Share

Jul 30, 2012

Christ never laughed

"Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational,and the property of man is the capacity for laughing.

Library - The place of Forbidden Knowledge!

ஈடன் தோட்டத்து ஆப்பிள்  விலக்கப்பட்ட கனி.

Heaven எப்படிப்பட்ட இடம் என்று தீர்க்கமாய் யோசித்து அது நிச்சயம் ஒரு Library யாகத்தான் இருக்க முடியும் என்றே அனுமானித்தார் போர்ஹே.


பஸோலினி  1964ல் எடுத்த  இத்தாலிய படம் “The Gospel According to St.Matthew" பார்ப்பது ஏதோ கால யந்திரத்தில் ஏறியது போல ஒரு விஷேச அனுபவம். இந்தப் படத்தில் கூட ஜீசஸ் வாய் விட்டு ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.
 பஸோலினி ஏன் மேத்யு எழுதிய சுவிஷேசத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர் கண்ணோட்டத்தில் லூக் எழுதிய சுவிஷேசம் ரொம்ப sentimental. மார்க் எழுதிய சுவிஷேசமோ ரொம்ப vulgar.ஜான் எழுதியது மிகையான mystical சுவிஷேசம்.

Jesus was alright, but his disciples were thick and ordinary.It's them twisting it that ruins it for me.
-John Lennon

Christmas eve eve என்றால்’ டிசம்பர் 23ந்தேதி.’ The day before Christmas Eve.
கிறிஸ்தவ மேலைய நாடுகளில்  எல்லோருமே கிருஸ்துமஸ் ஷாப்பிங் டிசம்பர் 23ந்தேதி தான் செய்வார்கள். டிசம்பர் 24ந்தேதி கடை வீதி ரொம்ப கூட்டமும் நெருக்கடியும் பற்கடிப்புமாய் இருக்கும் என்ற பதற்றம் காரணமாக..அதனால் அந்த23ந்தேதி தான் Busiest shopping day of the year!

’பைபிளுக்கு இதுவரை மிகச் சரியான மொழிபெயர்ப்பு வரவில்லை.’ - டி.என்.ராமச்சந்திரன்.

.......
(”டிசம்பர் 23 அதிக சேல்ஸ் நடக்கும் நாள் என்று எழுதி இருந்தார். அது தவறு என்று அந்த டேடாவை நான்கு வருடம் அனலைஸ் செய்தவன் என்று எனக்கு தெரியும்” என்று கிருஷ்ணமூர்த்தி.எஸ் ப்ளாகில்  Dyno buoy எழுதியிருக்கிறார்.
Dyno buoy அனலைஸ் நியூ ஜெர்சிக்கு மட்டுமானதா? அல்லது ஒட்டுமொத்த U.S., மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சேர்ந்தே தானா?)

Dyno buoy's Reply:" நான் டேடா அனலைஸ் செய்தது உலகின் பெரிய க்ரெடிட் கார்ட் நிறுவனத்திற்காக. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சேர்த்துதான். உலகின் அதிக சேல்ஸ் ஆகும் நாள் க்ருத்துமஸுக்கு முந்தைய சனி. நாங்கள் அனலைஸ் செய்யும் போது வாரயிறுதி முழுவதற்கும் கணக்கிடுவோம்.
அதுதவிர அதிக மக்கள் கடைகளுக்கு போகும் நாள் தாங்ஸ் க்விங் டேக்கு அடுத்து வரும் ப்ளாக் ப்ரைடே. Lot of people usually get confused between most traffic and most sales. During Black Friday we have more people walking into store and not all of them translate to sale. Where as the Saturday before Christmas translates into sales and hence the highest sale world over. இது உலகம் முழுவதற்கும். அமேரிக்காவில் கடத்த பத்தாண்டுகளில் (2010க்கு முன்) மூன்று முறை ப்ளாக் ப்ரைடே சேல்ஸ் க்ருஸ்துமஸுக்கு முந்திய சனிக்கிழமை சேல்ஸை ஓவர்டேக் செய்துள்ளது."

http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-33.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/sasthi-brata-my-god-died-young.html

http://rprajanayahem.blogspot.in/2009/07/ailing-popes-are-not-unusual.html


Jul 29, 2012

கலைந்த ஒப்பனை

மீள் பதிவு     30-11-2008அந்த படத்தில் ஏற்கனவே இரண்டு முறை எனக்கு கதாபாத்திரம் இயக்குனரால் ஒதுக்கப்பட்டு நான் மேக்கப் முடித்து ஷூட்டிங் ஸ்பாட் போனபின் கடைசி நிமிடத்தில் வேறு நிர்பந்தங்களால் வேறு யாராவது ஒருவர் அதற்கு நடிக்கும்படி யானது .
அப்போதே அந்த யூனிட்டில் R P ராஜநாயஹம் நடிப்பதற்கு ஏன் இப்படி ஏதாவது தடை வருகிறது என பலரும் பேசும் நிலை ஆனது.
அதன் பின் ஒரு இன்ஸ்பெக்டர் ரோல் கொஞ்சம் வித்தியாசமான ரோல் . நான்இன்ஸ்பெக்டர் ஆக வந்து கதாநாயக இயக்குனர் , கதாநாயகி , காமெடியன் ஆகியோரிடம் சும்மா சரம் பட்டாசு போல வெடிக்கும் படியாக காட்சி படமாக்கப்பட்டது.


ஷூட்டிங் ஆறு முறை ஒத்திபோடப்பட்டது.
ஒரு முறை கிளம்பும்போதே ஒரு அசோசியட் டைரெக்டர்
  இயக்குனர் கதாநாயகனிடம் " சார்ஒரு நல்ல நடிகர் செய்ய வேண்டிய ரோல் !ராஜநாயஹம் இதை செய்வது கடினம் . ஷூட்டிங் இன்னொரு நாள் ஒரு நல்ல நடிகரை வைத்து செய்தால் என்ன ?" என்று கதாநாயக இயக்குனர் காரில் ஏறும்போது காதை கடித்தான் ."ராஜநாயஹம் செய்வாரு யா ." இயக்குனர் இப்படி சொல்லி காரில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட் போன பின் கூட அன்று நான் காக்கி டிரஸ் போட்டு நடித்து ஒரு ஷாட் எடுத்த பின் கேமரா மேனுக்கு உடம்பு சரியில்லை என்று பேக் அப் ஆனது . அடுத்து ஆறு முறை ஷூட்டிங் கான்செல் ஆனது . ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தால் தடங்கல் ! தடை !

ஒரு வழியா அருணாசலம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் செய்யப்பட்டு நான் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்டது . அன்று ஷூட்டிங் பார்க்க வந்த ஒரு கதாநாயக நடிகரின் தம்பி ( இவர் சினிமாவில் ஸ்ரீதர் ,பாலச்சந்தர் படங்களில் வில்லனாக நடித்தவர் ) என்னிடம் " பிரமாதம் சார் ! நீங்க இப்படி நடிப்பதை மற்றவர் செய்ய முடியாது .ரொம்ப கஷ்டம் .என்னாலே செய்ய முடியாது " என்றார் .

ராஜநாயஹம் சீன் என்றே அதற்கு பெயர் . இன்ஸ்பெக்டர் பேட்ஜ் கூட R.P.Rajanayahemஎன்றே எழுதி காக்கி டிரஸ் இல் குத்தப்பட்டு வசனத்தில் கூட நான்
”இந்த இன்ஸ்பெக்டர் R P ராஜநாயஹம் ”என்று என்னை குறிப்பிட்டு கதாநாயகனிடம் மிரட்டுவேன் . இரண்டு ஜீப்பில் பன்னிரண்டு கான்ஸ்டேபிள் இரண்டு சப் இன்ஸ்பெக்டர் சகிதம் வந்து நான் செய்யும் ரைட் தான் அந்த காட்சி !

எடிட்டிங் செய்ய போனபோது
'ராஜநாயஹம் சீன் 'மூவியாலாவில் போட்டவுடன் மூவியாலா Out of order!
தடை தடங்கல்!R P ராஜநாயஹம் நடிப்பது தான் தடைபட்டது . எடிட்டிங் கில் கூட தடை வருகிறதே ! எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள் .

எடிட்டிங் முடிந்து டப்பிங் பேச டப்பிங் தியேட்டர் வந்து 'ராஜநாயஹம் சீன் ' புரஜக்டரில் மாட்டப்பட்டவுடன் புரஜெக்டர் Out of order!
எல்லோருக்கும் புல்லரித்து விட்டது ! இது தற்செயல் கிடையாது .
 எனக்கு மனம் சோர்ந்து போனது .
 ஒரு வழியாக புரஜெக்டர் சரி செய்து ராஜநாயஹம் சீன் ' ஓடிய போது அசோசியட் இயக்குனர் ரிகார்டிங் அறையிலிருந்து இண்டெர்காமில் தியேட்டரில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படியாக சொன்னான் "ராஜநாயஹம்! நம்ம கதாநாயக இயக்குனருக்கு கூட நேச்சுரல் ஸ்கின் கலர் கிடைக்காது .உங்களுக்கு தான் கிடைச்சிருக்கு . க்ளோஸ் அப் எல்லாம் லட்டு மாதிரி வந்திருக்கு "

அந்த படத்தில் கதாநாயகியின் தந்தை ரோல் பண்ணியவருக்காக டப்பிங் பேச வந்தவர் சொன்னார்." நான் நாற்பத்தைந்து படங்கள் உதவி இயக்குனராய் வேலை பார்த்தவன் . நானூறு தமிழ் படம் பார்த்திருக்கிறேன் . தமிழ்த்திரையில் இன்னைக்கு தான்Young Smart ஆ ஒரு இன்ஸ்பெக்டர் ஐ நான் பார்க்கிறேன். இவர் யாரோ எனக்கு தெரியாது .இவரை முகஸ்துதி செய்ய எனக்கு அவசியமும் இல்லே . ஆனா நான் உணர்ந்ததை சொல்றேன் "

டப்பிங் தியேட்டரில் லஞ்ச் சாப்பிடும் போது என்னிடம் சௌன்ட் எஞ்சினியர் சொன்னார் " சார் . நான் சாதரணமா சீன்ஸ் ரசிப்பதில்லை . லூப் மாற்றி வாய்ஸ் பதிவது மெக்கானிகல் வொர்க் பாருங்க . ஆனா உங்க ரோலையும் சீனையும் ரொம்ப ரசிச்சேன் . நீங்க நடிகர் முரளி மாதிரி Soft romantic rolesசெய்யலாம் சார் "

ஒருபோலீஸ் டெபுடி கமிசனர்(அப்போது சட்டம் ஒழுங்கு )பெயர் பாஸ்கர் (இவர் மூன்று வருடம் முன் இறந்து விட்டார் )கதாநாயக இயக்குநரிடமே சொன்னார் " 'ராஜநாயஹம் இன்ஸ்பெக்டர் ரோல் தான் நல்லாருக்கு . இன்னொரு ரெண்டு இன்ஸ்பெக்டர் சகிக்கலே . மூணு இன்ஸ்பெக்டர் ரோலும் ராஜநாயஹம் செய்திருக்கணும் .ஒரு ஊர்லே மூணு இன்ஸ்பெக்டர் ஆ ? அது எப்படி ?"

ப்ரிவியூவின் போது பலரும் படத்தில் என் காட்சியை பார்த்து விட்டு பாராட்டினார்கள் .கை கொடுத்தார்கள் . அந்த யூனிட்டில் இருந்த ஒரு ஆள் ' இந்த மாதிரி ஒரு ரோல் எனக்கு கொடுக்கமாட்டாரா டைரக்டர் என்று தான் பன்னிரண்டு வருடமாக இவர் கிட்டே வேலை செய்யறேன் " என்றார் .

இயக்குனரே சொன்னார் ' 'ராஜநாயஹம் மாதிரி ஒரு சீன்லே வந்தாலும் நிக்கணும்யா ! படம் பூரா நிறைய பிரேமுலே சிவராமன்,செல்லத்துரை மாதிரி வந்து என்ன புரயோஜனம் ?"

கதாநாயக இயக்குனர் ஏனோ கொஞ்சநாளில்என்னிடம் என் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ' ராஜநாயஹம் ! ரோல் (எதிர்பார்த்த அளவு )நல்லா செய்யலையே ' என்றார் !

கடைசியில் படத்தில் நீளம்-Footage காரணமாக அந்த 'ராஜநாயஹம் சீன் ' நீக்கப்பட்டது .

இந்த விஷயம் தீபாவளி ரிலீஸ் போது பலரும் பார்த்துவிட்டு வந்து என்னிடம் நான் நடித்த காட்சி படத்தில் இல்லை என்று சொன்ன போது தான் எனக்கு தெரிந்தது .

இன்றைக்கு பதினாறு வருடம் ஓடி விட்டது !

படத்தின் பெயர் ராசுக்குட்டி ! அந்த கதாநாயக இயக்குனர் கே .பாக்ய ராஜ் .

இப்போதும் படத்தில் டைட்டில் ஓடும்போது 'ராஜநாயஹம்' என்று பெயர் வரும்!
ஆனால் சீன் இருக்காது !!


நான் எவ்வளவோ வாழ்க்கையில் இழந்திருக்கிறேன் . ஆனால் இப்போதும் ஏதேனும் ஓர் சேனலில் அந்த படம் ஓடும்போது மனத்தில் ஒரு வேதனையும் தன்னிரக்கமும் வர தான் செய்கிறது !

Everything for me becomes Allegory .

- Baudelaire


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.htmlJul 28, 2012

Illegetimate Child

மீள் பதிவு  28-12-2009


'ரஷிய கம்யூனிசம்' என்பது கார்ல் மார்க்சுக்கு பிறந்த illegetimate child என்று அந்நாளில் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் கிளெமென்ட் ஆட்லீ தாக்கினார்.

பழைய ஹாலிவுட் படம் A man for All Seasons.” இதில் ஒரு Witty dialogue.
“Every second bastard born is fathered by a priest.”

தேவ குரு என்ற பிரகஸ்பதி தன் சகோதரன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டதன் மூலம் பிறந்தவர் தான் பரத்வாஜ முனிவர். துரோணரின் மூதாதை பரத்வாஜ முனிவர்.

தாஸ்தயேவ்ஸ்கி யின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இந்த சகோதரர்களின் அப்பா பியோதருக்கு ஒரு illegetimate sonஉண்டு. பியோதரிடம் சமையல் வேலை செய்கிற வேலைக்காரனாக இருப்பான் அந்த முறை தவறிப் பிறந்த மகன் பாவல் ஸ்மார்டியாகோவ் .

சமீபத்தில் ஆந்திர playboy கவர்னர் 'என்.டி. திவாரியின்illegetimate child நான் ' என 29வயது டெல்லி லாயர் ஒருவர் தன்னைப் பற்றி கூறினார். அவர் பெயர் ரோஹித். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். பத்து வருடம் முன் மேஜர் ஆன உடனே வழக்கு தொடராமல் இப்போது தாமதமாக தொடரப்பட்ட வழக்கு என நீதிமன்றத்தில் ரோஹித் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஒரு இளைஞன் ' ஒரு மாணவி என் காதலி ' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தான். அந்த இளைஞனின் பெயர் கூட ரோஹித் தான் ! அந்தப் படம் வெளி வரவே இல்லை. ஆனால் அவன் வேறு ஒரு விதமாக பிரபலமானான். " ஜெமினி கணேசன் என் தந்தை. என் தாயார் லண்டனில் ஒரு டாக்டர். அவருடன் ஜெமினி கணேசனுக்கு ஏற்பட்ட காதலில் நான் பிறந்தவன்.ஜெமினி கைவிட்டதால் என் தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு ஆளானார் " என வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த
' தாய்' பத்திரிகையில் பேட்டி கொடுத்தான். ஜெமினி இதை"அப்பட்டமான பொய்.நான் அவனில்லை " என வன்மையாக மறுத்தார். உடனே அந்த இளைஞன் " சிங்கப்பூரில் எனக்கு நிறைய சொத்து இருக்கிறது. நான் சொத்துக்காக ஜெமினியின் மகன் என பொய் சொல்லவில்லை.என் நண்பர்களிடம் என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள். Rohit is a gemஎன்று சொல்வார்கள். நான் ஜெமினிக்கு பிறந்தவன் என்பது உண்மை " என்று வலியுறுத்தி மீண்டும் சொன்னான். ஏனோ அதன் பிறகு அந்த விஷயம் பற்றி வேறு எந்த செய்தியும் வெளிவரவே இல்லை.

அன்றைக்கு ஜெமினி வாழ்வில் ஒரு ரோஹித். இன்றைக்கு திவாரி வாழ்வில் வேறொரு ரோஹித்! பெயர் ஒற்றுமை ஒரு coincidence!


நாற்பது வருடங்களுக்கு முன் ' சாவன் பாதன் 'இந்தி படத்தில் நடித்த ரேகா பேட்டி கொடுத்தார். " என் தந்தை பிரபல தமிழ் நடிகர். "
இதில் பெரிய ரகசியம் ஏதும் இல்லை. சினிமாப் பத்திரிகை நிருபர் ஒருவரிடம் உடனே ஜெமினி கணேசன் நாற்காலியை திருப்பிப்போட்டு உட்கார்ந்து " ஆமாம் பிரதர்! புஷ்பவல்லி யும் நானும் காதலித்து ஒன்றாக வாழ்ந்த போது பிறந்தவள் தான் ரேகா! நாங்கள் டைவர்ஸ் செய்துகொள்ளத்தேவையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் நானும் புஷ்பவல்லியும் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை." என்று கூலாக சொன்னார்!

“There are illegetimate parents,
but I don't believe there are any illegetimate children.”

-Rick Warren

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_29.htmlJul 27, 2012

பண்டிட் பீம்ஷென் ஜோஷி

மீள் பதிவு 01.11.2008

நான் திருச்சியில் எட்டாண்டுகளுக்கு முன் மெடிக்கல் டிரன்ஷ்க்ரிப்சன் கோர்ஸ் படித்து ஒரு சர்டிபிகேட் வாங்கினேன் . அந்த கோர்ஸ் நான் படிக்கும் போது எனக்கு ஒரு விரிவுரையாளர் இருந்தார் . அவர் பெயர் ஜோஷி . அவர் தன் தங்கையின் கல்யாண பத்திரிக்கையை எனக்கு கொடுத்தார் . அது இதே போல நவம்பர் மாதம் .முகூர்த்த தேதி 28.11.2000. கல்யாணம் கர்நாடகா பெல்காமில் . என்னை கல்யாணத்திற்கு வர வேண்டும் என அழைத்தார் . அவரது ஒரே தங்கை .
நான் ஆசுவாசமாக அந்த பத்திரிக்கையை பிரித்தேன் . என் கண்களை நம்ப முடியவில்லை .
Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you என அழைப்பிதழ் ஆரம்பித்ததை கனவு என்பதா ?
என் விரிவுரையாளர் ஜோஷிக்கு என்னுடைய ஆதர்ச ஹிந்துஸ்தானி கிளாசிகல் பாடகர் பண்டிட் பீம்சன் ஜோஷி சொந்த பெரியப்பா ! ஜோஷியின் மறைந்து விட்ட தந்தையின் உடன் பிறந்த சகோதரர் .

நானோ சாதாரணமாக Hyper Sensitive!
என்னுடைய அந்த நேர உணர்வுகளை சொல்ல இப்போதும் என்னிடம் வார்த்தைகளே இல்லை . பீம்சன் ஜோஷி ஆடியோ கேசட் இருபதுக்கு மேல் சேகரித்து வைத்திருப்பவன் . பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை என்னை அவர் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் ! என்ன ஒரு மகத்தான கௌரவம் !இந்த மாதிரி சந்தோசத்தை அனுபவிக்க எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது .

என்னால் அந்த திருமணத்திற்கு போக இயலவில்லை . ஆனால் மணப்பெண்ணுக்கு என் அன்பளிப்பை என் விரிவுரையாளர் ஜோஷியிடம் கொடுத்தனுப்பினேன் . இவர் போய் அவர் பெரியப்பா பீம்சன் ஜோஷியிடம் அவருடைய Ardent Fan R.P.Rajanayahem பற்றி தன்னுடைய மாணவர் என்பதையும் சொல்லியிருக்கிறார் .பண்டிட் தன் ஆசியை எனக்கு சொல்லியனுப்பினார் .

அந்த திருமண பத்திரிக்கையை பத்திரமாக ஒரு பொக்கிஷம் போல வைத்திருக்கிறேன் . நேற்று அவருடைய பிருந்தாவன் சாரங்கா கேட்டுக்கொண்டு இருக்கும்போது அந்த அழைப்பிதழ் என் கையில் .

Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you

....................

பாரத ரத்னா பண்டிட் பீம்ஷென் ஜோஷி

மீள் பதிவு 05.11.2008

பண்டிட் பீம்ஷன் ஜோஷிக்கு இந்திய அரசு நேற்று(04.11.2008) பாரத ரத்னா விருது அறிவித்து உள்ளது .
பாரத ரத்னா விருதும் இப்போது அவருக்கு கிடைத்து விட்டது .
"பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை" என்று நவம்பர் ஒன்றாம் தேதி தான் எழுதினேன் !

Music is the proper task of life!

..................


Three comments :

Chandra said...
"...பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை..."He got that too today! Wooow - what a timing you wrote about him!
Wednesday, 05 November, 2008


Krishnan said...
I too recalled your post about Bhimsen Joshi when I heard the news that he has been conferred Bharat Ratna. What a timing !
Wednesday, 05 November, 2008
D.R.Ashok said...
ஒரு வேளை ஞானம்முனு சொல்றாங்களே அது உங்களுக்கு வந்துடுச்சா! (எழுத்து ஞானம் இல்லை.. வெறும் ஞானம்) .... தலைவா பேசாம சாமியாரா ஆகிடுங்க... நல்லா துட்டு பாக்கலாம் :-)
keep calaking....

Jul 26, 2012

பூதாகரமான பிப்லப் சௌதுரிஜெமினி வாசன் இயக்கத்தில் 1948ல் வந்த படம் ’சந்திரலேகா’.பிரமாண்டம் என்பதை தமிழ் ரசிகர்கள் உணர்ந்தது இப்படத்தில் தான். M.K.ராதா கதாநாயகன்,ரஞ்சன் வில்லன், கதாநாயகி T.R.ராஜகுமாரி. பின்னால் இந்தப் படம் இந்தியில் டப்பிங் செய்யப் பட்டு வெளி வந்து சக்கை போடு போட்டது.

ஒரு காட்சியில் வில்லன் தன் அடியாளின் கையாலாகாத்தனத்தை கண்டித்து கடுமையுடன் “ இப்படி மீண்டும் நடந்தால்” என்று எச்சரித்து திரும்பிப் பார்ப்பான். அங்கே பூதாகரமாக ஒரு முரட்டு உருவம் சவுக்கை வைத்துக்கொண்டு வில்லனுக்கு நமஸ்காரம் செய்வான். இந்த இடத்தில் கொட்டகை அதிரும். வில்லன் காட்டும் சவுக்குடன் கூடிய முரட்டு உருவத்தைக் கண்ட அடியாள் நடுங்கி மண்டியிடுவான். எங்கிருந்தாலும் ஒரு வாரத்துக்குள் அவளைப் பிடித்து இழுத்து வரவேண்டும்” என்று எச்சரித்து விட்டு “போ” என்பான். வில்லனின் நாய் அப்போது டைமிங்குடன் “லொள்” என்று குரைக்கும். மீண்டும் கொட்டகை அதிரும்.

அசோகமித்திரன் தன் ’இருட்டிலிருந்து வெளிச்சம்’ நூலில் ‘ரொம்ப நாளாச்சு’ கட்டுரையில் மேற்கண்ட ’சந்திரலேகா’ காட்சி பற்றி எழுதியுள்ளார்.

பின்னால் இந்த மாதிரி வில்லனின் எச்சரிக்கை எத்தனை தமிழ்,இந்தி, தெலுங்கு டப்பிங் படங்களில் இடம் பெற்று இருக்கும்!
தெலுங்கு டப்பிங் பட வில்லன் தன்  கெட்ட கூட்டத்தின் மெம்பர் ஒருவனைப் பார்த்து ‘ உடனே அந்த ஃபார்முலாவை கொண்டு வரவேண்டும்.கொண்டு வராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?’ என்று எச்சரித்து விட்டு அதே கெட்ட கூட்டத்தின் இன்னொரு மெம்பரை தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றே விடுவான். மீண்டும் தான் எச்சரித்த மெம்பரைப் பார்த்து சொல்வான்  You can go."    தியேட்டரில் கிண்டல் சிரிப்பு கேட்கும்.

சந்திரலேகாவில் வரும் அந்த காட்சியில் வரும் சவுக்குடன் கூடிய பூதாகரமான முரட்டு உருவம் பிப்லப் சௌதுரி பற்றி ஒரு சிறுகதை கூட அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்!’ பிப்லப் சௌதுரியின் கடன் மனு’
’ ஒரு முறை ஒருவனின் திறமையின்மைக்காக வில்லன் கடுமையாக அவனை வைது விட்டு “ இன்னொரு முறை இப்படி நடந்தால் இது தான்” என்று திரும்புவான். அங்கு அரக்கனைப் போன்ற பிரமாண்டமானதொரு உருவம் கையில் சவுக்குடன் வில்லனை வணங்கும். அது தான் பிப்லப் சௌதுரி. அந்தத்திரைப் படத்தின் 170 நிமிடங்களில் அவன் அந்தப் பத்து கணங்கள் தான் தோன்றினான்.ஆனால் கொட்டகையே கலகலத்து விடும். எனக்கு அவனை எப்போது பார்த்தாலும் கையில் சவுக்குடன் வில்லனை வணங்கும் காட்சி தான் நினைவுக்கு வரும். அதன் பிறகு அவன் திரும்பத் திரும்ப எங்கள் முதலாளியின் மூடிய கதவுக்கு வெளியே காத்து நிற்பான்.’

ஜெமினி ஸ்டுடியோவின்இந்த எக்ஸ்ட்ரா நடிகர் அங்கு வேலை செய்யும் இந்த கதை சொல்லிக்கு  ஒரு சிறு டைரி அன்போடு கொண்டு வந்து தருகிறான். “ நீ சவுக்கு தான் தருவேன்னு நினைச்சேன்.”
கதை சொல்லியிடம் கடன்  மனு எழுதித்தரும்படி பிப்லப் கேட்கிறான். ’உனக்கா? ‘
‘ஆமாம்ப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு’
‘ஒரு ரோல் தரமாட்டேங்கறாங்கப்பா,ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு பூதம் வேஷம். உடம்பு மேலே கறுப்பு எண்ணெ பூசிக்கிட்டு நாளெல்லாம் நின்னேன். அந்த எண்ணெயைக் கழுவ நாலு நாளாச்சு. இதோ பாரு கையிலே, இன்னும் கூடச் சரியாப் போகலே.” அவனுடைய கை நகக்கண்கள் நிரந்தரமாகக் கறுப்பாகிக் கிடந்தன.

கதை சொல்லி -’எங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வந்த முன்னூறு பேரில் இருநூற்றைம்பது பேருக்கு மனுக்கள் எழுதித்தந்திருப்பேன்.கடனுக்காக.
நான் திரும்பத் திரும்ப பிப்லப் சௌதுரிக்கு மனுக்கள் எழுதித்தந்தேன்.பிறருடைய துக்கங்களையும் என்னுடையதாக்கி எழுத்தில் வடிக்கும் கனம் தாங்காமல் தான் போலும் ,நான் ஒரு நாள் அந்த ஜெமினி ஸ்டுடியோவை விட்டு ஓடியே விட்டேன்’

’பிப்லப் சௌதுரியின் வீட்டின் தரித்திரத்தைக் கண் கொண்டு சகிக்க முடியாது.அது ஏழ்மையில்லை. தரித்திரம்.’

‘நிஜம் எதுவாக இருந்தாலும் எழுத்து வடிவில் அதை முற்றிலும் தெரிவிக்க முடிவதில்லை.’

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_955.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_2416.html


Jul 24, 2012

T.R.ராமச்சந்திரன்

பேக்கு கதாநாயகன் - முழு நீள சிரிப்பு படம் -இப்படியெல்லாம் தமிழ் திரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இன்றும் மாறாத விதி.
 இதற்கு முன்னோடி நடிகன் என்று T.R.ராமச்சந்திரன்.
”ஞே” என்று முழித்துக்கொண்டு ..“கேனம்” மாதிரி பேசிக்கொண்டு..

ராமச்சந்திரன் என்ற பெயரிலும் சில நடிகர்கள் தமிழில் புகழ் பெற்றார்கள்.

நகுலனின் கவிதை

”ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை.”

T.R. ராமச்சந்திரன், M.G.ராமச்சந்திரன்,
T.K.ராமச்சந்திரன்.(இவர் வில்லன் நடிகர்)

 அவர்களிலும் முதலில் புகழ் வெளிச்சம் கண்டவர் T.R.ராமச்சந்திரன் தான்.

1941ல் T.R.ராமச்சந்திரன் ’சபாபதி ‘யில் கதாநாயகன்.

ஒய்.ஜி.மஹேந்திரனோடு ஸ்ரீ தேவி கதாநாயகியாக நடித்திருப்பாரா? ஜனகராஜோடு ஜெயப்ரதா ஜோடியாக நடித்ததுண்டா?

 ஒரு தமிழ் சிரிப்பு நடிகர் மிக முன்னணி நடிகைகள், அன்றைய கனவுக்கன்னிகளுக்கு கதாநாயகனாக நடித்தார் என்றால் அவர் T.R.ராமச்சந்திரன் மட்டும் தான்.
இன்றைக்கு இந்த சிரிப்பு நடிகருடன் இந்த நடிகை நடிக்க மறுத்து விட்டார் என்று செய்திகள் வருகிறது.ஆனால் T.R.ராமச்சந்திரன் யோகக்காரன்.

பின்னால் அகில இந்திய நடிகையான வைஜயந்திமாலாவுக்கு முதல் படத்தில் முதல் நாயகன் இவர் தான்.1949ல் ஏ.வி.எம் மின் “வாழ்க்கை” படம்!

நடிகையர் திலகம் சாவித்திரி 1953ல் நாகேஸ்வரராவுடன் “தேவதாஸ்” ஜெமினியுடன் ”மனம் போல் மாங்கல்யம்”முடித்து 1955ல் ஜெமினியுடன் நடித்த”மிஸ்ஸியம்மா”  வெளிவந்தது.அதே வருடம் சாவித்திரி கதாநாயகியாய் நடித்த படம் “கோமதியின் காதலன்”. இந்தப் படத்தில் அவருக்கு கதாநாயகன் சிரிப்பு நடிகர் T.R.ராமச்சந்திரன்.

அதே 1955ல் பின்னால் அகில இந்திய நட்சத்திரமாகி, ராஜ்கபூருடன் கலக்கிய
நாட்டிய பேரொளி பத்மினி நடித்த ’’கதாநாயகி’’படத்தின் கதாநாயகன் இதே T.R.ராமச்சந்திரன்.

1960ல் தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றான “ அடுத்த வீட்டுப் பெண்” படத்தில் அஞ்சலிதேவியின் கதாநாயகன் T.R. ராமச்சந்திரன் தான்.

சிவாஜி கணேசன் ’பராசக்தி’யில் அறிமுகமாகி,அடுத்த வருடம் ’திரும்பிப்பார்’அதற்கடுத்த 1954ல் மனோகரா, தூக்கி தூக்கி,எம்.ஜி.ராமச்சந்திரனுடன் கூண்டுக்கிளி போன்ற படங்கள். அதே வருடம் அவர் ஒரு படத்தில் செகண்ட் ஹீரோ வாக நடித்தார். அதில் ஹீரோ T.R.ராமச்சந்திரன். அந்தப் படம் ”கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.”

இந்தப் படத்தில் சிவாஜிக்கு பின்னணிப் பாடல் ஒன்றை சந்திரபாபு பாடினார். கவிஞர் கம்பதாசன் எழுதிய “ஜாலி லைஃப்!ஜாலி லைஃப்! தாலி கட்டினால் ஜாலி லைஃப்!” சந்திர பாபு பாடிய பல பாடல்கள் அவர் வாழ்வின் அபத்தத்தைப் பார்த்து சிரித்தன்!

”கதாநாயகி”, ”அடுத்த வீட்டுப் பெண்” இரண்டுபடங்களிலும் இரண்டாவது ஹீரோ K.A.தங்கவேலு. இந்தப் படங்களில் A.கருணாநிதியும் நடித்திருந்தார்.

“புனர்ஜென்மம்” (1961) படத்தில் ராமச்சந்திரன் டியூசன் வாத்தியாராக தங்கவேலு மகள் ராகினிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார்.
தங்கவேலு: என்ன படிச்சிருக்கீங்க
ராமச்சந்திரன்: ம்..ம்.. B.A.,
தங்கவேலு : (ஆச்சரியப்பட்டு) ஆ.. பி.ஏ யா?
ராமச்சந்திரன்: ம்..ம்.. பி.ஏ. படிக்கலாமுன்னு நினைச்சேன். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது அப்பா செத்துப்போயிட்டார்.
தங்கவேலு: ஓஹோ..போகும்போது புஸ்தகத்தையெல்லாம் எடுத்துட்டுப்போயிட்டாரா?

நாகேஷ் காமடியனாகவும் கதாநாயகனாகவும் கொடி கட்டிய காலம்.
“ நாம் மூவர்” என்ற படத்தில் மூவராக ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,நாகேஷ்.இந்தப் படத்தில் அந்த இரண்டு ஹீரோ நடிகர்களை விட நாகேஷுக்குத் தான் சம்பளம் அதிகம். அந்த வருடம் ஜெமினி கணேஷ் நடித்த “சின்னஞ்சிறு உலகம்“ படத்தில் நாகேஷின் ஜோடி K.R.விஜயா. அந்த 1966ல் கலக்கிய மற்ற படங்கள் அன்பே வா, அண்ணாவின் ஆசை, மேஜர் சந்திரகாந்த்,யாருக்காக அழுதான், மற்றும் சாது மிரண்டால்””மதராஸ் டு பாண்டிச்சேரி”.

”சாது மிரண்டால்” படத்தில் கதாநாயகன் T.R.ராமச்சந்திரன்.
இந்தப் படத்தில் பாலமுரளியின் அருமையான பாடல்” அருள்வாயே,நீ அருள்வாயே, திருவாய் மலர்ந்து அருள்வாயே” T.R.ராமச்சந்திரனுக்குத் தான்.

“அன்பே வா” படத்தில் நாகேஷ்-T.R.R காமெடி
 “ராமையா தின்னுகெட்ட பரம்பரைன்னு என் பரம்பரைக்கே பேருடா!’’
“சார்! உங்களுக்கும் எனக்கும் உள்ள இந்தத்தொடர்பு உங்கள் குடும்பத்துக்கு த் தெரிந்தால் நீங்கள் கண்டிக்கப்படுவீர்கள்!நான் தண்டிக்கப் படுவேன்! நம்முடைய அருமையான இந்த உணவுத்தொடர்பு துண்டிக்கப் படும்! இது தேவையா?”

..................


மகள் வீட்டுக்கு நிரந்தரமாக அமெரிக்காவுக்குசெல்லவேண்டியிருப்பதை ராமச்சந்திரன் தன் நண்பர் K.A.தங்கவேலுவிடம்சொல்லி விடை பெற்றபோது எப்படி இருவரும் முதுமையில் நெகிழ்ந்திருப்பார்கள்! அமெரிக்காவிலேயே 1990ல் T.R.ராமச்சந்திரன் மரணமடைந்தார்.


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_5112.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/ka.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_11.html
Jul 22, 2012

நடிகர் முத்துராமன்கிரிக்கெட்டில் ஃபார்ம் போல சினிமாவிலும் நடிகர்கள் ஃபார்ம் வரும்போது பிரமாதமாக கலக்குவார்கள்.
முத்துராமன் நாடக நடிகர். சிறு கதாபாத்திரங்களில் தான் சினிமாவில் ஆரம்பத்தில் நடித்தவர். 1956ல் ரங்கூன் ராதா படத்தில் ஒரு வக்கீல் ரோலில் வருவார். சகஸ்ரராமத்தின் சேவாஸ்டேஜ் நாடகங்களில் நடித்திருக்கிறார்.வைரம் செட்டியார் நாடக கம்பெனியின் நடிகர். சினிமா வாய்ப்புக்காக  முயற்சித்தவர். ஜூபிடர் சோமுவின் அஸ்தமன படம் அரசிளங்குமரி(1961)யில் எம்ஜிஆரின் ஸ்டண்ட் நடிகர் கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ஒரு ரோல் கிடைத்த போது அந்த ரோலை அவர் நாடக நடிகர் முத்துராமனுக்கு பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். எம்.ஜி.ஆருடன் ஏற்றம் இறைத்துக்கொண்டே ’தந்தனத்தானே ஏலேலோ தந்தனத்தானே ஏலேலோ பாட்டில் சீர்காழியின் “ வேலை செஞ்சால் உயர்வோம் என்ற விவரம் மண்டையில் ஏறனும்” வரிக்கு முத்துராமனின் performance எம்ஜிஆர் தேஜஸான அழகுக்கும் அவருடைய நடிப்புப்பாணிக்கும்   சற்றும் பொருந்தாமல் under acting என்ற அளவில் இருப்பதை இன்றும் காணமுடியும். எம்.ஜி.ஆருடன் ஒரு பாடல் காட்சியில் நடித்த பெருமை மட்டும் தான் அன்று.

ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) படத்தில் வாழ்வு கொடுத்தார். போலீஸ்காரன் மகள் படத்தில் ’இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’பிபிஎஸ் ஜானகி மாஸ்டர்பீஸ் பாடலில் கூட
’ பரவசம்’உணர்வை கண்ணை செயற்கையாக உருட்டி பூரிப்பை விசித்திரமாக வெளிப்படுத்துவார். ”சுமைதாங்கி” படத்தில் ஜெமினி கணேசனுக்கு அண்ணனாக நடித்தார்,ஜெமினியின் flair இவரை காணாமல் அடித்தது. எஸ்.எஸ்.ஆரின்’வானம்பாடி’ படத்தில் ‘நில்,கவனி,புறப்படு’ பாடலில் அந்த முதல் மூன்று வரிக்கும் இவருடைய  Expression இன்று பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. சினிமாவில் நாடக நடிப்பின் செயற்கைத்தன்மையை இவரால் ஆரம்பகாலத்தில் உதறவே முடியவில்லை.

ஒரு நாடக நடிகையைத்தான் முத்துராமன் காதல்திருமணம் செய்துகொண்டார். இயக்குனர் (தேவராஜ்) மோகனின் சகோதரி.

”எதையும் தாங்கும் இதயம்’’(1962) எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி படம்.சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய”எனக்கும் உனக்கும் வெகு தூரமில்லை. நான் நினைக்காத நேரம் இல்லை” பாடல் இந்தப் படத்தில் தான். இதில் முத்துராமனுக்கு வயதான கதாபாத்திரம்.முதலியார் பாத்திரம். நன்றாக நடித்திருந்தார்.

முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த முத்துராமனுக்கு சினிஃபீல்டில் மொதலியார் என்றே பட்டப்பெயர்.முத்துராமன் முக்குலத்தோர் மாநாடுகளில் கலந்துகொண்ட ஜாதி அபிமானி.

காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் ஒரு அதிசயம். இவர் கிழவர் வேடம் போட்டு வருகிற நேரங்களில் பாலையா,நாகேஷ் இருவருக்கும் பிரமாதமாக ஈடுகொடுத்தார். ”டெண்ட்?” என்று அந்த கிழவர் வேட ஆரம்ப வசனம் துவங்கி
”எனக்கு மட்டும் என்னய்யா” (பாலைய்யா ‘அதானே’ அதானே’ என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் தலையாட்டுவார்)” ம் ஒரே பிள்ளை! ம்..”
நாகேஷிடம்” நஷ்டம் வந்தா கூட நான் கவலைப் படமாட்டேன்”
’’அசோக் இவங்களை வெளியெ அனுப்பி கதவ சாத்து”
 கலக்கிவிடுவார்!பாலைய்யாவை முத்துராமன் படுத்தும் பாடு.
இதே போல் தான் ’எதையும் தாங்கும் இதயம்’ படத்தில் எம்.ஆர்.ராதாவை படாத பாடு படுத்துவார். ஒரு நாயை ட்ரீட் பண்ணுவது போல “ச்சீ..ச்சீ..போய்யா” என்பார் முத்துராமன்.எம்.ஆர். ராதாவுக்கு கேட்கவேண்டுமா? கல்லையெடுக்கும் ஆளைப் பார்த்த நாய்  ஈனமாக முனகல் குரல் கொடுத்து தவிக்குமே, அதே போல முத்துராமனிடம் பம்முவார்.

சிவாஜியுடன் “ அன்னை இல்லம்””பார் மகளே பார்””திருவிளையாடல்” “கர்ணன்” ”பழனி” என்று ஆரம்பித்து பின் பெரும்பாலான படங்கள்.. ஊட்டி வரை உறவு,சிவந்தமண்,அருணோதயம்,இருதுருவம், சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள்,மூன்று தெய்வங்கள், ராஜராஜசோழன்,வைரநெஞ்சம்,அவன் தான் மனிதன்...இன்னும்..இன்னும்

ஜெய்சங்கர் படங்களில்  சப்போர்ட்டிங் கேரக்டர் ரோல் செய்த  இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. ( ’வீட்டுக்கு வீடு’ படம் தவிர.ஏனென்றால் அந்தப் படத்தில் லட்சுமிக்கு ஜோடியாக ஜெய்சங்கர் அம்மாஞ்சியாக அட்டகாசமாக நடித்திருப்பார்.பஞ்சவர்ணக்கிளியில் ரெட்டை வேடத்தில் ஜெய் நடிப்பு இவரை விட நன்றாகவே  இருக்கும்)
பெண் தெய்வம்,கண்ணன் வருவான்,நிலவே நீ சாட்சி,சூதாட்டம், மாணவன் போன்ற  படங்களில் முத்துராமன் இனணந்து நடித்தார். ’முத்துராமன் தான்யா நல்லா நடிச்சிருக்கான்’ என்று தரை டிக்கட் ரசிகர்கள் படம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும்போதே சொல்வார்கள்.

AVM ராஜனுடன் ‘’ பூவும் பொட்டும்’’, ”இருளும் ஒளியும்” பதிலுக்கு பதில்”

அதே காலங்களில் எம்.ஜி.ஆருடன் “கண்ணன் என் காதலன்” என் அண்ணன்” ”ஒரு தாய்மக்கள்”
ஜெமினியுடன்’பூஜைக்கு வந்த மலர்’ ’வாழ்க்கை படகு’’அவளுக்கென்று ஓர் மனம்’ ‘புன்னகை’’சுடரும் சூறாவளியும்’  போன்ற படங்கள்.

பின்னால் தான் இவருக்கு தனிக்கதாநாயகனாக மார்க்கெட்டில் மதிப்பு வந்தது.
“மயங்குகிறாள் ஒரு மாது” ,”தீர்க்க சுமங்கலி” ,’‘உறவு சொல்ல ஒருவன்”,திக்கு தெரியாத காட்டில்”, சூரிய காந்தி”,

நடிகர் சிவகுமாரின் மனைவியும் சூரியா,கார்த்தி இருவரின் தாயாருமான லட்சுமி அம்மணிக்கு அந்த காலகட்டத்தில் முத்துராமனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சிவகுமார் ’ என் மனைவி முத்துராமனின் ரசிகை’ என அப்போது குறிப்பிடுவார்.

Wig வைத்து நடிக்க ஆரம்பித்த பின் தான் முத்துராமனுக்கு லட்சணமே வந்தது. அது வரை பார்க்க ஏதோ உரித்த கோழி போலத்தான் இருந்தார்.
முத்துராமனுக்கு தலையில் Wig பிரமாதமாக பொருந்தும். பின்னால் சத்யராஜுக்கு Wig பொருந்தியதைப்போல. குரல் கூட சத்யராஜின் குரல் சில சமயங்களில் முத்துராமன் குரல் போல இருக்கும்.

கே.ஆர்.விஜயாவுடன் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் முத்துராமன் தான்.
கே.ஆர் விஜயாவின் நூறாவது படம் நத்தையில் முத்து (1973) படத்திலும் ஜெயலலிதாவின் நூறாவது படம் திருமாங்கல்யம்(1974) இரண்டு படங்களின் கதாநாயகன் முத்துராமன் தான்.

’காசே தான் கடவுளடா’ படம் வெளியான போது ஒரு சுவாரசியம். தேங்காய் சீனிவாசன் கட்-அவுட்  ஒன்று பிரமாண்டமாக பைலட் தியேட்டரில் வைக்கப்பட்டது. முத்துராமன் அதைப் பார்த்து விட்டு அந்தப்பட இயக்குனர் சித்ராலயா கோபுவிடம் போய் ‘ என்ன கோபு, இப்படி செய்யலாமா? நான் தான் படத்தின் கதாநாயகன். ஆனால் தேங்காய் கட் அவுட் வைத்தது எனக்கு அவமானம் இல்லையா’ என்று வருத்தப்பட்டார். ’படத்தில் தேங்காய்க்குத்தான் பயங்கர அப்ளாஸ்.இதற்கு நீங்கள் வருத்தப்பட்டு பயனில்லை’என்று கோபு சமாதானப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி சாதனை முத்துராமனால் எட்டமுடியாத விஷயம்.
ஆனால்
அவர் ஜெய்சங்கர்,AVM ராஜன்,ரவிச்சந்திரன்,சிவகுமார் ஆகியோரை விட நல்ல நடிகர்.

பிபிஎஸ் பாடல்களில்  இவருக்கு வாய்த்தவை.

’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’

’முள்ளில் ரோஜா,கள்ளூரும் ரோஜா’

’மதுராம் நகரில் தமிழ் சங்கம்’

’சந்திப்போமா?சந்திப்போமா’

’போகப் போகத்தெரியும் இந்தப் பூவின் வாசம் தெரியும்’

’மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்’

‘கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’

‘உன்னழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்’

‘எங்கெல்லாம் உன் வண்ணம், அங்கெல்லாம் என் எண்ணம்’

எஸ்பிபி யின்  பாடல்கள்

‘சம்சாரம் என்பது  வீனண’

‘கேட்டதெல்லாம் நான் தருவேன்,எனை நீ மறவாதே’ (எஸ்.பி.பி மனைவிக்கு பிடித்த பாடல்)

’நான் என்றால் அது அவளும் நானும்’

கே.ஜே.ஜேசுதாஸ் பாடல்
‘மோகனப் புன்னகை ஊர்வலமே, மன்மத லீலையின் நாடகமே’

‘மலைச்சாரலில் இளம்பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்’

‘இனங்களிலே எந்த இனம் பெண்ணினம்’


கதாநாயகனாக மார்க்கெட்டில் இருந்து இவருடைய  சரிவும் மோசமாய்த்தான் இருந்தது. ‘நினைவில் ஒரு மலர்’ போல 90% சூட்டிங்,எடிட்டிங் நிறைவடைந்த நிலையிலும் எத்தனையோ படங்கள் முடிக்கவே முடியாமல் பரிதாபமாய் முடங்கிப்போய் விட்டன! ஃபைனான்சியர்கள்,வினியோகஸ்தர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிந்தார்கள். ஆறுமுகம் செட்டியார் போல எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடித்துப் போனார்கள்.

 முத்துராமனை வைத்து ‘உயிர்’(1971), ‘எங்கள் குல தெய்வம்’(1974) போன்ற படங்கள் இயக்கிய பி.ஆர்.சோமு ‘நினைவில் ஒரு மலர்’படத்தில் இவரை கதாநாயகனாகவும் ரவிச்சந்திரனை இரண்டாவது கதாநாயகனாகவும் வைத்து படம் இயக்கி விட்டு பிசினஸ் செய்ய முடியாமல் சலித்து
1980ல்புலம்பினார். “இவன் ஒரு சப்பை, அவன் ஒரு லாப்பை. விளங்குமா?”

அதே நேரம் முத்துராமன் நியூ காலேஜில் படித்துக்கொண்டிருந்த  மகன் கார்த்திக்கை (அப்போது கார்த்திக் பெயர் முரளி)தயாரிப்பாளராக்கி ‘பணம்,பெண்,பாசம்’ படம் எடுத்து வெளியிட்டார்.

மகன் கார்த்திக் பாரதிராஜா படத்தில் கதாநாயகனாக ஒப்
பந்தமானார். இவர் வில்லனாக ரஜினி படம் ‘போக்கிரிராஜா” வில் நடிக்க ஆரம்பித்தார். சரி இவரும் ஒரு  ரவுண்டு வரப்போகிறார் என்றே எல்லோரும் எண்ணியிருந்தார்கள்.
கார்த்திக் நடித்து ‘அலைகள் ஓய்வதில்லை’ வெளியாகி சக்கைப்போடு போட்டது.
 முத்துராமன் ஊட்டிக்கு ஒரு பட சூட்டிங் போனவர் அதிகாலை ஜாக்கிங் போகும்போது உயிர் விட்டார். ( ஒரு படத்தில் நாகேஷ் வசனம்”உயிரை விட்டா ஊட்டியில் தான் உயிரை விடனும்”)
வெறொரு படத்திற்காக வந்திருந்த கமல் ஹாசன் தான் கீழே விழுந்து கிடந்த முத்துராமனைப் பார்க்க நேர்ந்தது. அவர் உடல் தூக்கியபோது அவ்வளவு திடகாத்திரமாக  இருந்ததை கமலால் உணரமுடிந்திருக்கிறது.
சிவகுமார் இது குறித்து தான் எழுதிய ’இது ராஜபாட்டையல்ல’ புத்தகத்தில்  ’சட்டென்று எழுந்து தன் வெடிச்சிரிப்புடன் முத்துராமன் ‘நல்லா ஏமாந்தீங்களா” என சொல்லமாட்டாரா’ என்று தனக்குத் தோன்றியதாக எழுதியிருக்கிறார்.

ரஜினி படம் இவருக்கு வேறொருவர் டப்பிங் பேசி வெளியானது.

முத்துராமனின் திடீர் மரணத்தின் போது  அதிர்ச்சி தான். அதே காலகட்டத்தில் தான் சாவித்திரி, கண்ணதாசன் மரணங்களும்.கே.ஆர் விஜயா இன்றும் தன்னை மிகவும் பாதித்தவிஷயம் முத்துராமனின் திடீர் மரணம் தான் என்பார்.

எம்.ஜி.ஆர்.சிவாஜி,ஜெமினி,எஸ்.எஸ்.ஆர், அவர்களுக்கு பின் வந்த
AVM ராஜன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் என்று எல்லா கதாநாயகர்களுக்கும் Second Hero வாக நடித்தே வாழ்வின் பெரும்பகுதியை கழித்தவர் முத்துராமன். இந்திப் படங்களில் ராஜ்குமார் இப்படி குணச்சித்திர கதாபாத்திரங்கள் செய்தவர்.நெஞ்சில் ஓர் ஆலயம் இந்தியில் முத்துராமன் ரோல் அவர் தான் செய்தார். வாழ்க்கை படகு இந்தியில் கூட முத்துராமன் ரோல் ராஜ்குமார் தான்.

ஹீரோவாய் சினிமாவில் கிடைக்கும் luxury அசாதாரணமானது. அதோடு அவர் மகன் கார்த்திக் சொன்னது போல ஹீரோ நடிகனின் வாழ்வு Erotic ஆக அமைந்தே தீரும்.
ஆனால் பாவம் முத்துராமன் தொழில்ரீதியாக மட்டுமல்லாமலும் கூட துர்பாக்கியசாலி. தமிழில் மற்ற கதாநாயகர்களை விடவும்.

எஸ்.எஸ்.ஆர் இன்று 84 வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

AVM ராஜனுக்கு  இன்று 78 வயது. அல்லேலூயா! ஏசுவின் அடிமை! பெந்தகோஸ்து கிறிஸ்தவ போதகராய் வெள்ளுடையில் பிரச்சாரம் செய்துகொண்டு.... மகமாயி..மகமாயி..என்று சினிமாவில் ஒவ்வொரு டயலாக்கிலும் சொன்னவர் இன்று ...அல்லேலூயா.. அல்லேலூயா..உம்மை ஜெபிக்கிறோமைய்யா..  ஏசுவின் அடிமை...
 இப்ப சத்தத்தையே காணோமே. ஒருவேளை தாய்மதம் திரும்பிவிட்டாரா??

எம்ஜிஆருக்கு சாகும்போது official age 70!சிவாஜி மரணமடைந்த போது 74 வயது.ஜெமினி கணேஷ் 85 வயதில் இறந்தார்.ஜெய் சங்கருக்கு சாகும்போது 62 வயது.ரவிச்சந்திரன் மரணம் 71 வயதில்.
52 வயதில் வாழ்க்கையை முடிக்க முத்துராமன் நோயாளியுமல்ல.அலைகள் ஓய்வதில்லை தவிர்த்து மகன் கார்த்திக் நடித்த  படங்களை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. கார்த்திக் சிவாஜி மகன் பிரபுவை விடவும் சிறந்த நடிகன்.சிவகுமார் தன் மகன்களின் சிறப்பைக் கண்டு களிக்கும் பேறு பெற்றிருப்பது போல முத்துராமனுக்கு வாய்க்கவில்லை.

அப்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இரங்கல் : அரசியல், சமுதாயத்தொண்டு என்றெல்லாம் முத்துராமனைப்பற்றி பேச ஒன்றும் இல்லையென்றாலும் கூட ‘நட்பு,பழகும் தன்மை’ இவற்றைப் பொறுத்தவரை ஒரு சகாப்தம் மறைந்து விட்டது என்றே சொல்லவேண்டும்”

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_1413.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/carnal-thoughts-6.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_03.html


  

Jul 20, 2012

Individual Choice


மீள் பதிவு -    16-11-2008ல் எழுதப்பட்டது.

'என்னுடைய பிராமண நேசம் உறுதியானது ' என்ற என் வார்த்தைகள் மீண்டும் பல கோபமான கமன்ட்களுக்கு வழிவகுத்து அரசியலுக்குள் என்னை இழுத்து புரட்டிபார்க்கிறது.

ஆதவனின் ' அன்னை வடிவமடா ' சிறுகதை படித்து பாருங்கள்.

அதோடு ஒரு இனமே கொடூரமானது என்று பாசிசம் பேசுகிற மனிதர்களுடன் நான் என்றும் உடன்படவே மாட்டேன் என்பதைத்தான் என் பிராமண நேசம் மூலம் நான் பகீரங்கமாக பிரகடனப்படுத்துகிறேன். யூத இனத்தின் மீது ஹிட்லர் காட்டிய கொடிய வெறுப்பை தான் ' பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானை முதலில் அடி ' என்று திராவிட சித்தாந்திகள் முன் வைத்தீர்கள்.

தலித்களுக்கு அவமானம், புறக்கணிப்பு, கொடுமை எல்லாவற்றையும் கடந்த நூறு வருடங்களில் நிகழ்த்தி காட்டியது பிற்படுத்த வகுப்பை சார்ந்த ஜாதி இந்துக்கள் தான் என்பதை அனைவரும் அறிவோம். இந்த ஜாதி இந்துக்கள் தான் அனைத்து திராவிட கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்தார்கள்.

தோழர் ஜீவா சொன்னார்
" பாரதி அமுத இலக்கியம்! பாரதி தாசன் நச்சு இலக்கியம்!! "
ஐம்பது வருடம் முன் அமெரிக்கன் கல்லூரி இலக்கிய கூட்டம் ஒன்றில்!

பாரதி துவங்கி குபரா, பிச்சமூர்த்தி, மௌனி, க நா சு, சிட்டி, சி சு செல்லப்பா,
 லா ச ரா, தி .ஜானகி ராமன், கரிச்சான் குஞ்சு,சுந்தர ராமசாமி, நகுலன், 
ந.முத்துசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள் .
Great writers are the Saints for the godless!

ஒரு வேதனை பாருங்கள். ராஜாஜி பற்றிய ஒரு Folkloreபதிவு ஜாதி பிரச்சனை யாகி விட்டது. இன துவேச பாசிச ஓநாய்கள் ஊளை தான் இதற்கு காரணம். ஒற்றை பரிமாணத்தில் பார்க்கும் கொக்குகள்! கொக்குக்கு ஒரு புத்தி!!

ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்ச மூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் ' நூல் பற்றி கருத்தரங்கம். நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.

ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்
' ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' என்று ஊளை இட்டான்.

இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம். ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.

நான் ஆரம்பித்தேன் " வெங்கட் சாமிநாதன் சொல்வார் -' நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . ' இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.

க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.

லா. ச .ரா சுபமங்களா பேட்டியில் கேள்வி " உங்களை கவர்ந்த,பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?
லா.ச .ரா பதில் " அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "

நான் சொல்கிறேன் . 'கபோதி' ,' காவல் ' 'அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு " என்றேன் .
சில நேரம் அசிங்கமான உளறல்களுக்கு இப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்படி நான் சொன்னவுடன் அந்த 'தமிழ் பேராசிறியவன்' கொந்தளித்து எழுந்து 'என்னை அவமானப்படுத்துவதற்காக இவர் திட்டம் போட்டு இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறார். ' என மீண்டும் மீண்டும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு ன்னு ஆட ஆரம்பித்தான்.
நான் பேசியதில் பிச்சமூர்த்தியை தூக்கி பிடித்ததில் இவனுக்கு என்ன அவமானம். அது தான் பண்டித திமிர். முறையாக தரவுகளை வைக்க போகிறேன் என்பதை புரிந்து கொண்டவுடன் அவனுடைய பாண்டித்யத்துக்கு அவமானம் !

Individual Choice என்று ஒன்று எனக்கு இருக்கிறதல்லவா? அவன் நிர்த்தாட்சண்யமாக சுந்தர ராமசாமியை அவமானப்படுத்தி ந.பிச்சமூர்த்தியை தூக்கி ஒட்டு மொத்தமாக கடாசும்போது ஒரு கலைஞனை நான் தூக்கி பிடிக்க எனக்கு உரிமை இல்லையா? அதுவும் நான் வசமாக வெங்கட் சாமிநாதனை,
க நா சு , லாசரா ஆகியோரை துணைக்கு கூப்பிடவும் அவன் திகைத்து போய் அசிங்கமாக ஆட ஆரம்பித்தான்.

இவனுக்கு கரண்ட் ஷாக் கொடுக்க வேண்டாமா?அதனால் ..

"உட்கார்ரா சும்பக்கூதி .. " என்று நாலாந்தரமாக நான் இறங்கி ஒரு சத்தம் பலமாக கொடுத்தேன்.

சிலை மாதிரி அசையாமல் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான்.இது தான் அவனுக்கு உண்மையான அவமானம் என உணர்ந்து அழாத குறையாக உறைந்து போய் உட்கார்ந்து விட்டான்.பூர்ண பௌர்ணமி திடீரென்று அமாவசையானது போல!

இலக்கிய கூட்டம் உடனே ..அந்த நிமிடத்தில் இனிது நிறைவடைந்தது!

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_3740.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_15.html

Jul 19, 2012

Carnal Thoughts -34

மு.தளையசிங்கத்தின் 'தொழுகை' கதையில் எதிர் அழகியல்

தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12, 14 வயது) தூங்கும் அறையைப் பூட்டி விட்டு கரிய சாணான் தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார். செல்லம்மாளுககு முத்து 'சிவலிங்கமாக'த் தெரிகிறான். முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறான். உடலுறவு கொள்வது இது முதல்முறையுமல்ல. இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லம்மா பார்த்து கதைத்திருக்கிறாள்.

வருடம் 2002 மே மாதம் 5 தேதி ஊட்டியில் நாராயண குருகுலத்தில்
’ தொழுகை’ கதைக்கு R.P.ராஜநாயஹம் முன் வைத்த எதிர் அழகியல்

தத்தனேரி டூரிங் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து 'சிவகெங்கைச் சீமை' பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம்.

போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் சர்ச், இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு பேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறான்!

முட்டாள் தாசு 'மயக்கமா கலக்கமா' பாட்டை, அழகாக பாடுவான் 'கோமாதா எங்கள் குலமாதா' பாட்டையும் அனுபவித்துப் பாடுவான். தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக 'முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல முடிவில் கொடைக்கானல்தான்' என்று கவிதை எழுதியவன்.

குருவி மண்டையன் 'என்ன தாசு . . . கழுதையைப் போய்.....' என்று கேட்கிறான்.

 தாசு 'கழுதை இல்லடா கல்யாணிடா .... கழுதைன்னு சொல்லக்கூடாது. கல்யாணி!டேய் எனக்கு பொம்பளை சீக்குடா ...... சத்தமில்லாமப் போங்கடா நீங்க'

கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது.

 ' ஐயய்யோ! தாசு இது 'கல்யாணி' இல்ல தாசு . கல்யாண சுந்தரம்!' என்கிறான் குருவி மண்டையன்.

இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து 'ஐயய்யோ என்னடா இது அசிங்கம்' என்று கூப்பாடு போட தாசு அவனிடம் 'பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா' என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஒடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது.

தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு.

பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். Voyeurism! அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று
( முட்டாள் தாசுவின் வார்த்தைகளில் 'பேபி ஏறியடிக்கும்போது ஒவ்வொரு 'குத்து'க்கும் வெரோனிகா ஓரு 'ஏசுவே ரட்சியும்') சொல்லிக்கொண்டிருந்தாளாம்.
 இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.

தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடும் காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம்? விஷயம் ஆறுமுக ஒதுவாருக்குத் தெரியவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசரித்துப் போகலாம். அல்லது கொலையோ தற்கொலையோ செய்யம்படி ஆகலாம்.

முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர்! கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான்.
 பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்ரி கூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.


முட்டாள்தாசுக்கு Sexually Transmitted Disease என்ற வார்த்தையே தெரியாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு' என்கிறான்.

Jul 18, 2012

நெடுஞ்செழியன்

http://i1.ytimg.com/vi/BKaX1l9PZ2E/hqdefault.jpg

இளந்தாடி வேந்தர் என்று நெடுஞ்செழியனுக்கு பெரியாருடன் இருக்கும்போது பட்டப்பெயர். பெரியார் வெந்தாடி வேந்தர்!கறுப்பு புஷ்கோட்.வெள்ளை பேண்ட்.கறுப்பான இளம்தாடி.இது தான் அன்று 1940களில் நெடுஞ்செழியன்.
கருணாநிதி பள்ளி மாணவனாயிருக்கும்போது நெடுஞ்செழியன் மீட்டிங் நடத்த பணம் வேண்டியிருந்தபோது வீட்டில் வெள்ளி ஜாமான் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து விற்கவேண்டியிருந்தது.
’நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.
 நாவலர் நெடுஞ்செழியன்.
திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர்.
கழகம் கண்ட முக்கிய பேச்சாளர்.


1952ல் முதல் பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. கண்ணதாசன் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார் என்ற சிக்கலை முன் வைத்து பிரச்சார திட்ட நகலில் கண்ணதாசன் பெயரை கருணாநிதி நிராகரித்தார். புறக்கணிப்பு.கண்ணதாசன்‘ இது நியாயமா? கருணாநிதி செய்வதை தட்டி கேட்கக்கூடாதா?’என்பதாக நெடுஞ்செழியனிடம் பிராது சொன்னார்.நெடுஞ்செழியன் மிரண்டு ‘கருணாநிதி பஞ்சாயத்து எதையும் தயவு செய்து என்னிடம் கொண்டு வராதே’ என்று ஒதுங்கிக்கொண்டார் அப்போதே.


அண்ணாத்துரையின் மந்திரிசபையில் இரண்டாவது இடம். கருணாநிதியின் மந்திரிசபையில் இரண்டாவது இடம்.

 http://de.academic.ru/pictures/dewiki/78/Nedunchezhiyan_Karunanidhi_MGR.jpg

எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குவதில் கருணாநிதியிடம் கடுமையாக பிடிவாதம் செய்து அவசர,அவ்சரமாக பத்திரிக்கை நிருபர்களுக்கு எம்ஜிஆர் சஸ்பெண்ட் விஷயத்தை வெளியிட்டவர்.
’அன்றே நாங்கள் அண்ணாவிடம் போகாமல் காமராஜரிடம் போயிருந்தால் எங்களை வேண்டாமென்றா சொல்லியிருப்பார்? ( இந்த இடத்தில் அடக்க முடியாத சிரிப்புடன்) ஊமையன்,உளறுவாயனையெல்லாம் கூடவே சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிற காமராஜர் என்னையும் கருணாநிதியையும் வேண்டாம் என்றா சொல்லிவிடுவார்?”
மேடையில் பேசும்போது விரல்களை ஆட்டி எம்ஜிஆர் பற்றி “ வாழ வந்தாய். எங்கோ கண்டியில் பிறந்தாய். மலையாளி.வாழ வந்தாய். வாழ்ந்து விட்டுப் போ. எங்களை ஆள நினைக்கலாமா?” என ஆக்ரோஷமாக கேட்டவர் நெடுஞ்செழியன்.
“அடுத்தவன் மனைவியை அவன் மனம் பதற,பதற, அவன் கதற,கதற தூக்கிக்கொண்டு வந்த எம்.ஜி.ராமச்சந்திரனா எங்களை கணக்கு கேட்பது” -இப்படி கேட்டவர்.
(வி.என்.ஜானகியின் முதல் கணவர் கணபதி பட். அப்போது ஏழு வயதில் சுரேந்திரா என்று ஒரு மகனும் உண்டு.)

இவ்வளவெல்லாம் பேசி விட்டு எம்.ஜி.ஆர் மந்திரிசபையிலும் இரண்டாமிடம் வகித்தவர்.
அதிமுகவில் நேரடியாக இணைந்து விடவில்லை. இவர் ஒரு மதிமுக ஆரம்பித்தார். மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம். இந்த சர்பத் ஸ்டாலை உடனே,உடனே அதிமுகவில் இணைத்து எம்ஜிஆரிடம் சரணாகதியடைந்தவர்.

கருணாநிதி ‘நெடுஞ்செழியன் பெண்டாட்டிக்கு பயப்படுபவர்’ என்று கிண்டல் செய்த போது நாவலர் பதில் “ உன்னை மாதிரி எனக்கு என்ன வப்பாட்டியா இருக்கு”

’பொண்டாட்டிக்கு  நான் பயப்படுவேன். நீ வப்பாட்டிக்கு பயப்படுபவன்’ என்று அர்த்தம். The other woman is always powerful!


’உதிர்ந்த மயிர்’ என்றுஅலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர்.
ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் ஒரு ஐநூறு ஓட்டு வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார்.

வெற்றிகொண்டான் மேடையில் நெடுஞ்செழியன் ஞாபகம் வந்து விட்டால் சொல்வது “ அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்ட! நல்லா நெடு நெடுன்னு கொழு கொழுன்னு! அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேரு சாப்பிட்டிருக்கலாம். விட்டுப்புட்டோம்.”

அண்ணாத்துரை மந்திரி சபையிலும்,கருணாநிதி மந்திரி சபையிலும்,எம்.ஜி.ஆர் மந்திரிசபையிலும், ஜெயலலிதா மந்திரிசபையிலும் கூட இரண்டாமிடம்.
காலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு காட்டிய கருணையை நெடுஞ்செழியனுக்கு காட்டவேயில்லை.

அவருடைய மனைவி பங்காரு பக்தர்.

நெடுஞ்செழியனுக்கு ஒரே ஒரு பெருமை உண்டு. இரா.செழியன் என்ற சிறந்த பார்லிமெண்டேரியன் இவருடைய தம்பி. திராவிட இயக்கத்தில் மதிக்கத்தகுந்த ஆளுமை இரா.செழியன்.

நெடுஞ்செழியன் மறைந்த போது தி.மு,க தலைவர் இரங்கல்:

“நாவெல்லாம் தமிழ் மணக்க
செவியெல்லாம் தமிழ் மணக்க
சிந்தையெல்லாம் தமிழ் மணக்க
அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர்
தன்மான இயக்கத்தின் தூண்
சாய்ந்துவிட்டதே என
தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்
அவர் புகழ் வாழ்க!
அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க.”

வலம்புரி ஜான் சொன்னது தான் முழு உண்மை!
“குட்டி ஆடுகளை ஒட்டகங்கள் என்று திராவிட இயக்கம் அறிமுகப் படுத்தியிருக்கிறது என்பதற்கு நெடுஞ்செழியன் தான் தலைசிறந்த உதாரணம்”http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_08.html


http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_2479.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_3516.html

http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_08.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post.html
Jul 17, 2012

மானசரோவர்,கடன்,போட்டியாளர்கள்ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர் என்பதால் அசோகமித்திரனுடைய இளமைக் கால ஹைதராபாத் எந்த அளவுக்கு அவரை பாதித்துள்ளதோ அதே அளவில் சினிமா அனுபவங்களும் அவரை ஆக்ரமித்திருக்கிறது.

“ மானசரோவர்” நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் Role Models மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனும்,ஹிந்தி நடிகர் திலீப் குமாரும் என்பது சுவாரசியமான விஷயம்.
ஆயிரமாயிரமாண்டு இந்திய மரபுத்தொடர்ச்சியில் ‘தோழன்’ என்பதன் சாசுவதம்! ராமன் - அனுமன், கிருஷ்ணன் - அர்ச்சுனன்,துரியோதனன் - கர்ணன், பரமஹம்சர்-விவேகானந்தர் என்று எவ்வளவு varieties!தலைவன் -தொண்டன் நிலை தாண்டிய தோழமைக்கு ராமனும் அனுமனும். மாப்பிள்ளை மச்சான் உறவைப் புறந்தள்ளும் கிருஷ்ணன் - அர்ச்சுனன் நட்பு, அந்தஸ்தை துச்சமாக்கிய துரியோதனனின் சிநேகிதம், குரு சிஷ்ய பாவத்தை மீறிய பரமஹம்சர்-விவேகானந்தர் நட்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மணிக்கொடியில் ‘சொத்துக்குடையவன்’, ஹாஸ்ய பத்திரிக்காசிரியன் போன்ற பல கதைகளை எழுதியவர் A.K.ராமச்சந்திரன் என்ற கி.ரா. ஒவ்வொரு மணிக்கொடி இதழும் வெளி வருவதற்கு கி.ராமச்சந்திரனின் ஒரே மோதிரம் அடகு வைக்கப்படும்.பின்னாளில் இவர் ஜெமினிஸ்டுடியோ கதை இலாகாவில் வேலைக்கு சேர்ந்தார். ஔவையார் படத்தில்,வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பெயரை டைட்டிலில் பார்க்கலாம்.

க.நா.சு தன் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலை இவருக்கும் சேர்த்து சமர்ப்பணம் செய்திருக்கிறார். அந்த நூலில் மணிக்கொடி கி.ரா. பற்றி க.நா.சு சொல்வது ‘ கி.ராமச்சந்திரனின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சுத்தமானதல்ல. அந்தக் காலத்தில் ஒரு சாமியார் ஒருவர் இருந்தார்.ஒரு சாரார் அவரை கயவன், அயோக்கியன் என்றும், அவர் மகான், சித்தர் என்று மறுசாராரும் அபிப்பிராயம் கொண்டிருந்தனர். அந்த சாமியாரிடம் மணிக்கொடி கி.ராமச்சந்திரனுக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது’

கி.ராமச்சந்திரனே கூட கடைசியில் ஒரு சாமியாராகவே மாறிவிட்டார்!தி.ஜானகிராமன் ஒரு முறை அவரை சாமியாராக சந்திக்க நேர்ந்து, பின் க.நா.சுவிடம் உயர்வாக ‘கனிந்த சாமியாராகத்தான் ராமச்சந்திரன் தெரிந்தார்’ என கூறியிருக்கிறார். அதன் பின்னாலொரு தடவை க.நா.சு வீட்டிற்கு வந்து கி.ரா பூஜையெல்லாம் செய்தாராம்.
புதுமைப்பித்தன்,கு.ப.ரா.,மௌனி,ந.பிச்சமூர்த்தி,
சி.சு.செ, சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் மரணம் பற்றியெல்லாம் நமக்குத்தெரியும்.சிட்டி தன் 96 வயதில் 2005ல் மறைந்தார்.
ஆனால் மணிக்கொடி கி.ராமச்சந்திரன் மாயமாய் மறைந்து விட்டார்.என்ன ஆனார்,அவருடையா மரணம் எப்படி,எப்போது சம்பவித்தது என்று யாருக்குமே தெரியாது.

யூசுப்கான் பாகிஸ்தானிலிருந்து வந்தவன்.ஹிந்தி திரையுலகில் இன்றும் கூட Living Legend திலீப்குமார் என்றுபிரபலமான யூசுப்கான் பாகிஸ்தானியா?இந்தியனா? சில வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் அரசு திலீப் குமாருக்கு பெரிய விருது வழங்கி கௌரவித்தது.இங்கே சிவசேனாவின் கண்டனம்.திலீப் குமாருக்கும் Identity Crisis உண்டு. 22 வயது சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்ட போது திலீப்குமாருக்கு 44 வயது. சிவாஜி கணேசனிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் ‘ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ.ஹிந்தியில் யூசுப் பாய்’ என்று தான்  பதில் வரும்.

கி.ராமச்சந்திரன் மிகவும் துன்பத்துக்குட்பட்டவர்.புதுமைப்பித்தன்,கு,ப.ரா,
சி.சு.செல்லப்பா,தி.ஜா ஆகியோர் வாழ்க்கையிலும் சிக்கல்கள் இருந்தன. நாம் அறிவது, அறியக்கூடியது மிக மிகக் குறைவு. நடந்ததைப் பற்றி க.நா.சு கூறுவது போல என்றென்றுமாக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தான் அசோகமித்திரன் சொலலகூடியவர். ஹிந்தி நடிகர் திலீப் குமாரிடமும் நல்ல குணங்கள் இருந்திருக்கத்தான் வேண்டும் என்றாலும், மணிக்கொடி கி.ராமச்சந்திரனுடன் நீடித்த உறவுக்கான மனம் இருந்திருக்குமா? சினிமாத்துறையில் ‘கண்டால் காமாட்சி நாயக்கர்  காணாட்டி வடுவப்பயல்’ ரீதியான விட்டேத்தியான உறவு தான் சகஜம்.

நாவல்,சிறுகதை போன்ற படைப்புகளில் கற்பனையை ஒருமுகப்படுத்துவதற்காகவேண்டி முன்மாதிரிகள் படைப்பாளிகளுக்கு அவசியம். உதாரணமாக அசோகமித்திரனின் ‘விரல்’ கதையில் வருவது எழுத்தாளர் ஜி.நாகராஜன். ஆனால் கதையில் உள்ள படி அசோகமித்திரனுக்கு அவர் பள்ளி நண்பன் அல்ல.
’மானசரோவர்’ நாவலில்1964ல் நேரு மரணமடைகிறதைப் பற்றிய பதிவு உண்டு.ஆனால் திலீப்குமார் ஜெமினி படங்களில் நடித்த ஆண்டுகள் 1955,அதன் பின்னர் 1959.பாத்திரங்களின் விரிவில் எது நிஜம், எது கற்பனை என்று வாசகன் பிரித்துப் பார்ப்பது சிரமம்.

’கரைந்த நிழல்கள்’ நாவலில் சிவாஜிகணேசன் பற்றி,இயக்குனர் பீம்சிங் பற்றி கடுமையான விமர்சனம் இருப்பதைக் காண முடிகிறது.

அசோகமித்திரனின் ‘கடன்’ சிறுகதையில் வரும் நடிகர் ஸ்ரீராம் அப்போது ஜெமினி ஸ்டுடியோவின் நம்பிக்கை நட்சத்திரம். ஜெமினி கணேசனுக்கு அந்தக் காலகட்டத்தில்ஸ்ரீராம் தான் Rival! 1953 ல்’மூன்று பிள்ளைகள்’ படத்தில் பெயர் வாங்கும்படி நடித்தவர்..முதலாளி வாசனையே எதிர்த்துப் பேசி எதிர்காலத்தைப் பாழாக்கிக்கொண்ட துரதிர்ஸ்டசாலி. ராமண்ணாவின் முதல் படம்’ வாழப்பிறந்தவன்’(1953) படத்தில்கதாநாயகனாக நடித்தவர்.1954ல் ‘மலைக்கள்ளன்’ படத்தில் வில்லனாக எம்.ஜி.ராமச்சந்திரனுடன் சண்டை போட்டவர் ஸ்ரீராம்.1960களில் ‘ பாலும் பழமும்’, ‘பச்சை விளக்கு’,’பழனி’,’இதயக்கமலம்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துத்தான் இந்த நம்பிக்கை நட்சத்திரம் தொலைந்து போனது.
‘கடன்’ சிறுகதை நடிகர் ஸ்ரீராமின் பொருளாதாரச்சிக்கலை சுற்றிச்சுழன்று நெஞ்சைப் பிழியும் உருக்கமான சித்திரமாக விரிந்திருக்கிறது.

‘போட்டியாளர்கள்’ சிறுகதை ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகிகளாக நடித்த வைஜயந்தி மாலா,( அழகான இளவரசி) பத்மினி ( அழகான பிரஜை) இருவரை வைத்து எழுதப்பட்டது. பத்மினி வீட்டில் படத்திற்கான டான்ஸ் ரிகர்சல்.ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் கூட இந்தக் கதையில் வருகிறார். டான்ஸ் ரிகர்சலின் போது Sound Assistant  ஆக வரும் இளைஞனின் விரசமான நடவடிக்கை அதிர்ச்சியேற்படுத்துகிறது.ஒரு நடிகை என்றில்லை.எந்தப்பெண்ணுமே ஒருவன் பார்க்கின்ற பார்வையின் நோக்கத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.அந்நியனின் பார்வையில் விரசமும் வேட்கையும் பெண்ணை அவமானப்படுத்துகிற விஷயம்.’போட்டியாளர்கள் ‘ கதையில் அந்த சௌண்ட் அசிஸ்டண்ட் பலர் முன்னிலையில் நடிகையின் குடும்பத்தார் கூட இருக்கின்ற நிலையில் Masturbation என்கிற அளவிற்கு மிகவும் ரசாபாசமாக நடந்துகொள்கிறார்.ஒரு திரைப்பட நடிகை இளமையழகை மூலதனமாக்கி தன்னுடைய ‘நிழல்பிம்பம்’பலரையும் தவிதவிக்கச் செய்வதில் தான் தொழில் வெற்றி அடங்கியுள்ளது என்பதை நன்கறிந்தவள் தான் என்றாலும் கூட, பகிரங்கமாக தன் நிஜ உடல் விரச வேட்கை,பார்வை நடவடிக்கைகளால் காயப்படும்போது இவளுடைய பெண்மைக்கு ஏற்படும் மன உளைச்சல்,வேதனையின் நுட்பமான துயர பரிமாணம் பரிபூர்ணமாக பதிவாகியுள்ள கதை தான் ‘போட்டியாளர்கள்’.

மானசரோவர்,விரல், கடன்,போட்டியாளர்கள் கதையின் பாத்திரங்கள் திலீப்குமார்,மணிக்கொடி கி.ராமச்சந்திரன்,ஜி.நாகராஜன்,ஸ்ரீராம்,வைஜயந்திமாலா,பத்மினி  என கண்டுபிடித்து நான் அசோகமித்திரனிடம் சொன்னபோது அவருக்கே உரித்த பாணியில் அசந்து ஆச்சரியப்பட்டு ‘அடடே!அடடே!எப்படி!எப்படி ராஜநாயஹம்! கண்டுபிடித்துவிட்டீர்களே! அடடே! ’என்றார்.

‘பாத்திரத்தின் முன் மாதிரியை அடையாளம் கண்டு கொள்வது ஒரு தனித்தேர்ச்சியின் பேரில் வருவது’ என்று அசோகமித்திரன் ஜூலை 2004 காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார்.

Jul 16, 2012

Nothing in Common (1986 )


டாம் ஹாங்க்ஸ் படங்கள் கொஞ்சம் விஷேசத்தரமானவை. அவருடைய மாஸ்டர் பீஸ் படங்கள் வரிசையில் Nothing in Commen படம் பற்றி யாரும் பேச மாட்டார்கள். The Big, Sleepless in Seattle, Philadelphia,Forrest Gump,Apollo 13,Saving Private Ryan, The Green Mile,Cast Away, Road to Perdition,The Terminal,The Da Vince Code போன்ற படங்கள் வரிசையில் Nothing in Common படத்தை யாரும்  சேர்க்க மாட்டார்கள்.
100 greatest movies, 100 passions, 100 laughs,100 quotes என்ற லிஸ்ட் எதிலும் Nothing in Common படம் இடம் பெற்றதில்லை தான். டாம் ஹாங்க்ஸ் நடித்த படங்கள் ஒவ்வொன்றையும் இரு முறைக்கு குறையாமல்  பார்த்து விடும் வழக்கம் கொண்ட நான் இந்தப்படத்தை மட்டுமே ஐந்து தடவை பார்த்திருக்கிறேன்.


டாம் ஹாங்க்ஸ்க்கு அப்பாவாக நடித்துள்ள  ஜாக்கி க்ளீசன்( பால் நியூமன் படம் Hustler ல் நடித்தவர்.) அவர் நடித்த கடைசி படம்Nothing in Common. 1987ல் இறந்து விட்டார்.
அம்மாவாக On the Waterfront, North by Northwest  படங்களில் ஹீரோயினாய் நடித்த இவா மாரி செயிண்ட்.


I thoght you'd like to know your mother left me to day. 36 years of marriage, and she walks out.It's 12'O clock at night and I'm alone." என்று ஜாக்கி க்ளீசன் போன் செய்கிறார்.
டாம் ஹாங்க்ஸ் பதில்” Be fair. I hear from you three times. For Christmas, hockey tickets, and now ' your mother has left me.'
அம்மா விளக்கம் “ There was nobody to talk to. I would check his chair.That's how I knew he was home. I didn't leave because of the yelling. I left because of the silence."

People just can't seem to relate anymore.

இப்படி ஆரம்பிக்கும் கதை.
Sales manஅப்பா மகனிடம் “ I lost my lines. They fired me."

அப்பா அம்மா இருவரையும் இயல்பாக போஷிக்கும் மகன்.100 Quotes in100 years ல் இப்படத்தை எப்படி தவிர்த்தார்கள்?

"Who can say that amoebas don't make noise?"

"Is he your boyfriend?""An old high school flame. This is what you want to avoid later in life."

"It is economically unsound to grow up."

"I'm saying  grand mothers are getting younger every day."

ஜாக்கி க்ளீசன் மகனிடம் “ My father.You. Me. We could always take a girl into bed!"

அம்மா மகனிடம் தன் யோகா க்ளாஸ் காதலர் டாக்டர் பெட்சோல் தன்னை முத்தமிட்டதை சொல்கிறாள்.

 ‘ BedSole kissed me and I got scared"
டாம் ஹாங்க்ஸ் “ Why should that scare you?"
அப்பாவிடம் மகன் -” Just tell me. What did you do to her? Mom's afraid of other man. You cheated on my mom. Then you made her feel dirty."

டோன்னா வாக நடிக்கும் பெஸ் கதாநாயகனிடம்

” I won't be your emotional pitstop
 anymore."
'An emotional pitstop.That's beautiful'நடிகை செலா வார்ட் க்கு அப்பா (ஊல்ரிட்ஜ் கதாபாத்திரம்) பேரி கார்பினும் டாம் ஹாங்க்ஸும் பேசிக்கொள்வது
"My daughter speaks very highly of you. she says you are a great lay.My baby tells me everything."
"Quite a strange conversation for a daughter and father!"


My dad has a passion for horses." என்பார் டாம். பேரி “Breeding?"
" No,Betting !"


அழுகிக்கொண்டிருக்கும்  அப்பாவின் கால்கள்.  ஆஸ்பத்திரியில் சேர்த்து குணப்படுத்தி வீல் சேரில் கொண்டு செல்லும் மகனிடம் “ You're the last person I thoght would ever  come through for me."


http://rprajanayahem.blogspot.in/2009/12/when-harry-met-sally1989.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/roman-holiday.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/doctor-zhivago.html

http://rprajanayahem.blogspot.in/2009/03/on-waterfront-1954movie.html

http://rprajanayahem.blogspot.in/2009/03/apartment1960movie.html

http://rprajanayahem.blogspot.in/2009/03/well-nobody-is-perfect.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/birds-1963-movie.htmlJul 15, 2012

நட்சத்திரம், சிறகின் இறகு, சீதை

மீள் பதிவு

31-08-2009 ல் எழுதப்பட்ட பதிவு

நட்சத்திரம், சிறகின் இறகு, சீதை
வானில் இரவில் நட்சத்திரங்கள். இருட்ட ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றாய் தெரிய ஆரம்பிக்கின்றன .
லா .ச .ரா உரைநடையே கவிதை தான் .வாசனாதி திரவியங்களை எழுத்தில் கொண்டுவந்தவர் . " புத்ர" நாவலில் :
" சூரிய சாக்ஷி ஓய்ந்த பின் , இரவில் பூமி சகிக்கும் க்ரம அக்ரமங்களைக் கவனிக்க வான் அனந்தம் கண்கள் ஒவ்வொன்றாய்த் திறக்கின்றன ."
பாரதி தாசனின் பிரபலமான புல்லரிக்க வைக்கும் கவிதை கீழே :
" மண் மீது உழைப்பார் எல்லாம் வறியராம் .
உரிமை கேட்டால் புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம் .
இதைத் தன் கண் மீது பகலில் எல்லாம் கண்டு கண்டு
அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி !"
சிறுகதையின் திருமூலர் 'மௌனி' தன்னுடைய பிரத்யேக பாணியில் நட்சத்திரங்கள் பற்றி கொள்ளும் அபிப்பராயம் :"யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில் ஜ்வலிக்கும்,விலைகொள்ளா வைரங்களை கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் இறைத்தான் போலும். ஆயிரக்கணக்காக அவை அங்கேயே பதிந்து இன்னும் அவன் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன."
தி ஜானகிராமன் தன் 'மலர்மஞ்சம் ' நாவலில் பார்க்கும் நட்சத்திரங்கள் :
இந்த ஆழ்ந்த மௌனம் தான்
அதன் திவ்யமான குரல்
வாரித்தெளித்துக்கிடக்கும் இந்த ஒளிகள் தான்
அதன் இளநகை.

'வழி ' சிறுகதையில் புதுமைப்பித்தன் :வானம் அந்தியந்தமும் கவ்விய இருட்டு . உயர்ந்த இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது போல கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்.
.....................................பிரமிளின் மிக பிரபலமான கவிதை :
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி செல்கிறது .
லா ச ரா வின் உரைநடையில் தெளித்து விழும் கவிதை :
பறக்கும் கொக்கின் சிறகடியினின்று
புல்தரை மேல் உதிர்ந்து
பளீரிடும் வெள்ளை இறகு .
......

Sita! The silent pillar of strength!

சீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும் , மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம் .
லா .ச .ரா . : "சீதை குளித்த நெருப்பு .
நெருப்பின் புனிதம் சீதைக்கா ?
சீதையின் புனிதம் நெருப்புக்கா ?"
....
சீதை பற்றி நான் படிக்க நேர்ந்த இன்னொரு விஷயம் . யார் சொன்னது என்று நினைவில்லை . அந்த வார்த்தைகள் மட்டும் மறக்கவே முடியவில்லை .
" சேறு தெளித்த தாமரை போல
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
சோகமாகவும் இருந்தாள்."
இப்படி ஒரு பெண்ணை சிலவருடங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அருணாம்பிகை!The Silent Pillar of Strength ! ஸ்ருதி, மதுமஞ்சரி ஆகிய இரண்டு கன்னி தெய்வங்களின் தாய் அருணாம்பிகை!


அதனாலும் இந்த வரிகள் மறக்கமுடியவில்லை . யார் சொன்னது ??..
........................................................


மீள் பதிவு  03-09-2009

கண்டேன் சீதையை!


பல மாதங்களாய் நான் மூளையை கசக்கி விடை தெரியாமல்
இரண்டு நாளாய் பரண் மேல் தேடி ஒரு வழியாய்..... கண்டேன் சீதையை .
" சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள் ."

தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி ' சிறுகதையில் சொல்கிறார் .

கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா? ராமாயண பாகவதரின் மகன் தி.ஜா!
..

சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று . திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.
" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி
திரிசடை கனவு கண்டாளாம் ''

Jul 13, 2012

SADISM

மீள் பதிவு

18.09.2008 ல் எழுதப்பட்ட பதிவு


ஆலமரத்தானும் ,ஒச்சு, குருவிமண்டையன், ஒத்தகாதன் நாலு பேரும் பயிர்குழியில கலக்கு முட்டி ( வார்னிஷ் ) அடிச்சிட்டு நல்ல போதை.

ஆலமரத்தான் : டே .. நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமையத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற கலக்குமுட்டி யாவாரி கொன்னவாய் ராசுவை ரைடு பண்ணி கைய ஏத்தி கட்டி கொண்டு போயட்டேங்கே ... கொஞ்ச நாள் நமக்கு கலக்கு முட்டி காய்ச்ச பாடு தான் இனிமே ..

ஒச்சு : மாமா ... நேத்து ஆத்துக்குள்ளே தத்தனேரி மாருதி டூரிங்ல சினிமா பாத்துட்டு வந்திட்டு இருக்கேன். ஒரு முடை தாழன் சிக்குனான். சாமானை தூக்கி அவன் வாயிலே வச்சா உறிஞ்சு தள்ளிட்டான். எனக்குன்னா கடுப்பு. சிகரெட்ட பத்தவச்சேன் .
தூக்குடா பொச்சை காட்டு ன்னேன். சந்தோசமா பொச்சை தூக்கி காமிச்சான் . எச்சை துப்பி குண்டிகுள்ளே தடவிக்கிட்டான். நல்லா இன்னும் தூக்குடா னேன். இன்னும் தூக்கி நல்லா காமிச்சான். சிகரெட்ட குண்டிக்குள்ளே சொருகிட்டேன். மாமா அந்த ராவுலே முடை தாழன் ’அய்யோயோ’ன்னு அலறி கத்தி கதறி கிட்டே ஓடுனான் பாக்கணும். நான் இரண்டு கல்லை எடுத்து அவன் மேலே வீசி ஓடுரா ஓடுறான்னு விரட்டினா ...

ஆலமரத்தான் : மாப்ளே , அப்படி போடு , சபாசு . முடைதாழன் சிக்குனா ஜோலி யை முடிச்சவுடனே மாத்து செம்மையா குடுத்துடணும். நான் எப்பவுமே ஜப்தியடிச்சி அவிங்க கிட்ட சிக்குற சில்லறை, பலப் (மோதிரம் ) இதெல்லாத்தையும் ஆட்டையை போட்டுருவண்டா ..

Jul 12, 2012

கண்ணதாசனின் அரசியல் வாழ்வு

மீள் பதிவு
20.10.2008 ல் எழுதப்பட்டது.


அரசியலில் இருந்துகொண்டே சினிமாவுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை,தன் மன நிலை இரண்டையும் சினிமா பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
திமுக வில் இருந்து சம்பத்தோடு வெளியேறிய சூழலில் அண்ணாதுரை பற்றி
 " அவனை நினைத்தே நானிருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை . அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை. அண்ணன் காட்டிய வழியம்மா. " -படித்தால் மட்டும் போதுமா.

"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் எஸ் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால்.

தமிழ் தேசிய கட்சி காங்கிரஸில் இணையும் சூழலில் காமராஜரை குறித்து
 ' அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி.' வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி ' என்ற பாடல் - பட்டணத்தில் பூதம்.அண்ணாத்துரை அமெரிக்காவில் புற்று நோய்க்கு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பி வந்த போது “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா?“

இப்படி பல பாடல்கள் பற்றி பட்டிமன்ற பேச்சாளர்கள் , பிரபலமான பேச்சாளர்கள் மட்டுமல்ல சாதாரண உரையாடல்களில் இப்படி பலரும் பல கண்ணதாசன் பாடல்கள் பற்றி பேசிகொள்வார்கள்.

நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை.
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள்.

அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது. கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ். என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார். காமராஜர் மேல் அளவு கடந்த பற்று். திமுக வுக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ. திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை.( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)

திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது.

 நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார். திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார்.

திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர். அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர். மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள். உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள். பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார்.
திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது. ஒருவர் கருணாநிதி! இன்னொருவர் அன்பில் தர்மலிங்கம்!  ஆமாம்.கண்ணதாசனே இப்படிச் சொன்னார்.

கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் ஒருவிதமான Love and Hate relationship!ஒரு வேளை பூர்வஜென்ம பந்தமோ என்னவோ! முதல் முறையாக 1940களில் எம்.ஜி.சக்கரபாணி  கண்ணதாசனை அழைத்துப் போய் கருணாநிதியை அறிமுகப்படுத்திய போது தனக்கு
 ‘ காதலியை ப்பார்த்த உணர்வு’ ஏற்பட்டதாகவே கவிஞர் குறிப்பிட்டுள்ளார். கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி
 “ தென்றலாய் தீண்டியவனும் நீ! நெருப்பாய் சுட்டவ்னும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்தபோதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!” என்று இரங்கல் எழுதினார்.தாக்குதல் என்றால் சாதாரண தாக்குதல் அல்ல. வனவாசத்தில் எழுதியவை மட்டுமல்ல. மேடையிலும். கருணாநிதி ‘ காமராஜரின் தாயார் கருவாடு விற்றவர்’ என்று சொன்னதற்காக கண்ணதாசனின் பதிலடி’ ஆமாம். என் தலைவனின் தாய் கருவாடு தான் விற்றார். கருவாடு மட்டும் தான் விற்றார்!’

 கண்ணதாசன் பெத்தடின் இஞ்சக்சன் போதையில் அளவுக்கு மீறி மூழ்கிய போது கண்ணதாசனின் பிள்ளைகள் கருணாநிதியிடம் போய் அழுதார்கள். அப்போது கருணாநிதி கவிஞரிடம் கேட்ட வார்த்தைகள்: ’எங்களையெல்லாம் அழ வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறாயா?’


திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டு அண்ணா திமுக அமோக வெற்றி. ஸ்தாபன காங்கிரஸ் இரண்ட்ராமிடம் . திமுக மூன்றாமிடம். இந்திரா காங்கிரஸ் நான்காமிடம்.

'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '
என்று காமராஜர் எதிர்காலம் பற்றி கணித்த கண்ணதாசனுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என புரிந்து விட்டது.


எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன்.

 எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்

" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "

தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார். எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார்.
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி:

ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே?

கண்ணதாசன் பதில்:
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன். உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள்; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '

கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார். உடனே கண்ணதாசன் சொன்னார்!
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "


கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது.

ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்
கேள்வி : எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதியின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது?

அரசு பதில் : 'வன வாசம்' தான். ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது.

Jul 8, 2012

Carnal Thoughts - 33

I.P.C யில் RAPE என்ற வார்த்தையை எடுத்து விட்டு அதற்கு பதிலாக SEXUAL ASSAULT  ஆக மாற்ற மத்திய அரசு உத்தேசிப்பதாக ’ஹிண்டு’ பேப்பரில் இரண்டு வருடம் முன் படித்த ஞாபகம்.

போன நவம்பரில் இண்டியன் எக்ஸ்பிரஸில் க்ரிமினாலஜி புரொபசர் திலகராஜ் எழுதிய கட்டுரை படித்தேன்.'' Love and Lust Murders are classified as ' Partner Violence'.''

சேக்ஸ்பியரின் ஒதல்லோ தன் கதாநாயகியிடம் செய்வது Partner Violence.மாசற்ற டெஸ்டமோனா.


இங்க்மார் பெர்க்மன் இயக்கிய The Virgin Spring(1960) படத்தில் வரும் கற்பழிப்பும் கொலையும் வேறு வகை. கற்பழித்துக் கொலை செய்யப்படும் இங்கெரி என்னும் மாசில்லாத சிறுமி.Eroticism பற்றி Love பற்றி  Breathless (1960) பிரஞ்சு படத்தில் கோடார்ட் சொல்கிறார்:

"Eroticism is a form of Love and Love a form of Erotism."

Decameron (1971) இத்தாலி இயக்குனர் பஸோலினியின் படங்களில் முக்கியமானது. இந்தப் படத்தில் பத்து கதைகள். ஒரு கதையில் பசோலினி ஒரு ஓவியராக நடித்திருக்கிறார்.
 

டெக்கமரான் படத்தில் இன்னொரு கதையில் ஒரு கன்னிகாஸ்திரி மடம். ஒன்பது கன்னிகாஸ்திரிகள். இந்த ஒன்பது பேரும் புருஷலோலிகள்.

(ஸ்திரிலோலனுக்கு எதிர்ப்பதம் புருஷலோலி.பெண் பித்து பிடித்த ஆண் ஸ்த்ரிலோலன். ஆண்பித்து பிடித்த பெண் புருஷலோலி.புருஷ லோலி என்ற vocabulary’பரஸ்பரம்’ சிறுகதையில் கோபிகிருஷ்ணன் புழக்கத்தில் கொண்டுவந்தார்.)
அந்த Nunnery யில் ஒரு கட்டுமஸ்தான வாலிபன் labour வேலைக்கு சேர்ந்துவிடுகிறான். ஒவ்வொரு சிஸ்டராக ஒன்பது பேருமே அந்த இளைஞனை சோலி பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வாலிபன் உற்சாகமாக முதலில் இயங்கியவன் ரொம்ப களைத்துப்போய், போதும் போதும் ஓத்த ஓலுன்னு எந்திரிச்சி சாமான சொறிஞ்சி விட்டு சொல்வான்: ஒரு சேவல் பத்து பெட்டைக்கோழியை சோலி பார்க்க முடியும். பெட்டைக்கோழிகளும் திருப்தியா சிறகை உதறிக்கொள்ள முடியும்.ஆனால் பத்து ஆம்பிளைகளாலும் இந்த சோலியில் ஒரு பொம்பளையை திருப்தி படுத்தவே முடியாது. நான் ஒரு ஆம்பிளை ஒன்பது சிஸ்டர்களை இடைவிடாம... இதெல்லாம் எப்படிம்மா..  ஏதேனும் ஒரு சிஸ்டம் வேண்டாமா? ஒரு நாளைக்கு ஒரு பொம்பளைன்னு
time table போடுங்க. இல்லைன்னா ஆளை விடுங்க. நான் கிளம்புறேன். நான் sex வேணும்னு தான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன்.ஒத்துக்கிறேன்.அதுக்குன்னு இப்படியா”


Nunnery எனும்போது அல்மொடோவர் இயக்கிய ஸ்பானிஷ் படம் Dark Habits (1983) பற்றி குறிப்பிட வேண்டும்.
 
 யோலன்டா எனும் காபரே பாடகி  ஒரு கான்வெண்ட் டுக்கு வருகிறாள். மதர் சுபீரியர் போதை மருந்துக்கு அடிமையானவள்.அதோடு கூட ஒரு லெஸ்பியன். யோலன்டாவை அவள் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள். இரண்டு பேரும் ஹெராய்ன் போதையை அனுபவிக்கிறார்கள்.
Are'nt you a nun? என்ற கேள்விக்கு  No, I'm a whore என்கிறாள் யோலன்டா.
சிஸ்டர் ஸ்நேக் - பாதிரியார் இருவரும் லவ் பண்ணுகிறார்கள்.
 Sister Snake, Sister Damned, Sister Rat இப்படி படம் பெரும்பகுதி பெண் கதாபாத்திரங்கள். ஒரு சிஸ்டர் நம்ம இருகோடுகள் ஜெயந்தி சாயலில்!


நிறுவனமாக்கப் பட்ட மதத்தின் இழிந்த நிலை பற்றிய படம். Spiritual Desolation and Moral Bankruptcy!  மதர் ஜெனரல் கான்வெண்டையே கலைத்து விடுகிறாள்.

 Dark habits படத்தில் ஒரு வசனம்:
There are as many kinds of kisses as kinds of love; the paternal kiss on the forehead, the kiss on the eyes full of peace, the amusing kiss on the nose, the friendly kiss on the cheek. All of these are somewhat anodyne, but they could be taken as tempting invitations to more perfidious ones, such as the indiscreet kiss on the throat, or the coaxing kiss in the ear which is like being told a secret. And finally there is the kiss on the lips. "A kiss means nothing," say the thoughtless.