Share

Feb 29, 2024

ஷேக்ஸ்பியர்

ஷேக்ஸ்பியர்

 
"டெம்பஸ்ட்" நாடகத்தில் காணப்பட்ட கதை  தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல், மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.
“We are such stuff as dreams Are made on.” - The Tempest.

மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள். சரி.
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. டெம்பஸ்ட்டின் We are such stuff as dreams Are made on என்பதையும் மௌனியின் வரிகளுக்காக கணக்கில் எடுக்கத் தான் வேண்டும். 

இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். 
அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.  

பல்கலைக்கழகங்களில் படித்திடாதவர்.தன் நாடகங்களில் ஷேக்ஸ்பியர் தானும் நடித்திருக்கிறார். 

ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் தான் எழுதிய மகத்தான நாடகங்களை அச்சிலே பார்க்கவே இல்லை.
52 வயதில் ஷேக்ஸ்பியர் இறந்த பின் 36நாடகங்களை அச்சில் கொண்டுவந்தவர்கள் அவருடைய நாடகங்களில் நடித்த ஹெம்மிங்க்ஸ், காண்டல் என்ற இருவர் தான். 

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் Cardenio அவர் காலத்தில் மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நாடகம் தொலைந்து போய்விட்டது. கிடைக்கவே இல்லை. "Lost Play of Shakespeare 'Cardenio'  Discovered" என்று ஒரு  பரபரப்பு செய்தி அடிபட்டது. 

Racism, Anti-Semitism என பல prejudice இவரிடம் தெரியக் கிடைக்கிறது என சுலபமாக குற்றம் சாட்டி பெருமிதம் கொள்ள செக்குமாட்டு விமர்சகனுக்கு வாய்ப்பு நிறைய உண்டு.

Black is the badge of hell, the hue of dungeons and the scrowl of night.             
-‘Love’s Labour Lost’

ஒதெல்லோ ஒரு மூர் ஆப்பிரிக்கன். ஒதெல்லோ நாடகத்தில் அவன் மீதான வசவுகள் கூட ஷேக்ஸ்பியருக்கு எதிராக திருப்பப் படமுடியும்.

யூத வெறுப்பு தான் Merchant of Venice நாடகத்தில் ஷைலக் என்ற யூதனை கொடூர, இரக்கமற்ற வில்லனாக்க காரணம் என வாதிடலாம்.

தன் நாடகங்களில் தற்கொலை என்பதை13தடவை பயன்படுத்துகிறார். ரோமியோவும் ஜூலியட்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 
ஜூலியஸ் சீசரில் தற்கொலை நடக்கிறது. ப்ரூட்டஸ் மனைவி போர்ஷியாவின் தற்கொலை. ப்ரூட்டஸ் -கேசியஸ் Die by Consensual Stabbing. ஒதெல்லோ தற்கொலை செய்து கொள்கிறான். ஹேம்லெட்டில் ஒபீலியா நீரில் மூழ்கி தற்கொலை. 
ஆண்டனி அண்ட் கிளியோபட்ராவில் தான் அதிக தற்கொலைகள். மார்க் ஆண்டனி,  கிளியோபட்ரா, சார்மியன், ஈரோஸ், ஐராஸ்....      

             முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார்.  கடைசி நாடகம் The Two Noble Kinsmen எழுதும்போது அவருக்கு 49 வயது.

அவருடைய கவிதைகள் 154 sonnets. நிறைய சர்ச்சை கிளப்பியவை. 
முதல் 26 கவிதைகள் ஒரு இளைஞன் பற்றியவை. கடைசியில் இரண்டு தவிர முந்தைய 25கவிதைகள் ஒரு கருப்பு பெண் குறித்தவை. 126வது சானட் சொல்வது farewell to“My lovely boy”...Shakespeare ....          a BISEXUAL? 

பதினெட்டு வயது ஷேக்ஸ்பியர், இருபத்தாறு வயது ஆன்னி ஹேத்தவே. தன்னைவிட எட்டு வயது மூத்த ஆன்னி ஹேத்தவே என்ற பெண்ணை மணந்து மனஸ்தாபத்தோடு எட்டு பிள்ளைகள் பெற்றார் ஷேக்ஸ்பியர். Anne Hathaway hath a way!

இந்த எட்டில் ஒரு ட்வின்ஸ் உண்டு. இந்த ட்வின்ஸ் இருவரில் ஹேம்நெட் வாழ்க்கை 11வயதில் முடிந்தது. இன்னொரு ஜூடித் 77வயது வரை வாழ முடிந்தது. 

ஷேக்ஸ்பியரின் சொத்துக்களை அனுபவித்த சூசன்னா 66 வயதில் மறைந்தார். ஷேக்ஸ்பியரின் உயில் படி மூத்த மகளுக்குத்தான் சொத்து கிடைத்தது. மனைவி ஹேத்தவேக்கு கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியரின் Second-best bed இரண்டாவது படுக்கை ...Marriage Bed தான் ஹேத்தவேக்கு கிடைத்தது. 

'வறுமையும் புலமையும் ' என்று ஷேக்ஸ்பியர் பற்றி சொல்ல முடியாது. 18வயதிலேயே சொத்து வாங்க ஆரம்பித்து விட்டார். மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்தவர் ஷேக்ஸ்பியர்.அவருடைய சொந்த ஊர் ஸ்ட்ராட்போர்டில் உள்ளூர்க்காரர்கள் ஷேக்ஸ்பியரை  பக்கா பிசினெஸ் மேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்களாம். ஷேக்ஸ்பியரின் அம்மா கூட செல்வசீமாட்டி எனும்படியானவரே. செல்வந்தரின் மகள். 

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்,கிங் லியர், மேக்பெத் போன்ற ஏழு நாடகங்கள் பால் இல்லிட்ஜ் என்பவரால் நாவல்களாக எழுதிப் பார்க்கப்பட்டிருக்கிறது.

....

Feb 28, 2024

Ka.Naa.Su and Chitti Sarcasm


 
அம்மா வந்தாள் நாவல் முதல் பதிப்பு தீரர் சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ண மூர்த்தியின் வாசகர் வட்ட வெளியீடு. 

தி. ஜானகிராமன் இந்த நாவலை சிட்டிக்கும், (கலாசாகரம் ராஜகோபாலின் மனைவி) கல்பகம் ஆகிய இருவருக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார். 

மிக விசேஷமான அம்மா வந்தாள் நாவல்
மிகுந்த சலனத்தை ஏற்படுத்தியது. 

தி. ஜானகிராமனின்  மூத்த சகோதரர் மிகவும் அதிர்ந்து கோபம் கொண்டார். கரிச்சான் குஞ்சு தரும் தகவல் இது. 

மோக முள்ளை பிரமாதமாக புகழ்ந்த 
க. நா. சு 
அம்மா வந்தாளை உதட்டை பிதுக்கி நிராகரித்தார். 

தி. ஜா. 'கும்பகோணத்தில் உங்களுக்கு ஒரு அலங்காரத்தம்மாளை இப்ப காட்டட்டுமா?' என்று தன்னை கேட்டதாக 
க.நா.சு சொன்னார். 

'இருப்பு அல்ல, காரண இருப்பு தேவை' 
- க. நா.சு. 

டெல்லி ஆங்கில பத்திரிகை Thought. 
அதில் க. நா.சு அம்மா வந்தாளுக்கு எழுதிய விமர்சனத்தின் தலைப்பில் செய்த Sarcasm - 'Janakiraman' s mother'

பத்திரிக்கையில் தொடராக எழுதாததால் முழுமையான  நேர்த்தியாக உருக்கொண்ட  தனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று மணிக்கொடி சிட்டி குறிப்பிட்டார். 

எல்லா தமிழ் வாசகர்களையும் சென்றடைந்த பெருமைக்குரிய நாவல் அம்மா வந்தாள். 

ஐம்பது வருடமாகிறது. 

இன்றும் படிக்கும் போது பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. 

இந்த அற்புதத்தை நிகழ்த்திய மகத்தான கலைஞன் 

தி. ஜானகிராமன். 

'அப்பாவும் காசிக்கு வருவாளா?' என்று அப்பு அப்பாவியாக கேட்பதற்கு அலங்காரத்தம்மா பதில் 
"அப்பாவுக்கு எதுக்குடா காசி? அது ஞானசூரியன். "

அப்பு : அப்பா உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாம்மா 

அலங்காரத்தம்மா பதில் : சரி. அதுக்காக நான் எத்தனை நாள் தான் அவரை வதைச்சிண்டே இருக்க முடியுமா? 

காசிக்கு தண்டபாணி எதுக்குன்னு அலங்காரம் தெளிவா இருக்கா.

முப்பது வருடங்களுக்கு முன்பு சிட்டி என்னிடம் பேசும் போது செய்த sarcastic comment. 

' பாவத்த தொலைக்க காசிக்கு போறா அம்மான்னு அப்பு நம்புறான். அவளோட ஜாயின் பண்ண அடுத்த ஸ்டேஷன்ல சிவசு  காத்திண்டு இருக்கான். 
பாவம் அப்பு '

Sarcasm! 

ஏன் நமக்கு Sarcasm தேவைப்படுகிறது என்பதற்கு ஒரு காரணம் எப்போதோ படித்ததுண்டு. 

Because murder charges are expensive.

......

(தி. ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் 28.

ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு. 

காலச்சுவடு வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை. 

தி. ஜா  பிறந்த ஊர் தேவங்குடி தான்.        அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர். 
தஞ்சை ஜில்லா.)

மொகுடு

மொகுடு

மொகுடான எழுத்தாளர் ( பெரிய எழுத்தாளர் என்று அர்த்தம்)
பற்றி சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய பதிவைப் படித்து விட்டு இலக்கியவாதி மொபைலில் கூப்பிட்டு பேசியிருக்கிறார். உண்மையில் பேசுகிற மன நிலை, உடல் நிலை இல்லாத நிலை நல்ல  இலக்கிய அந்தஸ்து படைத்தவருக்கு. ஆனாலும் சரவணன் எழுத்தின் உக்ர வீச்சு தான் இலக்கிய வாதி அழைத்த காரணம். உலக இலக்கிய வாசக விற்பன்னர் அவர். 'உங்கள் பதிவைப் படித்தவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை.'

'The Last Moghul' என்ற நூல் பற்றி மொகுடுவிடம் 
அந்தஸ்தான இலக்கியவாதி குறிப்பிட்டிருக்கிறார். 
மொகிடு உடனே பகர்கிறார் "லாஸ்ட் மொகல் போன வருஷமே நான் படிச்சிட்டேன்"

"இதிலென்ன இருக்கிறது. மொகிடு தான எல்லா புத்தகங்களையும் முந்திப்படிப்பவர்"
முந்திரிக்கொட்ட தனமா கேக்கலாம்.

புத்தகம் பற்றி மொகிடு கிட்ட இலக்கியவாதி பிரஸ்தாபித்தப்ப 
 புத்தகம் பிரசுரமாகி  ஒரே வாரம்  தான்.

 
இதை சரவணன் மாணிக்கவாசகம் சொன்னவுடன் 1998ல் நடந்த விஷயம் நினைவுக்கு வந்து விட்டது.
Memory is my fate. 

கர்நாடக சங்கீதம் பற்றி 'காலக்குறி' பத்திரிகையில் கட்டுரை எழுத வேண்டியிருந்த கொங்கான் எழுத்தாளனுக்காக
இரண்டு ஆடியோ கேஸட்டில் ராஜநாயஹம் விரிவாக பேசிக் கொடுத்த போது, தவித்து கொங்கான் சொன்னான்.
 'யோவ் என்னய்யா,  புது ராஜநாயஹத்த பாக்றேன்யா. பதினேழு வருஷமா அறிமுகம். ஒன்னோட கர்நாடக சங்கீத ஞானம் பற்றி இவ்வளவு காலம் தெரியாம இருந்திருக்கேன். ஆச்சரியம் " 

பல மாதங்களுக்கு பிறகு மனைவி, குழந்தைகளோடு சுற்றுலா தளம் போயிருந்த போது  தற்செயலாக கொங்கான், மொகிடு இருவரையும்
ஒரு சேர பார்க்க வாய்த்தது. சில நிமிட சந்திப்பு.

 மொகிடு அப்ப மொகிடே அல்ல.
 'பச்சா' எழுத்தாளர்.
உற்சாகமாக கொப்பளித்தார் "கொங்கானுக்காக நீங்க கர்நாடக சங்கீதம் பற்றி விரிவா பேசிக் கொடுத்த ரெண்டு காஸட்டையும் கேட்டேன். புன்னாக வராளி ராகத்த பத்தியெல்லாம் பேசி இருக்கீங்க" 

"இதுல என்ன இருக்கு? நீ சங்கீதம் பற்றி பேசுன ரெண்டு காஸட்டையும் காது கொடுத்து கேட்டுருக்காரு. ஒனக்கு பெரும தானேய்யா" என்று கேட்பவர்கள் கேட்கலாம்.

ரெண்டு ஆடியோ கேஸட்ல கர்நாடக சங்கீதம் பத்தி லெக்சர் கொடுத்திருந்தாலும் அதுல புன்னாக வராளி ராகத்த ஒட்டி எதுவுமே பேசலயே..

..

Feb 27, 2024

கண்டிருந்த வான் கோழிகள் பொல்லாச் சிறகை விரித்து



கதையல்ல 1

சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, 
ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு 
அலையும் அரைவேக்காடு ஒருவனின்
படு சீரியஸான அங்கலாய்ப்பு
“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு.        
  இனிமே நான்
 என்ன ஸ்டைல் பண்ணறதுன்னு தெரியலயே..”
.....

கதையல்ல 2

திடீரென்று வதந்தி ஒன்று
 ரொம்ப வேகமா பரவுச்சு.

”ரஜினி செத்துட்டாராம் மச்சான்.”

 - ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கும் 
 நடிகன் பதற்றத்துடன் சொன்னான்.

சினிமா ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு, ஆசைப்பட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் கத்துக்குட்டி 
உற்சாகமாக சொன்னான் 
“ ஏன் மச்சான் கவலைப்படுற.
 ஒரு காம்பட்டிசன் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படணும்டா.”

.....

கதையல்ல  3

ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்ற நடிகன். ஷூட்டிங் ப்ரேக்கில் அவரை நெருங்க வாய்ப்பு கிடைத்த வேளை, சினிமா ஆசை பற்றி
 ரஜினி விசாரிக்கிறார்.
கதாநாயகன், வில்லன், காமடியன், ஸ்க்ரிப்ட் ரைட்டர், இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி, இப்படி என்னவாக ஆசை?  
ரஜினியிடமே அந்த சோட்டா பதில் -
 " நடிகராகத்தான் ஆசை. அதிலும் உங்களை விட பெரிய நடிகராக வேண்டுமென்ற ஆசை."

.....

Feb 26, 2024

ஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி

ஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி மறைந்த போது
R.P. ராஜநாயஹம் எழுதிய tribute 

"கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குநராக கன்னட திரையுலக பீஷ்மரான ஜி.வி.அய்யரின் ஆதி சங்கராச்சாரியா, மத்வாச்சாரியா போன்ற படங்களில் பணியாற்றியவர்.

 பி.வி.காரந்த், பன்ஸி கௌல் நாடகங்களிலும் 
செட் ப்ராப்பர்ட்டி, ஸ்டேஜ் டிசைன் விஷயங்களை கவனித்தவர். 

பதினைந்து மலையாளப்படங்களின் 
கலை இயக்குநர். 

கேரள அரசின் விருது 'வடக்கன் வீர கதா' 
உள்ளிட்ட படங்களுக்கு பெற்றிருக்கிறார்.

பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், பாரதிராஜாவின் நாடோடித்தென்றல், 
சுகாசினி இயக்கிய இந்திரா
போன்ற படங்களுக்கும் 
கிருஷ்ண மூர்த்தி தான் கலை இயக்குநர்.

ந.முத்துசாமி நாடகங்களிலும் கூத்துப்பட்டறையின் ஆரம்ப கால செயல்பாடுகளில் கலை இயக்குநராக பணியாற்றியவர். ’காலம் காலமாக’, ’நாற்காலிக்காரர்’, ’உந்திச்சுழி’ நாடகங்கள்.

சமீபத்தில் மறு பிரசுரமான ’உந்திச்சுழி’ நாடகத்தை ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு – ’சுந்தர ராமசாமியின் கதா பாத்திரம் ஜே.ஜே’ - ந.முத்துசாமி சமர்ப்பனம் செய்திருக்கிறார்.

1980ல் இந்த நாடகம் எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடந்திருக்கிறது.
 க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவி விஜயலக்ஷ்மி நடித்தார்.
இந்த நாடகத்தில் முக்கியமான செட் ப்ராப்பர்ட்டி முட்டை! ஒரு பெரிய முட்டை.

ஆர்ட் டைரக்டர் கிருஷ்ண மூர்த்தி மிகுந்த பொறுப்போடு இந்த பெரிய முட்டையை கொசப்பேட்டையிலிருந்து 
எக்மோர் மியூசியம் தியேட்டருக்கு நடந்தே உருட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது மலைப்பாய் இருக்கிறது.

கள்ளமின்மையே! உன் பெயர் தான் P.கிருஷ்ணமூர்த்தி!

மியூசியத்திற்குள் முட்டையுடன் நுழைந்த பிறகு தியேட்டருக்குள் அதை கொண்டு வர எப்படியெல்லாம்
பிரயத்தனப்பட வேண்டியிருந்தது 
என்பதை லலித் கலா அகாடமியில்
2017 மார்ச் மாத ஆறாம் தேதி மாலை 
ஞாபகமாக விவரித்தார்.                                                              

அன்று கிருஷ்ண மூர்த்தியின் துணைவியார் தங்களின் வறிய நிலை பற்றி உடைந்த குரலில் பேசினார். உறவினர்களின் துரோகம் பற்றி என்னிடமும், மற்றும் பலரிடமும் துயரத்துடன் புலம்பினார்.

கிருஷ்ணமூர்த்தி தன் மடிப்பாக்கம் வீட்டுக்கு 
என்னை வரச் சொல்லி மிகவும் வலியுறுத்தினார். தொலைபேசியில் பேசும் போதும் வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார்.
எனக்கு கொடுத்து வைக்கவில்லை 

2017, 28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை 
லலித் கலா அகாடமியில்
அல்ஃபோன்ஸோ,
P.கிருஷ்ணமூர்த்தி 
இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.

மகத்தான இரு கலைஞர்கள்.

முதல் நாளும், கடைசி நாளும் ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். 

ஆர்ட் டைரக்டர் ஜேகே, 
நடிகருமான 
வீர சந்தானம், எம். டி. முத்துக்குமாரசாமியையும்அப்போது அங்கே 
பார்த்து பேசினேன்.

.....

Feb 25, 2024

படாத பாடு பட்ட பட்டோடி


பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே.                      

மகன் சைப் அலி கான் இந்தி நடிகர்  என்பதும் தெரிந்ததே.

கீழே உள்ள கதை தான் தெரியாததே.

அப்போது பட்டோடி நவாப் இந்திய அணிக்கு கிரிக்கெட் 
கேப்டன் ஆக இருந்தார்.

இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாட இந்திய அணி போயிருந்தது. 

பட்டோடி க்கு ஒரு கண் செயற்கை கண். 
இரவு கழட்டி வைத்து விட்டு தான் தூங்குவார்.
டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு முந்தைய நாள் இரவு ஓட்டலில் தூங்கும்போது 
ஏதோ சாப்பிடுவது போல கனவு கண்டு 
செயற்கை கண்ணை எடுத்து 
விழுங்கி விட்டார். 

காலையில் கண்ணை தேடினால் காணவில்லை. ஸ்பேர் செயற்கை கண் எப்போதும் 
கைவசம் இருக்கும். 
அதை எடுத்து பொருத்திகொண்டார்.
மேட்ச் விளையாட வேண்டிய டென்சன்.
 டாய்லட் போனால் பேல முடியவில்லை. 
வெளிக்கி வெளிய வரவே இல்லை. 
அவசரமாக கிளம்பி மேட்ச் விளையாட போனார்.

 அன்று ஓபனிங் பேட்ஸ்மன். 
காலையில் ஷிட் அடிக்காததால்
 ஒரே இர்ரிடேசன்.டக். 
முதல் பாலில் க்ளீன் போல்ட். கோல்டன் டக்
வெள்ளைக்காரன் எல்லாம்
 ' ஷேம் ஷேம் 'னு கத்துரானுங்க.

சோகமாக பவிலியன் வந்து உடனே
 டாய்லட் போய் முக்கினால்.. ம்ஹூம் .. 
புழு பூச்சி கூட ஆசனவாயிலிருந்து வெளிவரவே இல்லை. பட்டோடிக்கு புரிந்து விட்டது. 
சம்திங்க் ராங்.
 உடனே டாக்டரை பார்க்க வேண்டும்.

ஒரு டாக்டரை பார்த்தார். Buttocks specialist. 
'என்ன பட்டோடி, வெக்கமாய் இல்ல. 
முதல் பால். அவுட் ஆகிறீங்க ' 
இங்க்லீஷிலே கேட்டார்.
பிரிட்டிஷ் இங்க்ளிஷ். 

பட்டோடி ' டாக்டர் .. வெளிக்கி போகலீங்க . வரவே மாட்டேங்குது . முக்கி முக்கி பார்த்தும் வரலே . அதனால் தான் டக் அடிச்சிட்டேன் . என்னன்னு செக் பண்ணுங்க டாக்டர்.' 
இந்தியன் இங்க்ளிஷில் சொன்னார்.

டாக்டர் உடனே பட்டோடியின் ஆடைகளை கலட்டி நிர்வாணமாக்கி கட்டிலில் படுக்க சொல்லி இரண்டு கால்களையும் அகட்டி இரண்டு கொக்கியில் மாட்டி விட்டார் . நல்ல பவர்புல் டார்ச்சை எடுத்து லைட் அன் பண்ணி பட்டோடி ஆசனவாயில் வெளிச்சத்தை செலுத்தினார். ஆசன வாய் உள்ளே பார்த்த டாக்டர் அதிர்ச்சியில் ஏதோ பேய் அறைந்து விட்டாற்போல் முகம் வெளிரிபோய் உடனே பதறி டார்ச் லைட்டை கீழே போட்டு விட்டார். டாக்டர் வியர்க்க விறுவிறுக்க ஈசி சேரில் உட்கார்ந்தார். மூச்சு இறைத்தது.மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார்.

கட்டிலில் அகட்டி கால்கள் கொக்கியில் மாட்டப்பட்டு வெவ்வா போல படுத்திருந்த பட்டோடிக்கு அழுகையே வந்து விட்டது
 ' டாக்டர், சொல்லுங்க டாக்டர். 
ஏன் டாக்டர் பயந்து போயிட்டீங்க? 
 நீங்களே பயந்துட்டீங்களே. 
அப்படின்னா நான் பொழைக்க மாட்டேனா டாக்டர். சொல்லுங்க டாக்டர் ' 
இந்தியன் இங்க்ளிஷில் கெஞ்சி கெஞ்சி கேட்டார்.

பட்டோடி விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் இங்கிலாந்து காற்றே 

வியர்க்க விறுவி்றுக்க,மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க மிரண்டு போய் உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார டாக்டர் பிரிட்டிஷ் இங்க்ளிஷில் சொன்னார்: “ஓத்தால ஓக்க, 
நானும் என் ஆயுசுலே எத்தனையோ
 ' சூத் ' பார்த்துருக்கேன். 
ஒரு "சூத் " கூட என்னைய  பார்த்ததே இல்லை "

......

மீள் பதிவு 2009

Feb 24, 2024

சினிமா எனும் பூதம் பாகம் - 2 பற்றி ராஜா ஹஸன்

ராஜா ஹஸன்
சினிமா எனும் பூதம் பாகம் 2 நூல் பற்றி

#reading_marathon2024 
RM096
21/30
சினிமா எனும் பூதம் (பாகம்- 2)
ஆசிரியர் R.P.ராஜநாயஹம் 
பக்கங்கள் 220
விலை ரூ 240/
முதல் பதிப்பு செப்டம்பர் 2022 
தோட்டா கம்பெனி‌ வெளியீடு
தொடர்புக்கு 97905 91038
-----------------------------------------------------------------
கலைஞரின் முரசு தொலைக்காட்சியில் 'சினிமா எனும் பூதம்'  நிகழ்ச்சியைக் கடந்த இரண்டரை வருடங்களாக வழங்கி வரும் எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் அவர்களின் புத்தகம்.

R.P. ராஜநாயஹம் எழுத்தாளர் ,இலக்கிய ஆர்வலர், கூத்துப்பட்டறை நிகழ்த்துக்கலை ஆசிரியர், சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர், மேடை நாடக இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமைத் திறன் மிக்கவர். 

நூலாசிரியரைப் பொறுத்தவரை தான் வாசித்ததை மட்டுமல்ல கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்ததை, அனைத்தையும் எழுத்தில் சுவாரஸ்யமாக படிப்போர் ரசிப்பது போல எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல.

 பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், இசை அறிவு, ரசனை உயர்தரமானது மட்டுமல்ல உண்மையானதும் உன்னதமானதும் கூட.

எப்படி இந்த மனிதரால் ஜெயகாந்தனைப் பற்றியும் அதே வேளையில் நடிகை ஜோதிலட்சுமி பற்றியும் எழுத முடிகிறது என நாம் வியப்படைகிறோம்.

 போர்ஹேவின் சிறுகதையை மிகவும் சிலாகிக்கும் இவரால்  டி.எஸ் பாலையாவின் குடும்ப உறவுகளைப் பற்றியும் சுவாரசியமாகப் பேச முடிகிறது.

R.P. ராஜநாயஹம் படைப்புகள் தற்பொழுதுதான் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் சினிமா குறித்த இந்த பாகம்-2 புத்தகத்தில்
திரையுலக ஆளுமைகள் பற்றிய  கட்டுரைகள் மிகவும் செறிவுடனும், நகைச்சுவையுடனும் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதிய தகவல்களுடனும் வெளிவந்திருப்பது மிகவும் சிறப்பு.

அதே வேளையில் புகழின் உச்சியில் இருந்த' கிழக்கே போகும் ரயில்' நடிகர் விஜயன் வீழ்ந்த கதையை வறுமை நிலையை வாசிக்கையில் மனம் கலங்கிப் போய் விடுகிறது.

1980களில் கவர்ச்சி நடிகைகள் என்ற கட்டுரையில் பிரதமர் இந்திராகாந்தியே புன்னகையுடன்  "Who is this Silk?!" என்று  சில்க் ஸ்மிதா பற்றிக் கேட்டதாகவும், அத்துடன் விரியும் காட்சிகளில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று இருந்த காலம் குறித்த தகவல்களில் வரும் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா வரிசையில் குடும்பப்பாங்கான நடிகையர் திலகம் சாவித்திரி கூட விரசம் தெரிய" சுழி" என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலுடன் தமிழ்த் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக் கன்னி டி .ஆர் ராஜகுமாரி குறித்த செய்திகளும் அடக்கம்.

கிசுகிசு என்ற வார்த்தையை தமிழுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பிரயோகம் செய்து பிரபலமாக்கியது குமுதம் வார இதழ் தான்.. It is Whispered என ஆங்கிலத்தில் சொல்வார்கள் .. கிசுகிசு வில் அடிபட்ட அன்றைய தமிழ்த் திரைக் கலைஞர்கள் பற்றிய அத்தியாயத்தில் ஆசிரியர் விவரிக்கும் சம்பவங்கள்  ஆச்சரியப்பட வைக்கின்றன.

கூகுள் சர்ச் இல்லாத காலத்திய தகவல்கள் எல்லாம் 
R.P. ராஜநாயஹம் அவரின் மூளை அடுக்குகளுக்குள் பத்திரமாக இருந்து அவ்வப்போது வெளிப்படும் தன்மை ஒரு அற்புதம்.

 இசை விமர்சகர் சுப்புடு  குறித்த செய்திகள். நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் தந்தை முத்துப்பேட்டை சோமு குறித்த தகவல்களை நினைவடுக்குகளில் இருந்து எவ்வளவு அழகாக மீட்டுருவாக்கம் செய்து எழுதியுள்ளார் என்ற வியக்கத் தோன்றுகிறது.

ஜி.கே.தர்மராஜ் என்ற தற்செயல்(!) சினிமா தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து படம் தயாரித்த கதை.. அத்துடன் முதல்வரான எம்ஜிஆரை எப்படியோ பிடித்து' உன்னை விடமாட்டேன்' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைப்பில் பூஜை என தினத்தந்தி விளம்பரம் கொடுத்தவர்.( முதலமைச்சராக இருப்பவர் சினிமாவில் நடிக்கலாமா என்ற கடும் சர்ச்சையைத்  தொடர்ந்து எம்ஜிஆர் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டினாராம்!!)

கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலட்சுமிகளில் ஒருத்தியான வித்யா லட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம். சிவாஜி கணேசனுக்கு வித்யா லட்சுமி அருள் பரிபூரணமாக கிடைத்தது. அதற்கு முன்னர் அவரது நிலை என்ன என்பதை அறியவும் முடிகிறது.

ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் கசந்த நினைவுகள் என்ற தலைப்பில் அன்றைய முதலாளி எஸ் எஸ் வாசன் குறித்த தகவல்கள் அவரது அதிரடியான அணுகுமுறை குறித்தவைகளே தமிழ் இலக்கியத்திற்கு அசோகமித்திரனின் ஜெமினி வாழ்க்கை அனுபவங்களாகக் கிடைத்ததைக் குறிப்பிடுகிறார்.

'கரைந்த நிழல்கள்'  ராம அய்யங்கார் பாத்திரம் முதல் 'மானசரோவர்' ஸ்டுடியோ முதலாளியும் வாசன்தான்.

ஜெமினி - சாவித்திரி தம்பதிகள் குறித்த கட்டுரையில் வெளிப்படும் விஷயங்கள் அதன் தன்மை குறித்து நாம் ஆராயத் தேவையில்லை. 'கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்' என்ற மனநிலை. 

ஜெமினி கணேசனின் திருவிளையாடல்களில் வாழ்வின் கடைசி அத்தியாயம் ஜூலியானா. அவரிடமிருந்து தன் அப்பாவை மீட்டு மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஜி. ஜி ஹாஸ்பிடல் வைத்திருந்தபோது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு தொங்கியதாம்.

"Ladies Not Allowed" அறிவிப்பு அன்றைய காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா? 

ஹாலிவுட் படங்கள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகளில் பரந்துபட்ட ஆங்கிலப் புலமை கண்டு வியக்கிறோம். டாக்டர் ஷிவாக்கோ 1965ல் வந்த படம். மிகச் சுருக்கமாக திரைப்படத்தைப் பற்றி ஆசிரியரின்  பார்வை அபாரம்.

ஆச்சி மனோரமா குறித்த இரங்கல் கட்டுரையில் அவருக்கே தெரியாத பல கதாபாத்திரங்கள் பற்றி ஆசிரியர் சிலாகித்திருக்கிறார் எனலாம்.

நீண்டகாலமாக ஒரே வேலையை செய்யும் போது ஒரு செக்குமாட்டுத் தனம் வந்துவிடும் .ஆனால் மனோரமாவின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம். அதோடு திரையில் பாடிய நடிகை .இந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

Family Tree குறித்த கட்டுரைகளில் இன்னாருக்கு இன்னார் உறவு, அவருக்கு இவர் என்ன உறவு என்ற செய்திகளை நூல் பிடித்து ஆசிரியர் எழுதிச் செல்லும் விதம் எங்கும் கேள்விப்படாதது.

மதுரை தியேட்டர்கள் குறித்த பதிவில் அன்றைய திரை அரங்கங்கள் குறித்த நினைவுகள் என்றும் அழியாது என்று ஆசிரியர் குறிப்பிடுவது தியேட்டருக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பை குறிக்கிறது எனலாம்.

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே. க்ளிஷேவாக இருந்தாலும் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 'என்பதைத்தான் இங்கு உபயோகப்படுத்த வேண்டும்.

இந்த சினிமா எனும் பூதம் பாகம்-2 புத்தகத்தை வாசிக்கும் போது, எவ்வளவு ஆளுமைகள் அவர்களுக்கான அனுபவங்கள் மட்டுமல்லாமல்,
 R.P ராஜநாயஹத்துக்கு மட்டும் எப்படி இப்படி அனுபவங்கள் அமைகின்றன.. என நம்மை வியப்பில் ஆழ்த்தும் மாயம்.

பலரும் மறந்த சினிமா கலைஞர்களைக் குறித்த நினைவு கூறல் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் தோட்டா ஜெகன்... மிகவும் அருமையான உயர்ந்த அச்சுத் தரத்தில்,சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டிருப்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.


பிஷப் ஹீபர் கல்லூரியில் R.P. ராஜநாயஹம் நூல்கள் விமர்சனக் கூட்டம்

*வாசகர் வட்டம்* 
திருச்சிராப்பள்ளி.              
*விமர்சகர் R.P. ராஜநாயஹத்தின் நூல்கள் விமர்சனக் கூட்டம்*

நாள்: *23.02.2024* மாலை 6 மணி   முதல் 8 மணி வரை
இடம் : *பிஷப் ஹீபர் கல்லூரி நூலக அரங்கம்* வயலூர்ச் சாலை, திருச்சிராப்பள்ளி.
*R.P. ராஜநாயஹத்தின் நூல்கள் அறிமுகமும் விமர்சனமும்*
1. *மணல் கோடுகளாய்* - முனைவர் க. காசி மாரியப்பன், தந்தை பெரியார் அரசு கல்லூரி.
2. *தழல்வீரம்* - முனைவர் சா. சாம் கிதியோன் பிஷப் ஹீபர் கல்லூரி
3. *சினிமா என்னும் பூதம்* முனைவர் இரா. இராஜா தேசியக் கல்லூரி.    
4. *அரசியல் பிழைத்தோர்* -  முனைவர் லி. சிவகுமார், பிஷப் ஹீபர் கல்லூரி.
  
......

Feb 23, 2024

'சினிமா எனும் பூதம் பாகம் 2' பற்றி ராஜா ஹஸன்

ராஜா ஹஸன்
சினிமா எனும் பூதம் பாகம் 2 நூல் பற்றி


#reading_marathon2024 
RM096
21/30
சினிமா எனும் பூதம் (பாகம்- 2)
ஆசிரியர் R.P.ராஜநாயஹம் 
பக்கங்கள் 220
விலை ரூ 240/
முதல் பதிப்பு செப்டம்பர் 2022 
தோட்டா கம்பெனி‌ வெளியீடு
தொடர்புக்கு 97905 91038
-----------------------------------------------------------------
கலைஞரின் முரசு தொலைக்காட்சியில் 'சினிமா எனும் பூதம்'  நிகழ்ச்சியைக் கடந்த இரண்டரை வருடங்களாக வழங்கி வரும் எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் அவர்களின் புத்தகம்.

R.P. ராஜநாயஹம் எழுத்தாளர் ,இலக்கிய ஆர்வலர், கூத்துப்பட்டறை நிகழ்த்துக்கலை ஆசிரியர், சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர், மேடை நாடக இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமைத் திறன் மிக்கவர். 

நூலாசிரியரைப் பொறுத்தவரை தான் வாசித்ததை மட்டுமல்ல கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்ததை, அனைத்தையும் எழுத்தில் சுவாரஸ்யமாக படிப்போர் ரசிப்பது போல எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல.

 பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், இசை அறிவு, ரசனை உயர்தரமானது மட்டுமல்ல உண்மையானதும் உன்னதமானதும் கூட.

எப்படி இந்த மனிதரால் ஜெயகாந்தனைப் பற்றியும் அதே வேளையில் நடிகை ஜோதிலட்சுமி பற்றியும் எழுத முடிகிறது என நாம் வியப்படைகிறோம்.

 போர்ஹேவின் சிறுகதையை மிகவும் சிலாகிக்கும் இவரால்  டி.எஸ் பாலையாவின் குடும்ப உறவுகளைப் பற்றியும் சுவாரசியமாகப் பேச முடிகிறது.

R.P. ராஜநாயஹம் படைப்புகள் தற்பொழுதுதான் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் சினிமா குறித்த இந்த பாகம்-2 புத்தகத்தில்
திரையுலக ஆளுமைகள் பற்றிய  கட்டுரைகள் மிகவும் செறிவுடனும், நகைச்சுவையுடனும் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதிய தகவல்களுடனும் வெளிவந்திருப்பது மிகவும் சிறப்பு.

அதே வேளையில் புகழின் உச்சியில் இருந்த' கிழக்கே போகும் ரயில்' நடிகர் விஜயன் வீழ்ந்த கதையை வறுமை நிலையை வாசிக்கையில் மனம் கலங்கிப் போய் விடுகிறது.

1980களில் கவர்ச்சி நடிகைகள் என்ற கட்டுரையில் பிரதமர் இந்திராகாந்தியே புன்னகையுடன்  "Who is this Silk?!" என்று  சில்க் ஸ்மிதா பற்றிக் கேட்டதாகவும், அத்துடன் விரியும் காட்சிகளில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று இருந்த காலம் குறித்த தகவல்களில் வரும் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா வரிசையில் குடும்பப்பாங்கான நடிகையர் திலகம் சாவித்திரி கூட விரசம் தெரிய" சுழி" என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலுடன் தமிழ்த் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக் கன்னி டி .ஆர் ராஜகுமாரி குறித்த செய்திகளும் அடக்கம்.

கிசுகிசு என்ற வார்த்தையை தமிழுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பிரயோகம் செய்து பிரபலமாக்கியது குமுதம் வார இதழ் தான்.. It is Whispered என ஆங்கிலத்தில் சொல்வார்கள் .. கிசுகிசு வில் அடிபட்ட அன்றைய தமிழ்த் திரைக் கலைஞர்கள் பற்றிய அத்தியாயத்தில் ஆசிரியர் விவரிக்கும் சம்பவங்கள்  ஆச்சரியப்பட வைக்கின்றன.

கூகுள் சர்ச் இல்லாத காலத்திய தகவல்கள் எல்லாம் 
R.P. ராஜநாயஹம் அவரின் மூளை அடுக்குகளுக்குள் பத்திரமாக இருந்து அவ்வப்போது வெளிப்படும் தன்மை ஒரு அற்புதம்.

 இசை விமர்சகர் சுப்புடு  குறித்த செய்திகள். நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் தந்தை முத்துப்பேட்டை சோமு குறித்த தகவல்களை நினைவடுக்குகளில் இருந்து எவ்வளவு அழகாக மீட்டுருவாக்கம் செய்து எழுதியுள்ளார் என்ற வியக்கத் தோன்றுகிறது.

ஜி.கே.தர்மராஜ் என்ற தற்செயல்(!) சினிமா தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து படம் தயாரித்த கதை.. அத்துடன் முதல்வரான எம்ஜிஆரை எப்படியோ பிடித்து' உன்னை விடமாட்டேன்' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைப்பில் பூஜை என தினத்தந்தி விளம்பரம் கொடுத்தவர்.( முதலமைச்சராக இருப்பவர் சினிமாவில் நடிக்கலாமா என்ற கடும் சர்ச்சையைத்  தொடர்ந்து எம்ஜிஆர் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டினாராம்!!)

கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலட்சுமிகளில் ஒருத்தியான வித்யா லட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம். சிவாஜி கணேசனுக்கு வித்யா லட்சுமி அருள் பரிபூரணமாக கிடைத்தது. அதற்கு முன்னர் அவரது நிலை என்ன என்பதை அறியவும் முடிகிறது.

ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் கசந்த நினைவுகள் என்ற தலைப்பில் அன்றைய முதலாளி எஸ் எஸ் வாசன் குறித்த தகவல்கள் அவரது அதிரடியான அணுகுமுறை குறித்தவைகளே தமிழ் இலக்கியத்திற்கு அசோகமித்திரனின் ஜெமினி வாழ்க்கை அனுபவங்களாகக் கிடைத்ததைக் குறிப்பிடுகிறார்.

'கரைந்த நிழல்கள்'  ராம அய்யங்கார் பாத்திரம் முதல் 'மானசரோவர்' ஸ்டுடியோ முதலாளியும் வாசன்தான்.

ஜெமினி - சாவித்திரி தம்பதிகள் குறித்த கட்டுரையில் வெளிப்படும் விஷயங்கள் அதன் தன்மை குறித்து நாம் ஆராயத் தேவையில்லை. 'கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்' என்ற மனநிலை. 

ஜெமினி கணேசனின் திருவிளையாடல்களில் வாழ்வின் கடைசி அத்தியாயம் ஜூலியானா. அவரிடமிருந்து தன் அப்பாவை மீட்டு மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஜி. ஜி ஹாஸ்பிடல் வைத்திருந்தபோது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு தொங்கியதாம்.

"Ladies Not Allowed" அறிவிப்பு அன்றைய காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா? 

ஹாலிவுட் படங்கள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகளில் பரந்துபட்ட ஆங்கிலப் புலமை கண்டு வியக்கிறோம். டாக்டர் ஷிவாக்கோ 1965ல் வந்த படம். மிகச் சுருக்கமாக திரைப்படத்தைப் பற்றி ஆசிரியரின்  பார்வை அபாரம்.

ஆச்சி மனோரமா குறித்த இரங்கல் கட்டுரையில் அவருக்கே தெரியாத பல கதாபாத்திரங்கள் பற்றி ஆசிரியர் சிலாகித்திருக்கிறார் எனலாம்.

நீண்டகாலமாக ஒரே வேலையை செய்யும் போது ஒரு செக்குமாட்டுத் தனம் வந்துவிடும் .ஆனால் மனோரமாவின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம். அதோடு திரையில் பாடிய நடிகை .இந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

Family Tree குறித்த கட்டுரைகளில் இன்னாருக்கு இன்னார் உறவு, அவருக்கு இவர் என்ன உறவு என்ற செய்திகளை நூல் பிடித்து ஆசிரியர் எழுதிச் செல்லும் விதம் எங்கும் கேள்விப்படாதது.

மதுரை தியேட்டர்கள் குறித்த பதிவில் அன்றைய திரை அரங்கங்கள் குறித்த நினைவுகள் என்றும் அழியாது என்று ஆசிரியர் குறிப்பிடுவது தியேட்டருக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பை குறிக்கிறது எனலாம்.

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே. க்ளிஷேவாக இருந்தாலும் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 'என்பதைத்தான் இங்கு உபயோகப்படுத்த வேண்டும்.

இந்த சினிமா எனும் பூதம் பாகம்-2 புத்தகத்தை வாசிக்கும் போது, எவ்வளவு ஆளுமைகள் அவர்களுக்கான அனுபவங்கள் மட்டுமல்லாமல்,
 R.P ராஜநாயஹத்துக்கு மட்டும் எப்படி இப்படி அனுபவங்கள் அமைகின்றன.. என நம்மை வியப்பில் ஆழ்த்தும் மாயம்.

பலரும் மறந்த சினிமா கலைஞர்களைக் குறித்த நினைவு கூறல் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் தோட்டா ஜெகன்... மிகவும் அருமையான உயர்ந்த அச்சுத் தரத்தில்,சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டிருப்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.

Feb 21, 2024

கிளர்ந்தெழும் தாபம் அதி மதுர மதுர சமர்ப்பணம்


கிளர்ந்தெழும் தாபம்
அதி மதுர மதுர

இரு நூல்களும்

சமர்ப்பணம்

கவிஞர் தேவேந்திர பூபதி

பா. அசோக்

ஓவியர் முரளிதரன் கிருஷ்ண மூர்த்தி

அருண்குமார் குமாரவேலு

சரவணகுமார் அய்யாவு

கிளர்ந்தெழும் தாபம் - அதி மதுர மதுர





R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள் 

கிளர்ந்தெழும் தாபம் 

அதி மதுர மதுர

Feb 20, 2024

அதி மதுர மதுர பற்றி ராஜா ஹஸன்


RM096
அதிமதுர மதுர - கட்டுரைகள்(18+)
எழுதியவர் R.P. ராஜநாயஹம்
பக்கங்கள் 67
விலை ரூ 100/
முதற்பதிப்பு ஜனவரி 2024
R.P. ராஜநாயஹம் வெளியீடு
தொடர்புக்கு ஜெய்ரிகி பப்ளிகேஷன்ஸ்.
அலைபேசி -86438 42772
-----------------------------------------------------------------------
எழுத்தாளர், கூத்துப்பட்டறை நிகழ்த்துக் கலை ஆசிரியர், மேடை நாடக இயக்குநர், இலக்கிய ஆர்வலர், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர் என பன்முக ஆளுமைத் திறன் மிக்க R.P.ராஜநாயஹம் அவர்களின் சமீபத்திய வரவு இந்த ,'அதிமதுர மதுர' வயது வந்தோருக்கான கட்டுரைத் தொகுப்பு.
1980 களில் மதுரை, குறிப்பாக ஆரப்பாளையம் பகுதிகளில் வேலை வெட்டிக்கு செல்லாமல், சண்டியர்த் தனம் செய்து கொண்டு வெட்டியாய் சுற்றும் நபர்களின் சேட்டைகள், சேர்க்கைகள் குறித்த நகைச்சுவை மிளிரும் கதைகளை Carnal Thoughts என்ற தலைப்பில் தனது வலைப் பூவில் எழுதியவற்றின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

ஒரு பக்கக் கதை அளவே ஆன நறுக்குத் தெரித்தாற் போன்ற கட்டுரைகளில் தெறிக்கும் நகைச்சுவைகள். வட்டார வழக்குடன் கூடிய வார்த்தைப் பிரயோகங்கள்... எவரையும் எடுத்தெறிந்து பேசிவிட்டு பின்னர் பம்மிக் கொள்ளும் நபர்களின் ஃப்ராடுத்தன  அங்கத சிரிப்புகள் , என இத் தொகுப்பு ஒரு நகைச்சுவை ரைடு எனலாம்.

இதில் வரும் நபர்களின் பட்டப் பெயர்களே செம்ம ரகளையாக இருக்கிறது ஆட்டு மூக்கன் ,ஒத்த காதன், தொல்லை, ஆலமரத்தான், குருவி மண்டையன், ஒச்சு, சொரிக்காம்பட்டியான், கொலாப்புட்டன்,செவத்தியான், ரிக்சாக்காரன் ,லெட்சுமனன்,கோழி குணா,கண்ணுச்சாமி சண்டியர்,தங்காத்து, சுள்ளான் , மொட்டையன், சப்பக்காலன், கம்புக்கூட்டன், சட்டி மண்டையன், சோலை, கொழந்தை, மண்ட மூக்கன், லூயிஸ், மொட்டையன், உருண்டை விழியன் அவர்களின் செயல்களும் மட்ட ரகமாக இருந்தாலும் நம்மை சிரிக்க வைக்கிறது.

வார்னிஷ் எனும் கலக்கி முட்டியைக் குடித்துவிட்டு ஆலமரத்தான் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் போடும் கூப்பாடுகள் அதிரிபுதிரி 'A' ரகம்.
அந்த சமயத்தில்தான் டார்க் ப்ளூ கலரில் இருந்த போலீஸ் வேனின் நிறம் வெள்ளை நிறமாக மாறி இருக்கிறது.
 ஆலமரத்தானுக்கு பொது அறிவு கொஞ்சம் கம்மி. போலீஸ் வண்டியை ஆம்புலன்ஸ் என்று எண்ணிக் கொண்டு "நிறுத்துடா.. வண்டியை நிறுத்துடா.." என சலம்பி கத்தியால் வேனின் பேனட் மீது குத்துகிறான் .

சிங்கத்தின் குகையில் வாலாட்டினால்.. இறங்கிய போலீசாருக்கு ஏக குஷி!! ஆலமரத்தானுக்கு அடி விழுந்ததுமே புரிந்து விட்டது" ஏட்டையா.. சத்தியமா நான் ஆம்புலன்ஸுனு நினைச்சு தான் தெரியாம கத்தியை சொருகினேன்.. போலீஸ் வேன்னு தெரியாதுங்க தெரியாம பண்ணிட்டேன் அடிக்காதீங்க அடிக்காதீங்க" என அலற பொறித்து எடுத்து  வேனுக்குள் ஆலமரத்தான் வீசப்படுகிறான்.

எப்போதுமே கையில் 'கல்கண்டு' வார பத்திரிகை கர்ணன் கவச குண்டலம் போல லூயிசுக்கு
" பொது அறிவு வளரும் டா "

லூயிஸ் ரயில் பயணம் செய்யும்போது கதவருகில் நின்று கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் வருவான்.
 அப்படி நிற்கும் போது ஒரு சலவை தொழிலாளி கழுதையை மேய்த்துக் கொண்டு போனவனைப் பார்த்துக் கூவி,"ஏய் உன்னைத்தாண்டா" எனக்கூப்பிட்டு சாட்டையுடன் திரும்பிய தொழிலாளிடம் தன் வேட்டியை தூக்கி காட்டினான்.

 அந்த கழுதைக்காரன் கோபத்துடன் வஞ்சான். ரயிலில் போகிறவனை என்ன செய்ய முடியும்? கழுதையை சாட்டையால் இரண்டு அடி கொடுத்துவிட்டு மீண்டும் நடந்தவனை மீண்டும் லூயிஸ்,
" உன்னைத்தாண்டா" என கூப்பிட்டு தன் வேட்டியைத்  தூக்கி மீண்டும் இப்பொழுது  காட்டினான்..

 அந்த நேரம் பார்த்து ரயில் நின்றே விட்டது ..எதிர்பாராத இந்த திருப்பம்..

 விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?

 கழுதைக்காரன் வெறியுடன் சாட்டையோடு  ரயிலை நோக்கி ஓடிவந்து லூயிசை செம மாத்து மாத்துகிறான்." இப்ப காட்றா... உன்னத இப்ப காட்றா" என அவன் கூப்பாடு போட்டது தான் லூயிஸ் காதுகளில் விழுந்தது..

குருவி மண்டையன் தீவிர தி மு க தொண்டன் கடந்த 1977 தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு கேட்க புது டெக்னிக்கை கையாளுகிறான்.
 தன் நண்பர்கள் கேங்குடன் தெருக்களில் நுழைந்து, அலப்பறையாக " டேய் ...டேஷ் மகன்களா எம்ஜிஆருக்கு ஓட்டு போடுங்கடா... திமுகவுக்கு ஓட்டு போட்டீங்கன்னா ஒருத்தன் கூட உயிரோடு இருக்க மாட்டீங்கடா ...டேய் ஆரிய நாய்களா ஒழுங்கு மயிரா அண்ணா திமுகவுக்கு ஓட்டு போடலைன்னா அழிஞ்சே போவீங்கடா..."  அதோட இல்லாமல் தாய் தமக்கைகள் குறித்த செந்தமிழ் வார்த்தைகளில் எம்ஜிஆருக்கு ஓட்டு கேட்டு சவுண்ட கொடுக்கிறான். இந்த ரகளையில்  ஏரியா வாசிகள் கதவைப் பூட்டிக் கொண்டு லைட்டை ஆப் செய்து வீட்டினுள் பதுங்கிக் கொள்கிறார்கள்.
அந்தத் தொகுதியில் திமுக வெல்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமனாருடன் பிராந்திக் கடையில்  ராஜநாயஹம் பங்குதாரராக இருந்தபோது, குடிகாரர்களுடன் அவர்களின் சலம்பல்கள்  அனுபவங்களைக் குறிப்பாக," இப்பவும் நான் வீட்டுக்குப் போனா!!" என்ற தலைப்பிலான கட்டுரையை வாசிக்கும் போது கண்ணில் நீர்வர சிரிக்கத் தூண்டுகிறது.

" அப்பு டேய், குழாக்கார காவாலிங்க டேஞ்சர் டயாபாலிக்கு டா. ஒன்னாம் நம்பர் பிக்காலிக.. சூதானமா பழகணும்...நம்மள வில்லங்கத்துல மாட்டி விட்டுடுவான்க" எச்சரிக்கை  மணியடிப்பான் ஆட்டு மூக்கன். 

குழாகாரங்க என்பது மதுரையில் பேண்ட் அணிந்தவர்களைப் பற்றிய இவர்களின் கோட் வேர்ட்.

ஒவ்வொருவரிடமும் லந்தைக் கொடுத்து அவர்களிடம் ஒரண்டை இழுத்து சச்சரவு செய்து கிடைப்பதை அப்பிக் கொண்டு சல்லித்தனமாக இருப்போரின் பின்புலம் வாழ்க்கை முறை அவர்களின் உரையாடல்கள் எனப் புதிய வாசிப்பனுபவத்தை இந்த அதிமதுர மதுர தருகிறது.

இதில் வரும் கதை மாந்தர்கள் யார் யாரோவாக வெவ்வேறு பாத்திரங்களாக நமது வாழ்க்கையிலும் வந்து போயிருக்கலாம் என எண்ண வைக்கிறது ராஜநாயஹத்தின் இந்த உள்ளதை உள்ளபடி சொல்லும் 'ராவா'ன எழுத்து.
அன்பன்,
ராஜா ஹஸன்.

Feb 19, 2024

Copy cat தேன்மொழி

So many COPY CATS

தேன்மொழி என்று Copy cat.

ராஜநாயஹம் 2012 பதிவிலிருந்து திருடி 
https://rprajanayahem.blogspot.com/2012/10/1971.html?m=0

ஆதன் தமிழில் ராஜநாயஹம் பேசியதில் இருந்து 

https://youtu.be/RbYUWVuEV1I?si=uXjbSXjlzSh-Bs_L

தேன் மொழி 'ஆட்டை' கீழே 
https://www.facebook.com/share/p/gtSkzNvNssa2s1Zn/?mibextid=oFDknk

Feb 18, 2024

சுகந்தி சுப்ரமணியன்

2009 post

சுகந்தி சுப்பிரமணியன்

சுப்ரபாரதி மணியன் வீட்டிற்கு ஒரு முறை ஈரோடு நாங்கள் இருவரும் சென்று விட்டு திருப்பூர் திரும்பிய போது அவர் அழைத்து சென்றிருந்தார் .
அங்கே அவர் துணைவி சுகந்தி என்னிடம் 
" அய்யா, என் கணவர் உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். எனக்கு தமிழ் கற்று கொடுங்கள் அய்யா " என்று கேட்டார். ஐந்து வயது குழந்தையாக தோன்றிய சுகந்தி யை மனபாரத்துடன் நான் பார்த்த போது இருபது வருடங்களுக்கு முன் அவருடைய "புதையுண்ட வாழ்க்கை ' கவிதை நூலை பற்றி புதுவையில் நடத்திய கருத்தரங்கம்  நினைவில் நிழலாடியது.
சுப்ரபாரதி மணியன் உள்ளே சமையல் அறைக்கு சென்ற போது சுகந்தி " அய்யா, உங்கள் பேனாவை எனக்கு தாருங்கள் அய்யா" என குழந்தை கேட்பது போல கேட்டார் . நான் உடனே அவரிடம் கொடுத்தவுடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். அதன் பின் சுப்ரபாரதி மணியனும் நானும் பேசுவதை ஆர்வத்துடன் சுகந்தி ஜன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார்.
 அன்று சுப்ரபாரதி மணியன், சுகந்தி, இரு மகள்கள் இவர்களை எண்ணி மிகுந்த வியாகுலம் அனுபவித்தேன்.
சென்ற மாதம் மறைந்த சுகந்தி சுப்பிரமணியன் அவர்களுக்கு மார்ச் 15 தேதியன்று திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தில் அஞ்சலியுரை நிகழ்த்தினேன். 

 மரணம் சுகந்திக்கு பரிபூரண விடுதலை தான். அவர் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு நீரில் இருந்து வெளிவந்த மீன் போல சொல்லணா துயரத்தை அனுபவித்த பெண்மணி. கணவருக்கு, மகள்களுக்கு பாரமாக வாழ நேர்ந்த துர்பாக்கியசாலி. இவர் கணவர் சுப்ரபாரதி மணியன் சிலுவை சுமந்திருக்கிறார் என நான் சொல்வேன். தன் மனைவியின் மனநோய் அவருக்கு ஏற்படுத்திய உளைச்சல், அவமானம், வேதனை குறித்து ஒரு போதும்  முணுமுணுப்போ, பல்கடிப்போ எப்போதும் அவரிடம் இருந்து கேட்க நேர்ந்ததில்லை. 
இரண்டு பெண் பிள்ளைகள்.  தாய் சிலையாகி போன நிலையில் மணியனே பிள்ளைகளுக்கு தாயுமானவர். சுகந்தியின் புதையுண்ட வாழ்க்கையை மீட்டு விட தளரா நம்பிக்கையோடு மீண்டு எழுதலின் ரகசியம் என்று தன்னால் செப்பனிடப்பட்ட சுகந்தியின் கவிதைகளுக்கு பெயர் வைத்தார்.

காலச்சுவடு பத்திரிகையில் அம்பையும், உயிர்மையில் கவிஞர் சுகுமாரனும் அஞ்சலி கட்டுரை எழுதியுள்ளனர். சுகுமாரனின் அஞ்சலி சிறப்பாக வந்திருந்தது.

காலச்சுவடு அம்பை அஞ்சலி ...?

'நாச்சார் மட விவகாரம்' சிறுகதை சுந்தர ராமசாமிக்கு, கண்ணனுக்கு எப்படிப்பட்ட அவமானத்தை தந்தது என்பதை நான் நன்கறிவேன். சு. ரா இது பற்றி என்னிடம் போனில் மிகுந்த துக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. கண்ணனும் தன் மன உளைச்சலை என்னிடம் சொல்லியிருக்கிறார்.
சு ரா இறந்த பின் ஜெகம் பிராடு தூங்காம, பேலாம, சாப்பிடாம எழுதுன இருநூறு பக்க புத்தகத்தில் சு ரா வின் ஆளுமை எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது என்று கண்ணன் என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார். சொல்லப்போனால் அந்த புத்தகம் பற்றி கண்ணனும் நானும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டோம் . ஏனென்றால் என்னைப்பற்றியும் ரொம்ப அவதூறாக, சுந்தர ராமசாமியோடு ஜெகம் பிராடுக்கு மனஸ்தாபமே ஏதோ என்னால் தான் என அதில் அந்த ஆசாமியால் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த ஜெகம் பிராடு இணைய தளத்தில்கூட சுகந்தி பற்றி சில தேவையில்லாத விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது.

சரி. இப்போது அம்பை அஞ்சலி என்ற பெயரில் சுப்ரபாரதி மணியனுக்கும் அவருடைய இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் எப்பேர்ப்பட்ட அவமானத்தையும், மன உளைச்சலையும் உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை கண்ணன் உணர்ந்திருந்தால் காலச்சுவடில் இதை பிரசுரித்திருப்பாரா?
தனக்கு வந்த கஷ்டம் மற்றவர்களுக்கு வரலாகாது என்பது கண்ணனுக்கு பொருட்டில்லையா? அம்பையின் அஞ்சலியில் நாச்சார் மட கூறுகள் இல்லையா? அடுத்தவங்க குடும்பத்தில் தலையிட அவசியமில்லை என்று எழுதிக்கொண்டே அம்பை என்னவெல்லாமோ எழுதியிருக்கிறார். இது போன்ற விஷயங்களை காலச்சுவடு ஆசிரியர் எடிட் செய்ய வேண்டாமா?

......

Feb 17, 2024

சகஸ்ர ராம ஹ்ருதய ஏக பரத ஹ்ருதய நாஸ்தி

நான் 2008ம் ஆண்டு 'சகஸ்ர ராம ஹிருதய ஏக பரத ஹிருதய நாஸ்தி' என்ற தலைப்பில் எழுதிய பதிவு.

ஸஹஸ்ர ராம ஹிருதய ஏக பரத ஹிருதய நாஸ்தி
ஸஹஸ்ர ராம ஹிருதய
ஏக பரத ஹிருதய நாஸ்தி:
ஒரு லா ச ரா கதை. படித்து ரொம்ப வருஷம் இருக்கும். எப்படியும் இருபது வருடத்திற்கு மேல். அந்த கதை சுவாரசியமானது. அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது. என் பாணியில் இதை இங்கே நினைவிலிருந்து எழுதுகிறேன்.


ஸ்ரீ ராமர், ஹனுமன் இருவரும் அவர்களின் Retired Life ல் பேசிகொள்கிறார்கள்.
Nostalgia.
“It’s very funny you and me ending up here!”
இப்படித்தானே ராமர் ஆரம்பித்திருப்பார்.
பழைய நினைவுகளை அசை போடும் தொன்ம நாயகர்கள்.
ஸ்ரீ ராமர் பெருமூச்சு விட்ட படி சொல்கிறார் : போய்யா, என்ன பெரிய ராமாவதாரம். "
அனுமனுக்கு வியப்பு. அமைதியாக ராமனே சொல்லட்டும் என ஏறெடுத்து பார்க்கிறார்.
ஸ்ரீராமன் தொடர்கிறார் " குகன் தான் என்ன அழகாக Declare செய்தான். பட்டத்தை துறந்து கானகம் சென்ற என்னையும் லக்ஷ்மணனையும் சீதையையும் குகன் வரவேற்றான்.
அந்த நேரத்தில் என் தம்பி பரதன் படையோடு வருகிறான் என்றறிய வந்த போது துடித்து 'பட்டத்தை அவனுக்கு விட்டுகொடுத்த அண்ணனை கானகத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் விரட்டி போரிட வருகிறான் பரதன் ' -இப்படி எண்ணி அவனை உண்டு இல்லை என்று பண்ணி விட போவதாக குகன் சவால் விட்டான். பரதன் வந்து என் காலில் விழுந்து தன் அன்னை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ' நீ தான் மன்னன். வா நாட்டுக்கு ' என்கிறான். குகன் அசந்து போய் நின்றான். நான் தந்தை கட்டளையை மீறாமல் மறுத்ததும் " உன் பாத ரட்சைகளை தா.அதை சிம்மாசனத்தில் வைத்து கொள்கிறேன்." கேட்டு வாங்கினான் பரதன்.
அப்போது தான் பரதன் அவன் மேன்மை பண்பால் ஸ்ரீராமாவதாரத்தை அற்பமாக்கி விட்டான்.  குகன் தான் தன்னை மறந்து பரவசமாய் Declare செய்தான்.
"ஆயிரம் ராமர் உனக்கு ஈடாவரோ "
போப்பா.. என்ன ராமாவதாரம்? பரதன் தான் தவிடு பொடியாக்கி விட்டானே.
ஸஹஸ்ர ராம ஹிருதய
ஏக பாரத ஹிருதய நாஸ்தி :

நாற்பது ஆண்டுகளுக்கு முன் படித்த லா.ச.ரா சிறுகதையை பற்றி ஞாபகத்தில் தொட்டு எழுதிய பதிவு.

அந்த பதிவை என் வாசகரும் அருமை நண்பருமான அருண்குமார் குமாரவேலு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
அவருடைய அன்புக்கு நன்றி.
அருண்குமாருடைய நண்பர் ஒருவர் தமிழர் தான். டெல்லியில் இருப்பவர். அவருக்கு தமிழ் வாசிக்க தெரியாது. அந்த நண்பருக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

Arunkumar Kumaravelu'sTranslation of 
R.P. Rajanayahem's write up on La.Sa.Ra's short story below:

Shri Ram and Hanuman were having a leisurely chat in their retired life. 

Nostalgia. 

“It’s very funny you and me ending up here.” That was how Shri Ram would have started the conversation. 

Classical super heroes, reminiscing about their past.

Shri Ram coming out of several minutes of silence says in an exasperated tone, “The Ram Avtar was not a big deal!”

Hanuman was obviously very surprised but kept quiet and looked up to Shri Ram to explain.

Shri Ram resumed, “How elegantly Guhan  had declared! When I relinquished the throne and was banished to the forest it was Guhan who welcomed me, Sita and Lakshman and sheltered us.

At about the same time Bharat was heading towards the forest with his army. Guhan thought Bharat did not want to spare me even in exile and was going to harm me. He was furious and getting ready to repel Bharat’s army. 

But Bharat prostrated before me, asked for forgiveness for his mother’s wrong doings and said “You are the King, please take over the throne!”

Guhan stood there, perplexed.

I did not go back on my promise to my father and refused to go to Ayodhya as the King. Then Bharat asked for my footwear for keeping them on the throne.

That’s exactly when Bharat, through his vastly superior virtue, simply extinguished the sheen off Shri Ram Avtar.

Guhan, overwhelmed by the events unfolding in front of him, declared
“Would a thousand Rams be equal to you, Bharat?”

Hanuman, my friend, now tell me “What’s the big deal about Shri Rama Avatar? Didn’t Bharat obliterate that?”

...

Feb 15, 2024

VEG - NON VEG



சின்ன ப்பியாரஸ் எங்க பள்ளியில்  ஆசிரியர். பிராமணர். 
P. R. சேதுரத்னம். ஆங்கில ஆசிரியர். 
பேசும்போது  வலது கை விரல்களால் தன் இடது உள்ளங்கையில் ஒரு தட்டு தட்டி விட்டு "அடேய்" என்று மாணவர்களை விளிப்பார். 

 இவருடைய அண்ணாவும் எங்கள் பள்ளியில் ஆசிரியர்.
 பெரிய ப்பியாரஸ். 
P. R. சுவாமிநாதன். விஞ்ஞான ஆசிரியர். 
இருவருமே நல்ல முதியவர்கள். ரிட்டயர்மெண்ட்டுக்கு பிறகும் பள்ளியில் ஆசிரியராக நீடிக்க நிர்வாகம் 
இந்த சகோதரர்களுக்கு அனுமதியளித்திருந்தது. 

சின்ன ப்பியாரஸ், "அடேய், ராஜநாயஹத்தை பார்க்காதீர்கள்.
 அவன் லூசு. Mischievous boy. 
Blundering boy.  அவனுடைய slapstick comedy, jokes உங்கள் கவனத்தை படிப்பிலிருந்து திசை திருப்பி விடும். You should avoid this 'watching Rajanayahem temptation' "

 ஆனால்  வகுப்பு தோழர்களுக்கு  வகுப்பு நடக்கும் போது என்னை கவனிக்காமல் இருப்பது சாத்தியப்படாத விஷயமாய் இருந்தது. 

அவர் எப்போதுமே non - vegetarians பற்றி  சொல்வார். 

" அடேய், மாமிசம் சாப்பிறவாளாலே தான் காய்கறி விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. அவாளெல்லாம் வெஜிட்டேரியனா மாறிட்டான்னா, லோகத்தில காய்கறி விலையெல்லாம் வாங்க முடியாதபடி ரொம்ப டிமாண்ட் வந்துடும் "

வீடு வாடகைக்கு தேடும் போது பல இடங்களில் வெஜிட்டேரியனா இருந்தா தான் என்ற சட்டத்தை பார்க்க வேண்டியிருந்தது. 

Non vegetarian என்பது உணவுப் பழக்கம்.
கெட்ட பழக்கம் போல ஏன் முத்திரை குத்தப் படுகிறது? 

 வெஜிட்டேரியன் எப்போதுமே காய்கறி தான் சாப்பிடுவார்கள். ஆனால் மாமிசம் சாப்பிடுபவர்கள் காய்கறியும் சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் பெரும்பான்மையோர்
 வாரம் ஒரு முறை வீட்டில் non-veg சாப்பிடுபவர்கள். அவ்வளவு தான் வசதி. 

இதில் ஒமட்டுது, வாந்தி வருதுன்னு அருவருப்பு  சைவம் சாப்பிடறவங்களுக்கு என்னத்துக்கு? 

முஸ்லிம்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது
 ஆர். எஸ்.எஸ், பி. ஜே பி காரர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது. 

முஸ்லீம்களுக்கு பன்றிக் கறி ஆகாது. பன்றின்னு வாயால சொன்னாலே ஹராம். 

கிறிஸ்தவர்கள் மாட்டுக்கறியும் சாப்பிடுவார்கள். பன்றிக் கறியும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சீனாக்காரனுக்கு எதுவுமே தள்ளுபடி கெடையாதே. வளச்சி வெட்டுவானே. 
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.

என்னுடைய இளைய மகன் அஷ்வத். இவனுடைய ஆஃபிஸில் கலீக். அன்பரசன். 

லஞ்ச் சாப்பிடும் போது அன்பரசன் கர்சிஃபை எடுத்து தன் மூக்கில் வைத்துக் கொண்டு, சைவம் சாப்பிடும் ஒருவரைப் பார்த்து சொல்வது
" ஏங்க அந்தாள எந்திரிச்சு அடுத்த ரூமுள போய் ஒக்காரச்சொல்லுங்கங்க. தயிர் சாத நாத்தம் ஒமட்டிக்கிட்டு வருது. யோவ் ஏய்யா சித்ரவத பண்ற.. போய்யா அடுத்த ரூமுக்கு." 

எங்காவது ஆஃபிஸ் பார்ட்டிக்கு ரெஸ்ட்ரெண்ட் போனால் கூட பேரரிடம் சைவ மனிதரை காட்டி "இந்தாளுக்கு பக்கத்திலே எங்கயாவது சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி கொண்டாந்து கொடுங்க. என்னாது வெஜிடபிள் ரைஸ் போதுமா.. 
யோவ் நீ நாலு டேபிள் தள்ளி போய் ஒக்காந்துக்க. என் கண்ணு முன்னாடி ஒக்காந்துடாத. எனக்கு வாந்தி வந்துடும்" 

தயிர் சாதமுண்பவரிடம் அன்பரசன் செய்வது, அசைவம் சாப்பிடுபவர்களை பார்த்து முகம் சுளித்து எப்போதும் அருவருப்பவர்களுக்கெதிரான 
shock treatment. எள்ளல். பகடி.

...

மீள்

Feb 13, 2024

ராஜநாயஹம் பற்றி எஸ்.ரா

எஸ். ராமகிருஷ்ணன்:


பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். 

அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை."

- எஸ்.ராமகிருஷ்ணன்
www.sramakrishnan.com

2009 post 


சினிமா எனும் பூதம் 116 வது நிகழ்ச்சி - கீதப்ரியன்

Geethappriyan Vasudevan
கீதப்ரியன்:

'முரசு டிவி'யில்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
காலை எட்டரை மணிக்கு                                                             
எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் 
அவர்கள் 'சினிமா எனும் பூதம்' 
தொடரில் திரை ஆளுமைகள் பற்றி தனித்துவமான பாணியில்  பல சுவாரஸ்யான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

116 ஆவது தொடரை சமீபத்தில் நிறைவு செய்திருக்கிறார்,

116 ஆவது தொடரில்  இயக்குநர் 'பசி' துரை  பற்றி பேசியிருக்கிறார், அதற்கு முந்தைய 115 ஆவது தொடரில்  இயக்குநர் I.V. சசி  பற்றி பேசியிருக்கிறார், 
மிகப்பெரிய சாதனை இது, வாய்ப்பிருப்போர் இந்த தொடரை குறித்து வைத்துக் கொண்டு முரசு தொலைக்காட்சியில் பாருங்கள், யூ ட்யூபில் கலைஞர் தொலைக்காட்சி subscribe செய்து  பதிவு செய்த நிகழ்ச்சிகளைப் பாருங்கள்,like ,share செய்யுங்கள், ஒவ்வொரு தொடருக்கும் அவர் தரும் உழைப்பும் அற்பணிப்பும் அளப்பரியது.

இனிய நல்வாழ்த்துகள் சார் 
R.p. Rajanayahem 

Cinema is the most beautiful fraud தொடர்
https://youtu.be/G-94H9JL6Kw?si=cXpAHAlIH6zhDC31

நடிகை ஸ்ரீவித்யா பற்றிய தொடர்
https://youtu.be/v9EggfLohuY?si=EJlle_OEVUBlmpiX

Feb 12, 2024

Please Phillips, go there and GREET

https://m.facebook.com/story.php?story_fbid=3667054020174704&id=100006104256328&mibextid=Nif5oz

Ethics and etiquettes... manners
- R.P. ராஜநாயஹம் 

PLEASE STAY OUT OF MY WAY,
 Mr PHILIPS.

தயவு செய்து தரக்குறைவாக நடந்து கொள்ள வேண்டாம், மிஸ்டர் பிலிப்ஸ்.
கண்ணியமான என்னை கோபப்படுத்த வேண்டாம்.

Gentleman, You may please go there and GREET.
என்னிடம் ஏன் உங்கள் அடாவடித்தனம்.

Philips..It's my kind request.. 
Please do not get on nerves. 
Humbly, I beg you to leave me. 
Go away. Please stay out of my way

Picture: Sakthi Saravanan
https://www.facebook.com/share/p/asZgUBgQC9kLavgV/?mibextid=2JQ9oc
Sakthi Saravanan : அங்குட்டு போடா :)௹),,<**ௐ!<~௳<~\_~>ௐ௳

"வேணாம் பிலிப்சு"  
திண்டுக்கல் சலம்பல் 

 இந்த சலம்பல்ல 'வேணாம் பிலிப்சு' என்று எச்சரிக்கை விடுத்து கண்ணியம் காக்க முயலும் சல்லி பிரபலமானாரா?
 இல்லையா? 

பிலிப்சு பெர்ஃபாமன்ஸுக்கு
 சற்றும் குறைவில்லாத
 ' ஜம்பம் கூடிய சவடால்'
 அந்த கொம்பு தாழன் செய்திருக்கிறார். 

பிலிப்சு ஏணின்னா இவரு நோணின்னு,
 பிலிப்சு 'சவால்' னா இந்தாளு 'குவால்' னு வசனமெல்லாம் என்னா டயலாக்கா உட்றுக்காரு.

மதுர சலம்பல்னா 
ரெண்டுல ஒரு தாழன் 'சத்த்த்'னு 
ஒடனே அடிச்சிருவான்.
'மொத அடி நம்ம அடியா  தான்டா இருக்கனும்'

இது கொஞ்சம் மதுர கலந்த திண்டுக்கல் அலப்பறை.

பிலிப்சுக்கு எதிர் சவால் விடும்
அந்த சவடால் பேர்வழிக்கும்
முழு மார்க் கொடுக்கனும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2270413079838812&id=100006104256328

Feb 11, 2024

பசி நாராயணன் ரோல் இந்தியில் அம்ஜத் கான்

116th Episode of R.P. Rajanayahem 

'பசி' நாராயணன் என்றே பெயர் பெற்ற நாராயணன் தமிழில் செய்த ரோலை
 இந்தி Pet Pyaar aur Pop
படத்தில் நடித்தவர்
அம்ஜத் கான்.
18.02.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு
முரசு டிவியில்
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' தொடரில் 
இடம் பெறுபவர்

இயக்குநர் துரை

116வது நிகழ்ச்சி

Feb 10, 2024

Invitation Rejected


ஆஸ்திரேலியா.

ஞாயிற்றுக்கிழமை.
அன்புக்குரிய சஹிருதயர்
வழக்கம் போல் சர்ச் போகிறார்.
Foreign Church.

ஏசு அவருக்கு காட்சி தருகிறார். என்னவாம்?
ஏசப்பா வாய் திறந்து கட்டளையிட்டாராம் : "ராஜநாயஹத்தை என்னிடம் வரச்சொல். என் அழைப்பை தெரியப்படுத்து "

ஆஸ்திரேலிய அன்பர் தகவல் 
மொபைல் ஃபோன் மூலம் 
இந்தியா வருகிறது.

ராஜநாயஹம் தீர்க்கமான 
தெளிவான பதில் : 
" ம்ஹூம். மாட்டேன். போ."

Feb 9, 2024

நடமாடும் கூகுள் ஆண்டவர் R.P. ராஜநாயஹம்



Aanthai Kumar :

இந்த டைப்பிலான ரிமைண்டர் ரிப்போர்ட் உங்களைத் தவிர யாருக்கும் வராது சார்.. ஹேட்ஸ் ஆஃப்👌

இதான் ஸ்பெஷாலிட்டி. யாரு கிட்ட என்ன பேசனும்னு/ என்ன பேசினோமுன்னு நினைவு கூறும் நடமாடும் கூகுளாண்டவர் R.P. ராஜநாயஹம்  சார்வாளுக்கு 
ராயல் சல்யூட்

Feb 8, 2024

115, 116 Episodes I. V. சசி - 'பசி' துரை


115, 116th Episode


இயக்குநர் I.V. சசி


இயக்குநர் 'பசி' துரை 

முரசு டிவியில்

11.02. 2024 
18.02. 2024
ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு 

R.P. ராஜநாயஹம்
"சினிமா எனும் பூதம்" தொடரில்

Feb 7, 2024

சைதை துரைசாமி மகன்

சைதை துரைசாமி மகன்

ஞாயிற்றுக்கிழமை. தேதியும் 6ந்தேதி.மாதமும் 6வது மாதம்.தேதி மாதம் வருடம் கூட்டிப்பார்த்தாலும்   
கூட்டு எண் 6 தான். 06-06-2010.

காலையில் வீட்டிற்கு மீன் வாங்கிக்கொடுத்து விட்டு இண்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மொபைல் சிணுங்கியது.இங்கே  விஐபி க்ரூப்ஸ் மாக்ஸ்வெல் மேனேஜராயிருக்கும் என் கசின் போன் செய்தார். ’வசுந்தராவுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்.உடனே குடும்பத்தோடு கிளம்பி வாருங்கள். உங்க அண்ணனும் வந்திருக்கிறார்.’

 உடனே என் பெரியம்மா மகன் முன்னாள் திமுக ராஜ்யசபா உறுப்பினரான வக்கீல்.R.சண்முக சுந்தரமும் பேசினார்.’துரை,உடனே கிளம்பி வா’

திடீர் என்று போக வேண்டி நேர்ந்ததால்  நான் மட்டும் கிளம்பினேன்.ஸ்கூட்டரில் வேண்டாம். பஸ்.

அவினாசி ரோடு அணைப்புதூரை ஒட்டி பழங்கரை அருகில் கசின் செல்வராஜ் வீடு. அதற்கு எதிரே உள்ள மண்டபம்( கார்மெண்ட்ஸ் ஃபேர் நடக்கும் இடம்). அதில் தான் அன்று மாலை நேர நிச்சயதார்த்தம். இப்போது வீட்டில் உறவினர்களுக்கு விருந்து.

அணைப்புதூரில் இறங்கி நடந்து  உறவினர் வீட்டுக்குச் சென்றேன். செல்வராஜ் தம்பதிகள் வரவேற்றார்கள்.என் அண்ணன் சண்முகசுந்தரமும் அண்ணியும் முகம் மலர:’துரை வா,வா’

சண்முகசுந்தரமும் செல்வராஜும் சகலைபாடிகள்.அண்ணியின் உடன் பிறந்த தங்கை தான் செல்வராஜின் மனைவியார். 
செல்வராஜ் தம்பதிக்கு 
ஒரு மகளும் ஒரு மகனும். 
மகளுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம்.

கணபதியும் நானும் கல்லூரிகாலத்தில் பார்த்துக்கொண்டது.அதன் பின் இன்று தான் சந்திக்கிறோம். கணபதியும் என் அண்ணனின் மற்றொரு சகலைபாடி தான்.  ‘அந்தக்காலத்தில் அமெரிக்கன் கல்லூரியில் கேபி என்று ’அண்ணாந்து தான்’ துரையைப் பார்ப்போம்!’ என்று என்னைப்பற்றி வியந்து சொல்கிறார். இன்று இந்த கணபதி உயிருடன் இல்லை.

உறவினர்கள் 
மனைவியை, மகன்களை ஏன் அழைத்து வரவில்லை என கேட்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். 
சைதை துரை சாமி தான் மாப்பிள்ளையின் தகப்பனார். அப்போது அவர் சென்னை மேயர் கிடையாது.

மாப்பிள்ளை வீட்டாருடன் அதிமுக எம்.பி.செம்மலையின் மனைவியாரும் இருந்தார். 

சிறிது நேரத்தில் சைதை துரைசாமி 
தன் நண்பர்களோடு வந்தார். மாப்பிள்ளையின் நண்பர் மிர்ச்சி சிவா. ’தமிழ்படம்’ ஹீரோ.

சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் பற்றி சின்னபையன் போல பரவசமாக பேசினார்.சைதை துரைசாமியிடம் நான் ‘பால் சாப்பிடக்கூடாது என்று நீங்கள் வலியுறுத்துவீர்களே’ என்றேன். 

அவர் முகம் பிரகாசமாகியது. உடனே சண்முக சுந்தரம் ‘எங்க துரை கிட்ட இதான் ஸ்பெஷாலிட்டி. யாரு கிட்ட என்ன பேசனும்னு இவனுக்குத்தான் தெரியும்’என்று சைதை துரை சாமியிடம் சொன்னார்.

(சென்ற சட்டசபை தேர்தலில் 
கலைஞர் கருணாநிதி, 
தளபதி மு.க.ஸ்டாலின் இருவரும் தொகுதிகளில் நாமினேஷன் ஃபைல் செய்த போது, கூட இருந்தவர் சண்முகசுந்தரம் தான்.
ஸ்டாலினை எதிர்த்து நின்றவர் 
சைதை துரைசாமி)

சைதை பால்,தயிர்,வெண்ணை இவற்றால் வரும் நோய்க்கூறுகள் பற்றி உற்சாகமாகச் சொன்னார்.சைதை துரை சாமி நல்ல Conversationalist.சைதை துரைசாமி இருக்கும் இடத்தில் சைதை துரைசாமி தான் பேசவேண்டும் என்ற சீரிய நோக்கு கொண்டவர்.

நடிகர் சிவாவிடம் என் மகன் கீர்த்தி ’தமிழ் படம்’ காட்சிகளின் ரசிகன்.அந்தப் படக்காட்சிகள் டி.வி.யில் வரும்போது ‘இந்த சீனைப் பாருப்பா’ என்று என்னை வற்புறுத்துவான் என்பதை ச்சொன்னேன்.

’கீர்த்தி இப்போ இங்கே வருவாரா?’ என்று சிவா கேட்டார். சிறிது நேரத்தில்
” கீர்த்தி சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வருவாரா?”என்று மீண்டும் சிவா கேட்டார்.
நான்  கீர்த்திக்கு போன் செய்து “ இங்கே ’தமிழ் படம்’ ஹீரோ சிவா  வந்திருக்கிறார். உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறார்.பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி வாயேன்’ என்றேன்.அவன் கொஞ்சமும் யோசிக்காமல், ஆச்சரியப்படாமல்,அமைதியாக ’ போப்பா!நான் வரல.’ என்று சொல்லி விட்டான்.

இப்படித்தான் கீர்த்தி. ஸ்திதப்ரக்ஞை மிக்கவன்.

சிவாவிடம் பேசியதில் பெரிய பின்புலம் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் சினிமாவில் கதாநாயகன் ஆகியவர் என்று தெரிந்தது.அவர் குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் ஸ்னானப்ராப்தி கிடையாது. நான் சொன்னேன்.”சினிமாவில் இப்படி self standing ஆக சாதித்தவர்கள் ரஜினியும்,அஜீத்தும்”

மதிய விருந்து முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் ஹோட்டலுக்கு கிளம்பினார்கள்.

மாலை நிச்சயதார்த்த நிகழ்வு- எதிரே தான் மண்டபம் என்பதால் எல்லோரும் நடந்தே கிளம்பினோம்.

மிக வேகமாக ஒரு கார் வந்தது. நின்றது.காரை ஓட்டியவர் கீழே இறங்கினார். அவர் அஜீத்.

சிரித்த முகத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்தவர்
என்னை தாண்டிப் போனவுடன் நின்று திரும்பி என்னன இரு கரம் கூப்பி வணங்கினார். முதல் வரிசையில் போய் அமர்ந்தார். சைதை துரைசாமியின் மகனுக்கு உற்ற நண்பனாம் அஜீத்.

சைதை துரைசாமியின் ஐ ஏ எஸ் பயிற்சி நிறுவனத்தில் பயின்று வென்ற மாணவர்கள்,மாணவிகள் ஒரே போல உடையணிந்து வந்திருந்தார்கள்.கண்கொள்ளாகாட்சி.
பள்ளிக்குழந்தைகளை ப் பார்த்த பரவசம் ஏற்பட்டது. சைதை பெருமிதத்துடன் அந்த மாசு மருவற்ற மாணவ மாணவியரை ஒவ்வொருவராக அழைத்து “ இவர் ஐ.ஏ.எஸ் பரிட்சையில் 5 வது ராங்க். இந்த பெண் 7 வது ராங்க். இந்த தம்பி 13 வது ராங்க்” என்று அறிமுகம் செய்து வைத்தார்.

மாப்பிள்ளை மேடையேறினார். அங்கே எங்கள் உறவினர்கள் ஆண்களும் பெண்களும் அந்தச்சூழல் குறித்து விஷேச மாற்றம் எதுவுமேயின்றி இயல்பாக இருந்தனர். நான் அஜித்தை நெருங்கி பேசத்தொடங்கினேன். அந்த நேரம் முதல்வரைப் பார்த்து அஜீத் ‘ஐயா, மிரட்டுறாங்கய்யா’ என்று சொல்ல ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிய விஷயம் பற்றி “ You broke the ice. You have done a wise thing,because there is no wisdom like frankness" என்றேன்.

அஜீத் எழுந்து நின்று ”நீங்க உட்காருங்க சார்” என்று என் கையைப் பிடித்து அவரருகில் உட்காரவைத்தார்.

 அஜித்துக்கு மறுபக்கம் தமிழ்படம் சிவா. வீடியோ கேமராக்கள் எங்களை நோக்கி சுழல ஆரம்பித்தன. போட்டோ ஃப்ளாஷ் வேறு. அஜீத்திடம் நான் சொன்னேன். ”மதியம் கூட  சிவாவிடம் உங்களைப்பற்றி குறிப்பிட்டேன்.அப்போது மாலை உங்களை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.” அஜீத் திரும்பி சிவாவிடம் “ நான் வருவது பற்றி சாரிடம் சொல்லவே இல்லையா?” என்றார். சிவா சிரித்தவாறு
‘ இல்ல. அவருக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமே என்று தான் சொல்லவில்லை’ என்றார். 

நான் பெண்ணுக்கு சித்தப்பா என்று அஜீத் கேட்டுத்தெரிந்து கொண்டார். 

‘எனக்கு மிகவும் பிடித்த அஜீத் படங்கள் ‘ஆசை’, ’காதல் கோட்டை’ என்பதைச் சொன்ன போது அவர் நடித்த நல்ல படங்கள் என்று வரிசைப்படுத்தி ’வரலாறு’ படத்தைக்கூட சொல்ல ஆரம்பித்தார்.

அடர்த்தியான தலைமுடி முழுக்க நரை.ஐந்து நாள் ஷேவ் செய்யாத வெள்ளி தாடியுடன் அஜீத்.
எனக்கென்னவோ அஜீத்துக்கு achievement depression தான் இனிமேல் என்று தோன்றுவதைச் சொன்னேன்.
கண் விரித்து ”achievement depression வந்தாச்சு சார் ” என்றார். 

நானும் சினிமாவில் இருந்தவன் என்பதை சிவா அப்போது அஜீத்திடம் சொன்னார்.  ஒரு அரை மணி நேரம் இப்படிப் பேசிக்கொண்டிருந்திருப்போம். நிச்சயதார்த்த விழா ஆரம்பிக்கவே அஜீத் எழுந்து மேடைக்கு சென்று மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நின்றார். நான் பெண் வீட்டாருடன் மேடையில் நின்றேன்.

கணபதி உடனே” துரையும் அஜீத் தும் சேர்ந்து உள்ள புகைப்படம் நாங்க போட்டோகிராபர்களிடம் கேட்டிருக்கோம்!” என்று சிரித்தவாறு என்னைப் பார்த்து உரக்கச்சொன்னார்.

இரவு டின்னர் முடிந்ததும் என் அண்ணன் சண்முகசுந்தரம்,செல்வராஜ்,கணபதி மற்றும் உறவினர் அனைவரிடமும் விடைபெற்றபோது சைதை துரைசாமியிடம்,அஜீத்திடமும்,சிவாவிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அணைப்புதூர் வரை நடந்து வந்து இரண்டு பஸ் மாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.

....

R.P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் நூலில் இருந்து

Feb 4, 2024

ந. சிதம்பர சுப்ரமணியம்

ந. சிதம்பர சுப்பிரமணியம்

சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது.
முகத்தில் அம்மைத்தழும்பு.  ஏழைப்பெண். இவள் பெயர் பார்வதி.
இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம் " என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு: " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயியின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."
மணிக்கொடி எழுத்தாளர் ந.சிதம்பர சுப்பிரமணியம் வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தார்.
 மணிக்கொடி கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் கதை இலாக்காவில் வேலை பார்த்தவர்.
 அடுத்த தலைமுறை அசோகமித்திரனும் கூட கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் இருந்த காலத்தில், அதற்கு பின்னும் அங்கே ஜெமினியிலேயே குமாஸ்தா உத்தியோகம் பார்த்திருக்கிறார் .
எழுத்தாளர் நிறைய சம்பாதிப்பது அபத்தமாக தோன்றலாம். 
ஆடிட்டிங் வேலை பார்த்த ந.சிதம்பர சுப்பிரமணியம் சம்பாதித்தார் என்று தான் சொல்லவேண்டும். 
எழுத்தாளர் சினிமா தியேட்டர் விலைக்கு வாங்கினார் என்றால் அதிசயம் தானே. அதுவும் மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில். ஓடியன் தியேட்டரை ந. சிதம்பர சுப்பிரமணியம் வாங்கினார்.
ஆனால் அவர் ஓடியன் தியேட்டரை வாங்கிய பின் தான் தெரிந்தது. 
அதில் நிறைய வில்லங்கம். ஆமாம். ஏமாந்துவிட்டார். 
அன்றைக்கே ரியல் எஸ்டேட் பிசினஸ் பிராடு வேலைகள் உச்சத்தில் தான் இருந்திருக்கிறது. ந.சிதம்பர சுப்பிரமணியம் அவருடைய ஆயுட்கால சேமிப்பை தொலைத்தது இப்படித்தான்.
அவரே எழுதியது போல
 " மனம் கோட்டை கட்டிக் கொண்டே வரும். ஆனால் காலம் அவைகளை தகர்த்துக் கொண்டே வரும்."

'சக்ரவாகம்' சிறுகதை தொகுப்பும் 'இதய நாதம் ' நாவலும் அவரை நினைவில் வைக்க உதவுகின்றன. 
தி.ஜா வின்' சிவப்பு ரிக் ஷா ' சிறுகதை தொகுப்புக்கு ஒரு நல்ல முன்னுரை எழுதினார்.
1978ல் டெல்லியில் இருந்து திஜா வந்திருந்த போது அசோகமித்திரனுடன் இவரை தேடி தி.நகரில் அலைந்திருக்கிறார். 

சரோஜினி தெருவில் ந.சிதம்பர சுப்ரமணியம் இருப்பதாக தி.ஜானகிராமன் தான் கேள்விப்பட்டதை வைத்து அசோகமித்திரனிடம் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக கதவை தட்ட வேண்டிய நிர்பந்தம். ஆனால் பலிக்கவில்லை. 
அன்றே திஜா டெல்லி திரும்பவேண்டிய சூழல். ரயிலில் ரிசர்வ் செய்த பின் பயணத்தை எப்படி மாற்றமுடியும்? அவரை தேடி அலைந்த பின் திஜா அன்று மோரும் சாதம் சாப்பிட்டார் என்பதை அசோகமித்திரன்  ஞாபகத்தில் வைத்திருந்து எழுதியிருந்தார். 
ஆனால் அப்போது ந.சி. இவர்கள் தேடியலைந்த சரோஜினி தெருவில் குடியிருக்கவில்லை.
 அடுத்த தெருவில் அதாவது மோதிலால் தெருவில் குடியிருந்த விஷயம் அப்புறம் தான் அசோகமித்திரனுக்கு தெரிய வருகிறது. 

இவர்கள் தேடியலைந்ததற்கு அடுத்த வாரம் ந.சிதம்பர சுப்பிரமணியன் இறந்து விட்டார்.

"சுவர்க்கம் நம் முன்பாக இருந்தாலும் அதை நாம் அடைவதில்லை. ஏனென்றால் நம்முடைய முயற்சிகள் அதை நரகமாக்குவதிலேயே கழிந்து விடுகின்றன ."
- ந.சிதம்பர சுப்ரமணியம்.

......

மீள்

ராஜநாயஹம் குறித்து வீரன்மணி பாலமுருகன்

Veeranmani Balamurugan 

வீரன்மணி பாலமுருகன் :

எழுத்தாளரும் கூத்துப்பட்டறையின் மாஸ்டர்களில் ஒருவருமான பன்முக கலைஞர்  R.P. ராஜநாயஹம் அவர்கள் கலைஞர் முரசு தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கி வரும் "சினிமா எனும் பூதம்" தொடர் நூறு அத்தியாயங்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உண்மையில் வியப்பளிக்கிறது. 
பொதுவாக பெரும்பாலான சின்னத்திரை நிகழ்வுகள் சில வாரங்கள் ஒடினாலே சலிப்பு மிகுந்து விடும் அதை தொகுப்பவருக்கும் ஒரு வித ஆயாசம் வந்து விடும். 

ஆனால் நான் முன்பே பல முறை சொன்னது போல் R.P.ராஜநாயஹத்தின் அனுபவ சுனை வற்றுவதே இல்லை. அவருக்கு தீர்ந்து போகாமல் சொல்லிக்கொண்டே இருக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது. 

முதலில் ஒரு பார்வையாளனாக வாசகனாக அவருக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் என் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் உள்ளபடியே மகிழ்கிறேன்.

 அவரின் இணையப்புத்தக பக்கங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் வாசகர்கள் பின் தொடர்கிறார்கள். அதே போல் அவரது பதிவை அஃதே போல் திருடவும் அப்படி திருடி தனது எழுத்துக்குள் எங்காவது சொருகவும் செய்பவர்கள் அநேகம்.

 நான் இந்த முக நூலில் முகம் பதித்த நாள்முதலாய் அவரின் பல்வேறு வகைமையிலான பதிவுகளை விடாது வாசித்து வருகிறேன். நினைவுகளை புதுப்பித்துக்கொள்ளவும் புதிய ஒன்றை ஸ்பரிசிக்கவும் சுவாரஸ்யங்களில் தோய்ந்து எழவும் அவரது எழுத்துக்கள் எனக்கு பயன்படு பொருள்கள் ஆகியிருக்கின்றன. 

பொதுவாக இலக்கியம், தத்துவம், எழுத்து என்று வருகையில் அதற்கான அங்கீகாரமாக தரப்படும் விருதுகள் கவிதை சிறுகதை அல்லது நாவல் எனும் புள்ளியில் நிலைகொண்டு சுருங்கி விடுகிறது உண்மையில் இது ஒரு தேக்கநிலை மட்டுமல்ல அபத்தமும் கூட. 

புனைவு அபுனைவு எனும் போது இங்கு புனைவுகளுக்கே வரவேற்பு அதிகமாக இருக்கிறது இந்த முன் முடிவுகள் எழுத்துலகின் தீர்க்க இயலா இளம்பிள்ளை வாதமாக நிலை பெற்று விட்டது. 

அபுனைவுகள் எனும் தத்ரூபங்களுக்கும் அதை ஆக்குபவனுக்கும் இங்கு எந்த பெருமிதமும் அங்கீகாரமும் இல்லை. மேலை நாடுகளில் அச்சு மற்றும் இணைய ஊடக இலக்கிய செயல்பாடுகளில் 
R. P. ராஜநாயஹம் போன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்; பெரிதான சமூக அந்தஸ்தை பெறுகிறார்கள். 

இந்நிலை இங்கு எப்போது மாறப்போகிறது என்பதற்கு 
எந்த விடையும் இல்லை. 
ஆனால் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத அல்லது அந்த நிலையை கடந்து விட்ட
 R.P. ராஜநாயஹம் தனது வாசகர்களுக்காக எழுதுகிறார் எழுதிக் கொண்டே இருக்கிறார். ஆம் எழுதிச்செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்.

....

https://m.facebook.com/story.php?story_fbid=6377774879011592&id=100003374305971&mibextid=UyTHkb

https://m.facebook.com/story.php?story_fbid=3762008217345950&id=100006104256328&mibextid=UyTHkb