Share

Oct 12, 2008

மனைவி அமைவதெல்லாம்

ஷேக்ஸ்பியர் மனைவி ஆன்னி ஹாத்தவே அவரை விட எட்டு வயது மூத்தவர் .
டாக்டர் சாமுவேல் ஜான்சன் திருமணம் செய்த பெண் எலிசபெத் டெட்டி போர்ட்டர். இவர் ஜான்சனை விட 21 வயது மூத்தவர் .
டெண்டுல்கர் தன்னை விட ஆறு வயதுமூத்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டார் .இம்ரான்கான் இப்போது விவாகரத்து செய்த பெண் ( அல்லது அந்த பெண் விவாக ரத்து செய்தாரா ?) அவரைவிட 25வயதிற்கு இளையவர் .
அந்த காலத்தில் ஹிந்தி நடிகர் திலிப் குமார் 44 வயதில் 22 வயது சாய்ரா பானு என்ற நடிகையை திருமணம் செய்தார் . தன் வயதை இரண்டால் வகுத்து பெண்ணை மணந்து கொண்டார் . இன்னும் அவரோடு தான் வாழ்கிறார் .

என்னுடைய சிநேகிதி சங்கரி லக்ஷ்மி பிரமாதமாக பரத நாட்டியம் ஆடுபவர் .அருமையாக பாடுவார் . தன்னை விட ஆறு வயது இளையவரை திருமணம் செய்தார் . இப்போது லண்டனில் இருக்கிறார் .என் இரண்டாவதுமகன் அஷ்வத் தான் கல்யாணத்தில் மாப்பிள்ளை தோழன்!

சரி சரி இப்ப என்ன ?

எங்க தாத்தாவை விட ஆச்சி ( அப்பத்தா) 35 வயது இளையவராம் . முதல் மனைவி இறந்து போனதால் இரண்டாவது திருமணம் . 45 வருட தாம்பத்யம் . ஐந்து பிள்ளைகள் பெற்றார்கள். தாத்தா இறக்கும்போது அவருக்கு 101 வயது ! ஆச்சி அடுத்த நான்காவது வருடம் இறந்து போய் விட்டார் .
இதை எண்ணி வியந்தேன் . சிந்தனை பலவாறு ஓடிவிட்டது !

5 comments:

  1. Tendulkar's wife is just 1-yr elder....Check the facts!

    ReplyDelete
  2. Anjali's birthday: 10 November 1967
    Sachin's birthday: 24 April 1973
    Source: wiki.answers.com

    Philips, now you do the math and find out the fact.

    ReplyDelete
  3. epowerx

    Thanks!

    Philips you have confused me .

    Don't misguide .

    ReplyDelete
  4. பெரும்பாலும் என்னைவிட வயதில் மூத்த பெண்களையே நான் விரும்பியிருக்கிறேன், காதலித்திருக்கிறேன். அவர்களில் ஒருத்தியையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்ததும் உண்டு. வயதில் இளைய பெண்களைவிட வயதில் மூத்த பெண்களே பெரிதும் ஈர்த்திருக்கிறார்கள். இது ஒரு அற்புதமான விஷயம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.