Share

Oct 18, 2008

Franz Kafka’s “First Sorrow”

சில கதைகள் படித்தால் மனதில் உட்கார்ந்து விடும் .

Kafka வின் கதை “First Sorrow”

Kafka வுக்கும் Nietzsche வுக்கும் திருமண வாழ்க்கை கொடுத்து வைக்கவில்லை பாருங்கள் . இரண்டு பேருக்குமே நிச்சயம் நடந்து கல்யாணம் நடக்கவில்லை .

'முதல் துயரம்' என்ற Kafka வின் கதை தமிழில் கூட ஆர் .சிவகுமார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 'தொனி' eன்ற சிற்றிதழில் வெளிவந்தது .

பார் விளையாட்டு கலைஞன் பற்றிய கதை .

பார் விளையாட்டு என்பது அடைவதற்கரிய மனித சாதனைகளில் ஒன்று .

இந்த பார் கலைஞன் ஒற்றை பாரில் விளையாடுபவன் . அவனுக்கு திடீரென்று ' இனி எப்போதும் எதிர் எதிராக இருக்கும்படியாக இரண்டு பார் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் தேவை என்று தோன்றி விடுகிறது . ஒற்றை பாருக்கு பதிலாக இரண்டு பார் இருப்பது நிகழ்ச்சியை இன்னும் பிராமாண்டமாக்கும் . அதன் விறுவிறுப்பு , கணம் , சுவை கூடிவிடும் என அவனுக்கு நிச்சயமாகி ஒரு நிலையற்ற தன்மையை அவனுக்குள் உருவாக்குகிறது .

'என் கைகளில் ஒரே ஒரு பார் . நான் எப்படி இனி தொடர்ந்து வாழ முடியும் ?'

“Sense of incompleteness”

இப்படி அவனுக்கு மனதில் பட்டு விட்ட பிறகு அவனை அந்த எண்ணம் அமைதியாக இருக்க விடுமா ?

அவனுடைய' இருப்பு 'அச்சுறுத்தலுக்கு இனி உள்ளாவதை தவிர வேறு வழியேது .

துயரத்தின் முதல் ரேகைகள் !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.