Share

Feb 26, 2023

Prof Late Fazlulla Khan' s opinion on R.P. Rajanayahem

Linguistic scholar, Prof. Late Fazlulla Khan's opinion on R.P. Rajanayahem 

"Gabie, 
As a colleague of yours in the 'Marathadi Maharajas' group of the American College, I am very proud that you have successfully swum against the current in life and have made it in your own way.
Even under our tree at college you were a stand out.
There is so much to learn from you."

Feb 24, 2023

Sunset view today

The Sun's graceful kiss to the night.
Every day has the best technic 
to end beautifully.

 Sunset view today from our balcony
 in Mambakkam

பானுமதி, அஞ்சலிதேவி - சினிமா எனும் பூதம் 65, 66 வது நிகழ்ச்சிகளில்

R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்'
முரசு டிவியில்
வருகிற அடுத்தடுத்த 
ஞாயிற்றுக்கிழமைகளில்
26 - 02. 2023 
05 - 03. 2023
காலை எட்டரை மணிக்கு
65, 66 வது நிகழ்ச்சிகளில்
இடம் பெறப்போகும்
பழம்பெரும் நடிகைகள்
பானுமதி,
அஞ்சலிதேவி

...

Feb 23, 2023

தி.ஜானகிராமன் கடிதம்

தி. ஜானகிராமன் எழுதிய ஒரு கடிதம் 

அன்புள்ள பாலகுமாரன், 

நேற்று நீங்கள் அவ்வளவு அந்தரங்க அன்புடன் விசாரித்து, பலவித (எனக்குப் பிடித்த) பொருள்களை வாங்கி வந்தபோது, எனக்கு 
பி. எஸ். ராமையா, இன்னும் மூன்று நாலு பேர் ஞாபகம் வந்தது. 
அவர்கள் மிக்க உற்சாகத்துடனும் திறந்த மகிழ்ச்சியோடும் உங்களைத் தழுவி, நன்றி தெரிவிப்பார்கள். 
எனக்கு இந்த மாதிரி செய்ய தைரியம் வருவதில்லை. காரணம் - வெளியே காட்ட பயந்து. 
பல பேருக்கு " ஒரு வார்த்தை சொல்லணுமே. இதெல்லாம் இவனுக்கு Due என்று எண்ணம் போலிருக்கிறது" என்று தோன்றும்.  தோன்றியிருக்கிறது, சிலருக்கு. 

ஒரு சினிமா டைரக்டர் இருபது வருஷம் முன் என் கதை ஒன்றைப் படம் எடுக்கிறேன் என்று வந்தவர், 
தாம் படமாக்கப் போகிற, ஆக்கிய இரண்டு கதைகளை - அந்தந்த பாவத்திற்கேற்ப, முக பாவ, அங்க அசைவுகளுடனும், அபிநயங்களுடனும் 
சொல்லிக்கொண்டு வந்தார். 
நான் வழக்கம் போல இடித்த புளி போல கேட்டுக் கொண்டிருந்தேன். 
" என்ன இவ்வளவு சொல்றேன். ரீயாக்டே பண்ண  மாட்டேங்கறேளே? " என்று despair உடன் சொன்னார். 

எனக்கு வருத்தமாயிருந்தது.
நான் இப்படி placid ஆகவும் prosaic ஆகவும் இருக்கிறேனே என்று. 
ஆனால் குருடன் எப்படி ராஜ முழி முழிப்பான்? 
நான் அவரிடம் எப்படி என் இயலாமையை விளக்குவது? 

அவர் அப்புறம் என் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார். ஓரளவுக்கு நீங்களும் என் மாதிரி சங்கோசியாக இருப்பதால், என் placidity யைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எனக்கு ஒரு ஆச்வாசம். இது சரியான ஊகம் என்று நினைக்கிறேன். 

தேடி வந்தவர்களுக்குத் திருப்தியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கம். 

நாம் நிறையப் பேசவும் இல்லை. புரிந்து கொள்கிறவர்கள் இப்படித் தான் அதிகமாகப் பேசாமல் திளைப்பார்கள் என்று தோன்றுகிறது. 

சாந்தாவுக்கு சென்னை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டில் எல்லோருக்கும் 
என் அன்பு. 

நமஸ்காரம். 

தி. ஜா


........ 



பாலகுமாரன் : " இந்தக் கடிதம் பற்றி எதுவும் சொல்லி அபிப்ராயம் உருவாக்க விரும்பவில்லை. 
இது மிகவும் ஆழ்ந்த ஸ்நேகமான கடிதம். மேலோட்டமாய் இதில் ஒன்றும் தெரியாது. 
உள்ளே நிறைய பொதிந்திருக்கும், கொழுக்கட்டைப் பூரணமாய். 

மனசும் எழுத்தும் ஒன்றாக இருக்கும் நிலை எல்லோருக்கும் ஏற்படாது.

.......... 

சாரு நிவேதிதா இந்த கடிதம் குறித்து விசாரித்தார். 

" இந்தக் கடிதம் எப்படிக் கிடைத்தது ராஜநாயஹம்?" 

அதற்கு என் பதில் :

முப்பது வருஷம் முந்தி கல்கியில் 'வி. ஐ. பிக்கு வந்த கடிதங்கள்' என்று தொடர்ந்து வாராவாரம் வெளியிட்டு வந்தார்கள். 
அப்பொழுதுதான் இந்த கடிதம் பால குமாரன் குறிப்புடன் வெளியிட்டார்கள். அதை கத்தரித்து நான் 
தி. ஜானகிராமன் நள பாகம் நாவலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

இன்று புத்தகங்களை ஒழுங்கு செய்யும் போது கண்டு பிடித்தேன். 

கடிதத்தில் 21.12.1983. தவறாக அச்சுப்பிழையுடன் வருடம்  1983 என்று பிரசுரமாகியிருந்தது. வருடம் 1981 ஆக இருக்கும். ஏனென்றால் தி. ஜானகிராமன் 1982 நவம்பர் 18ம் தேதி இறந்து விட்டார். இதை அப்போதே நான் அதில் மார்க் செய்து வைத்திருந்தேன்.

.........

எப்போதோ கல்கியில், முப்பது வருஷம் முந்தையதாய் இருக்கும். அதில் படித்த விஷயம். 

தி. ஜானகிராமனை சந்தித்த அனுபவம் பற்றி பாலகுமாரன் எழுதியிருந்தார். 

பாலகுமாரன் : "இன்றைக்கும் அந்த சந்திப்பு பசுமையாக இருக்கிறது. மிக அரிதாகத் தான் இம்மாதிரியான சந்திப்புகள் நிகழ்கின்றன. 

தில்லியிலிருந்து திருவான்மியூருக்கு ஜானகிராமன் குடிபெயர்ந்த நேரம். அவரைப் பார்க்க நானும் 
என் மனைவி சாந்தாவும் போனோம். 

மடியில் வைத்து எழுதுகின்ற மரப்பலகை, பேனா, குறிப்பு நோட்டு, ஹார்லிக்ஸ் பாட்டில், அன்று அரைத்த காப்பிப்பொடி, கும்பகோணம் வெற்றிலை,  வறுத்த சீவல், பழங்கள் என்று வாங்கிப் போனோம். நமஸ்கரித்தோம். 

ரொம்ப மேலோட்டமான விசாரிப்புகள், மிகச் சுருக்கமாய், அவர் எழுத்து என்னை எப்படி பாதித்தது என்று சொன்னேன். சாந்தாவும் சொன்னாள். 

நான் சினிமாவில் ஆர்வம் காட்டுவது பற்றி எதிர்ப்பாக சொல்லாது, லேசாக கவலைப்பட்டார். அவ்வளவு தான் பேச்சு. 

பிறகு வெறுமே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எதுவும் பேசாமல் வெறுமே அருகிருக்கும் நட்பு எல்லாரிடமும் ஏற்படுவதில்லை. 
அவர் பேசாதது எனக்கோ சாந்தாவுக்கோ புதிதாயில்லை. 

தி. ஜானகிராமன் கண்களால் ஊடுருவார். ஆழ்ந்து மனிதர்களைப் பார்ப்பார். ஓரக்கண் பார்வையோ, பார்த்துப் பார்த்து கண்களை விலக்குவதோயில்லை. 

பிறிகொரு சமயம் இப்படி ஆழ்ந்து பார்க்கின்ற பழக்கம் எனக்கு வந்தபோது,  கண்களின் வழியே மனதைப் படிக்கிற இயல்பு ஏற்பட்ட போது, தி. ஜானகிராமன் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. "

Feb 21, 2023

எழுதித்தீருமா?

Coimbatore Y. M.C.A யில் நான் மூன்று மாதம் தங்கியிருந்த அறை மாடியில் இப்போது office என்ற அறிவிப்புடன் பூட்டிக்கிடக்கிறது. வலது பக்கத்தில் இரண்டாவது அறை.

இங்கிருந்து Presentation convent, Head Post office தாண்டி இடது பக்கம் திரும்பி நடந்தால் பாலம் அருகே Motor Mail Service office மாடியில் தான் postal dept training.
Y.M.C.Aயிலிருந்து  Walkable distance. 

மறக்க முடியுமா? எத்தனை சம்பவங்கள்?எழுதித் தீருமா?

'நினைவுகளே, நினைவுகளே நின்று போக மாட்டீரோ?'

நினைவுகளே, நினைவுகளே 
நின்று போக மாட்டீரோ?

இந்த Nostalgia, Reminiscence என்பதெல்லாம் Cliche..

Pictures
1. Coimbatore Y.M.C.A hostel
2. Postal Motor Services

Feb 14, 2023

விசித்திர விதூஷகம்

விசித்திர விதூஷகம்

கடைசி காலத்தில்
 இப்படி  அணுகுண்டு போட்டு 
கதி கலங்க செய்கிறார்.
'உயிரோட தான் இருக்காரு பிரபாகரன்'

இப்படி கயிறு போட்டுட்டா அலக்கழிச்சிக்கிட்டே இருக்கலாமே.

இந்த மாதிரி கொளுத்திப் போட்டா
சரம் பட்டாசு வெடிச்சிக்கிட்டே ..

'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரோட இருக்காரு'ன்னு  
கொள்ள காலம் கொள்ள பேரு சொல்லி கெட சனம் 'உம்' னு உச்சுக்கொட்டலயா?
ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி இந்த
 பெரு நம்பிக்கையின் அஸ்திவாரத்தில் இயங்கியது.

History repeats itself.


காமராஜருக்கு பக்கபலமாக இருந்து ஸ்தாபன காங்கிரஸை வளர்க்க பாடுபட்டவர்
பழ. நெடுமாறன்.

இவருடைய தலைவர் ஈ.வி.கே சம்பத் 1971 தேர்தலில் கோபிச்செட்டி பாளையம்பாராளுமன்ற தொகுதியில் தோற்ற பின் ஸ்தாபன காங்கிரஸில் இருந்து விலகி இந்திரா காங்கிரஸில் இணைந்த பின்னும் காமராஜருக்கு பக்க பலமாக நெடுமாறன் நின்றவர்.
பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்கு விசுவாசமாய் நின்றவர்.
ஜனதா கட்சி ஆட்சியில் முன்பு இந்திராகாந்தியை திமுக காரர்கள் மதுரையில் தாக்கிய போது அவர் மீது அடி படாமல் அவ்வளவு அடிகளையும், தானே வாங்கி காப்பாற்றிய போது பழ. நெடுமாறனுக்கு மண்டை உடைந்தது.
"கண்ணகியை அடித்து விட்டீர்கள்,மதுரையே பற்றி எரியபோகிறது! " என்று ஆவேசப்பட்டவர்.

காங்கிரஸ் அட்ஹாக் கமிட்டியில் இந்திரா காந்தி "My son who saved my life!" என்று பெருமிதத்துடன், நெகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தினார்.
நெடுமாறனை தன் மூத்த மகனாகவே இந்திரா கருதினார்.
அந்த இந்திரா காங்கிரஸையும் விட்டு வெளியேறி தனியாக கட்சி நடத்தினார்.
இந்திராகாந்தியின் மகனை கொன்றவர்களை நெடுமாறன் இன்று ஆதரிப்பது ஒரு வரலாற்று முரண்.
பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே.சம்பத், காமராஜர், இந்திராகாந்தி என்று பல தலைமையை கண்ட ஒரு அரசியல்வாதி இலங்கை விடுதலைப்புலிகள்
தலைவன் பிரபாகரனின் ஊதுகுழல் ஆன விசித்திரம்.
..
1980ல் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மதுரையின் மற்றொரு தொகுதியில் எம்.ஜி.ஆர் சப்போர்ட்டில் இவர் ஜெயித்தார்.
நெடுமாறனுக்கு திக்கு வாய் ஒரு பலகீனம்.
அதை கவனமாக மேடையில் பேசும்போது மறைக்க முயல்வார். பேச்சும் சுவாரசியமாக, கூட்டத்தை கவர்ந்திழுக்கும்படியெல்லாம் இருக்காது.
"அன்றைய தினம் மகாகவி பாரதி அவர்கள் பாடல்கள் எழுதியபோது இவையெல்லாம் க...அ..விதைகளா என்று கேட்டார்கள். ஆனால் இன்று ......... "
தீப்பொறி ஆறுமுகத்திற்கு நெடுமாறன் என்றாலே இந்த திக்கு வாய் விஷயம் தான் அவல்.
" இந்த கொன்னவாயன் நெடுமாறன் சட்ட சபையில பேசுறாய்யா.. ' கே..எ..ஏரளாவுக்கு எ..எ..எரும மாட்டைக்கடத்துறாங்கெ..'.. அட எரும மாட்டுப்பயலெ.. எனக்கு ஒரு ஆசை.
இந்த கொன்னவாயன் நெடுமாறனுக்கும் மென்டல் பய ரஜினிகாந்துக்கும் பேச்சுப்போட்டி வக்கனும். எவன் ஜெயிக்கிறான்னு பாக்கனும்."
தமிழகத்தின் முதல் "மாவீரன்" நெடுமாறன் தான் தெரியுமா?
மாவீரன் தாமரைக்கனி..... மாவீரன் மு.க. அழகிரி......
இன்று இன்னும் அந்த பட்டம் ஒரு நூறு பேர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்....
அண்ணாமலை பல்கலை கழகத்தில் நெடுமாறன் படிக்கும் போது
ஒரு போராட்டத்தின் போது சில மாணவர்கள் ஒரு மிகப் பெரிய பேரழிவை ரசாயண கூடத்தில் நிகழ்த்த முயன்ற போது நெடுமாறன் தான் தடுத்திருக்கிறார்.
அப்போது அங்கே மாணவராய் இருந்த ந.முத்துசாமி இந்த தகவலை என்னிடம் சொன்னார். முத்துசாமியின் மாணவ நண்பர் கஜராஜ் சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் தம்பி. கஜராஜ் அற்பாயுளில் மறைந்தவர்.
கண்ணதாசன் இந்த மதுரை நெடுமாறன் பற்றி மிக பிரமாதமாக தன் சுயசரிதை வன வாசத்தில் எழுதியிருக்கிறார்.
திமுகவை விட்டு ஐம்பத்தெட்டு வருடங்களுக்கு முன் சம்பத்தோடு வெளியேறி,
'திராவிட இயக்கத்தின் இரும்புமனிதர்' மதுரை முத்துவுக்கு எதிராக தைரியமாக அரசியல் செய்தவர் தான் நெடுமாறன்.
அப்போது தான் மதுரை மக்களுக்கு இவர் மாவீரன் ஆனார்.
மதுரை முத்துவின் கடைசி காலத்தில்
'இலங்கைப் பிரச்னை' அவரை நெடுமாறனுடன் இணைந்து ஒரே மேடையில் அமர வைத்தது.
இலங்கைப் பிரச்னையே முழுமையாக இவரை ஆக்கிரமித்து விட்டது.

வீரப்பனிடம் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை 
மீட்டு அழைத்து வந்தவர் நெடுமாறன்.

என்னுடைய ஆங்கில பேராசிரியர்      R. நெடுமாறன்.
 பல தடவை பழ. நெடுமாறனை கைது செய்ய வேண்டி வரும்போதெல்லாம் போலீசார் குழப்பத்தில்  பேராசிரியர் நெடுமாறன் வீட்டு கதவை தட்டியிருக்கிறார்கள்.

பிரபலமான விவேகானந்தர் காலண்டர் 
பழ. நெடுமாறனுடைய
 குடும்ப சொத்து.

ஜெயலலிதா தோழி சசிகலா கணவர் நடராஜனுக்கு நெருக்கமான சகா நெடுமாறன்.
.....

Feb 5, 2023

வீடு மாற்றி, மாற்றி..

2020 ஜனவரி 19ம் தேதி
புக்ஃபேர்ல கோணங்கிட்ட
 'வீடு மாத்த வேண்டிருக்கு. 
தாம்பரத்துக்கு போப்போறேன்'னேன். 

'  மாறிக்கிட்டே இரு. ஒரே எடத்துல இருக்காத'ன்னான் 
அந்த நாடோடி மன்னன்.

தாம்பரத்தில இருந்து மாறி பெரும்பாக்கம். 
பெரும்பாக்கத்தில இருந்து மாறி
2022,ஜூன் 3ம் தேதி முதல்
இப்ப மாம்பாக்கம்..

https://m.facebook.com/story.php?story_fbid=2634094700137313&id=100006104256328

..........

'சினிமா எனும் பூதம்' காணொளி தொடர்

R.P. ராஜநாயஹம்
 'சினிமா எனும் பூதம்' 
முரசு டிவி தொடர் காணொளிகள்

Geethappriyan Karthikeyan Vasudevan :
மிகவும் அருமை சார்,நீங்கள் உரையாடும் இந்த நிகழ்ச்சி  காணொளிகள் அர்த்தம் மிகுந்தவை

கோ.மகேசன் மகேஷ் :
மிக அருமையான தொடர் அது. கேள்விப்படாத பல புதிய தகவல்கள். நாம் ரசிக்கும் ஆளுமைகளை இன்னொரு கோணத்தில் மேலும் ரசிக்கவும், அல்லது யோசிக்கவும் வைக்கும் உங்கள் தகவல்கள் சிறப்பு

Rafi Amr : வாழ்த்துக்கள் சார். தங்களின் சாதனையை உலகறிய வேண்டும்

.....

முரசு டிவியில் 

ஒவ்வொரு வாரமும்
ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு

R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்' காணொளி தொடர்

Feb 3, 2023

மட்டன்னா மட்டும் மட்டமா?

சென்னையில் வெளிய கிளம்புனா,
பல பெரிய அசைவ உணவகங்களில் சாப்பிடப் போனா 
சிக்கன் இருக்கு,       
  ஃபிஷ் இருக்கு,
 மட்டன் கிடையாது.
போற எடங்கள்ள அவசரத்துக்கு மட்டன் அயிட்டம் சாப்பிட கெடக்காது.

சின்ன கடைகள்ள நான் வெஜ்னாலே
சிக்கன் தான்.

ஏன்?

சால்ஜாப்பு பதில்கள்

இன்னக்கி மட்டன் கிடையாது 

மட்டன் ஞாயித்துக்கிழமை தான்.

ஞாயிற்றுக்கிழமை போனாலும் பதில் 
' இன்னக்கி மட்டன் இல்ல'

When you don't have mutton items to serve, how can you say it's a non veg restaurant?

இங்கே மாம்பாக்கத்தில மட்டன் உள்ள உணவகம் தேடித்தேடி,
 ஒரு வருஷத்தில் கண்டிகைல முனியாண்டி விலாஸ் கண்டு பிடிச்சேன்.
மூளை, தலைக்கறி, நல்லியெலும்பு,
நெஞ்சிக்கறி எல்லாம் அங்க கெடக்கிது. 

அசைவம் எப்படி உணவுப்பழக்கமோ, அப்படி ஆட்டுக்கறி சாப்பிட்டறதும் முக்கிய அசைவ உணவுப் பழக்கம் தான்.

மட்டன்னா மட்டும் மட்டமா?

பன்னீர் செல்வன் இன்று ராஜநாயஹம் பற்றி

R..P. ராஜநாயஹம் பற்றி 
இன்று
பன்னீர் செல்வன் குழந்தைவேலு 

"தங்களின் எழுத்து அடிமையாகவே ஆக்கி விட்டது. ஆச்சரிய படுத்துகிறது."

Pannir Selvan Kulandaivelu K

Trichy Advocate

Trichy Corporation Councillor

Pannirselvan Kulandaivelu K

ராஜநாயஹம்‌ எழுத்து பற்றி ஷண்முகப்ரியன்

இயக்குனரும் எழுத்தாளருமான, ஷண்முகப்பிரியன், உடல்நல குறைவு காரணமாக மறைவு.

2009ம் ஆண்டு ராஜநாயஹம் எழுத்து பற்றி சிலாகித்து ஷண்முகப்ரியன் 
சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.

Oct 26, 2009
ஷண்முகப்ரியன்
R.P.ராஜநாயஹம் பதிவுகள் பற்றி

ஷண்முகப்ரியன் said... எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் உங்கள் பக்கத்தில் வந்து நிலைத்து விட்டேன்,சார்.
என்னைத் தூண்டிய,எனக்குள் எந்த ஆர்வத்தினையும் தூண்டாத இரண்டு எதிர் முனைகளிலும் உங்களது எழுத்தின் பாணி என்னை ஆட்கொண்டது.
 ஆழமில்லாத இடம் எனக் காலை வைத்தால் ஆளையே விழுங்கிவிடும் ஆழத்தோடு ஓடும் நதி போல உங்களை நம்பிப் படிக்க முடியவில்லை!பரவசமான நன்றிகள்,நண்பரே. 
Friday, 23 October, 2009
ஷண்முகப்ரியன்-நான் ஒரு திரைப்பட எழுத்தாளன்! இயக்குனர்! வெற்றிவிழா, சின்னத்தம்பி பெரிய தம்பி, பிரம்மா போன்று 30 படங்களை எழுதியதும், ஒருவர் வாழும் ஆலயம் போன்று நான்கு படங்களை எழுதி இயக்கியதும் எனது அனுபவங்கள்.

http://rprajanayahem.blogspot.com/2009/10/blog-post_26.html?m=0

Feb 2, 2023

'Retire' 'Old'

It’s hard to be excited about getting older.
 The great advantage of getting older is that you let go of certain thing.
The rudest word in dictionary, 'retire'. And 'old' is another one.

ஜமுனா கதாநாயகியாக நடித்த 'தங்கமலை ரகசியம்'.
மோகினியாக சரோஜாதேவி  
தலை காட்டியிருக்கிறார்.
'எங்க வீட்டுப் பிள்ளை'யில் விஜயநிர்மலா படப்பிடிப்பு தளத்தில்
'குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் ' பாடலுக்கு பல்லவிக்கு மட்டும் நடனம் ஆடுவதை காண முடியும்.

சரோஜாதேவி, விஜய நிர்மலா இருவர் பற்றி
முரசு டிவி 'சினிமா எனும் பூதம்' 
One man show வில் பேசியிருக்கிறேன்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜமுனா பற்றி
 R.P. ராஜநாயஹம் பேசியது தான் 
சினிமா எனும் பூதத்தில் ஒளிபரப்பப்பட்டது.

All angels are made of clay.
விஜயநிர்மலா, ஜமுனா இன்று இல்லை. Death is busy everywhere. 
The busiest Death!

"Age cannot wither me,
Nor custom stale my infinite varaity."
- Cleopatra
Shakespeare's Antony and Cleopatra