எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்.
அப்பா திருச்சியில் இருந்து இரவு ஏழு மணிக்கு கரூருக்கு அவருடைய ஜாவா பைக்கில் பின்னால் அமர வைத்து அழைத்து வரும் போது பேசிக்கொண்டே, பலவாறு கேள்வி கேட்டுக்கொண்டே, பாட சொல்லி கேட்டுக் கொண்டே பைக் ஓட்டிக்கொண்டு வந்தார்.
இடையில் நிறுத்தி பிஸ்கட்.
வீட்டிற்கு இரவு 9 மணிக்கு சேர்ந்த பிறகு அம்மாவிடம் சொன்னார். " தொர தூங்கிட்டா ஆபத்து. பேசிக்கொண்டே, பாடச்சொல்லிக்கொண்டே தான் வந்தேன். வீடு வந்து சேர்ற வரை பதட்டம் "
ரமேஷ் கண்ணன் கவிதை படித்ததும் நினைவில் அந்த அப்பா
"டூவீலர் டாங்க்கில்
படுத்து உறங்கும் குழந்தையைக்
குனிந்து குனிந்து பார்த்து
வண்டி ஓட்டும் தகப்பனின் வீடு
அருகில் இருந்தால் போதும் "
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.