அம்மா வந்தாள் நாவல் முதல் பதிப்பு தீரர் சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ண மூர்த்தியின் வாசகர் வட்ட வெளியீடு.
தி. ஜானகிராமன் இந்த நாவலை சிட்டிக்கும், (கலாசாகரம் ராஜகோபாலின் மனைவி) கல்பகம் ஆகிய இருவருக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார்.
மிக விசேஷமான அம்மா வந்தாள் நாவல்
மிகுந்த சலனத்தை ஏற்படுத்தியது.
தி. ஜானகிராமனின் மூத்த சகோதரர் மிகவும் அதிர்ந்து கோபம் கொண்டார். கரிச்சான் குஞ்சு தரும் தகவல் இது.
மோக முள்ளை பிரமாதமாக புகழ்ந்த
க. நா. சு
அம்மா வந்தாளை உதட்டை பிதுக்கி நிராகரித்தார்.
தி. ஜா. 'கும்பகோணத்தில் உங்களுக்கு ஒரு அலங்காரத்தம்மாளை இப்ப காட்டட்டுமா?' என்று தன்னை கேட்டதாக
க.நா.சு சொன்னார்.
'இருப்பு அல்ல, காரண இருப்பு தேவை'
- க. நா.சு.
டெல்லி ஆங்கில பத்திரிகை Thought.
அதில் க. நா.சு அம்மா வந்தாளுக்கு எழுதிய விமர்சனத்தின் தலைப்பில் செய்த Sarcasm - 'Janakiraman' s mother'
பத்திரிக்கையில் தொடராக எழுதாததால் முழுமையான நேர்த்தியாக உருக்கொண்ட தனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று மணிக்கொடி சிட்டி குறிப்பிட்டார்.
எல்லா தமிழ் வாசகர்களையும் சென்றடைந்த பெருமைக்குரிய நாவல் அம்மா வந்தாள்.
ஐம்பது வருடமாகிறது.
இன்றும் படிக்கும் போது பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
இந்த அற்புதத்தை நிகழ்த்திய மகத்தான கலைஞன்
தி. ஜானகிராமன்.
'அப்பாவும் காசிக்கு வருவாளா?' என்று அப்பு அப்பாவியாக கேட்பதற்கு அலங்காரத்தம்மா பதில்
"அப்பாவுக்கு எதுக்குடா காசி? அது ஞானசூரியன். "
அப்பு : அப்பா உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாம்மா
அலங்காரத்தம்மா பதில் : சரி. அதுக்காக நான் எத்தனை நாள் தான் அவரை வதைச்சிண்டே இருக்க முடியுமா?
காசிக்கு தண்டபாணி எதுக்குன்னு அலங்காரம் தெளிவா இருக்கா.
முப்பது வருடங்களுக்கு முன்பு சிட்டி என்னிடம் பேசும் போது செய்த sarcastic comment.
' பாவத்த தொலைக்க காசிக்கு போறா அம்மான்னு அப்பு நம்புறான். அவளோட ஜாயின் பண்ண அடுத்த ஸ்டேஷன்ல சிவசு காத்திண்டு இருக்கான்.
பாவம் அப்பு '
Sarcasm!
ஏன் நமக்கு Sarcasm தேவைப்படுகிறது என்பதற்கு ஒரு காரணம் எப்போதோ படித்ததுண்டு.
Because murder charges are expensive.
......
(தி. ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் 28.
ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு.
காலச்சுவடு வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை.
தி. ஜா பிறந்த ஊர் தேவங்குடி தான். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர்.
தஞ்சை ஜில்லா.)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.