Share

Oct 17, 2008

காங்கோ - தமிழக ரவிச்சந்திரன்

வருடம் 1983. காங்கோ அரசரடி யில் ஏ ஏ ரோடு முடியும் இடத்தில் நிற்கிறான் . நாற்பது வயது . சுற்றிலும் விடலை பையன்கள் . " டே' ட்ட்ரம்பி 'லைபரேசன்' மூவி பார்த்தியாடா " 'தம்பி' என்பதை இங்க்லிஷ் அக்சென்ட் ல்' ட்ட்ரம்பி ' என்று தான் காங்கோ சொல்வார் . லிபெரேசன் தான் லைபரேசன் . இப்படி தான் அமேரிக்காவில் உச்சரிப்பார்களாம்.

காங்கோ இங்கே என் வலைதளத்தில் அறிமுகமானவர் தான். கோழி களவாணி யை போலீசில் பிடித்துகொடுக்கும் முயற்சியில் தானே விதி வசத்தால் லாக் அப் பில் மாட்டியவர் .

சிகரெட் குடிக்கும்போது காங்கோவுக்கு விரல்கள் நடுங்கும் .

அங்கு காங்கோவை சூழ்ந்து நின்ற வாலிபர்களில் ஒருவன் " அண்ணே ! குடையில ஓட்டை இருக்கலாம் . ஆனா படகிலே ஓட்டை இருக்ககூடாதுன்னே " என தத்துவம் பேசினான் .

காங்கோ " டே ட்ட்ரம்பி யார்ரா இவன் . என்னையே மிரட்டுறான் ."

இந்த நேரத்தில் ஏ ஏ ரோட்டில் தமிழக ரவிச்சந்திரன் ஸ்டைல் நடை நடந்து வந்து கொண்டிருந்தான் .

இந்த பாலு காங்கோவின் பால்ய நண்பன் . நாற்பது வயது . இவன் வீட்டில் அப்போது ஜப்தி நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது . கொஞ்ச நாளாய் ஆளை ஏரியாவில் காணோம் . இவனுக்கு 'தமிழக ரவிச்சந்திரன் ' என்பது பட்டப்பெயர் .

நடிகர் ரவிச்சந்திரன் 'ஸ்டாப் லிசன் ப்ரோசீட் ' என்ற பாட்டில் அந்த காலத்தில் தோள்பட்டை யை ஒரு பக்கமாக இறக்கி நடக்க ஆரம்பித்து எல்லா படத்திலும் அப்படியே நடப்பதை பார்த்து அப்படியே நடக்க ஆரம்பித்தான் இந்த பாலு . ரவிச்சந்திரன் ஏதோ பெரிய ஹாலிவுட் ஆக்டர் என்பது போல வகை பிரித்து இவனுக்கு ' தமிழக ரவிச்சந்திரன் ' என்று ஆரப்பாளையம் சல்லிகள் பெயர் வைத்து விட்டார்கள் .

'டே இந்த பிராடு எங்கேடா இங்கே ?' காங்கோ ஆச்சரியப்படும்போதே பாலு பக்கத்தில் வந்து விட்டான் . காங்கோ வின் இயற் பெயர் சேகர் .

'ஹாய் சேகர்!' - தமிழக ரவிச்சந்திரன்

ஹாய் பாலு ! - காங்கோ

‘How are you ‘ காங்கோ கேட்கிராப்லே

‘I,m fine ‘ தமிழக ரவிச்சந்திரன்

‘And what are you’
‘I,m doing business’

‘How much you have invested’ -காங்கோ
‘Fifty ‘
‘Fifty thousands ?‘ - காங்கோ
No no . fifty lakhs!- தமிழக ரவிச்சந்திரன் !

ஐம்பது லக்ஷம் முதலீடில் பிசினஸ் என்று சொல்லி விட்டு தமிழக ரவிச்சந்திரன் தோள்பட்டை இறக்கி ஸ்டைல் நடை நடந்து போய்கொண்டே சொன்னான் !

Ok, Sekar I’m very busy now . see you . I miss you a lot!

வருடம் 1983. தமிழக ரவிச்சந்திரன் வீட்டு கதவில் ஜப்தி நோட்டீஸ் !

காங்கோவுக்கு கை விரல்கள் மிகவும் நடுங்கி சிகரெட் கீழே விழுந்து விட்டது .

டே ற்றம்பி !

I have to commit suicide . டே என்னடா . இந்த பிராடு என்கிட்டேயே அளந்துட்டு போறான் . என்னை கேனை பயல் ஆக்கிட்டானே !


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.