Share

Oct 7, 2008

சின்ன வீடு கனவு

சுருளிராஜன் சிரமப்பட்டு நகைச்சுவை நடிகர் ஆக முன்னுக்கு வந்து ' மாந்தோப்பு கிளியே ' படத்துக்கு பிறகு நிறைய சம்பாரிக்க ஆரம்பித்தார் . கால்சீட் சம்பளம் எட்டு மணி நேரத்துக்கு இவ்வளவு என்று காசு பார்த்தார் . வசதி வந்த பிறகும் அம்பாசிடர் காரில் எட்டு பேருடன் ஷூட்டிங் குக்கு வருவார் . ஏழு பேரும் இவருடைய நண்பர்கள் தான் . நசுங்கி போய் காரிலிருந்து இறங்குவார் .சுருளி எங்க பிரண்டுங்க என்று பெருமையாக அவர் நண்பர்களும் இறங்கி தள்ளாடுவார்கள் . சுருளியின் 555 சிகரெட் பலரும் பெருமையுடன் புகைப்பார்கள்.

எங்க வீட்டுபிள்ளை படத்தில் எம்ஜியார் 'நான் ஆணையிட்டால் ' பாடலில் ஏழைகளில் ஒருவராக வந்து எம்ஜியாரை பார்த்து பரவசப்படும் எக்ஸ்ட்ரா நடிகர் சுருளி ராஜன் !

நல்ல வளர்ச்சி .
'மனிதனுக்கு அவனே மிக கொடூரமான விலங்கு '- நீட்ஷே சொன்னான் .
குடி சுருளியை சீரழித்தது . பட்டை சாராயம் வெறும் வயிற்றில் குடிப்பார் .
நல்ல வசதி வந்ததும் சுருளி ஜோசியம் தெரிந்த ஒரு சினிமாக்காரரிடம் ஜாதகத்தை காட்டி கேட்டார் " சின்ன வீடு வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்து விட்டேன் . ஜாதகம் எடம் கொடுக்குதா ?"
இவ்வளவு வசதியுள்ள ஆள் கேட்டால் அப்புறம் பதில் நெகடிவ் ஆகவா வரும் .

' ஜமாய் .... உன் காட்டிலே மழை ...ம்ம் ' என ஜாதகம் பார்த்தவர் பச்சைக்கொடி காட்டினார் .

அடுத்த வாரம் சுருளி ராஜன் செத்துப்போய் விட்டார் !

1 comment:

  1. சுவையான பதிவு.எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அனேகமாக இன்னும் ஒரு லட்சம் பதிவுக்குத் தகவல்கள் உங்களிடம் அனேகமாக இருக்கலாம்.


    ஜமாய்ங்க.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.