"Saturn devouring one of his son"
A horrible painting by
Spanish artist Francisco Goya - popular for his upsetting paintings
இந்த ரோமானிய புராணீக தொன்மங்களை இங்கே ஜோதிட கிரகங்களோடு, சனி, சூரிய வியாழனோடு
சேர்த்து நினைத்துக்குழம்பக் கூடாது.
இந்த ரோமானிய அரக்கன் சேட்டர்ன் அவனுடைய அப்பா சீலஸ் ஆட்சியைக் கவிழ்த்து அரியணையேறியவன்.
இவனுடைய குழந்தைகளில் ஒன்று பின்னால் இவன் தன் தகப்பனுக்கு செய்த அதே துரோகத்தையே செய்யும் என்று எச்சரிக்கப்பட்டதால் தனக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தின்று தீர்த்து விடுவதை வழக்கமாக கொண்டவன்.
சேட்டர்னின் மனைவி ஒப்ஸ். ஒப்ஸ் மூன்றாவது குழந்தையை மட்டும் இவன் கடித்துத் தின்று விடாமல் மறைத்து காப்பாற்றி விடுவாள். அந்த மூன்றாவது குழந்தை ஜூபிட்டர் பின்னால்
தன் தந்தையை கவிழ்த்து சிம்மாசனத்தில் ஏறுகிறான்.
நம்ம கிருஷ்ணன், அவன் மாமன் கம்சனை ஞாபகப்படுத்தும் ரோமானிய, கிரேக்க மித்தாலஜி.
பலராமன் எப்படி கம்சன் கிட்ட இருந்து தப்பிச்சார்னு தி. ஜானகிராமன் 'மரப்பசு'ல
சொல்றார்.
"பலராமன் ஒருத்தர் தான் ரெண்டு பொம்மனாட்டி வயித்திலெ இருந்தார். தேவகி வயித்திலே ஏழு மாசமோ என்னமோ இருந்தாராம். அப்புறம் பகவான் அந்த கர்ப்பத்தை இழுத்து, வசுதேவரோட முதல் பெண்டாட்டி ரோகினி கோகுலத்திலெ, நந்தன் பாதுகாப்பிலே வளர்ந்திண்டிருந்தாளாமே, அவ வயித்திலெ கொண்டு வச்சாராம். "
தன் பிள்ளைக் கறியை
தானே சாப்பிட்டவன் சேட்டர்ன்.
ஓவியர் ஃப்ரான்சிஸ்கோ கோயா இந்த ஓவியத்தை வரைந்து
தன்னுடைய dining roomலயே
மாட்டி வைத்திருந்தார்.
...
மீள்
https://m.facebook.com/story.php?story_fbid=1924972441049546&id=100006104256328&mibextid=UyTHkb
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.