்மி திடீரென சில நாட்களுக்கு சாப்பிடாமல் இருந்து உயிர் விட்டது. 

அப்பா மனதை ஜிம்மியின் மரணம் கடுமையாக பாதித்திருக்கிறது. 


அதன் பின் அவர் நாய் வளர்க்கவில்லை. 

முப்பது வருடங்களுக்குப் பிறகு தான் நாய்க்குட்டி எங்கள் வீட்டிற்கு வர முடிந்தது. 

கடைசி காலத்திலும் அன்பான நாய் ஒன்று அவரோடு இருந்திருக்கிறது. 


இப்போது எங்கள் வீட்டில் நேற்று செல்லப்பறவை 

Cockatiel - Australian bird - பெயர் குக்கு - பால்கனி வழியாக தவறி விழுந்து காணாமல் போய் விட்டது. 

என் மகன் அஷ்வத் மிகுந்த ஆர்வத்துடன் இது மாதிரி வீட்டில் வைத்து வளர்க்க ரொம்ப ஆசைப்படுவான். 

என்னோடும் நன்கு பழகிய கிளி அது.

ஆறு மாதம் எங்களோடு இருந்த pet. 


 பேத்தி பூக்குட்டி 'குக்கு, குக்கு, குக்கு' - சத்தமாய் கூப்பிட்டும் வரவில்லை. 


வெளியே விழுந்தவுடன், உடனே, உடனே காக்காய் தூக்கிப் போயிருக்கும். 




..

Sep 11, 2021

கணேஷ் பாண்டியன் சாதனை

 'கண்ணே கலைமானே' உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து சீனு ராமசாமி இயக்கத்தில் வெளி வந்த படம். 

படத்தில் கதை நாயகி தமன்னா கண் பார்வையை இழந்து விடுகிறார். 

Leber’s hereditary optic neuropathy. அம்மா மூலம் தமன்னாவுக்கு வரும் பிரச்னை. 


கண்ணே கலைமானே படம் ஒரு inspiration ஆக ஒரு விஞ்ஞானி உணர்கிறார். 

ஜப்பானில் Genetics switch பற்றிய ஆய்வில் 18 ஆண்டுகளாக இருக்கும் கணேஷ் பாண்டியன் தான் அவர். 


Mito Chondrial diseases குறித்து ஒரு வெளிச்சம் காண அவருக்கு கண்ணே கலைமானே 

உந்து சக்தியாக இருந்திருக்கிறது. 


மரபணு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடையாது. 


கணேஷ் பாண்டியனுக்கு DNA மரபணு தான் Target. 


நியூக்ளியஸ் தலைமை செயலகம். இதில் உள்ள குறைபாடுகளுக்கு நிவர்த்தி செய்வதற்கு வேறு சில முறைகள் இருக்கிறது. 

மைட்டோ காண்ட்ரியா எலக்ட்ரிசிட்டி போர்ட் போல. 

பவர் கட் ஆனால் என்ன செய்ய முடியும்? 


உறுப்பு - திசுக்கள் - செல். 


செல்லை மாற்றியமைக்க தான் கணேஷ் ஆராய்ச்சி. 

 Cell -  basical unit. 


ஆறு வருடங்களுக்கு முன்பு கணேஷ் மகள் 

"மைட்டோ காண்ட்ரியாவில் சீரமைக்க முடியுமா?"

 Little girls are wiser than men. 


Switch on and repair. 


கெட்ட ஜீன்களால் தான் உடல் நோய்கள். 

கெட்ட ஜீன்களை switch off செய்து நல்ல ஜீன்களை switch on  செய்வது. 

இது வரை யாரும் இதை செய்ததில்லை. 


மரபணு குறைபாடுகளை சரி செய்வதில் முக்கிய வெற்றி கண்டிருக்கிறார் 

திருநெல்வேலி கணேஷ் பாண்டியன். 

சாதனை! 


இதன் மூலம் கண் பார்வை 

Leber’s hereditary optic neuropathyயையும் குணப்படுத்த முடியும். மரபணு சம்பந்தப்பட்ட இன்ன பிற நோய்களையும் சரி செய்ய முடியும். 

இன்னும் சில முடிவுகளை எட்ட கொஞ்சம் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.


கணேஷ் பாண்டியன் என்னுடைய நண்பர் ராமசாமி நமச்சிவாயத்தின் உடன் பிறந்த தம்பி. 

ராமசாமி நமச்சிவாயம் HDFCயில் 

ஒரு Vice president. 

என் எழுத்தில் ஈடுபாடு கொண்ட வாசகரும் கூட. 


Sep 10, 2021

A dark secret. Deepest dark secret.



சினிமாவுல ரொம்ப பிஸியாக இருந்து 

இப்ப ரொம்ப காலமா ஒதுக்கமாகி, 

பிசினஸ் லைன்ல சம்பாரிச்சிக்கிட்டு 

நல்லாவே இருக்கிற ஒரு முன்னாள் நடிகர 

ரொம்ப, ரொம்ப தற்செயலா சந்திச்சி பேசிக்கிட்டு இருந்தப்ப

 "ஒங்களுக்கு பிள்ளைக?" ன்னு கேட்ட போது 

 நடிகர் "ஒரு மகன் " 


நான் வீட்டுக்கு வந்த பிறகு  அந்த சந்திப்ப தொட்டு மேலும் சில விபரம் கேட்க செல்லில் 

அழைத்துப் பேசிய போது

 நடிகர்  " 'எனக்கு ஒரு மகன்'னு  நான் சொன்னத எழுதிடாதீங்க. பிரச்னை வரும்."

.. 

Sep 8, 2021

ஹெலிகாப்டர்

 பெரும்பாக்கம். 

மொட்டை மாடியில் காலை நேரம் 

வாக்கிங் போகும் போது.. 

Angels whisper to a man when he goes for a walk. 

ஹெலிகாப்டர் வானில் செல்வதை 

காண முடிகிறது.

 ஊரையே கூப்பிட்டுக் கொண்டு தான் (என்னைப்பார், என்னைப் பார்) ஹெலிகாப்டர் போய்க்கொண்டு இருக்கிறது. 


விண்ணில் அதிர்ந்தவாறு நகரும் 

அதைப் பார்க்கும் போது 

திகில், பதற்றம் ஏற்படுகிறது. 


Helicopter doesn't fly, it vibrates so badly  என்பதாக அமெரிக்க எழுத்தாளர் டாம் க்ளான்ஸி சொன்னது. 

டாம் க்ளான்ஸி வீடீயோ கேம்ஸ் ஸ்பெஷலிஸ்ட். 


சினிமாவில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறுவதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 


இந்திய பாராளுமன்ற  சபாநாயகர் பாலயோகி, ஆந்திர முதல்வர் ஒய். எஸ்.  ராஜசேகருக்கெல்லாம் ஹெலிகாப்டரால் மரணம். 

பதவியில் இருக்கும் போதே இருவருக்கும் 

இப்படி நேர்ந்தது. 


ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதை பார்ப்பது போல் கனவு கூட வந்திருக்கிறது. 


இந்திரா பார்த்தசாரதியின் ஒரு நல்ல நாவல் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன'

தி.ஜானகிராமன் முன்னுரை எழுதியிருந்தார்.


இப்ப கொஞ்ச நாளா இங்க நல்லா கொழு கொழுன்னு ரண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் பல நூறு கோடி மோசடி விவகாரம் பரபரக்கிறது

மகத்தான வாழ்வியல் அசல் அனுபவங்கள்

 Thirugnanam Thiru 


"இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு தொடர்பு.


 முகநூலில் ஒரு பதிவை படித்தவுடன் .... 

அட வித்தியாசமாக இருக்கிறதே என்று 

மற்ற எல்லாப்பதிவுகளையும் 

ஒரு விடுமுறை நாள் காலையில் ஆரம்பித்து

 முழு நாளும் வாசித்தேன். 

எத்தனை மகத்தான வாழ்வியல்

 அசல் அனுபவங்கள்.

 யார் இவர்? என்ற கேள்வியின் நுனியில் நின்றவர் 

R. P. ராஜநாயஹம் என்ற பன்முக ஆளுமை. 


அவரோடு பேச வேண்டும் என்று நினைத்தவுடன்              பத்து நிமிடத்தில் தொலைப்பேசி எண்ணை கொடுத்தார் 

தமிழ் இலக்கிய அகில உலகத் தொடர்பாளர் 

பெங்களூர் மகாலிங்கம். 


பேசினோம்....பேசினோம்."


  - திருஞானம் திரு

An unsung hero

 M. M. Abdulla M. P. :


"R. P. Rajanayahem is an unsung hero. 

நீங்கள் அவரைப் பற்றி எவ்வ்வ்வளவு எழுதினாலும் அதற்கும் மேல் அவர்!!"


https://m.facebook.com/story.php?story_fbid=3095728433973935&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3094999020713543&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3095922050621240&id=100006104256328

நானும் ஆசிரியர் தான்

 நானும் தான் 


Let me find a funny side to everything serious. 


நானும் ஆசிரியர் தான்.     

                                                     

 கூடு விட்டு கூடு பாய்ந்த கடின சவால் வாழ்க்கையில் இரண்டு வருடங்கள் (2013-2015)மூன்று பள்ளிகளில் ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சராக கடந்து வந்தவன்.         


 2015 துவங்கி 2019 வரை

 நான்கு வருடங்கள் கூத்துப்பட்டறை மாஸ்டர்.                           


ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=2664228987123884&id=100006104256328


http://rprajanayahem.blogspot.com/2018/06/blog-post_27.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2017/04/che-sara-sara.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2015/03/raise-child-you-have-got.html?m=0


https://rprajanayahem.blogspot.com/2015/05/tirupur-jpavithra.html?m=0

Sep 7, 2021

R. P. ராஜநாயஹம் நடிப்பு

 Murugan RD 


R. P. ராஜநாயஹம் நடிப்பு 


"உங்க சேனல்ல சில வீடியோ பார்த்தேன் சார்


என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னே தெரியல.


உங்க எழுத்து தான் காட்சிகளை கண்முன் விரியவைக்கிற அளவுக்கு இயல்பா இருக்குன்னா ஸ்டேஜ்ல உங்க கதை சொல்ற எளிமையும், நடித்துகாட்டும் லாவகமும் கொஞ்சம நேரம் அப்படியே உறைய வச்சிடிச்சி.


எப்படி இப்படி ஒரு அசாத்திய ஆற்றல் பெற்றவரை அதுவும் திரைஉலக தொடர்பில் இருந்தவரை நம் தமிழ் திரைஉலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லைன்னு மனசுக்குள்ள ரொம்ப நேரம் கேள்வி குடைந்துகிட்டேயிருந்திச்சி.


ஒரு முறை கூத்துப்பட்டறை முத்துசாமி சார் அவர்களிடம் பேட்டி ஒன்று ஏதோ ஒரு புத்தகத்தில் எடுக்கப்பட்டது. அப்போது கேரளாவின் கலாபவனுடன் ஒப்பிட்டு ஒரு கேள்வி கேடடிருந்தார்கள். கலாபவன்ல இருந்து கேரளா சினிமா உலகிற்கு ஏகப்பட்ட நடிகர்கள் வருகிறார்கள். ஆனால் கூத்துப்பட்டறையிலிருந்து ஒன்றிரண்டு பேரை தவிர வேறுயாரும் வரவில்லையே என்று, 


அதற்கு சார் சொன்ன பதில் முழுவதும் ஞாபகமில்லை. ஆனால் அதில் இடம்பெற்ற ஒரே ஒரு வரி மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. திரைபடங்களில் நடிப்பதற்கு  நடிகர்களை தயார் செய்வது கூத்துப்பட்டறையின் வேலை இல்லை, எங்கள் கலையும், நோக்கமும் வேறு,,,, என்பதாக இருக்கும்.


நீங்க சில வருடங்கள் அங்கு பணியாற்றியிருக்கீங்க. உங்களை போன்ற திறமைசாலிகளை திரைபடங்களில் இடம்பெறும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிதர பயன்படுத்தியிருக்கலாம் திரைஉலகம். ஏன்னா இங்க பலவருசமாவே திரைஉலக வாரிசு நடிகர்கள், அவர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள்னு அனுபவம் இல்லாதவர்களே நடிக்க வருகின்றனர். நடிப்பே வராதா (அவர்களை சொல்லியும் குற்றமில்லை) அவர்களின் முகங்களை பார்த்து பார்த்து தான் தமிழ்சினிமா சற்ற போரடித்துவிட்டதோன்னு தோணுது. அவர்களுக்கு உங்களை போன்றவர்களின் வழிகாட்டுதல் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


மேடையில் ஒரு கேரக்டர் காலை சாய்த்து நடப்பான் என்று கூறிக்கொண்டே அடுத்த மைக்ரோ நொடியில் அந்த கொணஷ்டையான நடையை சில அடிகள் நடந்துகாட்டினப்ப அசந்துட்டேன். வழக்கமாக இத பண்றவங்க இப்படி நடக்குறதுக்கு முன்ன கொஞ்சம் பிரிபரேசன் பண்ணிக்குவாங்க. மைக்க கீழ இறக்கி ம்க்கும் னு தொண்டை செறுமிகிட்டு, தோள குலுக்கிக்கிட்டு அப்புறம்தான் செய்ய ஆரம்பிப்பாங்க. அதுவும் கூட ஒரிஜினலா அப்படி நடக்குறங்க பாணியில பாதிகூட தேறாது.


அப்புறம் இன்னொன்னு


இறந்து போன பத்துவயது பிள்ளைய தோள்ல இடுப்புல தூக்கிவச்சிகிட்டு ஒரு தாய்  சோகத்த வெளிக்காட்டாம எப்படி கொண்டு வந்தாள்ங்கிறதயும் பஸ் நிறுத்தம் வந்தவுடன் உடலை இறக்கவிட்டு அவள் அழுததயும் நீங்க சொல்லிய விதம் ரொம்பும் திக்பிரமை அடைய வச்சிடிச்சி. பஸ்ல இருந்தவர்கள் ரியாக்சனை கூட நீங்க சொன்னவிதமும், அதற்கு பயன்படுத்திய வார்த்தைகளும் காட்சியின் சோகத்தை கண்முன் உணர்த்தியது போல இருந்திச்சி.


இவ்வளவு பெரிய கமண்ட் போட்டும் நான் உணர்ந்த அனுபவத்தை சொல்லவந்த விசயத்தை முழுவதுமா சொல்லிட்டேனாங்கிற சந்தேகம் கூட எனக்கே இப்ப வருது. 

இன்னும் எவ்வளவோ எழுதலாம். நேரம்தான் கிடைக்கணும்.


பிரமிப்புடன் பாராட்டுகள் சார்."


Murugan RD 


...


https://m.youtube.com/watch?v=ZeyhjwKbVB8&feature=youtu.be


https://m.youtube.com/watch?v=WDeFsRKAJMo&feature=youtu.be


https://youtu.be/dYiA2ND7vVs


https://youtu.be/acyQqteM99Y

Sep 4, 2021

கபளீகரம்

 கபளீகரம் 


'சினிமா எனும் பூதம்' ராஜநாயஹம் நூல். 

சினிமா, பூதம் என்ற வார்த்தைகள் ராஜநாயஹத்தை நினைவு படுத்தும் என்பது தெரிந்த விஷயம். இன்னும் இந்தத் தலைப்பில் 

ராஜநாயஹம் செய்யப்போகும் காரியங்கள் நெறய்ய. அதற்கான ஆயத்தங்கள் அச்சிலும், கானொளியிலும் நடந்து வருகின்றன. 


25.08.2021 தேதியிட்ட குமுதத்தில் 

சினிமா ஓர் ஆம்பளை பூதம்னு கட்டுரை. 


ஒரு வழக்கமான பெண்ணிய கட்டுரைக்கு இந்த தலைப்பு. அட்டையிலும் கூட முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

Sep 3, 2021

சேவல் முட்டை


அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது.                                                 அசோகமித்திரனிடம் அலை பேசி உரையாடிய போது சொன்னார் 'இங்கே செல்வாக்கு மிகுந்த திரை பாடலாசிரியருக்கு இந்த விஷயம் மிகுந்த ஊக்கம் ஏற்படுத்தும். தனக்கான முயற்சிக்கு வேகமாக செயல் பட வைக்கும்.'


அப்போது கண்ணில் ஒரு சேதி விழுந்தது. 

ஒரு முன்னணி தமிழ் நடிகர் ஏதோ ஒரு மலையாளப் படத்துக்கு பாடல் எழுதுவதாக. 


அதிர்ஷ்டக்காரனுடைய சேவல் கூட முட்டையிடும். 


கி. ராஜநாராயணனுக்காவது அடுத்து ஞான பீட விருது கிடைத்து விடாதா? என்று எதிர் பார்த்திருந்தார். ஒரு ஜோதிடர்  "உங்களுக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம் கிடைத்த பின் 

உங்கள் ஆயுள் முடியும் " என்று அவரிடம் சொல்லியிருந்ததை என்னிடம் 

கரிசல் கதை நாயகன் சொன்னதுண்டு. 

வருடங்கள் ஓடி அவரும் போய் சேர்ந்து விட்டார். 

அசோகமித்திரன், கி. ரா 

இருவருக்குமே எட்டாக்கனியாகி விட்ட 

ஞானபீடப் பரிசு.

.. 

Sep 2, 2021

The business of the idle and the idleness of the busy

 Edward Bulwer Lytton was an eighteenth century British writer and politician. His very popular quote 

"Love is the business of the idle, and the idleness of the busy "

One can very easily get claps, likes and comments in Facebook by translating this as his own proverb.