"யோவ், வேண்டாய்யா
நீ உக்ரைன படாத பாடு படுத்தப்போறவன்.
என்னோட செலய நீ தெறக்க ஒனக்கெல்லாம் யோக்கியத கெடயாது.. இதெல்லாம் நியாயமே இல்ல" ன்னு பேசிய
ரஸுல் கம்ஸதாவ் சிலை.
"I sometimes feel that the soldiers
Who have not returned from the bloody fields
Never lay down to earth
But turned into white cranes.."
என்று தன் புகழ் பெற்ற போருக்கெதிரான 'Zhuravli' கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த ருஷ்ய கவிஞன் ரசுல்.
அவார் மொழி கவி. அவார் அவன் தாய் மொழி.
இந்த சிலையை பார்த்தவுடன்
மன ஆழத்தில் இருந்து மேலெழும்பிய நினைவு காட்சி.
30 வருடங்களுக்கு முன்னர் புதுவையில் நான் இருந்த போது லாஸ் பேட்டையில் கி.ராஜநாராயணன் வீடு.
அவரை பார்க்க போவது வழக்கம்.
கி. ரா மேஜையில் குறிப்பு எழுதுகிற நோட்டு புத்தகம்.
பல எழுத்தாளர்களுக்கும் உள்ள பழக்கம் தான்.
இயல்பாக ஆர்வத்துடன் அந்த நீளமான நோட்டு புத்தகத்தில் அவர் எழுதியுள்ளதை பார்த்தேன்.
முதல் பக்கத்தில் ஒரே ஒரு மேற்கோள், மற்றும் அதை சொன்னவர் பெயர் மட்டுமே.
" என்னுடைய அவார் மொழி நாளை மறையுமெனில் இன்றே நான் இறப்பேன்"
-ரஸுல் கம்ஸதேவ்
கம்ஸதாவ் பெயரை கம்ஸதேவ் என்றே கி.ரா எழுதியிருந்தார்.
Photo:
Vladimir Putin in opening ceremony of the monument to the poet Rasul Gamzatov in Yauzsky Boulevard in Moscow.
Date 5 July 2013
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.