Share

May 30, 2022

தலைமுறைகள்



மூன்று தலைமுறை 

தெலுங்குப் படம் ‘மனம்’. 

நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, 
நாக சைதன்யா இணைந்து நடித்து வெளி வந்தது.
 மூன்று தலைமுறை நடிகர்கள் அப்பா, மகன், பேரன் இணைந்து நடித்த படம்
 உலக சினிமாவில் இது ஒன்று மட்டுமே
 என்று பரவலான நம்பிக்கை இங்கே இருக்கிறது. 


 
 ‘தி இந்து’ செய்தித்தாளில் இந்து டாக்கீஸ் உலகத் திரை உலா விலும் இப்படியே அபத்தமாக குறிப்பிடப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல.
 மூன்று தலைமுறை இணைந்து நடிப்பது 2014ல் நிகழ்ந்து விட்ட அதிசயம் என்ற பிரமை தவறாகும்.

1971ல் பிருதிவிராஜ் கபூர், ராஜ் கபூர், ரண்திர்கபூர் இணைந்து நடித்து
 ‘கல் ஆஜ் அவுர் கல்’ அதாவது 'நேற்று, இன்று, நாளை' என்ற பெயரில் ஒரு படம் 
பேரன் ரந்திர் கபூர் இயக்கத்தில் வந்துள்ளது.


 ரந்திர் கபூர் தான் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் இருவரின் அப்பா. ரன்பிர் கபூரின் பெரியப்பா.

ஜெயா டிவியில்
  மறைவதற்கு முன்பு நாகேஸ்வர ராவ் பேட்டி                                         ஒன்று பார்க்க கிடைத்தது. 
என்ன அழகாக நாகேஸ்வர ராவ் 
தன் நினைவுகளைச் சொன்னார். 
You should look gracefully old. 
முதுமையில் அழகு என்றால் என்ன என்பதை அவரது தோற்றம் உணர்த்தியது.

....

பின்குறிப்பு

Zali Lizamzali 

இலங்கை நண்பர் லிஷாம்ஷாலி எனக்கு மறந்து விட்ட
ஒரு விஷயம் 
நினைவூட்டியதற்கு நன்றி.

1951லேயே 
ஆவாரா படத்தில் ராஜ்கபூருடன் அப்பா பிருத்விராஜ் கபூர், தாத்தா பேஷேஸ்வர் நாத் கபூர் நடித்திருக்கிறார்கள். 
பேஷேஸ்வர்நாத் கபூர் ஜட்ஜாக வந்திருக்கிறார்.
ராஜ் கபூர் தம்பி சசி கபூர் சிறுவன் ராஜ் ஆக தலைகாட்டியிருந்தார்.
பிருத்வி ராஜ்கபூர் கதாநாயகனின் அப்பாவாகவே.

May 25, 2022

பண்டிட் பீம்ஸன் ஜோஷி

பண்டிட் பீம்ஷென் ஜோஷி
- R.P. ராஜநாயஹம்

(மீள் பதிவு 01.11.2008)

நான் திருச்சியில் எட்டாண்டுகளுக்கு முன் மெடிக்கல் டிரன்ஷ்க்ரிப்சன் கோர்ஸ் படித்து ஒரு சர்டிபிகேட் வாங்கினேன்.

அந்த கோர்ஸ் நான் படிக்கும் போது எனக்கு ஒரு விரிவுரையாளர் இருந்தார்.
 அவர் பெயர் ஜோஷி.
 அவர் தன் தங்கையின் கல்யாண பத்திரிக்கையை எனக்கு கொடுத்தார்.
 அது இதே போல நவம்பர் மாதம்.
முகூர்த்த தேதி 28.11.2000. கல்யாணம் கர்நாடகா பெல்காமில் .

 என்னை கல்யாணத்திற்கு வர வேண்டும் என அழைத்தார் . அவரது ஒரே தங்கை.

நான் ஆசுவாசமாக அந்த பத்திரிக்கையை பிரித்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை.

"Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you"
என அழைப்பிதழ் ஆரம்பித்ததை கனவு என்பதா ?

என் விரிவுரையாளர் ஜோஷிக்கு என்னுடைய ஆதர்ச ஹிந்துஸ்தானி கிளாசிகல் பாடகர் பண்டிட் பீம்சன் ஜோஷி சொந்த பெரியப்பா!

 ஜோஷியின் மறைந்து விட்ட தந்தையின் உடன் பிறந்த சகோதரர்.

நானோ சாதாரணமாக Hyper Sensitive!

என்னுடைய அந்த நேர உணர்வுகளை சொல்ல இப்போதும் என்னிடம் வார்த்தைகளே இல்லை . 

பீம்சன் ஜோஷி ஆடியோ கேசட் இருபதுக்கு மேல் சேகரித்து வைத்திருப்பவன் . 
பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை என்னை அவர் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். என்ன ஒரு மகத்தான கௌரவம்.
இந்த மாதிரி சந்தோசத்தை அனுபவிக்க 
எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது .

என்னால் அந்த திருமணத்திற்கு போக இயலவில்லை. ஆனால் மணப்பெண்ணுக்கு என் அன்பளிப்பை என் விரிவுரையாளர் ஜோஷியிடம் கொடுத்தனுப்பினேன்.

இவர் போய் அவர் பெரியப்பா பீம்சன் ஜோஷியிடம் அவருடைய Ardent Fan R.P.Rajanayahem பற்றி தன்னுடைய மாணவர் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
பண்டிட் தன் ஆசியை எனக்கு சொல்லியனுப்பினார்.

அந்த திருமண பத்திரிக்கையை பத்திரமாக ஒரு பொக்கிஷம் போல வைத்திருக்கிறேன். நேற்று அவருடைய பிருந்தாவன் சாரங்கா கேட்டுக்கொண்டு இருக்கும்போது அந்த அழைப்பிதழ் என் கையில்.

Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you

....................

பாரத ரத்னா பண்டிட் பீம்ஷென் ஜோஷி
மீள் பதிவு 05.11.2008

பண்டிட் பீம்ஷன் ஜோஷிக்கு இந்திய அரசு நேற்று(04.11.2008) பாரத ரத்னா விருது அறிவித்து உள்ளது.
பாரத ரத்னா விருதும் இப்போது அவருக்கு கிடைத்து விட்டது.

"பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை" என்று நவம்பர் ஒன்றாம் தேதி தான் எழுதினேன்.

Music is the proper task of life!

..................


May 24, 2022

Sarod Ustad Amjad Ali Khan


பண்டிட் அம்ஜத் அலிகான் சரோட் இசையோடு, இளமையில் அவரை விட மூத்த ஒரு பெண்மணியோடு இசைவு கொண்டிருந்தார். விவாகரத்தான அந்த பெண்ணுக்கு முன்னரே குழந்தையும் இருந்தது. அந்த பெண் அம்ஜத்தை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்திருக்கிறார்.
எட்டு வருட affair அது. 

இந்த தொடர்பின் ஐந்தாவது வருடம் குடும்ப வற்புறுத்தலுக்கு தலையசைத்து ஒரு திருமணம். புதுப்பெண் இவருடைய வயதேயானவர். அதன்பிறகும் பழைய மூத்த பெண் உறவு தொடர்ந்திருக்கிறது. புதுப்பெண்ணுக்கு அடுத்த வருடம் குழந்தை பிறந்தவுடன் விவாகரத்து.
அதன்பிறகும் இரண்டு வருடம் அந்த பழைய fornication.

திருமணத்தில் பிறந்த தன் குழந்தையை உடன் பிறந்த அண்ணனுக்கு தத்து கொடுத்து விட்டு முழுக்க சரோட் வாத்தியத்தோடு மட்டுமே Affair.

அஸ்ஸாமைச் சேர்ந்த சுப்புலஷ்மி எனும் பரதநாட்டிய கலைஞருடன் நேசம் மலர்ந்து, அந்த இந்துப் பெண்ணை இந்த முசல்மான் மணமுவந்து திருமணம் செய்து கொண்டார்.

Successful marriage. 
அமான், அயான் என்று இரண்டு மகன்கள்.

அற்புதமான சரோட் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகான்.
பாரதிதாசனின் பாடல் தேஷ் ராகத்தில்

" துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ?" என புலம்பும் .

“I will play the Swan and die in Music”

- Shakespeare in ‘Othello’

ஏகாந்தமாக, தனிமையில் இசையை அனுபவிப்பது 
இது போன்ற தருணங்களில் சாத்தியம் என தோன்றுகிறது .

“I am never merry
 when I hear sweet music”
-Shakespeare in ‘The Merchant of Venice’
....

இங்கே அம்ஜத் கானுடைய 
சரோட் வாத்தியம் இசைக்கும் 
இந்த தேஷ் ராகத்திற்கு 
சபீர் கான் தபேலா.

May 20, 2022

சேலம் பாலம் வாசகர் சந்திப்பில் சினிமா எனும் பூதம்


சேலம் சஹஸ்ரநாமம் பத்மநாபன் நடத்தும்
'பாலம் வாசகர் சந்திப்பு'
21.05. 2022 
சனிக்கிழமை
மாலை 7 மணி

"ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, 
அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக,  Shakespearean Scholar 
ஆக இருப்பதால்,  
அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து 
தெறிக்கும் தகவல்கள்
 மிக அழகான நடையில், 
எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான 
தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன."

-எழுத்தாளர் சுப்பாராவ் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.

நாளை சனிக்கிழமை (21.05.22)                            மாலை 7 மணிக்குச் சந்திப்போம்.

May 19, 2022

Gossip and Rumors



Gossip and Rumors
- R.P.ராஜநாயஹம்

திடீரென்று ஒரு போன்.
’ராஜநாயஹமா? ’

”டேய் நான் தான்.. டா? ஐந்தாவதில ஒங்கூட படிச்சனே”

நினைவு மின்னலில் குறிப்பிட்ட இந்த என் பால்ய நண்பனைத் தேட சிரமமேதும் இல்லை.

பால்ய வயதிற்கு பின்னோக்கி போக எனக்கு எந்த சிக்கலும் ஏற்படவே இல்லை. என் தகப்பனாரும் அவனுடைய தகப்பனாரும் அப்போது திருச்சியில் சுங்க இலாகா அதிகாரிகள்.

ஐந்தாவது படிக்கும்போது அவன் தான் என் நெருங்கிய நண்பன். இருவரும் இரட்டைக்குழந்தைகள் போல எப்போதும் ஒன்றாகவே இருப்போம். சினிமாவுக்கு ஒன்றாகப்  போவோம். என்னென்ன படம் என்பது கூட இன்னும் பசுமையாக! 

ஞாபகமிருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட என் வீட்டுக்கு வருவான். நான் அவன் வீட்டுக்குப் போவேன்.
எவ்வளவு வருடங்கள்.

செல்பேசியில் இது போல் இவ்வளவு காலம் கழித்துப் பேச வாய்க்கும்போது உண்டாகும் இயல்பான பரவசம்.
’டேய், எப்படிடா கண்டு பிடிச்சே’ நான்.
“நான் இப்போது மும்பையில் கஸ்டம்ஸ் சூப்ரிண்ட்.திருச்சியில் இருந்து ஒரு சூப்ரண்ட் இங்கே வந்திருந்தார். அவரிடம் உன் அப்பா பற்றி விசாரித்தேன். அவர் மகன் இப்போது திருச்சி கஸ்டம்சில் சூப்ரண்ட் என்றார். உன் Bro என்று தெரிந்தது. அவனுக்கு போன் போட்டேன். அவன் உன் நம்பர் தந்தான்”

என் பால்ய நண்பன் ரொம்ப உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தான் என்பது அவன் குரலிலேயே தெரிந்தது.

அந்த ஒன்பது வயதில் எங்கள் வாழ்வின் நினைவுகளை பரவசமாய் மாறி மாறி இருவருமே பகிர்ந்து கொண்டோம். அவன் சொன்ன சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் இல்லை.நான் சொன்ன சில சம்பவங்கள் அவன் நினைவில் இல்லை.

”உன்னப் பத்தி இன்னொரு விஷ்யமும் எனக்கு தெரியும்“ 
ஒரு பிரபல ந்டிகை பெயரைச் சொல்லி நிறுத்தினான்.

எனக்கு விஷாதம். 
ஏன் அந்த நடிகை பெயரைச் சொல்லி நிறுத்தி சிரிக்கிறான்?

"ரொம்ப வருடங்களுக்கு முன்
 ஒரு முறை உன்ன பத்தி விசாரித்தேன். நீ சினிமாவில் இருந்திருக்கிறாய் என்று தெரிந்தது.அது மட்டுமல்ல. அந்த நடிகையுடன் You were living together என்றும் கேள்விப்பட்டேன்.”

”டேய், இந்த விஷயம் ஏதோ ஒருத்தர் சொன்னது கிடையாது.
 பலபேரு அப்படி சொன்னாங்க”

அதெப்படி பலர் என்னை ஒரே நடிகையுடன் இனணத்துச் சொல்லமுடியும்’

“ அந்த நடிகையை சினிமாவில், டி.வி.யில் பார்க்கும்போதெல்லாம் ராஜநாயஹம் ஞாபகம் தான் வரும்டா” 
ஹா..ஹா.. என்று ரசித்து 
மும்பையில் இருந்து சிரிக்கிறான்.

”ஏதோ ஓர் உக்கிரம் கண்விழித்து வேறோர் ஒழுங்கில் அடுக்கிவிட்டு
மீண்டும் விழிமூடிக்கொண்ட சாகசமோ ”

தேவதேவன் இந்த வரிகளை எந்த சூழலில் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் இந்த நேரம் அந்த வரிகள் தான்
 இங்கே என் மனதில்.

Gossip is  the devil's Radio.

நான் என் பால்ய நண்பனிடம் இது உண்மையல்ல என்று மறுதலிக்க ஆரம்பித்தேன். அவன் “ Easy,Easy" என்று என்னை தேற்ற ஆரம்பித்தான். ”எல்லாம் ஒவ்வொரு நேரம் இப்படித்தான்.
 எனக்குக் கூட ஒரு affair உண்டு.”

ஒரு பிரபல நடிகரின் மகள் 
 இந்த என் பால்ய நண்பனின் காதலியாக இருந்திருக்கிறாள். அவள் திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்னும் கூட 
இவனைத் தேடி வந்திருக்கிறாள்.

ராஜநாயஹமும் இப்படி சில காலம் ஒரு நடிகையுடன் வாழ்ந்திருக்கிறேன்..
  We were sailing the same boat..

என்னை ஐந்தாம் வகுப்பில் படித்ததற்கு பின் இவன் பார்த்ததேயில்லை.
ஆனால் ரொம்ப வருடங்களாக என்னைப் பற்றி 
ஒரு அபவாதத்தை நம்பிக்கொண்டே இருந்திருக்கிறான்.

ஊரறிய திருமணமாகி
 எவ்வளவோ வருடங்கள் ஓடிவிட்டன. ஒக்க பத்னி.


யோசித்துப் பார்க்கையில் என்னைப் பற்றி வதந்திகள் அவ்வப்போது நானே கேள்விப்பட்டிருக்கிறேன்.

 வீண் பழி, அபவாதம், அவதூறு. விதவிதமான 
வண்ண வண்ண வதந்திகள்.
வதந்திகளை என்ன தான் செய்யமுடியும்?

“Don't waste your time with explanations: people only hear what they want to hear.”   

- Paulo Coelho  
       

...............................................


பகடி, அளவு, நடை, துள்ளல், லாகவம்


"எழுத்துலகின் பகடி பிதாமகர் 
திரு R.P. ராஜநாயஹத்தின் எழுத்துக்களை வாசித்தலே பகடியில் பல்கலைப் பட்டப் படிப்பு படிக்க உதவும்."
"பத்தி எழுத்து என்பதற்கு கச்சிதமான உதாராணம்..
அளவு, நடை, துள்ளல், லாகவம். இப்படி எத்தனையோ 
பாடமாக வைக்கலாம்.."

- Sureshkumar Iyer

May 18, 2022

நட்சத்திரங்களுக்கு பின்னால் விந்தை கலைஞன்





தெளிவாக தெரியும் 
மூன்று நட்சத்திரங்கள். 
பின்னாலே தலை நீட்டும் 
 விந்தைக் கலைஞன்

The Moon behind the clouds

https://m.facebook.com/story.php?story_fbid=2728333034046812&id=100006104256328

Pandit Hariprasad Chaurasia


Flute
Pandit Hariprasad Chaurasia's good old concert long back with Ustad Zakir Hussain's Tabla 

Chaurasiya - The great master of the "WIND"

"The flute is not an instrument that has a good moral effect - it is too exciting."
- Plato

ஃப்ளூட் மாலியோட காத்து யாருக்கும் வராதுன்னு ரொம்பப் பெரியவங்க சொல்வாங்க.

ஹரிப்ரசாத் சௌராசியா காத்து கூட அதே, அதே.  செம..

The magic of Flute and Tabla in Raag Chandrakauns


May 16, 2022

ரஸுல் கம்ஸதாவ் - கவிஞனின் பேசும் சிலை

"யோவ், வேண்டாய்யா
 நீ உக்ரைன படாத பாடு படுத்தப்போறவன்.
என்னோட செலய நீ தெறக்க ஒனக்கெல்லாம் யோக்கியத கெடயாது.. இதெல்லாம் நியாயமே இல்ல" ன்னு பேசிய
ரஸுல் கம்ஸதாவ் சிலை.

 "I sometimes feel that the soldiers
Who have not returned from the bloody fields
Never lay down to earth
But turned into white cranes.."
என்று தன் புகழ் பெற்ற போருக்கெதிரான 'Zhuravli' கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த ருஷ்ய கவிஞன் ரசுல்.
அவார் மொழி கவி. அவார் அவன் தாய் மொழி.

இந்த சிலையை பார்த்தவுடன்
மன ஆழத்தில் இருந்து மேலெழும்பிய நினைவு காட்சி.

30 வருடங்களுக்கு முன்னர் புதுவையில் நான் இருந்த போது லாஸ் பேட்டையில் கி.ராஜநாராயணன் வீடு.
 அவரை பார்க்க போவது வழக்கம்.
கி. ரா மேஜையில் குறிப்பு எழுதுகிற நோட்டு புத்தகம். 
பல எழுத்தாளர்களுக்கும் உள்ள பழக்கம் தான்.
இயல்பாக ஆர்வத்துடன் அந்த நீளமான நோட்டு புத்தகத்தில் அவர் எழுதியுள்ளதை பார்த்தேன்.

முதல் பக்கத்தில் ஒரே ஒரு மேற்கோள், மற்றும் அதை சொன்னவர் பெயர் மட்டுமே.
" என்னுடைய அவார் மொழி நாளை மறையுமெனில் இன்றே நான் இறப்பேன்"

-ரஸுல் கம்ஸதேவ்

கம்ஸதாவ் பெயரை கம்ஸதேவ் என்றே கி.ரா எழுதியிருந்தார்.

Photo:
Vladimir Putin in opening ceremony of the monument to the poet Rasul Gamzatov in Yauzsky Boulevard in Moscow.
Date 5 July 2013

May 14, 2022

Shakespeare's Romeo says this

ஷேக்ஸ்பியர் வரிகள் இவை.
"Sleep dwell upon thine eyes, 
peace in thy breast!
Would i were sleep and peace, 
so sweet to rest."

- Romeo and Juliet

ரோமியோ தான் இதை சொல்கிறான்.

ஷேக்ஸ்பியர் படைப்புகள் பற்றி கொஞ்சம் கவனம் இருந்ததால் தான் ஒதல்லோ நாடகக்காட்சி ஒன்றை கண்ணதாசன் தன் சொந்த படத்தில் சேர்த்திருந்தார். 'ரத்த திலகம்' படத்திற்கு அழகூட்டிய காட்சி.

அதற்கு முன்பே 'ஆலயமணி'க்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்

"தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே 
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்.."

அப்படியே ஷேக்ஸ்பியர் வரிகளின் மொழிபெயர்ப்பு.

Sleep dwell upon thine eyes,
 peace in thy breast!
Would l were sleep and peace....

May 13, 2022

Rajan Mishra & Sajan Mishra - Raag Miyan ki malhar

Lend your ears and eyes

This is YOUNGER 'Mishras' Music.

A Visual treat to watch also. 

Graceful presentation of 
Raag Miyan ki malhar

Wonderful rendition.

Pranaam to the legends,
Rajan Mishra & Sajan Mishra.


"There is no raga like Miyan Malhar in Carnatic. As answered before, it can be a mix of Kaapi and Kaanada.

One more interesting thing though. There is a substitute for a ‘Rain raaga’ in Carnatic, that is, Amritavarshini.

Hence, it can be safely be said that the equivalent of Miyan Malhar is Amritavarshini- not in terms of the notes used or the chalan but the overall gist and feel of the raagas are comparable. Both raagas invoke rain.
Just like it is believed that Miyan Tansen used to bring rain by singing Miyan Malhar, Carnatic composer Muthuswami Dikshitar brought rain to Ettayapuram, Tamil Nadu, India by singing his composition, Aanandaamrutakarshini Amrutavarshini."

- Soumya Biswajit

..

May 12, 2022

Pandit Jagdish Prasad



Pandit Jagdish Prasad was the disciple of Ustad Bade Ghulam Ali Khan.


Jagdish was so near his guruji Bade Ghulam in style and gayaki.
Some music lovers feel that Jagdish Prasad was the best in thumri singing even better than Ustad Bade Ghulam Ali Khan.

Jagdish (a Padmashri Awardee) sings 
"Ka karoon sajni Ayana Balam"

Link in comment box

Pandit Shivkumar Sharma and Ustad Zakir Hussain


Santoor Maestro 
Pandit Shivkumar Sharma
Passed away.

Shiv and Raag Yaman

Shiv and Zakir


Two hands in Santoor
Two hands in
Tabla

Shivkumar Sharma and 
Zakir Hussain
'Two bodies with 
one soul'



..

Pandit Shivkumar Sharma
& Zakir Hussain
Raag Bageshri

Shivkumar Sharma' Santoor, so peaceful  relaxing and perfect for night time.

Ustad has tremendous understanding of Pandit.

Tabla gracefully mimics the Santoor.

Both are dignified and full of class.


May 10, 2022

A Comment


Sivakumar Viswanathan:

" RPR Sir, உங்ககூட இதே பிரச்சினை. உங்கள் இலக்கிய அனுபவக் கோர்வைகளை நினைத்து எவ்வளவுதான் ஆச்சரியப்படுவது!                              Was it Socrates who said, 
'Wonder is the beginning of Wisdom'? "

May 8, 2022

ஸ்தல புராணம், ஆதீனம், இத்யாதி




உ.வே.சுவாமிநாதய்யரின் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
 என்பது தெரிந்ததே. 
ஸ்தலபுராணம் பற்றிய விஷயம் தான் பலருக்கும் தெரியாததே.

ஸ்தல புராணம் இல்லாத பல பழம்பெரும் கோயில்கள் இருந்திருக்கிறது. அந்தக்கோவில்கள் உள்ள ஊர்களிலிருந்து முக்யஸ்தர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வந்து சந்தித்து விண்ணப்பம் செய்வார்கள் -’எங்க ஊர் கோவிலுக்கு ஸ்தல புராணம் இல்லை. நீங்கள் தான் எழுதித் தரவேண்டும்’
இப்படி எவ்வளவோ பல கோவில்களுக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தன் பாண்டித்ய திறமையால் 
தன் சொந்தக் கற்பனையில் 
ஸ்தல புராணம் எழுதிக்கொடுத்திருக்கிறார்!
திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆஸ்தான வித்வானாக மீனாட்சி சுந்தரம்பிள்ளை இருந்தார்.

உ.வே.சுவாமிநாதய்யரின்
 “ என் சரித்திரம்” நூலில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றி தகவல்கள் சொல்லியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தை விட திருவாவடுதுறை ஆதீனமும், 
தர்மபுர ஆதீனமும் பெரியவை.

கோயில் கட்டளைகளை நிர்வகிப்பவர் கட்டளை தம்பிரான்.
ஒரு ஆதீனத்தில் பல கட்டளை தம்பிரான்கள் இருப்பார்கள்.
ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு கட்டளை தம்பிரான் இருப்பார்.
இந்த கட்டளை தம்பிரான்களில் ஒருவர் தான் அடுத்த ஆதீனகர்த்தாவாக வர வாய்ப்பு உள்ளவர்.

கட்டளை தம்பிரான் கை மேலே காவித்துணி. 
ஆதீன மஹா சன்னிதானம் 
அதில் கை வைத்துக்கொண்டு வருவார்.
இது தான் ’கைலாகு’!

மாயூர நாத சுவாமி கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகை.
 அதிலேயே குமார கட்டளையாகிய முருகன் சன்னதி 
தர்ம புர ஆதீனத்திற்கு பாத்தியப்பட்டது.

கோயில் விசேஷ பண்டிகை நாட்களில் இரு ஆதீன சார்பிலும் போட்டி போட்டுக்கொண்டு நாதசுரக்கச்சேரி நடக்கும்.

ஆதீனத்திற்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. அந்த பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியைகளுடன் மஹா சன்னிதானம் ’சரீர இச்சை’யை பூர்த்தி செய்து கொள்வதெல்லாம் உண்டு தான். அந்தக்காலத்தில் ஒரு ஆசிரியையின் முலையை கடித்த பண்டார சன்னதி உண்டும்.உண்டும்.

கட்டளை தம்பிரானாக இருக்கிற பிரகிருதி, உச்ச பதவியை கைப்பற்றும் முயற்சியில், கொட்டைப்பாக்கை
 பண்டார சன்னதியின் தொண்டைக்குழியில் 
வைத்து அழுத்தி 
ஆதினகர்த்தாவை கொன்று விடுவதும் நடந்திருக்கிறது.
......................................

2017 ஜனவரி மாதம் 6ம் தேதி பதிவு