Share

Nov 5, 2019

Don't build your hopes on a foundation of confusion

அஞ்சு வருஷம் முந்தி 2014ல ஜி. கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதுசா கட்சி ஆரம்பிச்சப்ப நான் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு கீழே:

Don't build your hopes on a foundation of confusion.
- R.P.ராஜநாயஹம்

புதுசா ஜவுளிக்கடையை  மெயின் பஜாரில் ஆரம்பிக்க சரியான நேரம் தீபாவளிக்கு முந்தைய இரு மாதங்கள். அப்போ தான் செமையா கல்லா கட்ட முடியும். அப்படியில்லாமல் தீபாவளி முடிந்த பின் ஜவுளிக்கடை ஆரம்பிக்கற ஆளை என்னவென்று சொல்வது?

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸை விட்டு வெளியே வந்து புது கட்சி ஆரம்பித்திருந்தாலாவது  நிலவரம் என்னவென்று இப்போது தெரிந்திருக்கும்.
அப்பா மூப்பனார் கட்சி ஆரம்பித்த போது இருந்த சூழல் வேறு.
அன்று தங்கபாலு, குமரி அனந்தன் தவிர தமிழக காங்கிரஸின் பல மேல்மூடிகள் உடனே, உடனே மூப்பனார் பின் வந்தார்கள். தி.மு.க வும் இது தான் காங்கிரஸ்  ஆக முடிவே செய்து முழு கௌரவம் அளித்தது.
இன்றைக்கு தி.மு.க  நிலை உள்ளங்கை நெல்லிக்கனி!
கருணாநிதி ராஜதந்திரம் இன்று செத்த பாம்பு!

மூப்பனார் மகன் இன்றும் ரஜினி சப்போர்ட்டை எதிர்பார்ப்பது ...
அன்றைக்கிருந்த ரஜினி வேறு, இப்போதிருக்கிற ரஜினி வேறு.

எல்லோருக்கும் பழம் கொடுத்துக்கொண்டிருக்கிற ரஜினியைப் பார்த்து
வாசன் கெஞ்சுகிறார்." Give me a hand please ".

மூப்பனார் மகன் தனியாக நின்று ஓட்டு கேட்பாரா?
என்ன எதிர்பார்ப்பு?

அதிமுகவுடன் கூட்டணியா?

திமுகவுடன் கூட்டணியா?ராமதாஸ்,வைகோவெல்லாம் உதறித்தள்ளும் திமுக!

பி.ஜே.பி கூட கை கோர்க்க உத்தேசமா?

"நேக்கு யாரைத்தெரியும்? போகனும்னு தோன்றது. எங்க போகறதுன்னு தெரியலயே.. நான் எங்க போவேன்? "

Never make a decision when you are upset. Not knowing which decision to take can be the most painful.Don't build your hopes on a foundation of confusion.

.....................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.