Share

Oct 21, 2008

ஆதவன் பற்றி கூபாவிலிருந்து விஜய்


வருடம் 1974 -இறுதிப்பகுதி.

நான் ஆதவனை முதலில் பார்த்தது என் அண்ணாவின் வீட்டில் (சரோஜினி நகர், புது டில்லி). ஏதோ புத்தகம் கொடுக்கவோ, வாங்கவோ வந்திருந்தார். சில நிமிடங்களே இருந்துவிட்டுப் போனதாக ஞாபகம். என் அண்ணாவின் நண்பர். அவருடன் ரயில்வே மினிஸ்ட்ரியில் வேலை செய்துகொண்டிருந்தார் அப்பொழுது. அண்ணாவின் மூலம் அவர் எழுத்து பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். {அவருடைய ‘இரவுக்கு முன் வருவது மாலை' (if I remember the title right) பற்றி (சிறுகதைத் தொகுப்பு?) - என் அண்ணா சிலாகித்ததாக நினைவு.} அவருடைய கட்டுரை ஒன்று (சாகித்ய அகாதமி விருது பற்றி என்பதாக நினைவு)கணையாழியில் படித்திருந்தேன். கடைசி முறையாக அவரைப் பார்த்தது டில்லி மௌளங்கர் ஆடிட்டோரியத்தில்,'பாரதி 200'விழாவின் போது. அவர் அதில் பேசினார். அவ்வப்போது கையில் வைத்திருந்த குறிப்புகளைப்பார்வையிட்டபடி, பாரதியின் எழுத்துக்கள், கருத்துக்கள் பற்றி ஒரு unorthodox சொற்பொழிவாற்றினார். மென்மையான, sensitive-ஆன மனிதர் எனத் தோன்றியது.அவருடைய அகால மறைவு பற்றி, சோமாலியாவில் நான் இருந்தபோது கேள்விப்பட்டு சோர்வுற்றேன்.ஆதவனின் ‘காகித மலர்கள்' நாவலைக் கடந்த வருடம்தான் படிக்க நேர்ந்தது. இன்னும் நிறைய இவர் எழுதியிருக்கக் கூடாதா என ஏங்க வைத்த எழுத்து. இந்தியா திரும்பியவுடன் படிக்கவிரும்பும் நாவல்கள் முக்கியமாக இரண்டு: ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', மற்றும் சாரு நிவேதிதாவின் ‘ஸீரோ டிகிரி'.உங்களுடைய வலைப்பதிவுகளை கொஞ்ச நாளாகப் படித்துவருகிறேன். நன்றி : சாரு நிவேதிதாவுக்கு, உங்கள் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்காக.

அன்புடன், -

விஜய் (ஹவானா, கூபா).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.