Share

May 24, 2022

Sarod Ustad Amjad Ali Khan


பண்டிட் அம்ஜத் அலிகான் சரோட் இசையோடு, இளமையில் அவரை விட மூத்த ஒரு பெண்மணியோடு இசைவு கொண்டிருந்தார். விவாகரத்தான அந்த பெண்ணுக்கு முன்னரே குழந்தையும் இருந்தது. அந்த பெண் அம்ஜத்தை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்திருக்கிறார்.
எட்டு வருட affair அது. 

இந்த தொடர்பின் ஐந்தாவது வருடம் குடும்ப வற்புறுத்தலுக்கு தலையசைத்து ஒரு திருமணம். புதுப்பெண் இவருடைய வயதேயானவர். அதன்பிறகும் பழைய மூத்த பெண் உறவு தொடர்ந்திருக்கிறது. புதுப்பெண்ணுக்கு அடுத்த வருடம் குழந்தை பிறந்தவுடன் விவாகரத்து.
அதன்பிறகும் இரண்டு வருடம் அந்த பழைய fornication.

திருமணத்தில் பிறந்த தன் குழந்தையை உடன் பிறந்த அண்ணனுக்கு தத்து கொடுத்து விட்டு முழுக்க சரோட் வாத்தியத்தோடு மட்டுமே Affair.

அஸ்ஸாமைச் சேர்ந்த சுப்புலஷ்மி எனும் பரதநாட்டிய கலைஞருடன் நேசம் மலர்ந்து, அந்த இந்துப் பெண்ணை இந்த முசல்மான் மணமுவந்து திருமணம் செய்து கொண்டார்.

Successful marriage. 
அமான், அயான் என்று இரண்டு மகன்கள்.

அற்புதமான சரோட் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகான்.
பாரதிதாசனின் பாடல் தேஷ் ராகத்தில்

" துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ?" என புலம்பும் .

“I will play the Swan and die in Music”

- Shakespeare in ‘Othello’

ஏகாந்தமாக, தனிமையில் இசையை அனுபவிப்பது 
இது போன்ற தருணங்களில் சாத்தியம் என தோன்றுகிறது .

“I am never merry
 when I hear sweet music”
-Shakespeare in ‘The Merchant of Venice’
....

இங்கே அம்ஜத் கானுடைய 
சரோட் வாத்தியம் இசைக்கும் 
இந்த தேஷ் ராகத்திற்கு 
சபீர் கான் தபேலா.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.