பண்டிட் பீம்ஷென் ஜோஷி
- R.P. ராஜநாயஹம்
(மீள் பதிவு 01.11.2008)
நான் திருச்சியில் எட்டாண்டுகளுக்கு முன் மெடிக்கல் டிரன்ஷ்க்ரிப்சன் கோர்ஸ் படித்து ஒரு சர்டிபிகேட் வாங்கினேன்.
அந்த கோர்ஸ் நான் படிக்கும் போது எனக்கு ஒரு விரிவுரையாளர் இருந்தார்.
அவர் பெயர் ஜோஷி.
அவர் தன் தங்கையின் கல்யாண பத்திரிக்கையை எனக்கு கொடுத்தார்.
அது இதே போல நவம்பர் மாதம்.
முகூர்த்த தேதி 28.11.2000. கல்யாணம் கர்நாடகா பெல்காமில் .
என்னை கல்யாணத்திற்கு வர வேண்டும் என அழைத்தார் . அவரது ஒரே தங்கை.
நான் ஆசுவாசமாக அந்த பத்திரிக்கையை பிரித்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை.
"Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you"
என அழைப்பிதழ் ஆரம்பித்ததை கனவு என்பதா ?
என் விரிவுரையாளர் ஜோஷிக்கு என்னுடைய ஆதர்ச ஹிந்துஸ்தானி கிளாசிகல் பாடகர் பண்டிட் பீம்சன் ஜோஷி சொந்த பெரியப்பா!
ஜோஷியின் மறைந்து விட்ட தந்தையின் உடன் பிறந்த சகோதரர்.
நானோ சாதாரணமாக Hyper Sensitive!
என்னுடைய அந்த நேர உணர்வுகளை சொல்ல இப்போதும் என்னிடம் வார்த்தைகளே இல்லை .
பீம்சன் ஜோஷி ஆடியோ கேசட் இருபதுக்கு மேல் சேகரித்து வைத்திருப்பவன் .
பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை என்னை அவர் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். என்ன ஒரு மகத்தான கௌரவம்.
இந்த மாதிரி சந்தோசத்தை அனுபவிக்க
எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது .
என்னால் அந்த திருமணத்திற்கு போக இயலவில்லை. ஆனால் மணப்பெண்ணுக்கு என் அன்பளிப்பை என் விரிவுரையாளர் ஜோஷியிடம் கொடுத்தனுப்பினேன்.
இவர் போய் அவர் பெரியப்பா பீம்சன் ஜோஷியிடம் அவருடைய Ardent Fan R.P.Rajanayahem பற்றி தன்னுடைய மாணவர் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
பண்டிட் தன் ஆசியை எனக்கு சொல்லியனுப்பினார்.
அந்த திருமண பத்திரிக்கையை பத்திரமாக ஒரு பொக்கிஷம் போல வைத்திருக்கிறேன். நேற்று அவருடைய பிருந்தாவன் சாரங்கா கேட்டுக்கொண்டு இருக்கும்போது அந்த அழைப்பிதழ் என் கையில்.
Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you
....................
பாரத ரத்னா பண்டிட் பீம்ஷென் ஜோஷி
மீள் பதிவு 05.11.2008
பண்டிட் பீம்ஷன் ஜோஷிக்கு இந்திய அரசு நேற்று(04.11.2008) பாரத ரத்னா விருது அறிவித்து உள்ளது.
பாரத ரத்னா விருதும் இப்போது அவருக்கு கிடைத்து விட்டது.
"பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை" என்று நவம்பர் ஒன்றாம் தேதி தான் எழுதினேன்.
Music is the proper task of life!
..................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.