Share

Jul 13, 2026

R.P. Rajanayahem body Donation after death to Medical College

13.07.2026 

Donation of R.P. Rajanayahem body after death 
to Coimbatore Medical College

பூமணி

1982 ல் படித்த நாவல் 'பிறகு' 
மீண்டும் மீண்டும் பலமுறை.
1983ல் படித்த 'வெக்கை' 

2008 அக்டோபர் ராஜநாயஹம் பதிவில்

பூமணியின் "பிறகு" நாவலில் ஒரு காட்சி

சக்கணன் அத்துவான காட்டில்
 நல்ல வெய்யிலில்
 தாங்க முடியாத தாகத்துடன் நீரை தேடுகிறான்.
 நல்ல வறட்டு தாகம். 

அங்கே ஒரு குட்டை தென்படுகிறது.
குட்டையை நெருங்கி குத்த வைத்து குந்தி குனிந்து அப்படியே வாயை நீரில் அமிழ்த்தி நீரை உறிகிறான். 
தேவாம்ருதம். 
நல்ல கடுமையான தாகத்துடன் இருப்பவன் எப்படி நீரை உள் வாங்குவான். சொக்கிப்போய் நீரை மடக்கு மடக்கு என அருந்துகிறான். கண்ணை மூடிக்கொண்டு சுவைத்து நீரை குடிக்கிறான்.
தாகம் முழுதும் தீர்ந்தவுடன் நிதானமாக கண்ணை திறக்கிறான்.
 அப்படியே பார்க்கிறான்.

கண்ணுக்கு க்ளோஸ்-அப் காட்சி.
நீரில் அவன் வாயை யொட்டி மனித மலம் கோபுரம் போல மிதக்கிறது.
 ஆடி ஆடி மிதக்கிறது.

Jul 12, 2026

ஃபீல்ட விட்டே விரட்டப்போறேன்

2012 post 

ஃபீல்ட விட்டு விரட்டப்போறேன்

சினிமா சான்ஸ் தேடி அலைந்து 
சில படங்களில் தலை காட்டிய ராஜபார்ட் நடிகர்களின் குறியீடு தான் இந்த கதையில் வருகிற மஹாராஜா என்ற  கதாபாத்திரம்.

மஹாராஜா என்று  தனக்கு பெயர் வைத்துக்கொண்டான் அந்த சாய்பாபா தலையன்.உயரம் ரொம்ப கம்மி. ஆனால் நினப்பு சாதாரணமல்ல.

முதல் டப்பா படத்தில் வில்லன்.
சிவகுமார் படத்தில் ஒரு நடிகைக்கு அண்ணன்.
இன்னொரு விஜயகுமார் படத்தில்  ரோல்.
அடுத்து ஒரு ஜெய்கணேஷ்  படத்தில் அவருக்கு தம்பி.

அப்புறம் ரெண்டு படங்கள் ஒரு வாரம் ஓடின. அவற்றில் ரெண்டு,மூணு கதாநாயகர்களில் ஒருவனாக இந்த மஹாராஜா!

அந்த நேரத்தில் ஒரு படத்தில் சிவாஜிக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு மஹாராஜாவுக்கு கிடைத்தது. அந்த படம் ஷீட்டிங் நடக்கும்போதே சிவாஜியோடு சவாலாக இப்படி ரோல் இது வரை யாரும் செய்ததேயில்லை என்றான். தங்கபதக்கம் ஸ்ரீகாந்த் ரோல் எல்லாம் நான் இந்த படத்தில் செய்கிற ரோலுக்கு ஜுஜுபி என்றான்.
ஜெமினி,எஸ்.எஸ்.ஆர்,முத்துராமன்,நாகேஷ்,மேஜர், சிவகுமார்,விஜயகுமார்,ஜெய்கணேஷ் யாரும் சிவாஜியுடன் இப்ப நான் செய்யும் ரோல் போல செய்ததேயில்லை என்றான்.
அதில் Irony என்னவென்றால் சிவாஜி என்ற இமயமே அப்போது பெரும் சங்கடத்தில் இருந்த காலம்.

நான் சொன்னேன். “ ‘நான் சொல்லும் ரகசியம் ‘(1959) படத்தில் சிவாஜிக்கு ஈக்வலா அவருக்கு தம்பியா ஒரு நடிகர் நடிச்சார். எஸ்.ஆர்.தசரதன்.

  அதில் சிவாஜி பாட்டு-’நான் சொல்லும் ரகசியம்,பண்பான அதிசயம்
நன்றாக எண்ணிப்பாருங்க அதை அவசியம் அவசியம்’

 அந்த எஸ்.ஆர்.தசரதன் பின்னாளில் இயக்குனர் ஏபிநாகராஜனுக்கு அஸிஸ்டண்ட் டைரக்டரானார்.அவருடையபுராணப்படங்களில் சின்ன சின்ன ரோல் செய்தார்.”
ம்..ம்...வாழ்க்கை காட்டும் ரகசியம்.

மஹாராஜா இந்த யதார்த்தத்தை ரசிக்கவில்லை.

மௌண்ட் ரோட்டில் அந்த சிவாஜி படத்திற்கு பேனர் வைத்தார்கள்.
வாங்க, நாம மூணு பேரும் பார்க்க போவோம் என்றான். நான்,மஹாராஜா மற்றும் அவன் ஜால்ரா ஒருவன். இந்த ஜால்ரா பின்னால் ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா ரேஞ்சில் டைரக்டராக கனவு கண்டவன்.கண்ணதாசன் இடமும் தனக்குத்தான் என அடித்து சொன்னவன்.  இந்த ஜால்ரா தன் rival என்று குறிப்பிட்டது யாரை தெரியுமா? அந்த நேரம்  பிரபலமாகிவிட்ட கே.பாக்யராஜ்!
மூவரும் கிளம்பி்னோம்.ஆட்டோவில். கதீட்ரல் ரோட்டில் இறங்கினோம்.
பேனரை பார்க்க சந்தோஷம். சிவாஜி தலை பெரிதாய்.பக்கத்தில் சுஜாதா தலை. ஒரு பக்கம் முழு ஸ்ரீவித்யா.இன்னொரு பக்கம் நம்ம மஹாராஜா.
அடடே,பரவாயில்லையே, நமக்கு தெரிஞ்ச ஆள் சிவாஜிக்கே தம்பியா நடிக்கிறானே என்று நிஜமாவே சந்தோஷமா இருக்காதா பின்னே?

சரி நடந்தே தி.நகருக்கு திரும்புவோம். நடக்க ஆரம்பித்தோம்.
‘எனக்கு ஒரு மன்மதலீலை, எனக்கு ஒரு பதினாறு வயதினிலே, எனக்கு ஒரு சிகப்பு ரோஜாக்கள், எனக்கு ஒரு கல்யாணராமன் கிடைச்சிருந்தா நான் இன்னைக்கு இருக்கற இடம்? என்ன  எனக்கு கிடைக்கல. அவனுக்கு கிடச்சிச்சி.’ என்று ஆரம்பித்தான்.

எனக்கு ’துணுக்’ என்றது.

இனிமேல் நான் இங்க  எழுதப்போற அவன் சொன்ன விஷயம் தயவு செய்து பலகீனமான நெஞ்சு உள்ளவங்க  படிக்கவே படிக்காதீங்க. இப்பவே ஜோரா ஒரு தடவ கை தட்டிட்டு விலகிக்கங்கங்கங்க...

அப்ப SUN தியேட்டர் கிட்ட நடந்துகிட்டிருந்தோம். சரியா SUN தியேட்டர் முன்னாடி நின்னான். என்னை பெருமையா பாத்தான். “தோஸ்த்!” என்றான்.
நான் அவன பாத்தேன். அவன் சொன்னான். ....
”தோஸ்த், என் கனவெல்லாம் இப்ப தான் நனவாகுது.” என்றவன் அடுத்து பிரம்மாஸ்திரத்தை எடுத்து விட்டுட்டான்.

“கமலஹாசனை ஃபீல்ட விட்டே விரட்டப்போறேன்.”

தட்றா!தட்றா!தட்றா!தட்றா!தட்றா!
ஜால்ரா பலமா கை தட்டினான்..

வாழ்க்கையில எவ்வளவோ இடிய தாங்கத்தானெ வேண்டியிருக்கு.

முந்தைய வருடம்  கமலுக்கு’கல்யாணராமன்’ வெற்றிப்படம் என்றாலும்
’ தாயில்லாமல் நானில்லை‘,’மங்கள வாத்தியம்’ ’நீலமலர்கள்’ ஆகிய படங்கள் ’ஊத்தி’க்கொண்டன.

கமலஹாசன ஃபீல்ட விட்டு விரட்டுறதுக்கு மஹாராஜா கிட்ட சில தேங்காமூடி படங்களும்(அதில் ஒன்னுல விஜயன் கதாநாயகன், இவன்ரெண்டாவது கதாநாயகன்! விஜயனோட அல்லக்கை!வேலையாள் (அதாவது மேனேஜர்) இப்ப ரீலீஸாகப் போற இந்த சிவாஜி படமும் தான்.
தேங்காமூடி படம் என்றால் பூஜையோடு மட்டும், அல்லதுஒரு ஆயிரம் அடி மட்டும் ஷூட் பண்ணி,  அல்லது ஒரு ஷெட்யூலோடு நிறுத்தப்பட்டு விடும் படங்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள்(தயாரிப்பாளர்,இயக்குனர்,கதாநாயக நடிகர்) ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.படம் நிச்சயம் ரிலீஸ் ஆகும் என்று மற்றவர்களையும் தங்களையும் கூட ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஃபைனான்ஸ் ரெடி பண்ணிக்கிட்டிருக்கோம், அடுத்த மாசம் அவுட் டோர் ஷுட்டிங் போப்போறோம்,மூணே மாசத்தில ரிலீஸ் பண்ணிடுவோம்னு அஞ்சாறு வருசம் சலிக்காம சொல்லித்தான் ஓய்வார்கள்.

சிவாஜி படம் ரிலீஸ் ஆனது....போனது. ’சின்னவயசு டி.ஆர்.மஹாலிங்கம் மாதிரி இருக்கான்யா சிவாஜிக்கு தம்பியா நடிக்கிற பய. படம்  போர்’ என்றார்கள்.இவன் ரோல் ரொம்ப சாதாரணமானது.நாடகபாணி நடிப்பு.

 அடுத்த வருடம்  விஜய காந்தும் சந்திரசேகரும் மார்க்கெட்டுக்கு வந்தாங்க. சட்டம் ஒரு இருட்டறை, பாலைவனச்சோலை ரிலீஸ்.
அப்ப நடிகர்சங்கத்தில ஒரு நிகழ்ச்சி.  நம்ம மஹாராஜா ஒரு தயாரிப்பாளர் கிட்ட சொல்றான் : ”இவனுங்க ரெண்டு பேரும் சுதாகர்,விஜயனோட இடத்தை ஃபில் அப் பண்றானுங்க. நான் வரும்போது நம்ம நடிகர் திலகம் எடத்துக்குத்தான் வருவேன்”

அப்புறம் என்ன?

பூஜையோட அம்பேல் ஆன படங்கள் நீங்கலாக அப்பப்ப விஜயகாந்த்,சந்திரசேகர்,மோகன்,சுரேஷ் படங்கள்ள சின்ன,சின்ன ரோல்  என்று துவங்கி பாண்டியனுக்கு தோழனா,முரளியோட நாலு நண்பர்கள்ள ஒருத்தனா,(அதுவும் டப்பா முரளி படத்தில்) கார்த்திக்குக்கு பெரியப்பாவாக,கொஞ்ச வருசம் முன்ன சரத்குமாரோட  டப்பா படத்தில அப்பாவா,சத்யராஜுக்கு மாமாவா,பிரபுவுக்கு சித்தப்பா என்றெல்லாம் சில படங்கள் தான் நடிச்சான் பாவம்.

https://www.facebook.com/share/p/1Cq1SgefEM/

https://www.facebook.com/share/p/Bs8ZvFkwvJqymxGj/

https://www.facebook.com/100006104256328/posts/3908986559314781/?app=fbl
.....

மீள் பதிவு 

Photo 
R.P. ராஜநாயஹம்

Jul 10, 2026

வேடிக்க-66. R.P.ராஜநாயஹம் கண்கள் உடல் தானம்

வேடிக்க - 66

தானம் 
R.P. ராஜநாயஹம் கண்களையும் உடலையும்  தானம் செய்வதாக முடிவு. 

கோவை மெடிக்கல் காலேஜுக்கு மாலை போன் செய்த போது ' இது கம்யூனிகேசன் டிபார்ட்மெண்ட். நீங்க நாளை காலை இந்த நம்பருக்கு பேசுங்க. இப்ப அவுங்க போயிருப்பாங்க."

மறு நாள் காலை அந்த நம்பருக்கு போன் போட்டு விபரம் சொன்ன போது" மேனேஜர் இல்ல. வந்ததும் சொல்றேன். நான் புதுசு. என் பேரு யுவராஜ். " 
மேனேஜர் வந்ததும் மறந்துடாம இந்த நம்பருக்கு பேச சொல்லுங்க'

போனே வரவில்லை. 
மீண்டும் நீண்ட நேரத்திற்கு பின் பேசிய போது மேனேஜர் தேவி இருந்தார். " பையன் புதுசு. விஷயம் சொன்னான்" 

"இருக்கட்டும். கண் தானம், உடல் தானம் செய்ய வேண்டும்."

Broadway Mall க்கு பக்கத்தில இருக்கிற
 KMC யில இருக்கிற ராமமூர்த்தியிடம் பேச வேண்டுமாம். 

ரெண்டு நாளா முடியல.

இன்று காலை போன் போட்ட போது 
"இப்ப எங்க கிட்ட பாடி நெறய்ய இருக்கு. நீங்க ஹோப்ஸ் காலேஜ் அவினாசி ரோட்ல 
Govt Medical college ல Anatomy Department க்கு ஆதார் கார்டு எடுத்துட்டு போங்க. "

"போன் நம்பர் குடுங்க"

"திங்க கிழம தர்றேன். நான் இப்ப லீவுல மதுரயில இருக்கேன்."

This cycle of life really stinks.

Govt Medical College க்கு போன் போட்டு, 
 சித்ரா என்பவர் குருநாதனுடைய நம்பர் கொடுத்தார்.

இதுக்கு எதுக்கு திங்கட்கிழம மதுரையிலிருந்து வந்து தர்றேன்னு சொல்றீங்க சார்.

குருநாதனுக்கு மூன்று முறை போன் போட்ட பிறகு அவரே இரவு எட்டு மணிக்கு பேசினார். 

ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு வாரிசுதாரருடன் இங்க வரவேண்டும். 
கண்கள் தானம் இங்கே பண்ண முடியாது. பெரிய ஆஸ்பத்திரிக்கு நீங்க போகணும். இல்ல அரவிந்த் ஆஸ்பத்திரி போய் பாருங்க. விட்னஸ் ரெண்டு பேரோட வரணும்.

"அப்ப அலைய விடுறீங்க"

"தொண்ணூறு வயசுல வர்றாங்க. உங்களால முடியாதா?நீங்க ஏங்க இப்படி அலைய விடுறோம்ங்கிறீங்க. 
உடல் தானம்னா முழுசா ஒடம்ப குடுத்துடணும்."

" கண் தானம் பண்ணக்கூடாதா"

"உடல் தானம்னாலே முழு உடலையும் தான் குடுக்கணும்" 

" என்ன சொல்றீங்க?"

"கண் தானம் நீங்க பாத்துக்குங்க. உடம்பு தானம் பண்ண வாரிசுதாரரோட மெடிக்கல் காலேஜ் வாங்க"

"வர்றோம். விட்னஸ் நீங்க பாத்துக்குங்க"

" நாங்க யாராவது விட்னஸ் கையெழுத்து போட்டுக்கறோம். திங்க கிழம பதினொரு மணியில இருந்து ரெண்டு மணி வரை இருப்பேன்"

"முகத்தில அடிக்கிற மாதிரி 'தொண்ணூறு வயசு ஆளெல்லாம் வர்றாங்க. நீங்க வரமுடியாதா' ன்னு பேசலாமா" என்று கேட்ட போது 
குரு நாதன் "நான் சொல்ல வந்தது என்னன்னா'" ன்னு நெறய்ய பேச ஆரம்பித்தார். போனை கட் பண்ணுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

The way to Noble Cause is invariably paved  with difficulties

Jul 5, 2026

அவலும் உமியும்


"ரெண்ட்ட இஎம்ஐயா கட்டுங்க.
 12 மாச இஎம்ஐ 
ஃப்ரீ"

இதெல்லாம்??
ஒரு வருஷ இஎம்ஐ! 
என்ன நடக்குது.

"அவல் கொண்டு வா. உமி கொண்டு வர்ரேன்.
ஊதி ஊதி சாப்டலாம்"

Hold what you buy.Owning a home is a keystone of wealth.
Homeownership is the foundation of a Man's Dream

"I would give a thousand furlongs of sea for an acre of barren ground.” – Shakespeare

Jul 3, 2026

K. பாக்யராஜ் சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி தொடரில்

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி தொடரில் 

"K.பாக்யராஜ்"

05.07. 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 
எட்டரை மணிக்கு 
முரசு டிவியில்

Jul 2, 2026

ச.தமிழ் செல்வனுடன்

02.07. 2026

4.45 pm 

Vande Bharat Train 

ச. தமிழ் செல்வனுடன் 
தற்செயல் சந்திப்பு

Jul 1, 2026

சினிமா எனும் பூதம் தொடர்

222, 223 Episodes 

Shooting on 2nd July, 2026 in Kalaignar TV

1. K. பாக்யராஜ் 

2.  பாரதிராஜா 

R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம்

ஞாயிற்றுக்கிழமைகளில் 
முரசு டிவியில்
காலை எட்டரை மணிக்கு ஒளிபரப்பு 

.....

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று 'சினிமா எனும் பூதம் '
தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக்
கொண்டிருக்கிறது.