வாக் போய் விட்டு லிஃப்ட்டில் ஏறும் போது
எங்களுடன் வந்த பெண் 11வது மாடியில் இறங்கினார். 14வது மாடியில் இறங்கிய போது வீட்டம்மா சொன்னார்.
' இப்ப நம்மோடு லிஃப்ட்டில் வந்தவர் ப்ரியா பவானி சங்கர்.'
'லிஃப்ட்டிலேயே சொல்லியிருந்தா அவங்க கிட்ட ரெண்டு வார்த்த பேசியிருப்பேனே'
வீட்டம்மா' லிஃப்ட்ல சொல்ல வெக்கமா இருந்துச்சி'
ப்ரியா பவானி சங்கர் நல்ல வாசகர் என்பதால் மதிப்புக்குரியவர்.
2023 பிப்ரவரி ஒன்றாம் தேதி ப்ரியா பவானி சங்கர் Liam's Diner restaurant திறப்பு விழாவிற்கு போயிருந்த போது ப்ரியா பவானி சங்கரிடம் சொன்னேன்.
' உங்களோட லிஃப்ட்ல வந்தோம். என்னோட ஒய்ஃப் ஒங்கள அடையாளம் தெரிஞ்சு கிட்டாங்க. ஒங்க முன்னாடி சொல்ல வெக்கப்பட்டுக்கிட்டு எங்கிட்ட சொல்லல.'
ப்ரியாவே உற்சாகமாக முன் வந்து
' செல்ஃபி நானே எடுக்கிறேன் '
அவரோடும் , பெற்றோர் பவானி சங்கர், தங்கம் பவானி சங்கரோடு செல்ஃபி எடுத்த போது அவருடைய Life Partnerஐ ' நீங்களும் போட்டோவுக்கு வாங்க சார்' என்று நான் வற்புறுத்தினேன். அவர் மறுத்தார்.
ப்ரியா பவானி சங்கர் " இவரும் ஒங்க ஒய்ஃப் மாதிரி ரொம்ப வெக்கப்படுவார்"
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.