சாரு நிவேதிதா தன்னுடைய "உண்மையும் பொய்யும்" என்ற ஒரு பதிவில் தன்னிடம் வி.ஆர் கிருஷ்ணய்யர் பற்றி ராஜநாயஹம் பேசும்போது குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இப்படி எழுதியிருந்தார்.
இது "எனக்கு குழந்தைகளைப்பிடிக்காது" என்ற சாரு நிவேதிதாவின் புத்தகத்தில்
(பக்கம் 151ல்) இடம்பெற்றிருக்கிறது.
" நண்பர் ராஜநாயஹம் ஒரு முறை குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் தன் மனைவியுடன் லண்டன் போயிருந்த போது நடந்த சம்பவம் இது.
கிருஷ்ணய்யரும் அவர் மனைவியும் ரயிலில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பதை ரயிலில் நின்றபடி வந்துகொண்டிருந்த இளைஞர்கள் சிலர் கவனித்து வந்திருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக மக்கள் மற்றவர் பேசுவதை கவனிப்பதில்லை. அதனால் கிருஷ்ணய்யருக்குக் கொஞ்சம் ஆச்சரியம். வண்டி நின்றதும் அந்த இளைஞர்கள் கிருஷ்ணய்யரிடம் வந்து கை குலுக்கி " விக்டோரியன் ஆங்கிலம் வழக்கொழிந்துவிட்டது என்றே இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம். இப்போது உங்கள் இருவரின் பேச்சிலிருந்துதான் அது இன்னமும் உயிரோடு இருப்பது தெரிகிறது; நன்றி" என்றார்களாம். உச்ச நீதிமன்ற நீதிபதியின் நிலைமையே இப்படியென்றால் மற்ற இந்தியர்களின் ஆங்கிலத்தைப் பற்றி கற்பனை செய்து கொள்ளலாம்."
.................................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.